Tamil Nadu · 2014 · Act 24
Tamil Nadu Local Fund Audit Act, 2014
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி நிதித்
தணிக்கைச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 24/2014)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Local Fund Audit Act, 2014
(Tamil Nadu Act No. 24 of 2014)
(ason 31% October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
i
2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி நிதித்
தணிக்கைச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 24/2014)
பிரிவு பொருளடக்கம்.
L குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும் தொடக்கம்.
2. பொருள்வரையறைகள்.
3. இயக்குநரின் பணியமர்த்தம்.
4. கணக்குகளின் தணிக்கை.
5. இணைபப்புப்பட்டியலில் உள்ளடங்காத
அதிகாரஅமைப்புகள், அமைப்புகள்,
நிறுவனங்கள். அல்லது நிதிகளின்.
கணக்குகளைத் தணிக்கை செய்வதற்கு
அதிகாரம்.
6. தணிக்கை செய்யப்பட வேண்டிய முறை.
7. தணிக்கை செய்வதற்கான கணக்குகளைத் தயார்
செய்வதற்கும் அளிப்பதற்கும் நிருவாக
அதிகாரஅமைப்பிற்குள்ள பொறுப்பு.
8. தணிக்கைக்காக கணக்குகளை
முன்னிலைப்படுத்தவும் மற்றும் நபர்களின்
வருகையைக் கோருவதற்குமான அதிகாரம்.
9. பிரிவு 8இன்படி கோரப்பட்டதை
நிறைவேற்றாததற்கான தண்டனை.
10. கணக்குகளின் தணிக்கை முடிவடைதல்.
11. நிருவாக அதிகாரஅமைப்பு மற்றும் குறித்த சில
அலுவலர்கள் மற்றும் அமைப்புகளுக்கு
அனுப்பப்பட வேண்டிய தணிக்கை அறிக்கை.
12. தணிக்கை அறிக்கையின் உள்ளடக்கங்கள்.
13.
14.
15.
16.
17
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
i
தணிக்கை அறிக்கை பெறப்பட்டதன்:
அடிப்படையில் பின்பற்றப்பட வேண்டிய
நடைமுறை.
கவனமின்மையால் அல்லது தவறான
நடத்தையால் ஏற்படுத்தப்பட்ட சட்டமுறைப்படி
இல்லாத செலுத்தங்கள் மற்றும்
விளைவிக்கப்பட்ட இழப்பிற்கு இயக்குநரால்
தண்டக்கட்டணம் விதிக்கப்படுதல்.
இயக்குநரின் அதிகாரங்கள். மற்றும்
செயற்பணிகள்.
அதிகாரங்கள். மற்றும் செயற்பணிகளை
ஒப்படைவு செய்தல்.
தணிக்கை செலவிற்கான செலுத்தம்.
விரிவான தணிக்கை மேற்கொள்வதற்கான
அதிகாரம்.
பணக் கையாடல் அல்லது பணம் அல்லது
இருப்பு இழப்புகள் குறித்து நிருவாக அமைப்பு
அறிக்கை செய்தல் வேண்டும்.
தணிக்கை அறிக்கையை முன்வைத்தல்.
உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகார
வரம்பின்மை.
நிலுவையிலுள்ள தணிக்கைக்கான சிறப்பு
வகைமுறை.
இச்சட்டம் பிற சட்டங்களுக்கு மேலோங்கி
இருத்தல்.
நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
இயக்குநர் அல்லது பிற அலுவலர்கள் அரசு
ஊழியர்களாகக் கருதப்படுவர்.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
28.
29.
iii
இணைபப்புப்பட்டியலைத்
அதிகாரம்.
காப்புரைகள்.
இணைபப்புப்பட்டியல்:
திருத்துவதற்கான
1
2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி நிதித்
தணிக்கைச் சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 24/2014
[தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது,
2014ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 14ஆம் நாளன்று ஆளுநரின்
ஏற்பிசைவைப் பெற்று, பொதுத் தகவலுக்காக தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்பட்டது.
அனைத்து உள்ளாட்சி அதிகாரஅமைப்புகளுக்கும் மற்றும்.
குறிப்பிட்ட சில பிற அதிகாரஅமைப்புகளுக்கும்
அல்லது நிறுவனங்கள் மற்றும் நிதிக்கும் மற்றும்
அதனுடன் தொடர்புடைய மற்றும் அதன் சார்பான
விவரங்களுக்கும் பயணுடைய மற்றும் திறமையான
தணிக்கை முறைக்கு வகைசெய்வதற்கான ஒரு
சட்டம்.
மாநில அரசு, தனது அனைத்து உள்ளாட்சி
அமைப்புகளுக்கும் ஒரு தணிக்கை முறையை
நடைமுறைப்படுத்துதல் வேண்டும் மற்றும் மாநிலத்தில்
ஒவ்வொரு நிலையிலும் உள்ள அனைத்து உள்ளாட்சி
அமைப்புகளின் தணிக்கையின் மீது இந்தியத் தலைமைக்
கணக்குத் தணிக்கையாளர், தொழில்நுட்ப ஆலோசனை
மற்றும் மேற்பார்வை வழங்க வேண்டும் என
பதின்மூன்றாவது நிதிக் குழு தனது பரிந்துரையில்
தெரிவித்துள்ளது என்பதாலும்;
உள்ளாட்சி நிதிகளின். தணிக்கையை
ஒழுங்குப்படுத்துவதற்கு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
தொடர்பான தணிக்கையினை உள்ளாட்சி இயக்குநர்,
தணிக்கை செய்வதற்காக அதிகாரம் அளிப்பதற்கு
வகைசெய்வதற்கான சட்டம் ஒன்றினை இயற்ற
2
வேண்டும் என இரண்டாவது மாநில நிதிக் குழு தனது
பரிந்துரையில் தெரிவித்துள்ளது என்பதாலும்;
மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள உள்ளாட்சி
அதிகார அமைப்புகள் மற்றும் பிற அதிகாரஅமைப்புகள்
இந்திய அரசின் மற்றும் மாநில அரசின் மானியங்களைப்
பயனுள்ள வகையில் செலவு செய்வதை உறுதிசெய்வதும்
மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள உள்ளாட்சி
அதிகாரஅமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் பொதுப்
பணத்தை எவ்வாறு செலவு செய்கின்றன என்பதன் மீது
பொது நம்பகத்தன்மையை மேம்படுத்துவதும் அவசியம்
என்பதாலும்;
இந்தியக் குடியரசின் அறுபத்து ஐந்தாம் ஆண்டில்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால்
இயற்றப்பட்டச் சட்டம் பின்வருமாறு:-
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்
தொடக்கம்.-
(1) இந்தச் சட்டம், 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு
உள்ளாட்சி நிதித் தணிக்கைச் சட்டம் என்று வழங்கப்படும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் பரவி
நிற்கும்.
(3) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்,
தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
(8) "தணிக்கை" என்பது, நூறு சதவீத தணிக்கை,
பிந்தைய தணிக்கை, மாதிரி தணிக்கை, சிறப்புத் தணிக்கை:
மற்றும் அரசால் காலத்திற்கேற்ப குறிப்பிடப்படும்.
3
அத்தகைய பிற கணக்குகளின் ஆய்வினையும்
உள்ளடக்கும்;
(௦) "நூறு சதவீத தணிக்கை" என்பது, நிதி
ஆண்டு முழுவதற்குமான அல்லது இயக்குநரால்
குறிப்பிடப்படும் அத்தகைய காலத்திற்கான ஒரு குறிப்பிட்ட
கணக்கின் அனைத்துப் பரிவர்த்தனைகளின் பிந்தைய
தணிக்கை எனப் பொருள்படும்;
(9) "ஒருங்கிணைந்த தணிக்கை" என்பது,
தினசரி பரிமாற்றக் கணக்குகளின் பின்தொடர்ச்சியான
தணிக்கை எனப் பொருள்படும்;
(0) "இயக்குநர்" என்பது, பிரிவு 3 இன்படி
பணியமர்த்தம் செய்யப்பட்ட உள்ளாட்சி நிதித் தணிக்கை
இயக்குநர் எனப் பொருள்படும்; மற்றும் உள்ளாட்சி நிதித்
தணிக்கை இயக்குநரின் செயற்பணிகளைச் செய்வதற்கு
அரசால் அதிகாரமளிக்கப்பட்ட நபர் எவரையும்
உள்ளடக்கும்;
(6) "நிருவாக அதிகாரஅமைப்பு" என்பது, அந்த
அதிகாரஅமைப்பின் நிதியை நிருவகிப்பதற்கு உரிய
அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அதிகாரஅமைப்பு ஒன்றின்.
தலைமை நிருவாக அலுவலர் அல்லது பிற அலுவலர்
எவரும் எனப் பொருள்படும்;
(f) "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்;
(9) "உள்ளாட்சி அதிகாரஅமைப்பு" என்பது,-
0) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள
தொடர்புடைய சட்டத்தின்படி
அமைத்துருவாக்கப்பட்ட நகராட்சி
அல்லது நகராட்சி மன்றம் அல்லது
4
ஊராட்சி ஒன்றிய மன்றம் அல்லது
கிராம ஊராட்சி எதுவும்; அல்லது
0) இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்
பட்டுள்ள. அரசின் சட்டம் அல்லது
ஆணை எதனாலும் அல்லது
எதன்படியும் ஏற்படுத்தப்பட்ட பிற
அதிகாரஅமைப்பு அல்லது நிறுவனம்
எனப் பொருள்படும்;
(h) "உள்ளாட்சி நிதி" என்பது, உள்ளாட்சி
அதிகாரஅமைப்பு ஒன்றினால் மற்றும் இணைப்புப்
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பிற நிதிகள் எதனாலும்
நிருவகிக்கப்படும் நிதி எனப் பொருள்படும்;
உள்ளாட்சி நூலக அதிகாரஅமைப்பு" என்பது,
1948ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலகங்கள்
சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் XXIV/1948)
அமைத்துருவாக்கப்பட்ட உள்ளாட்சி நூலக.
அதிகாரஅமைப்பு எனப் பொருள்படும்;
0) "உள்ளாட்சி திட்ட அதிகாரஅமைப்பு" என்பது,
1971ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர ஊளமைப்புச்
சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 351972)
அமைத்துருவாக்கப்பட்ட உள்ளாட்சி திட்ட
அதிகாரஅமைப்பு எனப் பொருள்படும்;
(k) "சந்தைக் குழு" என்பது, 1987ஆம் ஆண்டு
தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல்
(ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின்படி (தமிழ்நாடு
சட்டம் 27/1989) அமைத்துருவாக்கப்பட்ட சந்தைக் குழு
எனப் பொருள்படும்;
5
பிந்தைய தணிக்கை" என்பது, முடிக்கப்பட்ட
பரிமாற்றங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட விரிவான
தணிக்கை எனப் பொருள்படும்;
(m) "இணைபப்புப்பட்டியல்" என்பது, இந்தச்
சட்டத்தின் இணைப்புப்பட்டியல் எனப் பொருள்படும்;
(ற "சிறப்புத் தணிக்கை" என்பது, குறிப்பிட்ட
பொருள் ஒன்றிற்கு அல்லது பொருள்வகை ஒன்றிற்குத்
தேவைப்படுகின்ற முழுமையான ஆய்வின் மீதான
கணக்குகளின் தணிக்கை ஒன்று எனப் பொருள்படும்;
மற்றும் தணிக்கையால் ஏற்கனவே உள்ளடக்கப்பட்ட
காலம் ஒன்றிற்கான கணக்குகளின் மறு தணிக்கையையும்
உள்ளடக்கும்;
(0) "மாநிலம்" என்பது, தமிழ்நாடு மாநிலம் எனப்
பொருள்படும்;
(2) "தண்டக் கட்டணம்" என்பது, பணம் அல்லது
பிற சொத்து எதனின் இழப்புக்காக, விணாக்கியதற்காக,
தவறாகப் பயன்படுத்தியதற்காக அல்லது கையாடல்
செய்ததற்காக இயக்குநர் ஒரு நபரைப் பொறுப்பாக்குகிற
தொகை எனப் பொருள்படும்;
(0) "பல்கலைக்கழகம்" என்பது, மாநிலச் சட்ட
மன்றத்தின் சட்டம் ஒன்றினால் ஏற்படுத்தப்பட்ட அல்லது
இணைக்கப்பட்ட பல்கலைக்கழகம் எனப் பொருள்படும்.
3. இயக்குநரின் பணியமர்த்தம்.- (1) அரசு,
அறிவிக்கை மூலமாக உள்ளாட்சி நிதித் தணிக்கையின்:
இயக்குநராக வகுத்துரைக்கப்படும் தகுதியைக்
கொண்டிருக்கும் நபர் ஒருவரைப் பணியமர்த்தம்.
செய்யலாம்.
6
(2) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை
நிறைவேற்றுவதற்குத் தேவை எனத் தோன்றும்
உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் அத்தகைய பிற
அலுவலர்களையும் பணியமர்த்தம் செய்யலாம்.
(3) இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படி
செய்யப்பட்ட விதியின்படி, உள்ளாட்சி நிதித் தணிக்கைத்
துறையின் அனைத்து அலுவலர்களும். மற்றும்
பணியாளர்களும், இயக்குநரின். கீழ் பணியாற்றக்
கூடியவர்களாக இருப்பர். அவர்களுடைய செயற்பணிகள்
மீது இயக்குநர் பொதுக் கண்காணிப்பையும்,
கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பார்.
(4) உட்பிரிவு 1)இல் அடங்கியுள்ள எது எவ்வாறு
இருப்பினும், இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன்பு
உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குநராக பணிபுரிகிறவர்,
இந்தச் சட்டத்தின்படி இயக்குநராகப் பணியமர்த்தம்
செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படுவார்.
4. கணக்குகளின் தணிக்கை.- தற்போதைக்குச்
செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியுள்ள
எது எவ்வாறு இருப்பினும், 1971 ஆம் ஆண்டு இந்தியத்
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (கடமைகள்:
அதிகாரங்கள் மற்றும் பணி வரையறைகள்) சட்டத்தின்.
(மையச் சட்டம் 56/1971) வகைமுறைகளுக்கு உட்பட்டு
இயக்குநர், தணிக்கை செய்ய வேண்டும் அல்லது இது
தொடர்பாக பொது அல்லது சிறப்பு ஆணையின் மூலம்
அதிகாரம் அளிக்கப்பட்ட உள்ளாட்சி நிதித் தணிக்கை
துறையின் அலுவலர் ஒருவரால் தணிக்கை செய்யப்பட
வேண்டும். உள்ளாட்சி அதிகாரஅமைப்பு ஒன்றின்:
கணக்குகள் அல்லது இந்தச் சட்டத்தினால் அல்லது
7
இந்தச் சட்டத்தின்படி வகைசெய்யப்பட்டுள்ள முறையில்
உள்ளாட்சி நிதியை அவ்வாறு அதிகாரம் அளிக்கப்பட்ட
அலுவலர் தணிக்கை செய்ய வேண்டும். இந்தச்
சட்டத்தின்படி தணிக்கை செய்வது தொடர்பாக
இயக்குநரின். அதிகாரங்களைச் செலுத்துதலும்
செயற்பணிகளைப் புரிதலும் வேண்டும்.
5. இணைப்புப்பட்டியலில் உள்ளடங்காத அதிகார
அமைப்புகள், அமைப்புகள், நிறுவணங்கள் அல்லது
நிதிகளின் கணக்குகளைத் தணிக்கை செய்வதற்கு
அதிகாரம்.- இயக்குநர், அரசின் முன் ஒப்புதலுடன் மற்றும்
பிரிவு 4இன் வகைமுறைகளுக்கு ஊறின்றி,
இணைப்புப்பட்டியலில் உள்ளடங்காத அதிகாரஅமைப்பு,
அமைப்பு, நிறுவனம் அல்லது நிதியின் நிருவாகத்திற்குப்
பொறுப்பாகவுள்ள இயக்குநரும் நபருக்குமிடையே ஏற்றுக்
கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு
உட்பட்டு அத்தகைய அதிகாரஅமைப்பு, அமைப்பு,
நிறுவனம் அல்லது நிதியின் கணக்குகளைத் தணிக்கை
செய்யலாம்.
6. தணிக்கை செய்யப்பட வேண்டிய முறை.-
(1) பிரிவு 4இன்படி இயக்குநர் அல்லது அவரால் அதிகாரம்
அளிக்கப்பட்ட அலுவலர், ஆண்டுதோறும் அல்லது
அவருக்குப் பொருத்தம் எனத் தோன்றுகிற அத்தகைய
இடைவேளைகளில் தணிக்கை செய்ய வேண்டும்.
இயக்குநர் மேலும், அத்தகைய உள்ளாட்சி
அதிகாரஅமைப்பு அல்லது உள்ளாட்சி நிதிக்கு
தேவையானதாக இருக்கின்றது என்று தெரிந்தால்,
அவைகளை நிருவகிக்கும் சட்டம் எதனின்
வகைமுறைகளின்படியும் அல்லது அரசின்
8
கலந்தாலோசனையின் பேரில் இயக்குநரால் முடிவு
செய்யப்படும் ஒருங்கிணைந்த தணிக்கையை
மேற்கொள்ளலாம்:
வரம்புரை: கிராம ஊராட்சிகளைப் பொறுத்தவரை
ஐந்து ஆண்டுக் காலத்திற்குள் அனைத்து ஊராட்சிகளின்
தணிக்கையை முடிக்கும் வகையில் அத்தகைய
ஊராட்சிகளில் ஒரு நிதியாண்டில் இருபது சதவீத
ஊராட்சிகளின். தணிக்கையை இயக்குநர்
மேற்கொள்ளலாம்:
மேலும் வரம்புரை: சம்மந்தப்பட்ட நிருவாக
அதிகாரஅமைப்பிற்கு பதினைந்து நாட்களுக்குக்
குறையாமல் எழுத்து வடிவிலான அறிவிப்பு
கொடுக்கப்படாமல் எந்த ஒரு தணிக்கையும்.
தொடங்கப்படுதல் கூடாது:
மேலும் வரம்புரை: எழுத்து வடிவில் பதிவு
செய்யப்படக்கூடிய காரணங்களின் அடிப்படையில்
குறைந்த காலத்திற்கான அறிவிப்போ அல்லது அறிவிப்பு
கொடுப்பதிலிருந்து விலக்கோ அளிக்கப்படலாம்.
(2) இயக்குநர் தணிக்கை செய்யும் நேரத்தில்
உள்ளாட்சி நிதியின் ரொக்க இருப்பைச் சரி பார்க்கலாம்.
(3) பிரிவு 3இன்: உட்பிரிவு (2)இன்படி
பணியமர்த்தம் செய்யப்பட்ட துணை இயக்குநர் நிலைக்குக்
குறையாத ஓர் அலுவலர், உள்ளாட்சி அதிகாரஅமைப்பு
அல்லது உள்ளாட்சி நிதி ஒன்றின் கணக்குகள்
தொடர்பான பதிவுருக்களை ஆய்வு செய்யலாம்.
7. தணிக்கை செய்வதற்கான கணக்குகளைத்
தயார் செய்வதற்கு மற்றும் அளிப்பதற்கு நிருவாக அதிகார
அமைப்பிற்குள்ள பொறுப்பு.- (1) நிருவாக அதிகாரஅமைப்பு
9
ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் தொடர்புடைய உள்ளாட்சி
அதிகாரஅமைப்பு அல்லது உள்ளாட்சி நிதி ஒன்றின்.
கணக்குகளை நிதி ஆண்டு முடிவடைந்ததிலிருந்து
மூன்று மாதக் காலத்திற்குள் வகுத்துரைக்கப்படும்.
அத்தகைய படிவத்திலும் முறையிலும் தயார் செய்யப்படச்
செய்தலும் தணிக்கைக்காக அளிக்கப்படுதலும் வேண்டும்.
(2) குறிப்பிட்ட காலத்திற்குள் தணிக்கைக்கான
கணக்குகளைத் தயாரித்து மற்றும் முன்னிலைப்படுத்த
நிருவாக அலுவலர் தவறுகிறார் என்றால் அவர் ஆயிரம்
ரூபாய்க்குக் குறையாத ஐந்தாயிரம் ரூபாய் வரை
நீட்டிக்கப்படக்கூடிய பணத்தண்டத்துடன் தண்டிக்கப்படத்
தக்கவராவார் மற்றும் துறை ரீதியாக எடுக்கப்படும்
நடவடிக்கைக்கும் பொறுப்புடையவராக இருத்தல்
வேண்டும்:
வரம்புரை: அத்தகைய பணத்தண்டம் ஏன்
விதிக்கப்படக்கூடாது என்பது குறித்து காரணம்:
கேட்பதற்கு பதினைந்து நாட்களுக்குக் குறையாத வாய்ப்பு
ஒன்றினை அளித்திருந்தாலன்றி, பணத்தண்டம்.
விதிக்கப்படுதல் கூடாது.
(3) குறிப்பிடப்பட்ட காலத்திலிருந்து மூன்று
மாதக்காலம் முடிவடைந்த பிறகு, தணிக்கைக்கான
கணக்குகளை அனுப்பத் தவறும். எந்த ஒரு
அதிகாரஅமைப்பிற்கும் நிதி வழங்குவதை அரசு நிறுத்தி
வைக்கலாம்.
8. தணிக்கைக்காக கணக்குகளை முன்னிலைப்
படுத்தவும் மற்றும் நபர்களின். வருகையைக்
கோருவதற்குமான அதிகாரம்.- (1) இந்தச் சட்டத்தின்படி
தணிக்கை செய்யும் நோக்கத்திற்காக, இயக்குநர்.-
10
(ஐ கணக்குகளைத் தெளிவாக்குவதற்குத்
தேவைப்படும் மிண்ணணு ஆவணம் உள்ளிட்ட அத்தகைய
செலவுச் சீட்டுகள், விவரவுரைகள், விவர அறிக்கைகள்,
தொடர்புகள், குறிப்புகள் அல்லது ஏனைய பிற
ஆவணங்களைப் பார்ப்பதற்கும், பரிசீலிப்பதற்கும்,
தணிக்கை நடைபெறும் இடத்தில் முன்னிலைப்
படுத்துவதற்கும் எழுத்து வடிவில் கோரலாம்;
(b) உள்ளாட்சி அதிகாரஅமைப்பின் எந்த ஒரு
பணியாளரையும் அல்லது உள்ளாட்சி அதிகாரஅமைப்பு
நிருவகிக்கும் நிதி அல்லது மின்னணு ஆவணம்
உள்ளிட்ட செலவுச் சீட்டுகள், விவரவுரைகள், விவர
அறிக்கைகள், தொடர்புகள், குறிப்புகள் மற்றும் ஏனைய
ஆவணங்களைப் பாதுகாப்பில் அல்லது கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் அதிகாரஅமைப்பு அல்லது உள்ளாட்சி
அதிகாரஅமைப்புடண் எந்த ஒரு ஒப்பந்தத்துடணும்
நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு பங்கோ
அல்லது அக்கறையோ கொண்டுள்ள எந்த ஒரு நபர்
அல்லது உள்ளாட்சி நிதியை நிருவகிக்கும்.
அதிகாரஅமைப்பு எவரையும் தன்முன்பாக நேரில்
தோன்றுவதற்கும், ஆவணங்களைத் தாக்கல்
செய்வதற்கும், கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும்,
அவ்வாறு தோன்றும் எந்த ஒரு நபரையும் தொடர்புடைய
அறிக்கைகளில் கையொப்பம் ஆடவும் அல்லது
தொடர்புடைய அறிக்கைகளைத் தயாரித்து அளிக்கவும்
எழுத்து வடிவில் கோரலாம்; மற்றும்
(c) உள்ளாட்சி அதிகாரஅமைப்பு ஒன்றின்
அல்லது உள்ளாட்சி நிதி ஒன்றை நிருவகிக்கிற
அதிகாரஅமைப்பு ஒன்றின் அலுவலர் அல்லது உறுப்பினர்
11
எவரிடமிருந்தும் அவருடைய விளக்கம் எந்த
அடிப்படையில் தேவைப்படுகிறது என்பதை எழுத்து
வடிவில் குறிப்பிட்டு தேவைப்படும் விளக்கத்தை அளிக்க
அத்தகைய நபரை அழைக்கலாம்.
(2) இயக்குநர், உட்பிரிவு (1)இன்படி செய்யப்பட்ட
கோரிக்கை எதிலும், மூன்று நாட்களுக்குள்.
கோரப்பட்டவை செய்து முடிக்கப்பட வேண்டும் எனக்
குறிப்பிடலாம்.
9. பிரிவு 8இன்படி கோரப்பட்டதை நிறைவேற்றாத
தற்கான தண்டனை-- பிரிவு 8இன் உட்பிரிவு (1)இன் கூறு
(a) அல்லது (௦)இன்படி அவரிடம் சட்டப்பூர்வமாக
வேண்டப்பட்ட கோரிக்கை எதற்கும் நபர் எவரும்
வேண்டுமென்றே புறக்கணிக்கிறார் அல்லது மறுக்கிறார்
என்றால், அவர் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாத
பணத்தண்டத்துடன் தண்டிக்கப்படத்தக்கவராவார்.
இப்பணத்தண்டம் ஐந்தாயிரம் ரூபாய் வரை
நீட்டிக்கப்படலாம்:
வரம்புரை: அத்தகைய பணத்தண்டம் ஏன்
விதிக்கப்படக்கூடாது என்பது குறித்து எதிராக காரணம்
கூறுவதற்கு பதினைந்து நாட்களுக்குக் குறையாத வாய்ப்பு
ஒன்று அளிக்கப்பட்டிருந்தாலன்றி இயக்குநரால்
பணத்தண்டம் விதிக்கப்படுதல் கூடாது:
மேலும் வரம்புரை: உள்ளாட்சி அதிகாரஅமைப்பு
ஒன்றின் பணியாளர் ஒருவர் அல்லது உள்ளாட்சி நிதி
ஒன்றை நிருவகிக்கும் அதிகாரஅமைப்பு ஒன்று,
துறைரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைக்கும் பொறுப்பு
உடையவராக இருத்தல் வேண்டும்.
12
10. கணக்குகளின் தணிக்கை முடிவடைதல்.- (1)
பிரிவு 7இன்படி தணிக்கைக்காக தயார் செய்யப்பட்ட
மற்றும் அளிக்கப்பட்ட கணக்குகளின் தணிக்கை
வகுத்துரைக்கப்படும் ஆறு மாதங்களுக்கு மேற்படாத
காலத்திற்குள் இயக்குநரால் முடித்து வைக்கப்படுதல்
வேண்டும்.
(2) இயக்குநர், தணிக்கை செய்வதை முடிக்கும்
நேரத்தில் கணக்குகள் சரியாக இருக்கின்றனவா
என்பதனை சரிபார்க்க வேண்டும். வகுத்துரைக்கப்படும்
முறையில் ஆண்டுக் கணக்குகள் சான்றளிக்கப்பட
வேண்டும். தணிக்கை அறிக்கையுடன் சான்றளிக்கப்பட்ட
கணக்குகளின் நகலைச் சேர்த்தல் வேண்டும்.
11. நிருவாக அதிகாரஅமைப்பு மற்றும் குறித்த சில
அலுவலர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அனுப்பப்பட
வேண்டிய தணிக்கை அறிக்கை.- தணிக்கை
முடிவடைந்த பிறகு இயன்றளவு விரைவாக, ஆனால்
மூன்று மாதங்களுக்குள் இயக்குநர் அவரால் தணிக்கை
செய்யப்பட்ட கணக்குகளின் பேரறிலான அறிக்கை
ஒன்றினை நிருவாக அதிகாரஅமைப்பிற்கு அனுப்ப
வேண்டும் மற்றும் சட்டத்தின்படி நிருவகிக்கப்படும்
உள்ளாட்சி அதிகாரஅமைப்பு அல்லது உள்ளாட்சி நிதிக்கு
அரசால் பணிக்கப்படும். அல்லது குறிப்பிடப்படும்.
அலுவலர்களுக்கு மற்றும் அமைப்புகளுக்கு அல்லது
நிறுவனங்களுக்கு அறிக்கையின் நகல்களை அனுப்ப
வேண்டும்.
12. தணிக்கை அறிக்கையின் உள்ளடக்கங்கள்.-
தணிக்கை அறிக்கையில் இயக்குநரால் சேர்க்கப்பட
வேண்டியவை,
13
(௨) அரசின் சட்டம் அல்லது ஆணை எதற்கும்
முரணாக செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றும் செலுத்தம்
எதுவும்;
(b) நபர் எவரும் அவருடைய கடமைகளைச்
செய்வதில் கவனக்குறைவு அல்லது தவறான நடத்தை
இவற்றின் விளைவானதாகத் தோன்றும் எந்த ஒரு நிதிக்
குறைவு அல்லது இழப்பு;
(9) கையாடல் அல்லது முறையற்ற வகையில்
நிதியை உபயோகித்துள்ள நிகழ்வுகள்;
(0) கணக்கில் கொண்டு வந்திருக்க வேண்டிய
ஆனால் கணக்கில் கொண்டு வரப்படாமல் இருக்கிற
பெறப்பட்ட தொகை எதுவும்; மற்றும்
(6) தணிக்கையில் வேறு ஏதாவது பிற
முறைகேடுகள் அல்லது ஒழுங்கின்மை
நடந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள்
கண்டறியப்பட்டால்.
13. தணிக்கை அறிக்கை பெறப்பட்டதன்
அடிப்படையில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை. (1)
பிரிவு 11இன்படி அனுப்பப்பட்ட தணிக்கை அறிக்கை
பெறப்பட்டதன் பேரில், நிருவாக அதிகாரஅமைப்பு இரண்டு
மாதக் காலத்திற்குள் அதில் குறைகள் அல்லது
முறைகேடுகள் எதுவும் குறிப்பிடப்பட்டு இருந்தால்
அதற்கான தீர்வினைக் காணவேண்டும்; மற்றும்
எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரவுரை ஒன்றைத்
தணிக்கை அறிக்கையுடன் சேர்த்து அல்லது எடுக்கக்
கருதப்பட்ட நடவடிக்கையின் விவரவுரை ஒன்றைத்
தணிக்கை அறிக்கையுடன் சேர்த்து நிருவாக அமைப்பின்:
கூட்டம் ஒன்று அல்லது அதிகாரஅமைப்பின் முன்பு
14
வைத்தல் வேண்டும். சொல்லப்பட்ட குறைகள் அல்லது
முறைகேடுகளுக்குத் தீர்வு காணப்பட்டிருந்தது குறித்து
அல்லது அத்தகைய குறைகள் அல்லது முறைகேடுகள்
தொடர்பான விளக்கம் எதனையும் மேற்சொன்ன
கூட்டத்தின் தேதியிலிருந்து ஒரு மாதக் காலத்திற்குள்
இயக்குநருக்கு அறிக்கை ஒன்றின் மூலம் அனுப்ப
வேண்டும்.
(2) அத்தகைய அறிக்கை அல்லது விளக்கம்
பெறப்பட்டதன் பேரில் இயக்குநர்,-
(ஐ) குறைகள் அல்லது முறைகேடுகளுக்கு தீர்வு
காணப்பட்டிருக்கும் போது அல்லது அதற்கு தொடர்புடைய
விளக்க அறிக்கையை ஏற்று மறுப்புரையைக் கைவிடலாம்;
அல்லது
(b) தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள
குறைகள் அல்லது முறைகேடுகள் எதற்கும் அல்லது
அனைத்திற்கும் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன எனக்
கருதலாம்.
(3) இயக்குநர், அறிக்கை அல்லது விளக்கம்
பெறப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதக் காலத்திற்குள்:
அல்லது அத்தகைய அறிக்கை அல்லது விளக்கம்
பெறப்படாமல் இருக்கிறதென்றால், உட்பிரிவு (1)இல்
குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாதங்கள் முடிவடைவதன்
பேரில் ஆணை ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும். தணிக்கை
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறை அல்லது
முறைகேடு எதற்கும் தீர்வு காணப்படாமல் இருக்கிறது
என்றால், அவர் தனது ஆணையில்,
15
(@) குறை அல்லது முறைகேடு
முறைப்படுத்தப்பட முடியுமா அவ்வாறு
முடியுமென்றால் எந்த முறையில்; அல்லது
0) குறை அல்லது முறைகேடு
முறைப்படுத்தப்பட முடியாமல் இருக்கிறது என்றால்
அவை மன்னிக்கப்படக்கூடியதாக இருந்தால் எந்த
அதிகாரஅமைப்பால் மன்னிக்கப்படலாம்; மற்றும்
©) குறை அல்லது. முறைகேடு எந்தப்
பணத்தோடு தொடர்புடையதோ அது
வசூலிக்கப்படலாம் என்றால் யாரிடமிருந்து,
என்பவைக் குறித்த தனது கருத்தைக் குறிப்பிடலாம்.
(4) உள்ளாட்சி நிதியை நிருவகிக்கிற
உள்ளாட்சி அதிகாரஅமைப்பு அல்லது அதிகாரஅமைப்பு,
அமைப்பு, அல்லது நிறுவனமானது, தவறு, முறைகேடு
ஏதேனும் தணிக்கையில் குறிப்பிட்டுக்
காட்டப்பட்டிருந்தால் அதன் சாரம் மற்றும் உட்பிரிவு
(1)இன்படி நிருவாக அதிகாரஅமைப்பால் அளிக்கப்பட்ட
விளக்கம் மற்றும் உட்பிரிவு (3)இன்படி இயக்குநரால்
அவற்றின் மீது பிறப்பிக்கப்பட்ட ஆணை ஆகியவற்றை
அதன் அடுத்த நிருவாக அறிக்கையில் வெளியிடலாம்.
மேலும் இயக்குநரின் ஆணை பெறப்பட்ட நாளிலிருந்து
ஒரு மாதக் காலஅளவிற்கு அதன் அலுவலகத்தில் பொது
மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்படுதல்
வேண்டும்.
(5) இந்தப் பிரிவு அல்லது பிரிவு 12ஆனது எந்த
நேரத்திலும் தேவைப்படும் அத்தகைய நடவடிக்கைக்காக
அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதிலிருந்து
இயக்குநரை தள்ளி வைத்தல் கூடாது. குற்றமான
16
கையாடல் அல்லது மோசடிக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது
என்ற தகவல் எதுவும் இயக்குநருக்குத் தோன்றுகிறது
என்றால் அது அவருடைய சிறப்புக் கவனம் அல்லது
உடனடியான புலனாய்விற்குத் தகுதியுடையதாக
இருக்கும்.
14. கவனமின்மையால் அல்லது தவறான
நடத்தையால் ஏற்படுத்தப்பட்ட சட்டமுறைப்படி இல்லாத.
செலுத்தங்கள் மற்றும் விளைவிக்கப்பட்ட இழப்பிற்கு
இயக்குநரால் தண்டக்கட்டணம் விதிக்கப்படுதல்.- (1)
இயக்குநர், சட்டம் அல்லது அரசின் ஆணை எதற்கும்
முரணாக இருக்கிறது என்று அவருக்குத் தோன்றுகிற
செலுத்தம் எதனையும் அனுமதித்தல் கூடாது.
கவனமின்மையால் அல்லது தவறான நடத்தையால்
பெறப்பட்ட தொகை எதனாலும் தொகை எதுவும்
குறைந்திருந்தால் அல்லது இழப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால்
அது கணக்கில் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் கணக்கில் கொண்டு வரப்படாமல்
இருக்கிறதென்றால் சம்பந்தப்பட்ட நபருக்கு அல்லது
அதிகாரம் அளிக்கப்பட்ட நபருக்கு தண்டக்கட்டணம்
விதிக்கலாம் மற்றும் அத்தகைய ஒவ்வொரு நிகழ்விலும்
அத்தகைய நபரிடமிருந்து வரவேண்டிய தொகை குறித்து
சான்றுறுதி அளிக்கப்பட வேண்டும்:
வரம்புரை: அத்தகைய தண்டக்கட்டணம் ஏன்:
விதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தைக் கூறுவதற்கு
பதினைந்து நாட்களுக்குக் குறையாத வாய்ப்பு ஒன்று
அளிக்கப்பட்டிருந்தாலன்றி இயக்குநர் எந்த ஒரு நபரின்
மீதும் தண்டக்கட்டணம் விதித்தல் கூடாது.
17
(2) தண்டக்கட்டணத்தினால் பாதிக்கப்பட்ட நபர்
எவரும், இயக்குநரின் முடிவைப் பெற்ற தேதியிலிருந்து
ஒரு மாதக் காலத்திற்குள் தண்டக்கட்டணத்தைத்
தள்ளுபடி செய்வதற்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு
விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் சான்றுகளைக்
கருத்தில் எடுத்துக்கொண்ட பிறகு, நீதிமன்றம் மேற்படி
தண்டக்கட்டணத்தை உறுதிப்படுத்தலாம், மாற்றம்
செய்யலாம் அல்லது அதனை திருப்பிச் செலுத்தச்
செய்யலாம்.
(3)இந்தச் சட்டத்தின்படி இயக்குநரால் எந்த
நபரிடமிருந்தும் பெறப்பட வேண்டிய தொகை என
சான்றளிக்கப்படும் அனைத்து தொகையையும், அந்த நபர்
இயக்குநரின் முடிவு தெரிவிக்கப்பட்ட ஒரு மாதக்
காலத்திற்குள் நிருவாக அதிகாரஅமைப்பிடம் செலுத்துதல்
வேண்டும். அத்தகைய தொகை அவ்வாறு
செலுத்தப்பபவில்லை என்றாலும் அல்லது அந்தக்
காலத்திற்கான உட்பிரிவு (2) இன்படியான முடிவிற்கு
எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல்
செய்திருந்தாலும் அல்லது மாவட்ட நீதிமன்றம் வசூலிக்க
வேண்டிய நிலுவை என அறிவிக்கும் தொகையை
நிலவரி பாக்கியை வசூலிப்பதுபோலவும் அது
வசூலிக்கலாம். இவ்வாறு வசூலிக்கும் நோக்கத்திற்காக
இயக்குநர், 1864 ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய்
வசூலித்தல் சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 11/1864)
மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உள்ள அதிகாரத்தைப்
பெற்றிருப்பார்.
15. இயக்குநரின் அதிகாரங்கள் மற்றும்
செயற்பணிகள்.- (1) இயக்குநர், உள்ளாட்சி நிதித்
18
தணிக்கைத் துறையின்: அலுவலர்கள். மற்றும்
பணியாளர்கள் மீது பொதுக் கண்காணிப்பு மற்றும்
கட்டுப்பாடு செய்வார்.
(2) இயக்குநர், தணிக்கை அறிக்கையில்
உள்ளடங்கிய தணிக்கை மறுப்புரைகளைத் தீர்வு
செய்வதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பார்.
(3) இயக்குநர், ஓர் உள்ளாட்சி அதிகாரஅமைப்பு
அல்லது உள்ளாட்சி நிதியின் கணக்குகளின் தணிக்கை
மற்றும் பராமரிப்பின் பேரில், தேவையான தொழில்நுட்ப
வழிகாட்டுதலை மற்றும் ஆதரவினை ஏற்படுத்தித்
தருவதற்கு மாநிலத்தின் முதன்மைத் தலைமைக்
கணக்காளரை அணுகலாம்.
(4) அரசால் வகுத்துரைக்கப்படும் விதத்தில்
பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாத தொகை, உள்ளாட்சி நிதி
ஒன்றிலிருந்து செய்யப்பட்ட செலுத்தமாக இருந்தால், அது
சட்டத்திற்குப் புறம்பாக இருக்கிறது என்று அவர்
கருதினால், அத்தகைய நபர் செலுத்தத்தைச் செய்யும்
பொழுது அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட செயலில்
ஈடுபடும்போது கவனமின்மை அல்லது தவறான நடத்தை
இல்லை என்று அவர் கருதுகிறார் என்றால் இயக்குநர்
அத்தகைய நபரை மன்னிக்கலாம்.
(5) இயக்குநர் வகுத்துரைக்கப்படும் அத்தகைய
பிற அதிகாரங்களைச் செலுத்துதலும் செயற்பணிகளைப்
புரிதலும் வேண்டும்.
16. அதிகாரங்கள். மற்றும் செயற்பணிகளை
ஒப்படைவு செய்தல்.- இயக்குநர், பொது அல்லது சிறப்பு
ஆணையின் மூலமாக, அந்த ஆணையில்
குறித்துரைக்கப்படும் அத்தகைய நிபந்தனைகள் அல்லது
19
விதிகள் எதுவும் இருக்கிறதென்றால் அதற்கு உட்பட்டு,
பிரிவு 15இன் உட்பிரிவு 4இன்படி வழங்கப்பட்ட
அதிகாரத்தை தவிர, இந்தச் சட்டத்தின்படி அல்லது
அதன்படி செய்யப்பட்ட விதிகளின்படி அவரது பணிகள்
அல்லது செயற்பணிகள் அனைத்தையும் அல்லது
எதனையும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் பிற
அலுவலர் எவருக்கும் அதிகார ஒப்படைவு செய்யலாம்.
17. தணிக்கை செலவிற்கான செலுத்தம்.- (1)
கணக்குகளின் மீது மேற்கொள்ளப்படும் தணிக்கைக்கான
செலவினம் அவ்வப்போது அரசால் நிர்ணயிக்கப்படும்
அத்தகைய விகிதங்களில் தொடர்புடைய
அதிகாரஅமைப்பால் செலுத்தப்படுதல் வேண்டும்.
(2) அரசு, பொது அல்லது சிறப்பு ஆணை
மூலமாக, உட்பிரிவு (1)இன்படி தணிக்கையின்
செலவினை செலுத்தும் பொறுப்பிலிருந்து
அதிகாரஅமைப்பு எதற்கும் முழுவதுமாக அல்லது
பகுதியாக விலக்களிக்கலாம்.
(3) உட்பிரிவு (1)இன்படி தணிக்கைச் செலவு
நிலுவை இருந்தால், அத்தகைய நிலுவை ஏற்பட்டுள்ள
தேதியிலிருந்து ஓராண்டுக் காலத்திற்குள் செலுத்தப்படாமல்
இருக்கிறதென்றால், அரசு, அதிகாரஅமைப்பிற்கு
செலுத்தத்தக்க மானியம் அல்லது பிற தொகைகளிலிருந்து
சரிசெய்து கொள்ளலாம்:
வரம்புரை: அதிகாரஅமைப்பிற்கு செலுத்தத்தக்க
மானியம் அல்லது பிற தொகைகள் எதுவும் இல்லை
என்றால், தணிக்கைக்கான செலவினம்
வகுத்துரைக்கப்படும் முறையில் இயக்குநரால்
வசூலிக்கப்படுதல் வேண்டும்.
20
18. விரிவான தணிக்கை மேற்கொள்வதற்கான
அதிகாரம்.- இயக்குநர், சூழ்நிலைகளுக்கேற்ப, எந்தக்
கணக்குகள் அல்லது பரிவர்த்தணை வகைகளின் மீதும்
விரிவான தணிக்கையை மேற்கொள்ளலாம் மற்றும் அவர்
பொருத்தம் எனக் கருதும் கணக்குகள் அல்லது
பரிவர்த்தனைகள் தொடர்பாக வரையறுக்கப்பட்ட
சரிபார்த்தலை மேற்கொள்ளலாம்.
19. பணக் கையாடல் அல்லது பணம் அல்லது
இருப்பு இழப்புகள் குறித்து நிருவாக அமைப்பு அறிக்கை:
செய்தல் வேண்டும்.- (1) உள்ளாட்சி நிதியை நிருவகிக்கும்
உள்ளாட்சி அதிகாரஅமைப்பு அல்லது அதிகாரஅமைப்பு
அமைப்பு அல்லது நிறுவனம் இவற்றின் பணம் அல்லது
இருப்புகள் ஆகியவற்றில் கையாடல், திருட்டு அல்லது
இயற்கை சீற்றங்களால் குறைவு அல்லது இழப்பு
ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்படும் பொழுது, நிருவாக
அதிகாரஅமைப்பு அத்தகைய இழப்பு அல்லது குறைவு
ஏற்பட்டதற்கான விரிவான உண்மையான காரணத்தை
உடனடியாக இயக்குநருக்குத் தெரிவிக்க வேண்டும்.
(2) உட்பிரிவு (1)இன்படி அறிக்கை ஒன்றினைப்
பெற்றதன் பேரில், இயக்குநர் அந்த அதிகாரஅமைப்பின்:
கணக்குகளை உடனடியாக சிறப்பு தணிக்கை நடத்த
வேண்டும் அல்லது நடத்தும்படி செய்தல் வேண்டும்:
வரம்புரை: இந்தப் பிரிவானது, பணக் கையாடல்
அல்லது பண இழப்பு அல்லது இருப்பு இழப்பு இவை
எதிலும் ஈடுபட்டுள்ள நபர் எவருக்கும் அல்லது
ஈடுபட்டிருப்பதாக சந்தேகப்படுகிற நபர் எவருக்கும் எதிராக
குற்ற நடவடிக்கை தொடங்குவதிலிருந்து நிருவாக
அதிகாரஅமைப்பு தடுக்கப்படுதல் கூடாது.
21
20. தணிக்கை அறிக்கையை முன்வைத்தல்.-
இயக்குநர், அவரால் தணிக்கை செய்யப்பட்ட
கணக்குகளில் அவர் அரசின் கவனத்திற்குக் கொண்டு வர
விரும்பும் விபரங்கள் அடங்கிய தொகுப்பு அறிக்கை
ஒன்றினை அரசிற்கு ஆண்டுதோறும் சமர்ப்பிக்க
வேண்டும். அரசு அதனைப் பெற்ற பின்பு கணக்காய்வர்
மற்றும் தலைமைத் தணிக்கையாளரின் அறிக்கையுடன்:
தொகுப்பு அறிக்கையினை கூடியவிரைவில், சட்டமன்றப்
பேரவை முன்பு வைத்தல் வேண்டும்.
21. உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகார
வரம்பின்மை.- பிரிவு 14இன் உட்பிரிவு 2இல் பிறவாறாக
வகைசெய்யப்பட்டிருப்பது நீங்கலாக, இந்தச் சட்டத்தினால்
அல்லது இந்தச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள
அதிகாரம் எதனின் தொடர்பாகவும் அரசு அல்லது
இயக்குநர் அல்லது அலுவலர் எவராலும் எடுக்கப்பட்ட
அல்லது எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை எதன்
தொடர்பாகவும் உரிமைவழக்கோ அல்லது
சட்டநடவடிக்கை எதனையுமோ எடுப்பதற்கு உரிமையியல்
நீதிமன்றம் அதிகார வரம்பைக் கொண்டிருக்காது.
22. நிலுவையிலுள்ள தணிக்கைக்கான சிறப்பு
வகைமுறை.- உள்ளாட்சி அதிகாரஅமைப்பு அல்லது
உள்ளாட்சி நிதி எதனின் தொடர்பாகவும் இந்தச் சட்டம்
நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக நிலுவையில்
இருந்த தணிக்கைகள் அனைத்தும், இந்தச் சட்டத்தில்
என்ன அடங்கியிருந்த போதிலும், வகுத்துரைக்கப்படும்.
காலத்திற்குள்: இந்தச் சட்டம் இயற்றப்படாமல்
இருந்தாற்போன்று இயக்குநரால் தொடரப்பட்டு
முடிக்கப்படும்.
22
23. இச்சட்டம் பிற சட்டங்களுக்கு மேலோங்கி
இருத்தல்.- இந்தச் சட்டத்தின். வகைமுறைகள்
தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள மாநிலத்தின்:
சட்டமன்றத்தால் செய்யப்பட்ட பிற சட்டம் எதிலும்
முரணாக அடங்கியுள்ள எது எலவ்வாறிருப்பினும்,
செல்திறம் பெற்றிருத்தல் வேண்டும்.
24. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.- உரிமைவழக்கு, விசாரணை
அல்லது பிற சட்ட நடைமுறைகள் இந்தச் சட்டத்தின்படி,
விதி அல்லது அதன்படிச் செய்யப்பட்ட ஆணையின்படி,
நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது
செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட எதற்காகவும் இயக்குநர்
அல்லது அலுவலர் எவருக்கும் எதிராக வழக்குத்
தொடுத்தல் கூடாது.
25. இயக்குநர் அல்லது பிற அலுவலர்கள் அரசு
ஊழியர்களாகக் கருதப்படுவர்.- இயக்குநர் அல்லது பிற
அலுவலர்கள் இந்தச் சட்டதின் வகைமுறைகள் அல்லது
விதி அல்லது ஆணைக்கு இணங்க செயல்படும்பொழுது
அல்லது செயல்படுவதாகக் கருதும் பொழுது இந்தியத்
தண்டனைத் கதொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம்
XLV/1860) பிரிவு 21இன் பொருளின்படி அரசு
ஊழியர்களாகக் கருதப்படுவர்.
26. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1)
அரசு, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு செல்திறம்.
அளிக்கும் நோக்கத்திற்காக விதிகளைச் செய்யலாம்.
(2) குறிப்பாக முந்தைய அதிகாரத்தின் பொதுத்
தன்மைக்கு ஊறின்றி பின்வரும் பொருள்கள்
23
அனைத்திற்காகவும் அல்லது எதற்காகவும் அத்தகைய
விதிகள் ஏற்படுத்தப்படலாம், அதாவது:-
(ஐ) உள்ளாட்சி அதிகாரஅமைப்பு ஒன்றின்
அல்லது உள்ளாட்சி நிதி ஒன்றின் கணக்குகள் எந்த
முறையில் மற்றும் எந்தப் படிவத்தில் வைக்கப்படுதல்
மற்றும் அளிக்கப்படுதல் வேண்டும்;
0) தணிக்கை நடத்துவதில் இயக்குநர்
பின்பற்றப்படவேண்டிய நடைமுறை மற்றும் அத்தகைய
தணிக்கை எத்தகைய காலத்திற்குள் நடத்தப்படுதல்
வேண்டும்;
(6) இந்தச் சட்டத்தின்படி வெளியிடத்
தேவைப்படும் பொருள்கள் எந்த முறையில்
வெளியிடப்படு தல் வேண்டும்; மற்றும்
(0) இந்தச் சட்டத்தின்படி தேவைப்படக்கூடிய
அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விவரம் எதுவும்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட
ஒவ்வொரு விதியும் அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை
அல்லது ஆணை அது செய்யப்பட்ட பின்பு அல்லது
பிறப்பிக்கப்பட்ட பின்பு முடிந்த அளவு கூடிய விரைவில்,
சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல்
வேண்டும் மற்றும் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு
முன்பு அவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது என்றால்
அல்லது அடுத்தடுத்த கூட்டத்தொடரில் வைக்கப்படுதல்
வேண்டும். இந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணை
எதிலும் சட்டமன்றப் பேரவை ஏதேனும் மாற்றங்களைச்
செய்யுமானால் அல்லது அந்த விதி, அறிவிக்கை அல்லது
ஆணை செய்யப்படுதல் கூடாது என சட்டமன்றப் பேரவை
முடிவு செய்யுமானால், அதன் பின்பு அவ்வாறு மாற்றம்
24
செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே செல்திறம் பெறும்
அல்லது செல்திறம் பெறாது போகும், எது
எப்படியிருப்பினும், அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம்
செய்தல் எதுவும் இந்த விதிகளின்படி,
அறிவிக்கையின்படி அல்லது ஆணையின்படி முன்னதாக
செய்யப்பட்ட எதனின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி
இருத்தல் வேண்டும்.
27. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு செல்திறம்
அளிக்கையில் இடர்ப்பாடு எதுவும் எழுமானால், அரசு,
இடர்ப்பாடுகளை ந்க்குவதற்காகத் தேவையானது அல்லது
உகந்தது எனத் தோன்றுகிற இந்தச் சட்டத்தின்.
வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய
வகைமுறைகளைச் செய்யலாம். அதனை ஆணையின்.
மூலமாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடலாம்:
வரம்புரை: இந்தச் சட்டம் தொடங்கும்.
தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பிறகு
அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது.
28. இணைப்புப்பட்டியலைத் திருத்துவதற்கான
அதிகாரம்.- அரசு, அறிவிக்கையினால் இந்தச்
சட்டத்திற்குரிய இணைப்புப்பட்டியலில் சட்டம் எதனாலும்
அல்லது ஆணை எதனின்படியும் அல்லது அரசின்
ஆணை எதனின்படியும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு,
அதிகாரஅமைப்பு அல்லது நிறுவனம் அல்லது நிதியை
உள்ளடக்கும்:
வரம்புரை: மாநிலச் சட்டமன்றப் பேரவையினால்
செய்யப்பட்ட சட்டத்தின் அதிகாரஅமைப்பினைத் தவிர,
அமைப்பு, அதிகாரஅமைப்பு அல்லது நிறுவனம் அல்லது
25
நிதி எதுவும் இணைப்புப்பட்டியலிலிருந்து விட்டுவிடப்படுதல்
கூடாது.
29. காப்புரைகள்.- இந்தச் சட்டத்தின்
வகைமுறைகள், உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குநர்
முன்பு இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு முன்:
நிலுவையிலிருக்கும் எந்த வழக்கிற்கும் உரிமைவழக்கு,
மேல்முறையீடு, சீராய்வு மனு அல்லது பிற நடவடிக்கை
எதற்கும் பொருந்தாது. இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு
முன்பு, அரசு அல்லது உரிமையியல் நீதிமன்றம் மற்றும்
செல்லாற்றலிலுள்ள சட்டத்தில் அடங்கியுள்ள எது
எவ்வாறிருப்பினும், அத்தகைய வழக்குகளுக்கு,
உரிமைவழக்குகளுக்கு சீராய்வு மனுக்களுக்கு அல்லது
பிற சட்ட நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்துப் பொருந்தி
இருக்கும்.
26
இணைபப்புப்பட்டியல்:
(பிரிவு 2 இன் கூறுகள் (றா மற்றும் (h) ஐக் காண்க)
|. உள்ளாட்சி அதிகாரஅமைப்புகள்.
1.
©
®
N
O
A
W
N
10.
11.
12.
13.
14.
அனைத்து மாநகராட்சிகள்.
அனைத்து நகராட்சிகள்.
அனைத்துப் பேரூராட்சிகள்.
அனைத்து மாவட்ட ஊராட்சிகள்.
அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள்.
அனைத்து கிராம ஊராட்சிகள்.
அனைத்துப் பல்கலைக்கழகங்கள்.
அனைத்து வட்டார நூலக அதிகாரஅமைப்புகள்.
அனைத்து சந்தைக் குழுக்கள் உள்ளிட்ட
தமிழ்நாடு மாநில வேளாண்மை சந்தைப்படுத்தும்
வாரியம்.
அனைத்து உள்ளாட்சித் திட்ட அதிகார
அமைப்புகள்.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்.
அறப்பணிகளின் பொருளாளர்.
அரசர் சத்திரம்.
ராஜா வேதபாட சாலை.
Il உள்ளாட்சி நிதியங்கள்.
1.
2.
3.
தமிழ்நாடு நகராட்சிப் பணியாளர்கள் நல நிதி.
தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர்கள் நல நிதி.
தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் நல
நிதி.
தமிழ்நாடு நகராட்சிப் பணியாளர்கள் வீடு
கட்டுவதற்கான முன்பண குடும்ப நல நிதி.
27
5. தமிழ்நாடு மாநகராட்சிப் பணியாளர்கள் வீடு
கட்டுவதற்கான முன் பண குடும்ப நல நிதி.
6. தேசிய சமூக நலத் திட்டங்கள்.
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.