Tamil Nadu · 2017 · Act 20
Tamil Nadu Local Authorities Entertainments Tax Act, 2017
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
2017ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி
அமைப்புகள் கேளிக்கைகள் வரிச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 20/2017)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Local Authorities Entertainments Tax
Act, 2017
(Tamil Nadu Act No. 20 of 2017)
(as on 31" October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
பிரிவு
11.
12.
13.
2017ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி
அமைப்புகள் கேளிக்கைகள் வரிச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 20/2017)
பொருளடக்கம்.
குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
பொருள்வரையறைகள்.
கேளிக்கைகள் மீதான வரி.
அன்பளிப்பாக கொடுக்கப்படும் நுழைவுச்சீட்டு
மீதான வரி.
குதிரைப் பந்தயவ நுழைவு கட்டண வரி மீதான
கூடுதல் மேல்வரி.
கேளிக்கைகளுக்கு அனுமதித்தல்.
வரி செலுத்தும் முறை.
விவர அறிக்கைகள்.
தவறுதலாக விடுபட்ட மதிப்பீடு ம்து
அனுமதித்தலுக்கான செலுத்துகை.
சட்டப்படியான பிரதிநிதிகளின் மதிப்பீடுகள்.
வரி விதிவிலக்கு அளிப்பதற்கான அல்லது
குறைப்பதற்கான அதிகாரம்.
வரி வசூல் முறை மற்றும் பிற கேட்புகளை விட
நிலுவை வரிக்கு முன்னுரிமை.
வருவாய் வசூல் சட்டத்தின்படி
வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பின் சிறப்பு
அதிகாரம்.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
2௨.
26.
27.
28.
31.
ர்
தண்டத் தொகையை வசூலித்தல்.
பிரிவினையான குடும்பம், கலைக்கப்பட்ட நிறுவனம்
முதலானவற்றின் வரி செலுத்தும் பொறுப்பு.
காலதாமதமான செலுத்துகை மீதான வட்டி.
ஆய்வு.
நுழைவு கட்டணத்திலிருந்து விலக்களிப்பு.
நுழைதல், சோதனைசெய்தல் மற்றும்
கைப்பற்றுதலுக்கான அதிகாரம்.
சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பவும்
ஆவணத்தை முன்னிடகோரவும் அதிகாரம்.
கேளிக்கை இடம் ஒன்றின் மேலாளர் அல்லது
பொறுப்பாளர் ஆகியோர் வகுத்துரைக்கப்பட்ட
அதிகாரஅமைப்பின் முன்பு முன்னிலையாதல்.
வரியை அடுத்த ரூபாய்க்கு முழுமையாக்குதல்.
தண்டங்கள்.
நுழைவுச்சீட்டு அல்லது அனுமதிச் சீட்டு
இல்லாதற்க்கான தண்டம்.
குற்றம் செய்ய உடந்தையாக இருந்ததற்க்கான
தண்டம்.
நிறுமங்களால் செய்யப்படும் குற்றச்செயல்கள்.
குற்றங்களை இணக்கமாக தீர்த்துக்
கொள்வதற்கான அதிகாரம்.
பதிவுருவைப் பார்த்தவுடன் தோன்றும் பிழை
எதையும் திருத்தி அமைப்பதற்கான அதிகாரம்.
மேல்முறையீடு.
பொதுப்பணியாளர்களாகக் கருதப்படுதல்.
நல்லெண்ணத்துடன் எடுக்கப்படும்
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
32. இர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
33. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
34. துணை விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
1
2017ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
கேளிக்கைகள் வரிச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 20/2017)
[தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2017ஆம்
ஆண்டு ஜூன் திங்கள் 28ஆம் நாளன்று, ஆளுநரின்
ஏற்பிசைவைப் பெற்று பொதுத்தகவலுக்காகத் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகள்
கேளிக்கைகள் வரி விதிப்பதற்கு வகைசெய்வதற்கான
ஒரு சட்டம்.
இந்தியக் குடியரசின் அறுபத்து எட்டாம் ஆண்டில்
தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால்
இயற்றப்பட்ட சட்டம் பிண்வருமாறு:-
1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.- (1) இந்தச்
சட்டம், 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி
அமைப்புகள் கேளிக்கைகள் வரிச் சட்டம் என்று
அழைக்கப்படும்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாக
குறிப்பிடப்படும் நாளன்று நடைமுறைக்கு வரும் மற்றும்
இந்தச் சட்டத்தின் வெவ்வேறு வகைமுறைகளுக்கு
வெவ்வேறு தேதிகள் குறிப்பிடப்படலாம்.
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்,
தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
(1) "அனுமதித்தல்" என்பது, பார்வையாளராக
அல்லது அரங்கத்தாறில் ஒருவராக அனுமதித்தல் மற்றும்
பொழுதுபோக்கும் நோக்கத்திற்காக கேளிக்கையை
அனுமதித்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்;
2
(2) "கேளிக்கை ஒன்றிற்கு அனுமதித்தல்"
என்பது, கேளிக்கை நடைபெறும் எந்த ஓர் இடத்திற்குள்:
அனுமதித்தலை உள்ளடக்கும்;
(3) "பொழுதுபோக்கு" என்பது, பொழுதுபோக்கு
அரங்கம் அல்லது பொழுதுபோக்குப் பூங்கா அல்லது
கேளிக்கை பூங்கா அல்லது எந்தப் பெயரில்
அழைக்கப்பட்டாலும் அது போன்றவற்றில், நபர்கள்:
அனுமதிக்கப்படுவதற்கு கட்டணம் செலுத்தக் கோரப்படும்.
பொழுதுபோக்கு நிகழ்ச்சி எதுவும் எனப் பொருள்படும்;
(4) "அலைவாங்கி" என்பது, தேசிய அல்லது
பன்னாட்டு செயற்கைக்கோளின். ஒளிபரப்புகளை
பார்வையாளர்கள் பெறுவதற்கு இயல செய்யும்
தொலைக்காட்சி சமிக்கையைப் பெறுகிற ஒரு கருவி
மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எழுப்பப்பட்ட
அல்லது நிறுவப்பட்ட கருவி எனப் பொருள்படும்;
(5 "கேபிள். தொலைக்காட்சி" (cable
18ஊ601)என்பது காணொளி நாடா (video cassette) அல்லது
வட்டுகள் (06௦) அல்லது இரண்டையும் பயன்படுத்தி பதிவு
சாதனம் அல்லது ஒளிபரப்பு சாதனம் அல்லது அது போன்ற
பிற கருவிகள் மூலம் ஏற்கனவே பதிவு செய்ப்பட்ட
காணொளி நாடா அல்லது வட்டுகள் அல்லது இரண்டிலும்
ஒளிபரப்பு அல்லது மறு ஒளிபரப்பு செய்யப்படும்
திரைப்படங்கள், இயங்குபடங்கள், அல்லது
படத்தொகுப்புகள் ஆகியவற்றை தொலைக்காட்சி
இணைப்பு பெற்ற குடியிருப்புகள் அல்லது குடியிருப்பு
அல்லாத இடங்களில் கேட்கவும்,பார்க்கவும்
உருவாக்கப்பட்ட அமைப்பு எனப் பொருள்படும்;
3
(6) "அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் சீட்டு"
என்பது, கட்டணம் எதுவும் இல்லாமல் அல்லது அத்தகைய
அனுமதித்தலுக்காக குறைந்த வீத கட்டணத்தில்
கேளிக்கைக்கு அனுமதித்தலுக்கான ஒரு நுழைவுச்சீட்டு
அல்லது ஒரு அனுமதிச்சீட்டு எனப் பொருள்படும்;
விளக்கம்.- பிரிவு 18இன் கீழ் செலுத்துகை
இல்லாமல் கேளிக்கை எதற்கும் அனுமதித்தல் என்பது
கேளிக்கை அல்லது கேளிக்கை தொடர்பான கடமை
எதனையும் செய்ய கேளிக்கை உரிமையாளரால்:
அனுமதிக்கப்பட்ட அல்லது இந்தச் சட்டத்தின்படியோ
வேறு சட்டத்தின்படியோ கடமை எதனையும் செய்ய
கேளிக்கை இடம் எதனுள்ளும் அனுமதிக்கப்பட்ட நபர்
எவரையும் உள்ளடக்காது;
(7) "நேரடி வீட்டுச் சேவை என்பது கேபிள்
இயக்குபவர் (௦௦௨ operator) போன்ற இடையீட்டாளர்
இல்லாமல் சந்தாதாரர்களுக்கு செயற்கைக்கோள்
சமிக்கைகள் மூலம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி, திரைப்படம்
அல்லது பிற நிகழ்ச்சி எதனையும் ஒளிபரப்புதல் எனப்
பொருள்படும்;
(8) "கேளிக்கை" என்பது குதிரைப்பந்தயம்
அல்லது திரைப்படக் காட்சி நிகழ்ச்சிக்கு பணம்
செலுத்துதல், பங்களிப்பு, சந்தா அல்லது எந்த வகையிலும்.
வசூலிக்கப்படும் நிறுவுதல் அல்லது இணைப்புக் கட்டணம்
அல்லது ஏதேனும் பிறக் கட்டணங்கள் செலுத்துமாறு
கோரப்படும் நபர்களுக்கு பவுலிங் (bowling), பில்லியர்ட்ஸ்
(biliards), ஸ்நூக்கர் (௭௦௦66) அல்லது அது போன்ற
நிகழ்ச்சிகள் நடைபெறும் கேளிக்கைக் கூடம் அல்லது
மனைகிழ் மன்றம் அல்லது நேரடி வீட்டுச் சேவை அல்லது
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில்
4
நடத்தப்படும் இந்திய பிரீமியர் லீக் (Indian premier league)
அல்லது சாம்பியன் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட்
பந்து போட்டிகள் (champions league twenty 20 cricket
tournament) அல்லது நபர்கள் அல்லது நபர்களின் அமைப்பு
எதனாலும் நடத்தப்படும் அனுமதிக் கட்டணம் கோரப்படும்
பிற விளையாட்டுத் தொடர்கள் எனப் பொருள்படும்.
விளக்கம்.- இந்தக் கூறின் மற்றும் இந்தச்
சட்டத்தின் பிற வகைமுறைகளின் நோக்கங்களுக்காக,
"திரைப்படக்காட்சி நிகழ்ச்சி என்பது, காணொளி நாடா
பதிவுகள் மற்றும் கேபிள் தொலைக்காட்சி அமைப்பு மூலம்
வெளியிடப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும்
உள்ளடக்கும்.
(9) "அரசு" என்பது மாநில அரசு எனப்
பொருள்படும்;
(10) "நிறுவனம்" என்பது, நிறுமம், சங்கம், குழுமம்,
அல்லது எந்தப் பெயரிலும் அழைக்கப்படும் நபர்களின்.
கழகத்தை உள்ளடக்கும்.
(11) "உள்ளாட்சி அதிகார அமைப்பு" என்பது, -
(8) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்
எதன்படியும் நிறுவப்பட்ட மாநகராட்சி;
(b) 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட
நகராட்சிகள் சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 71920)
அமைத்துருவாக்கப்பட்ட நகராட்சி அல்லது பேரூராட்சி;
அல்லது
(௦9) 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 21/1994)
அமைத்துருவாக்கப்பட்ட ஊராட்சி,எதனுடைய அதிகார
5
வரம்பில் கேளிக்கைக்கு வகை செய்யப்பட்டுள்ளதோ,
அவை
எனப் பொருள்படும்;
(12) "புதிய திரைப்படம்" என்பது,
பத்தாண்டுகளுக்கு மேற்படாத திரைப்படம் எனப்
பொருள்படும்;
விளக்கம்.- இந்தக் கூறின் மற்றும் கூறு (13)இன்
நோக்கங்களுக்காக, பத்தாண்டுகள் கால அளவு, 1952ஆம்
ஆண்டு திரைப்படச் சட்டத்தின்படி (மையச் சட்டம்
3000079852) முதல் முறையாக திரைப்படத்திற்கான
சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து கணக்கிடப்படுதல்
வேண்டும்;
(13) "பழைய திரைப்படம்" என்பது,
பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட திரைப்படம் எனப்
பொருள்படும்;
(14) "அனுமதித்தலுக்கான செலுத்துகை" என்பது
() கேளிக்கை இடத்தின் ஒரு பகுதிக்கு
அனுமதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு
நபராலும் அதன் பின்னர் மற்றொரு
பகுதிக்கு அனுமதிக்கப்படுவதற்கான வரி
அல்லது கூடுதல் வரி உள்ளிட்ட
செலுத்துகை;
(i) கேளிக்கை நடைபெறும் இடத்திலுள்ள
இருக்கைகள் அல்லது பிற
இடவசதிக்கான எந்த ஒரு செலுத்துகை;
6
(ரி) கேளிக்கையுடன் தொடர்புடைய எந்த
ஒரு நோக்கத்திற்காகவும் கேளிக்கைக்கு
செலுத்துகை இருப்பினும் அதனுடன்
கூடுதலாக மீண்டும் வருதல் அல்லது
தொடர்ந்து வருகை தருதல் போன்ற
நிபந்தனைகள் விதிக்கப்படும் நபர்
ஒருவரால் செய்யப்படும் கேளிக்கை
அனுமதிக்கான செலுத்துகை;
(iv) வரிவிதிக்கப்படத்தக்க அன்பளிப்பாக
கொடுக்கப்படும் நுழைவுச் சீட்டைப்
பொறுத்து பிரிவு 4இன்படி
செய்யப்பட்டுள்ளதாக கருதப்படும்
செலுத்துகை,
ஆகியவற்றை உள்ளடக்கும், ஆனால் 1955ஆம் ஆண்டு
தமிழ்நாடு திரைப்படங்கள் (முறைப்படுத்துதல்)
சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 171955) அவ்வப்போது
உள்ளாட்சி அமைப்பின். ஆணையின் மூலம்
திரைப்படக்காட்சி நிகழ்ச்சிக்கான உரிமம் பெற்றவர்
வசூலிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிற மற்றும்
மேற்சொன்ன உரிமம்பெற்றவரால்: வசூலிக்கப்பட்ட
பராமரிப்புக் கட்டணத்தை உள்ளடக்காது:
வரம்புரை: அத்தகைய பராமரிப்புக் கட்டணம்
நுழைவுச் சீட்டுகளின் மீது அச்சடிக்கப்படுதல் வேண்டும்.
(15) "வகுத்துரைக்கப்பட்டா என்பது, உள்ளாட்சி
அமைப்பினால் செய்யப்பட்ட துணை விதிகள் அல்லது
அரசால் செய்யப்பட்ட விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது
எனப் பொருள்படும்;
7
(16) உரிமையாளர் என்பது கேளிக்கை எதன்.
தொடர்பாக, 1955ஆம் ஆண்டு தமிழ்நாடு திரைப்படங்கள்.
(முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 1X/
1955) திரைப்படக்காட்சி நிகழ்ச்சி உரிமையாளர் அல்லது
1984ஆம் ஆண்டு தமிழ்நாடு காணொளி நாடா பதிவுகள்
(வீடியோ கேசட்) மற்றும் கேபிள் தொலைக்காட்சி
அமைப்பு மூலம் திரைப்படங்களைக் காட்சிபடுத்துதல்
(முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம்
771984) காணொளி நாடாப்பதிவு (வீடியோ கேசட்) மூலம்
அல்லது கேபிள் தொலைக்காட்சி அமைப்பு மூலம்
திரைப்படத்தைக் காட்டும் உரிமம்பெற்றவர் அல்லது
பொழுதுபோக்கு எதற்கும் வகைசெய்கிற நபர் எவரும்
அல்லது மனைகிழ் கூடத்திற்கு வழி செய்கிற நபர் எவரும்
அல்லது நேரடி வீட்டுச் சேவைக்கு வகைசெய்கிற நபர்
எவரும் அல்லது இந்திய பிரீமியர் லீக் ஈஸ premier league)
ஏற்பாடு செய்யும் எந்த நபரும் அல்லது இந்திய கிரிக்கெட்
வாரியத்தின் கிரிக்கெட் போட்டிக்கு வகைசெய்கிற நபர்
எவரும் அல்லது பிற விளையாட்டுத் தொடர் நடத்தும் எந்த
நபரும் அல்லது நபர்களின் அமைப்பும் எனப் பொருள்படும்;
மற்றும் அரசு, உள்ளாட்சி அமைப்பு எதுவும் அல்லது அதன்
மேலாண்மைக்கு பொறுப்புடைய நபர் எவரையும்
உள்ளடக்கும்.
(17) "மனமகிழ் கூடம்" என்பது பவுலிங் மஸரிறறி,
ஸ்நூக்கர் (௦062), பில்லியர்ட்ஸ் ஸர்வ) அல்லது
எந்தவொரு பெயரால் அழைக்கப்பட்டாலும், அதுபோன்ற
விளையாட்டுகள் எந்த இடத்தில் நடைபெறுகிறதோ,
அதற்கான அனுமதித்தலுக்கு அல்லது அதில்
பங்குகொள்வதற்கு நபர் ஒருவர் தொகை செலுத்தக்
கோரப்படும் இடம் எதுவும் எனப் பொருள்படும் ;
8
(18) "வரி விதிக்கப்படத்தக்க அன்பளிப்பாக
கொடுக்கப்படும் நுழைவுச்சீட்டு” என்பது, அன்பளிப்பாக
கொடுக்கப்படும் பத்து அல்லது கேளிக்கை இடத்தின்
இருக்கை எண்ணிக்கையில் இரண்டு விழுக்காடு, இதில்
எது குறைவானதோ அது,
(a) கேளிக்கை ஒவ்வொன்றுக்குமான ஒற்றை
நுழைவுச்சீட்டு அல்லது அனுமதிச்சீட்டு; அல்லது
(b) பருவம் ஒவ்வொன்றுக்குமான காலமுறை
நுழைவுச்சீட்டு அல்லது அனுமதிச் சீட்டு,
எனப் பொருள்படும்:
வரம்புரை: கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்
அல்லது பிற விளையாட்டுத் தொடர்களைப்
பொறுத்தவரை, விளையாட்டு அரங்கத்தின் இருக்கை
எண்ணிக்கையில் இரண்டு விழுக்காட்டிற்கு அதிகமாக
வழங்கப்பட்ட அன்பளிப்பு நுழைவுச்சீட்டு எதுவும் வரி
விதிக்கப்படத்தக்கதாகும்.
விளக்கம்.- இந்தக் கூறின்படி வரிவிதிக்கப்படத்தக்க,
அன்பளிப்பாக கொடுக்கப்படும் நுழைவுச் சீட்டை முடிவு
செய்யும் நோக்கத்திற்காக, நுழைவுச் சீட்டின் பின்னம்
(துண்டு) எதுவும் ஒரு நுழைவுச் சீட்டாகக் கருதப்படுதல்
வேண்டும்.
(19) "தொலைக்காட்சி நிகழ்ச்சி” என்பது,
குடியிருப்பிடம் அல்லது குடியிருப்பிடமல்லாத இடத்தில்,
தொலைக்காட்சி பெட்டிகளின் சந்தாதாரர்கள் மைய
அமைப்பு முறை ஒன்றுடன் உலோக இழை இணைப்பு
அல்லது கண்ணாடி கழை இணைப்பு மூலம்
இணைக்கப்பட்ட கேபிள் ஒளிபரப்பு சமிக்கைகள் வழியாக
9
படம் அல்லது இயங்குபடங்களின் அல்லது கேபிள்
இணைக்கப்பட்ட அலைவாங்கி உதவியுடன் கூடிய
தொலைகாட்சி அல்லது கேபிள் தொலைக்காட்சி நிகழ்ச்சி
எனப் பொருள்படும்;
(20) "ஆண்டு" என்பது, நிதியாண்டு எனப்
பொருள்படும்.
3. கேளிக்கைகள் மீதான வரி.- (1) பின்வரும்
கேளிக்கைகள் மீது (இதன்பின்பு இதில் கேளிக்கைகள்
மீதான வரி என்று பொருள்படும்) வரியானது, தொடர்புடைய
உள்ளாட்சி அமைப்பினால் விதிக்கப்படுதல் மற்றும்
அதற்குச் செலுத்தப்படுதல் வேண்டும். அவையாவன:-
(ஐ திரையரங்குகளில் காட்டப்படும்
திரைப்படக்காட்சி ;
(௦) குதிரைப் பந்தயம்;
(9) காணொளி நாடா மூலமாக அல்லது கேபிள்:
தொலைக்காட்சி அமைப்பு மூலமாக தொலைக்காட்சியில்
காட்டப்படும் படங்கள்;
(0) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்;
(6) பொழுதுபோக்குகள்;
(f) மனைகிழ் கூடம்;
(@) நேரடி வீட்டுச் சேவை மூலம் அளிக்கப்படும்
கேளிக்கைகள்;
(h) கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்
அல்லது பிற விளையாட்டுத் தொடர் எதுவும்;
10
1(இதிரைப்படக்காட்சிக்கான திரைப்படக் கேளிக்கை
வரி பின்வரும் வீதங்களில் அமைதல் வேண்டும்.
() ஒவ்வொரு செலுத்துகைக்கும் அரங்கம்
அமைந்துள்ள மாநகராட்சி மற்றும்
சிறப்புநிலை நகராட்சிகள்,
எல்லைகளுக்குள் அமைந்திருக்கிற
திரையரங்குகள் மற்றும் மாநகராட்சி
மற்றும் சிறப்பு நிலை நகராட்சிப்
பகுதிகளின் புறப்பரப்பு எல்லைகளுக்கு
வெளியிலிருந்து ஐந்து
கிலோமீட்டருக்குள் உள்ள, நிரந்தர
அல்லது பகுதி நிரந்தர திரையரங்குகளில்
காட்டப்படும் திரைப்படம் எதற்குமான.-
A புதிய திரைப்படத்திற்கான வரித்தொகை
நீங்கலான அனுமதிக்கான மொத்த செலுத்துகையின்:
முப்பது விழுக்காடு வீதத்தில்; மற்றும்
(8) பழைய திரைப்படத்திற்கான வரித்தொகை:
நீங்கலான அனுமதிக்கான மொத்த செலுத்துகையின்
இருபது விழுக்காடு விதத்தில்;
(i) உட்கூறு OB குறிப்பிடப்படாத
பிற பகுதிகளில், புதிய அல்லது பழைய படத்திற்கான
வரித்தொகை உள்ளிட்ட அனுமதித்தலுக்கான மொத்தச்
செலுத்துகையின் இருபது விழுக்காடு விதத்தில்,
கணக்கிடப்படுதல் வேண்டும்]
1. 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்:
கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டத்தின் (5/2018) பிரிவு 2ஆல்
மாற்றாக அமைக்கப்பட்டது.
11
விளக்கம் |- இந்தக் பிரிவின் நோக்கங்களுக்காக,
மாநகராட்சிகள்” என்பது, சென்னை, மதுரை,
கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம்,
திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும்
திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகள் அல்லது
அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதன்படியும்
அமைத்துருவாக்கப்படும் பிற மாநகராட்சி எதுவும் எனப்
பொருள்படும்.
விளக்கம் ॥. - இந்தக் கூறின் நோக்கங்களுக்காக,
"சிறப்புநிலை நகராட்சி” என்பது, 1920ஆம் ஆண்டு
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி (தமிழ்நாடு
சட்டம் V/1920) சிறப்புநிலை: நகராட்சியாக
வகைப்படுத்தப்பட்ட நகராட்சி எனப் பொருள்படும்.
(3) குதிரைப்பந்தயம் எதற்குமான
அனுமதித்தலுக்கான செலுத்துகை ஒவ்வொன்றின் மீதான
கேளிக்கைவரி பின்வரும் விதங்களில் வசூலிக்கப்படுதல்
வேண்டும், அவையாவன:-
அத்தகைய செலுத்துகை வரிவீதம்
(வரித்தொகை
உள்ளடங்கலான)-
0] முப்பது காசுகளுக்கு மேல் ஒவ்வொரு
இருந்தால்; செலுத்துகையின்
நான்கில் ஒரு
பங்கு.
0 முப்பது காசுகளுக்கு அத்தகைய
மேல், ஆனால் ஒரு செலுத்துகையின்
ரூபாய் ஐம்பது காசுக்கு மூன்றில்
மேற்படாத போது; ஒருபங்கு.
0). ஒரு ரூபாய் ஐம்பது அத்தகைய
12
காசுக்கு மேல் இருந்தால். செலுத்துகையின்
ஐந்தில் இரண்டு
பங்கு.
(4) காணொளி நாடாப் பதிவு 010௦௦ Cassette
Recorder) மூலம் அல்லது கேபிள் தொலைக்காட்சி
அமைப்பு மூலம் தொலைக்காட்சி திரையில் காட்டப்படும்
திரைப்படத்தின் மீதான கேளிக்கைகள் வரி,
அனுமதித்தலுக்கான ஒவ்வொரு செலுத்துகையின் மீதும்
பின்வரும் விதங்களில் இருக்கும். அவையாவன:-
(ஐ) பழைய திரைப்படத்திற்கான வரித் தொகை:
உள்ளிட்ட அனுமதித்தலுக்கான மொத்தச்
செலுத்துகையின் ஐம்பது விழுக்காடு விதத்தில்; மற்றும்
(௦) புதிய திரைப்படத்திற்கான வரித் தொகை:
உள்ளிட்ட அனுமதித்தலுக்கான மொத்தச்
செலுத்துகையின் அறுபது விழுக்காடு விதத்தில்,
கணக்கிடப்படுதல் வேண்டும்.
(5) தொலைக்காட்சி நிகழ்ச்சியின். மீதான
கேளிக்கைகள் வரி, பின்வரும் விதங்களில்,
கணக்கிடப்படுதல் வேண்டும், அவையாவன:-
(a) சென்னை, மதுரை, மாதம்
கோயம்புத்தூர், ஒன்றுக்கு
திருச்சிராப்பள்ளி, ஆறாயிரம்
திருநெல்வேலி, சேலம், ரூபாய்.
திருப்பூர் ஈரோடு, வேலூர்,
தூத்துக்குடி தஞ்சாவூர் மற்றும்
திண்டுக்கல் ஆகிய
மாநகராட்சிகளின் அல்லது
13
அப்போதைக்கு
நடைமுறையிலுள்ள சட்டம்
எதன்படியும்
அமைத்துருவாக்கப்படும் பிற
மாநகராட்சி எதனின்:
எல்லைகளுக்குள்.
(b) 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாதம்
மாவட்ட நகராட்சிகள் ஒன்றுக்கு
சட்டத்தின்படி (தமிழ்நாடு மூன்றாயிரம்
சட்டம் V/1920) ரூபாய்.
அமைத்துருவாக்கப்பட்ட
நகராட்சிகளின்.
எல்லைகளுக்குள்.
(௦) 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாதம்
மாவட்ட நகராட்சிகள் ஒன்றுக்கு
சட்டத்தின் படி (தமிழ்நாடு ஆயிரத்து
சட்டம் v/ 1920) ஐநூறு ரூபாய்
அமைத்துருவாக்கப்பட்ட
பேரூராட்சிகளின்
எல்லைகளுக்குள்.
(0) 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாதம்
ஊராட்சிகள் சட்டத்தின்படி ஒன்றுக்கு
(தமிழ்நாடு சட்டம் 21,1994) ஆயிரம்
அமைத்துருவாக்கப்பட்ட ரூபாய்.
ஊராட்சிகளின்.
எல்லைகளுக்குள்.
(6) பொழுதுபோக்கு ம்தான கேளிக்கைகள்
வரியானது, பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்றின்.
14
அனுமதித்தலுக்கான ஒவ்வொரு செலுத்தத்தின் மீதும்
பத்து விழுக்காடு என்ற விதத்தில் கணக்கிடப்படுதல்
வேண்டும்.
(7) மமைகிழ்கூடம் மீதான கேளிக்கைகள்.
வரியானது மனைகிழ்கூடத்திற்கான ஒவ்வொரு
செலுத்தத்தின் மீதும் இருபது விழுக்காடு என்ற விதத்தில்
கணக்கிடப்படுதல் வேண்டும்.
(8) செயற்கைகோள் சமிக்கைகள். மூலமாக
காண்பிக்கப்படும். நிகழ்ச்சி, திரைப்படம் அல்லது
ஒளிபரப்பப்படும் பிற நிகழ்ச்சி எதையும் காட்டும் நேரடி
வீட்டுச் சேவை மீதான கேளிக்கைகள் வரியானது, நேரடி
வீட்டுச் சேவை ஒன்றை வழங்குவதற்கு, சேவை
வழங்குபவரால் பெறப்படும் சேவை வரி நீங்கலான
மொத்தக் கட்டணத்தில் முப்பது விழுக்காடு என்ற
வீதத்தில் கணக்கிடப்படுதல் வேண்டும்.
(9) இந்திய பிரீமியர் லீக்கால் (Indian premier league)
நடத்தப்படும் கிரிக்கெட் விளையாட்டுத் தொடர் அல்லது
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படும்
சாம்பியன் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி
(champions league twenty 20 cricket tournament) அல்லது
எந்த ஒரு நபராலோ அல்லது நபர்களின் அமைப்பாலோ
நடத்தப்படும் பிற விளையாட்டுத் தொடர் எதன் மீதுமான
கேளிக்கைகள் வரியானது, வரித்தொகை உள்ளிட்ட
அனுமதிக்கான மொத்த செலுத்தத்தில் இருபத்து ஐந்து
விழுக்காடு என்ற விதத்தில் கணக்கிடப்படுதல் வேண்டும்.
4. அன்பளிப்பாக கொடுக்கப்படும் நுழைவுச்சீட்டு
மீதான வரி.- அன்பளிப்பாக கொடுக்கப்படும்
வரிவிதிக்கத்தக்க நுழைவுச்சீட்டு ஒவ்வொன்றின் மீதும்
15
அது எந்த கேளிக்கைக்கான அனுமதிக்காக
வழங்கப்பட்டதோ அந்த கேளிக்கைக்கு அன்பளிப்பாக
கொடுக்கப்படும் வரி விதிக்கத்தக்க நுழைவுச்சீட்டு வைத்து
இருப்பவர் இம் பெறுவதற்கு அல்லது
பயன்படுத்துவதற்கான இருக்கையின் வகையின்படி முழு
தொகையும் செலுத்தப்பட்டு இருப்பது போன்று அந்த
கேளிக்கைக்கான அனுமதிக்கு பொருந்தத்தக்க விதத்தில்
வரி விதிக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்பிற்கு
செலுத்தப்பட்டு இருத்தல் வேண்டும்; மற்றும் இந்தச்
சட்டம் மற்றும் 1961ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி
அமைப்புகள் நிதிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 521961)
நோக்கங்களுக்காகவும், அன்பளிப்பாக கொடுக்கப்படும்
வரிவிதிக்கத்தக்க நுழைவுச் சீட்டை வைத்திருப்பவர்
பணம்: செலுத்தியதின். பேரில் அனுமதிக்கப்பட்டு
இருப்பவராக கருதப்படுவார்.
5. குதிரைப் பந்தய நுழைவு கட்டண வஹி மீதான
கூடுதல் மேல்வரி.-- (1) 1961ஆம் ஆண்டு தமிழ்நாடு
உள்ளாட்சி அமைப்புகள் நிதிச் சட்டத்தின் (குமிழ்நாடு
சட்டம் 5271961) பிரிவு 3இன் உட்பிரிவு (1)இன்படி
விதிக்கப்படும் கேளிக்கைகள் வரித்தொகை மற்றும்
கேளிக்கைகள் வரி மீதான மேல்வரி உள்ளிட்ட ஒவ்வொரு
செலுத்தத்தின் மீதும், குதிரைப் பந்தயம் எதற்குமான
அனுமதிக்கு கூடுதல் மேல்வரி ஒன்று விதிக்கப்பட்டு
உள்ளாட்சி அமைப்பிற்கு செலுத்தப்பட்டு இருத்தல்
வேண்டும்-
(6) செலுத்தம் ஐந்து ரூபாய்க்கு
மேற்படாதபோது, ஐம்பது பைசா; மற்றும்
(௦) செலுத்தம் ஐந்து ரூபாய்க்கு மேற்படும்போது,
ஒரு ரூபாய்.
16
(2) இந்தச் சட்டத்தின். வகைமுறைகள்,
கூடுமானவரை, இந்தச் சட்டத்தின்படி செலுத்தத்தக்க
கேளிக்கைகள் வழி தொடர்பாக அவை பொருந்துவது
போன்று, இந்த பிரிவின்படி செலுத்தத்தக்க கூடுதல்
மேல்வரி தொடர்பாகவும் பொருந்துதல் வேண்டும்.
6. கேளிக்கைகளுக்கு அனுமதித்தல்.- (1) இந்தச்
சட்டத்தில் பிறவாராக வகை செய்யப்பட்டாலன்றி
கேளிக்கை இடம் எதனுள்ளும் ஏதேனும் பணி அல்லது
இந்தச் சட்டத்தினாலோ அல்லது அதன் வழியாகவோ
அல்லது பிற சட்டம் எதன்வழியாகவோ விதிக்கப்பட்ட
கடமை எதனையும் புரியவேண்டிய நபர் அல்லாத பிற நபர்
எவரும்.-
(@) வகுத்துரைக்கப்படும். முறையிலும்,
அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டும், வழங்கப்படும்.
ஒரு நுழைவுச் சீட்டு தவிர; அல்லது
(சிறப்பு நிகழ்வுகளில், உள்ளாட்சி அமைப்பின்
ஒப்புதலுடன் இயந்திரம் மூலமாக தானியங்கி முறையில்
பதிவுசெய்யப்பட்டு அனுமதிக்கப் பட்டுள்ள நபர்களின்.
எண்ணிக்கையைத் தவிர,
கேளிக்கை எதற்கும் அனுமதிக்கப்படுதல் கூடாது.
(2) உட்பிரிவு (1)இன் கூறு ()கல்
குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வு தவிர, கேளிக்கை ஒன்றின்
உரிமையாளர் எவரும், குதிரைப் பந்தய அனுமதிக்கான
செலுத்தத்தின் மீது கேளிக்கைவரி மற்றும் வரி மீதான
கூடுதல் வரி செலுத்தத்திற்காக உள்ளாட்சி அமைப்பினால்
ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை வரையிலும் மற்றும்.
அத்தகைய முறையிலும் அவர் பிணையம்
கொடுத்திருந்தால் அன்றி கேளிக்கை நடத்துதல் கூடாது.
17
(3) உட்பிரிவு (1)இல் அல்லது உட்பிரிவு (2)இல்
உள்ள எதுவும் குதிரைப் பந்தய நுழைவு கட்டணத்தின் மீது
கேளிக்கை வரி மற்றும் வரி மீதான கூடுதல் வரி
செலுத்தத்திற்காக கேளிக்கை ஒன்றின் உரிமையாளரிடம்
இருந்து பிணையம் பெறுவதிலிருந்து உள்ளாட்சி
அமைப்பைத் தடை செய்வதாகக் கருதப்படுதல் கூடாது.
7. வரி செலுத்தும் முறை.- (1) கேளிக்கைகள்
வரியானது பணம் செலுத்துவதன் பேரில்
அனுமதிக்கப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்டு
இருப்பதாகக் கருதப்படும் ஒவ்வொரு நபருக்கும்
விதிக்கப்படுதல்: வேண்டும் மற்றும் அனுமதி
எண்ணிக்கையின் பேரில் கணக்கிடப்பட்டு
செலுத்தப்படுதல் வேண்டும்.
(2) கேளிக்கைகள் வரியானது உரிமையாளரிடம்
இருந்து பெறப்படவேண்டியதும் வசூலிக்கப்பட தக்கதும்
ஆகும்.
(3) கேளிக்கை அனுமதி ஒன்றுக்காக நிறுவனம்
எதற்கும் செலுத்தும் ஒரு சந்தாவாகவோ, நிறுவனத்தின்
பங்களிப்பாகவோ, பருவ கால நுழைவுச்சீட்டு, கேளிக்கைத்
தொடருக்கான அனுமதிக்காகவோ அல்லது குறிப்பிட்ட
சில காலஅளவிற்கான கேளிக்கை எதற்குமோ
செலுத்தப்பட்ட ஒட்டுமொத்த தொகை முழுவதுமாகவோ
அல்லது பகுதி அளவிலோ செலுத்தப்படுகிற போது
கேளிக்கைகள் வரியானது ஒட்டுமொத்த தொகையின்மீது
செலுத்தப்படுதல் வேண்டும்; ஆனால் ஒட்டுமொத்த
தொகை ஒன்றின் செலுத்தமோ, நுழைவுச் சீட்டு
செலுத்தமோ பிற தனி சலுகைகள், உரிமை அல்லது
கேளிக்கை அனுமதி தவிர்த்த பிற நோக்கங்களுக்கான
செலுத்தம் வரிவிதிப்பு செயல்பாட்டில் இல்லாத
18
காலஅளவின் போதும் கேளிக்கை ஒன்றுக்கான
அனுமதிக்கானது என்று உள்ளாட்சி அமைப்பு
கருதும்போது, எந்த கேளிக்கைகள் பொருத்து
கேளிக்கைவரி செலுத்தத்தக்கதாக இருக்கிறதோ அந்த
கேளிக்கை அனுமதிக்காக செலுத்தத்தக்கதாக உள்ளாட்சி
அமைப்பிற்கு தோன்றும் ஒரு தொகையை வரியாக
விதித்தல் வேண்டும்.
8. விவர அறிக்கைகள்.- (1) கேளிக்கை ஒன்றின்.
உரிமையாளர்கள் ஒவ்வொருவரும், அனுமதிக்கான
செலுத்தல்கள் மற்றும் அன்பளிப்பாக கொடுக்கப்படும்
நுழைவுச் சீட்டுகள் பொறுத்து அல்லது நிகழ்விற்கேற்ப
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அல்லது பொழுதுபோக்கு
அல்லது மனைகிழ்க் கூடம் அல்லது நேரடி வீட்டுச்
சேவைக்கான தொகை வளூலிப்பு எதுவாக இருப்பினும்,
அத்தகைய விவர அறிக்கைகளை, துணை விதிகளில்
வகுத்துரைக்கப்படும் முறையிலும், கால அளவுக்குள்ளும்,
அதிகார அமைப்புகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
(2) உட்பிரிவு (1)இன்படி சமர்ப்பிக்கப்படும் விவர
அறிக்கை எதுவும் சரியானதாகவும் முழுமையானதாகவும்
இருக்கிறது என்று வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பு
மனநிறைவடையுமானால், அது அதன் அடிப்படையில் வரி
மதிப்பீடு செய்தல் வேண்டும்.
(3) உட்பிரிவு (இன்படி கேளிக்கை
உரிமையாளர் விவர அறிக்கை எதுவும் குறிப்பிட்ட
காலத்திற்குள் சமர்ப்பிக்காமலோ அல்லது சமர்ப்பிக்கப்பட்ட
விவர அறிக்கை தவறானதாகவோ அல்லது
முழுமையற்றதாகவோ வகுத்துரைக்கப்பட்ட அதிகார
அமைப்புக்கு தோன்றுமானால், அது குறித்து அந்த
அமைப்பு தேவை எனக் கருதும் விசாரணையைச் செய்த
19
பின்பு, அந்த அதிகார அமைப்புக்கு நியாயம் என தோன்றும்.
விதத்தில் பிரிவு 3இன்படி வரி மதிப்பீடு செய்யலாம்:
வரம்புரை: இந்த உட்பிரிவின்கீழ் நடவடிக்கை
மேற்கொள்வதற்கு முன்னர், உரிமையாளருக்கு அவர்
சமர்ப்பித்த விவர அறிக்கை சரியானதாகவும்,
முழுமையானதாகவும் உள்ளது அல்லது விவர அறிக்கை
தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் இல்லை என்று
நிரூபிப்பதற்கு ஒரு நியாயமான வாய்ப்பு அளிக்கப்பட
வேண்டும்.
9. தவறுதலாக விடுபட்ட மதிப்பீடு மீது
அனுமதிக்கான செலுத்துகை.- (1) காரணம் எதற்காகவும்
கேளிக்கை எதற்கும் அனுமதிக்கான செலுத்தம் எதுவும்
அல்லது வசூலிக்கப்பட்ட தொகை எதுவும், பிரிவு 3இன்படி
வரிமதிப்பீட்டில் இருந்து விடுபட்டிருக்கிறபோது, பிரிவு
8இன் உட்பிரிவு (1)இன்படி வகுத்துரைக்கப்பட்ட அதிகார
அமைப்பானது, உட்பிரிவு (3)இன் வகைமுறைகளுக்கு
உட்பட்டு மற்றும் வகுத்துரைக்கப்படும் கால அளவிற்குள்
எந்த சமயத்திலும், தாம் தேவை எனக் கருதும்
விசாரணையைச் செய்த பின்பு, அத்தகைய
வரிக்கணிப்பிற்கு எதிராகக் காரணம் காட்டுவதற்கு
உரிமையாளருக்கு நியாயமான வாய்ப்பு ஒன்றை அளித்த
பின்பு, பிரிவு 3இன்படி அத்தகைய செலுத்தத்தின் மீது
கொடுக்கப்படவேண்டிய வரியினை முழு கவனத்துடன்
மதிப்பீடு செய்யலாம்.
(2) காரணம் எதற்காகவும் கேளிக்கை
அனுமதிக்கான செலுத்தம் எதுவும், பிரிவு 3இன்படி எந்த
விதத்தில் அளிக்கப்டவேண்டுமோ அந்த விதத்தைவிட
குறைவான ஒரு விதத்தில் மதிப்பிடப்பட்டு இருக்கிறபோது,
பிரிவு 8இன் உட்பிரிவு (1)இன்படி வகுத்துரைக்கப்பட்ட
20
அதிகார அமைப்பானது, உட்பிரிவு (3)இன்
வகைமுறைகளுக்கு உட்பட்டு மற்றும்
வகுத்துரைக்கப்படும் கால அளவிற்குள் எச்சமயத்திலும்,
பிரிவு 3இன்படி செய்யப்பட்ட அத்தகைய செலுத்தத்தின்
மீது கொடுக்கப்பட வேண்டிய வரியினை தான் தேவை
எனக் கருதும் விசாரணையைச் செய்த பின்பும், அத்தகைய
மறுமதிப்பீட்டிற்கு எதிராகக் காரணம் காட்டுவதற்கு
போதுமான வாய்ப்புகள் அளித்த பின்பும், கொடுக்கப்பட
வேண்டிய வரியை மறுமதிப்பீடு செய்யலாம்.
(3) ௫ஆம் உட்பிரிவின்படியோ அல்லது
நிகழ்வுக்கேற்ப உட்பிரிவு (2)இன்படி வரிமதிப்பிடோ
அல்லது மறு வரிமதிப்பிடோ செய்யும் போது, பிரிவு 8இன்
உட்பிரிவு (1) இன்படி வகுத்துரைக்கப்பட்ட அதிகார
அமைப்பானது, உரிமையாளரால் வேண்டுமென்றே
பொருண்மைகளை திரித்து அல்லது மறைத்து கூறியதன்
காரணமாக, வரிவிதிக்கப்பாமலோ அல்லது வரி
விதிக்கத்தக்க வீதத்திற்கு குறைவான ஒரு விதத்தில் வரி
விதிக்கப்பட்டு இருக்கிறது என்றோ மனநிறைவடைந்தால்
உட்பிரிவு (1)இன்படியோ அல்லது நிகழ்விற்கேற்ப,
உட்பிரிவு (2)இன்படியோ மதிப்பீடு செய்யப்பட்ட அல்லது
மறுமதிப்பீடு செய்யப்பட்ட வரிக்கு கூடுதலாக தண்டம்
என்ற முறையில்,-
(@) விவர அறிக்கையின்படி செலுத்தப்பட்ட
வரியானது, மதிப்பிடு செய்யப்பட்ட அல்லது மறுமதிப்பீடு
செய்யப்பட்டதைவிடப் பத்து விழுக்காட்டிற்கும்
குறைவாக இருக்குமானால், மதிப்பீடு செய்யப்பட்ட
அல்லது மறுமதிப்பீடு செய்யப்பட்ட வரியின் ஐம்பது
விழுக்காடு;
21
0) விவர அறிக்கையின்படி செலுத்தப்பட்ட
வரியானது, மதிப்பிடு செய்யப்பட்ட அல்லது மறுமதிப்பீடு
செய்யப்பட்டதைவிட பத்து விழுக்காட்டிற்கு மேல் ஆனால்
ஐம்பது விழுக்காட்டிற்கு மேற்படாமல், குறைவாக
இருக்குமானால் மதிப்பிடு செய்யப்பட்ட அல்லது மறு
மதிப்பீடு செய்யப்பட்ட வரியின் நூறு விழுக்காடு;
(9) விவர அறிக்கையின்படி செலுத்தப்பட்ட
வரியானது, மதிப்பிடு செய்யப்பட்ட அல்லது மறுமதிப்பீடு
செய்யப்பட்டதை விட ஐம்பது விழுக்காட்டிற்கு மேல்,
குறைவாக இருக்குமானால், நூற்று ஐம்பது விழுக்காடு,
செலுத்துமாறு உரிமையாளரைப் பணிக்கலாம்:
வரம்புரை: இந்த உட்பிரிவின்படி, பாதிக்கப்பட்ட
உரிமையாளருக்கு தண்டம் விதிப்பதற்கு எதிராகக்
காரணம் காட்டுவதற்கான நியாயமான வாய்ப்பு ஒன்று
அளிக்கப்பட்டிருந்தாலன்றி, இந்த உட்பிரிவின்படி
தண்டம் எதுவும் விதிக்கப்படுதல் கூடாது.
(4) உட்பிரிவு (1)இல் அல்லது உட்பிரிவு (2)இல்
அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும், உட்பிரிவு
(1)இன்படியோ அல்லது, நிகழ்வுக்கேற்ப உட்பிரிவு
(2)இன்படியோ, வரிமதிப்ீடு அல்லது மறு வரிமதிப்பிடு
ஒன்றைச் செய்கையில் பிரிவு 8இன் உட்பிரிவு (1)இன்படி
வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பானது நிதியாண்டு
ஒன்றை அல்லது அதன் பகுதி எதனையும் பொறுத்து
ஆணை ஒன்றைப் பிறப்பிக்கலாம்.
(5) வரி மதிப்பிட்டு அசல் ஆணை எதுவும்
மேல்முறையீடு ஒன்றின் பொருளாக இருந்தாலும் கூட
உட்பிரிவு (1)இன்படியான அல்லது உட்பிரிவு
(2இன்படியான அதிகாரங்கள், பிரிவு 8இன் உட்பிரிவு
22
(1)இன்படி வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பினால்
செலுத்தப்படலாம்.
(6) இந்தப் பிரிவின்படியான வரிமதிப்பிடு அல்லது
மறு வரிமதிப்பீடு செய்வதற்கான கால வரம்பைக்
கணக்கிடுகையில், வரிமதிப்பீடு அல்லது மறு வரிமதிப்பீடு
செய்வதற்கான நடவடிக்கைகள் உரிமையியல்
நீதிமன்றத்தின் அல்லது பிற தகுதியுள்ள அதிகார
அமைப்பின் ஆணைகளின்படி நிறுத்திவைக்கப்பட்டு
இருந்தால் அந்தக்காலஅளவானது நீக்கப்படுதல்
வேண்டும்.
10. சட்டப்படியான பிரதிநிதிகளின் மதிப்பிடுகள்.-
உரிமையாளர் ஒருவர் இறந்துவிடுகிறபோது, அவருடைய
நிறைவேற்றுபவர், நிர்வாகி அல்லது பிற
சட்டமுறையிலான பிரதிநிதி, இந்தச் சட்டத்தின்.
நோக்கத்திற்காக உரிமையாளராகக் கருதப்படுவார், மற்றும்
இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் மேற்சொன்ன
இறந்துபோன உரிமையாளரால் நடத்தப்பட்ட
கேளிக்கைகளைப் பொறுத்து அவருக்கு பொருந்துதல்
வேண்டும்:
வரம்புரை: அத்தகைய உரிமையாளர் எவராலும்
செலுத்தப்பட வேண்டிய மதிப்பிடப்பட்ட வரி, தண்டம்
அல்லது பிற தொகை எதன் பொருட்டும் அவர் இறந்து
போகாமல் இருந்தால் இந்தச் சட்டத்தின்படி அவரால்
செலுத்தப்பட வேண்டியதாக இருந்திருக்க கூடிய வரி
அல்லது தண்டம் அல்லது பிற தொகை எதனையும்
பொறுத்து, நிறைவேற்றுபவர், நிர்வாகி அல்லது பிற
சட்டமுறையிலான பிரதிநிதி தன் பொறுப்பில் உள்ள
இறந்து போனவரின் சொத்திருப்புகளின் அளவிற்கு
மட்டுமே பொறுப்பு உடையவர் ஆவார்.
23
11. வரி விதிவிலக்கு அளிப்பதற்கான அல்லது
குறைப்பதற்கான அதிகாரம்:- (1) அரசு, மன்றத்தின்.
தீர்மானத்தின் பேரில், அவர்கள் பொருத்தம் எனக் கருதும்
நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பொதுவான அல்லது சிறப்பு
ஆணையின் மூலம், இந்தச் சட்டத்தின்படி செலுத்தப்பட
வேண்டிய கேளிக்கைகளுக்கான வரி பொறுப்பிலிருந்து
கேளிக்கை அல்லது கேளிக்கைகளின் வகை எதற்கும்
விதிவிலக்களிக்கலாம்.
(2) அரசு, வகுத்துரைக்கப்படும் சூழ்நிலையில்,
அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மன்றத்தின்
தீர்மானத்தின் பேரில், ஆணையின் மூலம்:-
() வரி செலுத்தும் பொறுப்பு உடைய
உரிமையாளர் எவராலும் அல்லது
உரிமையாளர்களின். வகையினர்
எவராலும் அல்லது நபர் எவராலும்
அல்லது நபர்களின். வகையினர்
எவராலும் கேளிக்கை எதனையும்
அல்லது கேளிக்கைகளின் வகை:
எதனையும் பொறுத்து இந்தச்
சட்டத்தின்படி செலுத்தத்தக்க வருங்கால
அல்லது கடந்த கால கேளிக்கை வரி
முழுவதையுமோ அல்லது அதன் பகுதி
எதனையுமோ முன்னிட்ட தேதியிலோ
அல்லது பின்னிட்ட தேதியிலோ
செலுத்த உத்தரவிடலாம்; மற்றும்
00 அத்தகைய ஆணையை ரத்து செய்யலாம்
அல்லது மாற்றி அமைக்கலாம்.
24
12. வரி வசூல் முறை மற்றும் பிறகேட்புகளை விட
நிலுவை வரிக்கு முன்னுரிமை:- (1) பிரிவு 3இன்படி வரி
என்ற முறையில் கொடுக்கப்பட வேண்டிய தொகை
எதுவும், பிற வசூலிக்கும் முறை எதற்கும் பாதகமின்றி,-
(ஐ அது ஒரு நில வருவாய் நிலுவையைப்
போல; அல்லது
(2) குற்றவியல் நடுவர் எஹிடமும்
கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தின் பேரில், அத்தகைய
குற்றவியல் நடுவரால் விதிக்கப்பட்ட பணத்தண்டம்
ஒன்றைப் போல,
வசூலிக்கப்படுதல் வேண்டும்.
(2) உட்பிரிவு (1)இன் வகைமுறைகளுக்கு
ஊறின்றியும், அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற
சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும்,
உரிமையாளர் மீது மதிப்பிடப்பட்ட வரி எதுவும் அல்லது
அவரிடம் இருந்து இந்தச் சட்டத்தின்படி பெறப்பட
வேண்டிய பிற தொகை எதுவும், நில வருவாய் பொறுத்த
அரசின் கோருரிமைகளுக்கு உட்பட்டு, மேற்சொன்ன
உரிமையாளரின் சொத்திற்கு எதிரான பிற கோரிக்கைகள்
அனைத்தையும் விட முன்னுரிமை உடையது ஆகும்.
13. வருவாய் வசூலிப்பு சட்டத்தின்படி
வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பிற்கு உள்ள சிறப்பு
அதிகாரம்:- (1) பிரிவு 8இன் உட்பிரிவு (1)இன்படி
வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பானது, இந்தச்
சட்டத்தின்படி செலுத்தப்பட வேண்டிய தொகை:
எதனையும் வசூல் செய்யும் நோக்கத்திற்காக 1864ஆம்
ஆண்டு தமிழ்நாடு வருவாய் வசூலிப்புச் சட்டத்தின்படி
(தமிழ்நாடு சட்டம் ॥ 4864) மாவட்ட ஆட்சியர்
25
ஒருவருக்குள்ள அதிகாரத்தைக் கொண்டிருத்தல்
வேண்டும்.
(2) உட்பிரிவு (3)இன் வகைமுறைகளுக்கு
உட்பட்டு மேற்சொன்ன அதிகாரஅமைப்பானது, இந்தச்
சட்டத்தின்படி கொடுக்கப்பட வேண்டிய தொகை:
எதனையும் வசூல் செய்யும் நோக்கத்திற்காக, இந்தச்
சட்டத்தின்படி கொடுக்கப்பட வேண்டிய தொகை:
எதற்காகவும் பற்றுகை செய்யப்பட்ட சொத்தை விற்பனை
செய்வதற்கான 1839ஆம் ஆண்டு தமிழ்நாடு வாடகை
மற்றும் வருவாய் விற்பனைகள் சட்டத்தின்படி (தமிழ்நாடு
சட்டம் VI/1839) ஆணையருக்குள்ள அதிகாரங்களைக்
கொண்டிருத்தல் வேண்டும்.
(3) 1839ஆம் ஆண்டு தமிழ்நாடு வாடகை மற்றும்
வருவாய் விற்பனைகள் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் VI 7
1839) அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும்,
மேற்சொன்ன அதிகாரஅமைப்பு உட்பிரிவு (2)கல்
அளிக்கப்பட்ட அதிகாரங்களை செலுத்துகையில்
அவருடைய மேல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்கும்
மேற்பார்வைக்கும் உட்பட்டு இருத்தல் வேண்டும்.
14. தண்டத்தொகையை வளூலித்தல்.- இந்தச்
சட்டத்தின்படி செலுத்தத்தக்க தண்டம் எதுவும்,
சேகரித்தல் மற்றும் வசூலித்தல் நோக்கத்திற்காக, இந்தச்
சட்டத்தின்படியான வரியாகக் கருதப்படுதல் வேண்டும்.
மற்றும் இந்தச் சட்டத்தின்படி குற்றச் செயல் ஒன்றுக்கான
அல்லது இந்தச் சட்டத்தின்படி செலுத்தப்படாமல்:
இருக்கும் முழுத் தொகையும் பெறப்படுவதற்கான
நடவடிக்கை எதுவும் தொடங்கப்படுவதற்கு ஊறின்றி
இருத்தல் வேண்டும்.
26
15. பிரிவினையான குடும்பம், கலைக்கப்பட்ட
நிறுவனம் முதலானவற்றின் வரி செலுத்தும் பொறுப்பு.-
உரிமையாளர் ஒருவர் ஓர் இந்து கூட்டுக் குடும்பமாகவோ,
நிறுவனமாகவோ அல்லது பிறநபர்களின் கழகமாகவோ
இருந்து அத்தகைய குடும்பம், நிறுவனங்கள் அல்லது
கழகம் பிரிவினையோ அல்லது நிகழ்வுக்கேற்ப
கலைக்கப்படவோ செய்யப்படுகிறபோது,-
(வ) அத்தகைய பிரிவினை அல்லது
கலைப்பின் தேதி வரையிலான கால
அளவிற்கு அத்தகைய குடும்பம்,
நிறுவனம் அல்லது கழகத்தினால் இந்தச்
சட்டத்தின்படி செலுத்தப்படத்தக்க
வரியானது, அத்தகைய பிரிவினையோ
அல்லது கலைப்போ நிகழாது
இருந்தாற்போன்று வரி விதிக்கப்படுதல்
வேண்டும் மற்றும் அதன்படியே இந்தச்
சட்டத்தின்: வகைமுறைகள்
அனைத்திற்கும் பொருந்துவதாகும்;
மற்றும்
(b) அத்தகைய பிரிவினை அல்லது கலைப்பு
சமயத்தில், இந்து கூட்டுக் குடும்பத்தின்,
நிறுவனத்தின். அல்லது நபர்களின்.
கழகத்தின் ஓர் உறுப்பினராகவோ அல்லது
கூட்டாளியாகவோ இருந்த ஒவ்வொரு
நபரும் மற்றும் இறந்துபோன அத்தகைய
நபர்கள் எவரின் சட்டமுறையிலான
பிரதிநிதியும் அத்தகைய பிரிவினை
அல்லது கலைப்பு இருந்த போதிலும்
அத்தகைய குடும்பம், நிறுவனம் அல்லது
27
நபர்களின் கழகத்தினால் இந்தச்
சட்டத்தின்படி செலுத்தப்படத்தக்க வரி,
தண்டம் அல்லது பிற தொகைகளை
அத்தகைய பிரிவினை அல்லது
கலைப்பிற்கு முன்னரோ அல்லது
பின்னரோ மதிப்பிடு செய்யப்பட்டிருக்கும்
அத்தகைய செலுத்தத்திற்கு கூட்டாகவும்
தனித்தனியாகவும் பொறுப்பு உடையவர்
ஆவார்.
16. காலதாமதமான ெலுத்தம் மீதான வட்டி.
மதிப்பிடப்பட்ட வரி அல்லது இந்தப் பிரிவின்படி
செலுத்தப்பட வேண்டிய வரி அல்லது அதன் தவணை
எதனையும் உரிமையாளர் செலுத்தாமல் இருந்தால்
அல்லது எவரிடமிருந்து வரிவிதிப்பு அறிவிப்பில்
குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் உரிய வரி பெறப்பட
வேண்டுமோ, அந்த உரிமையாளர் அல்லது அத்தகைய வரி
செலுத்தத்திற்கு பொறுப்புடைய நபர் அந்த
செலுத்தத்திற்காக குறிப்பிடப்பட்ட தேதிக்குப் பின்னர்
அத்தகைய தொகையில் இரண்டு விழுக்காடு வீதத்தில்
கணக்கிடப்பட்ட தொகைக்கு சமமான ஒரு தொகையை
வட்டியாக, நிலுவைத் தொகையுடன் ஒவ்வொரு மாதமும்
அல்லது அதனுடைய பகுதியாக செலுத்த வேண்டும்:
வரம்புரை: நூறு ரூபாய்க்கு குறையாமல் மதிப்பீடு
செய்யப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின்படி
செலுத்தப்பவேண்டிய வரி எதற்கும், வரிவிதிப்பு
அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கால அளவு முடிவுற்ற
பின்னர் ஒருமாத கால அளவிற்கு வட்டி விதித்தல் கூடாது.
மேலும் வரம்புரை: இந்தப் பிரிவின்படி மதிப்பீட்டு
ஆணை எதற்கும் எதிரான மேல்முறையீடு ஒன்றைச்
28
செய்து இருந்த உரிமையாளர் அல்லது நபர் ஒருவர் இந்தப்
பிரிவின்படி செலுத்தப்பட வேண்டிய வட்டி,
மேல்முறையீட்டில் பிரச்சினைத் தொகையை பொறுத்து
மேல்முறையீடு முடிவு செய்யப்படுகின்ற வரையில் தள்ளி
வைக்கப்பட வேண்டும்; மற்றும் அந்த மேல்முறையீட்டின்
பொருளாக இருந்த அத்தகைய தொகையில்
மேல்முறையீட்டின் பேரில் பிறப்பிக்கப்பட்ட இறுதி
ஆணைக்கு இணங்க நிலுவையில் இருக்கின்ற
தொகையின் பேரில் கணக்கிடப்படுதல் வேண்டும்.
17. ஆய்வு- (1) இதன்பொருட்டு, உள்ளாட்சி
அமைப்புகளால் ஆய்வு செய்ய அதிகாரமளிக்கப்பட்ட
அலுவலர் எவரும், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள்
அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகள்.
பின்பற்றப்படுகிறதா என்பதைக் காண்கின்ற
நோக்கத்திற்காக கேளிக்கை நடைபெறுகின்ற போது
கேளிக்கை இடம் எதிலும் மற்றும் கேளிக்கை இடமாக
சாதாரணமாக பயன்படுத்தப்பட்ட இடம் எதிலும் நியாயமான
நேரம் எதிலும் நுழையலாம்:
1|வரம்புரை: சம்பந்தப்பட்ட உள்ளாட்சி
அமைப்புகளால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரின் முன்
அனுமதியின்றி ஆய்வு அலுவலர் கேளிக்கை நடைபெறும்
இடம் எதிலும் நுழைதல் கூடாது] .
(2) கேளிக்கை இடம் ஒன்றின் உரிமையாளர்
அல்லது சொந்தக்காரர் அல்லது கேளிக்கை இடமாக
சாதாரணமாக பயன்படுத்தப்பட்ட இடம் எதனையும்
1. 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்:
கேளிக்கைகள் வரிச் (திருத்தச்) சட்டத்தின் (52018) 3ஆம் பிரிவினால்
புகுத்தப்பட்டது
29
பொறுப்பில் கொண்டுள்ள நபர் எவரும் உட்பிரிவு (1)
இன்படி அவரின் கடமைகளை நிறைவேற்றும்போது
ஆய்வு அலுவலருக்குத் தேவையான உதவி
அனைத்தையும் வழங்குதல் வேண்டும்.
(3) ஆய்வு அலுவலர் நுழைவதைத் தடுக்கின்ற
அல்லது தடங்கல் செய்கின்ற நபர் எவரும்,
அப்போதைக்குச் செல்லாற்றலில் உள்ள சட்டம்
எதனின்படியும் எந்தத் தண்டனைக்கு அவர் பொறுப்பு
உடையவராக இருக்கிறாரோ அந்தத் தண்டனை எதற்கும்,
கூடுதலாக ஐநூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய
பணத்தண்டமும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் மற்றும் பிரிவு 21இன்
நோக்கங்களுக்காக, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான
கேளிக்கை இடம் என்பது அத்தகைய தொலைக்காட்சி
நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்டிருந்த மாகப்
பொருள்கொள்ளப்படும்.
18. அனுமதித்தலுக்கான செலுத்துகையிலிருந்து
விலக்களிப்பு:- பிரிவு 17இல் குறிப்பிடப்பட்ட அலுவலர்
இந்தச் சட்டத்திணாலோ அதன் வழியாலோ அல்லது பிற
சட்டம் எதனாலோ அவர் மீது விதிக்கப்பட்ட கடமையை
ஒட்டி கேளிக்கை இடம் எதிலும் நுழையும் பிற அலுவலர்
எவரும் கேளிக்கைக்கு அனுமதிக்கான தொகை
செலுத்துவதற்கு கோரப்படுதல் கூடாது.
19. நுழைதல், சோதனை செய்தல் மற்றும்
கைப்பற்றுதலுக்கான அதிகாரம்.--(1) இந்தச் சட்டப்
பிரிவுகளின்கீழ் அல்லது இதன்படி உருவாக்கப்பட்ட
விதிகள் அல்லது அதன்படி செய்யப்பட்ட
துணைவிதிகளின்: வகைமுறைகளுக்கு முரணாக
30
உள்ளதாக, ஐயம் கொள்ளுவதற்கு போதிய காரணம்
இருப்பதாக கருதும் உள்ளாட்சி அமைப்பினால்
இதன்பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்
எவராலும் புத்தகங்கள், பதிவுருக்கள், கணக்குப்
புத்தகங்கள், பதிவேடுகள், பயன்படுத்தப்பட்ட மற்றும்
பயன்படுத்தப்படாத சீட்டுகள் மற்றும் அதனுடைய பாகம்
அல்லது கேளிக்கை ஒன்றின். உரிமையாளரால்:
வைத்துவரப்பட்டு அல்லது வைத்துவரப்படும் அதனுடன்:
தொடர்புடைய பிறபொருட்கள் எதனையும் எழுத்து
மூலமாக காரணத்தை பதிவு செய்தபின்னர், வளாகங்கள்
எதிலும் நியாயமான நேரங்களில் நுழைந்து கைப்பற்றலாம்
மற்றும் அத்தகைய புத்தகங்கள், பதிவுருக்கள், கணக்குப்
புத்தகங்கள், பதிவேடுகள், பயன்படுத்தப்பட்ட மற்றும்
பயன்படுத்தப்படாத சீட்டுகள் மற்றும் அதன் பகுதிகள்
அல்லது அதனுடன் தொடர்புடைய பிற பொருட்கள்
எதனையும் உரிமையாளர் அல்லது வளாகங்களைப்
பொறுப்பில் கொண்டுள்ள நபருக்கு, அதன் பற்றுகை
குறித்த பற்றுச்சீட்டு வழங்குதல் வேண்டும். அத்தகைய
அலுவலர் புத்தகங்கள், பதிவுருக்கள், கணக்குப்
புத்தகங்கள், பதிவேடுகள், சீட்டுகள் மற்றும் அதன்
பாகங்கள் அல்லது அவ்வாறு பற்றுகை செய்யப்பட்ட பிற
பொருட்கள் எதனையும் புலனாய்வு நோக்கத்திற்குத்
தேவையான காலம் வரை மட்டுமே வைத்திருத்தல்
வேண்டும்.
(2) அத்தகைய அலுவலர் எவரையும், நுழைய,
சோதனையிட, அல்லது கைப்பற்றுகை செய்ய தடுக்கிற
அல்லது தடங்கல் செய்கிற நபர் எவரும், அப்போதைக்குச்
செல்லாற்றலில் உள்ள சட்டம் எதன் படியும் எந்தத்
தண்டனைக்கு அவர் பொறுப்பு உடையவராக
இருக்கிறாரோ அந்தத் தண்டனை எதற்கும் கூடுதலாக
31
ஐநூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய பணத்தண்டம்
விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
20. சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பவும்
ஆவணத்தை முன்னிடக் கோரவும் அதிகாரம்- (1). இந்தச்
சட்டத்தின்படி வரி விதிப்பதற்கு தகுதி உள்ள அதிகார
அமைப்பு அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பு
எதுவும் இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக 1908-ஆம்
ஆண்டு உரிமையியல் தொகுப்புச் சட்டத்தினால் (மத்திய
சட்டம் V/1908) நீதிமன்றத்திற்கு. வழங்கப்பட்ட
அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டிருக்கும்,
(ஐ நபர் எவரையும் முன்னிலையாகுமாறு
அழைப்பாணை அனுப்புதல் மற்றும் கட்டாயப்படுத்துதல்
மற்றும் ஆணைமொழி அல்லது உறுதியுரை மீது அவரை
விசாரித்தல்;
(b) ஆவணம் எதனையும் முன்னிலைப்
படுத்துமாறு வற்புறுத்துதல்,
(2) உட்பிரிவு (1)இல் குறிப்பிடப்பட்ட அதிகார
அமைப்பு, இந்தச் சட்டத்தின்படி வரி மதிப்பீடு செய்யவும்,
விதிக்கும் மற்றும் வசூலிக்கும் நோக்கத்திற்காக தகவல்,
விவரங்கள், பதிவுருக்கள் ஆகிய அனைத்தையும் நபர்
எவரிடமிருந்தும் கோருவதற்கு அதிகாரம் உடையதாகும்.
21. கேளிக்கை இடம் ஒன்றின் மேலாளர் அல்லது
பொறுப்பாளர் ஆகியோர் வகுத்துரைக்கப்பட்ட
அதிகாரஅமைப்பின் முன்பு முன்னிலையாதல்.-
வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பு எதன் முன்பும்
முன்னிலையாக வேண்டும் எனக் கருதுகிற நபர் எவரும்
மற்றும் மேலாளராக செயல்படுபவர் அல்லது கேளிக்கை:
இடம் எதனையும் பொறுப்பில் கொண்டு செயல்படுகிற நபர்
32
எவரும், கேளிக்கை இடம் எதனின் உரிமையாளரால்,
கூட்டாளியால் அல்லது கேளிக்கை அனுமதி
கொண்டிருப்பவரால், வகுத்துரைக்கப்படும் படிவத்திலும்,
முறையிலும் உரியவாறு அதிகாரம் அளிக்கப்படுதல்
வேண்டும்.
22. வரியை அடுத்த ரூபாய்க்கு முழுமையாக்குதல்.-
வரி, வட்டி, தண்டம், பணத்தண்டம், அல்லது செலுத்தப்பட
வேண்டிய பிறதொகை எதுவும், இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளின்படி திருப்பிக் கொடுக்கப்படும் தொகை
அல்லது கொடுக்கப்பட வேண்டிய பிற தொகை எதுவும்,
இந்த சட்டத்தின் வகைமுறைகளின்படி, அடுத்துள்ள
ரூபாய்க்கு முழுமையாக்கப்படுதல் வேண்டும் மற்றும் இந்த
நோக்கத்திற்காக அத்தகைய தொகை, ரூபாயின்
பகுதியான காசாக இருக்கும் போது அத்தகைய பகுதி
ஐம்பது காசாகவோ அல்லது அதற்கு மேலாகவோ
இருக்குமானால் அது ஒரு ரூபாய்க்கு
முழுமையாக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய
பகுதி ஐம்பது காசுக்கு குறைவாக இருக்குமானால்
விட்டுவிடப்படுதல் வேண்டும்.
23, தண்டங்கள்.- (1) (8) கேளிக்கை இடம் எதனின்
உரிமையாளர் அல்லது கேளிக்கை இடம் எதிலும் அவரால்
பணிக்கு அமர்த்தப்பட்ட நபர் எவரும், பிரிவு 6இன்:
வகைமுறைகளுக்கு முரணாக கேளிக்கை இடம் எதிலும்
நபர் எவரையும் அனுமதித்தால்; அல்லது
(௦) கேளிக்கை எதனின் உரிமையாளர்-
() இந்தச் சட்டத்தின்படி கொடுக்கப்பட
வேண்டிய வரியை மோசடியாக
ஏய்ப்பாரானால்; அல்லது
33
(i) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை
மீறுவாரானால்;
(9) கேளிக்கை இடத்தின். உரிமையாளர்
அல்லது அவரால் பணியமர்த்தப்பட்ட நபர் எவரும்,
1955ஆம் ஆண்டு தமிழ்நாடு திரைப்படங்கள்
(முறைப்படுத்துதல்) சட்டத்தின்படியும் (தமிழ்நாடு சட்டம் IX
7 1955) அதன்படி செய்யப்பட்ட விதிகளின் படியும் உரிமம்
வழங்கும் அதிகாரியால் வகுத்துரைக்கப்பட்ட தொகைக்கும்.
அதிகமாக அனுமதி தொகை வளூலிப்பாரானால்,-
குற்றவியல் நடுவரால் தண்டனைத் தீர்ப்பு
வழங்கப்பட்டதன்பேரில்,-
() கூறு (ஐ) இன்படி அல்லது கூறு (b) இன்:
உட்கூறு 0) இல் அல்லது (கூறின்
கீழ்வரும் அத்தகைய குற்றச்செயல்
ஒவ்வொன்றையும் பொறுத்து ஆயிரம்
ரூபாய் வரை நீட்டிக்கப்படத்தக்க
பணத்தண்டத்திற்கு உள்ளாதல்
வேண்டும்;
(i) கூறு (b) இன் உட்கூறு (i) இன் கீழ்வரும்
அத்தகைய குற்றச்செயல் ஒன்றைப்
பொறுத்து, ஓராண்டு கால அளவு வரை
நீட்டிக்கப்படக்கூடிய சிறைதண்டனை
வகைகள் ஏதொன்றையும் மற்றும்
பணத்தண்டமும் விதித்து
தண்டிக்கப்படுதல் வேண்டும்.
(2) 1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைத்
தொகுப்புச் சட்டத்தில் (மையச் சட்டம் 21973) என்ன
அடங்கியிருந்த போதிலும், உட்பிரிவு (1) இன் கூறு (b)
34
இன் உட்கூறு (இன் கீழ்வரும் குற்றச்செயல் கைது
செய்வதற்கு உரியதாகும்.
(3) உட்பிரிவு (1)இன் கூறு )இன் உட்கூறு (i)
இன் கீழ் வரும் குற்றச்செயல் ஒன்றைப் பொறுத்து
உள்ளாட்சி அமைப்பால் பொது அல்லது சிறப்பு
ஆணையின் மூலம் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்
ஒருவரால் எழுத்து வடிவில் செய்யப்பட்ட முறையீட்டின்
பேரில் அன்றி, நீதிமன்றம் எதுவும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
(4) நபர் எவரும், நுழைவுச்சீட்டு அல்லது
அனுமதிச் சீட்டு இல்லாமல் கேளிக்கை இடம் எதிலும்
காணப்படுகிறபோது, கேளிக்கை இடத்தின் உரிமையாளர்
அல்லது பணிக்கு அமர்த்தப்பட்ட நபர், உரிமையாளர்
அல்லது அவரால் பணிக்கு அமர்த்தப்பட்ட நபருக்கு
தெரியாமல் அல்லது அவரின் மறைமுக ஆதரவு
இல்லாமல் அந்த நபர் அனுமதிச் சீட்டு இல்லாமல்
நுழைந்திருக்கிறார் என்று, உரிமையாளார் அல்லது
அவரால் பணிக்கு அமர்த்தப்பட்ட நபர் நிரூபித்தாலன்றி,
பிரிவு 6இன் வகைமுறைகளுக்கு முரணாக அந்த நபர்
அனுமதிக்கப்பட்டதாகக் கருதப்படுவார்.
24. நுழைவுச்சீட்டு அல்லது அனுமதிச் சீட்டு
இல்லாமைக்கான தண்டம்.- கேளிக்கை இடம் எதிலும்,
நுழைவுச்சீட்டு, அல்லது அனுமதிச் சீட்டு இல்லாமல்
காணப்படும் நபர் எவரும், உரிமையாளர் அல்லது அவரால்
பணிக்கு அமர்த்தப்பட்ட நபர் எவருக்கும் தெரிந்தோ
மறைமுக ஆதரவுடனோ அத்தகைய இடத்தில் அவர்
நுழைந்தார் என்று அவர் நிருப்பித்தால் அன்றி, குற்றவியல்
நடுவரால் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பேரில்,
35
நூறு ரூபாய்வரை நீட்டிக்கப்படக்கூடிய
பணத்தண்டத்திற்கு உள்ளாவார்.
28. குற்றம் செய்ய உடந்தையாக இருத்தலுக்கான
தண்டம்.- இந்தச் சட்டத்தின்படியாக குற்றச் செயல்
எதனையும் செய்வதற்கு உடந்தையாய் இருக்கிற எவரும்
அந்தக் குற்றச்செயலுக்காக வகைசெய்யப்பட்டுள்ள அதே
தண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
26. நிறுமங்களால் செய்யப்படும் குற்றச்செயல்கள்.-
(1) இந்தச் சட்டத்தின்படி குற்றச்செயல் ஒன்று, நிறுமம்
ஒன்றால் செய்யப்பட்டிருக்கும் போது, அந்தக் குற்றச்
செயல் செய்யப்பட்ட காலத்தில் அந்த நிறுமத்தின்
அலுவலை நடத்தி வருவதற்கு அந்த நிறுமத்தின்
பொறுப்பைக் கொண்டிருந்தவரும், அதற்குப்
பொறுப்பாயிருந்தவருமான நபர் ஒவ்வொருவரும் அதோடு,
அந்த நிறுமமும், அந்த குற்றச் செயலைச் செய்ததாகக்
கருதப்படுதல் வேண்டும் மற்றும் அதன்படியே எதிராக
நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு
உள்ளாதலும் வேண்டும்:
வரம்புரை: அந்தக் குற்றச்செயலானது, தமக்குத்
தெரியாமல் செய்யப்பட்டதாக அல்லது அத்தகைய
குற்றச்செயல் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு தாம் உரிய
முயற்சி அனைத்தையும் மேற்கொண்டதாக அத்தகைய
நபர் நிரூபிப்பாரானால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள
எதுவும் அவரைத் தண்டனை எதற்கும் உள்ளாக்காது.
(2) உட்பிரிவு (1)இல் அடங்கியுள்ள எது
எவ்வாறாக இருப்பினும், இந்தச் சட்டத்தின்படியான
குற்றச்செயல் ஒன்று ஒரு நிறுமத்தால் செய்யப்பட்டிருந்து,
அந்த நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர்
36
அல்லது பிற அலுவலரின் சம்மதத்துடனோ மறைமுக
ஆதரவுடனோ அந்தக் குற்றச்செயல்
செய்யப்பட்டிருக்கிறதறு அல்லது அவரது கவனக்குறைவு
எதற்கும் சாட்டத்தக்கதாக இருக்கிறது என்று
நிரூபிக்கப்படுகிற போது அந்த இயக்குநர், மேலாளர்,
செயலாளர் அல்லது பிற அலுவலர் அந்தக்
குற்றச்செயலைச் செய்திருப்பதாகக் கொள்ளப்படுதலும்.
அதன்படியே எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு
தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும் வேண்டும்.
விளக்கம்.- இப்பிரிவின் நோக்கங்களுக்காக,
(@ "நிறுமம்" என்பது, கூட்டுநிறுமம் எனப்
பொருள்படும் மற்றும் ஒரு நிறுவனத்தை அல்லது தனி
நபர்களின் பிற கழகத்தை உள்ளடக்கும்; மற்றும்.
(b) "இயக்குநர்" என்பது தொடர்புடைய,
(i) நிறுவனம் என்பது நிறுவனத்தில் உள்ள
கூட்டாளி எனப் பொருள்படும்.
(il) சங்கம், அறக்கட்டளை அல்லது பிற தனி
நபர்களின் கழகம் என்பது சங்கத்தின்,
அறக்கட்டளையின். அல்லது பிற
கழகத்தின் விதிகளின்படி சங்கத்தின்,
அறக்கட்டளையின் அல்லது
நிகழ்விற்கேற்ப பிற கழகத்தின்
மேலாண்மை ஒப்படைக்கப்பட்டுள்ள நபர்
ஒருவர் எனப் பொருள்படும்.
27. குற்றங்களை இணக்கமாக தீர்த்துக்
கொள்வதற்கான அதிகாரம்.-- (1) இந்தச் சட்டத்திற்கு
அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளுக்கு எதிரான
37
குற்றச்செயல் ஒன்றை, செய்துள்ள அல்லது
செய்திருப்பதாக கருதப்படுகிற எவர் ஒருவரிடமிருந்தும்
வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பு தண்டத் தொகை
எதனையும் பெறலாம்,-
(ஐ) இந்தச் சட்டத்தின்படி வரி ஏய்ப்பு
குற்றத்தை செய்கிறபோது அவ்வாறு செலுத்தப்பட
வேண்டிய வரிக்கு கூடுதலாக ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு
அல்லது செலுத்தப்பட வேண்டிய வரித்தொகையின்:
மூன்று மடங்கு தொகை இதில் எது அதிகமோ அது;
மற்றும்
(௦) பிறநிகழ்வுகளில், ஆயிரம் ரூபாய்க்கு
மேற்படாத தொகை, குற்றச்செயலை இணைக்கமாக
தீர்த்துக் கொள்ளுவதற்கான வழிவகைகளை
வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பு ஏற்றுக்
கொள்ளலாம்.
28. பதிவுருவைப் பார்த்தவுடன் தோன்றும் பிழை
எதனையும் திருத்தி அமைப்பதற்கான அதிகாரம்.- (1)
இந்தச் சட்டத்தின்படி வரி மதிப்பீடு செய்வதற்கு தகுதி
உள்ள அதிகாரஅமைப்பு அல்லது மேல்முறையீட்டு
அதிகாரஅமைப்பு எதுவும் பதிவுருவை பார்த்த
மாத்திரத்திலேயே தோன்றும் பிழை எதனையும் எந்த
நேரத்திலும் அதனால் ஆணை பிறப்பிக்கப்பட்ட
தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் திருத்தி
அமைக்கலாம்:
வரம்புரை: அத்தகைய திருத்தி அமைத்தல் எதுவும்,
அத்தகைய அதிகாரஅமைப்பு, உரிமையாளருக்கு அறிவிப்பு
கொடுத்தாலன்றியும் கேட்கப்படுவதற்கான நியாயமான
38
வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டாலன்றியும், வரிவிதிப்பு
அல்லது தண்டனை எதனையும் அதிகரித்தல் கூடாது.
(2) அத்தகைய திருத்தியமைத்தலானது,
வரிவிதிப்பை, அல்லது தண்டத்தை குறைக்கும்
விளைவைக் கொண்டதாக இருக்கும் போது இந்தச்
சட்டத்தின்படி வரிவிதிப்பதற்கு தகுதியுள்ள அதிகார
அமைப்பு உரிமையாளருக்கு கொடுக்கப்படபவேண்டிய
தொகையை திருப்பி கொடுத்தல் வேண்டும்.
(3) அத்தகைய திருத்தி அமைத்தல் எதுவும்,
வரிமதிப்பிட்டை அல்லது தண்டத்தை அதிகரிக்கும்
விளைவைக் கொண்டதாக இருக்கிற போது இந்தச்
சட்டத்தின்படி வரிவிதிப்பு செய்வதற்கான தகுதி வாய்ந்த
அதிகார அமைப்பானது கேளிக்கை இடத்தின்
உரிமையாளருக்கு வரிவிதிப்பதற்கான அல்லது தண்டம்
விதிப்பதற்கான திருத்திய அறிவிப்பை வழங்குதல்
வேண்டும் அதன்பேரில் இந்தச் சட்டத்தின்
வகைமுறைகள் மற்றும் அதன்படி இயற்றப்பட்ட
விதிகளானது முதல் நிகழ்வில் அத்தகைய அறிவிப்பானது
வழங்கப்பட்டது போன்றே பொருந்துதல் வேண்டும்.
29. மேல்முறையீடு. வரி (குண்டம், கட்டணம்
மற்றும் வட்டி உள்ளடங்கலாக) செலுத்துவது தொடர்பான
உள்ளாட்சி அமைப்பின் ஆணை அல்லது முடிவினால்
குறையுற்ற கேளிக்கை இடத்தின் உரிமையாளர் அல்லது
நபர் எவரும் வகுத்துரைக்கப்படும் அத்தகைய
காலத்திற்குள்,
() மாநகராட்சிகளின். ஆணையினால்
அல்லது முடிவினால் அவர் குறையுற்று
39
இருப்பாரானால் வரி மேல்முறையீட்டுத்
தீர்ப்பாயத்திற்கு;
(i) நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின்
ஆணையினால் அல்லது முடிவினால்
குறையுற்று இருப்பாரானால்:
வரிமேல்முறையீட்டுக் குழுவிற்கு;
அல்லது
(0 அவர் ஊராட்சி ஒன்றிய ஆணையினால்
அல்லது முடிவினால் குறையுற்று
இருப்பாரானால் 1994ஆம் ஆண்டு
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்
(தமிழ்நாடு சட்டம் 211994) பிரவு
83இன்படி நியமிக்கப்பட்ட நிருவாக
அதிகார அமைப்பிற்கு,
மேல்முறையீடு செய்யலாம்.
30. பொதுப்பணியாளர்களாகக் கருதப்படுதல்.-இந்தச்
சட்டத்தின்படி செயற்பணிகளை ஆற்றுகின்ற அனைத்து
நபர்களும் இந்திய தண்டனை தொகுப்பும் சட்டத்தின்.
(மையச் சட்டம் XLV/1860) பிரிவு 21இகன் பொருளின்படி
பொதுப் பணியாளர்களாகக் கருதப்படுதல் வேண்டும்.
31. நல்லெண்ணத்துடன் எடுக்கப்படும்.
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.-- இந்தச் சட்டத்தின்படி
அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளின்படி அல்லது
துணை விதிகளின்படி நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட
அல்லது நல்லெண்ணத்தில் செய்யக் கருதப்பட்ட
எதற்காகவும் இந்தச் சட்டத்தின்படி அமர்த்தப்பட்ட
அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவருக்கும்
40
எதிராக உரிமை வழக்கோ, குற்றவழக்கோ அல்லது பிற
சட்ட நடவடிக்கை எதுவுமோ தொடரப்படுதல் கூடாது.
32. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.- (1)
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை செயல்படுத்துவதில்
இடர்ப்பாடு எதுவும் எழுமானால், அரசானது பொதுவான
அல்லது சிறப்பு ஆணையைத் தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடுவதன் வாயிலாக, இந்தச் சட்டத்தின்.
வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத, கூறப்பட்ட
இடர்ப்பாட்டினை நீக்கும் நோக்கத்திற்குத் தேவையான
அல்லது உகந்த வகைமுறைகளை செய்யலாம்:
வரம்புரை: அத்தகைய ஆணையானது, இந்தச்
சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து மூன்று ஆண்டு
காலஅளவு முடிவடைந்த பின்பு செய்யப்படுதல் கூடாது.
(2) இந்தப் பிரிவின்படி செய்யப்பட்ட ஆணை
ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட பின்பு கூடிய விரைவில்
சட்டமன்றத்தில் வைக்கப்படுதல் வேண்டும்.
33. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1)
அரசானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்கள்.
அனைத்தையும் அல்லது எதையும் நிறைவேற்றுவதற்காக
தமிழ்நாடு அரசிதழில் அறிக்கையின் வாயிலாக விதிகளை
செய்யலாம்.
(2) (ல இந்தச் சட்டத்தின்படி இயற்றப்பட்ட
விதிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்படுதல் வேண்டும். அந்த விதிகள் குறிப்பிட்ட
தேதியில் நடைமுறைக்கு வருவதாகத் தெளிவாக
குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி அந்த விதிகள் அவ்வாறு
வெளியிடப்பட்ட அதே தேதியில் நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
41
(௦) இந்தச் சட்டத்தின்படி வெளியிடப்பட்ட
அனைத்து அறிவிக்கைகளும் குறிப்பிட்ட தேதியில்
அவைகள் நடைமுறைக்கு வருவதாக தெளிவாக
குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி அவைகள் வெளியிடப்பட்ட
அதே தேதியில் நடைமுறைக்கு வரும்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி
அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும் அது
இயற்றப்பட்ட பின்பு அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு கூடிய
விரைவில் சட்டமன்றத்தில் வைக்கப்படுதல் வேண்டும்
மற்றும் அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது
அடுத்தடுத்தக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பு
சட்டமன்றமானது அத்தகைய விதியில் அல்லது
அறிவிக்கையில் மாற்றம் எதையும் செய்யுமானால் அல்லது
சட்டமன்றமானது. விதி அல்லது அறிவிக்கையை
இயற்றுதலோ அல்லது பிறப்பித்தலோ கூடாது என முடிவு
செய்யுமானால் அதன்பின்பு அந்தவிதி அல்லது அந்த
அறிவிக்கையானது அத்தகைய மாற்றம் செய்யப்பட்ட
வடிவத்தில் மட்டுமே செல்திறம் உடையது ஆகும் அல்லது
செல்திறம் இல்லாது போகும், எனினும் அத்தகைய மாற்றம்
அல்லது நீக்கம் எதுவும் அந்த விதியின்படி அல்லது
அறிவிக்கையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட
எதனுடைய செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல்
வேண்டும்.
34. துணைவிதிகளை செய்வதற்கான அதிகாரம்.-
(1) உள்ளாட்சி அதிகார அமைப்பானது இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கு செயல் வடிவம் அளிக்கும்
நோக்கத்திற்காக இந்தச் சட்டத்தின் மற்றும் அதன்படி
செய்யப்பட்ட விதிகளுக்கு முரணாக இல்லாத துணை
விதிகளை இயற்றலாம்.
42
(2) குறிப்பாகவும் முன்னர் உள்ள பொதுவான
அதிகாரத்திற்கு ஊறின்றியும் அத்தகைய துணை
விதிகளானது,-
(ஐ) அனுமதிக்கான நுழைவுச் சீட்டு மற்றும்
அதன் மீதான வரி கணக்கிடப்படுதல்;
கணக்கிடப்படும் வரி, மற்றும் கேளிக்கை
இடத்தின் ஒரு பகுதியிலிருந்து பிற
இடத்திற்கு மாறுதலுக்கு செலுத்த
வேண்டிய வரிகளுக்கான மற்றும்
இருக்கைகளுக்காக அல்லது பிற தங்கும்
வசதிகளுக்காக பணம்:
செலுத்துவதற்காக;
(௦) தடுப்புகளை கட்டுப்பாடு செய்ய அல்லது
இயந்திர சூட்சமங்களை
பயன்படுத்துவதை (அதே தடுப்புகள்
அல்லது இயந்திர சூட்சமங்கள் வேறு
தொகை செலுத்தத்திற்கு
பயன்படுத்துவதை தடுத்தல் உள்ளிட்ட)
மற்றும் தடுப்புகள் அல்லது இயந்திர
சூட்சமங்கள் மூலமாக அனுமதி குறித்த
பதிவு ஆவணங்களை உரியவாறு
பாதுகாப்பதற்காக;
(69) அனுமதியை ஆய்வு செய்வதற்காக,
கேளிக்கை தொழில் உரிமையாளர்
கணக்குகளை பேணி வருவதற்காக
மற்றும் விவர அறிக்கைகளை
அளிப்பதற்காக;
(0) கேளிக்கை வரி செலுத்துவதிலிருந்து
விலக்களிப்பதற்காகவோ அல்லது
43
செலுத்திய பணத்தை திரும்ப
கோருவதற்காகவோ இந்தச் சட்டத்தின்.
வகைமுறைகளின்படி விண்ணப்பம்
தாக்கல் செய்வதற்காக மற்றும் முடிவு
செய்வதற்காக;
(ஐ) இந்தச் சட்டத்தின்படி கேளிக்கைகள்
(1)
வரியை வசூல் செய்வதற்காக மற்றும்
வகுத்துரைக்கப்பட்ட அதிகார
அமைப்பால் அதிகாரங்கள்:
செலுத்தப்படுவதற்காக;
உள்ளாட்சி அதிகார அமைப்பின் அதிகார
எல்லைக்குள் அல்லது அத்தகைய
பரப்பிடத்தின் பகுதி எதிலும், பரப்பிடத்தில்
கேளிக்கை வரியை வசூல் செய்வதற்கு
நபர் எவருக்கும் அதிகாரம்
அளிப்பதற்காக மற்றும் அத்தகைய
வசூல் தொடர்பாக உள்ளாட்சி அதிகார
அமைப்பின். அலுவலர்களால்:
அதிகாரங்கள் செலுத்தப்படுவதற்காக;
(ஐ கேளிக்கை இடம் எதிலும் கடமை
எதையும் ஆற்றும் நபர்களை
அனுமதித்தலுக்காக அல்லது கேளிக்கை
எதுவும் தொடர்பாக அல்லது இந்தச்
சட்டத்தால் அல்லது இந்தச்
சட்டத்தின்படி அல்லது பிற சட்டம்
எதனாலும் அவர்களுக்கு சுமத்தப்பட்ட
கடமை எதற்காகவும், கேளிக்கைகளின்
உரிமையாளர்களால் அனுமதி
வழங்குவதற்காக;
44
(h) இந்தச் சட்டத்தின்படியான
நடவடிக்கைகள் தொடர்பான
மேல்முறையீடுகளுக்காக, அத்தகைய
மேல்முறையீடுகள் எந்தக் காலத்திற்குள்:
செய்யப்படுதல் வேண்டுமோ அந்தக்
காலத்திற்காக மற்றும் அத்தகைய
மேல்முறையீடுகளுக்கு செலுத்தப்பட
வேண்டிய கட்டணங்களுக்காக,
வகைசெய்யலாம்.