Tamil Nadu · 1972 · Act 36

Tamil Nadu Labour Welfare Fund Act

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1972 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர்‌ நல நிதியச்‌ சட்டம்‌. (சட்டம்‌ எண்‌ 36 7 1972) தமிழ்நாடு மாநிலத்தில்‌ தொழிலாளர்‌ நலனை மேம்படுத்துவதற்காகவும்‌ அதனுடன்‌ தொடர்புடைய குறித்தசில பிற பொருட்பாடுகளுக்காகவும்‌ நிதியம்‌ ஒன்றை அமைப்பதற்கு வகைசெய்வதற்கானதெொரு சட்டம்‌. இந்திய குடியரசின்‌ இருபத்து மூன்றாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றத்தால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இச்சட்டம்‌, 1972 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர்‌ நல நிதியச்‌ சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது, அரசு, அறிவிக்கை வாயிலாக, குறித்திடலாகும்‌ அத்தகைய தேதியில்‌ நடைமுறைக்கு வரும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாய்‌ பிறவாறாக வேண்டப்பட்டாலன்றி,- (ஐ) "வாரியம்‌ என்பது 4 ஆம்‌ பிரிவின்கீழ்‌ நிறுவப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர்‌ நல வாரியம்‌ என்று பொருள்படும்‌; (b) "பணியாளர்‌" என்பது- () முந்தைய பன்னிரெண்டு மாத காலத்தில்‌ 30 நாட்களுக்கு, ஒரு நிறுவனத்தில்‌ திறமையான அல்லது திறமையற்ற, உடலுழைப்பு, மேற்பார்வை, எழுத்தர்‌ அல்லது தொழில்நுட்பப்‌ பணி எதனையும்‌ செய்வதற்கு கூலிக்காக அல்லது வெகுமதிக்காக அமர்த்தப்பட்ட எவரேனும்‌, வேலைவாய்ப்பு விதிமுறைகள்‌ வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தாலும்‌, ஆனால்‌- (ஐ முக்கியமாக நிர்வாகத்‌ திறணில்‌ பணிபுரிபவர்‌; அல்லது (௦) மேற்பார்வைப்‌ பொறுப்பில்‌ அமர்த்தப்பட்டவர்‌ மாதம்‌ ஒன்றுக்கு பதினைந்தாயிரம்‌ ரூபாய்க்கு மேல்‌ ஊதியம்‌ பெறுபவர்‌ அல்லது அலுவலகத்துடன்‌ இணைக்கப்பட்ட கடமைகளின்‌ தன்மையினாலோ அல்லது அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்‌ காரணமாகவோ, முக்கியமாக மேலாண்மை இயல்புடைய பணிகளில்‌ செயல்படுபவர்‌; அல்லது (6) வேலைப்‌ பழகுநராக அல்லது பகுதிநேர அடிப்படையில்‌ பணியமர்த்தப்பட்டவர்‌ எவரையும்‌ உள்ளடக்காது. விளக்கம்‌.- வேலைப்‌ பழகுநர்‌ என்பது நிறுவனத்தின்‌ ஏற்புடையதான சான்றளிக்கப்பட்ட நிலை ஆணைகளின்படி, ஒரு பழகுநராக இருக்கும்‌ ஒரு நபர்‌ அல்லது அரசால்‌ இதன்‌ பொருட்டு குறித்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பினால்‌ ஒரு பழகுநராக அறிவிக்கப்பட்ட ஒரு நபர்‌; மற்றும்‌ (i) இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, அரசு அறிவிக்கை மூலம்‌ அறிவிக்கக்கூடிய எந்தவொரு நிறுவனத்திலும்‌, ஒரு பணியாளராக. பணியமர்த்தப்பட்ட எவரேனும்‌ பிற நபரும்‌; (௦) "வேலை வழங்குநர்‌" என்பது, நிறுவனத்தின்‌ விவகாரங்கள்ம்து இறுதிக்‌ கட்டுப்பாட்டைக்‌ கொண்டுள்ள ஒரு நபர்‌, மற்றும்‌ கூறப்பட்ட விவகாரங்களானது மேலாளர்‌, மேலாண்மை இயக்குநர்‌, மேலாண்மை முகவர்‌, கண்காணிப்பாளர்‌ அல்லது வேறு ஏதேனும்‌ பெயரில்‌ அழைக்கப்படும்‌ எந்தவொரு பிற நபரிடமும்‌ ஒப்படைக்கப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய பிற நபர்‌; (0) நிறுவனம்‌" என்பது- () 1948 ஆம்‌ ஆண்டு தொழிற்சாலைகள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ LXI/1948) 2 ஆம்‌ பிரிவின்‌ (m) கூறில்‌ வரையறுக்கப்பட்டுள்ளவாறு ஒரு தொழிற்சாலை அல்லது அந்தச்‌ சட்டத்தின்‌ 85 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஒரு தொழிற்சாலையாகக்‌ கருதப்படும்‌ எந்தவொரு இடமும்‌: (il) 1961 ஆம்‌ ஆண்டு இயக்கூர்தி போக்குவரத்து தொழிலாளர்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 27/1961) 2 ஆம்‌ பிரிவின்‌ (ஐ கூறில்‌ வரையறுக்கப்பட்டுள்ளவாறு ஓர்‌ இயக்கூர்தி போக்குவரத்து நிறுவனம்‌; 0) 1951 ஆம்‌ ஆண்டு தோட்டத்‌ தொழிலாளர்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ LXIX/1951) 2 ஆம்‌ பிரிவின்‌ () கூறில்‌ வரையறுக்கப்பட்டுள்ளவாறு ஒரு தோட்டம்‌; 0) 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 50171958) 2 (1) ஆம்‌ பிரிவில்‌ வரையறுக்கப்பட்டுள்ளவாறு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்தும்‌ அல்லது அதற்கு முந்தைய பன்னிரண்டு மாதங்களில்‌ ஏதேனும்‌ வேலை நாளில்‌ வேலைக்கு அமர்த்திய நிறுவனம்‌; &) 0) 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள்‌ பதிவுச்‌ சட்டத்தின்கீழ்‌ (குமிழ்நாடு சட்டம்‌ 27/1975) பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டதாகக்‌ கருதப்பட்ட ஒரு சங்கம்‌ மற்றும்‌ ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்தும்‌ அல்லது அதற்கு முந்தைய பன்னிரண்டு மாதங்களில்‌ ஏதேனும்‌ வேலை நாளில்‌ வேலைக்கு அமர்த்திய மற்றும்‌ ஏதேனும்‌ தொழில்‌ அல்லது வணிகம்‌ அல்லது அதனுடன்‌ தொடர்புடைய எந்தவொரு பணியையும்‌ மேற்கொள்கிற ஒரு பொறுப்புக்கட்டளை அல்லது பிற அறக்கட்டளைக்கு பொருந்தக்கூடிய சட்டம்‌ எதன்கீழும்‌, பதிவுசெய்யப்பட்டிருந்தாலும்‌ அல்லது இல்லாவிட்டாலும்‌, அத்தகைய பொறுப்புக்கட்டளை அல்லது பிற அறக்கட்டளை அல்லது அதன்‌ துணை நிறுவனம்‌ உள்ளடங்கலான ஒரு நிறுவனம்‌; ஆனால்‌ மைய அல்லது எந்தவொரு மாநில அரசின்‌ (ஒரு தொழிற்சாலையாக அல்லாத) ஒரு நிறுவனத்தை உள்ளடக்காது; V) இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, ஒரு நிறுவனம்‌ என்று அறிவிக்கையின்‌ மூலம்‌ அரசு அறிவிக்கக்கூடிய பிற எந்த நிறுவனமும்‌; என்று பொருள்படும்‌; விளக்கம்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, ஒரு நிறுவனம்‌ வெவ்வேறு துறைகளைக்‌ கொண்டிருந்தால்‌ அல்லது ஒரே இடத்தில்‌ அல்லது வெவ்வேறு இடங்களில்‌ அமைந்துள்ள கிளைகளைக்‌ கொண்டிருந்தால்‌, அத்தகைய அனைத்து துறைகளும்‌ அல்லது கிளைகளும்‌ ஒரே நிறுவனத்தின்‌ பகுதிகளாகக்‌ கருதப்படும்‌. (6) "நிதியம்‌" என்பது 3 ஆம்‌ பிரிவின்கீழ்‌ அமைக்கப்பட்ட தொழிலாளர்‌ நல நிதியம்‌ என்று பொருள்படும்‌; (1) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்‌; (9) "ஆய்வாளர்‌" என்பது 22 ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட ஒரு ஆய்வாளர்‌ என்று பொருள்படும்‌; (h) "செயலாளர்‌" என்பது 21 ஆம்‌ பிரிவின்கீழ்‌ நியமிக்கப்பட்ட செயலாளர்‌ என்று பொருள்படும்‌; (i) "செலுத்தப்படாத தொகுப்பு" என்பது, இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு முன்போ பின்போ பணியாளருக்குச்‌ சேரவேண்டிய ஆனால்‌ பணிக்கொடை செலுத்தவேண்டிய தேதியிலிருந்து மூன்றாண்டு காலஅளவிற்குள்‌, அவருக்கு செலுத்தப்படாத பணிக்கொடை தவிர, அனைத்து செலுத்தங்களும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு பின்பு பணியாளருக்குச்‌ சேர்ந்தடைந்துள்ள, ஆனால்‌ அத்தகைய சேர்ந்தடைவின்‌ தேதியிலிருந்து மூன்றாண்டு காலஅளவிற்குள்‌, அவருக்கு செலுத்தப்படாத பணிக்கொடையும்‌ என்று பொருள்படும்‌, ஆனால்‌ 1952 ஆம்‌ ஆண்டு பணியாளர்களின்‌ வருங்கால வைப்பு நிதிச்‌ சட்டத்தின்கீழ்‌ (மையச்‌ சட்டம்‌ 301952) நிறுவப்பட்ட வருங்கால வைப்பு நிதிக்கு வேலை வழங்குநரால்‌ செலுத்தப்பட்ட பங்களிப்புத்‌ தொகை ஏதேனுமிருப்பின்‌ அவற்றை உள்ளடக்காது; 0) "கூலி" என்பது, பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட ஒரு பணியாளருக்கு அவரது வேலையை அல்லது அந்த வேலையில்‌ செய்யப்பட்ட பணியைப்‌ பொறுத்து, வெளிப்படையான அல்லது உட்கிடையான பணியமர்த்த ஒப்பந்தத்தின்‌. வரையுரைகள்‌ நிறைவேற்றப்பட்டால்‌, செலுத்தத்தக்கதாகும்‌, பணம்‌ என்ற வகையில்‌ குறிப்பிடப்பட்ட பணியூதியம்‌ அனைத்தும்‌ என்று பொருள்படும்‌, ஆனால்‌- () எதேனும்‌ வீட்டு இடவசதி அல்லது வெளிச்சம்‌, நீர்‌, மருத்துவ கவனிப்பு அல்லது பிற வசதிகளின்‌ வழங்கல்‌ அல்லது அரசின்‌ பொது அல்லது சிறப்பு ஆணை மூலம்‌ கூலியைக்‌ கணக்கிடுவதிலிருந்து விலக்கப்பட்ட எந்தவொரு சேவையும்‌; (i) ஏதேனும்‌ ஓய்வூதியம்‌ அல்லது வருங்கால வைப்பு நிதிக்கு அல்லது ஏதேனும்‌ சமூகக்‌ காப்புறுதித்‌ திட்டத்தின்கீழ்‌ வேலை வழங்குநரால்‌ செலுத்தப்பட்ட ஏதேனும்‌ பங்களிப்பு; 0) எந்தவொரு பயணப்‌ படி அல்லது எந்தவொரு பயணச்‌ சலுகையின்‌ மதிப்பு; 0) பணியாளருக்கு அவரது வேலையின்‌ தன்மையால்‌ ஏற்படும்‌. சிறப்பு செலவுகளை ஈடுகட்ட அவருக்கு செலுத்தப்படும்‌ எந்தவொரு தொகையும்‌; அல்லது (v) பணி முடிவுறும்போது வழங்கப்படும்‌ ஏதேனும்‌ பணிக்கொடை, ஆகியவற்றை உள்ளடக்காது. 3. தொழிலாளர்‌ நல நிதியம்‌.- (1) அரசு, தொழிலாளர்‌ நல நிதியம்‌ என்றழைக்கப்படும்‌. நிதியமொன்றை அமைத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌, அப்போதைக்கு நடைமுறையிலுள்ள வேறு எந்தச்‌ சட்டத்திலும்‌ அல்லது ஏதேனும்‌ ஒப்பந்தம்‌ அல்லது ஆவணத்திலும்‌ அடங்கியுள்ள எது எவ்வாறு இருந்தபோதிலும்‌, செலுத்தப்படாத தொகுப்புகள்‌ அனைத்தும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய கால இடைவெளிகளில்‌ வாறியத்திற்குச்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌ மேலும்‌, நிதியத்தில்‌ வரவு வைக்கப்படுதலும்‌ வேண்டும்‌ மற்றும்‌, அதற்கான உரிமைகோரல்களானது 13 ஆம்‌ பிரிவில்‌ வகைசெய்யப்படுள்ள முறையில்‌ தீர்மானிக்கப்படும்‌ வரையில்‌, வாரியம்‌ அதற்குத்‌ தனியான கணக்கொன்றை வைத்திருத்தல்‌ வேண்டும்‌. (2) நிதியத்தில்‌- (ஐ) 13 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வாரியத்திற்கு செலுத்தப்படாத தொகுப்புகள்‌; (b) வேலை வழங்குநர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ இடையிலான எந்தவொரு ஒப்பந்தத்திலும்‌ அடங்கிய எது எவ்வாறிருப்பினும்‌, 1947 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொழில்‌ வேலைவாய்ப்பு (நிலையாணைகள்‌) விதிகளின்கீழ்‌ வழங்கப்பட்ட மாதிறி நிலையாணைகளின்‌ 20 ஆம்‌ நிலையாணையின்கீழ்‌ மற்றும்‌ நிறுவனங்களின்‌ சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளின்கீழ்‌, வேலை வழங்குநர்களால்‌ பணியாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை உட்பட அனைத்து அபராதங்களும்‌; (6) 1936 ஆம்‌ ஆண்டு கூலி கொடுத்தல்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 71936) 9 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளின்கீழ்‌ மற்றும்‌ 1947 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடைகள்‌ மற்றும்‌ நிறுவனங்கள்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ XXXVI/1947) 36 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளின்கீழ்‌ செய்யப்பட்ட பிடித்தங்கள்‌; (0) வேலை வழங்குநர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ பங்களிப்பு; (6) 14 ஆம்‌ பிரிவின்கீழ்‌ செலுத்தப்பட்ட அபராதம்‌ மூலம்‌ பெறப்படும்‌. ஏதேனும்‌ வட்டி; () எதேனும்‌ தன்னார்வ நன்கொடைகள்‌; (ஐ வாரியத்தின்‌ வளங்களை அதிகரிப்பதற்காக பிற ஆதாரங்களில்‌ இருந்து வாரியத்தால்‌ திரட்டப்படும்‌ எந்தவொரு தொகையும்‌; (h) 17 ஆம்‌ பிரிவின்‌ (5) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ மாற்றப்பட்ட ஏதேனும்‌ நிதி; (i) 18 ஆம்‌ பிரிவின்கீழ்‌ கடன்‌ வாங்கப்பட்ட எந்தவொரு தொகையும்‌; 0 1936 ஆம்‌ ஆண்டு கூலி கொடுத்தல்‌ சட்டம்‌ (மையச்‌ சட்டம்‌ 71936) மற்றும்‌ 1948 ஆம்‌ ஆண்டு குறைந்த அளவு கூலிச்‌ சட்டம்‌, (மையச்‌ சட்டம்‌ 201948) ஆகியவற்றின்கீழ்‌ உருவாக்கப்பட்ட விதிகளின்படி அரசுக்கு வரவு வைக்கப்படும்‌ எந்தவொரு உரிமை கோரப்படாத தொகையும்‌; 09 அரசால்‌ வழங்கப்பட்ட மானியங்கள்‌ அல்லது முன்பணங்கள்‌; () தொழிலாளர்‌ சட்டங்களை மீறியதற்காக நீதிமன்றங்களால்‌ விதிக்கப்பட்டு, நிர்வாகச்‌ செலவுகளுக்காக நீதிமன்றத்தால்‌ செய்யப்படும்‌ பிடித்தத்தைக்‌ கழித்துவிட்டு வேலை வழங்குநர்களிடமிருந்து வசூலிக்கப்படும்‌ அனைத்து அபராதங்களும்‌, ஆகியவை வரவு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) (2) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தொகைகளானது, அத்தகைய கால இடைவெளிகளிலும்‌ அத்தகைய முறையிலும்‌, முகவாண்மைகளால்‌ செலுத்தப்படுதலும்‌ அல்லது சேகரிக்கப்படுதலும்‌ வேண்டும்‌, மேலும்‌ நிதியத்தின்‌. கணக்குகளானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ பேணப்படுதலும்‌ தணிக்கை செய்யப்படுதலும்‌ வேண்டும்‌. 4. வாரியத்தை நிறுவுதல்‌.- (1) அரசு, அறிவிக்கை வாயிலாக, இதற்கென நியமிக்கும்‌ தேதியிலிருந்து, "தமிழ்நாடு தொழிலாளர்‌ நல வாரியம்‌" என்ற பெயரில்‌ வாரியம்‌ ஒன்றை நிறுவுதல்‌ வேண்டும்‌. (2) வாரியமானது, தொடர்ந்திருக்கும்‌ வழியுரிமையையும்‌, பொதுவான இலச்சினையையும்‌ கொண்டிருக்கும்‌ ஒரு கூட்டமைப்பாக இருத்தல்‌ வேண்டும்‌ மேலும்‌ மேற்கூறிய பெயரில்‌, வழக்கிடுதலும்‌ வழக்கிடப்படுதலும்‌ வேண்டும்‌. 5. வாரியத்தின்‌ அமைப்பு.- வாரியமானது, தொழிலாளர்‌ துறையின்‌ பொறுப்பு அமைச்சராக உள்ள தலைவர்‌ ஒருவரையும்‌, அரசால்‌ நியமிக்கப்படும்‌ பின்வரும்‌ உறுப்பினர்களையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌:- (ஐ) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய எண்ணிக்கையிலான வேலை வழங்குநர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ பிரதிநிதிகள்‌: வரம்புரையாக, வேலை வழங்குநர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகிய இருவருக்கும்‌ வாரியத்தில்‌ சமமான பிரதிநிதித்துவம்‌ இருக்க வேண்டும்‌; (b) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய எண்ணிக்கையிலான மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்‌; மற்றும்‌ (6) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய எண்ணிக்கையிலான அலுவலர்கள்‌ மற்றும்‌ அலுவலர்‌ அல்லாதவர்கள்‌. 6. தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்களின்‌ நியமனம்‌ அறிவிக்கப்படுதல்‌.- தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்களின்‌ நியமனம்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ அறிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 7. உறுப்பினர்களின்‌ பதவிக்காலம்‌. அலுவல்முறை உறுப்பினர்கள்‌ அல்லாத வாரியத்தின்‌ உறுப்பினர்களின்‌ பதவிக்காலம்‌, அவர்கள்‌ நியமிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள்‌ ஆகும்‌, மேலும்‌ அவர்கள்‌ மறுநியமனத்திற்கு தகுதியுடையவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. பின்வருபவர்கள்‌ நியமிக்கப்படும்‌ வரை அவர்கள்‌ அத்தகைய உறுப்பினர்களாகத்‌ தொடருவார்கள்‌: வரம்புரையாக, மாநிலச்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ ஒருவர்‌, அவ்வாறு மாநிலச்‌ சட்டமன்றத்தின்‌ உறுப்பினராக இருப்பது அற்றுப்போகும்‌ தேதியிலிருந்து, அவர்‌, வாரியத்தின்‌ உறுப்பினராக இருப்பது அற்றுப்போதல்‌ வேண்டும்‌. 8. தகுதியிண்மையும்‌ நீக்கமும்‌.- (1) நபரெவரும்‌,- (ஐ வாரியத்தில்‌ ஓர்‌ அலுவலராக அல்லது பணியாளராக; அல்லது (௦) விடுவிக்கப்படாத நொடித்துப்போனவராக; அல்லது (௦) மனநிலை சரியில்லாதவராக; அல்லது (0) ஒழுக்கக்கேடு சம்பந்தப்பட்ட ஒரு குற்றத்திற்காக குற்றவியல்‌ நீதிமன்றத்தால்‌ தண்டிக்கப்பட்டிருந்தால்‌, அத்தகைய தண்டனை ரத்து செய்யப்பட்டாலன்றி; அல்லது (8) வாரியத்திற்கு செலுத்த வேண்டிய ஏதேனும்‌ ஒரு தொகை நிலுவையில்‌ இருந்தால்‌, அவர்‌, வாரியத்தின்‌ உறுப்பினராகத்‌ தெரிந்தெடுக்கப்படுதலோ அல்லது தொடர்ந்து இருத்தலோ ஆகாது. (2) நபரெவரும்‌,- @ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும்‌ தகுதியின்மைகளுக்கு உட்பட்டதாக இருந்தால்‌ அல்லது உட்பட்டிருந்தால்‌; அல்லது (b) வாரியத்தின்‌ அனுமதியின்றி, வாரியத்தின்‌ தொடர்ச்சியான மூன்று கூட்டங்களுக்கு மேல்‌ வரவில்லையெனில்‌, அரசானது, அவரை பதவியிலிருந்து நீக்கலாம்‌. 9. உறுப்பினர்‌ பதவி விலகல்‌ மற்றும்‌ தற்செயல்‌ காலியிடங்களை நிரப்புதல்‌- (1) வேலை வழங்குநரின்‌ அல்லது பணியாளரின்‌ பிரதிநிதி அல்லது மாநிலச்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ அல்லது அலுவல்‌ சாரா உறுப்பினர்‌ எவரும்‌, தனது பதவியை, அரசுக்கு எழுத்து மூலம்‌ அறிவிப்பதன்‌ மூலம்‌ பதவி விலகலாம்‌, மேலும்‌ அத்தகைய பதவி விலகல்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன்‌, அவர்‌ தனது பதவியை விட்டு விலகியதாகக்‌ கருதப்படுவார்‌. (2) ஓர்‌ உறுப்பினர்‌ பதவியிலுள்ள தற்செயல்‌ காலியிடமொன்று கூடிய விரைவில்‌ நிரப்பப்படலாம்‌ மற்றும்‌ அத்தகைய காலியிடத்தை நிரப்புவதற்கு, அவ்வாறு நியமிக்கப்பட்ட ஓர்‌ உறுப்பினர்‌, பதவிக்காலத்தின்‌ எஞ்சிய காலஅளவிற்கு பதவி வகித்தல்‌ வேண்டும்‌. 10. குழுக்களை நியமிக்கும்‌ அதிகாரம்‌. வாழியமானது, அதன்‌ பணிகளை நிறைவேற்றுவதில்‌ ஆலோசனை வழங்கும்‌ நோக்கத்திற்காகவும்‌, குறிப்பாக 17 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும்‌ பொருட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும்‌, குறைந்தது வாரியத்தின்‌. ஒரு உறுப்பினரையும்‌, பணியாளர்கள்‌ மற்றும்‌ வேலை வழங்குநர்களின்‌ சம-எண்ணிக்கையிலான பிரதிநிதிகளையும்‌ கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களை அமைக்கலாம்‌. 11. வாரியம்‌ அல்லது குழுவின்‌ செயல்கள்‌ முறைசாரா, காலியிடம்‌ போன்றவற்றால்‌ செல்லுபடியற்றதாக ஆவதில்லை. வாரியம்‌ அல்லது எந்தவொரு குழுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட ஏதேனும்‌ நடவடிக்கையானது, (ஐ) வாரியம்‌ அல்லது குழுவின்‌ அமைப்பில்‌ ஏதேனும்‌ காலியிடம்‌ அல்லது குறைபாடு; அல்லது (b) அதன்‌ உறுப்பினராக செயல்படும்‌ ஒரு நபரின்‌ நியமனத்தில்‌ ஏதேனும்‌ குறைபாடு அல்லது முறைகேடு; அல்லது (6) வழக்கின்‌ தகுதியைப்‌ பாதிக்காத அத்தகைய செயலில்‌ அல்லது நடவடிக்கையில்‌ ஏதேனும்‌ குறைபாடு அல்லது ஒழுங்கின்மை, ஆகிய காரணத்தினால்‌ மட்டுமே செல்லுபடியற்றதாக ஆவதில்லை. 12. வாரியத்தின்‌ செயற்பணிகள்‌.- வாரியத்தின்‌ செயற்பணிகளானது, நிதியத்தின்‌ நிருவாகமாகவும்‌, இச்சட்டத்தினால்‌ அல்லது அதன்கீழ்‌ குறித்தளிக்கப்படலாகும்‌ அத்தகைய பிற செயற்பணிகளாகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 13. செலுத்தப்படாத திரள்‌ தொகைகள்‌ மற்றும்‌ அதன்‌ கோருரிமைகள்‌.- (1) செலுத்தப்படாத திரள்‌ தொகைகள்‌ அனைத்தும்‌ கைவிடப்பட்ட சொத்தாகக்‌ கருதப்படும்‌. (2) 3 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கிணங்க, வாரியத்திற்குச்‌ செலுத்தப்பட்ட ஏதேனும்‌ செலுத்தப்படாத திரள்‌ தொகையானது, அத்தகைய செலுத்தத்தின்‌ பேரில்‌, அது பொறுத்து பணியாளருக்கு செலுத்துவதற்கான அவரது பொறுப்பிலிருந்து வேலை வழங்குநரை விடுவித்தல்‌ வேண்டும்‌, ஆனால்‌, வாரியத்திற்குச்‌ செலுத்தப்பட்ட தொகையின்‌ அளவும்‌, கூறப்பட்ட அளவிற்கு பணியாளருக்குக்‌ செலுத்துவதற்கான பொறுப்பும்‌ இப்பிரிவின்‌ அடுத்துவரும்‌ வகைமுறைகளுக்கு இணங்க, வாரியத்திற்கு மாற்றப்பட்டதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. (3) ஏதேனும்‌ செலுத்தப்படாத திரள்‌ தொகையானது, வாரியத்திற்குச்‌ செலுத்தப்பட்ட பின்னர்‌, வாரியமானது, பணியாளர்கள்‌, அவர்களின்‌ வாரிசுகள்‌, சட்டபூர்வ பிரதிநிதிகள்‌ அல்லது நியமனம்‌ பெற்றவர்கள்‌ தங்களுக்குச்‌ சேர வேண்டிய ஏதேனும்‌ பணம்‌ செலுத்தலுக்காக உரிமைகோரும்‌ அறிவிப்பை இயன்ற அளவு விரைவில்‌, (ஐ செலுத்தப்படாத திரள்‌ தொகையை ஈட்டிய நிறுவனத்தின்‌ அறிவிப்பு பலகையில்‌ காட்சிப்படுத்துதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (0௦) தமிழ்நாடு அரசிதழில்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற முறைகளில்‌ வெளியிடுதல்‌ வேண்டும்‌. (4) (இ ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட அறிவிப்பு, அந்த உட்பிரிவால்‌ வேண்டப்பட்டவாறு வழங்கப்பட்டதா என்ற கேள்வி ஏதேனும்‌ எழுமானால்‌, அவ்வாறு வழங்கப்பட்டது என்று வாரியத்தின்‌ சான்றிதழ்‌ முடிவானதாக இருக்கும்‌. (5 தமிழ்நாடு அசிகழில்‌ அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள்‌, அறிவிப்புக்கு எதிர்வினையாகவோ அல்லது வேறுவிதமாகவோ ஒரு கோருரிமை பெறப்பட்டால்‌, வாரியமானது அத்தகைய கோருரிமையை, அத்தகைய கோருரிமை தொடர்பாக, அந்நிறுவனம்‌ அமைந்துள்ள பகுதியின்‌ அதிகார வரம்பைக்‌ கொண்டுள்ள, 1936 ஆம்‌ ஆண்டு கூலி கொடுத்தல்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ ௫71936) 15 ஆம்‌ பிரிவின்கீழ்‌ நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பிற்கு மாற்றுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய கோருரிமைம்து தீர்ப்பளிக்கவும்‌, முடிவு செய்யவும்‌ அந்த அதிகார அமைப்பானது மேற்கொள்ளலாம்‌. அத்தகைய கோருரிமையை விசாரிப்பதில்‌, அத்தகைய அதிகார அமைப்பானது, அந்தச்‌ சட்டத்தினால்‌ வழங்கப்பட்ட அதிகாரங்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌, அதில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள (அது பொருந்தக்கூடிய அளவிற்கு) நடைமுறையைப்‌ பின்பற்றுதல்‌ வேண்டும்‌. (6) மேற்கூறப்பட்ட அதிகார அமைப்பானது, பணம்‌ பெறுவதற்கான உரிமை நிலைநாட்டப்படும்‌ வகையில்‌ அத்தகைய கோருரிமை எதுவும்‌ செல்லுபடியாகும்‌ என்று மனநிறைவடையுமாயின்‌, அது எந்தவொரு கோருரிமை தொடர்பாகவும்‌ செலுத்தப்படாத திரள்‌ தொகையானது கைவிடப்பட்ட சொத்தாகக்‌ கருதப்படுவது அற்றுப்போகும்‌ என்று தீர்மானித்தல்‌ வேண்டும்‌ மேலும்‌, கோரப்பட்ட நிலுவைத்‌ தொகைகள்‌ முழுவதையும்‌ செலுத்துமாறு வாரியத்திற்கு ஆணையிடுதல்‌ வேண்டும்‌ அல்லது அதிகார அமைப்பு தீர்மானிக்கும்‌ அதன்‌ அத்தகைய பகுதி, பணியாளருக்கு உரியது; மற்றும்‌ அதிகார அமைப்பானது, அதற்கிணங்கச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக, கோருரறிமை தொடர்பாக, 3 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அதிகார அமைப்பிற்கு செலுத்தப்பட்ட தொகைக்கு மேற்பட்ட ஏதேனும்‌ தொகையை, செலுத்தப்படாத திரள்‌ தொகைகளாக செலுத்துவதற்கு அதிகார அமைப்பானது பொறுப்பாகாது. (7) பணச்‌ செலுத்தத்திற்கான கோருரிமை மறுக்கப்பட்டால்‌, நேர்விற்கேற்ப, பணியாளர்‌ அல்லது அவரது வாரிசுகள்‌, சட்டபூர்வ பிரதிநிதிகள்‌ அல்லது உரிமை மாற்றம்‌ பெற்றவர்கள்‌, அதிகார அமைப்பின்‌ ஆணை கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள்‌, சென்னை மாநகரின்‌ நேர்வில்‌ சென்னை மாநகர உரிமையியல்‌ நீதிமன்றத்திற்கும்‌, பிற இடங்களின்‌ நேர்வில்‌ மாவட்ட நீதிமன்றத்திற்கும்‌ மேல்முறையீடு செய்யலாம்‌. (8) நேர்விற்கேற்ப, மேற்கூறிய மேல்முறையீட்டிற்கும்‌, சென்னை மாநகர உரிமையியல்‌ நீதிமன்றத்தின்‌ மேல்முறையீட்டு முடிவுக்கும்‌ உட்பட்டு, தொகையைப்‌ பெறுவதற்கான உரிமை, செலுத்துவதற்கான வாரியத்தின்‌ பொறுப்பு மற்றும்‌ தொகை ஏதேனும்‌ இருப்பின்‌, அவற்றைப்‌ பொறுத்த வரையில்‌ மாவட்ட நீதிமன்றமே இறுதியானதும்‌ முடிவானதுமாகும்‌. (9) (5) ஆம்‌ உட்பிரிவி குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள்‌ எந்தவொரு கோருரிமையும்‌ பெறப்படவில்லை என்றால்‌, அல்லது ஒரு கோருரிமை ஆணையத்தால்‌ மறுக்கப்பட்டால்‌, அல்லது சென்னை நகர உரிமையியல்‌ நீதிமன்றம்‌ அல்லது மாவட்ட நீதிமன்றத்திடம்‌ மேல்முறையீடு செய்யப்பட்டால்‌, அத்தகைய கோருரிமை தொடர்பாக செலுத்தப்படாத திரள்‌ தொகைகளானது, உரிமையர்‌ இல்லாச்‌ சொத்தாக மாநிலத்திடம்‌ சேரும்‌ மற்றும்‌ உற்றமையும்‌, மற்றும்‌ அதன்‌ பின்னர்‌ நிதியத்திற்கு மாற்றப்பட்டதாகவும்‌ அதன்‌ ஒரு பகுதியாகவும்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 14. செலுத்தப்படாத திரள்‌ தொகைகளுக்கான வட்டி, அல்லது கோரிக்கை அறிவிப்புக்குப்‌ பின்பு அபராதம்‌.- (1) இந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது அதன்‌ கீழ்‌ குறித்துரைக்கப்பட்ட காலஅளவிற்குள்‌, வேலை வழங்குநர்‌ செலுத்தப்படாத திரள்‌ தொகைகளை, அல்லது பணியாளர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதத்‌ தொகை: எதனையும்‌ அதிகார அமைப்பிற்கு செலுத்தாவிடின்‌, ஓர்‌ அறிவிப்பு சார்வு செய்யப்படும்‌ தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குக்‌ குறையாத காலஅளவிற்குள்‌ தொகையைச்‌ செலுத்துமாறு அத்தகைய வேலை வழங்குநருக்கு அத்தகைய அறிவிப்பு ஒன்றை செயலாளர்‌ வழங்கலாம்‌ அல்லது வழங்கச்‌ செய்யலாம்‌. (2) அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்பட்ட காலஅளவிற்குள்‌, அத்தகைய தொகை எதனையும்‌ வேலை வழங்குநர்‌, போதிய காரணமின்றி செலுத்தத்‌ தவறினால்‌, அந்தத்‌ தொகைக்கு மேலதிகமாக, 10 (a) முதல்‌ மூன்று மாதங்களுக்கு, அறிவிப்பிற்கு இணங்க அவர்‌ அதை செலுத்தியிருக்க வேண்டிய கடைசி தேதிக்குப்‌ பிறகு, ஒவ்வொரு முழு மாதத்திற்கும்‌ அல்லது அதன்‌ ஒரு பகுதிக்கும்‌ கூறப்பட்ட தொகையில்‌ ஒரு விழுக்காடு; மற்றும்‌ 0) அந்தத்‌ தொகையை அவர்‌ தொடர்ந்து செலுத்தத்‌ தவறும்‌ நேர்வில்‌, ஒவ்வொரு முழு மாதத்திற்கும்‌ அல்லது அதன்‌ ஒரு பகுதிக்கும்‌ ஒன்றரை சதவிதம்‌, சாதாரண வட்டியை அவர்‌, அபராதத்‌ தொகையாக வாரியத்திற்குச்‌ செலுத்த வேண்டும்‌. வரம்புரையாக, செயலாளர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌. அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஏதேனும்‌ காலஅளவு பொறுத்தும்‌ தண்டத்தொகை முழுவதையும்‌ அல்லது ஏதேனும்‌ பகுதியைக்‌ குறைக்கலாம்‌. 15. பணியாளர்‌ அல்லது வேலை வழங்குநரால்‌ நிதியத்திற்கு பங்களிப்பு- (1) ஒவ்வொரு பணியாளரும்‌, அவ்வப்போது வகுத்துரைக்கப்படலாகும்‌, ஆண்டுன்றுக்குப்‌ பத்து ரூபாய்க்கு மேற்படாத தொகையொன்றை நிதியத்திற்கு பங்களிப்புச்‌ செய்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌, வேலை வழங்குநர்‌ ஒவ்வொருவரும்‌ அத்தகைய பணியாளர்‌ ஒவ்வொருவரை பொறுத்தும்‌, அவ்வப்போது வகுத்துரைக்கப்படலாகும்‌, ஆண்டொன்றுக்கு இருபது ரூபாய்க்கு மேற்படாத தொகைடுயான்றை நிதியத்திற்கு பங்களிப்புச்‌ செய்தல்‌ வேண்டும்‌ மேலும்‌, அரசு, அத்தகைய ஒவ்வொரு பணியாளர்‌ பொறுத்தும்‌, அவ்வப்போது வகுத்துரைக்கப்படலாகும்‌, ஆண்டொன்றுக்கு பத்து ரூபாய்க்கு மேற்படாத தொகையை நிதியத்திற்கு பங்களிப்புச்‌ செய்தல்‌ வேண்டும்‌. (2) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள ஏதேனும்‌ பிற சட்டத்தில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ முறையில்‌ பணியாளரின்‌ ஊதியத்திலிருந்து பிடித்தம்‌ செய்வதன்‌ மூலம்‌ பணியாளரின்‌ பங்களிப்பை வசூலிப்பதற்கு வேலை வழங்குநர்‌ உரிமை உடையவர்‌ ஆவார்‌ மற்றும்‌, அத்தகைய பிடித்தமானது, 1936 ஆம்‌ ஆண்டு கூலி கொடுத்தல்‌ சட்டம்‌ (மையச்‌ சட்டம்‌ 071936) அல்லது 1947 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடைகள்‌ மற்றும்‌ நிறுவனங்கள்‌ சட்டத்தாலோ அல்லது அதன்‌ கீழோ (தமிழ்நாடு சட்டம்‌ XXXVI/1947) அதிகாரமளிக்கப்பட்ட ஒரு கழிப்பாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 16. அரசின்‌ மானியங்களும்‌ முன்பணங்களும்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌. நோக்கங்களுக்காக, ஒவ்வொரு நேர்விலும்‌, அரசு தீர்மானிக்கும்‌ அத்தகைய விதிமுறைகள்‌ மற்றும்‌ வரைக்கட்டுகளின்‌ பேரில்‌, அரசு, அவ்வப்போது வாரியத்திற்கு மானியங்கள்‌ அல்லது முன்பணக்‌ கடன்களை வழங்கலாம்‌. 11 17. நிதியை ஒப்படைத்தல்‌ மற்றும்‌ பயன்படுத்துதல்‌-- (1) நிதியானது, இச்சட்டத்தின்‌ நோக்கங்களுக்காகவும்‌, அதன்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டும்‌ பொறுப்பாளர்களாக, வாரியத்திடம்‌ உற்றமைந்து, அதனால்‌ நடத்தப்பட்டு பயன்படுத்தப்படுதலும்‌ வேண்டும்‌. இதில்‌ உள்ள பணம்‌, பணியாளர்கள்‌ மற்றும்‌ அவர்களைச்‌ சார்ந்தோரின்‌ நலனை மேம்படுத்துவதற்காக, அரசால்‌ அவ்வப்போது குறிப்பிடப்படும்‌ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செலவுகளை ஈடுசெய்ய வாரியத்தால்‌ பயன்படுத்தப்படும்‌. (2 1) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளின்‌ பொதுத்‌ தன்மைக்கு குந்தகமின்றி, நிதியத்திலுள்ள பணங்கள்‌, பின்வருவனவற்றின்‌ மீதான செலவினங்களைத்‌ தீர்க்கச்‌ வாரியத்தினால்‌ பயன்படுத்தப்படலாம்‌ அவையாவன:- (ஐ சமுதாய மற்றும்‌ சமூக கல்வி மையங்கள்‌; (௦) சொழிற்‌ பயிற்சி; (9) சமுதாயத்‌ தேவைகள்‌; (0) பொழுதுபோக்கு மற்றும்‌ மனமகிழ்‌ பிற வடிவங்கள்‌; (e) காசநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்‌ இல்லங்கள்‌; (f) நல்வாழ்வுப்‌ புகலிடத்தின்‌ விடுமுறை ஓய்வு இல்லங்கள்‌; (ஐ பணியாளர்களின்‌ இல்லத்தரசிகளுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பு; (h) முன்பள்ளிகள்‌; (i) பணியாளர்களின்‌ குழந்தைகளுக்கு சத்துணவு; [9] மாற்றுத்திறனாளி பணியாளர்கள்‌. அல்லது இறந்த பணியாளர்களின்‌ விதவைகளுக்கு வேலை வாய்ப்புகள்‌; (k) இச்சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்ட பணியாளர்‌ தொகுதியினரின்‌. சம்பளங்கள்‌: மற்றும்‌ படித்தொகைகள்‌ உள்ளடங்கலாக இச்சட்டத்தை நிருவகிப்பதற்கான செலவு; மற்றும்‌ 0) வாரியத்தின்‌ கருத்துப்படி, வாழ்க்கைத்‌ தரத்தையும்‌ கல்வியையும்‌ மேம்படுத்தும்‌ மற்றும்‌ தொழிலாளர்களின்‌ சமூக நிலைமைகளை மேம்படுத்தும்‌ அத்தகைய பிற நோக்கங்கள்‌: வரம்புரையாக, நிதியமானது, அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள ஏதேனும்‌ பிற சட்டத்தின்கீழ்‌ வேலை வழங்குநர்‌ மேற்கொள்ள வேண்டிய எந்தவொரு நடவடிக்கைக்கும்‌ நிதியளிப்பதில்‌ பயன்படுத்தப்படலாகாது: மேலும்‌ வரம்புரையாக, 1936 ஆம்‌ ஆண்டு கூலி கொடுத்தல்‌ சட்டம்‌ (மையச்‌ சட்டம்‌ 071936) அல்லது அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள ஏதேனும்‌ பிற சட்டம்‌ அல்லது ஒப்பந்தத்தில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, செலுத்தப்படாத திரள்‌ தொகைகளும்‌ அபராதங்களும்‌ இந்தச்‌ சட்டத்தின்படி வாரியத்தால்‌ செலவிடப்படுதல்‌ வேண்டும்‌. (3) வாரியமானது, அரசின்‌ ஒப்புதலுடன்‌, பணியாளர்களின்‌ நலனுக்கான எந்தவொரு நடவடிக்கைக்கும்‌ உதவியாக ஏதேனும்‌ உள்ளாட்சி அமைப்பிற்கு அல்லது வேறு ஏதேனும்‌ அமைப்புக்கு நிதியத்திலிருந்து மாணியங்களை வழங்கலாம்‌. (4) ஒரு குறிப்பிட்ட செலவினம்‌ எதுவும்‌, நிதியத்தில்‌ பற்று வைக்கத்தக்கதா, இல்லையா என்ற பிரச்சினை ஏதேனும்‌ எழுமாயின்‌, அது அரசிடம்‌ கோரப்படுதல்‌ வேண்டும்‌, அதன்‌ முடிவே இறுதியானது ஆகும்‌. (5) ஏதேனும்‌ ஒரு நிறுவனத்தின்‌ தொழிலாளர்‌ நல நிதியை மாற்றுவதை வாரியம்‌ ஏற்றுக்கொள்ளலாம்‌ மற்றும்‌ கூறப்பட்ட நிதியானது, வாரியத்திலிருந்து முறையாக மாற்றப்பட்டிருப்பின்‌ அத்தகைய தொழிலாளர்‌ நல நிதியிலிருந்து நிதியளிக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையையும்‌ தொடரலாம்‌. 18. கடன்‌ வாங்க வாரியத்தின்‌ அதிகாரம்‌.-- வாறியமானது, அரசின்‌ முன்‌ அனுமதியுடன்‌, இச்சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டும்‌, இதன்பொருட்டு வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டும்‌, இச்சட்டத்தின்‌ நோக்கங்களுக்காகத்‌ தேவைப்படும்‌ ஏதேனும்‌ தொகையைக்‌ கடன்பெறலாம்‌. 19. நிதியை வைப்பீடுச்‌ செய்தல்‌ மற்றும்‌ கணக்குகள்‌ மற்றும்‌ தணிக்கை அறிக்கையை மாநிலச்‌ சட்டமன்றத்தின்‌ முன்‌ வைத்தல்‌. (1) நிதியத்தின்‌ ஒரு பகுதியாக அமையும்‌ பணம்‌ மற்றும்‌ ரசீதுகள்‌ அனைத்தும்‌ 1934 ஆம்‌ ஆண்டு இந்திய ரிசர்வ்‌ வங்கிச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ (மையச்‌ சட்டம்‌ 11,1934) அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ்‌ வங்கியில்‌ அல்லது 1955 ஆம்‌ ஆண்டு பாரத ஸ்டேட்‌ வங்கிச்‌ சட்டத்தின்கீழ்‌ (மையச்‌ சட்டம்‌ 231955) அமைக்கப்பட்ட பாரத ஸ்டேட்‌ வங்கியில்‌ அல்லது 1970 ஆம்‌ ஆண்டு வங்கி நிறுமங்கள்‌ (ஏற்பமைவுகளைக்‌ கையகப்படுத்துதல்‌ மற்றும்‌ உரிமைமாற்றம்‌ செய்தல்‌) சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 571970) வரையறுக்கப்பட்டவாறு அல்லது 1961 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 531961) 73-& ஆம்‌ பிரிவில்‌ வரையறுக்கப்பட்டவாறு மாநில கூட்டுறவு வங்கியில்‌ அல்லது எந்தவொரு மத்திய கூட்டுறவு வங்கியில்‌ அல்லது எந்தவொரு மாநில அரசுக்கும்‌ அல்லது மைய அரசுக்கும்‌ சொந்தமான அல்லது அதனால்‌ கட்டுப்படுத்தப்படும்‌ எந்தவொரு நிறுவனத்திலும்‌ வைப்பீடு செய்யப்பட வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய கணக்கானது, வாரியத்தால்‌ அதிகாரமளிக்கப்படக்கூடிய வாரியத்தின்‌ அத்தகைய 13 அலுவலர்களால்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ இயக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) தணிக்கையாளரால்‌ சான்றளிக்கப்பட்ட வாரியத்தின்‌ கணக்குகளும்‌, அவற்றின்‌ மீதான தணிக்கை அறிக்கையும்‌ சேர்த்து, ஆண்டுதோறும்‌ அரசிடம்‌ அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌, அது தொடர்பாக அரசானது, தாம்‌ பொருத்தமெனக்‌ கருதும்‌ அத்தகைய அறிவுறுத்தல்களை வாரியத்திற்கு வழங்கலாம்‌ மேலும்‌, வாரியம்‌ அத்தகைய அறிவுறுத்தல்களுக்கு இணங்கி நடத்தல்‌ வேண்டும்‌. (3) அரசானது- (@) (2) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வாரியத்திற்கு அனுப்பப்பட்ட தணிக்கை அறிக்கையுடன்‌, வாரியத்தின்‌ கணக்குகளானது. ஆண்டுதோறும்‌ மாநில சட்டமன்றத்தின்‌ முன்‌ வைக்கப்பட; மற்றும்‌ (b) வாரியத்தின்‌ கணக்குகளை வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ வெளியிடச்‌ செய்து, அவற்றின்‌ படிகளை நியாயமான விலையில்‌ விற்பனைக்குக்‌ கிடைக்கச்‌ செய்ய, நடவடிக்கை எடுத்தல்‌ வேண்டும்‌. 20. வாரியத்திற்கு பணிப்புரை களை வழங்குவதற்கான அரசின்‌ அதிகாரம்‌.- நிதியத்திலிருந்து செலவினங்கள்‌ தொடர்பாக அல்லது சட்டத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அவசியமானது அல்லது உகந்தது என்று அரசு கருதும்‌ அத்தகைய பணிப்புரைகளை வாரியத்திற்கு வழங்கலாம்‌ மேலும்‌ அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடப்பது வாரியத்தின்‌ கடமையாக இருக்கும்‌. 21. செயலாளரின்‌ நியமனம்‌ மற்றும்‌ அதிகாரங்கள்‌.- (1) வாரியமானது, அரசின்‌ முன்‌ ஒப்புதலுடன்‌, வாரியத்தின்‌ முதன்மை நிருவாக அலுவலராக இருக்கும்‌ ஒரு செயலாளரை நியமிக்கலாம்‌. (2) இச்சட்டத்தின்‌ வகைமுறைகளும்‌ அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளும்‌ உரியவாறு நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவது செயலாளரின்‌ கடமையாக இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌, இந்நோக்கத்திற்காக, இச்சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்கீழ்‌ வாரியத்தால்‌ எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும்‌ ஏதேனும்‌ ஆணை உள்ளடங்கலாக, அவர்‌ பொருத்தமெனக்‌ கருதுகின்றவாறு, இச்சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கும்‌ அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளுக்கும்‌ முரணாக இல்லாத அத்தகைய ஆணைகளை பிறப்பிப்பதற்கான அதிகாரத்தைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. 14 22. ஆய்வாளர்கள்‌.- (1) 1948 ஆம்‌ ஆண்டு தொழிற்சாலைகள்‌ சட்டத்தின்‌. (மையச்‌ சட்டம்‌ LXI/1948) 8 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ நியமிக்கப்பட்ட தொழிற்சாலைகளின்‌ ஆய்வாளர்‌, அவருக்கு ஒதுக்கப்பட்ட உள்ளூர்‌ எல்லைகளுக்குள்‌ அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலைகளுக்கும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக ஆய்வாளராக இருப்பார்‌. (2) அரசு, அறிவிக்கை வாயிலாக, இச்சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, தாம்‌ தக்கதெனக்‌ கருதும்‌ பிற நபர்களை ஆய்வாளர்களாக நியமிக்கலாம்‌ மேலும்‌, அவர்கள்‌ பணிகளை ஆற்ற வேண்டிய வட்டார எல்லைகளையும்‌ அவற்றின்‌. வகையையும்‌ வரையறை செய்யலாம்‌. (3) இதற்கென வகுக்கப்பட்ட ஏதேனும்‌ விதிகளுக்கு உட்பட்டு, ஓர்‌ ஆய்வாளர்‌, அவர்‌ நியமிக்கப்பட்ட உள்ளூர்‌ எல்லைகளுக்குள்‌ பின்வரும்‌ அனைத்து அல்லது அவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றைச்‌ செய்ய அதிகாரம்‌ கொண்டிருப்பார்‌: (a) இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌: கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனவா என்பதை கண்டறிவதற்கு அவசியமான அத்தகைய ஆய்வினை மேற்கொள்ளுதல்‌ மற்றும்‌ அத்தகைய விசாரணையை நடத்துதல்‌; (௦) நிதியத்திற்குச்‌ செலுத்தத்தக்க தொகைகள்‌ தொடர்பாக, வேலை வழங்குநரிடம்‌ உள்ள ஏதேனும்‌ குறித்துரைக்கப்பட்ட பதிவேடு மற்றும்‌ வேறு ஏதேனும்‌ ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு கோருதல்‌; (2 தேவையான அனைத்து நேரங்களிலும்‌ அவர்‌ பொருத்தமானதாகக்‌ கருதும்‌ அத்தகைய உதவியுடன்‌, எந்தவொரு வளாகத்திலும்‌ நுழைதல்‌; (0) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற அதிகாரங்களைச்‌ செலுத்துதல்‌. 23. வாரியத்திற்குக்‌ குறித்தசில அலுவலர்களையும்‌ பணியாளர்‌ தொகையினரையும்‌ ஒதுக்கீடு செய்தல்‌-- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு பின்பு கூடிய விரைவில்‌, அரசானது, வாரியத்தைக்‌ கலந்தாய்வு செய்த பின்பு, பொது அல்லது தனி ஆணை வாயிலாக, அத்தகைய ஆணையில்‌ குறிப்பிடப்பட்டவாறு, மாநிலத்தின்‌ அலுவல்கள்‌ தொடர்பாக அறிவிக்கை செய்யப்பட்ட தேதியின்‌ உடனடி முன்பு, பணியாற்றும்‌ அத்தகைய அலுவலர்கள்‌ மற்றும்‌ பிற பணியாளர்கள்‌ அத்தகைய ஆணையில்‌ குறிப்பிடப்படும்‌ தேதியிலிருந்தும்‌ அது முதற்கொண்டும்‌ வாரியத்தின்‌ அலுவற்பாடுகள்‌ தொடர்பாக பணியாற்றுவதற்கு ஒதுக்கீடு செய்யப்படுதல்‌ வேண்டும்‌ என்று பணிக்கலாம்‌: 15 வரம்புரையாக, அத்தகைய ஒதுக்கீட்டிற்கான அவரது இசைவின்றி அத்தகைய அலுவலர்‌ அல்லது பிற பணியாளர்‌ பொறுத்து அத்தகைய பணிப்புரை எதுவும்‌ பிறப்பிக்கப்படுதல்‌ ஆகாது: மேலும்‌ வரம்புரையாக, அறிவிக்கப்பட்ட தேதியின்‌ உடனடி முன்பு, அத்தகைய நபர்‌ எவருக்கும்‌ பொருந்தும்‌ பணி நிபந்தனைகளானது, அரசின்‌ முன்‌ அனுமதியின்றி, அவருக்குப்‌ பாதகமான வகையில்‌ மாற்றப்படுதல்‌ ஆகாது. (2) அறிவிக்கை செய்யப்பட்ட தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌ அத்தகைய ஆணையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்களும்‌ பிற பணியாளர்களும்‌ வாரியத்தின்‌ பணியாளர்களாக இருத்தல்‌ வேண்டும்‌, மேலும்‌ அவர்கள்‌ அரசின்‌ அலுவலர்களாகவோ பணியாளர்களாகவோ இருப்பது அற்றுப்போதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌: இந்த பிரிவில்‌, "அறிவிக்கப்பட்ட தேதி என்பது அரசால்‌ அறிவிக்கப்பட்ட தேதி என்று பொருள்படும்‌. 24. வருங்கால வைப்பு நிதியத்தை வாரியத்திற்கு மாற்றுதல்‌.- (1) 23 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படியான ஆணையில்‌ குறிப்பிடப்பட்ட தேதியன்று, அரசின்‌ பணியிலிருந்து வாரியத்தின்‌ பணிக்கு ஒதுக்கப்பட்ட எவரொருவரும்‌, அலுவலர்‌ அல்லது பணியாளரின்‌ வருங்கால வைப்பு நிதிக்‌ கணக்கின்கீழ்‌ வரவுக்கு நிற்கும்‌ பணமானது, அத்தகைய தேதியன்றும்‌ அதிலிருந்தும்‌ நடைமுறைக்கு வரும்‌ வகையில்‌ வாரியத்திற்கு மாற்றப்பட்டு உற்றமைந்திருக்கும்‌. (2) வாரியமானது, அத்தகைய தேதிக்குப்‌ பிண்னர்‌, கூடுமான விரைவில்‌, 1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அதற்கு மாற்றப்பட்டு உற்றமைந்துள்ள பணம்‌ மற்றும்‌ வேறு சொத்துக்கள்‌ பொறுத்து, அதேபோன்ற நிதியமொன்றை அமைத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அரசின்‌ அங்கீகாரத்துடன்‌ வாரியத்தால்‌ குறிப்பிடப்பட்ட அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அத்தகைய பிணையங்களில்‌ நிதியத்தின்கீழ்‌ திரள்‌ தொகைகளை முதலீடு செய்யலாம்‌. 25. வாரியத்தின்‌ பணிக்கு குறித்தொதுக்கப்பட்ட அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கான விடுப்பு ஊதியம்‌ மற்றும்‌ ஓய்வூதிய பங்களிப்பை அரசு வரவு வைத்தல்‌.- வாரியத்தின்‌ பணிக்கென குறித்தொதுக்கப்பட்ட அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ பொறுத்து, விடுப்பு ஊதியம்‌ மற்றும்‌ ஓய்வூதியப்‌ பங்களிப்புத்‌ தொகைகளை, நேர்விற்கேற்ப, அத்தகைய அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ வரவிலுள்ள விடுப்பின்‌ வீதத்திற்கு அல்லது அரசின்கீழ்‌ அவர்கள்‌ பணியாற்றிய காலத்தின்‌ விதத்திற்கு 23 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படியான ஆணையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தேதியில்‌ அரசின்‌ கீழ்‌ அவர்களுக்கு 16 பொருந்தக்கூடிய விதிமுறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்படி, அரசானது வாரியத்தின்‌ கணக்கில்‌ வரவு வைத்தல்‌ வேண்டும்‌. 26. எழுத்தர்‌ மற்றும்‌ பிற பணியாளர்களை நியமித்தல்‌. - வாரியமானது, 23 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, அதன்‌ பணிகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு அவசியமானதாகக்‌ கருதுகின்ற அத்தகைய பிற அலுவலர்களையும்‌ பணியாளர்களையும்‌ நியமிக்கலாம்‌: வரம்புரையாக, அவ்வாறு நியமிக்கப்பட்ட பணியாளர்‌ தொகுதியினரின்‌ செலவுகளும்‌ வேறு நிருவாகச்‌ செலவுகளும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ நிதியத்தின்‌ ஆண்டு வருமானத்தின்‌ அத்தகைய விழுக்காட்டிற்கு மேற்படுதலாகாது. 27. ஆவணங்களைக்‌ கோருவதற்கான அரசின்‌ அதிகாரங்கள்‌.- அரசோ அல்லது அரசால்‌ அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌ எவருமோ, வாரியத்தின்‌ பதிவேடுகளைக்‌ கோரி, அவற்றை ஆய்வு செய்து, வாரியத்தின்‌ செயற்பாட்டை மேற்பார்வையிடலாம்‌. 28. வாரியத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தொகையை வனுூலிக்கும்‌ முறை.- இச்சட்டத்தின்கீழ்‌ வாரியத்திற்கு அல்லது நிதியத்துக்குச்‌ செலுத்த வேண்டிய ஏதேனும்‌ பணத்தொகையானது, வசூலிக்கும்‌ ஏதேனும்‌ பிற முறைக்கு குந்தகமின்றி, நிலுவையில்‌ உள்ள நில வருவாய்‌ போன்று, வாரியத்தின்‌ சார்பாக வசூலிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 29. ஆய்வுக்கு இடையூறு விளைவித்தல்‌ அல்லது ஆவணங்களை சமர்ப்பிக்கத்‌ தவறியதற்கான தண்டத்தொகை முதலியன- இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கான தனது அதிகாரங்களைச்‌ செலுத்துகையில்‌ ஓர்‌ ஆய்வாளரை வேண்டுமென்றே தடுக்கின்ற அல்லது இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ அல்லது அதன்கீழ்‌ உருவாக்கப்பட்ட விதிகளைப்‌ பின்பற்றி பராமரிக்கப்படும்‌ ஏதேனும்‌ பதிவேடு, பதிவணம்‌ அல்லது பிற ஆவணங்களை ஆய்வாளர்‌ கோரிக்கையின்‌ பேரில்‌ ஆய்வுக்கு சமர்ப்பிக்கத்‌ தவறுகின்ற அல்லது அத்தகைய ஆவணம்‌ எதனின்‌ உண்மைப்‌ படிகளையும்‌ கோரிக்கையின்‌ பேரில்‌ அவருக்கு வழங்கத்‌ தவறுகின்ற எவரொருவரும்‌, குற்றம்‌ நிரூபிக்கப்பட்டால்‌,- (ஐ முதல்‌ குற்றத்திற்கு, மூன்று மாதங்கள்‌ வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது ஐநூறு ரூபாய்‌ வரை நீட்டிக்கக்கூடிய அபராதம்‌ அல்லது இரண்டும்‌; மற்றும்‌ (௦) தூண்டாவது அல்லது பிந்தைய குற்றத்திற்கு, ஆறு மாதங்கள்‌ வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது ஆயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கக்கூடிய அபராதம்‌ அல்லது இரண்டும்‌: விதித்துத்‌ தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 17 வரம்புரையாக, நீதிமன்றத்‌ தீர்ப்பில்‌ குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மாறாக, சிறப்பு மற்றும்‌ போதிய காரணங்கள்‌ இல்லாத நிலையில்‌, குற்றவாளிக்கு அபராதம்‌ விதிக்கப்பட்ட எந்தவொரு நேர்விலும்‌, அபராதத்‌ தொகை ஐம்பது ரூபாய்க்கு குறையாமல்‌ இருக்க வேண்டும்‌. 30. குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌.- (1) செயலாளரால்‌ செய்யப்படும்‌ முறையீட்டின்‌ பேறிலோ, அல்லது அவருடைய எழுத்துவடிவிலான முன்‌ அனுமதியினாலன்றி, இந்தச்‌ சட்டத்தின்படி தண்டிக்கத்தக்க குற்றம்‌ எதையும்‌, நீதிமன்றம்‌ எதுவும்‌ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌ ஆகாது, (2) மாகாணத்‌ தலைநகரக்‌ குற்றவியல்‌ நடுவர்‌ அல்லது முதல்‌ வகுப்புக்‌ குற்றவியல்‌ நடுவரின்‌ கீழமைந்துள்ள நீதிமன்றம்‌ எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி தண்டிக்கத்தக்க குற்றம்‌ எதையும்‌, விசாரித்தல்‌ ஆகாது. 31. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌.- (1) இச்சட்டத்தின்கீழ்‌ ஒரு குற்றத்தைச்‌ செய்திருப்பது நிறுமமாக இருப்பின்‌, அக்குற்றத்தின்போது, அந்நிறுமத்தின்‌ அலுவல்‌ நடைபெறுவதற்கு அந்நிறுமத்தின்‌ பொறுப்பிலிருந்த மற்றும்‌ பொறுப்பைக்‌ கொண்டிருந்த நபர்‌ ஒவ்வொருவரும்‌, மற்றும்‌ அந்நிறுமமும்‌ அக்குற்றத்தைச்‌ செய்திருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவும்‌ அதற்கிணங்க தண்டிக்கப்படவும்‌ வேண்டும்‌. வரம்புரையாக, இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, அத்தகைய நபர்‌ எவரும்‌, அக்குற்றம்‌ தமக்குத்‌ தெரியாமலேயே செய்யப்பட்டிருப்பதாக அல்லது அத்தகைய குற்றத்தை தடுக்க தம்மால்‌ இயன்ற அனைத்தையும்‌ செய்ததாக மெய்ப்பித்தால்‌, அத்தகைய நபருக்கு தண்டனை எதுவும்‌ விதித்தல்‌ ஆகாது. (2) 1) ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, இச்சட்டத்தின்‌ கீழ்‌ குற்றம்‌ எதனையும்‌ நிறுமமொன்று செய்திருக்கிறவிடத்து, அந்த குற்றமானது, அந்நிறுமத்தின்‌ இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது பிற அலுவலர்‌ எவரின்‌ அனுமதியுடன்‌ அல்லது உடந்தையுடன்‌ அல்லது அவருடைய கவனமின்மை காரணமாக செய்யப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால்‌, அத்தகைய இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌, அல்லது பிற அலுவலர்‌ அந்த குற்றத்தைச்‌ செய்திருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவும்‌ அதற்கிணங்க தண்டிக்கப்படவும்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக,- (a) "நிறுமம்‌" என்பது, எந்தவொரு கூட்டு நிறுவனம்‌ என்று பொருள்படும்‌ மற்றும்‌ ஒரு நிறுவகம்‌ அல்லது பிற தனி நபர்களின்‌ கழகத்தையும்‌ உள்ளடக்கும்‌; மற்றும்‌ 18 (b) "இயக்குநர்‌" என்பவர்‌, ஒரு நிறுவகத்தைப்‌ பொறுத்தவரையில்‌, நிறுவகத்தில்‌ ஒரு பங்குதாரர்‌ ஆவார்‌. 32. வழக்குத்‌ தொடரும்‌ வரம்பு-- ஒரு குற்றம்‌, இழைக்கப்பட்டதாகக்‌ கூறப்படும்‌ தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்‌ முறையீடு செய்யப்பட்டாலன்றி, இச்சட்டத்தாலோ அதன்படியோ தண்டிக்கத்தக்க குற்றம்‌ எதையும்‌, நீதிமன்றம்‌ எதுவும்‌ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌ ஆகாது. 33. ஒரு நிறுவனத்தின்‌ நலப்பணிகளை மேற்பார்வை செய்வதற்கான அதிகாரம்‌.- குறிப்பாக அத்தகைய நிறுவனத்தில்‌ உள்ள பணியாளர்களின்‌ நலனை மேம்படுத்தும்‌ நோக்கத்திற்காக, ஏதேனும்‌ நிறுவனத்தில்‌ ஒதுக்கப்பட்ட ஏதேனும்‌ பணம்‌ தொடர்பாகவும்‌, (i) அத்தகைய பணமானது அத்தகைய நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா என்று மனநிறைவு அடைய அத்தகைய பணம்‌ தொடர்பாக நிறுவனத்தின்‌ வேலை வழங்குநர்களின்‌ உடைமையில்‌ உள்ள எந்தவொரு ஆவணத்தையும்‌ சமர்ப்பிக்கக்‌ கோருவதற்கு; 0 நிறுவனத்தின்‌ அத்தகைய வேலை வழங்குநர்களிடமிருந்து பொருத்தமானதாகக்‌ கருதும்‌ எந்தவொரு தகவலையும்‌ கோருவதற்கு; மற்றும்‌ 00. பணியாளர்களின்‌ நலனை மேம்படுத்துவதற்காக நிதியத்தைப்‌ பயன்படுத்தும்‌ நோக்கத்திற்காக அத்தகைய நிறுவனங்களின்‌ வேலை வழங்குநர்களுக்கு பொருத்தமானதாகக்‌ கருதும்‌ அத்தகைய பணிப்புரைகளை வழங்குவதற்கு, வாரியம்‌ அதிகாரம்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. 34. வாரியத்தின்‌ வழிகாட்டுதலுக்கு இணங்கத்‌ தவறுவதற்கான அபராதம்‌.- வாரியத்தால்‌ கோரப்பட்ட ஏதேனும்‌ ஆவணத்தை வேண்டுமென்றே சமர்ப்பிக்கத்‌ தவறுகின்ற அல்லது வாரியத்தால்‌ கோரப்பட்ட ஏதேனும்‌ தகவலை வழங்கத்‌ தவறுகின்ற ம்‌ அல்லது 33 ஆம்‌ பிரிவின்கீழ்‌ வாரியத்தால்‌ பிறப்பிக்கப்பட்ட ஏதேனும்‌ பணிப்புரைகளுக்கு வேண்டுமென்றே இணங்கத்‌ தவறுகின்ற எவரொருவரும்‌, குற்றம்‌ நிரூபிக்கப்பட்டால்‌,- (@) முதல்‌ குற்றத்திற்கு, மூன்று மாதங்கள்‌ வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது ஐநூறு ரூபாய்‌ வரை நீட்டிக்கக்கூடிய அபராதம்‌ அல்லது இரண்டும்‌; மற்றும்‌ (௦) இரண்டாவது அல்லது பிந்தைய குற்றத்திற்கு, ஆறு மாதங்கள்‌: வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது ஆயிரம்‌ ரூபாய்‌ வரை 19 நீட்டிக்கக்கூடிய அபராதம்‌ அல்லது இரண்டும்‌: விதித்துத்‌ தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. வரம்புரையாக, நீதிமன்றத்‌ தீர்ப்பில்‌ குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மாறாக, சிறப்பு மற்றும்‌ போதிய காரணங்கள்‌ இல்லாத நிலையில்‌, குற்றவாளிக்கு அபராதம்‌ விதிக்கப்பட்ட எந்தவொரு நேர்விலும்‌, அபராதத்‌ தொகை ஐம்பது ரூபாய்க்கு குறையாமல்‌ இருக்க வேண்டும்‌. 35. ஆண்டறிக்கை.- வாரியமானது, ஒவ்வொரு ஆண்டு இறுதிக்குப்‌ பின்பு, கூடிய விரைவில்‌, முந்தை ஆண்டின்‌ போது, அதன்‌ செயற்பாடுகளின்‌ விவரத்தை தெரிவிக்கின்ற அறிக்கை ஒன்றினை, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்தில்‌ அத்தகைய தேதிக்கு முன்பும்‌, தயாரித்து அரசிடம்‌ தாக்கல்‌ செய்தல்‌ வேண்டும்‌; அடுத்த ஆண்டில்‌ வாரியத்தால்‌ மேற்கொள்ளப்படக்கூடிய செயல்பாடுகள்‌ ஏதேனும்‌ இருந்தால்‌, அந்த அறிக்கை அதனையும்‌ அளித்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அரசு அத்தகைய அறிக்கையைப்‌ பெற்ற பின்பு, கூடிய விரைவில்‌, அரசானதுமாநிலச்‌ சட்டமன்றத்தின்‌ முன்பு அது வைக்கப்படுமாறு செய்வித்தல்‌ வேண்டும்‌. 36. வாரியத்தை கலைத்துக்‌ கைக்கொள்வதற்கான அதிகாரம்‌.- (1) வாரியமானது, இந்தச்‌ சட்டத்தினாலோ அதன்படியாகவோ அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்றாமல்‌ இருக்கிறது அல்லது கடமைகளைப்‌ புரிந்து வருவதில்‌ தொடர்ந்து தவறுகை செய்துள்ளது அல்லது அதன்‌ அதிகாரங்களை மீறியிருக்கிறது அல்லது தவறாகப்‌ பயன்படுத்தியிருக்கிறது என்று அரசு கருதுமாயின்‌, அது, அறிவிக்கை வாயிலாக, அந்த அறிவிக்கையில்‌ குறிப்பிடப்படலாகும்‌ ஆறு மாதத்திற்கு மிகாத ஒரு காலஅளவிற்கு வாரியத்தை கலைத்துக்‌ கைக்கொள்ளலாம்‌; வரம்புரையாக, இந்த உட்பிரிவின்கீழ்‌ அறிவிக்கை ஒன்றை வழங்குவதற்கு முன்பு, அரசு, அறிவிப்பின்‌ மூலம்‌, அது ஏன்‌ கலைத்துக்‌ கைக்கொள்ளப்படக்கூடாது என்பதற்கான விளக்கம்‌ கேட்டு அறிவிப்பில்‌ குறிப்பிடப்படும்‌ காலஅளவிற்குள்‌ வாரியத்தைக்‌ கோருதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ வாரியத்தின்‌ விளக்கம்‌ மற்றும்‌ ஆட்சேபணைகள்‌ எவையேனுமிருப்பின்‌, அவற்றை பரிசீலனை செய்தலும்‌ வேண்டும்‌." (2) வாரியத்தைக்‌ கலைத்துக்‌ கைக்கொள்வதற்கு (1) உட்பிரிவின்படியான அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டதன்‌ பேரில்‌,- (ஐ) வாரியத்தின்‌ தலைவரும்‌ அதன்‌ அனைத்து உறுப்பினர்களும்‌ அவ்வாறு கலைத்துக்‌ கைக்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து தங்கள்‌. பதவிகளைவிட்டு அகலுதல்‌ வேண்டும்‌; (b) வாரியம்‌ கலைத்துக்‌ கைக்கொள்ளப்பட்டிருக்கும்போது, இந்தச்‌ சட்டத்தின்‌ வகையங்களின்லோ அதன்படியாகவோ மன்றத்தினால்‌ அல்லது அதன்‌ சார்பாகவோ மற்றும்‌ தலைவரால்‌ செலுத்தப்படலாகும்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ புரியப்படலாகும்‌ கடமைகள்‌ அனைத்தும்‌, அரசு பணிக்கலாகிற நபர்‌ அல்லது அதிகார அமைப்பினால்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ புரியப்படுதல்‌ வேண்டும்‌; (௦) வாரியத்திடம்‌, உற்றமைந்திருக்கும்‌ நிதிகள்‌ மற்றும்‌ சொத்துக்கள்‌ அனைத்தும்‌, அது கலைத்துக்‌ கைக்கொள்ளப்பட்டிருக்கும்போது (ஐ கூறில்‌ குறிப்பிடப்பட்டுள்ள நபர்‌ அல்லது அதிகார அமைப்பிடம்‌ உற்றமைந்திருத்தல்‌ வேண்டும்‌; (0) வாரியத்திற்கு எதிராக சட்டபூர்வமாக நடைமுறையில்‌ உள்ள மற்றும்‌ நடைமுறைப்படுத்தத்தக்க அனைத்து பொறுப்புகளும்‌, (b) கூறில்‌ குறிப்பிடப்பட்ட அதிகார அமைப்பு அல்லது நபருக்கு எதிராக, அதனிடம்‌ அல்லது அவரிடம்‌ உற்றமைந்துள்ள நிதி மற்றும்‌ சொத்துக்களின்‌ அளவிற்கு நடைமுறைப்படுத்தக்‌ கூடியவை ஆகும்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ செய்யப்பட்ட அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்ட கலைத்துக்‌ கைக்கொள்ளப்பட்ட காலஅளவு முடிவுற்றதன்‌ பேரில்‌, அரசானது,- (ஐ தேவையெனக்‌ கருதுகிறவாறு, ஆறு மாதத்திற்கு மேற்படாத மேலுமானதொரு காலஅளவிற்குக்‌ கலைத்துக்‌ கைக்கொள்ளப்படும்‌ காலஅளவினை நீட்டிக்கலாம்‌; அல்லது 0௦) 5 ஆம்‌ பிரிவில்‌ வகைசெய்யப்பட்டுள்ள முறையில்‌ வாரியத்தினை மறுஅமைப்பு செய்யலாம்‌. 37. அதிகாரங்களை ஒப்படைத்தல்‌. (1) அரசு, அறிவிக்கை வாயிலாக, 41 பிரிவின்கீழ்‌ விதிகளை இயற்றுவதற்கான அதிகாரத்தைத்‌ தவிர, இந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது அதன்கீழ்‌ அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில்‌ எதனையும்‌ பயன்படுத்துவதற்கு எந்த அதிகாரஅமைப்புக்கும்‌ அல்லது அலுவலருக்கும்‌ அதிகாரமளிக்கலாம்‌ மற்றும்‌ அத்தகைய அதிகாரத்தை அதே முறையில்‌ திரும்பப்‌ பெறலாம்‌. (2) வாறியமானது, அவசியமென அது கருதலாகும்‌, 42 ஆம்‌ பிரிவின்கீழ்‌ ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரத்தைத்‌ தவிர, இச்சட்டத்தின்கீழ்‌ அதன்‌ அதிகாரங்களையும்‌ செயற்பணிகளையும்‌ வாரியத்தின்‌. செயலாளருக்கு அல்லது பிற அலுவலருக்கு எழுத்துவடிவில்‌ பொதுவான அல்லது சிறப்பு ஆணை வாயிலாக ஒப்படைக்கலாம்‌ மற்றும்‌ அத்தகைய அதிகாரத்தை அதே முறையில்‌ திரும்பப்‌ பெறலாம்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவு அல்லது (2) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஒப்படைக்கப்பட்ட அதிகாரம்‌ எதனையும்‌ செலுத்துவது, அந்த ஆணையில்‌ குறித்துரைக்கப்படும்‌ அத்தகைய கட்டுப்பாடுகளுக்கும்‌ நிபந்தனைகளுக்கும்‌ மற்றும்‌ நேர்விற்கேற்ப, அரசால்‌ அல்லது இதன்பொருட்டு அரசால்‌ அதிகாரம்‌ அதிகாரமளிக்கப்படலாகும்‌ அத்தகைய அலுவலரால்‌ அல்லது வாரியத்தால்‌ அல்லது இதற்கென வாரியத்தால்‌ அதிகாரமளிக்கப்படலாகும்‌ அத்தகைய அலுவலரால்‌ கட்டுப்படுத்துவதற்கும்‌ சீராய்விற்கும்‌ உட்பட்டிருத்தல்‌ வேண்டும்‌, (4) அவ்வாறு அதிகாரம்‌ அளிக்கப்பட்ட அலுவலரின்‌ செயல்களையும்‌ நடவடிக்கைகளையும்‌ கட்டுப்படுத்தவும்‌ சீராய்வு செய்வதற்கும்‌, நேர்விற்கேற்ப, அரசு அல்லது வாரியம்‌ அதிகாரம்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. 38. வாரிய உறுப்பினர்கள்‌, செயலாளர்‌, ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ வாரியத்தின்‌. அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ அனைவரும்‌ பொதுப்‌ பணியாளர்களாக இருத்தல்‌.- வாரியத்தின்‌ உறுப்பினர்கள்‌, செயலாளர்‌, ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ வாரியத்தின்‌ அனைத்து அதிகாரிகள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ எந்தவொரு செயற்பணியையும்‌ நிறைவேற்றும்‌ பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நபரெவரும்‌, இந்திய தண்டனை தொொகுப்புச்‌ சட்டத்தின்‌. (மையச்‌ சட்டம்‌ XLV/1860) 21 ஆம்‌ பிரிவின்‌ வரையறைக்குள்‌ பொதுப்‌ பணியாளர்களாக கருதப்படுவார்கள்‌. 39. நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்படும்‌ நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு.- (1) இந்தச்‌ சட்டத்தின்படி அல்லது அதன்கீழ்‌ செய்யப்படும்‌ விதி அல்லது ஆணை எதன்படியும்‌ நல்லெண்ணத்தில்‌ செய்த அல்லது செய்யக்‌ கருதிய செயல்‌ எதற்காகவும்‌ அல்லது எவருக்கெதிராகவும்‌ உரிமை வழக்கு, குற்றவியல்‌ வழக்கு அல்லது பிற நடவடிக்கைகள்‌ எதுவும்‌ தொடரப்படுதல்‌ ஆகாது. (2) இந்தச்‌ சட்டத்தை அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதி அல்லது ஆணை எதன்படியும்‌ நல்லெண்ணத்தில்‌ செய்த அல்லது செய்யக்‌ கருதிய செயல்‌ எதனாலேனும்‌ விளைவிக்கப்பட்ட அல்லது விளைவிக்கப்படக்கூடிய சேதம்‌ எதற்காகவும்‌, வாரியம்‌ அல்லது அரசுக்கெதிராக உரிமை வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும்‌ தொடரப்படுதல்‌ ஆகாது. 40. விதிவிலக்கு.- அரசானது, ஆணையின்‌ மூலம்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ அனைத்திலும்‌ அல்லது எதிலிருந்தும்‌ அல்லது அதன்கீழ்‌ உருவாக்கப்பட்ட விதிகள்‌ எதிலிருந்தும்‌, அறிவிக்கையில்‌ குறிப்பிடப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு எந்தவொரு நிறுவனத்தையும்‌ அல்லது நிறுவனங்களின்‌ வகையையும்‌ விலக்கு அளிக்கலாம்‌. 41. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளைச்‌ செயல்படுத்தும்‌ நோக்கத்திற்காக அரசு விதிகளைச்‌ செய்யலாம்‌. S S} (2) குறிப்பாகவும்‌, மேலேகண்ட அதிகாரத்தின்‌ பொதுப்பாங்கிற்குக்‌ குத்தகமின்றியும்‌ அத்தகைய விதிகளானது பின்வருவனவற்றிற்கு வகை செய்யலாம்‌.- (ஐ வகுத்துரைக்கப்பட வேண்டும்‌ என்று இந்தச்‌ சட்டத்தால்‌ வெளிப்படையாக வேண்டப்படும்‌ அல்லது அனுமதிக்கப்பட்ட அனைத்துப்‌ பொருட்பாடுகள்‌; (b) 3 ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட பணத்தொகைகளில்‌ எதுவும்‌ வாரியத்திற்கு அல்லது நிதியத்தினுள்‌ செலுத்தப்பட வேண்டிய கால இடைவெளிகள்‌ அல்லது காலஅளவு; அத்தகைய செலுத்தத்தின்‌ முறை மற்றும்‌ அத்தகைய தொகை எதனையும்‌ சேகரிப்பதற்கான முகவாண்மையும்‌ முறையும்‌; (௦ நிதியத்தின்‌ கணக்குகள்‌ பேணப்படவேண்டிய மற்றும்‌ தணிக்கை செய்யப்படவேண்டிய முறை; (0) வாரியத்தின்‌ உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய படித்தொகைகள்‌, ஏதேனும்‌ இருப்பின்‌; (6) இந்த ஊதியத்திலிருந்து பணியாளரின்‌ பங்களிப்பு கழிக்கப்படும்‌ முறை: () செலுத்தப்படாத திரள்‌ தொகைகள்‌ தொடர்பான அறிவிப்பின்‌ வடிவம்‌; (ஓ நிதியத்திலிருந்து மானியங்களை வழங்குவதற்கான நடைமுறை; 0) நிதியத்தை நிர்வகிப்பதில்‌ ஏற்படும்‌ செலவினங்களை ஈடுசெய்வதற்கான நடைமுறை; (i) வாரியம்‌ அதன்‌ அலுவல்களை நடத்தும்‌ முறை; () ஆய்வாளர்களின்‌ கடமைகள்‌ மற்றும்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ இச்சட்டத்தின்‌ கீழ்‌ நியமிக்கப்பட்ட செயலாளர்‌ மற்றும்‌ ஆய்வாளர்கள்‌. மற்றும்‌ பிற பணியாளர்‌ தொகுதியினரின்‌ பணி நிபந்தனைகள்‌; (k) வாரியத்தின்‌ அதிகாரங்களையும்‌ செயற்பணிகளையும்‌ செயலாளரிடம்‌ ஒப்படைத்தல்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌ மற்றும்‌ வரையறைகளுக்கு உட்பட்டு செலுத்தப்படக்கூடிய அதிகாரங்கள்‌ அல்லது ஆற்றப்படக்கூடிய செயற்பணிகள்‌; ) நிதியத்தின்‌ ஆண்டு வருமானத்தின்‌ விழுக்காட்டிற்கு அப்பால்‌ பணியாளர்‌ தொகுதியினருக்காகவும்‌ பிற நிர்வாகச்‌ செலவுகளுக்காகவும்‌ செலவிட முடியாத விழுக்காடு; (m) சட்டத்தின்கீழ்‌ பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்‌ மற்றும்‌ பதிவணங்கள்‌; () நிதியத்திலிருந்து நிதியளிக்கப்பட்ட செயற்பாடுகள்‌ பற்றிய அறிக்கையை நிதியத்தின்‌ பெறுகைகள்‌ மற்றும்‌ செலவுகளின்‌ விவர அறிக்கை மற்றும்‌ கணக்குகளின்‌ விவர அறிக்கை ஆகியவற்றுடன்‌ சேர்த்து வெளியிடுதல்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ அனைத்தும்‌ தமிழ்நாடு. அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டுமென வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (4) இந்தச்‌ சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள்‌ அனைத்தும்‌, அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (5) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்‌ அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர்‌, கூடிய விரைவில்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்னர்‌ அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும்‌ மாறுதல்‌ எதனையும்‌ சட்டமன்றப்‌ பேரவையானது செய்யுமாயின்‌ அல்லது அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதுவும்‌ செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமாயின்‌, அந்த விதி அல்லது அறிவிக்கையானது அதன்பின்னர்‌ அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌ அவ்வாறான மாறுதல்‌ அல்லது நீக்கம்‌ எதுவும்‌, அந்த விதி அல்லது அறிவிக்கையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல்‌ ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 42. ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.-- (1) வாரியம்‌, முன்தேதியிட்டோ அல்லது பின்தேதியிட்டோ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையின்‌ வாயிலாக, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு செயல்‌ விளைவு கொடுக்கும்‌ நோக்கங்களுக்காக, இந்தச்‌ சட்டம்‌ மற்றும்‌ அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளுக்கு முரணாக இல்லாத ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) குறிப்பாகவும்‌, மேலேகண்ட அதிகாரத்தின்‌ பொதுப்பாங்கிற்குக்‌ குத்தகமின்றியும்‌, அத்தகைய ஒழுங்குமுறை விதிகள்‌ பின்வரும்‌ பொருட்பாடுகள்‌: அனைத்திற்காகவும்‌ அல்லது அவற்றில்‌ எதற்காகவும்‌ வகைசெய்யலாம்‌,- (ஐ) ஒழுங்குமுறை விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட வேண்டும்‌ என்று இந்தச்‌ சட்டத்தால்‌ வெளிப்படையாக வேண்டப்படும்‌ அல்லது அனுமதிக்கப்பட்ட அனைத்துப்‌ பொருட்பாடுகள்‌; (b) வாரியத்தின்‌. அலுவலர்களாலும்‌ பணியாளர்களாலும்‌ மேற்கொள்ளப்படும்‌ பணங்கள்‌ தொடர்பான பயணப்‌ படிகள்‌ மற்றும்‌ தினப்‌ படிகள்‌ உள்ளடங்கலாக, வாரியத்தின்‌ அத்தகைய அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ நியமனம்‌ மற்றும்‌ பணி நிபந்தனைகள்‌ மற்றும்‌ ஊதிய விகிதம்‌; (c) வாரியத்தின்‌ அலுவலர்கள்‌: மற்றும்‌ பணியாளர்களின்‌ நடவடிக்கைகள்‌ மற்றும்‌ சட்டங்களை மேற்பார்வை செய்தலும்‌ கட்டுப்படுத்துதலும்‌ மற்றும்‌ வாரியத்தின்‌ அலுவலர்கள்‌: மற்றும்‌ பணியாளர்களிடையே ஒழுக்கம்‌ மற்றும்‌ நடத்தையைப்‌ பேணுதலும்‌; d) குறைவெண்‌ உட்பட வாரியக்‌ கூட்டங்களின்‌ அலுவல்‌ நடவடிக்கை தொடர்பான நடைமுறை; (e) செய்யப்படக்கூடிய நபர்களின்‌ தற்காலிக சங்கத்தின்‌ நோக்கங்கள்‌: மற்றும்‌ முறை; 0. குழுக்களின்‌ உறுப்பினர்கள்‌ கடமைகள்‌, செயற்பணிகள்‌, பணி நிபந்தனைகள்‌ மற்றும்‌ வரையறைகள்‌; (ஐ வாரியத்தின்‌ கணக்குகளைப்‌ பேணுதல்‌ தொடர்பான முறையும்‌ படிவமும்‌. (3) ஒழுங்குமுறை விதி அல்லது அதை ரத்து செய்வது அல்லது மாற்றியமைப்பது எதுவும்‌, அரசால்‌ அங்கீகரிக்கப்படும்‌ வரை செயல்விளைவைக்‌ கொண்டிருக்காது. (4) அரசு, அறிவிக்கை வாயிலாக, இந்தப்‌ பிரிவின்படி இயற்றப்பட்ட ஒழுங்குமுறை விதி எதனையும்‌ நீக்கறவு செய்யலாம்‌, அதன்பேரில்‌ ஒழுங்குமுறை விதியின்‌ செயல்விளைவு அற்றுப்போகும்‌. 43. மையச்‌ சட்டம்‌ ॥/74936-இன்‌ 8 ஆம்‌ பிரிவிற்கான திருத்தம்‌.- 1936 ஆம்‌ ஆண்டு கூலி தொடுத்தல்‌ சட்டத்தின்‌, (மையச்‌ சட்டம்‌ IV/1936) 8 ஆம்‌ பிரிவின்‌ (8) ஆம்‌ உட்பிரிவில்‌, கடைசி வாக்கியத்தின்‌ இறுதியில்‌ பின்வருவனவற்றை சேர்த்தல்‌ வேண்டும்‌, அதாவது:- "ஆனால்‌, 1972 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர்‌ நல நிதியச்‌ சட்டம்‌ பொருந்தும்‌ எந்தவொரு நிறுவனத்தின்‌ நேர்விலும்‌, அத்தகைய வருவாய்கள்‌ அனைத்தும்‌, மேற்கூறிய சட்டத்தின்கீழ்‌ அமைக்கப்பட்ட நிதியத்தில்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌." 26

Rules, notifications and orders under this Act

Listed from India Code. Each opens there.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts