Tamil Nadu · 2012 · Act 22
TAMIL NADU INFRASTRUCTURE DEVELOPMENT ACT 2012
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
2012ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு
மேம்பாட்டுச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 22/2012)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Infrastructure Development 4௯ 2012
(Tamil Nadu Act No. 22 of 2012)
(as on 31% October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
i
2012ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு
பிரிவு
மேம்பாட்டுச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 22/2012)
பொருளடக்கம்
அத்தியாயம் - |
முன்னுரை
குறுந்தலைப்பு, பரப்பெல்லை, பொருந்துகை
மற்றும் தொடக்கம்.
பொருள்வரையறைகள்.
அத்தியாயம் -॥
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு
வாரியத்தை நிறுவுதல்.
வாரியத்தின் கூட்டங்கள்.
வாரியத்தின் நடவடிக்கைகள்
செல்லத்தகாததாக ஆதல் கூடாது.
வாரியத்தின் முதன்மை நிருவாக அலுவலர்,
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின்.
நியமனம்.
வாரியத்தின் செயற்பணிகள்.
வாரியத்தின் அதிகாரங்கள்.
செயற்குழு.
செயற்குழுவின் கூட்டங்கள்.
செயற்குழுவின் நடவடிக்கைகள்
செல்லத்தகாததாக ஆதல் கூடாது.
பிற குழுக்களை அமைத்துருவாக்குதல்.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
il
அலுவல்சாரா உறுப்பினர்களுக்கும். சிறப்பு
அழைப்பினர்களுக்குமான ஊதியங்களும்
படித்தொகைகளும்.
அத்தியாயம் -॥
செயற்திட்டத்தை அடையாளம் காணுதல்,
முன்னுரிமை அளித்தல் மற்றும்
நடைமுறைப்படுத்துதல்
செயற்திட்டத்தை அடையாளம் காணுதல்
மற்றும் அதற்கு முன்னுரிமை அளித்தல்.
பொதுத் துறை மூலமாக செயற்திட்டத்தை
நடைமுறைப்படுத்துதல்.
பொது - தனியார் கூட்டாண்மை மூலம்
செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் .
விரிவான செயற்திட்ட ஆய்வு மற்றும்
செயற்திட்டத்தை வடிவமைத்தல்.
செயற்திட்டங்களுக்காக கொள்முதல் செய்யும்
அமைப்பு.
செயற்திட்ட மேலாளர் மற்றும் வல்லுநர்களை
நியமனம் செய்தல்.
செயற்திட்ட மேலாண்மை வசதி அமைப்பு.
செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துதலை
மேற்பார்வையிடுதல்.
உள்கட்டமைப்புத் தீர்வை, பயனாளர்
கட்டணங்கள் மற்றும் கட்டணத் தொகைகள்.
தவறானப் பயன்பாட்டிற்கான கட்டணம்.
அத்தியாயம் [V
நிதி, கணக்குகள் மற்றும் தணிக்கை
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி.
செயற்திட்டத் தயாரிப்பு நிதி.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
iii
கணக்குகள் மற்றும் தணிக்கை.
ஆண்டறிக்கை.
அத்தியாயம் V
பல்வகைப்பட்டவை
உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள்
ஆகியோர் பொது ஊழியர்கள் ஆவர்.
நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான
அதிகாரம்.
இணைப்புப்பட்டியல்களைத் திருத்துவதற்கான
அதிகாரம்.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
விலக்களிப்பதற்கான அதிகாரம்.
விதிகள்,ஒழுங்குவிதிகள், அறிவிக்கைகள்
ஆகியவற்றை வெளியிடுதல் மற்றும்.
அவற்றை சட்டமன்றத்தின் முன்பு வைத்தல்.
இச்சட்டம் மாநிலத்தின் பிற சட்டங்களுக்கு
மேலோங்கி இருத்தல்.
| - ஆம் இணைபப்புப்பட்டியல்.
Il - ஆம் இணைபப்புப்பட்டியல்.
1
2012ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு
மேம்பாட்டுச் சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 22/2012
[தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது
2012ஆம் ஆண்டு மே திங்கள் 31ஆம் நாளன்று ஆளுநரின்
ஏற்பிசைவைப் பெற்று பொதுத் தகவலுக்காகத் தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்பட்டது.
இம்மாநிலத்தில் தனியார் துறைப் பங்கெடுப்பின் மூலம்
உள்கட்டமைப்புச் செயற்திட்டங்களுக்கு நிதி
அளிப்பதற்காகவும், வடிவமைப்பதற்காகவும், அவற்றின்
கட்டுமானத்திற்காகவும், அவற்றைப் பேணி
வருவதற்காகவும் மற்றும் செயற்படுத்துவதற்கு இயலச்
செய்வதற்க்கு ஏற்ற வசதி வாய்ப்பான ஒரு சூழலுக்கு
வகைசெய்யவும் அத்தகைய செயற்திட்டங்களை
அடையாளம். காண்பதற்காகவும், அவற்றுக்கு
முன்னுரிமை அளிப்பதற்காகவும் மற்றும்
நடைமுறைப்படுத்துவதற்காகவும் நிறுவனம் சார்ந்த
கட்டமைப்பு ஒன்றுக்கு வகை செய்வதற்காகவும்
மற்றும் அதனோடு தொடர்புடைய மற்றும் அதன்
விளைவான விவரங்களுக்காகவுமான ஒரு சட்டம்.
இந்தியக் குடியரசின் அறுபத்து மூன்றாம் ஆண்டில்,
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் இயற்றப்பட்ட
சட்டம் பின்வருமாறு:-
அத்தியாயம் -॥
முன்னுரை
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை, பொருந்துகை
மற்றும் தொடக்கம்.-(1) இந்தச் சட்டம், 2012ஆம் ஆண்டு
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுச் சட்டம் என
வழங்கப்படும்.
2
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் பரவி
நிற்கும்.
(3) இது பொது முகவாண்மை ஒன்றினால்
நடைமுறைப்படுத்தப்படும் ஐந்நூறு கோடி ரூபாய்க்கு
மேற்பட்ட மதிப்புடைய செயற்திட்டங்கள் அனைத்திற்கும்
பொருத்துதல் வேண்டும்:
வரம்புரை: அரசானது தனி அல்லது பொது
ஆணையின் மூலமாக இந்தச் சட்டத்தின்:
வகைமுறைகளை, ஐந்நூறு கோடி ரூபாய்க்குக் குறைவான
செயற்திட்ட மதிப்புடைய பொது-தனியார் கூட்டாண்மை
மூலம் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டம் எதற்கும்.
பொருந்தச் செய்யலாம்:
மேலும் வரம்புரை: இது மைய அரசாலோ அல்லது
மைய அரசின் பொதுத் துறை நிறுவனம் ஒன்றினால்
தனியாகவோ அல்லது மாநில அரசுடன் இணைந்து
கூட்டாகவோ மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்திட்டம்
எதற்கும் பொருந்துதல் கூடாது.
விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக,
பொது-தனியார் கூட்டாண்மைச் செயற்திட்டம் ஒன்றைப்
பொறுத்த அளவில், "செயற்திட்ட மதிப்பு: என்பது, தனியார்
துறைப் பங்கெடுப்பாளரால்,-
(@) மூலதன முதலீடு செய்யப்படவேண்டும்
என்பது கோரப்படுவதாக இருக்குமானால், தனியார் துறைப்
பங்கெடுப்பாளரால் நிலத்தின். மதிப்பானது
ஏற்கப்படவேண்டியதாக இருந்தால் நிலத்தின் மதிப்பு
உள்ளிட்ட உருவாக்கப்பட வேண்டிய சொத்தின் மதிப்பு
அல்லது வசதியின் மதிப்பு என்றோ; அல்லது
0) மூலதன முதலீடு செய்யப்படவேண்டும்
என்று கோரப்படுவதாக இல்லையென்றால், செயல்பாடும்.
பராமரிப்பும் தனியார் துறைப் பங்கெடுப்பாளரின்
3
பொறுப்பாதல் வேண்டும் என்ற நிலையில் சொத்தின்
அல்லது வசதியின் தற்போதைய மாற்றத்திற்குள்ளான
மதிப்பு என்றோ
பொருள்படும்.
(4) இது, அரசு அறிவிக்கையின் மூலம்
குறிப்பிடக்கூடிய அத்தகைய தேதியில் நடைமுறைக்கு
வருதல் வேண்டும்.
2. பொருள்வரையறைகள்.-இந்தச் சட்டத்தில்
தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
@) "நிருவாகத் துறை என்பது, 1978ஆம்
ஆண்டு தமிழ்நாடு அரசு அலுவல் விதிகளின்படியான
செயற்திட்டம் ஒன்றுடன் நிருவாக முறையில்
தொடர்புடைய தலைமைச் செயலகத்தின் துறை எனப்
பொருள்படும்; மற்றும் செயற்திட்டம் ஒன்றுடன் நிருவாக
முறையில் தொடர்புடைய ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள்
இருக்கலாம்;
(b) "வாரியம்" என்பது, இந்தச் சட்டத்தின் பிரிவு
3இன்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு உள்கட்டமைப்பு
மேம்பாட்டு வாரியம் எனப் பொருள்படும்;
(9) "சலுகைக் கொடை உரிமை பெற்றவர்"
என்பது, பொது-தனியார் கூட்டாண்மையில் ஈடுபட்டுள்ள
தனியார் துறைப் பங்கெடுப்பாளர் எனப் பொருள்படும்;
(4) "சலுகை உரிமைக்கான உடன்பாடு"
என்பது, பொது-தனியார் கூட்டாண்மை ஒன்றுக்காகவும்
அதனைப் பொறுத்த அளவிலும் பொது முகவாண்மை
ஒன்றுக்கும் தனியார் துறைப் பங்கெடுப்பாளர்
ஒருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு ஒன்று
எனப் பொருள்படும்;
(6) "விரிவான செயற்திட்ட ஆய்வு" என்பது,
மூலதன மதிப்பு, தொழில்நுட்ப அளவுகோல்கள்,
பயன்படுத்தப்படவேண்டிய தொழில்நுட்பத்தின்:
விவரக்குறிப்புகள், தொழில்நுட்ப விளக்கக் குறிப்புகள்,
பொருளாதார முதலீட்டிற்கு உதவும் திட்டத்தின் கால
அட்டவணை மற்றும் செயற்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் மற்றும்
ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும் பிற தகவல்
ஆகியவற்றை உறுதியாகத் தீர்மானிக்கும் பொருட்டு
தொடக்கநிலை முதலீட்டிற்கான முடிவை மேற்கொண்ட
பின்னர் செய்யப்படும் செயற்திட்டத்தின் விரிவானதொரு
ஆய்வு எனப் பொருள்படும்;
(0) "நடைமுறைப்படுத்த இயலச்செய்கிற
ஆய்வு" என்பது, சேவைகளுக்கான தேவை,
ஏற்கப்படவேண்டிய உரிய தொழில்நுட்பம், மூலதன மதிப்பு,
நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான கால அளவு
மற்றும் ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும் பிற
தகவல் உள்ளிட்ட செயற்திட்டம் ஒன்றைப் பொறுத்த
அளவில் தொழில்நுட்ப, சமூக, பொருளாதார மற்றும்
நிதிநிலையின் நிலைத்திருக்கும் தண்மை, அது சமூக
மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம்
போன்றவற்றைக் கணித்து மதிப்பிட்டு முதலீடு பற்றிய
முடிவை மேற்கொள்வதற்காகச் செய்யப்பட்ட முதல் நிலை
ஆய்வு எனப் பொருள்படும்;
(9 "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்;
(h) "அரசு நிறுமம்" என்பது, செலுத்தப்பட்ட
பங்கு முதலீட்டின் நூற்றுக்கு ஐம்பத்து ஒன்று
விழுக்காட்டிற்குக் குறையாமல் மாநில அரசால் அல்லது
அரசுகளால் வைத்து வரப்படுகின்ற நிறுமம் எதுவும் எனப்
பொருள்படும்; மற்றும் வரையறை ௬சய்யப்பட்ட அரசு
நிறுமம் ஒன்றின் துணை நிறுவனமாக உள்ள நிறுமம்
ஒன்றையும் உள்ளடக்கும்;
5
(i) உள்கட்டமைப்பு" என்பது, | - ஆம்
இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட துறைகளில் உள்ள சொத்திருப்புகளை
அல்லது சேவைகளை வழங்குதல் எனப் பொருள்படும்;
0) "உள்ளாட்சி அதிகாரஅமைப்பு" என்பது,
அப்போது நடைமுறையில் இருந்துவரும் தொடர்புடைய
சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட மாநகராட்சி
அல்லது நகராட்சி மன்றம் அல்லது ஊராட்சி ஒன்றிய
மன்றம் அல்லது கிராம ஊராட்சி எனப் பொருள்படும்;
k) "தனியார் துறைப் பங்கெடுப்பாளர்" என்பது,
பொது முகவாண்மை அல்லது மைய அரசு அல்லது மைய
அரசினால் எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுத் துறை
நிறுவனம் அல்லாத பிற நபர் எவரும் எனப் பொருள்படும்;
() "செயற்திட்டம்" என்பது, உள்கட்டமைப்புச்
செயற்திட்டம் எனப் பொருள்படும்;
(m) "பொது-தனியார் கூட்டாண்மை" என்பது,
ஒரு பொது முகவாண்மை மற்றும் ஒரு தனியார் துறைப்
பங்கெடுப்பாளருக்கிடையே, வடிவமைப்பு மற்றும்
கட்டுமான நிலைக்கு அப்பால் வரும் இடரினையும்
செயல்பாடுகள். தொடர்புடைய சேவைகளுக்கான
கட்டணத்தைப் பயனாளர் கட்டணம், ஆண்டுக் கட்டணம்
அல்லது ஒட்டுமொத்தக் கட்டணமாகச் செலுத்துதலையும்
தனியார் துறைப் பங்கெடுப்பாளர் ஏற்றுக்கொள்ளுதல்
வேண்டுமென்ற இடர் ஒதுக்கீடானது
ஏற்படுத்தப்பட்டுள்ளபோது, செய்யப்பட்ட முதலீடுகள்
மூலமாகவும், தனியார் துறைப் பங்கெடுப்பாளரால்
மேற்கொள்ளப்பட்ட வடிவம், மேம்பாடு, கட்டுமானம்,
பராமரிப்பு அல்லது செயல்பாடு மூலமாகவும்,
உள்கட்டமைப்பின் வகைமுறைக்காக செய்யப்பட்ட ஒரு
ஏற்பாடு எனப் பொருள்படும்;
6
(n) "பொது-தனியார் கூட்டாண்மைச்
செயற்திட்டம்" என்பது, பொது-தனியார் கூட்டாண்மை
மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டச் செயற்திட்டம் எனப்
பொருள்படும்;
(0) "பொது முகவாண்மை" என்பது, அரசின்
துறை எதுவும் அல்லது அரசினால் எடுத்துக்கொள்ளப்பட்ட
பொதுத் துறை நிறுவனம், அரசு நிறுமம், அரசால்
உருவாக்கப்பட்ட சட்டமுறைக் குழுமம், உள்ளாட்சி
அதிகாரஅமைப்பு, கூட்டுறவு நிறுவனம், மாநிலப்
பல்கலைக்கழகம் எதுவும் மற்றும் அரசால்
சொந்தமாக்கப்பட்ட அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள
சங்கம் அல்லது பொறுப்பாட்சி எதுவும் எனப் பொருள்படும்;
(p) "பொது நிதியுதவி" என்பது, மைய
அரசிடமிருந்து அல்லது மாநில அரசிடமிருந்து அல்லது
அவை இரண்டிடமும் இருந்து பெறும் நிதியுதவி எனப்
பொருள்படும்;
@ "பொதுத் துறை செயல்வகை" என்பது,
பொது முகவாண்மை ஒன்றினால் நேரடியாக அதன்
சொந்த வளஆதாரங்களைக் கொண்டு அல்லது மாநில
வரவு-செலவுத் திட்டத்தின்படியான வளஆதாரங்களின்
மூலம் செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்-
படுத்தப்படுத்துதல் எனப் பொருள்படும்;
() "ஒழுங்குவிதிகள்" என்பது, இந்தச்
சட்டத்தின்படி வாரியத்தால் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகள்
எனப் பொருள்படும்;
(5) "விதிகள்" என்பது, இந்தச் சட்டத்தின்படி
அரசினால் செய்யப்பட்ட விதிகள் எனப் பொருள்படும்;
O "இணைப்புப்பட்டியல்" என்பது, இந்தச்
சட்டத்துடன் இணைக்கப்பட்ட இணைப்புப்பட்டியல் எனப்
பொருள்படும்;
7
(ம "ஆதரவளிக்கும் முகவாண்மை" என்பது,
பொது-தனியார் கூட்டாண்மையின் மூலம் செயற்திட்டம்
ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு வாரியத்தால்
பெயர்குறித்து அமைக்கப்பட்ட பொது முகவாண்மை எனப்
பொருள்படும்;
0) "மாநில அரசின் ஆதரவு" என்பது, சலுகை
உரிமை பெற்ற ஒருவருக்கு அரசால் நீட்டிக்கப்பட்டுள்ள
ஆதரவு எனப் பொருள்படும்; அதில் பின்வருவன
உள்ளடங்கலாம்:-
0 விதிகளில் வகுத்துரைக்கப்படும்
செயற்திட்டத்தின் மதிப்பில் அத்தகைய
வீதத்திற்கு மேற்படாமல் உள்ள சலுகைத்
தொகை அல்லது மூலதன மானியம்;
(i) ஈட்டுப் பங்கு;
0 கடன்கள்;
0) அரசின் பொறுப்புறுதி;
(V) மூன்றாம் தரப்புக் கணக்கை
ஆரம்பித்தலும் செயற்படுத்துதலும்;
i) நிலம் எதனையும் மேம்படுத்துவதற்கான
உரிமையை வழங்குதல்;
00) சட்டம் எதனின்படியும் விதிக்கப்பட்ட வரி
அல்லது கட்டணங்கள் எதனையும் செலுத்துவதில்
இருந்து விலக்களித்தல் அல்லது காலந்தாழ்த்திச்
செலுத்துதல் என்ற வகையிலான ஊக்கத்தொகைகள்
அல்லது விதிகளில் வகுத்துரைக்கப்படும் பிற
ஊக்கத்தொகைகள்;
(W) ஒப்பந்தப்புள்ளிச் சட்டம்" என்பது,
1998ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற
8
ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 431998)
எனப் பொருள்படும்;
(9 "பயனாளர் விதிப்பு என்பது, கட்டமைப்பு
வசதி ஒன்றின் பயனாளரால் செலுத்தப்படத்தக்க பயனாளர்
கட்டணம் அல்லது கட்டணத்தொகை அல்லது எந்தப்
பெயராலும் அழைக்கப்படுவதுமான பிற தொகை எதுவும்
எனப் பொருள்படும்.
அத்தியாயம் ॥
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்
3. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தை
நிறுவுதல்.- (1) இந்தச் சட்டம் தொடங்கியதற்குப் பின்பு,
கூடிய விரைவில், அரசானது, அறிவிக்கையின் மூலமாக
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் என:
அழைக்கப்படும் வாரியம் ஒன்றை, அறிவிக்கையில்
குறிப்பிடப்படும். அத்தகைய தேதியில் இருந்து
செயல்விளைவு கொள்ளும் வகையில் அமைக்கலாம்.
(2) வாரியத்தின் தலைமையகம் சென்னையில்
அமைதல் வேண்டும்.
(3) வாரியம் பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
(@) முதலமைச்சர், பதவி வழித் தலைவராக
இருத்தல் வேண்டும்;
(b) நிதித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள
அமைச்சர், பதவி வழித் துணைத் தலைவராக இருத்தல்
வேண்டும்;
1(6 அரசு தலைமைச் செயலாளர், பதவி வழி
உறுப்பினர்;
1. 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு(திருத்தச்)
சட்டத்தின் (சட்ட எண். 37/2022) 2ஆம் பிரிவினால் மாற்றாக
அமைக்கப்பட்டது.
9
(0) நிதித் துறையின் அரசு செயலாளர், பதவி
வழி உறுப்பினர் செயலாளராக இருத்தல் வேண்டும்;
மற்றும்
(6) வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர்,
பதவி வழி உறுப்பினர்]
4. வாரியத்தின் கூட்டங்கள்.- (1) வாரியம் குறிப்பிட்ட
காலத்திலும் இடத்திலும் கூடுதல் வேண்டும்; மற்றும்.
ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும். அத்தகைய
கூட்டங்களின் குறைவெண் உள்ளிட்ட, அதன்
கூட்டங்களில் அலுவல்களை நடத்துவதைப் பொறுத்த
அளவிலான அத்தகைய நடைமுறைவிதிகளைக்
கடைப்பிடித்தல் வேண்டும்.
(2) வாரியத்தின் தலைவர் அல்லது அவர்
வருகை தராதபோது, துணைத் தலைவர் மற்றும் இருவரும்
அதாவது தலைவரும் துணைத் தலைவரும் வருகை:
தராதபோது, வந்திருக்கும் உறுப்பினர்களால்
அவர்களுக்கிடையே இருந்து தெரிந்தெடுக்கப்படும்.
உறுப்பினர் எவரும் வாரியத்தின் கூட்டத்திற்குத்
தலைமை வகித்தல் வேண்டும்.
(3) வாரியத்தின் கூட்டம் ஒன்றில் எழும்
வினாக்கள் அனைத்தும் வந்திருந்து வாக்களிக்கும்
உறுப்பினர்களின் பெருபான்மையால் முடிவு
செய்யப்படுதல் வேண்டும் மற்றும் வாக்குகள் சமமாக
இருக்கும் நிலையில், தலைமை வகிக்கும் நபர், இரண்டாம்.
அல்லது அறுதி செய்யும் வாக்கு ஒன்றைப் பெற்றிருப்பார்.
(4) நிருவாகத் துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அமைச்சரும், நிருவாகத் துறையின் அரசு
செயலாளரும் வாரியத்தின். கூட்டங்களில் சிறப்பு
அழைப்பினர் ஆதல் வேண்டும்:
10
வரம்புரை: தலைமையாளரானவர் தான்:
தேவையெனக் கருதுகிற நபர் எவரையும் சிறப்பு
அழைப்பினராக அனுமதிக்கலாம்.
5. வாரியத்தின்: நடவடிக்கைகள்
செல்லத்தகாததாக ஆதல் கூடாது.-வாரியத்தின் செயல்
அல்லது நடவடிக்கைகள் எதுவும் அதன்:
உறுப்பினர்களிடையே காலியிடம் எதுவும் அல்லது அதன்
அமைப்பில் குறைபாடு எதுவும் இருக்கிறது என்ற
காரணத்திற்காக மட்டுமே செல்லத்தகாததாக ஆதல்
கூடாது.
6. வாரியத்தின் முதன்மை நிருவாக அலுவலர்,
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நியமனம்.-
(1)[வாரியத்திற்காக அரசினால் நியமிக்கப்பட்ட தலைமைச்
செயல் அலுவலர் ஒருவர் இருத்தல் வேண்டும்
(2) வாரியம் ™ இந்தச் சட்டத்தின்படி அதன்
செயற்பணிகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு
அத்தகைய பதவிகளை உருவாக்கலாம் மற்றும் அதற்குத்
தேவைப்படும் எண்ணிக்கையில் நபர்களை நியமிக்கலாம்.
(3) உட்பிரிவு (2)இன்படி நியமிக்கப்பட்ட
நபர்களின் சம்பளம், படித்தொகைகள் மற்றும் பணி
நிபந்தனைகள் ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும்
விதத்தில் இருத்தல் வேண்டும்.
1. 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு
மேம்பாட்டு(திருத்தச்)சட்டத்தின் (சட்டஎண்.37/2022) 3ஆம்
பிரிவினால் மாற்றாக அமைக்கப்பட்டது.
2. 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு(திருத்தச்)
சட்டத்தின் (சட்டஎண்.37/2022) 3ஆம். பிரிவினால்
விட்டுவிடப்பட்டது.
11
(4) வாரியத்தின் முதன்மை நிருவாக அலுவலர்,
வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்.
அனைவரின் மீதும் கண்காணிப்பு செய்வதற்கும்
கட்டுப்பாடு செய்வதற்குமான அதிகாரத்தைச் செலுத்துதல்
வேண்டும்.
7. வாரியத்தின். செயற்பணிகள்.- வாரியம்,-
(1) இம்மாநிலத்தில் உள்கட்டமைப்புத்
துறைகளின் மேம்பாடு குறித்த அரசின் முயற்சிகளை
ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டும் இணைப்பு
முகவாண்மையாகச் செயல்படுதல் வேண்டும்;
(2) செயற்திட்டங்களை அடையாளம்.
கண்டறிதல் அல்லது உருவாக்குதல் மற்றும் முன்னுரிமை
அளித்தல் அதன் வரிசை முறைகளைத் தீர்மானித்தல்
மற்றும் செயற்திட்டங்களின் தொகுதி ஒன்றை
இம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக அரசுக்குப்
பரிந்துரை செய்தல் வேண்டும்;
(3) செயற்திட்டங்களில் உள்ள சிக்கல்களை
அடையாளம் காணுதலும் அதனைச் சரி செய்வதற்கு
கொள்கை அளவிலான சிறப்பு முயற்சிகளைப் பரிந்துரை
செய்தலும் வேண்டும்;
(4) செயற்திட்ட இடர்களை இழப்புகளை
அடையாளம். காணுவதையும் பங்குதாரர்களிடையே
அவற்றை ஒதுக்கீடு செய்வதையும் உறுதிப்படுத்தும்
வகையில், | -_ஆம் இணைபப்புப்பட்டியலில்
குறித்துரைக்கப்பட்ட துறைகள் தொடர்பான
கொள்கைகளை உருவாக்குதல் வேண்டும்;
(5) தொடர்புடைய துறைகளுடனும்
நடைமுறைப்படுத்தும் முகவாண்மைகளுடனும்
ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும்;
12
(6) நடைமுறைப்படுத்த இயலச் செய்வது குறித்த
ஆய்வு அறிக்கைகள் மற்றும் விரிவான செயற்திட்ட
ஆய்வு அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை அக
நிலையிலோ அல்லது வெளியே உள்ள ஆலோசகர்கள்
அல்லது வல்லுநர்களின் மூலமோ தயாரித்தல் வேண்டும்;
(7) பொது முகவாண்மை ஒன்றின் மூலமாகக்
கருதப்பட்ட செயற்திட்டங்களைக் கூர்ந்தாய்வு செய்தலும்,
மதிப்பீடு செய்தலும், முன்னுரிமை அளித்தலும் மற்றும்.
அதை நடைமுறைப்படுத்துவதற்காக அரசுக்குப் பரிந்துரை
செய்தலும் வேண்டும்;
(8) செயற்திட்டங்கள். அனைத்திற்காகவும்
ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களுக்கான படிவத்தை
வகுத்துரைத்தல் வேண்டும்;
(9) பொதுத் துறை மூலமாக அல்லது பொது-
தனியார் கூட்டாண்மை ஒன்றின் மூலமாக செயற்திட்டம்
ஒன்றை நடைமுறைப்படுத்தும் பொது முகவாண்மையைப்
பெயர் குறிப்பிட்டு நியமித்தல் வேண்டும்;
(10) வாரியத்தால்: அடையாளம். காணப்படும்
செயற்திட்டங்களைப் பொறுத்த அளவிலான சலுகை
உடன்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்தல் வேண்டும்;
(11) தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு
நிதியின்கீழ் அரசிடமிருந்து அல்லது மைய அரசிடமிருந்து
பெறும் நிதி உதவியை மதிப்பீடு செய்தலும் அதற்குப்
பரிந்துரை செய்தலும் வேண்டும்;
(12) பொது-தனியார் கூட்டாண்மைச்
செயற்திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசுடனும், அரசு
முகவாண்மை எதனுடனும் மற்றும் ஆதரவளிக்கும்
முகவாண்மை எதனுடனும் ஒருங்கிணைந்து செயற்படுதல்
வேண்டும்;
13
(13) செயற்திட்டத் தயாரிப்பு நிதியை மேலாண்மை
செய்தலும் பயன்படுத்துதலும் வேண்டும்;
(14) அரசுத் துறைகளிலும் பொது
முகவாண்மைகளிலும் செயற்திட்டத்தை மதிப்பிடுதல்,
செயற்திட்ட மேலாண்மை, கொள்முதல், ஒப்பந்த
மேலாண்மை தொடர்பான துறைகள் ஆகியவற்றிற்கான
கட்டுமானங்களின் திறனை மேம்படுத்துதலும்.
மேற்பார்வையிடுதலும் வேண்டும்; மற்றும்
(15) அரசால் அதனிடம் ஒப்படைக்கப்படும் பிற
செயற்பணிகளை ஆற்றுதல் வேண்டும்.
8. வாரியத்தின் அதிகாரங்கள்.- வாரியம், இந்தச்
சட்டத்தின்படியான அதன். செயற்பணிகளை
நிறைவேற்றும் நோக்கத்திற்காகப் பின்வரும்
அதிகாரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
(8) பொது முகவாண்மை எதனையும் அல்லது
சலுகையுறரிமை பெற்றவரை அல்லது நபர் எவரையும்
செயற்திட்டம் எதனையும் குறித்த தகவல் எதனையும்
அளிக்குமாறு கோருதல்;
0) செயற்திட்டம் எதனையும் மற்றும் அதன்
செயல் திறன், செயற்பாடு மற்றும் மேலாண்மை
ஆகியவற்றையும் ஆய்வு செய்தலும்,
மேற்பார்வையிடுதலும் கண்காணித்தலும்; மற்றும்
(c) அதன் சொந்த நடைமுறைகளை
ஒழுங்குப்படுத்துதல்.
9. செயற்குழு.-- (1) வாரியத்தின் செயற்குழு ஒன்று
அமைந்திருத்தல் வேண்டும். இது வாரியத்தால் அதற்கென
ஒப்படைவு செய்யப்படும். அதிகாரங்களைச் செலுத்தி
வருதலும் செயற்பணிகளை ஆற்றிவருதலும் வேண்டும்.
(2) செயற்குழுவானது பின்வரும்
உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
14
(8) அரசின் தலைமைச் செயலாளர், பதவி வழி
தலைவராக இருத்தல் வேண்டும்;
(0) நிதித் துறை அரசு செயலாளர், பதவிவழி
உறுப்பினர்;
1 வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர்,
பதவி வழி உறுப்பினர்-செயலாளராக இருத்தல் வேண்டும்;
மற்றும்
(0) செயற்குழுவின் தலைவரால் நியமிக்கப்படும்.
நிதி, பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் அது போன்ற
புலங்களில் இரண்டு நபர்களுக்கும் மேற்படாத வல்லுநர்கள்
இருத்தல் வேண்டும்.]
(3) வல்லுநர்களின் நியமனத்திற்கான காலஅளவு
மற்றும் பணி வரையறைகள், நிபந்தனைகள் ஆகியன
ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும் விதத்தில்
இருத்தல் வேண்டும்.
10. செயற்குழுவின் கூட்டங்கள். (1)
செயற்குழுவானது, குறிப்பிட்ட காலத்திலும் இடத்திலும்
கூடுதல் வேண்டும் மற்றும் ஒழுங்குவிதிகளில் வகை
செய்யப்படும் கூட்டங்களின் குறைவெண் உள்ளிட்ட,
அதன் கூட்டங்களில் அலுவல்களை நடத்துவது குறித்த
நடைமுறை விதிகளைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
(2) செயற்குழுவின் தலைவர் வருகை
தராதபோது, வந்திருக்கும் உறுப்பினர்களுக்கிடையே
இருந்து தெரிந்தெடுக்கப்படும் உறுப்பினர் எவரும்
செயற்குழுவின் கூட்டத்திற்குத் தலைமை வகித்தல்
வேண்டும்.
1. 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு(திருத்தச்)
சட்டத்தின் (சட்ட எண்.37/2022) 4ஆம் பிரிவினால் மாற்றாக
அமைக்கப்பட்டது.
15
(3) செயற்குழுவின் கூட்டம் ஒன்றில் எழும்
வினாக்கள் அனைத்தும், வந்திருந்து வாக்களிக்கும்
உறுப்பினர்களின் பெரும்பான்மையால் முடிவு
செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் வாக்குகள் சமமாக
இருக்கும் நிலையில், தலைமை வகிக்கும் நபர், இரண்டாம்.
அல்லது அறுதி செய்யும் வாக்கு ஒன்றைப் பெற்றிருப்பார்.
(4) நிருவாகத் துறையின் அரசுச் செயலாளர்
செயற்குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராதல்
வேண்டும்.
(5 செயற்குழுவின் தலைவர், தான் தேவை
எனக் கருதக்கூடிய பிற நபர் எவரையும், செயற்குழுவின்.
கூட்டம் ஒன்றுக்கு வருகை தருமாறு அழைக்கலாம்.
11. செயற்குழுவின் நடவடிக்கைகள்
செல்லத்தகாததாக ஆதல் கூடாது.-செயற்குழுவின்
செயல் அல்லது நடவடிக்கைகள் எதுவும் அதன்
உறுப்பினர்களிடையே காலியிடம் எதுவும் அல்லது அதன்
அமைப்பில் குறைபாடு எதுவும் இருக்கிறது என்பதான
காரணத்திற்காக மட்டுமே செல்லத்தகாததாக ஆதல்
கூடாது.
12. பிற குழுக்களை அமைத்துருவாக்குதல்.-
வாரியம், அது தேவையெனக் கருதும் பிற குழுக்களை
அமைத்துருவாக்கி, அது தக்கது எனக் கருதும் தனது
அதிகாரங்களை அக்குழுக்களுக்கு ஒப்படைவு
செய்வதற்கான அதிகாரத்தைக் கொண்டிருத்தல்
வேண்டும். அத்தகைய குழுக்கள் வாரியத்தின்.
உறுப்பினர்களையும், வாறியம் ஒவ்வொரு நிலையிலும்
அது தக்கது எனக் கருதும் பிற நபர்கள் எவரும் இருப்பின்:
அவர்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.
13. அலுவல்சாரா உறுப்பினர்களுக்கும் சிறப்பு
அழைப்பினர்களுக்குமான ஊதியங்களும் படித்
தொகைகளும்.-வாரியத்தின் அல்லது அதன் குழுக்கள்:
16
எதனின் அலுவல்சாரா உறுப்பினர்கள் மற்றும் வாரியத்தின்
அல்லது அதன். குழுக்கள் ஏதொன்றின்
கூட்டங்களுக்கான சிறப்பு அழைப்பாளர்கள்
ஆகியோருக்கு விதிகளில் வகுத்துரைக்கப்படும்
ஊதியங்களும் படித்தொகைகளும் வழங்கப்படுதல்:
வேண்டும்.
அத்தியாயம் -॥
செயற்திட்டத்தை அடையாளம் காணுதல், முன்னுரிமை
அளித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்
14. செயற்திட்டத்தை அடையாளம். காணுதல்
மற்றும் அதற்கு முன்னுரிமை அளித்தல்.- (1) வாரியம்,
தனது சொந்த முடிவின் பேறிலோ அல்லது ஆய்வு
நடத்துமாறு ஆவனச் செய்யப்பட்ட ஆய்வு அல்லது
மதிப்பாய்வின் பேரறிலோ அல்லது மூன்றாம் தரப்பினரிடம்
இருந்து பெறப்பட்ட தகவலின் பேரிலோ இந்த மாநிலத்தில்
மேம்படுத்தப் படவேண்டிய, மேலாண்மை
செய்யப்படவேண்டிய மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய
செயல்திட்டம் ஒன்றை அடையாளம் காணுதல் வேண்டும்
அல்லது திட்டமிடுதலின் பேரில் அதனோடு தொடர்புடைய
பொது முகவாண்மையின் கருத்துக்களை நாடுதல்
வேண்டும்:
வரம்புரை: பொது முகவாண்மையானது அதன்
கருத்துகளை, வாரியத்திடமிருந்து மேற்சொன்ன தகவல்
பெற்ற தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்
அளிக்கவில்லையெனில், அந்தப் பொது
முகவாண்மையிடத்தில் அளிப்பதற்கான கருத்துகள்
எதுவும் இல்லை எனக் கருதப்படுதல் வேண்டும்.
(2) பொது முகவாண்மை எதுவும் இந்த
மாநிலத்தில் மேம்படுத்தப்பவேண்டிய மேலாண்மை
செய்யப்பட வேண்டிய மற்றும் செயற்படுத்தப்படவேண்டிய
செயற்திட்டம் ஒன்றை அடையாளம் காணலாம் அல்லது
17
அதற்காகத் திட்டமிடலாம்; மற்றும் வாரியத்திற்கு அதன்.
பரிந்துரைக்காக அதற்கான கருத்துரையை அனுப்பி
வைக்கலாம். வாரியம் அக்கருத்துரையைக் கூர்ந்தாய்வு
செய்தல் மற்றும் மதிப்பிடுதல் வேண்டும்; மேலும், வாரியம்
ஒன்றுக்கு மேற்பட்ட அத்தகைய கருத்துக்கள்
வந்திருக்கிறபோது அவற்றை முன்னுரிமை
அடிப்படையில் வரிசைப்படுத்துதல் வேண்டும்.
(3) வாரியம், உட்பிரிவு (1)இன்படி பொது
முகவாண்மையின் கருத்துகள் வரப்பெற்றதன் பேரில்
அல்லது உட்பிரிவு (2)இன்படி பொது முகவாண்மை
எதனிடமிருந்தும் அதன் கருத்துரை வரப்பெற்றதன் பேரில்
அது பின்வரும் காரணிகளைக் கருத்திற்கொண்டு ஆய்வு
செய்தல் வேண்டும், அதாவது:-
() சமூக-பொருளதார மதிப்பு-ஆதாயம்
உள்ளிட்ட செயற்திட்டத்தின் மதிப்பு-
ஆதாயப் பகுப்பாய்வு;
(1) ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும்
பண் மதிப்பிற்கான பரிசோதனை
ஒன்றுடன் பொது-தனியார்
கூட்டாண்மை மூலமாக
நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும்
செலவு மதிப்பு;
(1) செயற்திட்ட நிறைவேற்ற
அளவுகோல்களை திட்டவட்டமாகக்
குறித்துரைப்பதற்கும் அவற்றின்
பலன்களை அளவிடுவதற்குமான
சாத்தியக்கூறு;
0) தனியார் துறைப் பங்கெடுப்பாளருடன்
டர்களைப் பங்கிட்டுக்
கொள்வதற்கான சாத்தியக்கூறு;
18
0) தனியார் துறைப் பங்கெடுப்பின்.
காரணமாக சேர்ந்தடையக்கூடிய
தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை
சார்ந்த நண்மைகள்; மற்றும்
(vi) தணியார் துறைப் பங்கெடுப்பாளரால்
செய்யப்படும் முதலீட்டைப்
பாதிக்கக்கூடிய சமூக-பொருளாதார
காரணிகள்.
(4) வாரியம், நடைமுறைப்படுத்த சாத்தியக் கூறு
குறித்த ஆய்வை செய்வதற்கு ஆவன செய்து, கருதப்பட்ட
செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்க்கு
இயலச் செய்கிற சாத்தியக்கூறு குறித்து நிறைவு
கொண்ட பின்பு, அது பொதுத் துறை மூலமாக
நடைமுறைப்படுத்தக் கூடியதா அல்லது பொது-தனியார்
கூட்டாண்மை மூலம் நடைமுறைப்படுத்தக் கூடியதா
என்பது குறித்து திட்டவட்டமாகக் குறிப்பிட்டு அதனை
அரசுக்குப் பறிந்துரைத்தல் வேண்டும்.
(5) வாரியம், உட்பிரிவு (4)இன்படி
பரிந்துரைக்கப்படும் செயற்திட்டங்களின் விவரங்களை
விதிகளில் வகுத்துரைக்கப்படும் விதத்தில் அதன்
வலைதளத்திலும். மற்றும் அத்தகைய பிற
வலைதளங்களிலும் வெளியிட ஆவன செய்தல்
வேண்டும்:
வரம்புரை: வாரியம் எழுத்து வடிவில் பதிவு
செய்யப்படவேண்டிய காரணம் எதற்காகவும், செயற்திட்டம்
ஒன்றின் விவரக்குறிப்புகளை வெளியிடாமல்
இருப்பதற்குத் தேர்வு செய்யலாம்.
(6) உட்பிரிவு (4)இன்படி செயற்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்கான கருத்துருவைப்
பெற்றதன்பேரில், அரசானது. அதனைப் பரிசீலனை
செய்தல் வேண்டும்; மற்றும் அதனை
19
நடைமுறைப்படுத்தும். செயல்வகை உள்ளிட்ட
செயற்திட்டத்தின் பேரிலான அதன் முடிவை வழக்கமாக
முப்பது நாட்களுக்குள்ளாக வாரியத்திற்குத் தெரிவித்தல்
வேண்டும்.
15. பொதுத் துறை மூலமாக செயற் திட்டத்தை
நடைமுறைப்படுத்துதல்.- (1) பொதுத்துறை மூலமாக
நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அரசால் முடிவு
செய்யப்படும் செயற்திட்டத்தைப் பொறுத்த அளவில்,
வாரியம், பொது முகவாண்மையைக் குறிப்பிட்டுத்
தெரிவித்தல் வேண்டும். அது, அந்தச் செயற்திட்டத்தை
நடைமுறைப்படுத்துதல் வேண்டும்; அதனை நடைமுறைப்
படுத்துவதற்கான பணிப்புரையை வழங்குதல் வேண்டும்;
மற்றும் நடைமுறைப்படுத்துதலின் வளர்ச்சியை
மேற்பார்வையிடுதல் வேண்டும்.
@) 1
16. பொது தனியார் கூட்டாண்மை மூலம்
செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல். பொது-
தனியார் கூட்டாண்மை மூலமாக நடைமுறைப்படுத்தப்பட
வேண்டும் என அரசால் முடிவு செய்யப்படும்
செயற்திட்டங்களைப் பொறுத்த அளவில், வாரியம் கருதும்
அந்தச் செயற்திட்டத்தின். விவரக்குறிப்புகளை,
ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும் படிவத்திலும்
முறையிலும், மறுப்புரைகளையும் கருத்துரைகளையும்
வரவேற்கும் வகையில் ஆதரவளிக்கும் முகவாண்மை
வெளியிடுவதற்கு ஆவன செய்தல் வேண்டும்.
ஆதரவளிக்கும் முகவாண்மையானது பெறப்பட்ட
மறுப்புகள் மற்றும் கருத்துகள் ஏதும் இருப்பின் அவற்றின்:
அப்படையில் அறிக்கை ஒன்றைத் தயார் செய்து,
ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும் காலஅளவிற்குள்.
வாரியத்திற்குப் பணிந்தனுப்புதல் வேண்டும்.
1. 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு
மேம்பாட்டுத்(திருத்தச்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்ட எண்.37/2022)
5ஆம் பிரிவினால் விட்டுவிடப்பட்டது.
20
17. விரிவான செயற்திட்ட ஆய்வு மற்றும்
செயற்திட்டத்தை வடிவமைத்தல்.- (1) வாரியம், பிரிவு
16இன்படி ஆதரவளிக்கும் முகவாண்மையிடமிருந்து
அறிக்கையைப் பெற்றதன்பேரில், நிருவாகத் துறையுடன்
கலந்து ஆலோசித்து அதனைப் பரிசீலித்தல் வேண்டும்;
மற்றும் விரிவான செயற்திட்ட ஆய்வினைச் செய்ய
ஆவன செய்த பின்பு, மேலும் அது தேவை எனக்
கருதுமானால் அந்தச் செயற்திட்டத்தின். வாய்ப்பு
எல்லைகளையும், அமைப்பையும், அதன். அசல்
வடிவத்திலோ அல்லது அது தக்கது எனக் கருதும்
மாற்றங்களுடனோ பின்வரும் காரணிகள் அதாவது:-
@ செயற்திட்டத்திற்குப் பொது நிதியுதவி
எதுவும் தேவைப்படுமா என்பது அவ்வாறு என்றால்
அத்தகைய உதவியின் உரிய படிவத்தை ;
௦) ஒப்பந்தப்புள்ளி அளவை அல்லது
ஒப்பந்தப்புள்ளியை மதிப்பிடுவதுடன் தொடர்புடைய
மாறுபாடுகளை மற்றும்;
(9) ॥- ஆம் இணைப்புப்பட்டியலில்
வரிசைப்படுத்தப் பட்டவற்றிலிருந்து உரிய சலுகை
உடன்பாடுஅல்லது அதன் இணைப்பமைவு ஒன்றைக்,
கவனத்தில் கொண்டு அறுதி செய்தல் வேண்டும்.
18. செயற்திட்டங்களுக்காக கொள்முதல் செய்யும்
அமைப்பு.- (1) செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்
படுத்துவதற்கு வாரியத்தால் பெயர் குறித்து நியமிக்கப்படும்
பொது முகவாண்மை ஒவ்வொன்றும், ஒப்பந்தப்புள்ளிச்
சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 431998) கொள்முதல்
செய்யும் அமைப்பாக இருத்தல் வேண்டும்:
வரம்புரை: வாரியம் விதிகளில் வகுத்துரைக்கப்படும்
செயற்திட்டத்தின் வகை எதற்கும் ஒப்பந்தப்புள்ளிச்
சட்டத்தின்படி கொள்முதல் செய்யும் அமைப்பாக
இருக்கலாம்.
21
(2) இந்தச் சட்டத்தின்படியான கொள்முதல்
எதுவும், கொள்முதல் செய்யும் அமைப்பால்
ஒப்பந்தப்புள்ளிச் சட்டத்தில் அடங்கியுள்ள
வகைமுறைகளைப் பின்பற்றிச் செய்யப்பட்ட
ஒப்பந்தப்புள்ளி மூலமாக அல்லாமல் பிறவாறு
செய்யப்படுதல் கூடாது.
(3) ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள்,
ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும் படிவத்திலும்
முறையிலும் இருத்தல் வேண்டும்:
வரம்புரை: ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும்
செயற்திட்டத்தின் வகை எதற்காகவும் கொள்முதல்
செய்யும் அமைப்பானது ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை
வாரியத்தின் முன் அனுமதிக்காகப் பணிந்தனுப்புதல்
வேண்டும்.
(4) கொள்முதல் செய்யும் அமைப்பானது,
வாரியத்தால் அடையாளம் கண்டறியப்பட்ட
செயற்திட்டங்களைப் பொறுத்த அளவில்,
ஒப்பந்தப்புள்ளியானது ஏற்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரரின்:
பெயரையும் முகவரியையும் வாரியத்திற்குத் தெரிவித்தல்
வேண்டும்; மற்றும் அத்தகைய ஒப்பந்ததாரருடன்
மேற்கொள்ளப்படவேண்டிய சலுகை உடன்பாட்டின்பேரில்
அதன் ஒப்புதலையும் பெறுதல் வேண்டும்.
19. செயற்திட்ட மேலாளர் மற்றும் வல்லுநர்களை
நியமனம் செய்தல்.- (1) வாரியம், அது தேவை எனக்
கருதுமானால், பொது-தனியார் கூட்டாண்மைச்
செயல்வகைகள், நடைமுறைகள் ஆகிய பணிகளில்
அறிவும் அனுபவமும் பெற்றிருக்கிற நபர் ஒருவரை,
ஒழுங்கு விதிகளில் வகுத்துரைக்கப்படும் காலஅளவிற்கு,
பொது தனியார் கூட்டாண்மைச் செயற்திட்டம் ஒன்றுக்கு
செயற்திட்ட மேலாளராக நியமிக்க ஆதரவளிக்கும்
முகவாண்மையினைப் பணித்தல் வேண்டும்.
22
செயற்திட்டத்தின் மேலாண்மையையும் ஒப்பந்தப்
புள்ளியையும் பொறுத்த அளவில், செயற்திட்ட மேலாளர்
பொறுப்புடையவர் ஆதல் வேண்டும்.
(2) செயற்திட்ட மேலாளர் நியமிக்கப்பட்டுள்ள
பொது-தனியார் கூட்டாண்மைச் செயற்திட்டத்தில்
ஆதரவளிக்கும் முகவாண்மையானது, இடர் மேலாண்மை,
எதிர்பாரா நிகழ்வுகளுக்காகத் திட்டமிடுதல், தர
உறுதிப்பாடு, செயல்திறன் மேலாண்மை, பொதுத்துறைக்
கணக்கெடுப்பு செய்தல், நிதி மேலாண்மை ஆகிய
புலங்களில் திறமை உடையவராயிருக்கிற அந்த
முகவாண்மையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்
அலுவலர்களின் சேவைகள், அந்தச் செயற்திட்ட
மேலாளருக்கு உதவும் வகையில் கிடைக்கச் செய்தல்
வேண்டும்:
வரம்புரை: ஆதரவளிக்கும் முகவாண்மையிடத்து
புலம் ஒன்றைப் பொறுத்த அளவில் வல்லுநர்
இல்லையென்றால், அம்முகவாண்மையானது தொழிலில்
பயிற்சி பெற்ற ஆலோசகர் ஒருவரது சேவைகளைப்
பெறலாம்.
20. செயற்திட்ட மேலாண்மை வசதி அமைப்பு.
அரசானது, அறிவிக்கையின். மூலமாக,
ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும் எண்ணிக்கையில்
அத்தகைய தகுதியுடைய உறுப்பினர்களைக் கொண்ட
செயற்திட்ட மேலாண்மை வசதி என அழைக்கப்படும்
முகவாண்மை ஒன்றை, செயற்திட்டம் எதனின்
மேலாண்மைக்காகவும் கண்காணிப்பிற்காகவும்
அமைத்துருவாக்கலாம், அந்தச் செயற்திட்ட மேலாண்மை
வசதி அமைப்பானது, ஒழுங்குவிதிகளில்
வகுத்துரைக்கப்படும் அத்தகைய அதிகாரங்களைச்
செலுத்துவதுடன், பணிகளையும் ஆற்றுதலும் வேண்டும்.
23
21. செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துதலை
மேற்பார்வையிடுதல்.- ) வாரியம், சலுகையுரிமை
உடன்பாடுகளின் நிறைவேற்றம் உள்ளிட்ட
செயற்திட்டங்கள். அனைத்தும்
நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுதல்
வேண்டும்.
(2) வாரியம், மேற்சொன்ன நோக்கத்திற்காக,-
(@) ஆதரவளிக்கும் முகவாண்மையிடமிருந்து
ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும் படிவத்திலும்
முறையிலும் காலமுறைப்படியான அல்லது தனி
அறிக்கைகளைப் பணிந்தனுப்பக் கோரலாம்;
(௦) ஆதரவளிக்கும் முகவாண்மைக்கு
ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும் படிவத்திலும்
முறையிலும் செயற்திட்டம் ஆவணப்படுத்துவதைத்
தொடர்ந்து பேணி வருவதற்கான பணிப்புரைகளை
வழங்கலாம்; மற்றும்
(9) ஆதரவளிக்கும் முகவாண்மைக்கு அது
தக்கது எனக் கருதும் அத்தகைய பிற பணிப்புரைகளையும்
வழங்கலாம்.
(3) வாரியம், செயற்திட்டங்கள் தமது
குறிக்கோள்களை அடைவதற்குத் தவறுவதாகத்
தோன்றும் போது, அவற்றைத் திருத்தி அமைக்கும்
நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை அரசுக்குச்
செய்யலாம்.
22. உள்கட்டமைப்புத் தீர்வை, பயனாளர்
கட்டணங்கள் மற்றும் கட்டணத் தொகைகள்.- (1)
அரசானது, விதிகளில் வகுத்துரைக்கப்படும் அத்தகைய
விதங்களிலும் அத்தகைய காலஅளவிற்கும் கட்டமைப்புத்
தீர்வையினை விதிக்கலாம்.
24
(2) வாரியம், கட்டமைப்பு வசதியின்:
பயனாளர்களின்: விதிகளில் வகுத்துரைக்கப்படும்
அத்தகைய வீதங்களில் பயனாளர் கட்டணங்களையும்,
வழங்கப்படும். சேவைகளுக்கான
கட்டணத் தொகைகளையும் விதிக்கலாம்.
23. தவறானப் பயன்பாட்டிற்கான கட்டணம் -வாரியம்,
விதிகளில் வகுத்துரைக்கப்படும் அத்தகைய விதத்தில்
சலுகை உடன்பாட்டில் இசைந்து அளிக்கப்பட்ட உரிமை
எதனின் தவறான பயன்பாட்டிற்காக, சலுகை பெற்றவர்
ம்து தவறான பயன்பாட்டிற்கான கட்டணத்தை
விதிக்கலாம்:
வரம்புரை: அந்தச் சலுகை உரிமை பெற்றவருக்கு
அத்தகைய கட்டண விதிப்பிற்கு எதிராகக் காரணம்
காட்டுவதற்கான நியாயமானதொரு வாய்ப்பு
வழங்கப்பட்டால் தவிர அத்தகைய தவறான
பயன்பாட்டிற்கான கட்டணம் எதுவும் விதிக்கப்படுதல்
கூடாது.
அத்தியாயம் IV
நிதி, கணக்குகள் மற்றும் தணிக்கை
24, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி.- (1)
அரசானது, அறிவிக்கையின் மூலமாக, விதிகளில்
வகுத்துரைக்கப்படும் விதத்தில், அரசால் பங்களிப்புச்
செய்யப்படும் அத்தகைய கதொகையினை தொடக்க
மூலதனமாகக் கொண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு
மேம்பாட்டு நிதி என அழைக்கப்படும் நிதி ஒன்றை
அமைத்துருவாக்குதல் வேண்டும்.
(2) அந்நிதியானது, அரசால் அவ்வப்போது
அந்நோக்கத்திற்காக செய்யப்படும் மானியங்களுடனும்.
உள்கட்டமைப்புத் தீர்வையாக வசூலிக்கப்படும் அந்தத்
தொகையுடனும் வரவு வைக்கப்படாலம்.
25
(3) அந்நிதியானது பொது
அமைப்புகளிடமிருந்தோ பன்முகக் கடன் வழங்கும்
முகவாண்மைகளிடமிருந்தோ அல்லது பிற நிதி
நிறுவனங்களிடமிருந்தோ பெறப்படும் பங்களிப்புகளுடன்:
வரவு வைக்கப்படலாம்.
(4) அந்நிதியானது வாரியத்தின் பரிந்துரையுடன்.
செயற்திட்டங்களின் வடிவம், மேம்பாடு, வேலைப்பாடு,
நிருவாகம், மேலாண்மை ஆகியவற்றை வசதி செய்வதற்கு
நிதி உதவி வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படுதல்
வேண்டும். மேலும் அந்நிதியானது விதிகளில்
வகுத்துரைக்கப்படும் பிற நோக்கங்களுக்காகவும்
பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
(5 அந்நிதியானது விதிகளில்
வகுத்துரைக்கப்படும் முறையில் அரசால்
நிருவகிக்கப்படுதலும் பயன்படுத்தப்படுதலும் வேண்டும்.
25. செயற்திட்டத் தயாரிப்பு நிதி.- (1) அரசானது,
அறிவிக்கையின் மூலமாக, அந்த அறிவிக்கையில்
குறிப்பிடப்படும் தொகையினைத் தொடக்க மூலதனமாகக்
கொண்டு செயற்திட்டத் தயாரிப்பு நிதி என அழைக்கப்படும்
நிதி ஒன்றை அமைத்துருவாக்குதல் வேண்டும்.
(2) அந்த நிதியானது, அரசால் அவ்வப்போது
அந்த நோக்கத்திற்காகச் செய்யப்படும் மானியங்களுடனும்,
கட்டணத்தொகைகள், பயனாளர் கட்டணங்கள், தவறான
பயன்பாட்டிற்கான கட்டணங்கள். என்பதாக
வசூலிக்கப்படும் தொகைகளுடனும் வரவு
வைக்கப்படலாம்.
(3) அரசின் முன்அனுமதியுடன், அந்த
நிதியானது பொது அமைப்புகளிடமிருந்தோ பன்முகக்
கடன் வழங்கும் முகவாண்மைகளிடமிருந்தோ அல்லது
பிற நிதி நிறுவனங்களிடமிருந்தோ பெறப்படும்.
பங்களிப்புகளுடன் வரவு வைக்கப்படலாம்.
26
(4) இந்நிதி ஆய்வுகளை நடத்துதல்,
வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்களின் சேவைகளைப்
பெறுதல், நடைமுறை சாத்தியம் குறித்த ஆய்வுகள்,
விரிவான செயற்திட்ட ஆய்வுகள் ஆகியவற்றைத்
தயாரித்தல், தகுதியை வளர்த்துக்கொள்ளுதல், ஆராய்ச்சி
மற்றும் விதிகளில் வகுத்துரைக்கப்படும் பிற
நோக்கங்களுக்காக நிதி உதவியை வழங்குவதற்குப்
பயன்படுத்தப்படலாம்.
(5) இந்த நிதி, விதிகளில் வகுத்துரைக்கப்படும்
முறையில் வாரியத்தால் மேலாண்மை செய்யப்படுதலும்
பயன்படுத்தப்படுதலும் வேண்டும்.
26. கணக்குகள் மற்றும் தணிக்கை.- (1) வாரியத்தின்.
கணக்குகள், விதிகளில் வகுத்துரைக்கப்படும் முறையிலும்
அத்தகைய படிவத்திலும் பேணிவரப்படுதல் வேண்டும்.
(2) வாரியம் விதிகளில் வகுத்துரைக்கப்படும்
படிவத்தில் கணக்குகளுக்கான ஆண்டறிக்கை ஒன்றைத்
தயார் செய்தல் வேண்டும்.
(3) வாரியத்தின். கணக்குகள். ஆண்டுக்கு
ஒருமுறை, 1956ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின்
(மையச் சட்டம் 174956) பிரிவு 226இன்படி நிறுமம்
ஒன்றின் தணிக்கையாளராகச் செயல்படுவதற்குரிய
தகுதிவாய்ந்த நபர் ஒருவரால் தணிக்கை செய்யப்படுதல்
வேண்டும்.
(4) வாரியத்தின் கணக்குகள் தணிக்கையாளரால்
தணிக்கை அறிக்கையுடன் சான்றிதழ் அளிக்கப்பட்டவாறு,
வாரியத்தின் குறிப்புரைகளும் சேர்க்கப்பட்டு விதிகளில்
வகுத்துரைக்கப்படும் காலத்திற்குள் அரசுக்கு அனுப்பி
வைக்கப்படுதல் வேண்டும்.
(5) அரசானது, ஆணையின் மூலமாக,
தணிக்கை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட
27
குறைபாடுகள் எவையேனும் இருந்தால், அதில்
குறித்துரைக்கப்படும். காலத்திற்குள்: அவற்றைச்
சீர்ப்படுத்துவதற்கு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்ட
நடவடிக்கையை எடுக்குமாறு வாரியத்தைப் பணிக்கலாம்;
மற்றும் வாரியம் அத்தகைய பணிப்புரைக்கு இணங்கி
நடத்தல் வேண்டும்.
27. ஆண்டறிக்கை.- (1) வாரியம் ஒவ்வொரு
நிதியாண்டும் முடிவுற்ற பின்பும், கூடிய விரைவில்,
விதிகளில் வகுத்துரைக்கப்படும் தேதிக்கு முன்னரும்
அத்தகைய படிவத்திலும், முந்தைய ஆண்டின் போதான
அதன் நடவடிக்கைகள் பற்றிய விவரக் குறிப்பினை
வழங்கும் அறிக்கை ஒன்றைத் தயாரித்து அரசுக்குப்
பணிந்தனுப்புதல்: வேண்டும்; மேலும் அந்த
அறிக்கையானது வாரியத்தால் நடப்பு நிதி ஆண்டில்
மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் ஏதும்
இருப்பின் அந்த நடவடிக்கைகள் குறித்த விவரக்குறிப்பு
ஒன்றை வழங்குதல் வேண்டும்.
(2) அரசானது, உட்பிரிவு (1)இன்படி
அறிக்கையைப் பெற்றதற்குப்பின்பு, கூடிய விரைவில்,
அத்தகைய அறிக்கை ஒவ்வொன்றையும்
சட்டமன்றப் பேரவையின் முன்பு வைப்பதற்கு ஆவன
செய்தல் வேண்டும்.
அத்தியாயம் V
பல்வகைப்பட்டவை
28. உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள்.
ஆகியோர் பொது ஊழியர்கள் ஆவர்.- இந்தச் சட்டத்தின்
வகைமுறைகள் எதனையும் ஒட்டிச் செய்யப்பட்ட அல்லது
இந்தச் சட்டத்தின்படிச் செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட விதி அல்லது ஒழுங்குவிதி அல்லது
ஆணை அல்லது பணிப்புரை எதனின்: கீழும்
செயற்படுகின்ற அல்லது செயற்படுவதாகப் புலப்படுகின்ற,
28
வாரியத்தின் தலைவர், துணைத் தலைவர் , உறுப்பினர்கள்,
உறுப்பினர்-செயலாளர், அலுவலர்கள். மற்றும்
பணியாளர்கள். ஆகியோர் இந்தியத் தண்டனைச்
சட்டத்தின்(மையச் சட்டம் XLV/1860) பிரிவு 21 இன்படி
பொருள்வரையறைக்குள் வரும் பொது ஊழியர்களாகக்
கருதப்படுதல் வேண்டும்.
29. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.- இந்தச் சட்டத்தின்படி
நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட எதனையும் அல்லது
செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட எதனையும் அல்லது
இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட விதி அல்லது ஒழுங்குவிதி அல்லது
ஆணை அல்லது பணிப்புரை எதனையும் பொறுத்த
அளவில், உரிமைவழக்கு அல்லது பிற சட்ட
நடவடிக்கைகள் எதுவும், அரசுக்கு, வாரியத்திற்கு அல்லது
அதன் உறுப்பினர் எவருக்கும் அல்லது அலுவலர் அல்லது
பணியாளர் எவருக்கும் அல்லது அரசின் அல்லது
வாரியத்தின் பணிப்புரையின் கீழ் செயல்படுகின்ற நபர்
எவருக்கும் எதிராகத் தொடுக்கப்படுதல் கூடாது.
30௦. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1)
அரசானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை
நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.
(2) குறிப்பாகவும் முன்சொன்ன அதிகாரத்தின்:
பொதுத் தன்மைக்கு ஊறின்றியும் அத்தகைய
விதிகளானவை பின்வரும் விவரங்கள் அனைத்திற்கும்
அல்லது அவற்றுள் ஏதொன்றுக்கும் வகைசெய்யலாம்,
அதாவது:-
(ஐ பிரிவு 14இன்படி வாரியத்தினால்
நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட
செயற்திட்டங்களின் வரிசைப்பட்டியலானது எந்த
வலைதளங்களில் வெளியிடப்படுதல் வேண்டும்;
29
(b) அரசு மானியம் வழங்குவதற்கான
செயற்திட்ட மதிப்பின் விதம்;
(௦9) மாநில அரசின் ஆதரவாக சலுகை
பெற்றவருக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்படலாம்
என்பது குறித்து;
(0) செயற்குழுவில் உள்ள வல்லுநர்களின்
பதவிக்காலஅளவு மற்றும் அவர்களின் நியமனத்திற்கான
வரையறைகளும் நிபந்தனைகளும்;
(6) வாரியத்தின் அல்லது அதன் குழுக்கள்
ஏதொன்றின் அலுவல்சாரா உறுப்பினர்களுக்கு அல்லது
வாறியம அல்லது அதன் குழுக்கள் ஏதொன்றின்.
கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பினராகும் நபர்களுக்கு
செலுத்தப்படத்தக்க கட்டணங்களும் படித்தொகைகளும்;
() ஒப்பந்தப்புள்ளிச் சட்டத்தின்படி கொள்முதல்
செய்யும் அமைப்பாக வாரியம் இருத்தல் வேண்டும்
என்பதான செயற்திட்டங்களின் வகைகள்;
(@ கட்டமைப்புத் தீர்வையானது
விதிக்கப்படக்கூடிய விதமும் காலஅளவும்;
0) வாரியமானது கட்டணத்தொகைகள்,
பயனாளர் கட்டணங்கள், தவறான பயன்பாட்டிற்கான
கட்டணம் ஆகியவற்றை விதிக்கக்கூடிய விதம்;
0) தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு
நிதியும், செயற்திட்ட தயறிப்பு நிதியும்
பயன்படுத்தப்படுவதற்கான நோக்கங்கள்;
0 தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு
நிதியும், செயற்திட்ட தயாரிப்பு நிதியும் மேலாண்மை
செய்யப்பட வேண்டிய மற்றும் பயன்படுத்தப்படவேண்டிய
முறை;
30
(k) வாரியத்தால் கணக்குகள் பேணிவரப்பட
வேண்டிய முறையும் படிவமும்;
0) வாரியத்தின் கணக்குகளின் ஆண்டறிக்கை
தயாரிக்கப்பட வேண்டிய படிவம்;
m) வாரியத்தால் கணக்குகளும் தணிக்கை
அறிக்கையும் அரசுக்கு அனுப்பப்பட வேண்டிய கால வரம்பு;
) வாரியத்தால் அரசுக்குப் பணிந்தனுப்பப்பட
வேண்டிய ஆண்டறிக்கையின் படிவமும் காலவரம்பும்;
(௦) விதிகளில் வகைசெய்யப்படப வேண்டிய
அல்லது வகைசெய்யப்படக்கூடிய பிற விவரம் எதுவும்.
31. ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
(1) வாரியம், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கும்
அதன்படிச் செய்யப்பட்ட விதிகளுக்கும் இணங்கிய
வகையில் ஒழுங்கு விதிகளைச் செய்யலாம்.
(2) குறிப்பாகவும் மேற்சொன்ன அதிகாரத்தின்.
பொதுத் தன்மைக்கு ஊறின்றியும் அத்தகைய
ஒழுங்கு விதிகள் பின்வரும் விவரங்கள்
அனைத்திற்கும் அல்லது அவற்றில் ஏதொன்றுக்கும்
வகைசெய்யலாம், அதாவது:-
(@) நடைமுறையில் சாத்தியமான ஆய்வு மற்றும்
விரிவான செயற்திட்ட ஆய்வின் மூலமாகக்
கணிக்கப்படக்கூடிய அல்லது உறுதிபடுத்தக்கூடிய தகவல்;
(௦) வாரியத்தின் அலுவலர்களையும்
பணியாளர்களையும் நியமிப்பதற்காக
உருவாக்கப்படக்கூடிய பதவிகள், அவர்களின் சம்பளம்,
படித்தொகைகள் மற்றும் பணி நிபந்தனைகள்;
(௦9) ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களின் படிவமும்
முறையும் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள்
31
வாரியத்தின் முன்அனுமதியைக் கோருகின்ற
செயற்திட்டங்களின் வகை;
(0) வாரியத்தின். மற்றும் செயற்குழுவின்
கூட்டங்களுக்கான காலஅளவும் இடமும் மற்றும்
அத்தகைய கூட்டங்களில் நடத்தப்படும் அலுவல் குறித்து
பிண்பற்றப்பபவேண்டிய நடைமுறை, அத்தகைய
கூட்டங்களுக்கான குறைவெண் வரம்பு;
(6) செயற்திட்டதின் செயலாக்கச் செலவினை
ஒப்பு நோக்கும் பொருட்டு பொதுத் துறை வழியாக மற்றும்
பொது தனியார் கூட்டாண்மை வழியாக "பணத்திற்கான
மதிப்பு௧் சோதனை" குறித்து கண்டறிந்து செலவுக்கேற்ற
பலன் தரும் செயலாக்க வழியினை ஏற்றுக் கொள்ளுதல்;
) பிரிவு 16 இன்படி ஆதரவளிக்கும்
முகவாண்மையால் கருதப்பட்ட செயற்திட்டத்தின்
விவரங்கள் வெளியிடப்படவேண்டிய படிவமும் முறையும்;
@) பிரிவு 16இன்படி ஆதரவளிக்கும்
முகவாண்மையானது வாரியத்திற்கு அறிக்கை ஒன்றைப்
பணிந்தனுப்ப வேண்டிய காலஅளவு;
(h) செயற்திட்ட மேலாளராக நியமனம் செய்யப்
படுவதற்கான அனுபவத்தின் காலஅளவு;
(i) செயற்திட்ட மேலாண்மை வசதிக்கான
உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர்களது தகுதிகள்,
அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகள்;
0) பிரிவு 21இன்படி ஆதரவளிக்கும்
முகவாண்மையால் வாரியத்திற்குப் பணிந்தனுப்பப்படும்.
காலமுறைப்படியான மற்றும் தனி அறிக்கைகளின்
படிவமும் முறையும்;
k) ஒழுங்குவிதிகளில் வகை
செய்யப்படவேண்டிய அல்லது வகைசெய்யப்படக்கூடிய
பிற விவரம் எது குறித்தும்.
32
32. இணைப்புப்பட்டியல்களைத் திருத்துவதற்கான
அதிகாரம்.- அரசானது, இந்தச் சட்டத்தின்
இணைப்புப்பட்டியல்கள் எதனையும் தமிழ்நாடு அரசிதழில்
அறிவிக்கை செய்வதன் மூலமாகத் திருத்தலாம்.
33. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில்
இடர்ப்பாடு எதுவும் எழுமானால், அரசானது, அந்த
இடர்ப்பாட்டை நீக்கும் நோக்கத்திற்காகத்
தேவையானதாகவோ அல்லது உகந்ததாகவோ
தனக்குத்தோன்றுகிற இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய
வகைமுறையை அறிவிக்கையின் மூலமாகச் செய்யலாம்:
வரம்புரை: இந்தச் சட்டத்தின் தொடக்கத்
தேதியிலிருந்து இரண்டாண்டுகள் முடிவடைந்தற்குப்
பின்பு அத்தகைய அறிவிக்கை எதுவும் பிறப்பிக்கப்படுதல்
கூடாது.
34. விலக்களிப்பதற்கான அதிகாரம். அரசானது,
பதிவு செய்யப்படவேண்டிய காரணங்களுக்காக இந்தச்
சட்டத்தின் வகைமுறைகள் அனைத்திலிருந்தும் அல்லது
அவற்றில் ஏதொன்றிலிருந்தும் செயற்திட்டம் எதற்கும்
அறிவிக்கையின் மூலமாக விலக்களிக்கலாம்.
35. விதிகள், ஒழுங்குவிதிகள், அறிவிக்கைகள்.
ஆகியவற்றை வெளியிடுதல் மற்றும் அவற்றை
சட்டமன்றத்தின் முன்பு வைத்தல். (1). (5) இந்தச்
சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அல்லது
ஒழுங்குவிதிகள் அனைத்தும் அல்லது பிறப்பிக்கப்பட்ட
அறிவிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் குறிப்பிட்டதொரு
தேதியில் நடைமுறைக்கு வரும் என வெளிப்படையாகத்
தெரிவிக்கப்பட்டாலன்றி அவை அவ்வாறு
33
வெளியிடப்பட்ட தேதியில் நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
(2) இந்தச் சட்டத்திண்படி செய்யப்பட்ட விதி
அல்லது ஒழுங்குவிதி அல்லது பிறப்பிக்கப்பட்ட
அறிவிக்கை ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட
அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடிய விரைவில்,
சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்
மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடர்
அல்லது அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு
முன்பு அத்தகைய விதி அல்லது ஒழுங்குவிதி அல்லது
அறிவிக்கை எதிலும் மாற்றம் எதனையும் சட்டமன்றப்
பேரவையானது செய்வதற்கு உடன்படுமானால் அல்லது
அந்த விதி அல்லது ஒழுங்குவிதி அல்லது அறிவிக்கை
பிறப்பிக்கப்படுதல் கூடாது என சட்டமன்றப் பேரவையானது
முடிவு செய்யுமானால், அந்த விதி அல்லது ஒழுங்குவிதி
அல்லது அறிவிக்கையானது, அதன்பின்பு அவ்வாறு
மாற்றி அமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே
செயல்வடிவம் பெறுதல் வேண்டும் அல்லது செயல்வடிவம்
பெறாமலே போதல் வேண்டும்; எனினும், அவ்வாறு மாற்றி
அமைப்பது அல்லது நீக்கம் செய்வது எதுவும் விதியின்படி
அல்லது ஒழுங்குவிதியின்படி அல்லது
அறிவிக்கையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட எதனின்.
செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.
36. இச்சட்டம் மாநிலத்தின் பிற சட்டங்களுக்கு
மேலோங்கி இருத்தல் இந்தச் சட்டத்தின்
வகைமுறைகள் அப்போதைக்கு நடைமுறையில் இருந்து
வரும் மாநிலத்தின் பிற சட்டம் எதிலும் முரணாக என்ன
அடங்கியிருந்தபோதிலும் செயல் விளைவு கொள்ளுதல்
வேண்டும்.
34
- ஆம் இணைபப்புப்பட்டியல்
[பிரிவு 2 () ஐக் காண்க]
துறைகள்
(1) சந்தைப்படுத்துதல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய
உள்கட்டமைப்பு உள்ளிட்ட வேளாண் கட்டமைப்பு.
(2) குறுந்தாதுக்களின் மேம்பாடு.
(3) குடிநீர் மற்றும் தொழில் துறை நீர் வழங்கும்
முறைகள், உப்பு நீர் சுத்திகரிப்பு இயந்திர சாதனங்கள்.
(4) கல்வி தொடர்பான கட்டமைப்பு .
(5) மன் வளம்.
(6)_ வாயு மற்றும் வாயுப்பணிகள்.
(7) சுகாதார கட்டமைப்பு.
(8) குடிசைப் பகுதி மேம்பாடு மற்றும் துணை
நகரங்களின் மேம்பாடு உள்ளிட்ட வீட்டு வசதி.
(9) தொழில்துறை பூங்காக்கள் மற்றும் சிறப்புப்
பொருளாதார மண்டலங்கள். உள்ளிட்ட
தொழிற்பேட்டைகள்.
(10) தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான
செயற்திட்டங்கள்.
(11) தேசிய நீர் வழிகள் அல்லாத பிற உள்நாட்டு நீர்
வழிகள்.
(12) அணைகள், நீர்ப்பாசன அமைப்புகள், கால்வாய்கள்:
உள்ளிட்ட நீர்ப்பாசனம்.
(13) நிலத்தைச் சீரமைக்கும் செயற்திட்டங்கள்.
(14) கப்பற்துறைகள் (பெரிய கப்பற்துறைகள் தவிர பிற)
மற்றும் அங்குள்ள துறைமுகங்கள்.
35
(15) மின் உற்பத்தி, மின்சாரத்தை அனுப்புதல் மற்றும்
மின் பகிர்மான முறைகள்.
(16) இருப்புப்பாதை மேற்செல்லும் மற்றும் அடியில்
செல்லும் பாலங்கள் மற்றும் புறவழிச் சாலைகள் உள்ளிட்ட
சாலைகள் மற்றும் பாலங்கள்.
(17) திடக் கழிவு மேலாண்மை.
(18) விளையாட்டுகள். மற்றும் பொழுதுபோக்குக்
கட்டமைப்புகள்.
(19) சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சார்ந்த செயல்
திட்டங்கள்.
(20) நகர்ப்புற போக்குவரத்து முறை, பேருந்து
முனையங்கள், பன்முக நிறுத்த வசதிகள்.
(21) கழிவு நீர், கழிவுநீர் கால்வாய் சுத்திகரிப்பு முறை.
36
॥ட ஆம் இணைப்புப் பட்டியல்
(பிரிவு 17- ஐக் காண்க)
சலுகை உடன்பாட்டின் தன்மைகள்
1. முதலீடு அல்லது நிதியளித்தல் தொடர்பான
உடன்பாடுகள்.) கட்டமைத்தல் - செயல்பாட்டில்
வைத்திருத்தல் - மற்றும் - உரிமை மாற்றம் செய்தல்
(801)- சலுகைப்பெறுபவர், வழங்கப்பட்ட உள்கட்டமைப்பு
வசதிக்கு நிதியளித்தல், அதனை செயல்பாட்டுக்கு
கொண்டு வருதல் மற்றும் பேணுதல் உள்ளிட்ட அதன்
கட்டுமானத்தை மேற்கொள்ளும் ஓர் ஒப்பந்த ஏற்பாடு
ஆகும். சலுகைப் பெறுபவர், நிர்ணயிக்கப்பட்ட
காலஅளவிற்கு அந்த வசதியினை செயல்பாட்டில்
வைத்திருந்து, அந்தக் காலஅளவின்போது, அந்தச்
செயல்திட்டத்திற்குச் செய்யப்பட்ட முதலீட்டைத் திரும்பப்
பெறுவதற்காக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய
தீர்வைகள், கட்டணத் தொகைகள், வாடகைகள் மற்றும்
கட்டணங்களைப் பயனாளர்கள் ம்து விதிக்க
அனுமதிக்கப்படுவார். சலுகைப் பெறுபவர் சலுகை
உடன்பாட்டில் குறிப்பிடப்படும். நிர்ணயிக்கப்பட்ட
காலஅளவின் முடிவில் வசதியினை அரசுக்கு உரிமை
மாற்றம் செய்வார்.
(i) கட்டமைத்தல்- சொந்தமாக்கிக் கொள்ளுதல்
மற்றும் செயல்பாட்டில் வைத்தல் (8௦௦) - சலுகைப்
பெறுபவர், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதி
ஒன்றிற்கு நிதியளிப்பதற்கு, அதைக் கட்டுவதற்கு,
சொந்தமாக்கிக் கொள்வதற்கு செயல்பாட்டில்
வைப்பதற்கு மற்றும் பேணுவதற்கு மற்றும் வசதியின்
பயனாளர்களிடமிருந்து பயனாளர் கட்டணங்களை
விதிப்பதன் மூலம் மொத்த முதலீட்டைத் திரும்பப்
பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் ஓர் ஒப்பந்த
37
ஏற்பாடு ஆகும். இதில் நிலத்தின் சொத்துரிமையை அரசு
கொண்டிருக்கும். இதன்படி சலுகைப் பெறுபவர்
வசதியின் இதர சொத்திருப்புக்களைச் சொந்தமாகக்
கொண்டிருப்பார் மற்றும் அதன் செயல்பாட்டையும்
பேணுதலையும் வசதியைச் செயல்படுத்துபவர் ஒருவரிடம்
ஒப்படைக்க அவர் முடிவு செய்யலாம். இந்த அமைப்பில்,
அரசுக்கு வசதியை உரிமை மாற்றம் செய்தல் பற்றி
கருதப்படவில்லை; எனினும் குறிப்பிட்ட
காலஅளவிற்குப் பின் அரசு அதன் கடப்பாடுகளை
முடிவுக்குக் கொண்டுவரலாம்.
(i) கட்டமைத்தல் - சொந்தமாக்கிக்
கொள்ளுதல்- செயல்பாட்டில் வைத்தல் - உரிமை
மாற்றம் செய்தல் (BOOT) - சலுகைப் பெறுபவர்,
செயல்திட்டத்திற்கு நிதியளிப்பதற்கு, கட்டுவதற்கு,
பேணுவதற்கு மற்றும் செயல்பாட்டில் வைப்பதற்கு
அதிகாரம் அளிக்கப்பட்ட அத்தகைய செயல்திட்டம்,
குறிப்பிட்ட காலஅளவிற்கு சலுகைப் பெறுபவருக்கு
உரியதாக இருக்கும் ஓர் ஒப்பந்த ஏற்பாடு ஆகும்.
செயல்பாட்டில் இருக்கும் காலத்தின் போது, சலுகைப்
பெறுபவர் செயல்திட்டத்தின் முதலீட்டை திரும்பப்
பெறுவதற்காக, சலுகை உடன்பாட்டில்
குறிப்பிடப்பட்டுள்ள பயனாளர் கட்டணங்களை
விதிப்பதற்கு அனுமதிக்கப்படுவார். சலுகைப் பெறுபவர்,
செயல்பாட்டிலிருந்த குறிப்பிட்ட காலஅளவின்.
முடிவிற்கு பின் அரசுக்கு செயல்திட்டத்தை உரிமை
மாற்றம் செய்ய கடமைபட்டவர் ஆவார்.
(iv) கட்டமைத்தல் - உரிமை மாற்றம் செய்தல்
- மற்றும் செயல்பாட்டில் வைத்தல் (810) - அரசு,சலுகைப்
பெறுபவருக்கு, மிகைப்பட்ட செலவினங்கள், தாமதங்கள்
மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்றுதல் சார்ந்த
இடர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில், முழுமைப்பணி
38
முறைமை (முழுமையாக பணி முடித்தல்) அடிப்படையில்
(turn—key basis) ஓர் உள்கட்டமைப்பு வசதியை கட்டுமானம்
செய்வதற்கு ஒப்பந்தத்தில் விடும் ஓர் ஒப்பந்த ஏற்பாடு
ஆகும். வசதியானது, சரியான முறையில்
தொடங்கப்பட்டதும், சலுகைப் பெறுபவர் வசதியை
செயல்பாட்டில் வைத்திருக்கவும், சலுகை உடன்பாட்டில்
குறிப்பிட்டுள்ளவாறு பயனாளர் கட்டணங்களை
வசூலிக்கவும் உரிமை வழங்கப்பட்டிருப்பார். இந்த
ஏற்பாட்டில் வசதிகளின் சொத்துரிமை எப்போதும்
அரசிடம் உற்றமைந்திருக்கும்.
(V) வடிவமைத்தல்-கட்டமைத்தல் — நிதியளித்தல்
-டுசயல்பாட்டில் வைத்தல் - உரிமை மாற்றம் செய்தல்
(DBFOT) - குறிப்பிட்ட காலத்தின் முடிவிற்கு பின்,
அரசுக்கு, செயல்திட்டத்தை உரிமை மாற்றம்
செய்வதற்கு முன், வசதியை வடிவமைத்தல்,
கட்டமைத்தல் மற்றும் செயல்பாட்டில் வைத்தலின்
பொறுப்பு சலுகைப் பெறுபவருக்கு அளிக்கப்பட்டிருக்கும்
ஓர் ஒப்பந்த ஏற்பாடு ஆகும். சலுகைப் பெறுபவர்
நிர்ணயிக்கப்பட்ட காலஅளவின் போது வசதியை
செயல்பாட்டில் வைத்திருப்பார் மற்றும் செயல்திட்டத்தின்:
முதலீட்டினை திரும்பப் பெறுவதற்காக ஒப்பந்தத்தில்
பதிவு செய்யப்பட்டவாறு உரிய தீர்வைகள்,
கட்டணத்தொகைகள், வாடகைகள், கட்டணங்கள்
ஆகியவற்றைப் பயனாளர்களுக்கு விதிக்க
அனுமதிக்கப்படு வார்.
2. செயல்பாடுகள் மற்றும் பேணி வருதல் தொடர்பான
@) மேலாண்மை உடன்பாடு- அரசு,
உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையினை
செலுத்துவதன் பேரில், குறிப்பிடப்பட்ட காலஅளவிற்காக
ஒரு செயல் திட்டத்தின்: செயற்பாடு மற்றும்
39
மேலாண்மையை சலுகைப் பெறுபவரிடம் ஒப்படைக்கும்
ஓர் ஒப்பந்த ஏற்பாடு ஆகும். இந்த உடன்பாட்டில், அரசு,
பயனாளர் கட்டணங்களை விதிக்கலாம் மற்றும் தாமாக
அவற்றை வசூலிக்கலாம் அல்லது எந்த ஒரு சலுகைப்
பெறுபவரிடமும். மறுபயனுக்காக வசூலிக்கும்படி
ஒப்படைக்கலாம் மற்றும் அவர் பயனாளர் கட்டணங்களை
வசூலித்த பின்பு, அவற்றை அரசுக்கு செலுத்துதல்
வேண்டும்.
(i) குத்தகை மேலாண்மை உடன்பாடு - அரசு,
தமக்குச் சொந்தமான செயல்திட்டத்தைச் சலுகைப்
பெறுபவருக்கு குத்தகைக்கு விட்டு, ஒப்பந்தத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள காலஅளவிற்கு செயல்திட்டத்தைச்
செயல்படுத்தவும், மேலாண்மை செய்யவும், அவர்
அனுமதிக்கப்படும் ஓர் ஒப்பந்த ஏற்பாடு ஆகும். சலுகைப்
பெறுபவர், செயல்திட்டத்தில் அவரது முதலீட்டை
திரும்பப் பெறுவதற்காக உடன்பாட்டில்
குறிப்பிட்டுள்ளவாறு உரிய கட்டணத்தொகைகள்,
வாடகைகள் மற்றும் கட்டணங்களை விதிக்க
அனுமதிக்கப்படு வார்.
(i) கட்டமைத்தல் - குத்தகைக்கு விடுதல்
மற்றும் - உரிமை மாற்றம் (BLT) - சலுகை பெறுபவர்,
செயல்திட்டத்திற்கு. நிதியளிக்கவும், கட்டுமானம்
செய்யவும் ஏற்றுக்கொண்டு மற்றும் செயல்திட்டம்
நிறைவடைவதன். பேரில், அதனை அரசுக்கு
ஒப்படைக்கும் ஓர் ஒப்பந்த ஏற்பாடு ஆகும். பின்னர், அரசு,
அந்த வசதியினை, அந்த செயல்படுத்துபவரிடமே
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு குத்தகைக்கு அளிக்கும்.
அதன் பிறகு, அந்த வசதியின் உரிமையானது தானாகவே
அரசுக்கு உரிமை மாற்றம் ஆகும்.
09) மறுசீரமைத்தல் - செயல்பாட்டில் வைத்தல்
மற்றும் உரிமை மாற்றம் (௩௦1) - தற்போது இருந்து வரும்
40
வசதியானது, முதலீடு செய்தலுக்காக, புதுப்பித்தலுக்காக,
செயல்பாட்டில் வைத்தலுக்காக மற்றும் பேணுதலுக்காக
சலுகைப் பெறுபவரிடம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
ஒப்படைக்கப்பட்டு அது முடிவடைவதன் பேரில்
வசதியானது அரசுக்கு திரும்ப வழங்கப்படும் ஓர் ஒப்பந்த
ஏற்பாடு ஆகும். சலுகைப் பெறுபவர், நிர்ணயிக்கப்பட்ட
காலஅளவிற்கு வசதியைச் செயல்பாட்டில் வைத்திருந்து,
செயல்திட்டத்தின் முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்காக
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய
கட்டணத்தொகைகள், வாடகைகள், மற்றும்
கட்டணங்களை விதிக்க அனுமதிக்கப்படுவார்.
v) மறுசீரமைப்பு- சொந்தமாக்குதல் மற்றும்.
செயல்பாட்டில் வைத்தல் (௩௦௦) - தற்போது
இருந்துவரும் மேம்பாட்டு வசதியானது, முதலீடு
செய்தலுக்காக, புதுப்பித்தலுக்காக, செயல்பாட்டில்
வைத்தலுக்காக மற்றும் பேணுதலுக்காக சலுகைப்
பெறுபவரிடம் ஒப்படைக்கப்பட்டு, வசதியின்
பயனார்களிடமிருந்து பயனாளர் கட்டணங்கள்:
வசூலிப்பதன் மூலம், அவரது மொத்த முதலீட்டினைத்
திரும்பப்பெற அனுமதிக்கப்படும் ஓர் ஒப்பந்த ஏற்பாடு
ஆகும். நிலத்தின். சொத்துரிமையை அரசு
கொண்டிருக்கும். இந்த ஏற்பாட்டில் அரசுக்கு வசதியை
உரிமை மாற்றம் செய்தலைப் பற்றி கருதப்படவில்லை,
எனினும் அரசு குறிப்பிட்ட காலஅளவிற்குப் பின் அதன்
கடப்பாடுகளை நிறுத்திக் கொள்ளலாம்.
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.