Tamil Nadu · 1997 · Act 33
Tamil Nadu Industrial Township Area Development Authority Act, 1997
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1997ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலியல் நகரியப்
பகுதி மேம்பாட்டு அதிகாரஅமைப்புச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 33/1997)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Industrial Township Area Development
Authority Act, 1997
(Tamil Nadu Act No. 33 of 1997)
(as on 31 October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
i
1997ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலியல் நகரியப் பகுதி
பிரிவு
க
ல
ம
10.
11.
12.
13.
மேம்பாட்டு அதிகாரஅமைப்புச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 331997)
பொருளடக்கம்
குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்.
தொடக்கம்.
பொருள்வரையறைகள்.
அதிகாரஅமைப்பினை அமைத்துருவாக்குதல்.
அதிகாரஅமைப்பின் உள்ளடக்கம்.
தலைமை செயல் அலுவலரின் அதிகாரங்களும்
கடமைகளும்.
தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்
காலம்.
அதிகாரஅமைப்பின் அதிகாரங்கள்.
அதிகாரஅமைப்பின் செயல்பணிகள்.
1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம்
மற்றும் 1939ஆம் ஆண்டு பொது சுகாதார
சட்டத்தின் வகைமுறைகள் பொருந்துதல்.
கட்டடம் எழுப்பப்படுவது தொடர்பான
பணிப்பாணைகள் பிறப்பிப்பதற்கான அதிகாரம்.
அதிகாரஅமைப்பின் நடவடிக்கைகளை
எதிர்த்தல் கூடாது.
உள்ளாட்சி அமைப்புச் சட்டத்தின்.
பொருந்துகை அற்றுப்போதல்.
உள்ளாட்சி அமைப்புச் சட்டத்தின்.
பொருந்துகை.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
23-&.
24.
25.
26.
ii
உரிமைகளும் பொறுப்புகளும்.
மேம்பாட்டு முகவாண்மையின் அல்லது
ஏதேனும் ஒரு நபரின் சொத்திருப்புகள்.
நில வருவாயாக வளுலித்தல்.
அதிகாரஅமைப்பு என்பது உள்ளாட்சி
அதிகாரஅமைப்பாகவும் திட்டமிடும் அதிகார
அமைப்பாகவும் இருத்தல்.
அதிகாரஅமைப்பின் நிதி.
அதிகாரஅமைப்பின் வரவு செலவுத் திட்டம்.
கணக்குகளும் தணிக்கையும்.
ஆண்டறிக்கை.
அரசால் கட்டுப்படுத்தப்டுதல்.
விவரஅறிக்கையும் ஆய்வும்.
அதிகாரம் மற்றும் செயற்பணிகளின் ஒப்படைவு.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
1
1997ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலியல் நகரியப் பகுதி
மேம்பாட்டு அதிகாரஅமைப்புச் சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 33/1997
[தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் பின்வரும் சட்டமானது 1997ஆம்
ஆண்டு மே திங்கள் 10ஆம் நாளன்று ஆளுநரின்
ஏற்பிசைவைப் பெற்று பொதுத்தகவலுக்காகத் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்டது]
தமிழ்நாடு தொழிலியல் நகரியப் பகுதி மேம்பாட்டு
அதிகாரஅமைப்பினை அமைத்துருவாக்-
குவதற்கும் அது தொடர்பான
பொருட்பாடுகளுக்கும் வகைசெய்வதற்கான
ஒரு சட்டம்.
இந்திய அரசமைப்பின் 243-Q எனும் அமைப்பு
விதியின் கூறு (1) இல் வகைசெய்யப்பட்டுள்ள
முறையில், நகர்ப்புற பகுதியிலோ அல்லது அவ்வாறு
மாற்றமடைந்து வரக்கூடிய பகுதியிலோ தொழிலியல்
நகரியம் ஒன்றினை அமைத்துருவாக்குவதற்கு
வகைசெய்துள்ளது என்பதாலும்;
அவ்வாறு அமைத்துருவாக்கப்படும் தொழிலியல்
நகரியத்தில் நகராட்சியப் பணிகளுக்கு வகைசெய்கின்ற
நகராட்சி எதுவும் இருக்காது என்பதாலும்;
தொழிலியல் நகரியம் ஒன்றில் அமைந்துள்ள
பகுதியில் அத்தகைய நகராட்சியப் பணிக்கு வகைசெய்ய
வேண்டியது தேவையான ஒன்றாகும் என்பதாலும்;
தொழிலியல் நகரியம் ஒன்றில் அமைந்துள்ள
தொழிற்பகுதிகளிலும், தொழிற்பேட்டைகளிலும்.
உள்ள தொழிற்சாலைகளை விரைவாகவும், முறையாகவும்
நிறுவுவதற்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும்.
ஊக்கமளித்து துணைபுரிந்து வருவதற்கான
2
தனி வகைமுறையினைச் செய்ய வேண்டியது
தேவையானதாக இருக்கின்றது என்பதாலும்;
தொழிலியல் நகரியம் ஒன்றின் அலுவல்களை
நிருவகிக்கும் நோக்கத்திற்காகவும், தொழில் துறை
வளர்ச்சியினை ஊக்கப்படுத்துவதற்கான
நோக்கத்திற்காகவும் தொழிலியல் பகுதி மேம்பாட்டு
அதிகாரஅமைப்பு ஒன்றினை அமைத்துருவாக்குவது
தேவையானதாக இருக்கின்றது என்பதாலும்;
இந்த அனைத்து விவரங்களுக்கும், அது தொடர்பான
பிற விவரங்களுக்கும் வகைசெய்ய வேண்டியது
உகந்ததாக இருக்கின்றது என்பதாலும்;
இந்தியக் குடியரசின் நாற்பத்து எட்டாம் ஆண்டில்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால்
இயற்றப்பட்ட சட்டம் பிண்வருமாறு:-
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும் தொடக்கம்.-
(1) இந்தச் சட்டம், 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு
தொழிலியல் நகரியப் பகுதி மேம்பாட்டு அதிகாரஅமைப்புச்
சட்டம் என வழங்கப்படும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் பரவி
நிற்கும்.
(3) இது, அரசு, அறிவிக்கை வாயிலாகக்
குறிப்பிடும் தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளானவை
(அரசினால் அறிவிக்கை செய்யப்படக்கூடிய
நாளிலிருந்தும், அது முதற்கொண்டும்) அரசமைப்பின்
சட்டத்தின் 243௨ (2) எனும் அமைப்புவிதியின்படி
ஆளுநரால் விளம்புகை செய்யப்பட்ட தொழிலியல் நகரியம்
எதற்கும் பொருந்துதல் வேண்டும்; (மற்றும் வெவ்வேறு
தொழிலியல் நகரியங்களுக்கு வெவ்வேறு தேதிகள்:
குறிப்பிடப்படலாம்.)
3
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்,
தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி.-
(@ "அதிகாரஅமைப்பு என்பது, பிரிவு 3
இன்படி அமைத்துருவாக்கப்பட்ட தமிழ்நாடு தொழிலியல்
நகரியப் பகுதி மேம்பாட்டு அதிகாரஅமைப்பு எனப்
பொருள்படும்;
0) "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்;
(9) "தொழிலியல் நகரியப் பகுதி" என்பது,
இந்திய அரசமைப்பின் 243-Q எனும் அமைப்பு
விதியின்படி அறிவிக்கை வாயிலாக ஆளுநரால்
"தொழிலியல் நகரியப் பகுதி" என விளம்பப்படும் அத்தகைய
நகர்ப்புறப் பகுதி அல்லது அதனின் பகுதி எதுவும் எனப்
பொருள்படும்;
(0) "உள்ளாட்சி அதிகாரஅமைப்பு" என்பது,-
(i) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள
சட்டம் எதனின்படியும் நிறுவப்பட்ட
மாநகராட்சி எதுவும்; அல்லது
0) 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு
மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்
(தமிழ்நாடு சட்டம் ங71920)படி
அமைத்துருவாக்கப்பட்ட ஒரு நகராட்சி
மன்றம் எதுவும்; அல்லது
(iii) 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு
ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்
21/1994)படி அமைத்துருவாக்கப்பட்ட ஒரு
மாவட்ட ஊராட்சி அல்லது ஒரு ஊராட்சி
ஒன்றிய மன்றம் அல்லது ஒரு கிராம
ஊராட்சி எதுவும் எனப் பொருள்படும்.
4
(68) "மேம்பாட்டு முகவாண்மை" என்பது,
தமிழ்நாடு தொழில் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம்:
(TACID) அல்லது தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்
(85060) அல்லது தமிழ்நாடு மாநிலத் தொழில் முன்னேற்ற
நிறுவனம் (SIPCOT) அல்லது இதன்பொருட்டு அரசினால்
அறிவிக்கை செய்யப்படும் பிற நிறுவனம் எனப்
பொருள்படும்.
(0 சிறப்பு நோக்க நிறுமம்" என்பது, திட்டம்
மற்றும் மேம்பாடு, தொழிற்பகுதியின் அலுவல்களை
நிர்வகிப்பது அல்லது பராமரிப்பது உள்ளிட்ட தொழில்
துறை மேம்பாட்டிற்காகவும் அல்லது தொடர்புடைய
நோக்கம் எதற்காகவும், 2013ஆம் ஆண்டு நிறுமங்கள்
சட்டத்தின் (மையச் சட்டம் 1872013) பிரிவு 2இன் கூறு
(45ல் பொருள்வரையறை செய்யப்பட்டுள்ளவாறு
உருவாக்கப்பட்ட ஒர் அரசு நிறுமம் எனப் பொருள்படும்.]
3. அதிகாரஅமைப்பினை அமைத்துருவாக்குதல்.-
1) அரசு, தொழிலியல் நகரியப் பகுதி ஒன்றின்
விவகாரங்களை நிருவகித்து வருகின்ற
நோக்கங்களுக்காகவும், இந்தச் சட்டத்தின் நோக்கங்களை
நிறைவேற்றுவதற்காகவும், அறிவிக்கையின் வாயிலாக,
தொழிலியல் நகரியப் பகுதி ஒவ்வொன்றுக்காகவும்,
அதிகாரஅமைப்பு ஒன்றை அமைத்துருவாக்கலாம்.
(2) அதிகாரஅமைப்பு, ஒரு கூட்டமைப்பாக
இருக்கும் என்பதுடன் தொடர் வழியுரிமையையும் பொது
இலச்சினை ஒன்றையும் பெற்றிருக்கும்; மேலும்
மேற்சொன்ன அதிகாரஅமைப்பின். பெயரிலேயே
வழக்கிடலாம் வழக்கிடப்படலாம்.
1. 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலியல் நகரியப் பகுதி மேம்பாட்டு
அதிகாரஅமைப்பு (திருத்தச்) சட்டத்தின் பிரிவு 2ஆல் சேர்க்கப்பட்டது.
5
4. அதிகாரஅமைப்பின். உள்ளடக்கம்.-
அதிகாரஅமைப்பானது, பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:
(௨) அரசினால் பெயர்குறித்து நியமிக்கக்கூடிய
மேம்பாட்டு முகவாண்மையை பிரதிநிதித்துவப்படுத்தும்
ஓர் உறுப்பினர்;
(b) தொழிற்சாலைகள், மக்கள் நல்வாழ்வுத்
துறை, நகரமைப்பு மற்றும் ஊரமைப்புத் திட்டத்துறை
ஆகிய ஒவ்வொன்றின் பிரதிநிதியாகவும் இருப்பதற்காக,
இதன்பொருட்டு அரசினால் தீர்மானிக்கப்பட்டு பெயர்
குறித்து நியமிக்கப்படக்கூடிய அளவிலும் படிநிலையிலும்
உள்ள ஒவ்வொன்றுக்கும் ஓர் உறுப்பினர்;
(©) டுதொழிலியல் நகரியப் பகுதியில்
அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின்.
உரிமையாளர்களிடையேயிருந்து அரசினால்
பெயர்குறித்து நியமிக்கப்படும் ஓர்
உறுப்பினர்;
(i) தொழிலியல் நகரியப் பகுதியில்
அமைந்துள்ள தொழில் நிறுவனத்தின்:
தொழில் நுட்பம் அல்லது பிற அம்சங்கள்
தொடர்பான விவரங்கள் குறித்து சிறப்பு
அறிவு பெற்றிருக்கின்றவரும்
அரசினால் பெயர்குறித்து நியமிக்கப்
படுபவருமான ஓர் உறுப்பினர்;
(0) தொழிலியல் நகரியப் பகுதியில்
அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில்
பணியிலமர்த்தப் பட்டுள்ள நபர்களின்.
நலன்களை பிரதிநிதித்துவம்
செய்வதற்காக அரசினால் பெயர்குறித்து
நியமிக்கப்படும் ஓர் உறுப்பினர்;
6
0) அதிகாரஅமைப்பினால் நியமிக்கப்படும்
தலைமை டசயல் அலுவலர் ஒருவர்;
மற்றும்
(0) அரசினால் பெயர்குறித்து நியமிக்கப்படும்.
மேம்பாட்டு முகவாண்மையின்
அலுவலர் அதிகாரஅமைப்பின்
தலைவராக இருப்பார்.
5. தலைமை செயல் அலுவலரின் அதிகாரங்களும்
கடமைகளும்.-(1) தலைமை செயல் அலுவலர்,
அதிகாரஅமைப்பின் முழுநேர அலுவலராக இருப்பார்.
(2) தலைமை செயல் அலுவல், ஒழுங்குவிதிகளில்
குறித்துரைக்கப்படும் அல்லது தொழிற்பகுதி மேம்பாட்டு
அதிகாரஅமைப்பினால் தமக்கு அதிகாரஒப்படைவு
செய்யப்படக்கூடிய அதிகாரங்களைச் செலுத்தி வருதலும்,
கடமைகளை ஆற்றிவருதலும் வேண்டும்.
6. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்
காலஅளவுகள்.- (1) அரசினால் நியமிக்கப்படும்
அதிகாரஅமைப்பின் தலைவரும், பிற உறுப்பினர்களும்
தமது பதவியின் காரணமாக, பதவிவழித் தலைவராகவும்,
உறுப்பினர்களாகவும் இருப்பர்.
(2) பதவி வழி அல்லாத உறுப்பினர்கள்:
வகுத்துரைக்கப்படும் காலஅளவிற்கு பதவி வகித்து
வருவர்.
7.அதிகாரஅமைப்பின். அதிகாரங்கள்.- [6]
அதிகாரஅமைப்பானது, இந்தச் சட்டத்தின்படிச்
செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளால் வகைசெய்யப்படும்.
குறைவெண்வரம்பு உள்ளிட்ட அலுவல்
நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், நடைமுறை
விதிகளைப் பின்பற்றி வருதலும் அந்த விதிகளினால்
7
வகைசெய்யப்படக்கூடிய நேரங்களிலும் இடங்களிலும்.
கூடுதலும் வேண்டும்.
(2) அதிகாரஅமைப்பானது, தமது அலுவல்களைப்
புரிந்து வருவதற்கு தேவைப்படும் எண்ணிக்கையில்
அலுவலர்களையும் பணியாளர்களையும் நியமித்துக்
கொள்ளலாம்; மற்றும் மாநில அரசின் பொது அல்லது தனி
ஆணைகளால் தீர்மானிக்கப்படும். கட்டுப்பாட்டிற்கும்
நிபந்தனைகளுக்கும் உட்பட்டு அவர்களின்
படிநிலைகளையும், பதவிப் பெயர்களையும்
தீர்மானிக்கலாம்.
(3) அதிகாரஅமைப்பின் அலுவலர்களும், பிற
பணியாளர்களும் அதிகாரஅமைப்பின் நிதியிலிருந்து
சம்பளங்கள் மற்றும் படித்தொகைகள் போன்றவற்றைப்
பெறுவதற்குத் தகுதியுடையவர் ஆவர்; மற்றும்
ஒழுங்குவிதிகளில் அதிகாரஅமைப்பினால்
குறித்துரைக்கப்படும் பிற பணி நிபந்தனைகளுக்கும்
உட்பட்டவர்கள் ஆவர்.
(4) தலைவர், 1948ஆம் ஆண்டு
தொழிற்சாலைகள் சட்டம் (மையச் சட்டம் 071948)
1939ஆம் ஆண்டு மக்கள் நல்வாழ்வுச் சட்டம் (மையச்
சட்டம் 1I/1939) 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும்
ஊரமைப்புச் சட்டம் (மையச் சட்டம் 151972) ஆகிய
சட்டங்களின்படி அதிகாரங்களைச் செலுத்திவருகின்ற
அலுவலர் எவரொருவரையும் அதிகாரஅமைப்பின்
பதவிவழி உறுப்பினர்களாக நியமிக்கலாம்; மற்றும்
அவ்வாறு நியமிக்கப்பட்ட அலுவலர்கள், அந்தந்த
சட்டங்களின்படி தமது துறைகளுக்கு உரிய
அதிகாரங்களையும், அலுவல்களையும் தொழிலியல்
நகரியப் பகுதியில் செலுத்தி வருதலும் புரிந்து வருதலும்
வேண்டும்.
8
8. அதிகாரஅமைப்பின்: செயற்பணிகள்.- (1)
தொழிலியல் நகரியப் பகுதியின்: அலுவல்களை
நிருவகித்து வருதலும், அதன் திட்டமிட்ட வளர்ச்சியை
அடைதலும், அதனைப் பேணிவருதலும் அதிகார
அமைப்பின் செயற்பணிகளாகும்.
(2) கூறு (1)இல் குறித்துரைக்கப்பட்டுள்ள
அதிகாரஅமைப்பின். செயல் நிலைகளின்.
பொதுப்பாங்கிற்குக் ஊறின்றி, அதிகாரஅமைப்பானது
பின்வரும் செயற்பணிகளைப் புரிந்துவருதல் வேண்டும்,
அதாவது:-
(8) தொழிலியல் நகரியப் பகுதியில்
அமைந்துள்ள தொழில் பிரிவுகளின்: சமுதாய
தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் வசதி செய்து
தருதல்;
(b) வெவ்வேறு முகமைகள் அல்லது
துறைகளிடமிருந்து தேவைப்படும் அனுமதி
பெறுவதற்கான ஒரு முனைத் தொடர்பு அமைப்பாக
செயற்படுதல்;
(9) தொழிலியல் நகரியப் பகுதியில் உள்ள
தொழிற்சாலைகளை விரைவாகவும், ஒழுங்காகவும்
நிறுவுவதற்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும்.
ஊக்கமளித்து துணைபுரிந்து வருதல்;
(0) தம்மால் கையகப்படுத்தப்பட்ட தகுதிவாய்ந்த
தொழிற்சாலைக்குரிய மனை இடங்களை அடையாளம்
கண்டறிந்து, மின்சாரம், தண்ணீர், சாலைகள்,
தகவல்தொடர்பு அமைப்புகள், வடிகால்கள், மாசு தடுப்பு
முறைகள், தொழிற்கூடங்கள் போன்ற அடிப்படை
வசதிகளையும், தொழிலாளர் வீட்டுவசதி மற்றும் வங்கிகள்,
அஞ்சலகம், மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையங்கள்
மற்றும் அது போன்றவற்றுக்கான பொது வசதியுடைய
9
கட்டடங்கள் போன்ற சமுதாய அடிப்படை வசதிகளையும்
ஒருங்கிணைத்து அமைத்துக் கொடுத்தல்;
(6) இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக,
உடன்பாட்டின் மூலமாகவோ அல்லது 1894ஆம் ஆண்டு
நிலத்தை கையகப்படுத்துதல் சட்டத்தின் படியான
(மையச் சட்டம் 11894) நடவடிக்கைகள் மூலமாகவோ,
தொழிலியல் நகரியப் பகுதியில் நிலத்தினைக்
கையகப்படுத்துதல்;
(9) தொழிலியல் நகரியப் பகுதியின்:
வளர்ச்சிக்கான வரைபடம் ஒன்றைத் தயாரித்தல்;
(9) அவ்வரைப்படத்திற்கு இணங்கிய வகையில்
தொழில், வணிகம் மற்றும் குடியிருப்பு நோக்கங்களுக்காக
மனை இடங்களை எல்லை வரையறை செய்து
மேம்படுத்துதல்;
(h) தொழிலியல், வணிக மற்றும் குடியிருப்பு
நோக்கங்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு
வகைசெய்து கொடுத்தல்;
@) தொழில் பிரிவுகளுக்குச் சாலை
அமைத்தல், தண்ணிர் வழங்குதல் போன்ற அனைத்து
வசதிகளுக்கும் வகைசெய்தல்;
() தொழிற்பகுதியுடன் அமைந்துள்ள
மேம்படுத்தப்பட்ட மனைநிலங்களை விதிக்கப்படக்கூடிய
வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு
தொழிலியல், வணிகம் அல்லது குடியிருப்பு
நோக்கங்களுக்காக நபர் எவருக்கும் அல்லது நபர்கள்
அடங்கிய அமைப்பு எதற்கும் அல்லது நிறுமம் எதற்கும்
அல்லது தொழில் நிறுவனம் எதற்கும் விற்பனை அல்லது
குத்தகை மூலமாக ஒதுக்கீடு செய்து உரிமைமாற்றம்.
செய்து கொடுத்தல் அல்லது மற்றபடி உடைமை
மாற்றிக்கொடுத்தல்;
10
(k) கட்டடங்கள் எழுப்பப்படுவதையும்
தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதையும்
முறைப்படுத்துதல்;
() ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட ஒரு
மனையிடமோ அல்லது நிலத்தின் ஒரு பகுதியோ எந்த
நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுதல் வேண்டும், அல்லது
அதாவது, தொழிலியல் அல்லது வணிக அல்லது
குடியிருப்பு சார்ந்த எந்த நோக்கத்திற்காகப்
பயன்படுத்தப்படுதல் வேண்டும் என்பதனை வகுத்தல்;
மற்றும்
(M) அதிகாரஅமைப்பின்: நோக்கங்களை
நிறைவேற்றுவதற்குத் தேவையான பிற பணிகள்.
9. 1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம்
மற்றும் 1939ஆம் ஆண்டு பொது சுகாதாரச் சட்டத்தின்.
வகைமுறைகள் பொருந்துதல்.- (1) 1948ஆம் ஆண்டு
தொழிற்சாலைகள் சட்டம் (மையச் சட்டம் LXI/1948)
மற்றும் 1939ஆம் ஆண்டு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுச்
சட்டத்தின் (மையச் சட்டம் ॥71939) வகைமுறைகள்
பின்வரும் மாற்றங்களுக்கு உட்பட்டு தொழிலியல் நகரியப்
பகுதிக்குப் பொருந்துதல் வேண்டும்,-
(ஐ) தொழிலியல் நகரியப் பகுதிக்குள்:
அமைந்துள்ள தொழிற் பிரிவு எதன் தொடர்பாகவும்,
1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மையச்
சட்டம் ப்ப ொா2௦48படி உரிமம் அல்லது ஒப்புதல்
வழங்குவதற்கான அதிகாரமானது, தொழிற்சாலைகள்
துறையின் பிரதிநிதியாக இருந்து அதிகாரஅமைப்பின்:
கட்டுப்பாட்டின்கீழ் உறுப்பினர் ஒருவராக செயல்பட்டு
வருகின்ற அலுவலருக்கு உரியதாக இருக்கும்.
(௦) தொழிலியல் நகரியப் பகுதிக்குள்:
அமைந்துள்ள தொழிற்பிரிவு எதன் தொடர்பாகவும், 1939
ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின்.
11
(மையச் சட்டம் ॥7ா1939)படி உரிமம் அல்லது ஒப்புதல்
வழங்குவற்கான அதிகாரமானது, பொது சுகாதாரத்
துறையின் பிரதிநிதியாக இருந்து அதிகாரஅமைப்பின்:
கட்டுப்பாட்டின்கீழ் உறுப்பினர் ஒருவராக செயற்பட்டு
வருகின்ற பொது சுகாதார அலுவலருக்கு உரியதாக
இருக்கும்.
(2) எனினும், உட்பிரிவு (1)இல் குறிப்பிடப்பட்ட
மாற்றங்களுக்கு உட்பட்டு, மேல்முறையீடு, சீராய்வு, ஆய்வு
தொடர்பான வகைமுறைகளும் பிற வகைமுறைகளும்
உள்ளிட்ட 1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம்
(மையச் சட்டம் LXII/1948) மற்றும் 1939ஆம் ஆண்டு
தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின்
(மையச் சட்டம் 1/1939) வகைமுறைகள், தொழிலியல்
நகரியப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள தொழிற் பிரிவு
எதற்கும் அவை பொருந்தக்கூடியவாறே அத்தகைய
தொழிற்பிரிவு தொடர்பாகவும் பொருந்துதல் வேண்டும்.
விளக்கம்.- இந்தப் பிரிவின்படி உரிமம் அல்லது
ஒப்புதல் வழங்குவதற்கு அல்லது வழங்க மறுப்பதற்கு
பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்று, 1948ஆம் ஆண்டு
தொழிற்சாலைகள் சட்டத்தின் (மையச் சட்டம் ப0171948)
படி அல்லது நிகழ்விற்கேற்ப, 1939ஆம் ஆண்டு தமிழ்நாடு
பொது சுகாதாரச் சட்டத்தின் (மையச் சட்டம் ॥ஈா1939படி
பிறப்பிக்கப்பட்டதொரு ஆணையாகக் கருதப்படுதல்
வேண்டும்; மற்றும் மேற்சொன்ன சட்டங்களின்படி
பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றாக அது இருந்ததைப்
போன்றே மேற்சொன்ன சட்டத்தின் வகைமுறைகள்
பொருந்துதல் வேண்டும்.
10. கட்டடம் எழுப்பப்படுவதைப் பொறுத்தமட்டில்
பணிப்புரை பிறப்பிப்பதற்குரிய அதிகாரம்.- (1) தொழிலியல்
நகரியப் பகுதியினை முறையாகத் திட்டமிட்டு
மேம்படுத்துகின்ற நோக்கங்களுக்காக, அதிகார
அமைப்பானது, பின்வரும் நோக்கங்களுக்காகத் தமக்கு
12
தேவையானது எனக் கருதக்கூடிய பணிப்புரைகளைப்
பிறப்பிக்கலாம்:-
(8) ஏதேனும் கட்டடம் ஒன்றின்
முகப்புத்தோற்றத்தின் கட்டடக்கலைச்சார்ந்த சிறப்புகள்;
(b) மனையிடம் எதன்மீதும் உள்ள
கட்டடங்களின் ஒழுங்கு வரிசை;
(௦9) கட்டடங்களிலும் அவற்றைச் சுற்றிலும்
பேணிவரப்படவேண்டிய திறந்தவெளி தொடர்பானவையும்
கட்டடங்களின் உயரம் மற்றும் தன்மை
தொடர்பானவையுமான கட்டுப்பாடுகள். மற்றும்
நிபந்தனைகள்;
(0) மனையிடம் எதன்மீதும் எழுப்பப்படக்கூடிய
குடியிருப்புக்கட்டடங்களின் எண்ணிக்கை;
(8) கடைகள், பட்டறைகள், பண்டகச்சாலைகள்,
தொழிற்சாலைகள் அல்லது கட்டடங்கள் எழுப்பப்படுதலை
முறைப்படுத்துதல்;
(f) சுவர்கள், வேலிகள், முள்வேலிகள் அல்லது
பிற கட்டமைப்பு அல்லது கட்டட கலைநயமுள்ள
கட்டுமானங்கள் எதனுடைய உயரங்கள் மற்றும்
அமைப்பினைப் பேணிவருதல்;
(9) வசதிகளைப் பேணிவருதல்;
® எந்த நோக்கத்திற்காக ஒரு
மனையிடமானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த
நோக்கத்திற்காக அல்லாமல் பிற நோக்கத்திற்காக அந்த
மனையிடம் எதனையும் பயன்படுத்தப்படுவதைத் தடை
செய்தல்;
0). () கழிவு நீருக்காக வடிகால் அமைத்தல்;
(i) தொழிற்சாலைக் கழிவுகளை
அகற்றுதல்; மற்றும்
13
0) நகரில் உள்ள குப்பைகளை அகற்றுதல்,
ஆகியவற்றிற்கு முறையான வழிவகைகளை
செய்துகொடுத்தல்.
(2) நிலம் அல்லது தொழிலியல் பிரிவு எதனையும்
ஒதுக்கீடு பெற்ற அல்லது அதன் உரிமை மாற்றம் பெற்ற
ஒவ்வொருவரும், உட்பிரிவு (1)இன்படி பிறப்பிக்கப்பட்ட
பணிப்பாணைகளுக்கு இணங்கி நடத்தல் வேண்டும்;
மற்றும் எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வளவு
விரைவில், கட்டடம் எதனையும் எழுப்புதலோ அல்லது
அந்த பணிப்பாணைகளுக்கு இணங்கி நடப்பதற்குத்
தேவையான பிற நடவடிக்கைகளை எடுத்தலோ வேண்டும்.
11. அதிகாரஅமைப்பின் நடவடிக்கைகளை
வினவுதல் கூடாது.- அதிகாரஅமைப்பின். அமைத்துரு
வாக்கத்தில் காலியிடம் எதுவும் இருந்து வருகின்றது
என்ற காரணத்தினாலோ அல்லது குறைபாடு எதுவும்
இருக்கின்றது என்ற காரணத்தினாலோ அதிகார
அமைப்பின் செயல் அல்லது நடவடிக்கைகள் எவையும்
செல்லாதவை ஆகாது.
12. உள்ளாட்சி அமைப்புச் சட்டத்தின் பொருந்துகை:
அற்றுப்போதல்.- பிரிவு 11இன்: வகைமுறைகளுக்கு
உட்பட்டு, பிரிவு 3இன்படி அதிகாரஅமைப்பு ஒன்று
அமைத்துருவாக்கப்பட்ட தேதியிலிருந்தும், அது
முதற்கொண்டும், தொழிலியல் நகரியப் பகுதிக்குள்:
உள்ளாட்சி அதிகாரஅமைப்பினால் செலுத்திவரப்படத்தக்க
செயல்பணிகள் எவையும் மேற்சொன்ன தேதியில்
அத்தகைய கதொழிலியல் நகரியப் பகுதி தொடர்பாக
பொருந்தத்தக்கதாக இருக்கிற உள்ளாட்சி அமைப்புச்
சட்டத்தின்படி, இந்த அதிகார அமைப்பிற்கு மாற்றப்பட்டு
அதனால் செலுத்திவரப்படுதல் வேண்டும் எனவும்
அச்சட்டமானது மேற்சொன்ன தொழிலியல் நகரியப்
14
பகுதிக்குப் பொருந்துவது அற்றுப்போதல் வேண்டும்.
எனவும் அரசு பணிக்கலாம்.
விளக்கம்.-இந்தப் பிரிவின் மற்றும் இந்தச் சட்டத்தின்:
பிற வகைமுறைகளின் நோக்கங்களுக்காக, உள்ளாட்சி
அமைப்புச் சட்டம் என்பது,-
(1) 1919ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச்
சட்டம். (தமிழ்நாடு சட்டம் ௫71919)
(2) 1971ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச்
சட்டம். (தமிழ்நாடு சட்டம் 151971)
(3) 1984ஆம் ஆண்டு கோயம்புத்தூர்
மாநகராட்சிச் சட்டம். (தமிழ்நாடு சட்டம் 251981)
(4) 1994ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி
மாநகராட்சிச் சட்டம். (தமிழ்நாடு சட்டம் 271994)
(5) 1994ஆம் ஆண்டு திருநெல்வேலி
மாநகராட்சிச் சட்டம். (தமிழ்நாடு சட்டம் 281994)
(6) 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச்
சட்டம். (தமிழ்நாடு சட்டம் 29,1994)
(7) 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட
நகராட்சிகள் சட்டம். (குமிழ்நாடு சட்டம் 71920)
(8) 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
சட்டம் (குமிழ்நாடு சட்டம் 211994)
எனப் பொருள்படும்.
13. உள்ளாட்சி அமைப்புச் சட்டத்தின்
பொருந்துகை.- (1) அரசானது, அறிவிக்கை ஒன்றின்
வாயிலாக, தொழிலியல் நகரியத்தின் தொடர்புடைய
உள்ளாட்சி அதிகாரஅமைப்புச் சட்டத்தின் அல்லது அதன்.
கீழ் செய்யப்பட்ட ஏதேனும் விதிகள் அல்லது தொழிலியல்
நகரியப் பகுதியில் அப்போதைக்கு நடைமுறையில் உள்ள
பிற இயற்றுச் சட்டம் எதனின் வகைமுறைகளில்
15
ஏதொன்றும், அந்த அறிவிக்கையில் குறிப்பிடபடும்.
மாறுதல்கள், சேர்க்கைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு
உட்பட்டு, குறிப்பிடப்படும் அளவிற்கு அந்தப் பகுதிக்குப்
பொருந்துதல் வேண்டும் என்று பணிக்கலாம்.
(2) குறிப்பாகவும் முன்சொன்ன
வகைமுறைகளின் பொதுப்பாங்கிற்குக் ஊறின்றியும்,
அத்தகைய அறிவிக்கையானது,-
(@) இந்தப் பிரிவின்படி அதிகாரஅமைப்பிற்குப்
பொருந்துகின்ற வகைமுறைகளின் காரணமாக
விதிக்கப்படக்கூடிய வரிகள் மற்றும் கட்டணங்கள்
அனைத்தையும் அல்லது அவற்றில் ஏதொன்றையும்
விதிப்பதற்கு, அதிகாரஅமைப்பிற்கு அதிகாரமளிக்கலாம்.
) அறிவிக்கையில் குறிப்பிடப்படும்.
வகைமுறைகள், வரம்புகள் மற்றும் நிபந்தனைகள்
ஆகியவற்றுக்கும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்படும்
கட்டுப்பாடு ஏதேனும் இருப்பின் அதற்கும் உட்பட்டு, முன்:
சொல்லப்பட்ட விதத்தில் பொருந்துகின்ற
வகைமுறைகளின்படி உள்ளாட்சி அதிகாரஅமைப்பு
ஒன்றின் செயல் அலுவலருக்கு அளிக்கப்பட்ட
அதிகாரங்களையும் கடமைகளையும் அதிகாரஅமைப்பு
தொடர்பாக, அதிகாரஅமைப்பின் தலைமைச் செயல்
அலுவலர் செலுத்தி வருவதற்கும் ஆற்றி வருவதற்கும்
அதிகாரமளிக்கலாம்.
14. உரிமைகளும் பொறுப்புகளும்.- (1) உள்ளாட்சி
அதிகாரஅமைப்பினால், பயன்படுத்தப்பட்டுவரப்பட்ட,
துய்த்துவரப்பட்ட அல்லது உடைமையில் வைத்து
வரப்பட்ட, எப்படிப்பட்ட வகையான சொத்துக்கள்
அனைத்தும், உரிமைகள் அனைத்தும் உள்ளாட்சி
அதிகாரஅமைப்பிற்குச் சொந்தமானதாக உள்ள அல்லது
அதற்கு உரியதாக உள்ள உள்ளாட்சி
அதிகாரஅமைப்பினால் அல்லது அதன் பொறுப்பில்
16
வைத்துவரப்படும் எவ்வகையான உரிமை நலன்கள்
அனைத்தும் மற்றும் அதற்கு எதிராக சட்டப்படி
இருந்துவருகிற கட்டுப்பாடுகள் அனைத்தும்கூட,
அதிகாரஅமைப்பு அமைத்துருவாக்கப்பட்ட
தேதியிலிருந்தும் அல்லது அது முதற்கொண்டும்
மேற்சொன்ன அதிகார அமைப்பிற்கு உரிமை மாற்றம்
செய்யப்பட்டதாக ஆகுதல் வேண்டும்.
(2) உள்ளாட்சி அதிகாரஅமைப்பினால் அல்லது
அதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
அனைத்தும், அதிகாரஅமைப்பினால் தொடர்ந்து
நடத்தப்படலாம்.
15. மேம்பாட்டு முகவாண்மையின் அல்லது ஏதேனும்
ஒரு நபரின் சொத்திருப்புகள்.- இந்தச் சட்டத்திலோ
அல்லது அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற
சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும்,
அதிகாரஅமைப்பு அமைத்துருவாக்கப்பட்ட தேதிக்கு
முன்னர் மேம்பாட்டு முகவாண்மையின் அல்லது
எவரேனும் ஒரு நபருக்குச் சொந்தமாக இருந்த நிலம்,
கட்டமைப்புகள் மற்றும் மின்வசதி, குடிநீர்வசதி மற்றும்
வடிகால் வசதி உள்ளிட்ட பிற வசதிகள் அனைத்தும்
மேற்சொன்ன மேம்பாட்டு முகவாண்மைக்கு அல்லது
தொடர்புடைய நபருக்குத் தொடர்ந்து சொந்தமாக
இருந்துவருதல் வேண்டும்
16. நில வருவாயாக வசூலித்தல்.-- நபர் எவராலும்
அல்லது நபர்கள் எவர்களாலும், அதிகாரஅமைப்பிற்குச்
செலுத்தப்படத்தக்க அல்லது இந்தச் சட்டத்தின்படி
அதிகாரஅமைப்பினால் வசூலிக்கப்படத்தக்க தொகைகள்
அனைத்தும் மற்றும் அது தொடர்பாக செலவிட நேரிட்ட
கட்டணங்கள் அல்லது செலவினங்கள் அனைத்தும் வேறு
எந்த வசூல்முறைக்கும் ஊறின்றி, அதிகார அமைப்பின்:
விண்ணப்பத்தின்பேரில், அப்போதைக்கு நடைமுறையில்
17
உள்ள 1890ஆம் ஆண்டு வருவாய் வசூல் சட்டத்தின்.
(மையச் சட்டம் 1/1890) வகைமுறைகளின்படி அரசிற்கு
கொடுக்கப்படபவேண்டிய நில வருவாய் போன்று
வசூலிக்கப்படுதல் வேண்டும்.
17. அதிகாரஅமைப்பு என்பது உள்ளாட்சி
அதிகாரஅமைப்பாகவும் திட்டமிடும் அதிகார
அமைப்பாகவும் இருக்கும்.- இந்த அதிகாரஅமைப்பானது,
உள்ளாட்சி அதிகாரஅமைப்பாகவும் மற்றும் உள்ளாட்சி
திட்டமிடும் அதிகாரஅமைப்பாகவும் கூட கருதப்படுதல்
வேண்டும்; மற்றும் அது, மேற்சொன்ன உள்ளாட்சி அதிகார
அமைப்பின் அதிகாரங்களை தொடர்புடைய உள்ளாட்சி
அமைப்புச் சட்டத்தின் படியும், 1971ஆம் ஆண்டு நகர்
மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்
351972) படியும் உரித்தான ஒன்றாகச் செலுத்தி வருதல்
வேண்டும்.
18. அதிகாரஅமைப்பின் நிதி.- (1) அதிகார
அமைப்பானது தனக்கெனச் சொந்த நிதியை வைத்து
வருதல் வேண்டும்; அதில்,-
(ஐ மானியங்கள், கடன்கள், முன்தொகைகள்:
என்கிற வகையிலோ அல்லது மற்றபடியோ மாநில
அரசிடமிருந்து அதிகாரஅமைப்பினால் பெறப்படும்.
அனைத்துப் பணங்களையும்;
(b) கடன்கள் அல்லது கடனீட்டு ஆவணங்கள்
வாயிலாக அரசு அல்லாத பிற வழிவகைகளில்
அதிகாரஅமைப்பினால் கடனாகப் பெறப்படும் அனைத்துப்
பணங்களையும்;
(9) இந்தச் சட்டத்தின்படியும், பிரிவு 12இன்:
படியும் நகரியத்திற்கு பொருந்தத் தக்கதாகச் செய்யப்பட்ட
சட்டத்தின் வகைமுறை எதனின்படியும் அதிகார
அமைப்பினால் பெறப்படும் ஊதியக் கட்டணங்கள், சுங்கக்
18
கட்டணங்கள், செலவுக் கட்டணங்கள், விதிப்புக்
கட்டணங்கள் ஆகிய அனைத்தையும்;
(0) நிலங்கள், கட்டடங்கள், அசையும் மற்றும்
அசையாச் சொத்துக்கள் ஆகியவற்றை உரிமை மாற்றம்
செய்வதன் மூலமும் பிறவகை நடவடிக்கைகளின்
மூலமும் அதிகார அமைப்பினால் பெறப்படும் பணங்கள்
அனைத்தையும்; மற்றும்
(6) வாடகை மற்றும் ஆதாயங்களின்
மூலமாகவோ அல்லது பிற எந்த வழிமுறையிலுமோ
அல்லது பிற வழிவகை எதிலிருந்துமோ
அதிகாரஅமைப்பினால் பெறப்படும். பணங்கள்.
அனைத்தையும்,
வரவு வைத்தல் வேண்டும்;
(2) இந்த நிதியானது அதிகார அமைப்பினால்,
நிருவகித்து வரும் செலவினங்களை
எதிர்கொள்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படுதல்
வேண்டுமேயன்றி பிற நோக்கங்களுக்காகப்
பயன்படுத்தப்படுதல் கூடாது.
19. அதிகாரஅமைப்பின் வரவு-செலவுத் திட்டம்.- (1)
அதிகாரஅமைப்பானது, வகுத்துரைக்கப்படும்
காலஅளவிற்குள், மதிப்பீடு செய்யப்பட்ட வரவு
செலவினையும், பின்வரக்கூடிய நிதியாண்டிற்கான
அதிகாரஅமைப்பின் பணத்திட்டத்தினையும் காட்டுகின்ற,
அடுத்துவருகின்ற நிதியாண்டினைப் பொறுத்தமட்டில்
வரவு செலவு செயல்முறைத் திட்டம் ஒன்றினைத்
தயாரித்து, ஒப்புதலுக்காக மேம்பாட்டு முகவாண்மையிடம்
அளித்தல் வேண்டும்.
(2) அதிகாரஅமைப்பானது, மேம்பாட்டு
முகவாண்மையின் முன்ஒப்புதலுடன் பணித் திட்டத்தில்
மாற்றங்களைச் செய்துகொள்வதற்குத் தகுதி பெற்றதாகும்.
19
20. கணக்குகளும் தணிக்கையும்.-(1) அதிகார
அமைப்பானது முறையான கணக்குகளையும்,
பிற தொடர்புடைய பதிவுருக்களையும் பேணி வருவதுடன்,
அரசு குறிப்பிடக்கக்கூடிய படிவத்தில் ஐந்தொகைக்குறிப்பு
உள்ளடங்கலான ஆண்டுக் கணக்கு விவரஉரை
ஒன்றினைத் தயாரித்தலும் வேண்டும்.
(2) அதிகாரஅமைப்பின் கணக்குகள், அதிகார
அமைப்பினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தகுதி பெற்ற
பட்டயக் கணக்கர் ஒருவரால் ஆண்டுதோறும் தணிக்கை
செய்யப்படுவதற்கு உட்பட்டவையாகும்.
(3) தணிக்கை அறிக்கையுடன் கூடிய தணிக்கை
செய்யப்பட்ட கணக்குகளின் நகலொன்று மேம்பாட்டு
முகவாண்மைக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
21. ஆண்டறிக்கை. அதிகாரஅமைப்பானது,
ஒவ்வோர் ஆண்டிற்கும் தனது நடவடிக்கைகள் குறித்த
அறிக்கை ஒன்றினைத் தயாரித்து அரசு குறிப்பிடக்கூடிய
தேதியிலோ அல்லது அதற்கு முற்பட்டோ,
குறிப்பிடக்கூடிய படிவத்தில் அரசிற்கு அறிக்கை அனுப்பி
வைத்தல் வேண்டும்.
22. அரசு கட்டுப்பாடு செலுத்துதல்.- (1) அரசானது,
இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத்
தேவையானது அல்லது உகந்தது எனத் தான்
கருதக்கூடிய கொள்கை அளவிலான பொது வழிகாட்டு
நெறிகளையும், சிறப்புப் பணிப்பாணைகளையும்
அதிகாரஅமைப்பிற்கு அவ்வப்போது பிறப்பித்து வரலாம்;
மற்றும் அதிகார அமைப்பானது அத்தகைய
பணிப்பாணைகளைப் பின்பற்றி செயல்படுவற்குக்
கடமைப்பட்டதாகும்.
(2) அரசானது, பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது
பணிப்புரை எதனின். சட்டமுறைமை அல்லது
பொருத்தமுடைமை குறித்துத் தாமே தெளிவுறக் காணும்
20
நோக்கத்திற்காக, அதிகாரஅமைப்பினால் அல்லது
தலைவரால் முடிவு செய்யப்பட்ட செயல் எதனின் அல்லது
பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனின் பதிவுருக்களைத் தாமே
முற்பட்டோ அல்லது இதன் பொருட்டு செய்துகொண்ட
விண்ணப்பத்தின்பேரறிலோ, எந்த நேரத்திலும், தருவித்து,
அதன். தொடர்பாகத் தான்: பொருத்தமென
நினைக்கக்கூடிய ஆணையினைப் பிறப்பிக்கலாம்.
அல்லது பணிப்பாணை கொடுக்கலாம்:
வரம்புரை: அரசானது, நபர் எவருக்கும், அவரது
தரப்பினைக் கேட்பதற்குரிய நியாயமாணதொரு வாய்ப்பு
ஒன்றினை வழங்காமல், அந்த நபருக்கு ஊறு
விளைவிக்கின்ற ஆணையினைப் பிறப்பித்தல் கூடாது.
(3) இந்தச் சட்டத்தினால் வழங்கப்பட்ட
அதிகாரங்களைச் செலுத்துவதில் அரசு பிறப்பித்த ஆணை
ஒவ்வொன்றும் அறுதியானதாகும்; மற்றும் எந்த
நீதிமன்றத்திலும் அது வினவப்படுதல் கூடாது.
23. விவரஅறிக்கையும் ஆய்வும்.-(1) அதிகார
அமைப்பானது, அரசினால் அவ்வப்போது கோரப்படக்கூடிய
அறிக்கைகளையும், விவரஅறிக்கைகளையும், பிற
தகவல்களையும் அரசிற்கு அளித்து வருதல் வேண்டும்,
(2) உட்பிரிவு 1861 வகைமுறைகளுக்குக்
ஊறின்றி, அரசோ அல்லது அரசினால்
அதிகாரமளிக்கப்படக்கூடிய பிற அலுவலர் எவருமோ,
தேவையானதெனக் கருதப்படக்கூடிய அறிக்கைகளையும்,
விவரஅறிக்கைகளையும் பிற தகவல்களையும்.
அதிகாரஅமைப்பிடமிருந்து தருவிக்கலாம்.
21
1[23-௩.அதிகாரம் மற்றும் செயற்பணிகளின்
ஒப்படைவு .-- (1) அதிகாரஅமைப்பானது, அரசின் முன்
அனுமதியுடன், பிரிவு 25இன்படியான அதிகாரங்களைத்
தவிர்த்து அதனுடைய அனைத்து அல்லது எந்தவொரு
அதிகாரம் அல்லது செயற்பணிகளை முப்பது
ஆண்டுகளுக்கு மிகாத ஒரு காலத்திற்கு ஒரே நேரத்தில்
ஒப்படைவு செய்யலாம்.
வரம்புரை: இந்தப் பிரிவின்படி எந்தக் காலத்திற்காக.
ஒப்படைவு செய்யப்பட்டதோ அந்தக் காலமானது,
வெவ்வேறு வகையான அதிகாரம் மற்றும்
செயற்பணிகளுக்காக மாறுபடலாம்.
(2) உட்பிரிவு (1)இன்படி ஒப்படைவு செய்யப்பட்ட
அதிகாரம் மற்றும் செயற்பணிகள், கூறப்பட்ட சிறப்பு நோக்க
நிறுமமானது, அரசு நிறுமமாக இருப்பது
அற்றுப்போகுமேயானால் திரும்பப் பெறப்படும்.]
24, விதிகளைச் செய்வதற்கான அதிகாரம். (1)
அரசானது, அறிவிக்கை வாயிலாக, இந்தச் சட்டத்தின்
நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான விதிகளைச்
செய்யலாம்.
(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்
அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல்
வேண்டும்; மற்றும் அவை குறிப்பிட்ட ஒரு நாளில்
நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத்
தெரிவிக்கப் பட்டிருந்தால் அன்றி, அவை அவ்வாறு
வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
1. 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலியல் நகரியப் பகுதி மேம்பாட்டு
அதிகாரஅமைப்பு (திருத்தச்) சட்டத்தின் 3ஆம் பிரிவினால்
உட்புகுத்தப்பட்டது.
22
(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட
அறிவிக்கைகள் அனைத்தும், அவை குறிப்பிட்டதொரு
நாளில். நடைமுறைக்கு வருதல் வேண்டுமென
வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை,
அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு
வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட விதி ஆணை அல்லது அறிவிக்கை
ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடியவிரைவில் சட்டமன்றப்
பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது
அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது
அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர்
அத்தகைய விதி, ஆணை அல்லது அறிவிக்கை எதிலும்
மாறுதல்: எதனையும் சட்டமன்றப் பேரவையானது
செய்யுமானால் அல்லது அத்தகைய விதி, ஆணை அல்லது
அறிவிக்கை எதுவும் செய்யப்படுதலோ அல்லது
பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப்பேரவை
முடிவு செய்யுமானால், அந்த விதி, ஆணை அல்லது
அறிவிக்கை அதன்பின்னர் அவ்வாறு
மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே செயல்விளைவு
பெறுதல் வேண்டும் அல்லது நிகழ்விற்கேற்ப
செயல்விளைவு பெறாமலேயே போகும்; எனினும்,
அவ்வாறு மாறுதல் செய்தது அல்லது செயல்விளைவு
பெறாது போனது எதுவும், அந்த விதி, ஆணை அல்லது
அறிவிக்கையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல்
ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல்
வேண்டும்.
25. ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.-
(1) அதிகாரஅமைப்பானது, அதன் விவகாரங்களை
நிருவகித்து வருவதற்காக, இந்தச் சட்டத்தின் அல்லது
அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகளுக்கு
23
முரணாக இல்லாதவகையில் அரசின் முன் அனுமதியுடன்:
ஒழுங்குவிதிகளைச் செய்யலாம்.
(2) குறிப்பாகவும், முன்சென்ற அதிகாரத்தின்
பொதுப்பாங்கிற்குக் ஊறின்றியும், அத்தகைய
ஒழுங்குவிதிகள். பின்வருகின்ற விவரங்கள்
அனைத்திற்கும் அல்லது அவற்றுள் ஏதொன்றிற்கும்
வகைசெய்யலாம், அதாவது:-
(௨) அதிகாரஅமைப்பின்: கூட்டத்தினை
நடத்துவதற்கு அழைப்புவிடுத்தல், கூட்டங்கள்
நடைபெறுவதற்குரிய நேரம் மற்றும் இடம், கூட்டங்களில்
ஆற்றப்படவேண்டிய அலுவல்கள், அதில்
குறைவெண்வரம்பு அமைவதற்கான உறுப்பினர்களின்:
எண்ணிக்கை;
(b) தலைமைச் செயல் அலுவரின்
அதிகாரங்கள் மற்றும் கடமைகள்;
(c) அதிகாரஅமைப்பினால் பேணிவரப்பட
வேண்டிய பதிவேடுகளின் படிவம்;
(0) அதிகாரஅமைப்பின்: சொத்துக்களை
மேலாண்மை செய்தல்,
(6) அதன் செயல்பணிகளை ஆற்றுகையில்
விதிக்கப்படவேண்டிய கட்டணங்கள்;
() அதிகாரஅமைப்பின் அலுவலர்கள் மற்றும்
பணியாளர்களின் பணி நிபந்தனைகள்; மற்றும்
(ற ஒழுங்குவிதிகளில் வகை செய்யப்பட
வேண்டிய பிற விவரங்கள்.
26. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில்
இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால், அரசு, ஆணையின்
வாயிலாக, அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத்
24
தேவையானதாகவோ உகந்ததாகவோ தமக்குத்
தோன்றுகிற இந்தச் சட்டத்திற்கு முரணாக இல்லாத
அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரை : ஆனால், இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட
தேதியிலிருந்து இரண்டாண்டு காலஅளவு முடிவடைந்த
பிறகு அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல்
கூடாது.
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.