Tamil Nadu · 1979 · Act 55

Tamil Nadu Horse Race (Abolition of Turf Agencies) Act, 1979

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குதிரைப்‌ பந்தயங்கள்‌ (நடத்தும்‌ முகமைகளை ஒழித்தல்‌) சட்டம்‌. (தமிழ்நாடு சட்டம்‌ 551979) பிரிவுகளின்‌ அமைப்பு 1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. 3. பந்தயம்‌ நடத்தும்‌ முகமைகள்‌ முறையை ஒழித்தல்‌. 4. பந்தயம்‌ நடத்தும்‌ முகமைகளின்‌ அமைப்பைத்‌ தடை செய்தல்‌. 5. தண்டனை. 6. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌. 7. விலக்குரிமை. 8. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 9. இச்சட்டம்‌, பிற சட்டங்கள்‌, தீர்ப்பாணைகள்‌ முதலியவற்றை ம்தூர்ந்து இருத்தல்‌. 10. நீக்கறவும்‌ காப்புரையும்‌. 1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குதிரைப்‌ பந்தயங்கள்‌ (நடத்தும்‌ முகமைகளை ஒழித்தல்‌) சட்டம்‌. (தமிழ்நாடு சட்டம்‌ 551979) [1979 டிசம்பர்‌, 3] தமிழ்நாடு மாநிலத்தில்‌ ஏதேனும்‌ குதிரைப்‌ பந்தயம்‌ தொடர்பான. அதனை நடத்தும்‌ முகமை முறையினை ஒழிப்பதற்கு வகைசெய்வதற்கானதொரு சட்டம்‌. இந்திய குடியரசின்‌ முப்பதாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றத்தால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இச்சட்டம்‌, 1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குதிரைப்‌ பந்தயங்கள்‌ (நடத்தும்‌ முகமைகளை ஒழித்தல்‌) சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது, 1979 ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ திங்கள்‌ 19 ஆம்‌ நாளன்று நடைமுறைக்கு வந்ததாகக்‌ கருதப்படும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாயின்‌ தேவை வேறானாலன்றி,- (8) "பந்தயம்‌ கட்டுதல்‌" என்பது பணையம்‌ வைத்தலை உள்ளடக்கும்‌; (b) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்‌; (9) "குதிரை" என்பது ஒரு ஆண்‌ குதிரை என்று பொருள்படும்‌ மற்றும்‌ பெண்‌: குதிரை, விரை நீக்கப்பட்ட குதிரை, பெண்‌ குதிரைக்குட்டி, மட்டக்குதிரை அல்லது எந்தப்‌ பெயரில்‌ அழைக்கப்பட்டாலும்‌ ஏதேனும்‌ பிற குதிரையையும்‌ உள்ளடக்கும்‌; (0) "குதிரைப்‌ பந்தயம்‌" என்பது, (i) தன்மை அல்லது வகை எதுவாயினும்‌ பரிசுக்காக, அல்லது (i) செய்யப்பட்ட அல்லது செய்யப்பட வேண்டிய எந்தவொரு பந்தயம்‌ கட்டுதலுக்காகவும்‌, அல்லது 0) அத்தகைய குதிரை அல்லது குதிரை சவாரிசெய்பவர்‌ தொடர்பான அத்தகைய பரிசு மற்றும்‌ பந்தயம்‌ கட்டுதல்‌ இரண்டிற்காகவும்‌, 2 ஏதேனும்‌ பிற குதிரையுடன்‌ போட்டியிட குதிரை எதுவும்‌ ஓடுகிற அல்லது ஓடச்செய்கிற எந்தவொரு பந்தயமும்‌ என்று பொருள்படும்‌. (6) "பந்தயம்‌ நடத்தும்‌ முகமை" என்பது, குதிரைப்‌ பந்தயத்தில்‌ ஓடும்‌ ஏதேனும்‌ குதிரை தொடர்பாகவோ அல்லது அத்தகைய குதிரை சவாரி செய்பவர்‌ எவரேனும்‌ தொடர்பாகவோ தரகு அல்லது ஊதியத்திற்காக,- (i) பொதுமக்களிடம்‌ இருந்து பந்தயம்‌ கட்டும்‌ தொகை பெறுகிற, அல்லது 0) பந்தயக்காரர்கள்‌ சார்பாக நுழைவுச்‌ சீட்டு வாங்குகிற, அல்லது (1) பந்தயக்காரர்கள்‌ சார்பாக பந்தயம்‌ கட்டுகிற, அலுவல்களை மேற்கொள்ளும்‌ எந்தவொரு முகமையையும்‌ குறிக்கும்‌. (f) "பந்தயம்‌ நடத்தும்‌ முகவர்‌" என்பது, குதிரைப்‌ பந்தயத்தில்‌ ஓடும்‌ ஏதேனும்‌ குதிரை தொடர்பாகவோ அல்லது அத்தகைய குதிரை சவாரி செய்பவர்‌ எவரேனும்‌ தொடர்பாகவோ தரகு அல்லது ஊதியத்திற்காக,- (i) பொதுமக்களிடம்‌ இருந்து பந்தயம்‌ கட்டும்‌ தொகை பெறுகிற, அல்லது (0) பந்தயக்காரர்கள்‌ சார்பாக நுழைவுச்‌ சீட்டு வாங்குகிற, அல்லது (1) பந்தயக்காரர்கள்‌ சார்பாக பந்தயம்‌ கட்டுகிற, அலுவல்களை மேற்கொள்ளும்‌ எந்தவொரு நபரையும்‌ குறிக்கும்‌. 3. பந்தயம்‌ நடத்தும்‌ முகமைகள்‌ முறையை ஒழித்தல்‌.- குதிரைப்‌ பந்தயம்‌ எதனையும்‌ பொறுத்த வரையில்‌, பந்தயம்‌ நடத்தும்‌ முகமை அல்லது பந்தயம்‌ நடத்தும்‌ முகவர்‌ ஆகியோரின்‌ அலுவல்களை நடத்தும்‌ முறையானது இதன்மூலம்‌ ஒழிக்கப்படுகிறது. 4. பந்தயம்‌ நடத்தும்‌ முகமைகளின்‌ அமைப்பைத்‌ தடை செய்தல்‌.- குதிரைப்‌ பந்தயம்‌ எதனையும்‌ பொறுத்த வரையில்‌, நபரெவரும்‌, பந்தயம்‌ நடத்தும்‌ முகமை அல்லது பந்தயம்‌ நடத்தும்‌ முகவர்‌ அலுவல்களை மேற்கொள்ளலாகாது. 5. தண்டனை. 4 ஆம்‌ பிரிவு அல்லது இச்சட்டத்தின்படி இயற்றப்பட்ட வகைமுறைகளை மீறுகின்ற அல்லது மீறுவதற்கு உடந்தையாக இருக்கும்‌ எவரேனும்‌, மூன்றாண்டுகள்‌ வரை நீடிக்கக்கூடிய கடுங்காவல்‌ தண்டனையும்‌, அபராதமும்‌ விதிக்கத்தக்கவராவார்‌. 6. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌.- (1) இச்சட்டத்தின்கீழ்‌ குற்றம்‌ எதுவும்‌ நிறுமத்தால்‌ செய்யப்பட்டிருப்பின்‌, அக்குற்றத்தின்போது, அந்நிறுமத்தின்‌ அலுவல்‌ நடைபெறுவதற்கு அந்நிறுமத்தின்‌ பொறுப்பிலிருந்த மற்றும்‌ பொறுப்பைக்‌ கொண்டிருந்த நபர்‌ ஒவ்வொருவரும்‌, மற்றும்‌ அந்நிறுமமும்‌ அக்குற்றத்தைச்‌ செய்திருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவும்‌ அதற்கிணங்க தண்டிக்கப்படவும்‌ வேண்டும்‌. வரம்புரையாக, இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, அத்தகைய நபர்‌ எவரும்‌, அக்குற்றம்‌ தமக்குத்‌ தெரியாமலேயே செய்யப்பட்டிருப்பதாக அல்லது அத்தகைய குற்றத்தை தடுக்க தம்மால்‌ இயன்ற அனைத்தையும்‌ செய்ததாக மெய்ப்பித்தால்‌, அத்தகைய நபருக்கு தண்டனை எதுவும்‌ விதித்தல்‌ ஆகாது. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, இச்சட்டத்தின்‌ கழ்‌ குற்றம்‌ எதனையும்‌ நிறுமமொன்று செய்திருக்கிறவிடத்து, அந்த குற்றமானது, அந்நிறுமத்தின்‌ இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது பிற அலுவலர்‌ எவரின்‌ அனுமதியுடன்‌ அல்லது உடந்தையுடன்‌ அல்லது அவருடைய கவனமின்மை காரணமாக செய்யப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால்‌, அத்தகைய இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌, அல்லது பிற அலுவலர்‌ அந்த குற்றத்தைச்‌ செய்திருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவும்‌ அதற்கிணங்க தண்டிக்கப்படவும்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, (வ "நிறுமம்‌" என்பது, எந்தவொரு கூட்டு நிறுவனம்‌ என்று பொருள்படும்‌ மற்றும்‌ ஒரு நிறுவகம்‌ அல்லது பிற தனி நபர்களின்‌ கழகத்தையும்‌ உள்ளடக்கும்‌; மற்றும்‌ (௦) "இயக்குநர்‌" என்பவர்‌, ஒரு நிறுவகத்தைப்‌ பொறுத்தவரையில்‌, நிறுவகத்தில்‌ ஒரு பங்குதாரர்‌ ஆவார்‌. 7. விலக்குரிமை.- (1) இச்சட்டத்தின்படி அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதியின்கீழ்‌ செய்யப்பட்ட அல்லது செய்யப்பட்டதாகக்‌ கருதப்படும்‌ செயல்‌ எதற்காகவும்‌ அரசுக்கு எதிராக உரிமை வழக்கோ அல்லது பிற நடவடிக்கையோ தொடரப்படுதல்‌ ஆகாது. (2) இந்தச்‌ சட்டத்தின்படி அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதி எதன்கீழும்‌ நல்லெண்ணத்துடன்‌ செய்யப்பட்ட அல்லது செய்யப்பட்டதாகக்‌ கருதப்படும்‌ செயல்‌ எதற்கும்‌ அரசு, அதிகாரஅமைப்பு அல்லது அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ எவருக்கும்‌ எதிராக உரிமை வழக்கு, குற்றவியல்‌ வழக்கு, அல்லது பிற நடவடிக்கை எதுவும்‌ தொடர்தல்‌ ஆகாது. 8. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) அரசானது, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ அனைத்தும்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டுமென வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும்‌ அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பிண்னர்‌, கூடிய விரைவில்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்னர்‌ அத்தகைய விதி எதிலும்‌ மாறுதல்‌ எதனையும்‌ சட்டமன்றப்‌ பேரவையானது செய்யுமாயின்‌ அல்லது அத்தகைய விதி எதுவும்‌ செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமாயின்‌, அந்த விதியானது. அதன்பின்னர்‌ அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌ அவ்வாறான மாறுதல்‌ அல்லது நீக்கம்‌ எதுவும்‌, அந்த விதியின்படி முன்னரே செய்யப்பட்ட செயல்‌ ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 9. இச்சட்டம்‌, பிற சட்டங்கள்‌, தீர்ப்பாணைகள்‌ முதலியவற்றை மீதூர்ந்து இருத்தல்‌.- தற்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள ஏதேனும்‌ பிற சட்டம்‌ அல்லது வழக்காறு, வழக்கம்‌, அல்லது உடன்படிக்கை ஏதொன்றிலும்‌, அல்லது நீதிமன்றம்‌, தீர்ப்பாயம்‌, அல்லது பிற அதிகார அமைப்பொன்றின்‌ தீர்ப்பாணை அல்லது ஆணை ஏதொன்றிலும்‌ அதற்கு முரணாக என்ன அடங்கியிருந்தபோதிலும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ செயல்‌ விளைவு கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. 10. நீக்கறவும்‌ காப்புரையும்‌.-- (1) 1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குதிரைப்‌ பந்தயங்கள்‌ (நடத்தும்‌ முகமைகளை ஒழித்தல்‌) அவசர சட்டம்‌ (தமிழ்நாடு அவசர சட்டம்‌ 201979) ஈங்கிதனால்‌ நீக்கறவு செய்யப்படுகிறது. 5 (2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும்‌, கூறப்பட்ட அவசர சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்ட எதுவும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்‌, அவை இந்தச்‌ சட்டத்திற்கு முரணாக இல்லாத அளவுக்கு, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்டதாகவோ எடுக்கப்பட்டதாகவோ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்ட எதனாலும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும்‌ நீக்கப்பட்டாலன்றி, அதற்கிணங்க தொடர்ந்து செல்லாற்றலில்‌ இருந்து வருதல்‌ வேண்டும்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts