Tamil Nadu · 1955 · Act 18

Tamil Nadu Hill Area (preservation of Trees) Act 1955

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1955 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மலைப்பகுதிகள்‌ (மரங்கள்‌ பாதுகாப்புச்‌) சட்டம்‌. (சட்டம்‌ XVIIl ௭1955) (1955 ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ திங்கள்‌ 02 ஆம்‌ நாளன்று ஆளுநரின்‌ ஏற்பிசைவைப்‌ பெற்றது) பொருளடக்கம்‌ 1. குறுந்தலைப்பு மற்றும்‌ பொருந்துகை. 2. பொருள்‌ வரையறைகள்‌. 2-4. குழு அமைத்தல்‌. 2-8. குழுவின்‌ கூட்டங்கள்‌. 2-&.குழு முதலியவற்றில்‌ ஏற்படும்‌ காலியிடம்‌, செயல்கள்‌ அல்லது நடவடிக்கைகளை செல்லுந்தன்மையற்றதாக ஆக்காது. 3.மரங்களை வெட்டுவதற்கு தடை. 4.பயிரிடுவதை தடைசெய்தல்‌. 5. அனுமதிக்கான விண்ணப்பம்‌. 6. மேல்முறையீடு. 7. தண்டத்தொகை. 8.பறிமுதல்‌. 9.[விட்டுவிடப்பட்டது] 10. நுழைதல்‌ மற்றும்‌ ஆய்விற்கான அதிகாரம்‌. M. குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌. 12. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 13. காப்புரை. 14. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. குறுந்தலைப்பு மற்றும்‌ பொருந்துகை. பொருள்‌: வரையறைகள்‌. தமிழ்நாட்டு மாநிலத்தில்‌ உள்ள மலைப்பகுதிகளில்‌ மரங்கள்‌ வெட்டுவதை மற்றும்‌ பயிரிடும்‌ நிலங்களை முறைப்படுத்த வகைஸடசய்வதற்கானதொரு சட்டம்‌. தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ பின்வரும்‌ சட்டமானது 1955 ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ திங்கள்‌ 02 ஆம்‌ நாளன்று ஆளுநரின்‌ ஏற்பிசைவைப்‌ பெற்றது, மற்றும்‌ பொதுத்‌ தகவலுக்காக இதன்மூலம்‌ வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில்‌ உள்ள மலைப்‌ பகுதிகளில்‌ கண்மூடித்தனமாக மரங்கள்‌ வெட்டப்படுவதால்‌ பெறிய அளவில்‌ காடுகள்‌ அழிக்கப்பட்டு கணிசமான அளவு மண்‌ அரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதாலும்‌, மேலும்‌, காடழிப்பு மற்றும்‌ மண்‌ அரிப்பைத்‌ தடுக்கவும்‌, மலைப்பகுதிகளின்‌ நிலத்தோற்றம்‌, தாவர அடர்த்தி மற்றும்‌ காலநிலை ஆகியவற்றைப்‌ பாதுகாக்கவும்‌, மரங்களை வெட்டுவதையும்‌ மலைப்பகுதிகளில்‌ உள்ள நிலங்களில்‌ பயிரிடுவதையும்‌ ஒழுங்குபடுத்துவது அவசியமாகிறது. இந்திய குடியரசின்‌ ஆறாம்‌ ஆண்டில்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. (1) இந்தச்‌ சட்டம்‌, 1955 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மலைப்பகுதிகள்‌ (மரங்கள்‌ பாதுகாப்புச்‌) சட்டம்‌ என்று அழைக்கப்படும்‌. (2 அரசு, அறிவிக்கை வாயிலாக, இச்சட்டம்‌ பொருந்துறுகின்ற மலைப்பகுதிகள்‌ எதிலிருந்தும்‌, பகுதி எதனின்‌ அருகாமையிலுள்ள அத்தகைய பகுதி எதிலும்‌ உள்ள அல்லது அப்பகுதிக்குள்‌ உள்ளடங்கிய பகுதி எதனையும்‌ நீக்கலாம்‌. 2. இச்சட்டத்தில்‌, தறுவாய்‌ வேண்டப்பட்டாலன்றி.- (a) "குழு" என்பது 2-& பிரிவின்கீழ்‌ அமைக்கப்பட்ட மற்றும்‌ அதிகாரவரம்பைக்‌ கொண்ட எந்தவொரு குழுவும்‌ என்று பொருள்படும்‌; குழு அமைத்தல்‌. (b) "பயிரிடுதல்‌" என்பது தானியங்கள்‌, பருப்பு வகைகள்‌ அல்லது தோட்டப்‌ பயிர்களை வளர்த்தல்‌ என்று பொருள்படும்‌, ஆனால்‌ சமையலறை தோட்டங்கள்‌ அல்லது பூந்தோட்டங்களை வளர்ப்பதை உள்ளடக்காது; விளக்கம்‌: இந்தக்‌ கூறில்‌ சமையலறைத்‌ தோட்டம்‌" என்பது ஒரு குடியிருப்புக்கு ஐம்பது சென்ட்களுக்கு மேற்படாத பகுதி மற்றும்‌ அங்கு வசிப்பவர்களின்‌ உண்மையான நுகர்வுக்காக காய்கறிகளை வளர்க்கப்‌ பயன்படுத்தப்படும்‌ பகுதி என்று பொருள்படும்‌; (௦) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்‌. (0) "புதிய பயிரிடுதல்‌" என்பது தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக பயிரிடப்படாமல்‌ இருந்த நிலத்தை பயிரிடுதல்‌ என்று பொருள்படும்‌; (6) "அறிவிக்கை" என்பது தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படும்‌ அறிவிக்கை என்று பொருள்படும்‌; (9) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது இந்த சட்டத்தின்‌ கீழ்‌ உருவாக்கப்பட்ட விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்‌; (9) "மரம்‌" என்பது மூங்கிலை உள்ளடக்கும்‌, ஆனால்‌ முட்செடிகளை உள்ளடக்காது. 2-A. (1) அரசு, அறிவிக்கை வாயிலாக, அதில்‌ குறித்துரைக்கப்படும்‌ தேதியிலிருந்து திறம்பட ஒவ்வொரு மலைப்பகுதிக்கும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கத்திற்காகப்‌ பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்ட ஒரு குழுவை அமைக்கலாம்‌, அவையாவன:- (a) குழுவின்‌ தலைவராக அதிகார வரம்பைக்‌ கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர்‌, (b) மலைப்பகுதியின்‌ அதிகார வரம்பைக்‌ கொண்ட மாவட்ட வன அலுவலர்‌; குழுவின்‌ கூட்டங்கள்‌. குழு முதலியவற்றில்‌ ஏற்படும்‌ காலியிடம்‌, செயல்கள்‌ அல்லது நடவடிக்கைக (c) மலைப்பகுதியின்‌ அதிகார வரம்பைக்‌ கொண்ட வட்டாட்சியர்கள்‌; (0) மலைப்பகுதியின்‌ அதிகார வரம்பைக்‌ கொண்ட மண்‌: பாதுகாப்புக்குப்‌ பொறுப்பான வேளாண்‌ துறையின்‌ செயற்பொறியாளர்‌; (e) மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (பொது), குழுவின்‌ செயலாளராக இருப்பார்‌. 2-8. (1) குழுவானது, தேவைப்படும்‌ போதெல்லாம்‌ கூடலாம்‌ மற்றும்‌, (2) மற்றும்‌ (3) ஆகிய உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, இச்சட்டத்தின்படி அரசால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ (கூட்டங்களில்‌ குறைவெண்‌ உட்பட) அலுவல்‌ நடவடிக்கை தொடர்பான அத்தகைய நடைமுறை விதிகளைக்‌ கடைப்பிடித்தல்‌ வேண்டும்‌. வரம்புரையாக, குழுவின்‌ ஒரு கூட்டத்திற்கும்‌ மற்றொன்றுக்கும்‌ இடையில்‌ இண்டு மாதங்களுக்கு மேற்படலாகாது. (2. குழுவின்‌ தலைவர்‌ அல்லது அவர்‌ இல்லாதபோது அதற்கென அவரால்‌ நியமிக்கப்பட்ட எவரேனும்‌ உறுப்பினர்‌ குழுவின்‌ கூட்டத்திற்குத்‌ தலைமை வகித்தல்‌ வேண்டும்‌. (3) குழுவின்‌ கூட்டமொன்றில்‌ எழும்‌ அனைத்துப்‌ பிரச்சினைகளும்‌, கூட்டத்திற்கு வருகை தந்து வாக்களிக்கும்‌ உறுப்பினர்களின்‌ பெரும்பான்மை வாக்குகளால்‌ தீர்மானிக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ வாக்குகள்‌ சமமாயிருக்கும்‌ நேர்வில்‌, குழுவின்‌ தலைவர்‌ அல்லது அவர்‌ இல்லாத போது தலைமை வகிக்கும்‌ நபர்‌ இரண்டாவது அல்லது அறுதிசெய்யும்‌ வாக்கு அளித்தல்‌ வேண்டும்‌. 2-6 அரசின்‌ செயல்‌ அல்லது நடவடிக்கைகள்‌ எதுவும்‌, குழுவில்‌ காலியிடம்‌ எதுவும்‌ இருக்கிறது அல்லது உறுப்பினர்‌ ஒருவரின்‌ நியமனத்தில்‌ குறைபாடு இருக்கிறது. அல்லது குழுவின்‌ ஒரு கூட்டத்திற்கும்‌ மற்றொரு கூட்டத்திற்கும்‌ இடையில்‌ இரண்டு மாதங்களுக்கு மேல்‌ கழிந்துள்ளது என்ற காரணத்தால்‌ மட்டுமே செல்லுந்தன்மையற்றதாகக்‌ ளை செல்லுந்தன்மை யற்றதாக ஆக்காது. மரங்களை வெட்டுவதற்கு தடை. கொள்ளப்படுதல்‌ ஆகாது. 3. (0). குழுவின்‌ எழுத்துப்பூர்வ முன்‌ அனுமதியின்றி, எந்தவொரு நபரும்‌ - (ஐ) மரம்‌ எதனையும்‌ வெட்டுதல்‌, வேரோடு பிடுங்குதல்‌ அல்லது எரித்தல்‌, அல்லது அவ்வாறு வெட்டுதல்‌, பிடுங்குதல்‌ அல்லது எரிக்கச்‌ செய்வித்தல்‌ கூடாது, அல்லது (b) உயிருக்கோ, உடைமைக்கோ அபாயம்‌ விளைவிக்கக்கூடிய அல்லது இறந்த அல்லது நோயுற்ற அல்லது காற்றினால்‌ வீழ்ந்த, அல்லது மர முதிர்ச்சியடைந்த ஏதேனும்‌ மரத்தை வெட்டவோ அல்லது அகற்றவோ கூடாது, அல்லது (29) அரசு அறிவிக்கை வாயிலாகக்‌ குறிப்பிடும்‌ மலைப்பகுதியில்‌ உள்ள காப்பித்‌ தோட்டம்‌ எதிலும்‌ காப்பி பயிரை மேம்படுத்துவதற்காக மரம்‌ எதனையும்‌ வெட்டவோ அல்லது அகற்றவோ கூடாது; வரம்புரையாக, மேலே (8) முதல்‌ (௦) வரையிலான கூறுகளில்‌ குறிப்பிடப்பட்ட காரணங்களின்‌ அடிப்படையில்‌ ஒரு மரத்தை வெட்டுவதற்கு அல்லது அகற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுமிடத்து, குழுவானது. அதே எண்ணிக்கையிலான அல்லது பிற பொருத்தமான மர இனங்களின்‌ திறன்மிக்க மீளுருவாக்கத்தை ஒரு நிபந்தனையாக விதிக்கலாம்‌ மற்றும்‌ அந்த நோக்கத்திற்காக, ஒவ்வொரு மரத்திற்கும்‌ நூறு ரூபாய்க்கு மேற்படாத தொகையை குழுவிடம்‌ வைப்பீடு செய்யுமாறு அனுமதி வழங்கப்பட்ட நபரை, ஏதேனும்‌ மரத்தை வெட்டவோ அல்லது அகற்றவோ அணுமதிக்கப்படுகிறது. (1-&) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, அவ்வாறு வெட்டப்பட்ட நிலம்‌, காப்பி அல்லது தேயிலை பயிரிடுவதற்குப்‌ பயன்படுத்தப்பட வேண்டும்‌ என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, எந்தவொரு நிலத்தையும்‌ பயிரிடுவதை தடைசெய்தல்‌. வெட்டுதல்‌, வேரோடு பிடுங்குதல்‌ அல்லது எரித்தல்‌ அல்லது அவ்வாறு வெட்டுதல்‌, பிடுங்குதல்‌ அல்லது எரிக்கச்‌ செய்வித்தல்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ எந்தவொரு நிலத்தையும்‌ சுத்தம்‌ செய்வதற்கு அரசால்‌ அனுமதி வழங்கப்படலாம்‌. (2) எந்தவொரு நபரும்‌, கிளை அல்லது எந்த மரத்தையும்‌ வெட்டவோ அல்லது சேதப்படுத்தவோ அல்லது வெட்டவோ அல்லது சேதப்படுத்தச்‌ செய்விக்கவோ கூடாது; வரம்புரையாக, சாதாரண வேளாண்மை அல்லது தோட்டக்கலை நடைமுறையில்‌ தேவைப்படும்‌ எந்தவொரு தடயத்தையும்‌ சீரமைப்பதை தடுப்பதாக கருதப்படுதல்‌ ஆகாது; மேலும்‌ வரம்புரையாக, இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, காப்பி அல்லது தேயிலை தோட்டத்திற்கு சரியாண நிழலை வழங்கும்‌ நோக்கத்திற்காக எந்த மரத்தின்‌ கிளையையும்‌ வெட்டுவதையோ அல்லது சீரமைப்பதையோ தடுப்பதாகக்‌ கருதப்படாது. 4. (1) மரங்களை வளறர்ப்பதைத்‌ தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும்‌, மூன்றில்‌ ஒன்றுக்கு மேற்பட்ட சரிவுக்குள்‌ உள்ள எந்தவொரு நிலத்தையும்‌ எந்தவொரு நபரும்‌ பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்தச்‌ செய்விக்கவோ கூடாது. (2) குழுவின்‌ முன்‌ அனுமதியின்றி, எவரொருவரும்‌, மூன்றில்‌ ஒன்றுக்கும்‌ குறைவான சரிவுக்குள்‌ நிலம்‌ எதனையும்‌ புதிய பயிரிடுதலுக்காகப்‌ பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்தச்‌ செய்விக்கவோ கூடாது. அக்குழு, அத்தகைய அனுமதியை வழங்குகையில்‌, மண்வளப்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ தொடர்பானவை உள்ளடங்கலாக, அது, பொருத்தமெனக்‌ கருதும்‌ நிபந்தனைகளை விதிக்கலாம்‌. (3) எவரொருவரும்‌, இச்சட்டம்‌ நடைமுறைக்கு வந்த தேதியிலிருந்து ஓராண்டு முடிவுற்ற பின்பு, மூன்றில்‌ ஒன்றுக்குக்‌ குறைவான சரிவைக்‌ கொண்ட அத்தகைய மலைப்பகுதியில்‌ உள்ள ஏதேனும்‌ நிலத்தைப்‌ பயிரிடூவதற்குப்‌ பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்தச்‌ செய்விக்கவோ கூடாது. அத்தகைய அனுமதியை வழங்கும்போது, குழுவானது, மண்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ தொடர்பான நிபந்தனைகள்‌ உட்பட அது பொருத்தமானதாகக்‌ கருதும்‌ நிபந்தனைகளை விதிக்க 6 அனுமதிக்கான விண்ணப்பம்‌ மேல்முறையீடு. தண்டத்தொகை. பறிமுதல்‌. வேண்டும்‌. (3) (2 மற்றும்‌ (3) ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, பத்தில்‌ ஒன்றுக்கும்‌ குறைவான சரிவைக்‌ கொண்ட எந்தவொரு நிலத்திற்கும்‌ பொருந்தாது. 5. அனுமதிக்கான ஒவ்வொரு விண்ணப்பமும்‌, குழுவுக்கு எழுத்து மூலமாகச்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்தில்‌ இருத்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அத்தகைய விபரங்களையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. 6. 3 ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 4 ஆம்‌ பிரிவின்கீழ்‌ அனுமதி வழங்க மறுக்கும்‌ ஓர்‌ ஆணையினால்‌ பாதிக்கப்பட்ட எவரும்‌, அத்தகைய ஆணை கிடைக்கப்பெற்ற இரண்டு மாதங்களுக்குள்‌ அரசிடம்‌ எழுத்து மூலம்‌ மேல்முறையீடு செய்யலாம்‌, மேல்முறையீட்டாளருக்கு விளக்கம்‌ அளிப்பதற்கான வாய்ப்பு அளித்த பின்பு, அதன்‌ மீது, அரசு, பொருத்தமெனக்‌ கருதலாம்‌ அத்தகைய ஆணையைப்‌ பிறப்பிக்கவும்‌, 7. 3 ஆம்‌ அல்லது 4 ஆம்‌ பிரிவின்கீழ்‌ குற்றம்‌ ஒன்றைப்‌ புரிந்தவராகவுள்ள அல்லது இச்சட்டத்தின்கீழ்‌ வழங்கப்பட்ட அனுமதியொன்றில்‌ விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறுகின்ற எவரேனுமொருவர்‌, குற்றத்தீர்ப்பின்‌ பேரில்‌, ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது ஐந்நூறு ரூபாய்‌ வரை ந்டிக்கக்கூடிய தண்டத்தொகை அல்லது இரண்டும்‌ விதிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 8. 7 ஆம்‌ பிரிவின்படி ஒருவரைக்‌ குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும்‌ எந்த நீதிமன்றமும்‌, அக்குற்றத்தைச்‌ செய்வதற்குப்‌ பயன்படுத்தப்பட்ட கருவிகளையும்‌ பிற பொருள்களையும்‌ பறிமுதல்‌ செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடலாம்‌. 9. [விட்டுவிடப்பட்டது] நுழைதல்‌ மற்றும்‌ ஆய்விற்கான அதிகாரம்‌. குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்‌ ளுதல்‌. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. காப்புரை. இர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. 10. குழுவானது, இச்சட்டத்தின்‌ வகைமுறைகளில்‌ எவற்றிலும்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட ஏதேனும்‌ விதி அல்லது ஆணை, எந்நேரத்திலும்‌ முரண்பட்டுள்ளதா என்பதைக்‌ கண்டறிவதற்காக, அதன்‌ சார்நிலைப்‌ பணியாளர்களுடனும்‌ பணியாளர்களுடனும்‌ அல்லது அவர்கள்‌ இல்லாமலும்‌ எந்த இடத்திலும்‌ நுழைந்து ஆய்வு செய்யலாம்‌. 11. குழுவின்‌ எழுத்து மூலமான புகார்‌ அளிக்கப்பட்டாலன்றி, 7 ஆம்‌ பிரிவின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல்‌ எதனையும்‌ எந்த நீதிமன்றமும்‌ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌ ஆகாது. 12. இச்சட்டத்தின்‌ நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, அரசு, அறிவிக்கை வாயிலாக, விதிகளைச்‌ செய்யலாம்‌. 13. 1973 ஆம்‌ ஆண்டு குற்றவியல்‌ நடைமுறைச்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 21974) 133 பிரிவிற்கு இணங்க, ஒரு மரத்தை வெட்டுவதற்கும்‌, அகற்றுவதற்கும்‌ இந்தச்‌ சட்டத்தில்‌ உள்ள எதுவும்‌ பொருந்தாது. 14. இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளைச்‌ செயல்படுத்துவதில்‌ இடர்ப்பாடு ஏதும்‌ எழுமாயின்‌, இடர்ப்பாட்டை நீக்குவதற்கு அவசியமெனத்‌ தமக்குத்‌ தோன்றும்‌ எதனையும்‌, சூழ்நிலைகளுக்கேற்ப அரசு, ஆணையின்‌ வாயிலாகச்‌ செய்யலாம்‌. இணைபப்புப்‌ பட்டியல்‌ [1(2) பிரிவைக்‌ காண்க] 1. குன்னூர்‌ நகராட்சி பகுதி. 2. கொடைக்கானல்‌ நகராட்சி பகுதி. 3. உதகமண்டல நகராட்சி பகுதி. 4. ஏற்காடு பஞ்சாயத்து பகுதி. 1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மலை வாழிடங்கள்‌ (மரங்கள்‌ பாதுகாப்பு) திருத்தச்‌ சட்டத்தின்‌, 15 ஆம்‌ பிரிவின்படி கீழ்க்கண்டவாறு வகைசெய்யப்பட்டுள்ளது:- " முதன்மைச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்ட அல்லது வழங்கப்பட்ட எந்தவொரு விதி, அறிவிக்கை, செயல்முறை, ஆணை, ஒழுங்குமுறை, துணை விதி அல்லது பிற முறை ஆவணம்‌ எதிலும்‌, தமிழ்நாடு மலை வாழிடங்கள்‌ (மரங்கள்‌ பாதுகாப்பு) சட்டம்‌ பற்றிய சுட்டுகையானது, தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள்‌ பாதுகாப்பு) சட்டத்திற்கான சுட்டுகையாகப்‌ பொருள்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌”.

Rules, notifications and orders under this Act

Listed from India Code. Each opens there.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts