Tamil Nadu · 2012 · Act 21

TAMIL NADU FISHERIES UNIVERSITY ACT 2012 UPDATED UPTO NOVEMBER 2022

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ பின்வரும்‌ சட்டமானது, 2012ஆம்‌ ஆண்டு மே திங்கள்‌ 31-ஆம்‌ நாளன்று ஆளுநரின்‌ ஏற்பிசைவைப்‌ பெற்றது; மற்றும்‌ அது பொதுத்‌ தகவலுக்காக வெளியிடப்படுகிறது:- சட்ட எண்‌ 21/2012. தமிழ்நாடு மாநிலத்தில்‌, மீன்வள மேம்பாட்டிற்காகவும்‌ மீன்வள அறிவியல்‌ துறைகளில்‌ கல்வி பெறுவதை மற்றும்‌ அதில்‌ ஆராய்ச்சியைத்‌ தொடர்ந்து நடத்திவருவதை மேலும்‌ மேம்படுத்துவதற்காகவும்‌ அதன்‌ விரிவாக்கத்திற்காகவும்‌ ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியமைப்பதற்கு வகை செய்வதற்கானதொரு சட்டம்‌. இந்தியக்‌ குடியரசின்‌ அறுபத்து மூன்றாம்‌ ஆண்டில்‌, தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- அத்தியாயம்‌ - 1 முன்னுரை 1. () இந்தச்‌ சட்டம்‌, 2012 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மீன்வளப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ என: வழங்கப்பெறும்‌. @ இது தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதையும்‌ அளாவி நிற்கும்‌. Q). இது- (6) இணைப்புப்‌ பட்டியலில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கும்‌ கல்வி. நிலையங்களுக்கும்‌; மற்றும்‌. (b) இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ அதன்படி செய்யப்பட்ட நிலைமுறைவிதிகளின்‌, ஒழுங்கு முறைவிதிகளின்‌ இணங்கிய வகையில்‌, பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்படக்கூடிய அல்லது அதனால்‌ நிறுவப்படக்கூடிய அல்லது பேணிவரப்படக்கூடிய அனைத்து கல்லூரிகளுக்கும்‌ மற்றும்‌ கல்வி நிலையங்களுக்கும்‌ பொருந்தும்‌. (6). இது, அரசு அறிவிக்கையின்‌ வாயிலாக குறிக்கக்கூடிய அத்தகைய தேதியில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. குறுந்தலைப்பு அளாவுகை பொருந்துகை மற்றும்‌ தொடக்கம்‌ பொருள்‌ வரையறைகள்‌. 2 2. இந்தச்‌ சட்டத்தில்‌ தறுவாய்‌ வேறு பொருள்‌ குறித்தாலன்றி :- (a) “கல்விமன்றம்‌” என்றால்‌, பல்கலைக்கழகத்தின்‌ கல்விமன்றம்‌ எனப்பொருள்படும்‌; (b) “இணைக்கப்பெற்ற கல்லூரி” என்றால்‌, இப்பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்‌ பெற்றதும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டப்படிப்புகளுக்கான, பட்டயப்‌ படிப்புகளுக்கான அல்லது பிற கல்விச்‌ சிறப்புகளுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக குறித்த காலப்‌ படிப்புப்‌ பிரிவுகளுக்கு வகைசெய்வதுமான கல்லூரி எதுவும்‌ என்று பொருள்படும்‌; (6) “குறிக்கப்பட்ட தேதி” என்றால்‌, 1-ஆம்‌ பிரிவின்‌ (4) ஆம்‌ உட்பிரிவின்படி அரசு அறிவிக்கையின்‌ வாயிலாகக்‌ குறிக்கக்கூடிய அத்தகைய தேதி என்று பொருள்படும்‌ ; (6) “குழுமம்‌” என்றால்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ நிருவாகக்‌ குழுமம்‌ என்று பொருள்படும்‌; (6) “கல்லூரி” என்றால்‌, பல்கலைக்கழத்தின்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புகளுக்கானத்‌ தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படுவதற்காக, கற்பதற்கான பிரிவுகள்‌ அல்லது பயிற்சிக்கு வகைசெய்கிற அல்லது ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு வகைசெய்கிற அல்லது மீன்வள அறிவியலில்‌ விரிவாக்கக்‌ கல்விக்கு வகைசெய்கிற, அப்பல்கலைக்‌ கழகத்தினால்‌ நிறுவப்பட்ட அல்லது பேணப்பட்ட அல்லது அதனுடன்‌ இணைக்கப்பட்ட, கல்லூரி அல்லது கல்வி நிலையம்‌ எதுவும்‌ எனப்‌ பொருள்படும்‌; () “மூலாதாரக்‌ கல்லூரி” என்றால்‌, தூத்துக்குடியிலுள்ள மீன்வளக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌ அது அத்தகையதென அவ்வப்போது குழுமத்தினால்‌ விளம்பப்படக்கூடிய அத்தகைய பிற கல்லூரிகளையும்‌ உள்ளடக்கும்‌; (8) “நேரிணையான பல்கலைக்கழகம்‌” என்றால்‌, சென்னையிலுள்ள தமிழ்நாடு. கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌ என்று பொருள்படும்‌; (0) “முதன்மையர்‌” என்றால்‌ பல்கலைக்கழகத்தின்‌ தலைமையகத்தில்‌ உள்ள முதன்மையர்‌ (கல்வி) அல்லது கல்லூரி ஒவ்வொன்றின்‌ முதன்மையர்‌ என்று பொருள்படும்‌; () “இயக்குநர்‌” என்றால்‌, ஆராய்ச்சி இயக்குநர்‌ அல்லது விரிவாக்கக்‌ கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ நிலைமுறை விதிகளால்‌ இயக்குநர்‌ என விளம்பப்படும்‌ அத்தகைய பிற நபர்‌ என்று பொருள்படும்‌; (/) “விரிவாக்கக்‌ கல்வி” என்றால்‌, மீன்‌ பண்ணையாளர்களுக்கும்‌ மீனவர்களுக்கும்‌ மேம்படுத்தப்பட்ட மீன்பிடிக்கும்‌ நடைமுறைகளில்‌ மற்றும்‌ மீன்வள அறிவியலுடன்‌ தொடர்புடைய அறிவியல்‌ தொழில்‌ நுட்பத்தின்‌ பல்வேறு பிரிவுகளில்‌ மீன்‌ துறைக்குச்‌ சேவை செய்து வரும்‌ பிற தொகுதிக்‌ குழுக்களுக்கும்‌ பயிற்சியளிப்பது தொடர்புடைய கல்விசார்‌ நடவடிக்கைகள்‌ என்று பொருள்படும்‌; (8) “லம்‌” (faculty) என்றால்‌, இப்‌ பல்கலைக்கழகத்தின்‌ புலமொன்று என்று பொருள்படும்‌; () “அரசு” என்றால்‌, மாநில அரசு என்று பொருள்படும்‌; (m) “மீன்வள அறிவியல்‌” என்றால்‌, இனப்‌ பெருக்கம்‌, மரபியல்‌, உயிர்‌ தொழில்நுட்பவியல்‌, ஊட்டச்சத்து, பண்ணை வைத்தல்‌, மீன்களில்‌ நோய்குறி ஆய்வு செய்தல்‌ மற்றும்‌ பிற நீர்வள ஆதாரங்கள்‌, நீரின விலங்குகளுக்கான மருத்துவம்‌ உள்ளடங்கலான நீர்வாழ்‌ உயிரின வளர்ப்பு; மதிப்பு கூட்டுதல்‌, தர உறுதிப்பாடு மற்றும்‌ சான்றிதழ்‌ அளித்தல்‌ உள்ளடங்கலான மீன்‌ பதப்படுத்துதல்‌; மீன்வள நுண்‌ உயிரியல்‌; மீன்வள உயிர்‌ வேதியியல்‌; உயிரியல்‌, உடலியல்‌, உடற்கூறியல்‌ மீன்வள இருப்புத்தொகை மாறுபாடு உள்ளடங்கலான. மீன்வள ஆதார மேலாண்மை; கடலியல்‌, ஏரி மற்றும்‌ குளங்களின்‌ நீர்நிலைப்‌ பரப்பு ஆராய்ச்சி, சூழ்நிலையியல்‌, உள்ளடங்கலான மீன்வளச்‌ சுற்றுச்சூழல்‌, வலை மற்றும்‌ படகுப்‌ பொறியியல்‌, கடற்பிரயாணம்‌ மற்றும்‌ மீனவர்‌ படகு உள்ளடங்கலான மீன்பிடிக்கும்‌ தொழிற்நுட்பம்‌; மீன்வளப்‌ பொருளாதாரம்‌ மற்றும்‌ மேலாண்மை; மீன்வள விரிவாக்கம்‌ ஆகியன என்று பொருள்படும்‌; (1) “விடுதி” என்றால்‌, இப்பல்கலைக்கழகக்‌ கல்லூரியின்‌ அதன்‌ ஒரு பகுதியாக அல்லது அதிலிருந்து தனித்து, பேணிவரப்படும்‌ அல்லது ஏற்பிசைவளிக்கப்படும்‌, இப்பல்கலைக்கழகத்து மாணவர்களுக்கான ஒரு குடியிருப்புப்‌ பிரிவு என்று பொருள்படும்‌; (0) “வகுத்துரைக்கப்பட்டது'' என்றால்‌, இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்படும்‌ நிலைமுறை விதிகளினாலோ ஒழுங்குமுறை விதிகளினாலோ வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்‌; () “ஒழுங்குமுறை விதிகள்‌” என்பதும்‌ “நிலைமுறை விதிகள்‌” என்பதும்‌, முறையே, இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்படும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ என்றும்‌ நிலைமுறை விதிகள்‌ என்றும்‌. பொருள்படும்‌; () “இணைப்புப்பட்டியல்‌” என்றால்‌, இந்தச்‌ சட்டத்துடன்‌ சேர்ந்த இணைப்புப்‌ பட்டியல்‌ என்று பொருள்படும்‌; (r) “மாநிலம்‌” என்றால்‌ தமிழ்நாடு மாநிலம்‌ எனப்‌ பொருள்படும்‌; (5) “பல்கலைக்கழகம்‌” என்றால்‌, 3ஆம்‌ பிரிவின்படி நிறுவப்பட்டுள்ள, தமிழ்நாடு மீன்வளப்‌ பல்கலைக்கழகம்‌ என்று பொருள்படும்‌. அத்தியாயம்‌ - 11 பல்கலைக்‌ ம்‌ 3. ௫ மீன்வள வளர்ச்சிக்காகவும்‌, மீன்வள அறிவியல்களில்‌ கல்வி பெறுவதையும்‌, ஆராய்ச்சியைத்‌ தொடர்ந்து நடத்திவருவதையும்‌ மேலும்‌ மேம்படுத்துவதற்காகவும்‌ “தமிழ்நாடு மீன்வளப்‌ பல்கலைக்கழகம்‌” என்ற பெயரில்‌ பல்கலைக்கழகமொன்று குறிக்கப்பட்ட தேதியன்றும்‌ அதுமுதற்கொண்டும்‌ நிறுவப்படும்‌. @ இப்பல்கலைக்கழகம்‌ ஒரு கூட்டமைப்பாக இருக்கும்‌ என்பதோடு, நிலையான தொடருரிமையும்‌ தனித்த இலச்சினையும்‌ பெற்றிருக்கும்‌; மற்றும்‌ மேற்சொன்ன பெயரில்தான்‌. வழக்கிடுதலும்‌ வழக்கிடப்படுதலும்‌ வேண்டும்‌. (8) இப்பல்கலைக்கழகத்தின்‌ முதன்மையகம்‌ நாகப்பட்டினம்‌ வட்டத்தின்‌ எல்லைகளுக்குள்‌. அமைந்திருத்தல்‌ வேண்டும்‌. 4. இப்பல்கலைக்கழகம்‌ பின்வரும்‌ நோக்கங்களைக்‌ கொண்டிருக்கும்‌, அவையாவன :- (ய) இப்பல்கலைக்கழகம்‌ தீர்மானிக்கக்‌ கூடியவாறு மீன்வள அறிவியல்களின்‌. வெவ்வேறு பிரிவுகளில்‌ தரமான கல்வியைக்‌ கற்பித்தல்‌; (b) மின்வள அறிவியல்களில்‌ அதிநவீன தொழில்‌ நுட்பங்களை மேம்படுத்தும்‌ நோக்கத்துடன்‌ புதிய ஆய்வு எல்லைகளில்‌ அமைப்பு சார்ந்த ஆராய்ச்சியை நடத்துதல்‌. (c) மீன்வள அறிவியல்களில்‌: மீன்‌ பண்ணையாளர்களுக்கும்‌, மீனவ இனத்தவர்களுக்கும்‌, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும்‌ மற்றும்‌ தொழில்‌ முனைவோருக்கும்‌ பயிற்சி, கலந்தாய்வு, பயிற்சி திட்டத்தை உருவாக்குதல்‌ போன்ற விரிவாக்கச்‌ சேவைகளை வழங்குதல்‌; (8) நாட்டின்‌ பொருளாதாரத்திற்கு பங்களிப்பினை அதிகரிப்பதற்காகவும்‌ மற்றும்‌ மீன்‌: வளம்‌ சார்ந்த கற்பித்தல்‌, ஆராய்ச்சி, விரிவாக்கம்‌ போன்றவற்றில்‌ தேவையான இடையீட்டுச்‌ சீர்மைகளைச்‌ செய்வதன்மூலம்‌ உயர்‌ தரநிலைகளை வகுப்பதற்காகவும்‌ மீன்வள அறிவியலின்‌. விரிவான வளர்ச்சியை எளிதாக எய்த உதவுதல்‌; (8) பல்வகை நீர்வாழ்‌ உயிரினங்கள்‌ மற்றும்‌ மீன்வள ஆதார இருப்பு நிலை ஆகியவற்றில்‌ அடிப்படை தகவல்‌ பதிவினை உருவாக்குதல்‌; (1) மீன்வள அறிவியலில்‌ இந்திய கால்நடை மருத்துவக்‌ கழகத்தின்‌ ஒழுங்கு முறை விதிகளை மாதிரியாகப்‌ பின்பற்றி மிக தரமான தொழில்‌ பயிற்சியாளர்களை உருவாக்குதல்‌; (g) மீன்‌ மற்றும்‌ மீன்‌ உற்பத்திப்‌ பொருட்களைச்‌ சந்தைப்படுத்துவதற்கும்‌ அதன்‌. மதிப்பினைக்‌ கூட்டுவதற்கும்‌ நல்ல வாய்ப்புகளை உருவாக்குதல்‌; (1) நீரினநோய்‌ அறுதியிடல்‌ மற்றும்‌ கவனக்‌ கண்காணிப்பு முறைமையை மாநிலத்தில்‌ ஏற்படுத்துதல்‌. பல்கலைக்கழகம்‌. நிறுவப்படுதல்‌. இப்பல்கலைக்‌ கழகத்தின்‌ நோக்கங்கள்‌. இப்பல்கலைக்‌. கழகத்தின்‌ அலுவல்களும்‌. 4 5. இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரங்களும்‌ அலுவல்களும்‌ பின்வருமாறு இருக்கும்‌, அவையாவன :- (a) மீன்வள அறிவியலில்‌ கற்பித்தல்‌, ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்கக்‌ கல்விக்கு வகை செய்தல்‌; (9) ஆராய்ச்சிக்‌ கண்டுபிடிப்புகளையும்‌ தொழில்‌ நுட்பத்‌ தகவல்களையும்‌ விரிவாக்கக்‌ கல்வியின்‌ மூலமாகப்‌ பரப்புவதற்கு வகைசெய்தல்‌; (0) மீன்வள அறிவியல்களில்‌ பட்டங்களை, பட்டயங்களை மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புகளை ஏற்படுத்துதல்‌; (சி) டு வகுத்துரைக்கப்பட்டுள்ள குறித்த காலப்படிப்புப்‌ பிரிவினைத்‌ தொடர்ந்து படித்து முடித்துள்ளவர்களுக்கு; அல்லது (1) வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி இப்பல்கலைக்கழகத்தில்‌ ஆராய்ச்சி செய்துள்ளவர்களுக்குத்‌ தேர்வுகள்‌ நடத்தி, பட்டங்கள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌. ஆகியவற்றை வழங்குதல்‌; (8) வகுத்துரைக்கப்பட்ட முறையிலும்‌ வகுத்துரைக்கப்படும்‌ நிபந்தனைகளின்படியும்‌ மதிப்புப்‌ பட்டங்களையோ பிற சிறப்புகளையோ வழங்குதல்‌; (/) களப்பணியாளர்கள்‌, மீன்‌ பண்ணையாளர்கள்‌, இப்பல்கலைக்கழகத்தில்‌ முறையான மாணவர்களாகப்‌ பதிவு செய்யப்‌ பெறாத பிற நபர்கள்‌ ஆகியோருக்கு விரிவுரைகள்‌ அளிக்கப்படுவதற்கும்‌ கல்வி கற்பிக்கப்படுவதற்கும்‌ வகை செய்தல்‌, மற்றும்‌ தேவையாயின்‌ அவர்களுக்குச்‌ சான்றிதழ்களை வழங்குதல்‌; (ஐ) தான்‌ தீர்மானிக்கக்‌ கூடிய அத்தகைய முறையிலும்‌ அத்தகைய நோக்கங்களுக்காகவும்‌ பிற பல்கலைக்‌ கழகங்களுடனும்‌ அதிகார அமைப்புகளுடனும்‌ ஒத்துழைத்தல்‌; (h) மீன்வள அறிவியல்கள்‌ தொடர்பான கல்லூரிகளை நிறுவிப்‌ பேணிவருதல்‌: () வகுத்துரைக்கப்படும்‌ நிபந்தனைகளின்படி கல்லூரிகளை இப்பல்கலைக்‌ கழகத்தோடு இணைத்தலும்‌ அவ்வாறு அக்கல்லூரிகளை இணைத்துக்‌ கொண்டதை விலக்கிக்‌ கொள்ளுதலும்‌; (/) கல்வி கற்பித்தல்‌, ஆராய்ச்சி செய்தல்‌, விரிவாக்கக்‌ கல்வியளித்தல்‌ ஆகியவற்றிற்கான ஆராய்ச்சிக்‌ கூடங்கள்‌, நூலகங்கள்‌, ஆராய்ச்சி நிலையங்கள்‌, அருங்காட்சியகங்கள்‌, ஆகியவற்றை நிறுவிப்‌ பேணிவருவது; (k) நிலை முறை விதிகளுக்கிணங்க ஆராய்ச்சி உதவித்‌ தொகைகள்‌, படிப்புதவித்‌ தொகைகள்‌, பரிசுத்‌ தொகைகள்‌, ஆகியவற்றை ஏற்படுத்தி வழங்குதல்‌; (1) பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாணவர்‌ விடுதிகளையும்‌ பல்கலைக்கழகப்‌ பணியாளர்களுக்காக குடியிருப்பு இடவசதிகளையும்‌ நிறுவிப்‌ பேணி வருதல்‌ அல்லது ஏற்பிசைவளித்தல்‌; (1) வகுத்துரைக்கப்படக்கூடிய கட்டணங்களையும்‌ பிற தொகைகளையும்‌ நிர்ணயித்தலும்‌, கோரிப்‌ பெறுதலும்‌; (1) பல்கலைக்கழக மாணவர்‌ விடுதிகளைக்‌ கண்காணித்து அதனைக்‌ கட்டுப்பாட்டில்‌ வைத்திருத்தல்‌; மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தில்‌ மாணவர்களிடையே ஒழுங்கு நடத்தையை முறைப்படுத்தல்‌ மற்றும்‌ அவர்களது உடல்‌ நலத்தையும்‌, நலனையும்‌ மேப்படுத்துவதற்கான ஏற்பாடுகள்‌ செய்தல்‌; (0) பிற பல்கலைக்கழகங்களுடனும்‌, ஆராய்ச்சி மற்றும்‌ வளர்ச்சி அமைப்புகள்‌ ஆகியவற்றுடனும்‌, கல்வி, ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்கக்‌ கல்வியிலும்‌ அத்தகைய பிற திட்டங்களிலும்‌ இணைந்து செயல்படுதல்‌; மற்றும்‌ (2) ஈடுபாட்டுப்‌ பயிற்சியினை வழங்குவதன்‌ மூலமும்‌ மீன்வளப்‌ பணி அனுபவத்‌ திட்டம்‌, தொழில்‌ நிறுவனத்‌ தொடர்புகள்‌ வாயிலாக, மேலாண்மைத்‌ திறன்களை வளர்ச்சியடையச்‌ செய்வதன்‌ மூலம்‌ மாணவர்களிடையே தொழில்‌ முனைப்பை மேம்படுத்துதல்‌; 5 (9) மீன்வள அறிவியல்களில்‌ மரபுசார்‌ மற்றும்‌ உயிர்‌ தொழில்நுட்ப ஆய்வினை மேம்படுத்துவதற்காக உலகத்‌ தரம்‌ வாய்ந்த வசதி வாய்ப்புகளை உருவாக்குதல்‌; () இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களுக்காக அசையும்‌ மற்றும்‌ அசையாச்‌ சொத்தினை அடைதல்‌ மற்றும்‌ கொண்டிருத்தல்‌; (9) அரசின்‌ முன்‌ ஒப்புதலுடன்‌ அசையாச்சொத்து எதனையும்‌ குத்தகைக்கு விடுதல்‌, விற்பனை செய்தல்‌ அல்லது பிறவாறாக உரிமை மாற்றம்‌ செய்தல்‌; () கற்பித்தல்‌, ஆராய்ச்சி, விரிவாக்கக்‌ கல்வி ஆகியவற்றுக்கான பதவிகளை ஏற்படுத்தி அத்தகைய பதவிகளுக்கு நபர்களை நியமித்தல்‌; () நிருவாகம்‌ சார்ந்த மற்றும்‌ பிற பதவிகளை உருவாக்கி அத்தகைய பதவிகளுக்கு நபர்களை நியமித்தல்‌; () மீனவர்‌ இனத்தின்‌ மேம்பட்ட நலன்களைக்‌ கருதி தமிழ்நாடு கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ விலங்கின அறிவியல்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைந்து, இப்பல்கலைக்கழகத்தின்‌ மற்றும்‌ மீனவரின்‌ பரிமாற்ற நலன்‌ சார்ந்த பகுதிகளில்‌ பணியாற்றுதல்‌. அத்தகைய கூட்டு. நடவடிக்கை குறித்து இப்பல்கலைக்கழகம்‌ ஆண்டு தோறும்‌ அரசுக்கு அறிக்கை அளித்தல்‌ வேண்டும்‌; (W) மீனவர்‌ இனத்தின்‌ மேம்பட்ட நலன்களைக்‌ கருதி சென்னையிலும்‌ தூத்துக்குடியிலும்‌ உள்ள தமிழ்நாடு கடல்சார்‌ கல்வியகத்துடனும்‌ அதனைச்‌ சார்ந்து இயங்கிவரும்‌ பிற அமைப்புகளுடனும்‌ இணைந்து இப்பல்கலைக்கழகத்தின்‌ மற்றும்‌ மீனவரின்‌. பரிமாற்ற நலன்‌ சார்ந்த பகுதிகளில்‌ பணியாற்றுதல்‌; (9) மேற்சொன்ன அதிகாரங்களின்‌ மற்றும்‌ அலுவல்களின்‌ விளைவானவையாக இருந்தாலும்‌ இல்லா விட்டாலும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத்‌ தேவையானவையாகவோ, விரும்பத்தக்கனவாகவோ இருக்கக்கூடிய அனைத்துச்‌ செயல்களைச்‌ செய்தலும்‌, நடவடிக்கைகளை எடுத்தலும்‌. 6. (1) இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ நிலை முறை விதிகளின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, இப்பல்கலைக்‌ கழகத்தில்‌ சேர்வதற்கு அனைவருக்கும்‌ உரிமை உண்டு (2) (1ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியுள்ளதெதுவும்‌, (@) வகுத்துரைக்கப்பட்ட கல்வித்‌ தகுதியோ, தரநிலையோ பெற்றிராத நபர்‌ எவரையும்‌ குறித்த காலப்‌ படிப்புப்‌ பிரிவு எதிலும்‌ சேர்த்துக்‌ கொள்ளுமாறோ; (8) பட்டமொன்றோ, பட்டயமொன்றோ அல்லது பிற கல்விச்‌ சிறப்போ வழங்கப்படுவதற்குத்‌ தேவையான குறைந்தபட்சத்‌ தரநிலைக்கும்‌ கீழே கல்வித்‌ தகுதியைப்‌ பெற்றுள்ள மாணவர்‌ எவரையும்‌ இப்‌ பல்கலைக்கழகப்‌ பெயர்ப்பட்டியலில்‌ தொடர்ந்து இருந்துவரச்‌ செய்யுமாறோ: (29) எந்த நபரின்‌ அல்லது மாணவரின்‌ நடத்தையானது, இப்பல்கலைக்கழகத்தின்‌ நலனுக்கோ அல்லது பிற மாணவர்களின்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌. உரிமைகளுக்கும்‌ சிறப்புரிமைகளுக்கும்‌, கேடு விளைவிக்கத்தக்கதாகவுள்ளதோ, அந்த நபர்‌ எவரையும்‌ சேர்த்துக்‌ கொள்ளுமாறோ அல்லது அந்த மாணவர்‌ எவரையும்‌ தொடர்ந்து இருந்துவரச்‌ செய்யுமாறோ: அல்லது (d) வகுத்துரைக்கப்பட்டுள்ள அளவிற்கும்‌ அதிகமான எண்ணிக்கையில்‌ மாணவர்களைக்‌ குறித்த காலப்‌ படிப்புப்பிரிவு எதிலும்‌ சேர்த்துக்கொள்ளுமாறோ இப்‌ பல்கலைக்கழகத்தைக்‌ கோருதலாகாது. (3) அரசானது, (2) - ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, பட்டியல்‌ சாதிகள்‌, பட்டியல்‌ பழங்குடியினர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ ஆகிய பிரிவுகளைச்‌ சார்ந்த மாணவர்களுக்கென பல்கலைக்கழகமானது நூற்றுக்கு அத்தகைய விழுக்காடு அளவிலான இடங்களை ஒதுக்குதல்‌ வேண்டும்‌ எனப்‌ பணித்து ஆணை பிறப்பிக்கலாம்‌; அத்தகைய ஆணைவழங்கப்பட்டிருப்பின்‌, இப்பல்கலைக்கழகமானது அதற்கிணங்கிய வகையில்‌ ஒதுக்கீடு செய்தல்‌ வேண்டும்‌. 7. () வேந்தரானவர்‌- (1) பல்கலைக்கழகம்‌, அதன்‌ கட்டடங்கள்‌, ஆய்வகங்கள்‌, நூலகங்கள்‌, அருங்காட்சியகங்கள்‌, பணிமனைகள்‌ மற்றும்‌ பிறசாதனங்களை; இப்பல்கலைக்‌ கழகத்தில்‌ சேர்த்துக்‌ கொள்ளுதல்‌. ஆய்வும்‌ விசாரணையும்‌. பல்கலைக்‌. கழகத்தின்‌ அலுவலர்கள்‌. 6 (8) பல்கலைக்கழகங்களால்‌ பேணி வரப்படும்‌ கல்விநிலையம்‌, கல்லூரி அல்லது விடுதி எதனையும்‌; (6) பல்கலைக்கழகத்தால்‌ அல்லது அதன்‌ சார்பில்‌ நடத்தப்படும்‌ கற்பித்தல்‌ மற்றும்‌ பிற பணியை; அல்லது (d) பல்கலைக்கழகத்தால்‌ நடத்தப்படும்‌ தேர்வு எதனையும்‌ நடத்தும்‌ முறையை வேந்தர்‌, தன்னால்‌ பணிக்கப்படும்‌ நபர்‌ அல்லது நபர்களால்‌ ஆய்வு செய்ய ஆவன செய்வதற்கு உரிமை கொண்டவராக இருப்பார்‌. (2) பல்கலைக்கழக நிருவாகம்‌ அல்லது நிதி தொடர்புடைய பொருட்பாடு எதனையும்‌ பொறுத்த அளவில்‌, வேந்தரானவர்‌ தன்னால்‌ பணிக்கப்படும்‌ நபர்‌ அல்லது நபர்களால்‌ விசாரணை செய்ய ஆவன செய்வதற்கு உரிமை கொண்டவராக இருப்பார்‌. (6) வேந்தர்‌, ஒவ்வொரு நேர்விலும்‌, ஆய்வு அல்லது விசாரணை செய்ய ஆவன செய்வது என்பதான தனது உட்கருத்து குறித்த அறிவிப்பை பல்கலைக்கழகத்திற்குக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. மற்றும்‌ அப்பல்கலைக்கழகமானது, அந்த ஆய்விலோ அல்லது விசாரணையிலோ. சார்பாற்றம்‌ செய்து கொள்வதற்கு உரிமை கொண்டதாக இருக்கும்‌. @ வேந்தர்‌, அத்தகைய தனது அந்த ஆய்வு அல்லது விசாரணையின்‌ விளைவு குறித்த தனது கருத்துகளை பல்கலைக்கழகத்திற்குத்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌; அதன்பின்னர்‌ அதன்‌ பேரிலான பல்கலைக்கழகத்தின்‌ கருத்தினை உறுதி செய்து கொண்டபிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, பல்கலைக்கழகத்திற்கு ஆலோசனை வழங்கலாம்‌; மற்றும்‌ அந்த அத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கான கால வரம்பையும்‌ நிர்ணயிக்கலாம்‌. (6) பல்கலைக்கழகமானது, அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள்‌, வேந்தரால்‌ வழங்கப்பட்ட ஆலோசனையின்‌ பேரில்‌ எடுக்கப்பட்ட அல்லது எடுக்கக்‌ கருதப்பட்ட நடவடிக்கை: குறித்து வேந்தருக்கு அறிக்கை செய்தல்‌ வேண்டும்‌. (6) பல்கலைக்கழகமானது, நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள்‌ நடவடிக்கை எடுக்கவில்லையாயின்‌ அல்லது பல்கலைக்கழகத்தால்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கை வேந்தரின்‌ கருத்துப்படி மனநிறைவளிப்பதாக இல்லையாயின்‌, வேந்தரானவர்‌, பல்கலைக்கழகத்தால்‌ அளிக்கப்பட்ட விளக்கம்‌ அல்லது செய்யப்பட்ட முறையீடு எதனையும்‌ பரிசீலனை செய்த பின்னர்‌, தான்‌ பொருத்தமெனக்‌ கருதக்கூடிய பணிப்புரையைப்‌ பிறப்பிக்கலாம்‌. மற்றும்‌ அந்தப்‌. பல்கலைக்கழகமானது அந்தப்‌ பணிப்புரைக்கு இணங்கி நடத்தல்‌ வேண்டும்‌. (7) வேந்தரால்‌ அதன்பொருட்டு நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பிற்குள்‌ அத்தகையப்பணிப்புரைக்கு பல்கலைக்கழகமானது இணங்கி நடக்கவில்லையாயின்‌ வேந்தரானவர்‌, அந்தப்‌ பணிப்புரைக்கு இணங்கி நடப்பதற்காக, நபர்‌ எவரையுமோ அல்லது குழு எதனையுமோ நியமிப்பதற்கும்‌, அதற்கான செலவுகளுக்காகத்‌ தேவைப்படக்கூடிய ஆணைகளைப்‌ பிறப்பிப்பதற்கும்‌ அதிகாரம்‌ கொண்டவராக இருப்பார்‌. அத்தியாயம்‌ - பா இப்பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌ 8. இப்பல்கலைக்கழகம்‌, பின்வரும்‌ அலுவலர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, அதாவது:- () வேந்தர்‌; (2) இணை வேந்தர்‌; (3) துணை வேந்தர்‌; @ பதிவாளர்‌; (5) முதன்மையர்கள்‌ (Deans) ; (6) ஆராய்ச்சி இயக்குநர்‌; (7) விரிவாக்கக்‌ கல்வி இயக்குநர்‌; (6) இயக்குநர்கள்‌; (6) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌; (0) நிதி அலுவலர்‌; மற்றும்‌ (1) இப்பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்களென நிலைமுறை விதிகளால்‌ விளம்பப்படக்கூடிய அத்தகைய பிற நபர்கள்‌. 9. () தமிழ்நாடு ஆளுநர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ வேந்தராக இருந்து வருவார்‌. (இ) வேந்தர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ தலைவராக இருப்பதுடன்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டமளிப்பு விழா எதற்கும்‌ வருகைபுரியும்போது அதற்குத்‌ தலைமை வகித்து, பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புகளைப்‌ பெறுவதற்குத்‌ தகுதியுடையவர்களுக்கு அவற்றை வழங்குவார்‌. (6) மதிப்புறு பட்டயம்‌ அல்லது பிற சிறப்பு எதுவும்‌, வேந்தரின்‌ ஒப்புதலளிப்பின்றி நபர்‌ எவருக்கும்‌ பல்கலைக்கழகத்தால்‌ வழங்கப்படுதல்‌ கூடாது. @ வேந்தர்‌, தாமே முற்பட்டோ அல்லது விண்ணப்பமொன்றின்‌ மீதோ, நடவடிக்கை எதனையும்‌ பொறுத்து, அத்தகைய நடவடிக்கையின்‌ முறைமை குறித்தோ, அதில்‌ எடுக்கப்பட்ட முடிவு அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை ஏதொன்றின்‌ சீர்மை, சட்டமுறைமை அல்லது பொருத்தமுடைமை குறித்தோ, தான்‌ தெளிவுற உறுதிப்படுத்திக்‌ கொள்ளும்பொருட்டு, இப்பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்‌ எவரின்‌ அல்லது அதிகார அமைப்பு ஏதொன்றின்‌. பதிவுக்கட்டினையும்‌ தருவித்து ஆய்வு செய்யலாம்‌; மற்றும்‌ எந்த நேர்விலேனும்‌, அத்தகைய முடிவு அல்லது ஆணை எதுவும்‌ மாற்றி அமைக்கப்படவோ, அறவு செய்யப்படவோ, எதிர்மாறாக்கப்பவோ, அல்லது மறுபரிசீலனைக்காகத்‌ திருப்பி அனுப்பிவைக்கப்படவோ வேண்டும்‌ என்று வேந்தருக்குத்‌ தோன்றுமானால்‌, அவர்‌, அதன்படியே ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌. முதலாம்‌ வரம்புரை: ஆனால்‌, இந்தப்‌ பிரிவின்படியான அதிகாரங்களைச்‌ செலுத்துமாறு கோரி வேந்தரிடம்‌ செய்துகொள்ளப்படும்‌ விண்ணப்பம்‌ ஒவ்வொன்றும்‌, அந்த விண்ணப்பம்‌ தொடர்புடைய நடவடிக்கை முடிவு அல்லது ஆணை எந்தத்‌ தேதியில்‌ அவ்‌ விண்ணப்பதாரருக்குத்‌ தெரிவிக்கப்பட்டதோ அந்தத்‌ தேதியிலிருந்து மூன்று திங்களுக்குள்‌ செய்து கொள்ளப்படுதல்‌: வேண்டும்‌; இரண்டாம்‌ வரம்புரை: மேலும்‌, எந்த நபருக்கும்‌ ஊறு விளைவிக்கத்தக்ககான ஆணை எதுவும்‌, தன்‌ தரப்பை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பொன்று அத்தகையவருக்குக்‌ கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, பிறப்பிக்கப்‌ படுதலாகாது.. (6) வேந்தர்‌ இந்தச்‌ சட்டத்தினாலோ அல்லது நிலைமுறை விதிகளினாலோ தமக்கு வழங்கப்படக்கூடிய அதிகாரங்களைச்‌ செலுத்திவருதலும்‌ அல்லது விதிக்கப்‌ படக்கூடிய பிற. கடமைகளை ஆற்றிவருதலும்‌ வேண்டும்‌. 10. (1) இம்‌ மாநிலத்தில்‌ மீன்வளத்‌ துறையைத்‌ தம்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அமைச்சர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ இணைவேந்தராக இருந்து வருவார்‌. (2) வேந்தரானவர்‌, பணிக்கு வாராமை எனும்‌ காரணத்தினாலோ, நோய்‌ காரணமாகவோ அல்லது பிற காரணம்‌ எதனாலுமோ தனது கடமைகளை ஆற்ற இயலாதிருக்கும்‌ போது, இணைவேந்தரானவர்‌, வேந்தர்‌ தனது கடமைகளை மீண்டும்‌ ஏற்கும்‌ தேதிவரையில்‌, வேந்தரின்‌. கடமைகளை அற்றி வருவார்‌. 11. ௫ துணைவேந்தரின்‌ ஒவ்வொரு நியமனம்‌ ஒவ்வொன்றும்‌, (2)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்படும்‌ குழுவினால்‌ பரிந்துரைக்கப்பட்ட மீன்வள அறிவியல்களில்‌ இளநிலைப்‌ பட்டப்படிப்பு பெற்றுள்ள மற்றும்‌ மின்வள அறிவியலில்‌ பேராசிரியர்‌ படிநிலைக்குக்‌ குறையாத புகழ்‌ வாய்ந்த நபர்களில்‌ மூவரின்‌ பெயர்களைக்‌ கொண்ட பட்டியல்‌ ஒன்றிலிருந்து வேந்தரால்‌: செய்யப்படுதல்‌ வேண்டும்‌: மற்றும்‌ அத்தகைய பெயர்ப்பட்டியலில்‌, மேற்சொன்ன குழுவின்‌. உறுப்பினர்‌ எவருடைய பெயரும்‌ அடங்கியிருத்தல்‌ கூடாது. வரம்புரை: ஆனால்‌, வேந்தரானவர்‌, குழுவினால்‌ அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட பெயர்ப்பட்டியலில்‌ உள்ள நபர்கள்‌ எவரொருவருக்கும்‌ ஒப்புதலளிக்க வில்லையாயின்‌, மூன்று வெவ்வேறு பெயர்கள்‌ கொண்ட புதிய பெயர்பட்டியல்‌ ஒன்றை, (9)ஆம்‌ உட்பிரிவிற்கிணங்க அளிப்பதற்காக, மற்றொரு குழுவை அமைத்துருவாக்க அவர்‌ நடவடிக்கைகள்‌ எடுக்கலாம்‌. மற்றும்‌ அந்தப்‌ புதிய பெயர்‌ பட்டியலில்‌ பெயர்‌ குறிக்கப்பட்ட நபர்களில்‌ ஒருவரைத்‌ துணை வேந்தராக நியமித்தல்‌ வேண்டும்‌. வேந்தர்‌. இணைவேந்தர்‌. துணைவேந்தர்‌. 8 (2) (0ஆம்‌ உட்பிரிவின்‌ நோக்கத்திற்காக, அக்‌ குழுவானது மூவரைக்‌ கொண்டிருக்கும்‌; அவர்களில்‌ ஒருவரை, மேலாண்மைக்குழு பெயர்குறித்து நியமனம்‌ செய்யும்‌; ஒருவரை கல்விமன்றம்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யும்‌; ஒருவரை வேந்தர்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்வார்‌. வரம்புரை: ஆனால்‌, அவ்வாறு பெயர்குறித்து நியமனம்‌ செய்யப்படுபவர்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளுள்‌ ஏதொன்றின்‌ உறுப்பினராகவும்‌ இருத்தலாகாது. (6) துணைவேந்தர்‌, மூன்றாண்டுக்‌ காலஅளவுக்குப்‌ பதவி வகிப்பார்‌; மேற்கொண்டு மூன்றாண்டுக்‌ காலஅளவுக்கு மீண்டும்‌ நியமிக்கப்படுவதற்குத்‌ தகுதியுடையவராவார்‌. வரம்புரை: (@) ஆனால்‌, துணைவேந்தர்‌, வேந்தருக்குத்‌ தாமே கையொப்பமிட்டு எழுத்து மூலமாக இரண்டு திங்கள்‌ கால முன்னறிவிப்புக்‌ கொடுத்ததற்குப்‌ பின்பு, தமது பதவியை விட்டு விலகலாம்‌: (௦) 0 உயர்நீதிமன்ற நீதிபதியொருவராக; அல்லது (9 அரசுத்‌ தலைமைச்‌ செயலாளரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத அரசின்‌ அலுவலரொருவராக; அல்லது (0) இம்மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம்‌ ஏதொன்றின்‌ துணைவேந்தரொருவராக இருக்கிற அல்லது இருந்து வருகிற அத்தகைய நபரால்‌, அரசினால்‌ அவர்‌ நியமிக்கப்படக்கூடியவாறான நிலையில்‌ நடத்தப்பட வேண்டிய உரிய முறையிலான விசாரணையானது அரசினால்‌ ஆணையிடப்பட்டு, அதில்‌ அத்தகைய துணைவேந்தரானவர்‌ பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு எதிராகத்‌ தமது முறையீட்டைச்‌ செய்துகொள்வதற்கு வாய்ப்பொன்று அந்தத்‌ துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட நிலையில்‌, அந்த விசாரணைக்குப்‌ பின்னர்‌, வேந்தரால்‌ வழங்கப்பட்ட ஆணையொன்றினால்‌ தவிர, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை நிறைவேற்றுவதில்‌ வேண்டுமென்றே தவறியுள்ளார்‌ அல்லது நிறைவேற்ற மறுத்துள்ளார்‌ அல்லது அவர்பால்‌ உற்றமைந்துள்ள அதிகாரங்களைத்‌ தவறாகப்‌ பயன்படுத்தியுள்ளார்‌ என்ற காரணத்தினால்‌ துணைவேந்தர்‌ அவர்தம்‌ பதவியிலிருந்து அகற்றப்படுதல்‌ கூடாது. @ இறப்பு, நோய்‌, பதவி விலகல்‌ அல்லது பதவியிலிருந்து அகற்றுதல்‌ என்கின்ற காரணத்தாலோ, அல்லது ஏதேனும்‌ பிற காரணத்தாலோ, துணைவேந்தரின்‌ பதவியில்‌ காலியிடம்‌ ஏதேனும்‌ ஏற்படும்‌ நேர்வில்‌, அத்தகைய காலியிடத்தை நிரப்புவதற்கு இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகளுக்கு இணங்க நியமிக்கப்பட்ட ஒரு புதிய துணைவேந்தர்‌ பதவியேற்கும்‌ தேதி வரையில்‌, பதிவாளரானவர்‌, அத்துணைவேந்தராகச்‌ செயற்பட்டு வருதல்‌ வேண்டும்‌. (8) துணைவேந்தர்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ முழு நேர அலுவலராக இருந்துவருவார்‌: அவருடைய ஊதியங்களும்‌, மற்றும்‌ பிற பணிவரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌ பின்வருமாறு இருத்தல்‌ வேணடும்‌; () துணைவேந்தரானவர்‌, வகுத்துரைக்கப்படக்‌ கூடியவாறான அத்தகைய ஊதியத்திற்கு உரிமைத்‌ தகுதியுடையவராய்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (109) துணைவேந்தரானவர்‌, அவருடைய பதவிக்‌ காலம்‌ முழுவதும்‌ அறைக்கலச்சாமான்களுடன்‌ கூடிய குடியிருப்பு ஒன்றை வாடகை செலுத்தாது பயன்படுத்த உரிமைத்தகுதி உடையவராவார்‌; மற்றும்‌ துணை வேந்தரானவர்‌ அத்தகைய குடியிருப்பின்‌. பராமரிப்புப்‌ பணிகளைப்‌ பொறுத்த அளவில்‌ கட்டணம்‌ எதுவும்‌ செலுத்தத்‌ தேவையில்லை. (0) துணைவேந்தரானவர்‌, குழுமத்தினால்‌ நிர்ணயிக்கப்படக்‌ கூடிய அத்தகைய பணி இறுதிக்கால நலன்களையும்‌ படித்தொகைகளையும்‌ வேந்தரின்‌ முன்‌ ஒப்புதலுடன்‌ அவ்வப்போது பெறுவதற்கு உரிமைத்தகுதி உடையவராவார்‌. வரம்புரை: ஆனால்‌, (@) பல்கலைக்கழகத்தின்‌ பணியாளர்‌ ஒருவர்‌: அல்லது (5) அந்தப்பல்கலைக்கழகத்தினால்‌ பேணிவரப்பட்ட அல்லது அதனுடன்‌ இணைக்கப்பட்ட பிற பல்கலைக்கழகத்தின்‌ அல்லது கல்லூரியின்‌ அல்லது கல்வி நிறுவனத்தின்‌. பணியாளர்‌ ஒருவர்‌ துணைவேந்தராக நியமனம்‌ செய்யப்படும்போது, அவர்‌ சந்தாதாரராக உள்ள 9 வருங்கால வைப்பு நிதியத்திற்குத்‌ தொடர்ந்து பங்களிப்பு செய்வதற்கு அனுமதிக்கப்படுதல்‌: வேண்டும்‌; மற்றும்‌ அவர்‌ துணைவேந்தராக நியமனம்‌ செய்யப்பட்டதை அடுத்து முன்னர்‌ அவர்‌. என்ன பங்களிப்பு செய்து வந்தாரோ அதுவே இப்பல்கலைக்கழகத்தின்‌ பங்களிப்பாக வரைமுறைப்‌ படுத்தப்படுதல்‌ வேண்டும்‌; (1) துணைவேந்தரானவர்‌, குழுமத்தால்‌ நிர்ணயிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வீதங்களில்‌ பபணப்படித்‌ தொகைகளைப்‌ பெறுவதற்கு உரிமைத்‌ தகுதி உடையவராய்‌ இருத்தல்‌: வேண்டும்‌; () துணைவேந்தர்‌, செயற்படு பணியிலிருக்கும்‌ போது அவரால்‌ பணியில்‌: செலவழிக்கப்பட்ட கால அளவுகளில்‌ பதினொன்றில்‌ ஒரு பங்கு கால அளவுக்கான. முழுச்சம்பளத்துடன்‌ கூடிய ஈட்டிய விடுப்புக்கு உரிமைத்‌ தகுதியுடையவராவார்‌. வரம்புரை: ஆனால்‌, துணைவேந்தர்‌ தமது பதவிக்காலம்‌ முடிவடைந்த தேதிக்கு, போதுமான கால அளவுக்கு முன்னதாக விண்ணப்பித்த ஈட்டிய விடுப்பானது, பல்கலைக்கழகத்தின்‌ நலனில்‌. வேந்தரால்‌ மறுக்கப்படுகிறபோது, மற்றும்‌ அவரது பதவிக்கால அளவு முடிவடைகிற தேதியில்‌, அவர்‌ ஈட்டிய விடுப்பை தம்‌ பதவிக்கால அளவு முடிவடைகிற தேதிக்கு முன்னர்‌ பயன்படுத்தியிருக்கவில்லையெனில்‌, தம்‌ பதவியை விட்டு நீங்கியதற்குப்‌ பின்பு, இருநூற்று நாற்பது நாட்கள்‌ என்கின்ற பெரும அளவிற்கு உட்பட்டுத்‌ தம்‌ இருப்பில்‌ உள்ள ஈட்டிய விடுப்பைப்‌ பொறுத்து விடுப்புச்‌ சம்பளத்திற்கு நிகரான மதிப்புள்ள பணத்தைப்‌ பெறுவதற்கு அவர்‌ உரிமைத்‌ தகுதியுடையவராவார்‌; (vi) துணைவேந்தர்‌, தம்‌ பதவிக்‌ காலத்தின்போது மருத்துவக்‌ காரணங்களுக்காகவோ மற்றப்படியோ, மூன்று திங்களுக்கு மேற்படாத ஒரு கால அளவிற்குச்‌ சம்பளமில்லாத விடுப்புக்கு உரிமைத்‌ தகுதியுடையவராவார்‌. வரம்புரை: ஆனால்‌, எந்த அளவிற்கு (v) எனும்‌ கூறின்படி ஈட்டிய விடுப்புக்கு அவர்‌. உரிமைத்‌ தகுதியுடையவரோ அந்த அளவிற்கு அத்தகைய விடுப்பினை, முழுச்‌ சம்பளத்துடனான. விடுப்பாக மாற்றிக்‌ கொள்ளலாம்‌. 12. () துணைவேந்தர்‌, பல்கலைக்கழகத்தின்‌ கல்வித்‌ தலைவராகவும்‌ முதன்மை நிருவாக. அலுவலராகவும்‌ இருப்பார்‌. அவர்‌ பதவி வழி உறுப்பினராகவும்‌ மேலாண்மைக்‌ குழுமம்‌, கல்வி மன்றம்‌, திட்டக்குழு, நிதிக்குழு ஆகியவற்றின்‌ தலைமையாளராகவும்‌ இருப்பார்‌; மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு எதனின்‌ கூட்டம்‌ எதிலும்‌ வந்திருந்து உரையாற்ற உரிமைத்தகுதி உடையவராவார்‌. ஆனால்‌, தொடர்பான அதிகார அமைப்பின்‌ உறுப்பினராக இருந்தாலன்றி, அதில்‌ வாக்களிக்க உரிமைத்தகுதி உடையவராதல்‌ கூடாது. (2 துணைவேந்தரானவர்‌, வேந்தரும்‌, இணை வேந்தரும்‌ வருகை தராதபோது, இப்பல்கலைக்‌ கழகத்தின்‌ பட்டமளிப்பு விழா எதிலும்‌ தலைமை வகித்துப்‌ பட்டங்களை, பட்டயங்களை அல்லது பிற கல்விச்சிறப்புகளைப்‌ பெறுவதற்கான தகுதியுடையவர்களுக்கு அவற்றை வழங்குதல்‌ வேண்டும்‌. (9) துணைவேந்தர்‌, இப்பல்கலைக்கழகத்து அலுவல்களின்‌ மீது கட்டுப்பாட்டு அதிகாரத்தைச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ இப்பல்கலைக்‌ கழகத்தில்‌ ஒழுங்கு நடத்தை உரியவாறு பேணிவரப்படுவதற்குப்‌ பொறுப்புடையவராயிருத்தல்‌ வேண்டும்‌. (8) துணைவேந்தர்‌, குழுமத்தின்‌ மற்றும்‌ கல்விமன்றத்தின்‌ கூட்டங்களைக்‌ கூட்டுதல்‌: வேண்டும்‌. (6) துணைவேந்தரானவர்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ நிலைமுறை விதிகள்‌, ஒழுங்குமுறை விதிகள்‌: ஆகியவற்றின்‌ வகைமுறைகள்‌ கடைபிடிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதை உறுதிபடுத்திக்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌. (6) உடனடி நடவடிக்கை தேவையென துணைவேந்தர்‌ கருதுகிற நெருக்கடி நிலை எதிலும்‌ அவர்‌ ஆணையின்‌ மூலமாக, தாம்‌ தேவையெனக்‌ கருதக்கூடிய நடவடிக்கையை எடுத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கை குறித்து அப்பொருள்‌ குறித்து இயல்பாக நடவடிக்கை எடுத்திருந்திருக்கக்கூடிய அத்தகைய அலுவலருக்கு அல்லது அதிகார அமைப்பிற்கு அல்லது பிற அமைப்பிற்கு கூடிய விரைவில்‌, அறிக்கை தருதல்‌ வேண்டும்‌: துணைவேந்தரின்‌ கடமைகளும்‌. பதிவாளர்‌. 10 வரம்புரை: ஆனால்‌, அத்தகைய ஆணை எதுவும்‌, பெரும்பாலும்‌ பாதிக்கப்படக்‌ கூடியவருக்கு அவர்தம்‌ தரப்பினை எடுத்துரைப்பதற்கு நியாயமானதொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலன்றி பிறப்பிக்கப்படுதலாகாது. [1] (6- ஆம்‌ உட்பிரிவின்‌ படியான துணை வேந்தரின்‌ ஆணை: எதனாலேனும்‌ குறையுற்றுள்ள நபர்‌ எவரும்‌, எந்தத்‌ தேதியில்‌ அத்தகைய ஆணை அவருக்கு தெரிவிக்கப்‌ படுகிறதோ அந்தத்‌ தேதியிருந்து முப்பது நாட்களுக்குள்‌ குழுமத்திடம்‌ மேல்முறையீடொன்று செய்துகொள்ளலாம்‌; மற்றும்‌ துணைவேந்தரானவர்‌, அத்தகைய மேல்‌ முறையீட்டின்‌ மீது குழுமத்தால்‌ பிறப்பிக்கப்படும்‌ ஆணைக்குச்‌ செயல்வடிவம்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. (6) துணைவேந்தரானவர்‌, கற்பித்தல்‌, ஆராய்ச்சி, விரிவாக்கக்‌ கல்வி ஆகியவற்றிற்கான ஒத்திசைவிற்கும்‌ ஒருங்கிணைப்பிற்கும்‌ பொறுப்புடையவராவர்‌. © துணைவேந்தர்‌, நிலைமுறை விதிகளின்‌ மூலம்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ செலுத்திவருதலும்‌ பிற கடமைகளைப்‌ புரிந்து வருதலும்‌ வேண்டும்‌. 13. () பதிவாளரானவர்‌, குழுமத்தின்‌ ஒப்புதலளிப்புடன்‌ துணைவேந்தரால்‌ நியமிக்கப்பட்டு இப்பல்கலைக்‌ கழகத்தின்‌ சம்பளம்‌ பெறும்‌ முழு நேர அலுவலராக இருப்பார்‌. பதிவாளரின்‌ பணி பற்றிய வரையறைகளும்‌, நிபந்தனைகளும்‌ பின்வருமாறு இருக்கும்‌; (ஐ) பதிவாளர்‌ பதவியை வகிப்பவர்‌, இப்பல்கலைக்‌ கழகத்தின்‌ அல்லது இணைப்புப்‌ பட்டியலில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள நிறுவனங்களில்‌, மீன்வள அறிவியலில்‌: இளநிலைப்‌ படிப்பு பெற்றுள்ள, மீன்வள அறிவியல்‌ துறையில்‌ பேராசிரியர்‌ ஒருவரின்‌: படிநிலைக்குக்‌ குறையாத கல்வியாளர்‌ ஒருவராக இருத்தல்‌ வேண்டும்‌. (5) பதிவாளர்‌ மூன்று ஆண்டுகளைக்‌ கொண்ட கால அளவு ஒன்றுக்கு பதவி வகித்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌ பதிவாளராக நியமிக்கப்பட்ட நபர்‌ ஒருவர்‌ அவர்தம்‌ பதவிக்காலத்தின்‌. போது அறுபது ஆண்டுகள்‌ என்பதான வயதினை அவர்‌ நிறைவெய்தினால்‌, அவர்‌ பதவியிலிருந்து ஒய்வு பெறுதல்‌ வேண்டும்‌. @ (@ பதிவாளர்‌, குழுமம்‌, கல்வி மன்றம்‌, புலங்கள்‌ ஆகியவற்றின்‌ பதவிவழிச்‌ செயலாளராக இருந்து வருவார்‌, (9 பதிவாளரின்‌ பதவி காலியாக இருக்கும்போது அல்லது நோய்‌, பணிக்கு வாராமை என்கிற காரணத்தினால்‌ அல்லது பிற காரணம்‌ எதனாலேனும்‌ பதிவாளர்‌ தம்முடைய பதவிக்கான அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவதற்கு, பணிகளை ஆற்றி வருவதற்கு மற்றும்‌ பதவிக்‌ ககமைகளை ஆற்றுவதற்கு இயலாதவராக இருக்கும்போது, பதிவாளரின்‌ பதவிக்கான. அதிகாரங்கள்‌, பணிகள்‌, பதவிக்‌ கடமைகள்‌ அந்த நோக்கத்திற்காகத்‌ துணைவேந்தரால்‌ குறிப்பிடப்படக்கூடிய அத்தகைய நபரால்‌ செலுத்திவரப்படுதல்‌ மற்றும்‌ ஆற்றிவரப்படுதல்‌ வேண்டும்‌; (9) பதிவாளரின்‌ கடமைகள்‌ பின்வருமாறு இருத்தல்‌ வேண்டும்‌:- () நிதிக்குழு மற்றும்‌ மேலாண்மைக்‌ குழுமத்தின்‌ முடிவிற்கு இணங்கிய வகையில்‌ பொறுப்பாட்சி மற்றும்‌ கொடைச்‌ சொத்து உள்ளடங்கலான இப்பல்கலைக்‌ கழகத்தின்‌. சொத்தையும்‌ முதலீடுகளையும்‌ மேலாண்மை செய்தல்‌; (i) அவர்தம்‌ பொறுப்பில்‌ மேலாண்மைக்‌ குழுமம்‌ ஒப்படைக்கிற இப்பல்கலைக்கழகத்தின்‌ பதிவுறுக்களுக்கும்‌, பொது இலச்சினைக்கும்‌, அத்தகைய பிற சொத்துக்களுக்கும்‌ பாதுகாவலராக இருத்தல்‌; மற்றும்‌ (9 குழுமத்தின்‌, கல்வி மன்றத்தின்‌. புலங்களின்‌, பாடக்குழுக்களின்‌, தேர்வுக்குழுக்களின்‌, திட்டக்‌ குழுமத்தின்‌ மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளால்‌ நியமிக்கப்படும்‌ குழு எதனின்‌ கூட்டங்களை நடத்துவதற்காக அறிவிப்புகள்‌ அனைத்தையும்‌ வழங்குதல்‌; (d) பல்கலைக்கழகத்தினால்‌ அல்லது பல்கலைக்‌ கழகத்திற்கு எதிராகத்‌ தொடரப்படும்‌ அனைத்து உரிமை வழக்குகள்‌ மற்றும்‌ எடுக்கப்படும்‌ பிற சட்ட நடவடிக்கைகள்‌ அனைத்திலும்‌, வாதுரைகள்‌ பதிவாளரால்‌ கையொப்பமிடப்பட்டு உண்மையென உறுதிமொழி அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய உரிமை வழக்குகளிலும்‌ நடவடிக்கைகளிலும்‌. 11 நீதிமுறைக்‌ கட்டளைகள்‌ அனைத்தும்‌ பதிவாளருக்குப்‌ பிறப்பிக்கப்பட்டு அவருக்கு சார்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌; (8 பதிவாளர்‌, குழுமத்தால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதலும்‌ பிற பணிகளை ஆற்றி வருதலும்‌ மற்றும்‌ பிற கடமைகளைப்‌ புரிந்து வருதலும்‌. வேண்டும்‌; 14. () நிதி அலுவலர்‌, அரசினால்‌ பரிந்துரைக்கப்பட்ட மூவரது பெயர்களைக்‌ கொண்ட பட்டியல்‌ ஒன்றிலிருந்து குழுமத்தால்‌ நியமிக்கப்படும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ சம்பளம்‌ பெறும்‌ முழுநேர அலுவலராக இருப்பார்‌. இப்பதவிக்கான தகுதிகள்‌ மற்றும்‌ ஆட்சேர்ப்பு முறையானது வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய முறையில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (2) நிதி அலுவலர்‌, குழுமம்‌ குறித்துரைக்கும்‌ வரையறைகளுக்கும்‌, நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டு, மூன்றாண்டுக்‌ கால அளவிற்குப்‌ பதவி வகித்து வருவார்‌. வரம்புரை : ஆனால்‌, நிதி அலுவலராக நியமிக்கப்பட்டவர்‌ தம்முடைய பதவிக்காலத்தின்போது ஐம்பத்தெட்டு வயது நிறைவெய்துவாரானால்‌, பதவியிலிருந்து அவர்‌ ஒய்வு பெறுதல்‌ வேண்டும்‌. (௫) நிதி அலுவலரின்‌ ஊதியங்களும்‌ அவரது பணி குறித்த பிற வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌ வகுத்துரைக்கப்பட்டனவாக இருத்தல்‌ வேண்டும்‌. @) நிதி அலுவலரின்‌ பதவி காலியாக இருக்கும்‌ போது, அல்லது நிதி அலுவலரானவர்‌, நோய்‌, பணிக்கு வாராமை என்கிற காரணத்தாலோ அல்லது பிற காரணம்‌ எதனாலேனுமோ தம்முடைய பதவி அதிகாரங்களைச்‌ செலுத்திவருவதற்கும்‌ அலுவல்களைப்‌ புரிந்து வருவதற்கும்‌, கடமைகளை ஆற்றிவருவதற்கும்‌ இயலாதவராக இருக்கும்போது, நிதி அலுவலரின்‌ அவரது பதவிக்கான அதிகாரங்களையும்‌ அலுவல்களையும்‌ கடமைகளையும்‌ அதற்காகத்‌ துணைவேந்தரால்‌ குறிப்பிடப்படுபவர்‌ முறையே செலுத்திவரவும்‌, புரிந்து வரவும்‌, ஆற்றிவரவும்‌ வேண்டும்‌. (9 நிதி அலுவலர்‌, நிதிக்‌ குழுவின்‌ பதவி வழிச்‌ செயலாளராக இருந்துவருவார்‌. (6) நிதி அலுவலர்‌:- (@ இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதியங்களின்‌ மீது பொதுவான மேற்பார்வையைச்‌ செலுத்தி வருதல்‌ வேண்டும்‌ என்பதோடு, அதன்‌ நிதிக்கொள்கை குறித்து இப்பல்கலைக்கழகத்திற்கு ஆலோசனை வழங்குதலும்‌ வேண்டும்‌; மற்றும்‌ (0) _ குழுமத்தால்‌ தனக்குக்‌ குறித்தளிக்கப்படும்‌ அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ செலுத்திவருதலும்‌ பிற நிதிசார்‌ அலுவல்களைப்‌ புரிந்துவருதலும்‌ வேண்டும்‌. வரம்புரை: ஆனால்‌, நிதி அலுவலர்‌, குழுமத்தின்‌ முன்‌ ஒப்புதலளிப்பு இல்லாமல்‌, வகுத்துரைக்கப்படும்‌ தொகைக்கு மேற்பட்டு செலவு செய்வதோ முதலீடு செய்வதோ கூடாது. M குழுமத்தின்‌ கட்டுப்பாட்டு அதிகாரத்திற்குட்பட்டு, நிதி அலுவலர்‌, (a) ஒராண்டிற்கான தொடர்‌ மற்றும்‌ தொடராச்‌ செலவினங்கள்‌, குழுமம்‌ நிர்ணயித்த வரம்புகளுக்கு மேற்படாமலிருப்பதையும்‌, பணங்கள்‌ அனைத்தும்‌, அவை வழங்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்பட்ட நோக்கங்களுக்காகச்‌ செலவிடப்படுவதையும்‌ உறுதி செய்து கொள்ள வேண்டும்‌; (8) இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டுக்‌ கணக்குகள்‌, நிதி மதிப்பீடுகள்‌, வரவு செலவுத்‌ திட்டம்‌ ஆகியவற்றைத்‌ தயாரிப்பதற்கும்‌ அவற்றை நிதிக்‌ குழுவிடமும்‌ குழுமத்திடமும்‌ அளிப்பதற்கும்‌ பொறுப்புடையவராவார்‌; (6) கையிருப்புப்‌ பணம்‌, வங்கி இருப்புகள்‌ மற்றும்‌ முதலீடுகள்‌ ஆகியவற்றைத்‌ தொடர்ந்து கவனித்து வரவேண்டும்‌; (9 வருவாயை வசூல்‌ செய்வதில்‌ உள்ள முன்னேற்றத்தைக்‌ கவனித்து வரவும்‌ அவை வசூலிக்கப்பட வேண்டிய முறைகளைப்‌ பற்றி ஆலோசனை வழங்குதலும்‌ வேண்டும்‌; நிதி அலுவலர்‌. முதன்மையர்‌. இயக்குநர்கள்‌. 12 (8 கட்டடங்கள்‌, நிலம்‌, அறைகலம்‌, சாதனங்கள்‌ ஆகியவற்றின்‌ பதிவேடுகள்‌ நாளது தேதி வரை வைத்துப்‌ பேணி வரப்படுவதையும்‌ இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணி வரப்படும்‌ அலுவலகங்கள்‌, ஆய்வுக்கூடங்கள்‌, கல்லூரிகள்‌, கல்வி நிலையங்கள்‌ ஆகிய அனைத்திலும்‌ உள்ள சாதனங்களின்‌ மற்றும்‌ பிற நகரத்தக்க பொருள்களின்‌ இருப்பு நிலையைச்‌ சரிபார்க்கும்‌ பணி நடத்தப்படுவதையும்‌ உறுதிசெய்து கொள்ளுதல்‌ வேண்டும்‌; () அதிகாரம்‌ அளிக்கப்படாத செலவினம்‌ எதையும்‌ பற்றி அல்லது பிற நிதிசார்‌ முறைகேடு பற்றித்‌ துணைவேந்தரின்‌ கவனத்திற்குக்‌ கொண்டுவருதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ தவறு செய்துள்ளவர்‌ மீது எடுக்கப்பட வேண்டிய உரிய நடவடிக்கை குறித்து ஆலோசனை கூறுதலும்‌ வேண்டும்‌; மற்றும்‌ (ஐ) தம்முடைய அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவதற்காக, தம்முடைய அலுவல்களைப்‌ புரிந்து வருவதற்காக அல்லது தம்முடைய கடமைகளை ஆற்றி வருவதற்காக, தாம்‌ தேவையெனக்‌ கருதும்‌ தகவல்‌ அல்லது விவர அறிக்கைகளை: இப்பல்கலைக்‌ கழகத்தினால்‌ பேணிவரப்படும்‌ அலுவலகம்‌, ஆய்வுக்‌ கூடம்‌, கல்லூரி அல்லது கல்வி நிலையம்‌ எதிலிருந்தும்‌ தருவித்தல்‌ வேண்டும்‌. 15. () கல்லூரி ஒவ்வொன்றும்‌, மீன்வள அறிவியலில்‌ இளநிலைப்‌ பட்டப்படிப்பு பெற்றுள்ள முதன்மையர்‌ ஒருவரைப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌; அவர்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ முழு நேர ஊதியம்‌ பெறும்‌ அலுவலராக இருப்பார்‌ மற்றும்‌ அவர்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரில்‌, குழுமத்தின்‌ ஒப்புதலளிப்புடன்‌, துணை வேந்தரால்‌ நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) முதன்மையர்‌, குழுமத்தினால்‌ குறித்துரைக்கப்படக்கூடிய வரையறைகளுக்கும்‌ நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டு மூன்று ஆண்டுகள்‌ என்பதான கால அளவு ஒன்றுக்குப்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ மூன்றாண்டுகளைக்‌ கொண்ட மற்றுமொரு காலஅளவுக்கு அவர்‌ மறு நியமனம்‌ செய்யப்படுவதற்கு உரிமைத்‌ தகுதி உடையவராதல்‌ வேண்டும்‌. வரம்புரை: ஆனால்‌, முதன்மையராக நியமிக்கப்பட்ட நபர்‌ ஒருவர்‌ அவர்தம்‌ பதவிக்காலத்தின்‌ போது அறுபது ஆண்டுகள்‌ என்பதான வயதினை நிறைவெய்தினால்‌, பதவியிலிருந்து ஒய்வு பெறுதல்‌ வேண்டும்‌. (3) முதன்மையர்‌, தன்னுடைய கல்லூரி தொடர்பான அனைத்துப்‌ பொருட்பாடுகளுக்கும்‌ துணை வேந்தருக்குப்‌ பொறுப்புடையவராக இருப்பார்‌. @ முதன்மையர்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதலும்‌ கடமைகளை ஆற்றி வருதலும்‌ வேண்டும்‌. 16. () இயக்குநர்கள்‌ மீன்‌ வள அறிவியலில்‌ இளநிலைப்‌ பட்டப்படிப்பு பெற்றுள்ளவர்களாக, பல்கலைக்‌ கழகத்தின்‌ சம்பளம்‌ பெறும்‌ முழுநேர அலுவலர்களாக இருத்தல்வேண்டும்‌; மற்றும்‌ அவர்கள்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய வரையறைகளுக்கும்‌ நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டு குழுமத்தின்‌ ஒப்புதலளிப்புடன்‌ துணைவேந்தரால்‌ நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (9) இயக்குநர்‌ ஒவ்வொருவரும்‌, குழுமத்தினால்‌ குறித்துரைக்கப்படக்‌ கூடிய வரையறைகளுக்கும்‌ நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டு மூன்று ஆண்டுகள்‌ என்பதான கால அளவு ஒன்றுக்குப்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவர்‌ மூன்றாண்டுகளைக்‌ கொண்ட மற்றுமொரு காலஅளவுக்கு மறு நியமனம்‌ செய்யப்‌ படுவதற்கு உரிமைத்‌ தகுதி உடையவராதல்‌ வேண்டும்‌. வரம்புரை: ஆனால்‌, இயக்குநராக நியமிக்கப்பட்ட நபர்‌ ஒருவர்‌ அவர்தம்‌ பதவிக்காலத்தின்‌ போது அறுபது ஆண்டுகள்‌ என்பதான வயதினை நிறைவெய்தினால்‌, பதவியிலிருந்து ஒய்வு பெறுதல்‌ வேண்டும்‌. (9) ஆராய்ச்சி இயக்குநர்‌, ஆய்வு நிலையங்களின்‌ முறையான செயல்பாட்டிற்குப்‌ பொறுப்புடையவராக இருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ முதன்மையரின்‌ மற்றும்‌ பிற அலுவலர்களின்‌ ்‌ ஒத்துழைப்புடன்‌. ஆராய்ச்சிப்‌ பணியை ஒருங்கிணைத்தல்‌ வேண்டும்‌. மற்றும்‌ வகுத்துரைக்கப்படக்‌ கூடிய அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதலும்‌ கடமைகளைப்‌ புரிந்துவருதலும்‌ வேண்டும்‌. @ விரிவாக்கக்‌ கல்வி இயக்குநர்‌, முதன்மையர்‌ மற்றும்‌ பிற அலுவலர்களின்‌. ஒத்துழைப்புடன்‌, ஆராய்ச்சிப்‌ பணி விளைவுகளின்‌ அடிப்படையில்‌, விரிவாக்கப்‌ பணித்‌ திட்டங்களைத்‌ திட்டமிடுவதற்கும்‌ நிறைவேற்றுவதற்கும்‌ பொறுப்புடையவராக இருப்பார்‌. மேலும்‌ அவர்‌ வகுத்துரைக்கப்‌ படக்கூடிய அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ கடமைகளை ஆற்றி வருதலும்‌ வேண்டும்‌. 13 17. () தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, மீன்வள அறிவியலில்‌ இளநிலைப்‌ பட்டப்படிப்பு பெற்றுள்ள வராகவும்‌ மீன்வள அறிவியல்துறைகளில்‌ கல்வியாளராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வகுத்துரைக்கப்‌ படக்கூடிய அத்தகைய காலஅளவிற்கும்‌ மற்றும்‌ அத்தகைய வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரிலும்‌, துணைவேந்தரால்‌ குழுமத்தின்‌. ஒப்புதலளிப்புடன்‌ நியமிக்கப்படும்‌ பல்கலைக்கழகத்தின்‌ சம்பளம்‌ பெறும்‌ முழுநேர அலுவலரொருவராக இருத்தல்‌ வேண்டும்‌. @ தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, வகுத்துரைக்கப்‌ படக்கூடிய அத்தகைய அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதலும்‌ அத்தகைய கடமைகளை ஆற்றி வருதலும்‌ வேண்டும்‌: வரம்புரை: தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலராக நியமிக்கப்பட்ட நபர்‌ ஒருவர்‌, தனது பதவிக்‌ காலத்தின்போது, அறுபது வயது நிறைவெய்தினால்‌ பதவியிலிருந்து ஒய்வு பெறுதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ - 1V இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ 18. மேலாண்மைக்‌ குழுமம்‌, கல்வி மன்றம்‌, புலங்கள்‌, பாடத்திட்ட குழுமங்கள்‌, திட்டக்குழுமம்‌, நிதிக்குழு ஆகியவையும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளென நிலைமுறை விதிகளால்‌ விளம்பப்படும்‌ இப்பல்கலைகழகத்தின்‌ பிற அமைப்புகளும்‌ இப்பல்கலைக்‌ கழகத்தின்‌. அதிகார அமைப்புகளாகும்‌. 19.0) 49ஆம்‌ பிரிவின்படி முதல்‌ துணைவேந்தர்‌ நியமிக்கப்பட்டதற்குப்‌ பின்னர்‌, வேந்தரானவர்‌, கூடியவிரைவில்‌ மேலாண்மைக்‌ குழுமத்தை அமைத்துருவாக்குதல்‌ வேண்டும்‌. @) அக்குழுமம்‌ பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருக்கும்‌, அதாவது :-- வகை 1 - பதவி வழி-உறுப்பினர்கள்‌' (துணைவேந்தர்‌; (b) மீன்வளத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (நிதித்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (9) சட்டத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (8) அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கழகத்தின்‌ உறுப்பினர்‌ செயலாளர்‌; (9) சென்னையிலுள்ள கடலாண்மைக்‌ குழுமத்தின்‌ தலைமை நிருவாக அலுவலர்‌; (9) மீன்வளத்துறை இயக்குநர்‌) மற்றும்‌ (h) பதிவாளர்‌. வகை 11 - பிற உறுப்பினர்கள்‌ (ஐ) மீன்வளம்‌ பற்றிய ஆராய்ச்சி செய்வதிலும்‌ பயிற்றுவிப்பதிலும்‌ விரிவாக்கக்‌ கல்வி. அளிப்பதிலும்‌ சிறப்பு அறிவையோ நடைமுறைப்‌ பட்டறிவையோ பெற்றிருக்கின்ற மீன்வளத்துறை அறிவியலாளர்‌ ஒருவர்‌, அவர்‌ வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவார்‌; (9) முற்போக்கு செயல்பாடுடைய மீன்‌ பண்ணையாளர்‌ அல்லது மீனவர்‌ ஒருவர்‌, அவர்‌ அரசால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவார்‌; (6) கூட்டுறவு மற்றும்‌ மின்வளத்தொழிலகம்‌ உள்ளடங்கலான மீன்‌ வணிகத்தைச்‌ சார்பாற்றம்‌ செய்யும்‌ ஒருவர்‌, அவர்‌ அரசால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவார்‌; (d) சமூக மேம்பாட்டில்‌ ஆர்வம்‌ மிக்க பெண்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌, அவர்‌ வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவார்‌; தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ மேலாண்மைக்‌ குழுமத்தினை: அமைத்து உருவாக்குதல்‌. 14 (6) கல்வியாளர்‌ ஒருவர்‌, அவர்‌ வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவார்‌; () புதுடில்லியில்‌ அமைந்த இந்திய வேளாண்‌ ஆராய்ச்சிக்கழகத்தின்‌ நியமனதாரர்‌ ஒருவர்‌ (ஐ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவை உறுப்பினர்களால்‌ தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்படும்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌; (h) ஐதராபாத்திலுள்ள தேசிய மீன்வள மேம்பாட்டுக்‌ குழுமத்தினை சார்பாற்றம்‌ செய்யும்‌ நபர்‌ ஒருவர்‌; () புது டில்லியிலுள்ள உணவு பதப்படுத்தும்‌ தொழில்‌ துறை அமைச்சகத்தைச்‌ சார்பாற்றம்‌ செய்யும்‌ நபர்‌ ஒருவர்‌; () புது டில்லியிலுள்ள நில அறிவியல்‌ அமைச்சகத்தைச்‌ சார்பாற்றம்‌ செய்யும்‌ நபர்‌ ஒருவர்‌; மற்றும்‌ (k) புது டில்லியிலுள்ள அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப அமைச்சகத்தைச்‌ சார்பாற்றம்‌ செய்யும்‌ நபர்‌ ஒருவர்‌. (6) மீன்வளத்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌ அல்லது நிதித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌ அல்லது சட்டத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌, எந்தக்‌ காரணத்தினாலேனும்‌ குழுமத்தின்‌ கூட்டங்களுக்கு வர இயலாமற்‌ போனால்‌, அரசு இணைச்‌ செயலாளரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத தமது துறையிலுள்ள அலுவலர்‌ எவரையும்‌ அக்‌ கூட்டங்களில்‌ கலந்து கொள்வதற்கு அவர்‌: அதிகாரமளித்து அனுப்பி வைக்கலாம்‌. கடலாண்மைக்‌ குழுமத்தின்‌ தலைமை நிருவாக அலுவலர்‌ அல்லது அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கழகத்தின்‌ உறுப்பினர்‌ செயலாளர்‌ எந்தக்‌. காரணத்தினாலேனும்‌ குழுமத்தின்‌ கூட்டங்களுக்கு வர இயலாமற்‌ போனால்‌ கடலாண்மைக்‌ குழுமத்தின்‌ அல்லது நேர்விற்கேற்ப அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கழகத்தின்‌ அலுவலர்‌ எவரையும்‌ அக்கூட்டங்களில்‌ கலந்து கொள்வதற்கு அவர்‌ அதிகாரமளித்து அனுப்பி வைக்கலாம்‌. அவ்வாறு அதிகாரமளித்து அனுப்பிவைக்கப்பட்ட அலுவலர்‌, அக்‌ கூட்டத்தின்‌ விவாதங்களில்‌ பங்கேற்பதற்கான உரிமையைப்‌ பெற்றிருப்பார்‌ என்பதுடன்‌, அதில்‌ வாக்களிப்பதற்கான உரிமையையும்‌ பெற்றிருப்பார்‌. @) துணைவேந்தர்‌, குழுமத்தின்‌ பதவிவழித்‌ தலைவராக இருந்து வருவார்‌, பதிவாளர்‌, குழுமத்தின்‌ பதவிவழிச்‌ செயலாளராக இருந்துவருவார்‌. (8) (ஐ) பதவி வழி உறுப்பினர்களல்லாத குழுமத்தின்‌ பிற உறுப்பினர்கள்‌ மூன்றாண்டுக்‌ காலஅளவிற்குப்‌ பதவி வகிப்பர்‌. மேலும்‌ அத்தகைய உறுப்பினர்கள்‌ மற்றொரு மூன்றாண்டுக்‌ காலஅளவுக்குத்‌ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்குத்‌ தகுதியுடையவராவர்‌. G @i உறுப்பினர்‌, தற்செயல்‌ காலியிடத்தில்‌ மேலாண்மைக்‌ குழுவிற்குத்‌ தேர்ந்தெடுக்கப்படுகிற விடத்து அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுகிறவிடத்து, அத்தகைய உறுப்பினர்‌ எவராலும்‌ ஒராண்டிற்குக்‌ குறையாமல்‌ வகிக்கப்பட்ட பதவிக்கால அளவானது, முழு மூன்றாண்டுக்‌ காலஅளவாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. முதலாம்‌ வரம்புரை: ஆனால்‌, குறிப்பிட்டதொரு தொகுதியின்‌ அல்லது அமைப்பின்‌ ஓர்‌ உறுப்பினர்‌ அல்லது குறிப்பிட்டதொரு பதவியை வகிப்பவர்‌ என்ற திறனில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட குழும உறுப்பினர்‌ ஒருவர்‌, அல்லது குறிப்பிட்ட பதவி வகிப்பவர்‌, அந்தத்‌ தொகுதியின்‌ அல்லது அமைப்பின்‌ உறுப்பினராக அல்லது நேர்விற்கேற்ப அந்தப்‌ பதவி வகிப்பவராக அவர்‌ இருப்பது அற்றுப்போகிற தேதியிலிருந்து, குழுமத்தின்‌ உறுப்பினராக இருப்பதும்‌ அற்றுப்போகும்‌. இரண்டாம்‌ வரம்புரை: தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்‌ ஒருவர்‌, எந்தப்‌ பதவி காரணமாக, மேலாண்மைக்‌ குழுவின்‌ பதவி வழி உறுப்பினராக இருப்பதற்கு உரிமையுடையவராக இருக்கிறாரோ அந்தப்பதவிகளில்‌ எதற்கும்‌ தற்காலிகமாக நியமிக்கப்படுகிறவிடத்து, அவர்‌, பதவிப்‌ பொறுப்பு ஏற்றுக்‌ கொண்ட தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்‌ அவர்‌ கையொப்பமிட்டு எழுத்துருவில்‌ அறிவிப்பு வாயிலாகத்‌ துணைவேந்தருக்குத்‌ தெரிவிப்பதன்‌ மூலம்‌, அவர்‌ தேர்ந்தெடுக்கப்பட்டதன்‌ அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்டதன்‌ காரணமாக மேலாண்மைக்‌ குழுமத்தின்‌ உறுப்பினராகத்‌ 15 தொடர்ந்திருப்பாரா அல்லது அத்தகைய உறுப்பினர்‌ என்ற தமது பதவியைக்‌ காலிசெய்துவிட்டு. அவரது நியமனத்தின்‌ காரணமாக பதவிவழி உறுப்பினராக ஆவாரா என்பதைத்‌ தெரிந்தெடுத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌, அந்தத்‌ தெரிவு அறுதியானதாகும்‌. அவர்‌ அந்தத்‌ தெரிவைச்‌ செய்யத்‌ தவறியதன்‌ பேரில்‌, தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட ஓர்‌ உறுப்பினராக உள்ள அவரது பதவியைக்‌ காலி செய்துவிட்டதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (6 துணை வேந்தர்‌ மற்றும்‌ பதிவாளர்‌ அல்லாத பிற பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்‌. அல்லது பணியாளர்‌ எவரும்‌, குழுமத்தின்‌ ஓர்‌ உறுப்பினராக இருப்பதற்குத்‌ தகுதியுடையவராதல்‌ கூடாது. (7) குழும உறுப்பினர்கள்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய நாள்படி மற்றும்‌ பயணப்படிகள்‌: தவிர, இப்பல்கலைக்‌ கழகத்திடமிருந்து ஊதியம்‌ எதையும்‌ பெறுவதற்கு உரிமை உடையவர்களாகமாட்டார்கள்‌. (6) பதவி வழி உறுப்பினர்‌ அல்லாத பிற குழும உறுப்பினர்‌ எவரும்‌, வேந்தரின்‌ கருத்துப்படி ஒர்‌ உறுப்பினராகச்‌ செயற்படுவதற்குத்‌ தகுதியற்றவராக இருந்தால்‌ அல்லது உறுப்பினராக அவர்‌ தொடர்ந்திருப்பது பல்கலைக்கழகத்தின்‌ நலன்களுக்குப்‌ பாதகமானதாக இருக்கிறவாறு தனது உறுப்பினர்‌ நிலையைத்‌ தவறாகப்‌ பயன்படுத்தியிருந்தால்‌, வேந்தரானவர்‌ அவர்தம்‌, தரப்பினை எடுத்துரைப்பதற்கு ஒரு நியாயமான வாய்ப்பைக்‌ கொடுத்ததற்குப்‌ பின்பு, அவரைப்‌ பதவியிலிருந்து அகற்றலாம்‌. © பதவி வழி உறுப்பினர்‌ அல்லாத குழுமத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌, அவரது பதவிக்காலம்‌. முடிவடைவதற்கு முன்‌ எந்த நேரத்திலும்‌ அவரது பதவி விலகலுக்கான கோரிக்கையை விடுக்கலாம்‌. உறுப்பினர்‌, எழுத்து மூலமான கடிதம்‌ ஒன்றின்‌ வாயிலாக அத்தகைய பதவி விலகல்‌ குறித்து வேந்தருக்குத்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அந்தப்‌ பதவி விலகலானது. 'வேந்தரால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 20. குழுமத்தின்‌ அதிகாரங்களும்‌, கடமைகளும்‌ பின்வருமாறு இருத்தல்‌ வேண்டும்‌ (6) இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதித்‌ தேவைப்பாடுகள்‌ குறித்துப்‌ பரிசீலித்து ஆய்வு செய்தல்‌: மற்றும்‌ அதன்‌ ஆண்டு நிதி மதிப்பீடுகளுக்கு ஒப்புதலளித்தல்‌; (9) இப்பல்கலைக்கழகத்தின்‌ பொறுப்பில்‌ விடப்பட்ட நிதியங்கள்‌, கருதப்பட்ட நோக்கங்களுக்காக நிருவகிக்கப்படுவதற்கு வகை செய்தல்‌; (9 இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதியங்களை முதலீடு செய்வதற்கும்‌ திரும்பப்பெறுவதற்கும்‌ ஏற்பாடு செய்தல்‌; (@) முதலீட்டினை மேம்படுத்துவதற்காக பணத்தைக்‌ கடன்‌ வாங்குதல்‌: மற்றும்‌, அது திருப்பிச்‌ செலுத்தப்படுவதற்காக தக்க ஏற்பாடுகளைச்‌ செய்தல்‌; (8 இப்பல்கலைக்கழகத்தின்‌ சார்பாக சொத்துக்களை ஈட்டுதலும்‌, வைத்துவருதலும்‌, வகை செய்தலும்‌; () இப்பல்கலைக்கழகத்திற்கென்றே உள்ள பொது இலச்சினையின்‌ வடிவத்தைத்‌ தீர்மானித்தலும்‌, அதன்‌ பாதுகாப்பிற்கு வகை செய்தலும்‌, அதன்‌ பயன்பாட்டினை முறைப்படுத்தலும்‌; (9 அது தேவையெனக்‌ கருதக்கூடிய நிலைக்‌ குழுக்களையோ தற்காலிகக்‌ குழுக்களையோ நியமித்தல்‌: மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ நிலைமுறை விதிகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, எந்தெந்த பொருள்கள்‌ குறித்து அவற்றிடம்‌ குறிப்பிட்டனுப்பலாம்‌. என்பதைக்‌ குறித்துரைத்தல்‌; (9 இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ நிலை முறை விதிகளின்‌ வகைமுறைகளுக்கு இணங்க, இப்பல்கலைக்‌ கழகம்‌ தொடர்பான கொள்கைப்‌ பிரச்சினைகள்‌ அனைத்தையும்‌ தீர்மானித்தல்‌ மற்றும்‌ அவற்றை முறைப்படுத்துதல்‌; () கல்வி மன்றத்தால்‌ தீர்மானிக்கப்படக்கூடிய கல்விப்‌ பிரிவுகளிலும்‌ குறித்தகாலப்‌ பாடப்‌ பிரிவுகளிலும்‌ பயிற்றுவித்தல்‌, கற்பித்தல்‌, ஆராய்ச்சி செய்தல்‌, அறிவை பேப்படுத்துதல்‌ மற்றும்‌ பரப்புதல்‌ ஆகியவற்றிற்கான நிதிக்கு வகை செய்தல்‌; () கல்லூரிகள்‌, மாணவர்‌ விடுதிகள்‌, ஆய்வுக்‌ கூடங்கள்‌, சோதனைப்‌ பண்ணைகள்‌ ஆகியவற்றை நிறுவிப்‌ பேணிவருவதற்கும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத்‌ தவையானவையாகவுள்ள பிற வசதிகளுக்கும்‌ வகை செய்தல்‌; குழுமத்தின்‌ oo கடமைகளும்‌. 16 (8 பட்டங்கள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றை ஏற்படுத்தி வழங்குவதற்கு வகை செய்தல்‌; () படிப்புதவித்‌ தொகைகள்‌, பட்டதாரி உதவித்‌ தொகைகள்‌, மாணவர்‌ உதவித்‌ தொகைகள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌ மற்றும்‌ அவை போன்றவற்றை ஏற்படுத்திப்‌ பேணி வழங்கி. வருவதற்கு வகை செய்தல்‌; (m) தன்னிடம்‌ அளிக்கப்படும்‌ பொறுப்பாட்சிச்‌ சொத்து, உயில்வழிக்கொடை, நன்கொடை, அசையும்‌ அல்லது அசையாச்‌ சொத்து ஏதொன்றின்‌ உரிமை மாற்றம்‌ ஆகியவற்றை இப்பல்கலைக்கழகத்தின்‌ சார்பாக ஏற்றுக்கொள்ளுதல்‌; (7) இப்பல்கலைக்கழகத்தின்‌ சார்பாக ஒப்பந்தம்‌ செய்து கொள்ளுதல்‌; (0) பொது - தனியார்‌ கூட்டாண்மை முறையின்‌ கீழ்‌ கல்வி, ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்கத்‌ திட்டங்களைச்‌ செயற்படுத்துதல்‌; () இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத்‌ தேவையாயிருக்கக்கூடிய இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌, நிலைமுறை விதிகளின்‌ வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத பிற அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதல்‌ மற்றும்‌ ககமைகளை ஆற்றி வருதல்‌;மற்றும்‌ (0) நிலைமுறை விதிகளைச்‌ செய்தல்‌ மற்றும்‌ நிலை முறை விதிகளைத்‌ திருத்தம்‌ செய்தல்‌ அல்லது நீக்கம்‌ செய்தல்‌, 21. () வகுத்துரைக்கப்படக்கூடிய காலங்களிலும்‌ இடங்களிலும்‌ குழுமம்‌ கூடுதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ 2, @) ஆகிய உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்குப்பட்டு, தன்‌ கூட்டங்களின்‌ குறைவெண்வரம்பு உள்ளடங்கலாக, அக்கூட்டங்களில்‌ அலுவல்‌ நடத்துவது தொடர்பாக வகுத்துரைக்கப்படக்கூடிய நடைமுறை விதிகளைக்‌ கடைப்பிடித்தல்‌ வேண்டும்‌. குழுமத்தின்‌ வரம்புரை: ஆனால்‌, குழுமம்‌, குறைந்தது ஒவ்வொரு மூன்று திங்களுக்கும்‌ ஒரு முறையேனும்‌ கூட்டங்கள்‌. கூடுதல்‌ வேண்டும்‌. (2) துணைவேந்தரோ அல்லது அவர்‌ வாராதபோது, வந்திருக்கும்‌ உறுப்பினர்களால்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌ உறுப்பினர்‌ எவரேனுமோ, குழுமத்தின்‌ கூட்டமொன்றிற்குத்‌ தலைமை வகிப்பார்‌. (6) குழுமத்தின்‌ கூட்டம்‌ எதிலும்‌ எழும்‌ அனைத்துக்‌ கேள்விகளும்‌, வந்திருந்து வாக்களிக்கின்ற உறுப்பினர்களின்‌ பெரும்பான்மையினரால்‌ முடிவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வாக்குகள்‌ சமமானவையாக அமைகின்ற நேர்வில்‌, துணைவேந்தரோ அல்லது நேர்விற்கேற்ப தலைமை வகிக்கின்ற உறுப்பினரோ, இரண்டாவது அல்லது அறுதிவாக்கு ஒன்றைப்‌ பெற்றிருத்தலும்‌ அதைச்‌ செலுத்துதலும்‌ வேண்டும்‌. @ (௫ குழுமம்‌, பரிசீலனையில்‌ உள்ள பொருள்‌ எதிலும்‌ சிறப்பு அறிவையோ அல்லது நடைமுறைப்‌ பட்டறிவையோ பெற்றிருக்கின்ற எவரையும்‌ கலந்தாய்வு நோக்கத்திற்காக, கூட்டம்‌ எதற்கும்‌ வருகைதருமாறு அழைப்பு விடுக்கலாம்‌. அத்தகையவர்‌ அத்தகைய கூட்டங்களின்‌ நடவடிக்கைகளில்‌ பேசவும்‌ மற்றப்படி பங்கேற்கவும்‌ செய்யலாம்‌; ஆனால்‌ வாக்களிப்பதற்கு உரிமைத்‌ தகுதியுடையவராகமாட்டார்‌. (9 அவ்வாறு அழைக்கப்பட்டவர்‌, குழுமத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவருக்கு அனுமதிக்கத்தக்கவையான நாள்படி மற்றும்‌ பயணப்படிகளுக்கு உரிமைத்‌ தகுதியுடையவராவார்‌. 22. கல்வி மன்றம்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ கல்விசார்‌ அதிகார அமைப்பாக இருக்கும்‌. அது இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ நிலைமுறை விதிகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, இப்பல்கலைக்கழகத்தின்‌ பயிற்றுவித்தல்‌, தேர்வு ஆகியவை குறித்துக்‌ கட்டுப்பாட்டுரிமையையும்‌ பொதுவாக அவற்றை முறைப்படுத்துகின்ற உரிமையையும்‌ பெற்றிருக்கும்‌; மேலும்‌ அவற்றின்‌. தரங்களைப்‌ பேணிவருவதற்கும்‌ அது பொறுப்புடையதாகும்‌. 17 23. (1) கல்வி மன்றம்‌, பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டதாயிருக்கும்‌, அதாவது:- வகை-1 பதவி-வழி உறுப்பினர்கள்‌ (@) துணைவேந்தர்‌; (9) மீன்வளத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (9 மீன்வளத்துறை இயக்குநர்‌; (@) கல்லூரி ஒவ்வொன்றின்‌ முதன்மையர்‌; (6) முதன்மையர்‌ (கல்வி); () ஆராய்ச்சி இயக்குநர்‌; (ஐவிரிவாக்கக்‌ கல்வி இயக்குநர்‌; (1) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌; மற்றும்‌ (i) பதிவாளர்‌. வகை-11 பிற உறுப்பினர்கள்‌ (2) துறைத்தலைவர்களுக்கிடையேயிருந்து ஆறு உறுப்பினர்கள்‌: துணைவேந்தர்‌ இவர்களைச்‌ சுற்றுமுறை அடிப்படையில்‌ பெயர்குறித்து நியமிப்பார்‌; (8) மீன்வளத்துறையின்‌ பல்வேறு கூறுகளில்‌ சிறப்பு அறிவையோ நடைமுறைப்‌ பட்டறிவையோ பெற்றிருக்கின்ற மூவர்‌: இவர்களை துணைவேந்தர்‌ பெயர்‌ குறித்து நியமிப்பார்‌; (6) இந்திய வேளாண்‌ ஆராய்ச்சிக்கழகம்‌ அங்கீரித்துள்ள மீன்வளக்கல்லூரி ஒன்றின்‌ முதன்மையர்‌; (6) தமிழ்நாடு கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ விலங்கின அறிவியல்‌ பல்கலைக்கழகத்தினால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ முதன்மையர்‌ ஒருவர்‌; (6) தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தினால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ முதன்மையர்‌ ஒருவர்‌; மற்றும்‌ () கடலாண்மைக்‌ குழுமத்தின்‌ தலைமை நிருவாக அலுவலரால்‌ கடலாண்மைக்‌ கல்வி மையங்களிலிருந்து நியமிக்கப்படும்‌ முதன்மையர்‌ ஒருவர்‌, @ துணைவேந்தர்‌, கல்வி மன்றத்தின்‌ பதவி வழித்தலைவராக இருந்துவருவார்‌; பதிவாளர்‌, கல்வி மன்றத்திற்குப்‌ பதவிவழிச்‌ செயலாளராக இருந்துவருவார்‌. (6) ஐ கல்வி மன்றத்தின்‌ உறுப்பினர்கள்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய நாள்படி மற்றும்‌ பயணப்படிகள்‌ தவிர ஊதியம்‌ எதனையும்‌ பல்கலைக்கழகத்திடமிருந்து பெறுவதற்கு உரிமைத்‌ தகுதியுடையவராதல்‌ கூடாது. வரம்புரை: ஆனால்‌, இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌ உறுப்பினர்‌ எவரையும்‌ அவர்‌. வகிக்கும்‌ பதவியின்‌ காரணமாக அவர்‌ உரிமைத்‌ தகுதியுடையவராயிருக்கும்‌ வழக்கமான: ஊதியங்களைப்‌ பெறுவதிலிருந்து ஒதுக்குதல்‌ கூடாது. (9 பதவி வழி உறுப்பினர்‌ அல்லாத கல்வி மன்றத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌, அவரது பதவிக்காலம்‌ முடிவடைவதற்கு முன்‌ எந்த நேரத்திலும்‌ அவரது பதவி விலகலுக்கான கோரிக்கையை விடுக்கலாம்‌. உறுப்பினர்‌, எழுத்து மூலமான கடிதம்‌ ஒன்றின்‌ வாயிலாக, அத்தகைய பதவி விலகல்‌ குறித்து துணைவேந்தருக்குத்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அந்தப்‌ பதவி விலகலானது துணைவேந்தரால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (6 கல்வி மன்றத்தின்‌ பதவி வழி உறுப்பினர்களல்லாத பிற உறுப்பினர்களின்‌. பதவிக்‌ காலஅளவு மூன்றாண்டுகளாக இருக்கும்‌. வரம்புரை: ஆனால்‌, குறிப்பிட்ட பதவியை வகிப்பவர்‌ என்ற தகுதியினால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்டிருக்கிற கல்வி மன்ற உறுப்பினர்‌ ஒருவர்‌, அந்தப்‌ பதவியை அவர்‌ வகிப்பது அற்றுப்‌ போகிற தேதியிலிருந்து கல்வி மன்றத்தின்‌ ஒர்‌ உறுப்பினராக இருப்பதும்‌ அற்றுப்போகும்‌. கல்வி. மன்றத்தின்‌. அமைப்பு புலங்கள்‌. பாடத்திட்டக்‌ குழுமம்‌. திட்டக்‌ குழுமம்‌. 18 24. கல்வி மன்றத்தின்‌ அதிகாரங்களும்‌ கடமைகளும்‌ பின்வருவனவாக இருக்கும்‌. (@ பயிற்றுவித்தல்‌ மற்றும்‌ பிற கல்வித்‌ திட்டங்களின்‌ மீது பொதுவான. கட்டுப்பாட்டதிகாரத்தைச்‌ செலுத்திவருதல்‌ மற்றும்‌ அவற்றின்‌ தரங்களைப்‌ பேணி மேம்படுத்துதல்‌; . O ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்தல்‌ மற்றும்‌ அவற்றைத்‌ திருத்துதல்‌ அல்லது நீக்குதல்‌; (2) (i) இப்பல்கலைக்கழகத்தில்‌ மாணவர்களைச்‌ சேர்த்துக்கொள்வது, சேர்த்துக்கொள்ளப்படவேண்டிய மாணவர்களின்‌ எண்ணிக்கை ஆகியவை குறித்தும்‌; (1) பட்டங்கள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்சிறப்புகள்‌ ஆகியவற்றைப்‌ பெறுவதற்கு வழிவகுக்கின்ற குறித்த காலப்‌ பாடப்பிரிவுகள்‌ குறித்தும்‌; மற்றும்‌ (11) தேர்வுகளை நடத்துவது மற்றும்‌ கல்வித்‌ தரங்களைப்‌ பேணி மேம்படுத்துவது குறித்தும்‌ ஒழுங்கு முறை விதிகளைச்‌ செய்தல்‌; (6) நூலகங்களின்‌ மீது கட்டுப்பாட்டதிகாரம்‌ செலுத்தி அவற்றை நிருவகித்து வருவது உள்ளிட்ட, கல்வி தொடர்பான அனைத்துப்‌ பொருட்பாடுகளிலும்‌ குழுமத்திற்கு ஆலோசனை வழங்குதல்‌; (8) பேராசிரியர்‌ பதவி, இணைப்‌ பேராசிரியர்‌ பதவி, உதவிப்‌ பேராசிரியர்‌ பதவி, மற்றும்‌ ஆராய்ச்சி செய்தல்‌, விரிவாக்கக்‌ கல்வி ஆகியவற்றிற்கான பிற பதவிகள்‌ நியமனம்‌ செய்தல்‌ உள்ளடங்கலான பயிற்றுவிக்கும்‌ பதவிகள்‌ மற்றும்‌ அவற்றின்‌ கடமைகள்‌ தொடர்பாகக்‌. குழுமத்திடம்‌ பரிந்துரை செய்தல்‌; () பயிற்றுவித்தல்‌, ஆராய்ச்சி செய்தல்‌, விரிவாக்கக்‌ கல்வி ஆகிய துறைகளை அமைத்து உருவாக்குவதற்கான அல்லது புதிதாக மாற்றி அமைத்து உருவாக்குவதற்கான. திட்டங்களை உருவாக்குதல்‌, மாற்றி அமைத்தல்‌ அல்லது திருத்தியமைத்தல்‌; (ஐ) பட்டமேற்படிப்பில்‌ பயிற்றுவித்தல்‌, ஆராய்ச்சி செய்தல்‌, விரிவாக்கக்‌ கல்வி ஆகியவை குறித்துக்‌ குழுமத்திடம்‌ பரிந்துரை செய்தல்‌; (h) பயிற்றுவித்தல்‌, மற்றும்‌ விரிவாக்கக்‌ கல்வி தொடர்பாக இப்பல்கலைக்‌. கழகத்தில்‌ உள்ள பணியாளர்களுக்கு வகுத்துரைக்கப்பட வேண்டிய தகுதிப்பாடுகள்‌ எவை என்பது குறித்துக்‌ குழுமத்திடம்‌ பரிந்துரை செய்தல்‌; () மதிப்புறு பட்டங்களையோ பிற சிறப்புகளையோ வழங்குவது குறித்துக்‌ குழுமத்திடம்‌ பரிந்துரை செய்தல்‌; மற்றும்‌ () நிலைமுறை விதிகளினால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய பிற அதிகாரங்களைச்‌ செலுத்திவருதல்‌ அத்தகைய பிற கடமைகளை அற்றிவருதல்‌. 25. () இப்பல்கலைக்கழகமானது மீன்வள அறிவியல்‌, அடிப்படை அறிவியல்‌, தகவல்‌ தொழில்‌ நுட்பப்‌ புலங்களையும்‌, நிலைமுறை விதிகளின்‌ மூலம்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய பிற புலங்களையும்‌ உள்ளடக்கியதாயிருக்கும்‌. @ புலம்‌ ஒவ்வொன்றும்‌ முதன்மையர்‌ ஒருவரைப்‌ பெற்றிருக்கும்‌ அவர்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய முறையில்‌ நியமிக்கப்படுவார்‌. ௫௫ புலம்‌ ஒவ்வொன்றும்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய குறிப்பிட்டொதுக்கப்பட்ட பாடப்‌ பொருள்களைப்‌ பெற்றவையாயுள்ள அத்தகைய வகுத்துரைக்கப்படக்கூடிய பயிற்றுவித்தல்‌ துறைகளைக்‌ கொண்டிருக்கும்‌: மற்றும்‌ துறை ஒவ்வொன்றும்‌, தலைவர்‌ ஒருவரைப்‌ பெற்றிருக்கும்‌: அவர்‌ அந்தத்‌ துறையை முறையாக அமைத்துப்‌ பணி செய்வதைப்‌ பொறுத்த அளவில்‌ முதன்மையருக்குப்‌ பதில்‌ சொல்லக்‌ கடமைப்பட்டவராவார்‌, துறையின்‌ அத்தகைய தலைவர்‌ சுற்றுமுறைப்படி மூன்றாண்டுகளைக்‌ கொண்டதொரு பெரும அளவுக்கான கால அளவுக்கு, காலமுறைப்படியான பரிசீலனைக்குட்பட்டு, துணைவேந்தரால்‌ நியமனம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. @ பிற அனைத்துப்‌ பொருட்பாடுகளையும்‌ பொறுத்தமட்டில்‌, புலங்களின்‌ அமைப்பும்‌ அலுவல்களும்‌ வகுத்துரைக்கப்படக்கூடியவையாக இருக்கும்‌. 26. ஒவ்வொரு புலத்திற்கும்‌ பாடத்திட்டக்‌ குழுமம்‌ ஒன்று இருக்கும்‌. அதன்‌ அமைப்பும்‌ அலுவல்களும்‌ வகுத்துரைக்கப்படக்‌ கூடியவாறு இருக்கும்‌. 27. () பல்கலைக்கழகத்தின்‌ திட்டமிடுதல்‌ மேம்பாட்டில்‌ பொதுவாக ஆலோசனை வழங்கும்‌ வகையிலும்‌ ஆராய்ச்சியின்‌ கல்வித்‌ தர நிலையை மறு ஆய்வு செய்து வரும்‌ வகையிலும்‌ பல்கலைக்கழகத்தின்‌ திட்டக்‌ குழுமம்‌ ஒன்று அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌. கல்வி மன்றத்தின்‌ அதிகாங்களும்‌ கடமைகளும்‌. 19 (2) திட்டக்‌ குழுமமானது பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருக்கும்‌, அதாவது :- (i) துணைவேந்தர்‌, இவர்‌ திட்டக்குழுமத்தின்‌ பதவிவழிச்‌ செயலாளராக இருந்து வருவார்‌; மற்றும்‌ (ம குழுமத்தினால்‌ நியமிக்கப்படும்‌ உயர்கல்வித்‌ தரநிலையிலுள்ள எண்மருக்கு மேற்படாத எண்ணிக்கையிலான நபர்கள்‌ (6) திட்டக்குழுமத்திற்கு பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின்‌ பதவிக்கால. அளவானது மூன்று ஆண்டுகளாக இருத்தல்‌ வேண்டும்‌, (4) திட்டக்குழுமமானது, இந்தச்‌ சட்டத்தின்படி உற்றமைந்த அனைத்து பிற அதிகாரங்களுக்கும்‌ கூடுதலாக மேலாண்மைக்‌ குழுமத்திற்கும்‌ கல்வி மன்றத்திற்கும்‌ கல்வி சார்‌ பொருட்பாடு எதிலும்‌ ஆலோசனை வழங்குவதற்கான உரிமையையும்‌ கொண்டிருக்கும்‌. 28. பல்கலைக்‌ கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ அனைத்தும்‌, குழுக்களை அமைத்துருவாக்குவதற்கும்‌, அல்லது மீண்டும்‌ அமைத்துருவாக்குவதற்கும்‌ மற்றும்‌ தான்‌: பொருத்தமெனக்‌ கருதும்‌ அத்தகைய அதிகாரங்களை அவற்றிடம்‌ ஒப்படைவு செய்வதற்கும்‌ அதிகாரம்‌ கொண்டிருக்கும்‌. அந்த குழுக்கள்‌, பிறவாறு வகை செய்யப்பட்டாலன்றி தொடர்புடைய அதிகார அமைப்பின்‌ உறுப்பினர்களையும்‌, ஒவ்வொரு நேர்விலும்‌, அதிகார அமைப்பு பொருத்தமென கருதும்‌ பிற நபர்கள்‌ எவரேனும்‌ இருந்தால்‌ அந்நபர்களையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ - V ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்கக்‌ கல்வி அமைப்புகள்‌ 29. (0) இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ நிலைமுறை விதிகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, இப்பல்கலைக்‌ கழகமானது, மீன்வள வளர்ச்சிக்கு உதவும்‌ பொருட்டு, முதன்மையாக மீன்வள: அறிவியல்‌ தொடர்பான பிரச்சனைகள்‌ குறித்து அடிப்படை ஆராய்ச்சி செய்வதற்காக மீன்வள ஆராய்ச்சி அமைப்பொன்றை நிறுவுதல்‌ வேண்டும்‌: மற்றும்‌ இந்த நோக்கத்திற்காக, மீன்வளத்‌ துறையின்‌ ஒத்துழைப்புடன்‌, தேவையாயிருக்கக்கூடிய எண்ணிக்கையில்‌ மீன்வள ஆராய்ச்சி. நிலையங்களை நிறுவுதல்‌ வேண்டும்‌. @ மீன்வள ஆராய்ச்சி அமைப்பானது, ஆராய்ச்சி இயக்குநரின்‌ வழிகாட்டு நெறியின்படி மேம்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 30. (0 இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ நிலைமுறை விதிகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, இப்பல்கலைக்‌ கழகமானது, மீன்வள விரிவாக்கக்‌ கல்வி அமைப்பொன்றை நிறுவுதல்‌ வேண்டும்‌: அது, ஆராய்ச்சி அடிப்படையில்‌ பெற்ற தகவலை மாணவர்கள்‌, விரிவாக்கப்‌ பணியாளர்கள்‌, மீன்‌ பண்ணையாளர்கள்‌ மற்றும்‌ மீனவ மக்களுக்குக்‌ கிடைக்குமாறு செய்தல்‌ வேண்டும்‌: மற்றும்‌ தொடர்புடைய அரசுத்‌ துறைகளின்‌ ஒத்துழைப்போடு, அத்தகையவர்களின்‌ நலனுக்காக, செய்முறை விளக்க நிகழ்ச்சியையும்‌ பயிற்சித்‌ திட்டத்தையும்‌ நடத்துதல்‌ வேண்டும்‌. (8) இப்பல்கலைக்கழகமானது,--- (8) மீன்‌ பண்ணையாளர்கள்‌ மற்றும்‌ மீனவ மக்களின்‌ வாழ்க்கை நிலைகளை உயர்த்துவதற்கு இன்றியமையாதவையாகவுள்ள மேம்படுத்தப்பட்ட பயில்முறைகளில்‌ மீன்வளம்‌: பற்றிய ஆராய்ச்சியின்‌ கண்டுபிடிப்புகளையும்‌ அதன்‌ மீதான மேம்பாடுகளையும்‌ மீன்பண்ணையாளர்களுக்கும்‌ மீனவ மக்களுக்கும்‌ தெரியப்படுத்துவதுடன்‌ செய்முறையில்‌ காண்பிக்கவும்‌; (b) உணவு உற்பத்தி மற்றும்‌ பயன்பாட்டிற்குச்‌ சிறப்பு முக்கியத்துவம்‌ அளித்து, மீன்வள உற்பத்தியை அதிகரிப்பதற்குத்‌ தேவையான மீன்வள விரிவாக்கக்‌ கல்வி. நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்‌ வேண்டும்‌. (6). மீன்வள விரிவாக்கக்‌ கல்வி நிறுவனமானது, விரிவாக்கக்‌ கல்வி இயக்குநரின்‌. வழிகாட்டு நெறியின்படி மேம்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ - VI நிதியங்களும்‌ கணக்குகளும்‌ 31.௫ இப்பல்கலைக்கழகம்‌ பொது நிதியமொன்றைக்‌ கொண்டிருக்கும்‌, அதில்‌:- குழுக்களை அமைத்துரு- வாக்குதலும்‌. அதிகாரங்களை ஒப்படைவு செய்தலும்‌. மீன்வள. ஆராய்ச்சி. அமைப்பு. மீன்வள விரிவாக்கக்‌. கல்வி அமைப்பு. பொது நிதியம்‌ பிற நிதியங்கள்‌. நிதியங்களை நிருவகித்தல்‌. மானியங்கள்‌. நிதிக்குழு. 20 (2) கட்டணங்கள்‌, நிலைக்கொடைகள்‌, மானியங்கள்‌, நன்கொடைகள்‌, விருப்பக்‌ கொடைகள்‌ ஆகியவற்றின்‌ மூலமான வருமானம்‌ ஏதேனுமிருப்பின்‌, அதையும்‌ (8) மைய அரசாலோ, மாநில அரசு எதனாலேனுமோ, 1956-ஆம்‌ ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள்‌ ஆணையச்‌ சட்டத்தின்‌ 4-ஆம்‌ பிரிவின்படி நிறுவப்பட்ட பல்கலைக்கழக மானிய ஆணையத்தாலோ அல்லது அது போன்ற அதிகார அமைப்பினாலோ உள்ளாட்சி அதிகார அமைப்பு எதனாலேனுமோ அல்லது அத்தகைய அரசுக்குச்‌ சொந்தமான: அல்லது அதன்‌ கட்டுப்பாட்டின்‌ கீழுள்ள நிறுவனம்‌ எதனாலேனுமோ செய்யப்படும்‌ பங்களிப்பு அல்லது மானியமளிப்பு எதையும்‌, மற்றும்‌ (6) பிற வருவாய்களையும்‌ வரவுவைத்தல்‌ வேண்டும்‌. @ பொது நிதியத்தில்‌ உள்ள பணங்கள்‌ 1882-ஆம்‌ ஆண்டு இந்திய பொறுப்புக்‌ கட்டளைகள்‌ சட்டத்தின்‌ 20-ஆம்‌ பிரிவின்‌ (௨) முதல்‌ (8) வரையுள்ள கூறுகளில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள பிணையங்களில்‌ முதலீடு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (6) பல்கலைக்கழகம்‌, அரசால்‌ செய்யப்படும்‌ மானியமளிப்பு எதனின்‌ மற்றும்‌ அதன்‌: பயன்பாடு தொடர்பான விளக்கவுரைகள்‌, கணக்குகள்‌, அறிக்கைகள்‌ மற்றும்‌ பிற விபரங்களை அரசு கோரக்கூடியவாறு அளித்தல்‌ வேண்டும்‌. 32. இப்பல்கலைக்கழகம்‌, நிலைமுறை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய பிற நிதியங்களைக்‌ கொண்டிருக்கலாம்‌. 33. இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதியங்கள்‌ மற்றும்‌ பணங்கள்‌ அனைத்தும்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில்‌ நிருவகிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 34. ட அரசு, ஒவ்வோர்‌ ஆண்டும்‌ இப்பல்கலைக்‌ கழகத்திற்கு, பின்வருமாறு காலக்‌ கழிவுறா ஒட்டுமொத்த மானியத்‌ தொகைகளை வழங்குதல்‌ வேண்டும்‌: @) மீன்வள அறிவியல்கள்‌ தொடர்பான கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டுள்ள மீன்வள அறிவியல்கள்‌ தொடர்பான அத்தகைய பிற அரசுத்‌ துறைகள்‌ ஆகியவற்றின்‌ நடவடிக்கைகளைப்‌ பொறுத்து அந்த ஆண்டில்‌ செலவிட நேர்ந்த நிகர செலவிற்குக்‌ குறையாத மானியமொன்றையும்‌; (5) இப்பல்கலைக்கழத்தின்‌ பணியாளர்‌ தொகுதிக்கான சம்பளம்‌ மற்றும்‌ படித்‌ தொகைகள்‌, எதிர்பாராச்‌ செலவுகள்‌, வழங்கீடுகள்‌ மற்றும்‌ பணிச்சேவைகள்‌ ஆகியவற்றிற்கான. மதிப்பிடப்பட்ட செலவுகளுக்குக்‌ குறைவாக இல்லாத மானியமொன்றையும்‌; (6) இப்பல்கலைக்கழகம்‌ உரியவாறு செயற்படுவதற்கு அரசு தேவையெனக்‌ கருதும்‌ கூடுதலான தொடர்‌ மற்றும்‌ தொடராச்‌ செலவினங்களை எதிர்கொள்வதற்கான மானியமொன்றையும்‌ வழங்குதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (9) வளர்ச்சியின்‌ அடிப்படையில்‌ மீன்வளக்‌ கல்வி, ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்கத்தில்‌ புதிய உயர்‌ குறியீட்டுத்‌ த நிலைகளை வகுப்பதற்கான ஆண்டு மானியம்‌. @ அரசினால்‌ மானியம்‌ எதுவும்‌ வழங்கப்படுவதற்கு முன்னர்‌ அது கோரக்கூடிய அத்தகைய விவர அறிக்கைகள்‌, கணக்குகள்‌, அறிக்கைகள்‌ மற்றும்‌ பிற விவரக்‌ குறிப்புகளை பல்கலைக்கழகம்‌ மாநில அரசுக்கு அளித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ பல்கலைக்கழகமானது மாநில அரசு பணிக்கக்கூடிய அத்தகைய காலத்திற்குள்ளும்‌ அத்தகைய முறையிலும்‌ அத்தகைய நடவடிக்கையை எடுப்பதோடு, மானியம்‌ எதனின்‌ பயன்பாடு தொடர்பான அத்தகைய விவர அறிக்கைகள்‌, கணக்குகள்‌, அறிக்கைகள்‌ மற்றும்‌ பிற விவரக்‌ குறிப்புகளை மாநில அரசுக்கு. வழங்குதல்‌ வேண்டும்‌. 35. () குழுமம்‌, பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருக்கின்ற நிதிக்குழுவொன்றை நியமித்தல்‌ வேண்டும்‌, அதாவது:- (2) துணைவேந்தர்‌ (b) மீன்வளத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (௦) நிதித்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; மையச்‌ சட்டம்‌ 11% மையச்‌ சட்டம்‌ ॥ / 1882. 21 (d) அரசு வழி அலுவலர்களல்லாத தனது பிற உறுப்பினர்களுக்கிடையேயிருந்து குழுமத்தால்‌ தெரிந்தெடுக்கப்படும்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌; மற்றும்‌ (6) நிதி அலுவலர்‌. (2) துணைவேந்தர்‌ நிதிக்குழுவின்‌ பதவிவழித்‌ தலைவராக இருந்து வருவார்‌. நிதி அலுவலர்‌, நிதிக்‌ குழுவின்‌ பதவிவழிச்‌ செயலாளராக இருந்து வருவார்‌. (8) காரணங்கள்‌ எதற்காகவும்‌ மீன்வளத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌ அல்லது நிதித்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌ நிதிக்குழுவின்‌ கூட்டங்களில்‌ கலந்துகொள்ள இயலவில்லையானால்‌ அவர்‌ அரசின்‌ இணைச்‌ செயலாளர்‌ படிநிலைக்குக்‌ குறையாத தன்னுடைய துறையின்‌ அலுவலர்‌ எவரையும்‌ கூட்டங்களில்‌ கலந்து கொள்வதற்காக அனுப்பி வைக்கலாம்‌; அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அலுவலர்‌, கூட்டத்தின்‌ கலந்துரையாடல்களில்‌ பங்குகொள்வதற்கும்‌, வாக்களிப்பதற்கும்‌ உரிமை பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. @ நிதிக்குழுவானது, @) இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டுக்‌ கணக்குகளையும்‌ ஆண்டு நிதி மதிப்பீடுகளையும்‌ பரிசீலனை செய்தலும்‌ அவற்றின்‌ மீது குழுமத்திற்கு ஆலோசனை வழங்குதலும்‌ வேண்டும்‌; (8) அவ்வப்போது, இப்பல்கலைக்கழத்தின்‌ நிதி நிலைமையை ஆய்வு செய்தல்‌ வேண்டும்‌; (6) ஆண்டு நிதி மதிப்பீடுகளில்‌ வகைமுறை எதுவும்‌ செய்யப்பட்டிராத செலவினத்தை உள்ளடக்கியுள்ள, கருத்துரு ஒவ்வொன்றின்‌ பேரிலும்‌ குழுமத்திற்குப்‌ பரிந்துரை செய்தல்‌ வேண்டும்‌; (9) இப்பல்கலைக்கழக நிதிகள்‌ தொடர்பான அனைத்துப்‌ பொருட்பாடுகளின்‌ பேரிலும்‌ குழுமத்திற்குப்‌ பரிந்துரை செய்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (9 வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய பிற அலுவல்களையும்‌ ஆற்றுதல்‌ வேண்டும்‌. 36. குழுமமானது, நிலைமுறை விதிகளில்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ தேவையானதாயிருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தின்‌ பிற அதிகார அமைப்புகளை அமைத்து உருவாக்கலாம்‌. 37. () நிதி அலுவலரால்‌ தயாரிக்கப்படும்‌ ஆண்டுக்‌ கணக்குகள்‌, அரசு பணிக்கக்கூடிய பரிசீலனைக்கும்‌ தணிக்கைக்கும்‌ அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ ஆண்டுக்‌ கணக்குகளின்‌ மற்றும்‌ தணிக்கை அறிக்கையின்‌ படியொன்று, அரசுக்குப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. @) இப்பல்கலைக்கழகம்‌ அத்தணிக்கையில்‌ எழுப்பப்பட்ட மறுப்புகளைத்‌ தீர்த்து முடிவு செய்தல்‌ வேண்டும்‌ என்பதோடு, தணிக்கை அறிக்கையின்‌ மீது அரசினால்‌ பிறப்பிக்கப்படக்கூடிய அத்தகைய பணிப்பாணைகளை நிறைவேற்றுதலும்‌ வேண்டும்‌. (3) அரசு, ஆண்டுக்‌ கணக்குகளையும்‌ தணிக்கை அறிக்கையையும்‌ தன்‌: கருத்துரைகளுடன்‌ சேர்த்து இம்மாநிலச்‌ சட்ட மன்றப்‌ பேரவையின்‌ முன்பு வைப்பதற்கு ஆவன செய்தல்‌ வேண்டும்‌. @ நிதி அலுவலர்‌, அடுத்து வருகின்ற ஆண்டிற்கான ஆண்டு நிதிசார்‌ மதிப்பீடுகளை, நிலைமுறை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய தேதிக்கு முன்னர்‌ தயாரித்தல்‌ வேண்டும்‌. (6) நிதி அலுவலரால்‌ தயாரிக்கப்பட்ட ஆண்டுக்‌ கணக்குகளும்‌, ஆண்டு நிதிசார்‌ மதிப்பீடுகளும்‌ நிதிக்‌ குழுவின்‌ கருத்துரைகளுடன்‌ சேர்த்து, குழுமத்தின்‌ முன்பு, அதன்‌. ஆண்டுக்‌ கூட்டத்தில்‌ ஒப்புதலளிப்பிற்காக வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ குழுமம்‌, அது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி அதனை நிதி அலுவலருக்குத்‌ தெரிவிக்கலாம்‌: அவரும்‌ அதற்கிணங்க நடவடிக்கை எடுத்தல்‌ வேண்டும்‌. பிற அதிகார அமைப்பினை: அமைத்துரு வாக்குதல்‌. ஆண்டுக்‌. கணக்குகள்‌. ஒய்வூதியம்‌, பணிக்கொடை முதலானவை, பணி நிபந்தனைகள்‌, நிலைமுறை விதிகள்‌. 22 அத்தியாயம்‌ - VI பணி நிபந்தனைகள்‌ 38.(1) இப்பல்கலைக்கழகம்‌ தன்‌ அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, மற்ற பணியாளர்கள்‌. ஆகியோரின்‌ நலனுக்காக, வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய முறையிலும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டும்‌, தான்‌ பொருத்தமெனக்‌ கருதக்கூடிய ஒய்வூதியம்‌, பணிக்கொடை, காப்பீடு, வருங்காலவைப்பு நிதியும்‌ ஆகியவற்றை ஏற்படுத்துதல்‌ வேண்டும்‌. (2) இப்பல்கலைக்கழகம்‌, ()-ஆம்‌ உட்பிரிவின்படி வருங்காலவைப்பு நிதியமொன்றை அவ்வாறு ஏற்படுத்தியுள்ளவிடத்து, இப்பல்கலைக்கழகம்‌ ஓர்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பாகவும்‌. அந்நிதியம்‌ ஓர்‌ அரசு வருங்கால வைப்பு நிதியாகவும்‌ இருந்தாற்போன்றே, 1925-ஆம்‌ ஆண்டு வருங்காலவைப்பு நிதியங்கள்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ அந்நிதியத்திற்குப்‌ பொருந்துதல்‌ வேண்டும்‌ என்று அரசு விளம்பலாம்‌. (6) இப்பல்கலைக்கழகம்‌, நிதிக்‌ குழுவுடன்‌ கலந்தறிந்து, தான்‌ முடிவு செய்யக்கூடிய அத்தகைய முறையில்‌ வருங்கால வைப்பு நிதியத்தொகையை முதலீடு செய்யலாம்‌. விளக்கம்‌:- இந்தப்‌ பிரிவின்‌ மற்றும்‌ 39 மற்றும்‌ 42-ஆம்‌ பிரிவுகளின்‌ நோக்கங்களுக்காக, “அலுவலர்‌” என்னும்‌ சொல்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ வேந்தரையும்‌ இணைவேந்தரையும்‌ துணைவேந்தரையும்‌ உள்ளடக்குதலாகாது.. 39. இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு இப்பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, மற்ற பணியாளர்கள்‌ ஆகியோரின்‌ நியமனம்‌, அவர்களைத்‌ தெரிவு செய்வதற்கான நடைமுறை, அவர்களின்‌ சம்பளம்‌ மற்றும்‌ படிது்தொகைகள்‌ மற்றும்‌ பிற பணி நிபந்தனைகள்‌. ஆகியவை, வகுத்துரைக்கப்படக்‌ கூடியவாறு இருக்கும்‌. அத்தியாயம்‌ - ரா நிலைமுறை மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ 40. இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, நிலைமுறை விதிகள்‌ பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ அனைத்திற்கும்‌ அல்லது அவற்றில்‌ எதற்கும்‌ வகை செய்யலாம்‌ : அதாவது : (6) எந்த நிபந்தனைகளின்படி இப்பல்கலைக்கழகத்தில்‌ பயிற்றுவித்தல்‌, ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்கக்கல்வி நடத்தப்படலாம்‌ என்பதற்கும்‌; (9) எந்த முறையிலும்‌, எந்த நிபந்தனைகளின்படியும்‌ மதிப்புறு பட்டங்களும்‌ பிற கல்விச்சிறப்புகளும்‌ வழங்கப்படலாம்‌ என்பதற்கும்‌; (6) கட்டணங்கள்‌ பிற விதிப்புக்‌ கட்டணங்கள்‌ இவ்வளவென்று நிர்ணயித்தல்‌, அவற்றைச்‌ செலுத்துதல்‌, பெறுதல்‌ ஆகியவற்றிற்கும்‌; (d) இப்பல்கலைக்கழத்தில்‌ சேர்த்துக்‌ கொள்ளப்படுவதற்கான கல்வித்‌ தகுதியையும்‌ தரத்தையும்‌ வகுத்துரைப்பதற்கும்‌; © எந்த வரையறைகளுக்கும்‌ நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டு, பதிவாளர்‌ நியமிக்கப்படலாம்‌ என்பதற்கும்‌, அவருடைய அதிகாரங்கள்‌ மற்றும்‌, ககமைகள்‌ ஆகியவை இன்னவையெள்பதற்கும்‌; () எந்த வரையறைகளுக்கும்‌, நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டு, நிதிஅலுவலர்‌ நியமிக்கப்படலாம்‌ என்பதற்கும்‌ மற்றும்‌ அவர்தம்‌ அதிகாரங்களும்‌ பணிகளும்‌ மற்றும்‌ கடமைகளும்‌ இன்னவென்பதற்கும்‌; (ஐ எந்த வரையறைகளுக்கும்‌, நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டு, முதன்மையர்கள்‌ நியமிக்கப்படலாம்‌ என்பதற்கும்‌, அவர்தம்‌ அதிகாரங்களும்‌, கடமைகளும்‌ இன்னவையென்பதற்கும்‌ ; (h) எந்த வரையறைகளுக்கும்‌ நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டு, ஆராய்ச்சி இயக்குநர்‌ மற்றும்‌ விரிவாக்கக்‌ கல்வி இயக்குநர்‌, தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, பிற இயக்குநர்கள்‌. ஆகியோர்‌ நியமிக்கப்படலாம்‌ என்பதற்கும்‌, அவர்களுடைய அதிகாரங்களும்‌, கடமைகளும்‌ இன்னவையென்பதற்கும்‌; மையச்‌ சட்டம்‌ XIX / 1925. 23 (1) இப்பல்கலைக்கழகக்‌ குழுமத்தின்‌, கல்விமன்றத்தின்‌ மற்றும்‌ பிற அதிகார அமைப்புகளின்‌ மற்றும்‌ அவற்றின்‌ குழுக்களின்‌ உறுப்பினர்களுக்குச்‌ செலுத்தப்பவேண்டிய நாள்‌ படிகளுக்கும்‌ மற்றும்‌ பயணப்படிகளுக்கும்‌; () புலம்‌ ஒவ்வொன்றுக்குமான பாடப்பொருள்கள்‌ குறித்தொதுக்கப்படுவதற்கும்‌; (புலங்கள்‌ ஒவ்வொன்றின்‌ பாடத்திட்டக்‌ குழுமங்களின்‌ அமைப்பிற்கும்‌ அலுவல்களுக்கும்‌; (1) புலங்களின்‌ அமைப்பிற்கும்‌, அலுவல்களுக்கும்‌; (m) எந்த முறையில்‌ முதன்மையர்கள்‌ நியமிக்கப்படலாம்‌ என்பதற்கும்‌; (n) கல்லூரிகளையும்‌, கல்வி நிலையங்களையும்‌ இணைப்பதற்கும்‌; (6) இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதியங்களும்‌ பணங்களும்‌ ஏற்படுத்தபடுவதற்கும்‌ நிருவகிக்கப்படுவதற்கும்‌; (தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள்‌ எந்த முறையில்‌ வெளியிடப்படவேண்டும்‌ என்பதற்கும்‌; (௫944-ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகளின்‌ மாணவர்களுக்காக எவ்வளவு கால அளவிற்கு எந்த முறையில்‌ பயிற்றுவித்தல்‌ வேண்டும்‌, கல்வி கற்பித்தல்‌ வேண்டும்‌, பயிற்சியளித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ தேர்வுகள்‌ நடத்தப்படுதல்‌ வேண்டும்‌ என்பதற்கும்‌; (7) நிலைமுறை விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட வேண்டுமென்றோ வகுத்துரைக்கப்படக்கூடுமென்றோ கோரப்படும்‌ பிற பொருட்பாடு எதற்கும்‌; (9 பல்கலைக்கழகத்தின்‌ பிற அதிகார அமைப்புகளுக்கான அமைப்பு, அதிகாரங்கள்‌ மற்றும்‌ பணிகள்‌ இன்னவையென்பதற்கும்‌ வகை செய்யலாம்‌. 41. (1) குழுமம்‌, இந்தப்‌ பிரிவில்‌ இதன்பின்பு வகை செய்யப்பட்டுள்ள முறையில்‌ அவ்வப்போது, நிலைமுறை விதிகளைச்‌ செய்யலாம்‌; மற்றும்‌ அந்நிலைமுறை விதிகளைத்‌ திருத்தலாம்‌ அல்லது நீக்கலாம்‌. (2) கல்வி மன்றம்‌, குழுமத்தால்‌ நிறைவேற்றப்‌ படவேண்டிய நிலைமுறை விதி எதனின்‌ வரைவையும்‌, அல்லது அதன்‌ திருத்தம்‌ எதனையும்‌ அல்லது நிலைமுறை விதியொன்றின்‌ நீக்கம்‌ குறித்தும்‌ குழுமத்திடம்‌ முன்மொழியலாம்‌; மற்றும்‌ அத்தகைய வரைவானது, குழுமத்தால்‌ அதன்‌ அடுத்த கூட்டத்தில்‌ பரிசீலனை செய்யப்படுதல்‌ வேண்டும்‌. வரம்புரை: ஆனால்‌, கல்விமன்றம்‌, பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின்‌. தகுநிலை, அதிகாரங்கள்‌ அல்லது அதன்‌ அமைப்பினைப்‌ । பாதிக்கிற நிலைமுறை விதி எதனையும்‌ திருத்தம்‌ செய்கிற கருத்துரு எதனையும்‌, அந்தக்‌ கருத்துரு தொடர்பாக தனது கருத்தை வெளிப்படுத்துவதற்கு அந்த அதிகார அமைப்பிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும்‌ வரையில்‌, முன்மொழிதல்‌ ஆகாது. மற்றும்‌ அவ்வாறு வெளியிடப்படும்‌ கருத்து எதுவும்‌, குழுமத்தால்‌ பரிசீலனை செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (3) குழுமம்‌, (9-ஆம்‌ உட்பிரிவின்படி, கல்வி மன்றத்தால்‌ முன்மொழியப்பட்ட வரைவைப்‌ பரிசீலனை செய்யலாம்‌ மற்றும்‌ அது அந்த நிலைமுறை விதியின்‌ வரைவினை நிறைவேற்றலாம்‌. அல்லது மறுத்துத்‌ தள்ளிவிடலாம்‌, அல்லது திருத்தத்துடனோ இல்லாமலோ அதை மறுபரிசீலனைக்காகக்‌ கல்வி மன்றத்திற்குத்‌ திருப்பியனுப்பலாம்‌. (4) (6) குழுமத்தின்‌ உறுப்பினர்‌ எவரும்‌, நிலைமுறை விதியொன்றின்‌ வரைவொன்றினைக்‌ குழுமத்திற்கு முன்மொழியலாம்‌ மற்றும்‌ குழுமம்‌, அவ்வரைவை ஏற்றுக்கொள்ளலாம்‌, அல்லது அது கல்வி மன்றத்தின்‌ உள்ளிட்டெல்லைக்குள்‌ (Purview) வராத பொருட்பாடு ஒன்றைப்‌ பற்றியதாக இருக்குமானால்‌, அதை மறுத்துத்‌ தள்ளிவிடலாம்‌. (8) அத்தகைய வரைவு, கல்விமன்றத்தின்‌ உள்ளீட்டெல்லைக்குள்‌ வருகின்ற பொருட்பாடு ஒன்றைப்‌ பற்றியதாக இருக்கின்ற நேர்வில்‌, பரிசீலனை செய்வதற்காக. அதை குழுமமானது. கல்விமன்றத்தின்‌ பரிசீலனைக்குக்‌ குறிப்பிட்டனுப்புதல்‌ வேண்டும்‌. அம்‌ மன்றம்‌ 2 ஆம்‌ உட்பிரிவின்‌ வரம்புரையில்‌ விதிக்கப்பட்ட நடைமுறையைப்‌ பின்பற்றியதற்குப்‌ பின்னர்‌, அவ்வரைவிற்குத்‌ தான்‌ ஒப்புதலளிக்கவில்லையென்று குழுமத்திற்கு அறிக்கை கொடுக்கலாம்‌, அல்லது கல்வி மன்றம்‌ ஒப்புதலளிக்கும்‌ அத்தகைய வடிலில்‌ குழுமத்திற்கு அவ்வரைவைப்‌ பணிந்தனுப்பலாம்‌. மேலும்‌, அக்குழுமம்‌ அவ்வரைவைத்‌ திருத்தத்துடனோ அல்லது இல்லாமலோ நிறைவேற்றலாம்‌ அல்லது மறுத்துத்‌ தள்ளிவிடலாம்‌. நிலைமுறை விதிகள்‌ எவ்வாறு செய்யப்‌ படுகின்றன என்பது. ஒழுங்குமுறை விதிகள்‌. குறித்த சில யும்‌ கல்வி இப்பல்கலைக்‌. கழகத்திற்கு மாற்றுதல்‌. 24 42. (1) இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ நிலைமுறை விதிகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, இப்பல்கலைக்‌ கழத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ அனைத்திற்குமோ அல்லது அவற்றில்‌ ஏதொன்றுக்குமோ வகை செய்வதற்கான ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்யலாம்‌; அதாவது:-- (6) இப்பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, பிற பணியாளர்கள்‌. ஆகியோரின்‌ நலனுக்காக எந்த முறையிலும்‌ எந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டும்‌ ஒய்வூதியம்‌, பணிக்கொடை, காப்பீடு, வருங்கால வைப்பு நிதியம்‌ ஆகியவற்றை ஏற்படுத்தலாம்‌ என்பதற்கும்‌; () இப்பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, பிற பணியாளர்கள்‌. ஆகியோரின்‌ நியமனம்‌, அவர்களைத்‌ தெரிவு செய்வதற்கான நடைமுறை, அவர்களின்‌ சம்பளம்‌ மற்றும்‌ படித்தொகைகள்‌, பணி குறித்த பிற நிபந்தனைகள்‌ ஆகியவற்றிற்கும்‌ ; (9) இப்பல்கலைக்கழத்தின்‌ அதிகார அமைப்பு எதனின்‌ உறுப்பினர்களுக்கும்‌ அறிவிப்புக்‌ கொடுத்தல்‌, கூட்டத்‌ தேதிகள்‌, அக்கூட்டங்களில்‌ நடத்தப்படவேண்டிய அலுவல்கள்‌, அக்கூட்ட நடவடிக்கைகளின்‌ பதிவுறுவொன்றை வைத்துவருதல்‌ ஆகியவற்றிற்கும்‌ ; (d) கூட்டங்களில்‌ பின்பற்றப்படவேண்டிய நடைமுறைக்கும்‌, குறைவெண்வரம்பு அமைவதற்குத்‌ தேவைப்படுகின்ற உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை எவ்வளவு என்பதற்கும்‌; ப கா (6) ஒழுங்குமுறைவிதிகளால்‌ வகுத்துரைக்கப்பட வேண்டுமென்றோ வகுத்துரைக்கப்படக்கூடுமென்றோ கோரப்படும்‌ பிற பொருட்பாடு எதற்கும்‌ வகைசெய்யலாம்‌. (8) கல்வி மன்றம்‌, நிலைமுறை விதிகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, குறித்தகாலப்‌ பாடப்பிரிவுகள்‌, தேர்வுமுறைகள்‌ ஆகியவை குறித்தும்‌ இப்பல்கலைக்‌ கழகத்தின்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவை குறித்துமான வரைவுகளை தொடர்புடைய பாடக்குழுமங்களிடமிருந்து பெற்றதற்குப்‌ பின்னர்‌, அவற்றிற்கு வகைசெய்கின்ற ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்யலாம்‌. (6) குழுமம்‌, ஒழுங்குமுறை விதி எதனையும்‌ திருத்துவதற்காக தொடர்புடைய அதிகார அமைப்பிற்கு, தான்‌ பொருத்தமெனக்கருதும்‌ அத்தகைய பணிப்பாணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌. அத்தியாயம்‌ - 16 கல்லூரிகள்‌, பணியாளர்கள்‌, நிதியங்கள்‌ ஆகியவற்றை மாற்றுதல்‌ 43. () 1989ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ அறிவியல்‌ பல்கலைக்கழகச்‌ சட்டத்திலோ அல்லது அதன்கீழ்ச்‌ செய்யப்பட்ட நிலைமுறை விதிகள்‌, ஒழுங்குமுறை விதிகள்‌, ஆணைகள்‌ ஆகியவற்றிலோ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, குறிக்கப்பட்ட தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌. @ அந்தத்‌ தேதிக்கு அடுத்து முன்பு வரையில்‌ மூலாதாரக்‌ கல்லூரியாகவும்‌ தமிழ்நாடு கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ அறிவியல்‌ பல்கலைக்கழகக்‌ கல்வி நிறுவனங்களாகவும்‌ இருந்து வந்த இணைப்புப்‌ பட்டியலின்‌ பகுதி 1 - இல்‌ குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்கள்‌; மற்றும்‌ (9 இந்தத்‌ தேதிக்கு அடுத்து முன்பு வரையில்‌ அரசு மீன்வளத்‌ துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ இருந்து வந்த, இணைப்புப்‌ பட்டியலின்‌ பகுதி 11 - இல்‌ குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்கள்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ மூலக்‌ கல்லூரிகளாகவும்‌ கல்வி நிறுவனங்களாகவும்‌ இப்பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு அதனால்‌ பேணி வரப்படுதல்‌ வேண்டும்‌. @ குறிக்கப்பட்ட தேதியன்றும்‌ அதுமுதற்‌ கொண்டும்‌, (1)ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின்‌ மற்றும்‌ கல்வி நிலையங்களின்‌ கட்டுப்பாடும்‌ நிருவாகமும்‌, மற்றும்‌ அவை தொடர்பான நேரிணையான பல்லைக்கலைக்கழகத்தின்‌ மற்றும்‌ அரசின்‌ சொத்துக்கள்‌, உடைமைகள்‌, கடப்பாடுகள்‌ ஆகியவை அனைத்தும்‌, இப்பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டவையாக அதனிடம்‌ மேவிநிற்றல்‌ வேண்டும்‌. தமிழ்நாடு. சட்டம்‌. 42/1989. 25 @) அரசானது, குறிக்கப்பட்ட தேதிக்குப்பின்னர்‌, எந்தச்‌ சமயத்திலும்‌, தான்‌: பொருத்தமெனக்‌ கருதுகின்ற வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரில்‌ இப்பல்கலைக்‌ கழகத்தின்‌ பயன்பாட்டிற்கென தனது நிலங்களில்‌ எதனையும்‌ அதனிடம்‌ மாற்றலாம்‌. @ அரசானது, குறிக்கப்பட்ட தேதிக்குப்‌ பின்னர்‌, எந்தச்‌ சமயத்திலும்‌, தான்‌: பொருத்தமெனக்‌ கருதுகின்ற வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரில்‌, தனது கல்லூரிகளில்‌ அல்லது அரசு கல்வி நிலையங்களில்‌ ஏதொன்றின்‌ கட்டுப்பாட்டையும்‌ நிருவாகத்தையும்‌ இப்பல்கலைக்கழகத்திடம்‌ மாற்றலாம்‌. (6) இம்மாநிலத்தில்‌ பல்கலைக்கழகமொன்று நிறுவப்படுவது தொடர்பான பிற சட்டம்‌ எதிலுமோ அதன்கீழ்ச்‌ செய்யப்பட்ட நிலைமுறை விதிகள்‌, துணைமுறைவிதிகள்‌, ஒழுங்குமுறை விதிகள்‌, ஆணைகள்‌ ஆகியவற்றிலோ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, அரசினால்‌ குறித்துரைக்கப்படும்‌ தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌, (4)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகளோ, கல்வி நிலையங்களோ, அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட தேதிக்கு அடுத்து முந்திய தேதிவரையில்‌ அவை எந்தப்‌ பல்கலைக்‌ கழகத்துடன்‌ இணைக்கப்‌ பெற்றிருந்தனவோ அந்தப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இணைப்பிலிருந்து நீக்கப்படுதல்‌ வேண்டும்‌ என்பதுடன்‌, இப்பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்‌ பெற்றுள்ள கல்லூரிகளாகவோ, கல்வி நிலையங்களாகவோ இருப்பனவாகக்‌ கருதப்படுதலும்‌ வேண்டும்‌; மேலும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகள்‌ எந்த அளவுக்குக்கூடுமோ அந்த அளவுக்கு, அதன்படியே பொருந்துதல்‌ வேண்டும்‌. 44. இந்தச்‌ சட்டத்திலோ, நிலைமுறை விதிகளிலோ, ஒழுங்குமுறை விதிகளிலோ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, குறிக்கப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர்‌, நேரிணையான பல்கலைக்கழகத்தின்‌ கல்லூரி எதிலும்‌. படித்துக்‌ கொண்டிருந்த அல்லது அந்த நேரிணையான பல்கலைக்கழகத்தின்‌ தேர்வு எதற்கும்‌ அனுமதிக்கப்படுவதற்குத்‌ தகுதியுடையவராயிருந்த 43-ஆம்‌ பிரிவின்‌ ()ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கல்லூரி ஒன்றின்‌ மாணவர்‌ ஒவ்வொருவரும்‌, தம்‌ குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவை அவர்‌ படித்துமுடிப்பதற்கு அனுமதிக்கப்‌ படுதல்‌ வேண்டும்‌, அல்லது இப்பல்கலைக்கழகத்தின்‌ தேர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ இப்பல்கலைக்கழகம்‌, (@) நேரிணையான பல்கலைக்கழகத்தில்‌ உள்ள குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவிற்கிணங்கிய வகையில்‌ முதல்‌ துணைவேந்தரால்‌ தீர்மானிக்கப்படும்‌ அத்தகைய கால அளவுக்கும்‌, அத்தகைய முறையிலும்‌ அத்தகைய மாணவருக்காக, பயிற்றுவித்தல்‌, கற்பித்தல்‌, பயிற்சி அளித்தல்‌, தேர்வு நடத்தப்படுதல்‌ ஆகியவற்றிற்கும்‌, (6) அத்தகைய தேர்வில்‌ முடிவாகத்‌ தகுதிபெற்ற மாணவருக்கு, அதற்கு இணையான இப்பல்கலைக்‌ கழகத்தின்‌ பட்டம்‌, பட்டயம்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்பு வழங்கப்படுவதற்குமான. ஏற்பாடுகளைச்‌ செய்தல்‌ வேண்டும்‌. 45. () மீன்வள அறிவியல்‌ துறையில்‌ தகுதிபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ விலங்கின அறிவியல்‌ பல்கலைக்கழகத்தின்‌ கல்லூரிகளிலும்‌ கல்வி நிறுவனங்களிலும்‌. குறித்துரைக்கப்பட்ட நாளுக்கு அடுத்து முன்பு வரையில்‌ பணியாற்றிவரும்‌ நபர்‌ ஒவ்வொருவரும்‌. மேற்சொன்ன நாளிலிருந்து இப்பல்கலைக்கழகத்தின்‌ பணியாளர்‌ ஒருவராதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவர்‌ தமிழ்நாடு கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ விலங்கின அறிவியல்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌. பணியாளராக இருப்பது அற்றுப்போதல்‌ வேண்டும்‌. @ (&) குறிக்கப்பட்ட நாளுக்குப்‌ பின்னர்‌ கூடிய விரைவில்‌ அரசானது, தமிழ்நாடு கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ விலங்கின அறிவியல்‌ பல்கலைகக்கழகத்தின்‌ மற்றும்‌ தமிழ்நாடு மீன்வளப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்களைக்‌ கலந்து ஆலோசித்த பின்னர்‌ பொது அல்லது தனி ஆணையின்‌ வாயிலாக: டு குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்து முன்னர்‌ வரையில்‌ இணைப்புப்பட்டியலின்‌. பகுதி !!-இல்‌ குறித்துரைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்‌ பணியாற்றி வந்த அரசின்‌ அத்தகைய பணியாளர்களும்‌; மற்றும்‌ @) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்ட நபர்கள்‌ நீங்கலான, தமிழ்நாடு கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ விலங்கின அறிவியல்‌ பல்கலைக்கழகத்தின்‌ அத்தகைய பணியாளர்களும்‌, அத்தகைய ஆணையில்‌ குறித்துரைக்கப்படக்‌ கூடிய அத்தகைய தேதியிலிருந்தும்‌ அது முதற்கொண்டும்‌ செயல்விளைவு கொள்ளும்வகையில்‌ தமிழ்நாடு மீன்வளப்‌ பல்கலைக்கழகத்தின்‌ அலுவல்கள்‌ தொடர்பாகப்‌ பணியாற்றுவதற்கு அத்தகைய ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்டவாறு ஒதுக்கப்பட்டு இருப்பர்‌ எனப்‌ பணிக்கலாம்‌. தனி வகைமுறைகள்‌. குறித்த சில. பணியாளர்களின்‌ பணியை மாற்றுதல்‌. 26 வரம்புரை: ஆனால்‌, அத்தகைய பணியாளர்‌ எவரையும்‌ அவ்வாறு ஒதுக்கீடு செய்வதைப்‌ பொறுத்த அளவில்‌, அவரது இசைவினைப்‌ பெறாமல்‌ அத்தகைய ஆணை பிறப்பிக்கப்படுதல்‌ கூடாது. (0) (@ எனும்‌ கூறின்படி ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட தேதியிலிருந்தும்‌ அது முதற்கொண்டும்‌ செயல்‌ விளைவு கொள்ளும்‌ வகையில்‌ அத்தகைய ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட நபர்கள்‌ தமிழ்நாடு மீன்வளப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பணியாளர்களாதல்‌: வேண்டும்‌; மற்றும்‌ அரசின்‌ அல்லது நேர்விற்கேற்ப தமிழ்நாடு கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ விலங்கின அறிவியல்‌ பல்கலைக்கழகத்தின்‌ பணியாளர்களாக இருப்பது அற்றுப்போதல்‌ வேண்டும்‌. (6) ௫ஆம்‌ மற்றும்‌ (2)ஆம்‌ உட்பிரிவுகளில்‌ குறிப்பிடப்பட்டுள்ள நபர்‌ ஒவ்வொருவரும்‌, இந்தச்‌ சட்டம்‌ நிறைவேற்றப்படாமல்‌ இருந்திருந்தால்‌ குறிக்கப்பட்ட நாளன்றோ அல்லது நேர்விற்கேற்ப (2) ஆம்‌ உட்பிரிவில்‌ (&) எனும்‌ கூறின்படி ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட தேதியன்றோ, அவர்‌ வகித்திருந்திருக்கக்கூடிய பதவிக்‌ கால அளவைப்போன்றே அதே பதவிக்‌ காலஅளவிற்கும்‌, பெற்றிருந்திருக்கக்கூடிய ஊதியத்தைப்‌ போன்ற அதே ஊதியத்திற்கும்‌, ஒய்வூதியம்‌ அல்லது பணிக்கொடை ஏதேனுமிருப்பின்‌ அது குறித்தும்‌ பிற பொருட்பாடுகள்‌ குறித்தும்‌ அதே உரிமைகளுடனும்‌ சிறப்புரிமைகளுடனும்‌ இப்பல்கலைக்கழகத்தில்‌ பதவி. வகித்து வருவார்‌. (4) ௫ஆம்‌ மற்றும்‌ (- உட்பிரிவுகளில்‌ குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு ஒய்வூதியத்தையும்‌ பணிக்கொடையையும்‌ செலுத்துவதற்கான கடப்பாடானது, தமிழ்நாடு. மீன்வளப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கடப்பாடாக இருக்கும்‌. 46. () குறிக்கப்பட்ட தேதியன்று 45-ஆம்‌ பிரிவின்‌ (ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்களின்‌ வருங்கால வைப்பு நிதியக்‌ கணக்குகளில்‌ வரவிலுள்ள தொகைகள்‌, இப்பல்கலைக்கழகத்திடம்‌ மாற்றப்படுதல்‌ வேண்டும்‌ : மற்றும்‌ மேற்சொன்ன வருங்காலவைப்பு நிதியக்‌ கணக்குகளைப்‌ பொறுத்த கடப்பாடானது, இப்பல்கலைக்கழகத்தின்‌ கடப்பாடாக இருத்தல்‌ வேண்டும்‌. (2) 45ஆம்‌ பிரிவின்‌ (2)ஆம்‌ உட்பிரிவின்‌ படியான ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட தேதியன்று, அந்த ஆணையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்களின்‌ வருங்கால வைப்பு நிதியக்‌ கணக்குகளில்‌ வரவு வைக்கப்பட்டுள்ள தொகைகள்‌, பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ மேற்சொன்ன வருங்கால வைப்பு நிதியக்‌ கணக்குகளைப்‌ பொறுத்த கடப்பாடானது, பல்கலைக்கழகத்தின்‌ கடப்பாடாக இருக்கும்‌. (6) 45ஆம்‌ பிரிவின்‌ ௫ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்களின்‌ சார்பாகவும்‌ 45ஆம்‌ பிரிவின்‌ (9ஆம்‌ உட்பிரிவின்படியான ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட பணியாளர்களின்‌ சார்பாகவும்‌ முதிர்வு ஒய்வூதிய நிதியத்திலோ அல்லது அதைப்போன்ற பிற நிதியங்கள்‌ எவையேனுமிருப்பின்‌ அவற்றிலோ வரவு வைக்கப்பட்டுள்ள அத்தகைய தொகைகள்‌ நேரிணையான பல்கலைக்‌ கழகத்தின்‌ அல்லது நேர்விற்கேற்ப அரசின்‌ பணிழுதிர்வு ஒய்வூதியத்திலும்‌ அதைப்போன்ற பிற நிதியங்கள்‌ எவையேனுமிருப்பின்‌, அவற்றிலும்‌ சேர்ந்துள்ள தொகைகளிலிருந்தும்‌ பல்கலைக்‌ கழகத்திற்கு செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. அவ்வாறு. செலுத்தப்பட்ட தொகைகள்‌, பல்கலைக்கழகத்தினால்‌, அதன்‌ பணியாளர்களின்‌ நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட பணிமுதிர்வு ஓய்வூதியம்‌ அல்லது அதைப்போன்ற பிற நிதியங்கள்‌ எவையேனுமிருப்பின்‌ அவற்றின்‌ பகுதியாக அமைதல்‌ வேண்டும்‌. 47. (1) நேரிணையான பல்கலைக்கழகத்துடன்‌ கலந்தாய்வு செய்து, அரசு குறித்துரைக்கக்கூடிய தொகையை, நேரிணையான பல்கலைக்கழகம்‌ குறிக்கப்பட்ட தேதியன்று இருக்கின்றவாறான தனது நிதியங்களிலிருந்து, இப்பல்கலைக்கழகத்திடம்‌ வழங்குதல்‌ வேண்டும்‌. (8) 0ஆம்‌ உட்பிரிவின்படி வழங்கப்படத்தக்க தொகையானது, 46-ஆம்‌ பிரிவின்படி மாற்றப்பட்டுள்ள தொகைக்குக்‌ கூடுதலாக அமைந்ததாக இருத்தல்‌ வேண்டும்‌. 48. குறிக்கப்பட்ட தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌, மீன்வள அறிவியல்களில்‌ கல்வியைக்‌ கற்பிக்கிற புதிய கல்ஜூரி எதுவும்‌, பல்கலைக்கழகத்தின்‌ மூலாதார அல்லது. இணைக்கப்பட்ட ஒரு கல்லூரி என்பதாக அன்றி நிறுவப்படுதலாகாது. வருங்கால. வைப்பு நிதியத்திலும்‌ மற்றும்‌ அது போன்ற நிதியங்களிலும்‌ சேர்ந்துள்ள தொகைகளை மாற்றுதல்‌. புதிய கல்லூரியானது. மூலாதார அல்லது இணைக்கப்பட்ட கல்லூரியாக இருத்தல்‌. பல்கலைக்‌ கழகத்திற்கு குறித்த சில. பணத்‌ தொகைகள்‌: வழங்கப்படுதல்‌. 27. அத்தியாயம்‌ - X இடைப்படுகால வகைமுறைகள்‌ 49. 11ஆம்‌ பிரிவின்‌ (ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, குறிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு திங்களுக்குள்ளாக, அரசினால்‌ அது நிர்ணயிக்கும்‌ சம்பளத்தின்‌. பேரிலும்‌, மூன்றாண்டிற்கு மேற்பபாததொரு கால அளவிற்கும்‌, மற்றும்‌ அது பொருத்தமெனக்‌ கருதும்‌ அத்தகைய பிற நிபந்தனைகளின்பேரிலும்‌, முதல்‌ துணைவேந்தர்‌ நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌. வரம்புரை: ஆனால்‌, முதல்‌ துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள நபர்‌, தமது பதவிக்காலத்தின்போது அறுபத்தைந்து வயதினை அவர்‌ நிறைவெய்துவாரானால்‌, பதவியிலிருந்து ஓய்வுபெறுதல்‌ வேண்டும்‌. 50. 13ஆம்‌ பிரிவின்‌ ()-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, குறிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று திங்களுக்குள்ளாக, அரசினால்‌, அது நிர்ணயிக்கும்‌ சம்பளத்தின்பேரிலும்‌, மூன்றாண்டுகளுக்கு மேற்பபாததொரு கால அளவிற்கும்‌, மற்றும்‌ அது பொருத்தமெனக்‌ கருதும்‌ அத்தகைய பிற நிபந்தனைகளின்‌ பேரிலும்‌, முதல்‌ பதிவாளர்‌ நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌. வரம்புரை: ஆனால்‌, முதல்‌ பதிவாளராக நியமிக்கப்பட்ட நபர்‌, தமது பதவிக்காலத்தின்போது அறுபது வயதினை அவர்‌ நிறைவெய்துவாரானால்‌, பதவியிலிருந்து ஒய்வுபெறுதல்‌ வேண்டும்‌. 51. ) முதல்‌ துணைவேந்தரானவர்‌, அவர்தம்‌ நியமனத்தேதியிலிருந்து ஆறு திங்களுக்குள்ளாகவோ அல்லது அரசு அறிவிக்கையின்‌ வாயிலாக குறித்துரைக்கும்‌ ஓராண்டிற்கு மேற்படாத அத்தகைய மேலுமான கால அளவுக்குள்ளாகவோ, மேலாண்மைக்‌ குழுமத்தையும்‌ கல்வி மன்றத்தையும்‌, 18 ஆம்‌ பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள இப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பிற அதிகார அமைப்புகளையும்‌ அமைத்துருவாக்குவதற்கான ஏற்பாடுகளைச்‌ செய்வது, அவர்தம்‌ கடமையாகும்‌. @ வேந்தரின்‌ ஒப்புதலளிப்புடன்‌, தேவையானவையாயிருக்கும்‌ நிலை முறை விதிகளையும்‌, ஒழுங்குமுறை விதிகளையும்‌ செய்வதும்‌ அவற்றை நிறைவேற்றி முடிப்பதற்காக அவை குறித்து நடவடிக்கை எடுப்பதற்குத்‌ தகுதிவாய்ந்த அந்தந்த அதிகார அமைப்புகளிடம்‌ அவற்றை அனுப்பி வைப்பதும்‌, முதல்‌ துணைவேந்தரின்‌ கடமையாகும்‌. அத்தகைய நிலைமுறைவிதிகளும்‌ ஒழுங்குமுறை விதிகளும்‌, உருவாக்கப்பட்டதும்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌. Q) இந்தச்‌ சட்டத்திலும்‌ நிலைமுறைவிதிகள்‌, ஒழுங்குமுறை விதிகள்‌ ஆகியவற்றிலும்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌ அதிகார அமைப்பொன்று உரியவாறு அமைத்துருவாக்கப்படுகின்ற காலம்‌ வரையிலும்‌, முதல்‌ துணைவேந்தரானவர்‌ இந்தச்‌ சட்டம்‌, நிலைமுறைவிதிகள்‌, ஒழுங்குமுறைவிதிகள்‌ ஆகியவற்றின்‌ கீழ்‌ அத்தகைய அதிகார அமைப்பிற்குள்ள அதிகாரங்களில்‌ ஏதொன்றையும்‌ செலுத்திவருவதற்கும்‌ அலுவல்களில்‌ ஏதொன்றையும்‌ ஆற்றிவருவதற்குமெனத்‌ தற்காலிகமாக அலுவலர்‌ எவரையும்‌ நியமிக்கலாம்‌. அல்லது குழு எதனையும்‌ அமைத்துருவாக்கலாம்‌. @) (ஆம்‌ உட்பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட அதிகார அமைப்புகள்‌, அரசு அறிவிக்கையின்‌ வாயிலாக குறித்துரைக்கக்கூடியவாறான அத்தகைய தேதியில்‌ அல்லது தேதிகளில்‌, அவர்களது அதிகாரங்களைச்‌ செலுத்தி வரவும்‌ மற்றும்‌ அலுவல்களை ஆற்றி வரவும்‌ தொடங்குதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ - XI பல்வகைப்பட்டவை 52. () இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டு அறிக்கை துணைவேந்தரின்‌ பணிப்புரையின்படி தயாரிக்கப்படுவதோடு, அது பரிசீலனை செய்யப்பட வேண்டியுள்ள ஆண்டுக்‌ கூட்டத்திற்குக்‌ குறைந்தது ஒரு திங்களுக்கு முன்னர்‌, குழுமத்திடம்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. (2) குழுமம்‌, ஆண்டு அறிக்கையைப்‌ பரிசீலனை செய்தபின்னர்‌, அதன்‌ படியொன்றை அரசுக்கு அனுப்பிவைத்தல்‌ வேண்டும்‌. முதல்‌ துணைவேந்தரின்‌. நியமனம்‌. முதல்‌ பதிவாளரின்‌. நியமனம்‌. முதல்‌ துணைவேந்தரின்‌. இடைப்படுகால அதிகாரங்கள்‌. ஆண்டு. அறிக்கை, பல்கலைக்கழக அதிகார அமைப்புகளையும்‌ மற்றும்‌ பிற அமைப்புகளையும்‌ அமைத்‌ துருவாக்குவதில்‌ உண்டாகும்‌. பூசல்கள்‌. உறுப்பினர்‌ பதவிக்கு தகுதி அற்றுப்‌. போதல்‌. பல்கலைக்கழக. அதிகார அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ பதவியிலிருந்தும்‌. நீக்குதல்‌. 28 (8) ஆண்டு அறிக்கையின்‌ படியொன்றைப்‌ பெற்றுக்‌ கொண்டவுடன்‌ அரசு, அத்தகைய படியொன்றை அதன்‌ மீதான தனது குறிப்புரைகளுடன்‌ சேர்த்து இம்மாநிலத்தின்‌ சட்டப்‌ பேரவையின்‌ முன்பு வைக்கப்படுவதற்கு ஆவன செய்தல்‌ வேண்டும்‌. 53. பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு எதனின்‌ அல்லது பல்கலைக்கழகத்தின்‌ பிற அமைப்புகள்‌ எதனின்‌ உறுப்பினரொருவராக எவரும்‌ இருப்பதற்கு உரியவாறு தேர்தெடுக்கப்பட்டுள்ளாரா அல்லது பெயர்குறித்து நியமனம்‌ செய்யப்பட்டுள்ளாரா அல்லது உறுப்பினராக இருப்பதற்கு தகுதியுடையவராக இருக்கின்றாரா என்பது குறித்துப்‌ பூசல்‌ எதுவும்‌ எழுமாயின்‌ அப்பூசலானது வேந்தருக்கு குறித்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; அதன்‌ மீதான வேந்தரின்‌ முடிவே அறுதியானதாக இருக்கும்‌. 54, (1) பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ எதனின்‌ உறுப்பினரொருவராக நபர்‌ எவரும்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ அல்லது தேர்ந்தெடுக்கப்படும்‌ தேதியன்று ம (6) மனச்‌ சீர்கேடுற்றவராகவோ அல்லது செவிட்டு ஊமையராகவோ; அல்லது (b) நொடித்த ஒருவராக நீதித்‌ தீர்ப்பு பெறுவதற்கான விண்ணப்பதாரரொருவராகவோ அல்லது விடுவிக்கப்படாத நொடிப்பு நிலையராகவோ; அல்லது (6) ஒழுக்கக்‌ கேட்டை உள்ளடக்கியதாகவுள்ள குற்றச்செயல்‌ எதற்காகவும்‌ குற்றவியல்‌ நீதிமன்றம்‌ ஒன்றினால்‌ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவராகவோ இருப்பின்‌, அவ்வாறு பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்கு அல்லது தேர்ந்தெடுக்கப்படுவதற்குத்‌ தகுதியுடைய வராதல்‌ கூடாது. @ ௫ஆம்‌ உட்பிரிவின்படி, நபரொருவர்‌ தகுதியற்றவரா என்பது குறித்து பூசல்‌ அல்லது ஐயப்பாடு எழும்‌ நேர்வுகளில்‌, குழுமமானது அத்தகைய பிரச்சினையை வேந்தருக்குக்‌ குறித்தனுப்புதல்‌ வேண்டும்‌; அதன்‌ மீதான வேந்தரின்‌ முடிவே அறுதியானதாக இருக்கும்‌. 55. () இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ எவரேனும்‌, குழுமத்தின்‌ கருத்தின்படி, ஒழுக்கக்கேட்டை உள்ளடக்கியதாகவுள்ள குற்றச்செயல்‌ ஒன்றிற்காகக்‌ குற்றவியல்‌ நீதிமன்றமொன்றினால்‌. குற்றவாளி எனத்‌ தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பாராயின்‌ அல்லது கடுந்தவறான நடத்தைக்‌ குற்றம்‌ இழைத்த குற்றவாளியாக இருப்பாராயின்‌, கூட்டத்திற்கு வருகைதந்து வாக்களிக்கும்‌ குழுமத்தின்‌ மொத்த உறுப்பினர்களின்‌ மூன்றில்‌ இரண்டு பங்குக்குக்‌ குறைந்ததல்லாத பெரும்பான்மையினராலும்‌ நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின்‌ மூலமாக, இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ பதவியிலிருந்தும்‌ இதன்பொருட்டு பிறப்பிக்கப்பட்ட எழுத்துருவிலான. ஆணை ஒன்றின்‌ மூலம்‌, அத்தகைய நபரை குழுமம்‌ நீக்கம்‌ செய்யலாம்‌; மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தால்‌ அந்த நபருக்கு அளிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட பட்டம்‌ அல்லது பட்டயம்‌ அல்லது பிற கல்விச்சிறப்பு எதனையும்‌, மேற்சொன்ன அதே காரணத்திற்காகக்‌ குழுமமானது விலக்கிக்‌ கொள்ளலாம்‌. (8) நபர்‌ எவரேனும்‌ மனச்‌ சீர்கேடுற்றவராகவோ அல்லது ஒரு செவிட்டு ஊமையராகவோ ஆகியிருக்கிறார்‌, அல்லது நொடிப்பு நிலையர்‌ ஒருவராக நீதித்தீர்ப்பு பெறுவதற்கு விண்ணப்பித்துக்‌ கொண்டிருக்கிறார்‌, அல்லது நொடிப்பு நிலையர்‌ ஒருவராக நீதித்தீர்ப்பு அளிக்கப்பெற்றிருக்கிறார்‌ என்கின்ற காரணத்தினாலும்‌ கூட, இதன்பொருட்டுப்‌ பிறப்பிக்கப்பட்ட எழுத்துருவிலான ஆணையொன்றின்‌ மூலம்‌, குழுமமானது, இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ பதவியிலிருந்தும்‌ அவரை நீக்கஞ்செய்யலாம்‌. (6) எடுக்கக்‌ கருதியுள்ள நடவடிக்கைக்கு எதிராகக்‌ காரணம்‌ காட்டுவதற்கு, அவருக்கு நியாயமான வாய்ப்பொன்று கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, இந்தப்‌ பிரிவின்படி நபரொருவருக்கு எதிராக நடவடிக்கை எதுவும்‌ எடுக்கப்படுதலாகாது. @ (0ஆம்‌ உட்பிரிவு அல்லது நேர்விற்கேற்ப (2-ஆம்‌ உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றின்‌ படியொன்று, அது அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட பின்னர்‌ கூடிய விரைவில்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌, தொடர்புடைய நபருக்கு அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 56. பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ அனைத்தும்‌ குழுக்களை அமைத்துருவாக்கவும்‌ மாற்றி அமைத்துருவாக்கவும்‌ அதிகாரம்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவர்கள்‌ பொருத்தமெனக்‌ கருதும்‌ அத்தகைய தமது அதிகாரங்களை குழுக்களுக்கு ஒப்படைவு செய்வதற்கு அதிகாரம்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. அத்தகைய குழுக்கள்‌, பிறவாறு மையச்‌ சட்டம்‌ ய / 1860. 29 வகை செய்யப்பட்டிருந்தாலன்றி தொடர்பான அதிகார அமைப்பின்‌ உறுப்பினர்களையும்‌, அந்த அதிகார அமைப்பு ஒவ்வொரு நேர்விலும்‌ தான்‌ தக்கதெனக்‌ கருதும்‌ அத்தகைய பிற நபர்கள்‌ எவரேனுமிருப்பின்‌ அவர்களையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. 57. இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு எதனின்‌: பதவி வழி உறுப்பினர்களல்லாத பிற உறுப்பினர்களுக்கிடையே எழும்‌ தற்செயல்‌ காலியிடங்கள்‌ அனைத்தும்‌ எந்த உறுப்பினருடைய பதவியிடம்‌ காலியாக ஆகியுள்ளதோ அந்த உறுப்பினரைப்‌ பெயர்குறித்து நியமனம்‌ செய்த அல்லது தேர்ந்தெடுத்த நபரைக்‌ கொண்டோ அமைப்பினைக்‌ கொண்டோ எவ்வளவு விரைவில்‌ கூடுமோ அவ்வளவு விரைவில்‌ நிரப்பப்படுதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ தற்செயல்‌ காலியிடமொன்றுக்குப்‌ பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட எவருடைய இடத்தை அவர்‌ நிரப்புகிறாரோ அவர்‌ ஒர்‌ உறுப்பினராக இருந்திருக்கக்கூடிய காலஅளவில்‌ எஞ்சிய பகுதிக்கு அத்தகைய அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பின்‌ உறுப்பினரொருவராக இருந்து வருதல்‌ வேண்டும்‌. வரம்புரை: ஆனால்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ பதவிக்‌ கால அளவு முடிவடையும்‌ தேதிக்கு முந்திய ஆறு திங்களுக்குள்ளாக அத்தகைய காலியிடம்‌ ஏற்படுமாயின்‌, அத்தகைய காலியிடம்‌ எதுவும்‌ நிரப்பப்படுதலாகாது. 58. இப்பல்கலைக்கழத்தின்‌ அதிகார அமைப்பு ஏதொன்றின்‌ அல்லது பிற அமைப்பு ஏதொன்றின்‌ செயல்‌ அல்லது நடவடிக்கை எதுவும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு ஏதொன்றிலும்‌ அல்லது பிற அமைப்பு ஏதொன்றிலும்‌ காலியிடம்‌ ஏதேனும்‌ உள்ளது, அல்லது இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பு எதனின்‌ உறுப்பினரொருவரை நியமனஞ்‌ செய்ததில்‌ குறைபாடு அல்லது முறைகேடு ஏதேனும்‌ நேர்ந்துள்ளது, அல்லது நேர்வின்‌. தகுதிகளைப்‌ பாதிக்காத வகையில்‌, அத்தகைய செயல்‌ அல்லது நடவடிக்கை எதிலும்‌ குறைபாடு அல்லது முறைகேடு ஏதேனும்‌ நேர்ந்துள்ளது என்கிற காரணத்தைக்கொண்டு மட்டுமோ, அல்லது ஒவ்வொரு மூன்று திங்களுக்கும்‌ ஒருமுறை குழுமம்‌ கூடவில்லை என்கிற காரணத்தைக்‌ கொண்டு மட்டுமோ, செல்லாததாக ஆக்கப்படுதலாகாது. 59. பல்கலைக்கழகத்தினால்‌ அல்லது அதற்கு எதிராகத்‌ தொடுக்கப்படும்‌ உரிமை வழக்குகள்‌ மற்றும்‌ பிற சட்ட நடவடிக்கைகள்‌ அனைத்திலும்‌, வாதுரைகள்‌, பதிவாளரால்‌. கையொப்பமிடப்பட்டு சரிபார்க்கப்படுதல்‌ வேண்டும்‌. மேலும்‌ அத்தகைய உரிமை வழக்குகளிலும்‌ நடவடிக்கைகளிலும்‌, நீதி மன்றக்‌ கட்டளைகள்‌ அனைத்தும்‌ பிறப்பிக்கப்பட்டு பதிவாளருக்குச்‌ சார்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 60. துணைவேந்தர்‌, பதிவாளர்‌, நிதி அலுவலர்‌, முதன்மையர்கள்‌, இயக்குநர்கள்‌, மற்றும்‌ இப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பிற பணியாளர்கள்‌ ஆகியோர்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளில்‌ ஏதொன்றையுமொட்டி செயற்படுகின்றபோதோ அல்லது செயற்படுவதாகப்‌ புலப்படுகின்றபோதோ, இந்திய தண்டனைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ 21-ஆம்‌ பிரிவின்‌. பொருளின்படி பொது ஊழியர்களாக இருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 61. அரசு, அறிவிக்கையின்‌ மூலம்‌, இணைப்புப்‌ பட்டியலை மாற்றியமைக்கலாம்‌. திருத்தியமைக்கலாம்‌, அல்லது அதில்‌ கல்லூரி அல்லது கல்வி நிலையம்‌ எதனையும்‌ நீக்கிவிடலாம்‌; மற்றும்‌ அத்தகைய அறிவிக்கை வெளியிடப்பட்டதன்பேரில்‌, அந்த இணைப்புப்பட்டியலானது அதன்படியே திருத்தப்பட்டிருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 62. ( குறிக்கப்பட்ட தேதிக்கு அல்லது நேர்விற்கேற்ப அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்குப்‌ பின்பு, இப்‌ பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதையேனும்‌ முதன்‌ முதலில்‌ அமைத்துருவாக்குதல்‌ குறித்தோ அல்லது மாற்றி அமைத்துருவாக்குதல்‌ குறித்தோ, அல்லது மற்றப்படி இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளைச்‌ செயற்படுத்துதல்‌ குறித்தோ இடர்ப்பாடு ஏதேனும்‌ எழுமாயின்‌, அரசு, அறிவிக்கையின்‌ மூலமாக, அந்த இடர்பாட்டை நீக்குவதற்காகத்‌ தேவையானதென்றோ உகந்ததென்றோ தனக்குத்‌ தோன்றக்கூடிய அத்தகைய வகைமுறையை இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு ஒவ்வாததாக இல்லாத வகையில்‌ செய்யலாம்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய அறிவிக்கை எதுவும்‌, குறிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டுகள்‌ முடிவடைந்ததற்குப்‌ பின்பு பிறப்பிக்கப்படுதலாகாது. (9) ௫-ஆம்‌ உட்பிரிவின்படியோ, இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறைகள்‌ எவற்றின்படியுமோ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்‌, அது பிறப்பிக்கப்பட்ட பின்பு எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக, சட்டமன்றப்பேரவையின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; தற்செயல்‌ காலியிடத்தை நிரப்புதல்‌. செயல்களையும்‌ நடவடிக்கை களையும்‌ செல்லத்தக்கன. வாக்குதல்‌. உரிமை: வழக்குகளும்‌, சட்ட நடவடிக்கை களும்‌. துணை வேந்தர்‌ மற்றும்‌ பிற அலுவலர்கள்‌. முதலானோர்‌ பொது ஊழியர்‌ களாக கருதப்‌ படுவர்‌ எனல்‌. இணைப்புப்‌ பட்டியலைத்‌ திருத்துவதற்கான அதிகாரம்‌. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. 42/1989 எனும்‌ எண்ணிட்ட தமிழ்நாடு சட்டம்‌. பொருந்தாது. எனல்‌, 30 மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்படும்‌ கூட்டத்தொடர்‌ அல்லது அடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்பு, அத்தகைய அறிவிக்கை எதையேனும்‌ சட்டமன்றப்பேரவையானது மாற்றியமைக்குமாயின்‌ அல்லது அந்த அறிவிக்கை பிறப்பிக்கப்‌ படுதலாகாது என்று சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமாயின்‌, அந்த அறிவிக்கையானது அதன்பின்பு அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே செயல்வடிவம்‌ பெறுதல்‌ வேண்டும்‌ அல்லது நேர்விற்கேற்ப செயல்வடிவம்‌ பெறாமல்‌ போதல்‌ வேண்டும்‌; அவ்வாறு மாற்றியமைப்பது அல்லது செயல்வடிவம்‌ பெறாமல்‌ போகச்‌ செய்வதெதுவும்‌, அந்த அறிவிக்கையின்படி முன்னதாகச்‌ செய்யப்பட்ட ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ பாதகமில்லாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 63, () குறிக்கப்பட்ட தேதியன்றும்‌, அதுமுதற்‌ கொண்டும்‌, (இதன்‌ பின்பு இந்தப்பிரிவில்‌ மேற்சொன்ன சட்டம்‌ என குறிப்பிடப்படுவதுதான) 1989-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ விலங்கின அறிவியல்‌ பல்கலைக்கழகச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌, இந்தச்‌ சட்டம்‌ பொருந்துவதாயுள்ளவையும்‌ இணைப்புப்‌ பட்டியலில்‌ குறித்துரைக்கப்‌ பட்டுள்ளவையுமான கல்லூரிகளையும்‌ கல்வி நிலையங்களையும்‌ பொறுத்த அளவில்‌, பொருந்துவது அற்றுப்‌ போதல்‌ வேண்டும்‌ (9) அவ்வாறு அற்றுப்‌ போவதானது.- (a) மேற்சொன்ன சட்டம்‌ முன்னர்‌ நடைமுறையில்‌ இருந்ததையோ: அல்லது (b) மேற்சொன்ன சட்டத்திற்கெதிராகப்‌ புரியப்பட்ட குற்றச்‌ செயல்‌ எதனையும்‌ பொறுத்த அளவில்‌ ஏற்க நேரிட்ட தண்டனைத்தொகை, இழப்புத்‌ தண்டனை அல்லது தண்டனை எதனையுமோ; அல்லது (6) அத்தகைய தண்டம்‌ தண்ட இழப்பு அல்லது தண்டனை தொடர்பான புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி எதையும்‌ பாதித்தலாகாது; மற்றும்‌ இந்தச்‌ சட்டம்‌ நிறைவேற்றப்‌ படாதது போன்றே அத்தகை புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி எதுவும்‌ தொடுக்கப்படலாம்‌. தொடர்ந்து நடத்தப்படலாம்‌ அல்லது நிறைவேற்றப்படலாம்‌; மற்றும்‌ அத்தகைய தண்டனைத்தொகை, இழப்புத்தண்டனை அல்லது தண்டனை எதுவும்‌ விதிக்கப்படலாம்‌. (6௫-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌ இச்சட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்பட்ட மற்றும்‌ குறிக்கப்பட்ட தேதியன்று நடைமுறையில்‌ இருக்கிற நிலைமுறை விதிகளும்‌ ஒழுங்குமுறை விதிகளும்‌ இச்சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு எந்த அளவுக்கு ஒவ்வாததாக இல்லாது இருக்கின்றனவோ அந்த அளவுக்கு, இச்சட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்பட வேண்டிய நிலைமுறை விதிகளால்‌ அல்லது ஒழுங்குமுறை விதிகளால்‌ நீக்கஞ்செய்யப்படும்‌ வரையிலும்‌ தொடர்ந்து நடைமுறையில்‌ இருந்து வருதல்‌ வேண்டும்‌. இணைப்புப்பட்டியல்‌ 16), 130௫9, 61 மற்றும்‌ 63 (1) ஆகிய பிரிவுகளைப்‌ பார்க்கவும்‌ பகுதி - 1 1. மீன்வளக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தூத்துக்குடி 2. கடல்‌ சார்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ விரிவாக்க மையம்‌, தருவைகுளம்‌, தூத்துக்குடி மாவட்டம்‌. 3. மீன்வளச்‌ செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக தற்போது இருந்து வரும்‌ மாதவரம்‌ ஏரியுடன்‌ சேர்ந்தமைந்த சென்னை, மாதவரம்‌ மில்க்‌ காலனியிலுள்ள மீன்வள ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்க மையம்‌ 4. கன்னியாகுமரி மாவட்டத்தில்‌ பறக்கை என்னுமிடத்தில்‌ உள்ள மீன்வளப்‌ பயிற்சி மற்றும்‌. ஆராய்ச்சி மையம்‌, நிலத்துடன்‌ சேர்ந்து. 5. தஞ்சாவூரில்‌ உள்ள மீன்வளப்‌ பயிற்சி மற்றும்‌ ஆராய்ச்சிக்கூடம்‌, நிலத்துடன்‌ சேர்ந்து. 6. ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்கக்‌ கல்வி இயக்ககம்‌ (மீன்வளம்‌) தமிழ்நாடு சட்டம்‌ 42/1989. 31 பகுதி - 11 மீன்வளத்‌ துறையின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ கல்வி நிறுவனங்கள்‌ 1. பணியாளர்‌ பயிற்சி நிறுவனம்‌, சென்னை 2. தொழில்நுட்பம்‌ மற்றும்‌ பயிற்சிக்கான மீன்வளக்‌ கல்வி நிறுவனம்‌, சென்னை (FITT) (ஆளுநரின்‌ ஆணைப்படி) கோ. ஜெயசந்திரன்‌, அரசுச்‌ செயலாளர்‌, சட்டத்‌ துறை, (தமிழாக்கம்‌) ச. சந்திரசேகரன்‌, இயக்குநர்‌, தமிழ்ப்‌ பிரிவு, சட்டத்‌ துறை.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts