Tamil Nadu · 2018 · Act 22

Tamil Nadu Establishment of Private Law Colleges (Regulation) Act, 2018

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

2018ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ சட்டக்‌ கல்லூரிகள்‌ நிறுவுதல்‌(ஒழுங்குப்படுத்துதல்‌) சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 22/2018) (2023, அக்டோபர்‌ 31 அன்று இருந்தவாறு) The Tamil Nadu Establishment of Private Law Colleges (Regulation) Act, 2018 (Tamil Nadu Act No. 22 of 2018) (as on 31 October, 2023) தமிழாக்கம்‌ : தமிழ்நாடு மாநிலச்‌ சட்ட ஆட்சிமொழி ஆணையம்‌ சென்னை தமிழ்நாடு அரசுக்காகத்‌ தமிழ்நாடு அரசு எழுதுபொருள்‌ அச்சுத்துறை ஆணையரால்‌ அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. 2023 2018ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ சட்டக்‌ கல்லூரிகள்‌ நிறுவுதல்‌ (ஒழுங்குப்படுத்துதல்‌) சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 22/2018) பிரிவு பொருளடக்கம்‌ 1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்வரையறைகள்‌. 3. சட்டக்‌ கல்லூரி நிறுவுதல்‌ 4. அனுமதிக்கான விண்ணப்பம்‌. 5. அனுமதி வழங்குதல்‌. 6. பிற சட்டங்களின்‌ பொருந்துகைக்குத்‌ தடை செய்தல்‌ கூடாது. 7. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 8. நீக்கம்‌. 1 2018ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ சட்டக்‌ கல்லூரிகள்‌ நிறுவுதல்‌ (ஒழுங்குப்படுத்துதல்‌) சட்டம்‌ தமிழ்நாடு சட்ட எண்‌ 22/2018 [தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ பின்வரும்‌ சட்டமானது 2018ஆம்‌ ஆண்டு ஜுலைத்‌ திங்கள்‌ 12ஆம்‌ நாளன்று ஆளுநரின்‌ ஏற்பிசைவைப்‌ பெற்று பொதுத்தகவலுக்காகத்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்பட்டது] தமிழ்நாடு மாநிலத்தில்‌ தனியார்‌ சட்டக்‌ கல்லூரிகள்‌ நிறுவுவதை ஒழுங்குப்படுத்துவதற்கான ஒரு சட்டம்‌. இந்திய அரசமைப்பின்‌ 41ஆம்‌ அமைப்பு விதியின்‌ மெய்க்கருத்திற்கு இணங்கியவாறு குறைந்த செலவில்‌ சட்டக்‌ கல்வியை வழங்குவதற்கு ஏதுவாக, அரசானது மாநிலத்தில்‌ படிப்படியாகப்‌ போதிய எண்ணிக்கையிலான அரசு சட்டக்‌ கல்லூரிகளை நிறுவுவதற்குக்‌ கொள்கை முடிவினை எடுத்திருப்பதாலும்‌; தனிநபர்கள்‌ பொருளாதாரத்திலும்‌, சமூகத்திலும்‌ பின்தங்கிய பிரிவினர்களுக்குக்‌ குறைந்த செலவில்‌ சட்டக்‌ கல்வியை அளிக்கமுடியவில்லை என்பதையும்‌ அவர்களால்‌ சட்டக்‌ கல்லூரநிகளைத்‌ தொடர்ந்து நடத்த முடியவில்லை என்பதையும்‌ கடந்தகால அனுபவங்கள்‌ வெளிப்படுத்துகின்றன என்பதாலும்‌; மற்றும்‌ 2014ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ சட்டக்‌ கல்லூரிகள்‌ நிறுவுதல்‌ (தடை செய்தல்‌) சட்டம்‌ (குமிழ்நாடு சட்டம்‌ 132014) தனியார்‌ நபர்கள்‌ எவரும்‌ சட்டக்‌ கல்லூரிகள்‌ நிறுவுவதையோ அல்லது சட்டப்‌ பட்டங்களுக்கான, பட்டயங்களுக்கான அல்லது பல்கலைக்கழகத்தின்‌ பிற கல்விச்‌ சீர்மைகளுக்கான தேர்வுகளுக்கு அனுமதிப்பதற்காகச்‌ சட்டத்தில்‌ பாடப்பிரிவு அல்லது பயிற்சி எதையும்‌ அளிக்கின்ற ஒரு நிறுவனத்தை 2 நிறுவுவதிலிருந்து தடைசெய்வதற்கு இயற்றப்பட்டது என்பதாலும்‌; சென்னை உயர்நீதிமன்றம்‌, தனி நபர்கள்‌ சட்டக்‌ கல்லூரிகளை நிறுவுவதை அறவே தடை செய்ய முடியாது என உத்தரவிட்டுள்ளதாலும்‌; மற்றும்‌ இந்திய வழக்குரைஞர்‌ மன்றமானது தனியார்‌ சட்டக்‌ கல்லூரிகள்‌ தொடங்குவதற்கு வழங்கப்படும்‌. தடையின்மைச்‌ சான்றிதழின்‌ எண்ணிக்கையை மூன்று ஆண்டுகளுக்குத்‌ தடைசெய்திடுமாறு அனைத்து மாநில அரசுகளையும்‌ வேண்டித்‌ தீர்மானம்‌ நிறைவேற்றி இருப்பதாலும்‌; தற்போது, அரசானது, தமிழ்நாட்டில்‌ தணி நபர்கள்‌: சட்டக்‌ கல்லூரிகளைத்‌ தொடங்குவதற்கு அனுமதி வழங்குவததற்கு எனச்‌ சில நெறிமுறைகளை விதிப்பதன்‌: வாயிலாகத்‌, தமிழ்நாட்டில்‌ தனி நபர்கள்‌ சட்டக்‌ கல்லூரிகளை நிறுவுவதை ஒழுங்குமுறைப்படுத்த முடிவுசெய்துள்ளது. இந்தியக்‌ குடியரசின்‌: அறுபத்தொன்பதாவது ஆண்டில்‌ தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையால்‌ இயற்றப்பட்டச்‌ சட்டம்‌ பின்வருமாறு:- 1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 2018ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ சட்டக்‌ கல்லூரிகள்‌ நிறுவுதல்‌ (ஒழுங்குப்படுத்துதல்‌) சட்டம்‌ என வழங்கப்படும்‌. (2) இந்தச்‌ சட்டமானது, மாநில அரசு அறிவிக்கையின்‌ வாயிலாகக்‌ குறிக்கக்கூடிய தேதியில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 3 2. பொருள்வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாய்‌ வேறுபொருள்‌ குறித்தாலன்றி,- @ “தகுதிவாய்ந்த அதிகாரஅமைப்பு” என்பது, சட்டக்‌ கல்வி இயக்குநர்‌ எனப்‌ பொருள்படும்‌; 0) "அரசு" என்பது, மாநில அரசு எனப்‌ பொருள்படும்‌; (௦9) "சட்டக்‌ கல்லூரி" என்பது, சட்டப்‌ பட்டங்களுக்காக, பட்டயங்களுக்காக அல்லது பல்கலைக்கழகத்தின்‌ பிற கல்விச்‌ சீர்மைகளுக்காக, தேர்வில்‌ அனுமதிப்பதற்காக சட்டத்தில்‌ பாடப்பிரிவு அல்லது பயிற்சி எதையும்‌ அளிக்கின்ற ஒரு கல்லூரி அல்லது நிறுவனம்‌ எனப்‌ பொருள்படும்‌; (0) "வகுத்துரைக்கப்பட்டது" என்பது, இந்தச்‌ சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்டது எனப்‌ பொருள்படும்‌; (6) "தனி நபர்‌" என்பது, 0) ஒரு நிறுமம்‌ கூட்டிணைவாக இருப்பினும்‌. அல்லது இல்லாதிருப்பினும்‌; (i) பதிவு செய்யப்பட்ட சங்கம்‌; 0 பதிவு செய்யப்பட்ட பொறுப்புக்‌ கட்டளை, எனப்‌ பொருள்படும்‌; (f) "பல்கலைக்கழகம்‌! என்பது, 1996ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்‌ கழகச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 43,1997) பிரிவு 3 4 இன்‌ படி நிறுவப்பட்டுள்ள டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகம்‌ எனப்‌ பொருள்படும்‌. 3. சட்டக்‌ கல்லூரி நிறுவுதல்‌.- தனி நபர்‌ எவரும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌, அரசின்‌ அனுமதியின்றி மற்றும்‌ அனுமதியில்‌ குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகள்‌ மற்றும்‌ வரையறைகளுக்கு இணங்கினால்‌ அன்றி சட்டக்‌ கல்லூரி ஒன்றினை நிறுவுதல்‌ கூடாது. 4. அனுமதிக்கான விண்ணப்பம்‌.- (1) சட்டக்‌ கல்லூரியை நிறுவிடக்‌ கருதும்‌ தனி நபர்‌ ஒவ்வொருவரும்‌. தகுதிவாய்ந்த அதிகார அமைப்பிடம்‌ விண்ணப்பித்தல்‌ வேண்டும்‌. (2) உட்பிரிவு (1)இன்படி விண்ணப்பிப்பதற்கு முன்பு, தனி நபர்‌, சட்டக்‌ கல்லூரி நிறுவுவதற்கு என ரூபாய்‌ முப்பது இலட்சத்துக்கு அறக்கட்டளை நிதியை உருவாக்குதல்‌ வேண்டும்‌. அத்தொகையினைத்‌ தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில்‌ அல்லது இந்திய அரசின்‌ அல்லது தமிழ்நாடு அரசின்‌ நிறுவனத்தில்‌ முதலீடு செய்தல்‌ வேண்டும்‌. (3) தனிநபர்‌, தகுதிவாய்ந்த வருவாய்‌ அதிகார அமைப்பிடமிருந்து, ஐந்து ஆண்டு காலத்திற்கு ரூபாய்‌ இருபது இலட்சத்துக்கு வங்கி காப்புறுதியோ அல்லது மேற்சொன்ன தொகைக்குக்‌ கடன்பெறுதகுதிச்‌ சான்றிதழோ பெற்று முன்னிலைப்படுத்துதல்‌ வேண்டும்‌. (4) அத்தகைய விண்ணப்பம்‌ ஒவ்வொன்றும்‌, (8) வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில்‌: இருத்தல்‌ வேண்டும்‌; 5 (b) அதனுடன்‌, அரசுக்‌ கருவூலத்தில்‌ ரூபாய்‌ இருபத்தைந்தாயிரம்‌ கட்டணம்‌ செலுத்தியதற்கான செலுத்துச்‌ சீட்டினை இணைத்திருத்தல்‌ வேண்டும்‌; (c) பின்வரும்‌ விவரங்களை உள்ளடக்கியிருத்தல்‌ வேண்டும்‌, அதாவது:- (i) சட்டக்‌ கல்லூரியின்‌ பெயர்‌, (i) சட்டக்‌ கல்லூரியால்‌ வழங்கப்படவுள்ள பட்டங்கள்‌. மற்றும்‌ பாடப்பிரிவுகள்‌ அத்தகைய பட்டத்தை வழங்குவதற்கு அல்லது அளிப்பதற்கு ஆயத்தப்படுத்துதல்‌, கற்பித்தல்‌ அல்லது வழிகாட்டுதல்‌; 0) மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அல்லது ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வசதிகள்‌; 0) கற்பித்தலுக்கான நூலகம்‌, மாதிரி நீதிமன்றம்‌ மற்றும்‌ பிற வசதிகள்‌; (V) ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும்‌ அனுமதிக்கப்படவுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கை; (vi) நிறுவக்‌ கருதப்படும்‌. சட்டக்‌ கல்லூரியில்‌ அமையவுள்ள கட்டடங்களின்‌ நிலை மற்றும்‌ விவரங்கள்‌; (0) வகுத்துரைக்கப்படும்‌. பிற விவரங்களை உள்ளடக்கியிருத்தல்‌ வேண்டும்‌; 6 5. அனுமதி வழங்குதல்‌.- பிரிவு 1 உட்பிரிவு (4)இன்‌ படி விண்ணப்பத்தைப்‌ பெற்றுக்‌ கொண்டதன்‌ பேரில்‌, தகுதிவாய்ந்த அதிகாரஅமைப்பானது, விவரங்களைச்‌ சரிபார்த்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவசியமெனக்‌ கருதும்‌ அத்தகைய விசாரணையை மேற்கொண்ட பின்பு, அனுமதி வழங்குவதற்கான அவரது பறிந்துரைகளுடன்‌ அவ்விண்ணப்பத்தை அரசுக்கு அனுப்பி வைத்தல்‌ வேண்டும்‌. அரசானது, விண்ணப்பத்தில்‌ காணப்படுகின்ற விவரங்கள்‌ மற்றும்‌ பல்கலைக்கழக மானியக்‌ குழு, இந்திய வழக்குரைஞர்‌ மன்றம்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்தால்‌ வெளியிடப்பட்டுள்ள விதிகள்‌, வழிகாட்டு முறைகள்‌, அறிவுறுத்தல்கள்‌: ஆகியவற்றின்‌. அடிப்படையில்‌ பரிசீலனை செய்து, சட்டக்‌ கல்லூரி நிறுவுவதற்கான அனுமதியினை வழங்கிடலாம்‌ அல்லது வழங்கிட மறுக்கலாம்‌: வரம்புரை: விண்ணப்பதாரருக்கு அவருடைய வாதங்களை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பினை வழங்கினாலன்றி இப்பிரிவின்கழ்‌ அனுமதி மறுத்தல்‌ கூடாது. (2) ஏற்கனவே அரசால்‌ சட்டக்‌ கல்லூரி நிறுவப்பட்டுள்ள மாவட்டங்களில்‌ உட்பிரிவு (1)இன்‌ படி சட்டக்‌ கல்லூரி நிறுவுவதற்கு நபர்‌ எவருக்கும்‌ அனுமதி வழங்குதல்‌ கூடாது. (3) சட்டக்‌ கல்லூரி ஒன்றினை நிறுவுவதற்கு என உட்பிரிவு (1)இன்‌ படி வழங்கப்பட்ட அனுமதியைப்‌ பெற்றுக்கொண்டதன்‌ பேரில்‌, தனி நபர்‌ தொடர்புடைய சட்டங்களின்படி தேவையான அனுமதி அல்லது இணைப்பிற்காக, பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ பிற உரிய அதிகாரஅமைப்புகளுக்கு விண்ணப்பித்தல்‌ வேண்டும்‌. 7 (4) அப்போதைக்குச்‌ செல்லாற்றலில்‌ உள்ள பிற சட்டம்‌ எதிலுமோ அல்லது தீர்ப்பு, தீர்ப்பாணை அல்லது நீதிமன்ற ஆணை எதிலும்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, அரசிடம்‌ தடையின்மைச்‌ சான்று கோரியோ அல்லது பல்கலைக்கழகத்திடம்‌ இணைவு கோரியோ விண்ணப்பித்துள்ள ஒவ்வொரு தனி நபரும்‌ மற்றும்‌ நிகழ்விற்கேற்ப இச்சட்டம்‌ நடைமுறைக்கு வரும்‌ நாளன்று அரசு அல்லது பல்கலைக்கழகத்திடம்‌ விண்ணப்பம்‌ நிலுவையில்‌ இருக்கும்‌ நிலையிலும்‌ இச்சட்டத்தின்‌ வகையங்களின்படி அனுமதிகோரி விண்ணப்பம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 6. பிற சட்டங்களின்‌ பொருந்துகைக்குத்‌ தடை செய்தல்‌ கூடாது.- இந்தச்‌ சட்டங்களின்‌ வகையங்களானது, அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள பிற சட்டத்தின்‌ வகையங்களுக்குக்‌ கூடுதலாக இருக்குமேயன்றி, அவற்றை மதிப்புக்குறைவு செய்தல்‌ கூடாது. 7. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌-- (1) அரசானது, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்கள்‌. அனைத்தையும்‌ அல்லது அவற்றில்‌ எதையும்‌ நிறைவேற்றுவதற்கு அறிவிக்கையின்‌. வாயிலாக விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌. அனைத்தும்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவை குறிப்பிட்ட தேதியில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ என்று குறிப்பிட்டிருந்தாலன்றி, எந்தத்‌ தேதியில்‌ அவை வெளியிடப்பட்டதோ அந்தத்‌ தேதியில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 8 (3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ ஒவ்வொன்றையும்‌, அது செய்யப்பட்ட பின்பு கூடியவிரைவில்‌ சட்டமன்றத்தில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்பு அல்லது அடுத்தக்‌ கூட்டத்தொடரில்‌, சட்ட மன்றமானது அத்தகைய விதி எதிலும்‌ மாற்றம்‌ எதையும்‌ செய்யுமானால்‌ அல்லது சட்டமன்றமானது விதியை செய்யக்‌ கூடாது என முடிவு செய்யுமானால்‌, அதன்‌ பின்பு, அவ்விதியானது அத்தகைய மாற்றம்‌ செய்யப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே செல்திறம்‌. உடையது ஆகும்‌ அல்லது நிகழ்விற்கேற்ப செல்திறம்‌ இல்லாது போகும்‌. எனினும்‌, அத்தகைய மாற்றம்‌ அல்லது அழித்தறவு எதுவும்‌ அந்த விதியின்படி முன்னதாகச்‌ செய்யப்பட்ட எதனுடைய செல்லுந்தன்மைக்கும்‌. ஊறின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 8. நீக்கம்‌.- 2014ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ சட்டக்‌ கல்லூரிகள்‌ நிறுவுதல்‌ தடைசெய்தல்‌) சட்டமானது (தமிழ்நாடு சட்டம்‌ 1372014) ஈங்கிதனால்‌ நீக்கம்‌ செய்யப்படுகிறது.

Rules, notifications and orders under this Act

Listed from India Code. Each opens there.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts