Tamil Nadu · 2017 · Act 23
Tamil Nadu Delimitation Commission Act 2017
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
2017ஆம் ஆண்டு தமிழ்நாடு எல்லை வரையறை
ஆணையச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 23/2017)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Delimitation Commission Act, 2017
(Tamil Nadu Act No.23 of 2017)
(as on 31 October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
2017ஆம் ஆண்டு தமிழ்நாடு எல்லை வரையறை
ஆணையச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 23/2017)
பிரிவு பொருளடக்கம்
1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
2. பொருள்வரையறைகள்.
3. எல்லை வரையறை ஆணையத்தை
அமைத்தல்.
4. ஆணையத்தின் செயற்பணிகள்.
5. ஆணையத்தின் அதிகாரங்கள்.
6
7. ஆணையத்தின் பணியாளர்கள் தொகுதி.
8 பணிப்புரைகள் வழங்குவதற்கான அதிகாரம்.
9 ஆணையத்தின் நடவடிக்கைகள் தளர்வு
நிலைகளினால் செல்லத்தகாதது ஆகாது.
10. ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும்
பணியாளர்கள் அரசுப் பணியாளர்களாவர்.
11. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
12. ஒழுங்கு விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
13. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
1
2017ஆம் ஆண்டு தமிழ்நாடு எல்லை வரையறை
ஆணையச் சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 23/2017
[தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் பின்வரும் சட்டமானது
2017ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 11ஆம் நாளன்று ஆளுநரின்
ஏற்பிசைவைப் பெற்று பொதுத்தகவலுக்காகத் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்டது.
ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட
ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும்
மாநகராட்சிகள் ஆகியவற்றின் நிலவரை சிறு
தொகுதிகளை வரையறை செய்வதற்காக எல்லை
வரையறை ஆணையத்தை அமைப்பதற்காகவும்
மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்குச்
சார்வுறுவான விவரங்களுக்காகவும்
வகைசெய்வதற்கான ஒரு சட்டம்.
இந்தியக் குடியரசின் அறுபத்து எட்டாம் ஆண்டில்
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையினால் இயற்றப்பட்ட
சட்டம் பின்வருமாறு:-
1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.- (1) இந்தச்
சட்டம் 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு எல்லை வரையறை
ஆணையச் சட்டம் என வழங்கப்படும் .
(2) இது, அரசு, அறிவிக்கை வாயிலாகக்
குறித்திடம் தேதியன்று நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்
தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
(ஐ) "ஆணையம்" என்பது, பிரிவு 3இன்படி
அமைக்கப்பட்ட எல்லை வரையறை ஆணையம் எனப்
பொருள்படும்;
2
0) "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்;
(௦9) "உள்ளாட்சி" அமைப்பு என்பது,-
(i) 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு
ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு
சட்டம் 21/1994) படி அமைக்கப்பட்ட
ஓர் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம்
அல்லது மாவட்ட ஊராட்சி எனவும்;
(00 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட
நகராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு
சட்டம் ௩71920) படி அமைக்கப்பட்ட ஒரு
பேரூராட்சி அல்லது நகராட்சி எனவும்;
மற்றும்
(i) அப்போதைக்குச் நடைமுறையிலுள்ள
சட்டம் எதன்படியும் நிறுவப்பட்ட ஒரு
மாநகராட்சி எனவும்,
பொருள்படும்.
(0) "உறுப்பினர்" என்பது, ஆணையத்தின் ஒர்
உறுப்பினர் எனப் பொருள்படும் மற்றும் தலைவரை
உள்ளடக்கும்; மற்றும்
(6) "தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்"
என்பது, அரசமைப்பின் 243k அரசமைப்பு விதியின்படி
தமிழ்நாடு ஆளுநரால் நியமிக்கப்பட்ட மாநிலத் தேர்தல்
ஆணையர் எனப் பொருள்படும்.
3. எல்லை வரையறை ஆணையத்தை
அமைத்தல்.- (1) இந்தச் சட்டத்தின் தொடக்க நிலைக்குப்
பின்பு, கூடிய விரைவில், அரசு, எல்லை வரையறை
ஆணையம் என வழங்கப்படும் ஆணையம் ஒன்றை
அமைத்தல் வேண்டும். அது பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்டிருத்தல் வேண்டும்;:-
3
(௨) தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்,
பதவி வழித் தலைவராக இருப்பார்;
(b) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர்,
பதவி வழி;
(௦9) நகராட்சி நிருவாக ஆணையர், பதவி வழி ;
(0) பேரூராட்சிகள் இயக்குநர், பதவி வழி ;
(6) சென்னை மாநகராட்சி ஆணையர், பதவி
வழி ;
0) தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையச்
செயலாளர், பதவி வழி உறுப்பினர் செயலாளராக இருப்பார்.
(2) ஆணையத்தின் தலைமையிடம் சென்னை
மாநகராட்சி எல்லைக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
4. ஆணையத்தின் செயற்பணிகள்.- (1) ஆணையம்
பின்வரும் செயற்பணிகளைப் புரிதல் வேண்டும்,
அவையாவன :-
(8) தொடர்புடைய முந்தைய கடைசி மக்கள்
தொகைக் கணக்கெடுப்பில் தொடர்புடைய எந்த
எண்ணிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதோ அந்தக் கடைசி
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அறியப்பட்ட மக்கள்
தொகையின் அடிப்படையில் ஒவ்வோர் உள்ளாட்சி
அமைப்பிற்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய
உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை நிர்ணயம்
செய்வதற்காகப் பரிந்துரை செய்தல் ;
(b) தொடர்புடைய முந்தைய கடைசி மக்கள்.
தொகைக் கணக்கெடுப்பில் எந்த எண்ணிக்கை
வெளியிடப்பட்டு இருக்கிறதோ அந்தக் கடைசி மக்கள்:
தொகைக் கணக்கெடுப்பில் அறியப்பட்ட மக்கள்
தொகையின் அடிப்படையில் ஒவ்வோர் உள்ளாட்சி
அமைப்பின்: பரப்பிடத்தையும். அந்த உள்ளாட்சி
4
அமைப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படத் தேவைப்படும்.
உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு எத்தனை சிறு
தொகுதிகள். தேவைப்படுமோ அத்தனை சிறு
தொகுதிகளாக பிரிப்பதற்குப் பரிந்துரை செய்தல்;
(9) ஒவ்வோர் உள்ளாட்சி அமைப்பிலும் சிறு
தொகுதிகளின் எல்லைகளைத் தீர்மானிப்பதற்குப்
பரிந்துரை செய்தல்;
(0) ஒவ்வோர் உள்ளாட்சி அமைப்பிலும் உள்ள
ஒவ்வொரு சிறு தொகுதியின் மக்கள் தொகையும்,
இயன்றவரை, அந்த உள்ளாட்சி அமைப்பு முழுவதிலும்
ஒரே மாதிரி இருப்பதை உறுதி செய்ய பரிந்துரை செய்தல்;
(8) ஒவ்வொரு நிலவரை சிறு
தொகுதிகளையும் இயன்றவரை, நில அளவியல்படி ஏற்ற
பரப்பிடமாகக் கொண்டு இருப்பதற்குப் பரிந்துரை செய்தல் ;
) தொடர்புடைய முந்தைய கடைசி மக்கள்.
தொகையின்படி வெளியிடப்பட்டுள்ள மக்கள் தொகைக்
கணக்குகளில் கண்டறியப்பட்ட மக்கள் தொகையின்:
அடிப்படையில் ஒவ்வோர் உள்ளாட்சி அமைப்பிலும்
பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும்
பெண்கள் ஆகியோர்களுக்கான இடங்கள்:
ஒதுக்கப்பட்டுள்ள நிலவரை சிறு தொகுதி அல்லது
சிறுதொகுதிகளைத் தீர்மானிப்பதற்காகப் பறிந்துரைகளைச்
செய்தல்;
(ஐ அரசுக்கு வகுத்துரைக்கப்பட்ட கால
இடைவெளிகளில் காலமுறை அறிக்கைகளைத் தாக்கல்
செய்தல்; மற்றும்
0) அரசு, அவ்வப்போது குறித்துரைக்கப்படும்
பிற செயற்பணிகளைப் புரிதல்.
5. ஆணையத்தின் அதிகாரங்கள்.- (1) ஆணையம்,
அதன் சொந்த நடைமுறையைத் தீர்மானித்தல் வேண்டும்.
5
மற்றும் அதன் செயற்பணிகளைப் புரிகையில் பின்வரும்
விவரங்கள் பொறுத்து, அதாவது, உரிமைவழக்கை
விசாரணை செய்கையில், 1908ஆம் ஆண்டு
உரிமையியல் நடைமுறை தொகுப்புச் சட்டத்தின் (மையச்
சட்டம் XLV/1860) படி உரிமையியல் நீதிமன்றத்தின்
அதிகாரங்கள் அனைத்தையும் உடையதாகும்,அதாவது:-
(@) சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுத்தல்
மற்றும் முன்னிலையாகுமாறு கட்டாயப்படுத்துதல்;
(b) ஆவணம் எதனையும்
முன்னிலைப்படுத்துமாறு கோருதல்;
(௦) நீதிமன்றம். அல்லது அலுவலகம்.
எதிலிருந்தும் பொது பதிவுரு எதனையும் கோருதல்.
(2) ஆணையத்தின் கவனத்தில் உள்ள விவரம்
எதற்கும் ஆணையத்தின் கருத்தில் பயன்படத்தக்க
அல்லது தொடர்புடைய அம்சங்கள் அல்லது விவரங்களின்:
பேரிலான, தகவல் எதனையும் அளிப்பதற்கு நபர் எவரையும்
கோருவதற்கு ஆணையம் அதிகாரம் உடையதாகும்.
(3) ஆணையம் உட்பிரிவு (1)இன் (௨) முதல் (௦9
வரையிலான கூறுகள் மற்றும் உட்பிரிவு (2)இல்
வழங்கப்பட்ட அதிகாரங்களில் எவற்றையும்
செலுத்துவதற்குத் தன்னுடைய உறுப்பினர்களில்
எவருக்கும் அதிகாரம் அளிக்கலாம் மற்றும் இதன்
பொருட்டு ஆணையத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட
உறுப்பினரால் அந்த அதிகாரங்களில் எதனையும்
செலுத்துகையில் பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது
செய்யப்பட்ட செயல் எதுவும், ஆணையத்தின் ஆணை
அல்லது நிகழ்வுக்கு ஏற்ப, அதன். செயலாகக்
கொள்ளப்படுதல் வேண்டும்.
(4) உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு
இருக்குமேயானால் பெரும்பான்மையோரின் கருத்தே
6
மேலோங்கியிருக்கும் ஆணையத்தின் நடவடிக்கைகள்
மற்றும் ஆணைகள் பெரும்பான்மையோறின்
கருத்தின்படித் தெரிவிக்கப்படுதல் வேண்டும்.
6. ஆணையத்தின் கூட்டம்.- ஆணையம்,
தேவையானபோகதெல்லாம் ஒழுங்குவிதிகளில்
வகைசெய்யப்படும் நேரத்திலும், இடத்திலும் அடிக்கடிக்
கூடுதல் வேண்டும் மற்றும் அத்தகைய நடைமுறை
விதிகளைக் கடைபிடித்தல் வேண்டும்.
7. ஆணையத்தின் பணியாளர்கள் தொகுதி.
ஆணையம், தன்னுடைய செயற்பணிகளைத் திறம்பட
புரிவதற்காகத் தேவைப்படும் எண்ணிக்கையில்
பணியாளர்களை அமர்த்துதல் வேண்டும். ஆணையத்தின்
பணியாளர்களின் பணிவரையறைகள் மற்றும்
பணிநிபந்தனைகள், ஒழுங்குவிதிகளில்
வகைசெய்யப்பட்டவாறு இருத்தல் வேண்டும்.
8. பணிப்புரைகள் வழங்குவதற்கான அதிகாரம்.-
அரசு, இந்தச் சட்டத்தின். நோக்கங்களை
நிறைவேற்றுவதற்காகத் தேவையானது அல்லது உகந்தது
எனத் தான் கருதும் பணிப்புரைகளை ஆணையயத்திற்குப்
பிறப்பிக்கலாம்.
9. ஆணையத்தின் நடவடிக்கைகள் தளர்வு
நிலைகளினால் செல்லத்தகாதது ஆகாது. ஆணையம்,
உறுப்பினரின் தற்காலிக வாராமை அல்லது
ஆணையத்தில் காலிப்பணியிடம். இருந்தபோதிலும்
செயல்படுவதற்கு அதிகாரம் உடையதாகும் மற்றும்
ஆணையத்தில் செயல் மற்றும் நடவடிக்கை எதுவும்,
அத்தகைய தற்காலிக வாராமை அல்லது அத்தகைய
காலிப்பணியிடம் இருப்பதன் காரணத்தினால் மட்டுமே
செல்லத்தகாதது அல்லது மறுத்து வாதிடப்படுதலாகாது.
140. ஆணையத்தின். உறுப்பினர்கள் மற்றும்
பணியாளர்கள் அரசுப் பணியாளர்களாவர்.- ஆணையத்தின்.
தலைவர், உறுப்பினர்கள், உறுப்பினர் செயலாளர் மற்றும்
பிற பணியாளர்கள், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளில்
எதனின்படியும் அல்லது இந்தச் சட்டத்தின்படி
செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதி
அல்லது ஆணை அல்லது பணிப்புரை எதனின்படியும்
செயற்படும்போது அல்லது செயற்படுவதாகப்
புலப்படும்போது இந்தியத் தண்டனைத் தொகுப்புச்
சட்டத்தின் (மையச் சட்டம் XLV/1860) 21ஆம்
பொருளின்படி அரசுப் பணியாளராகக் கருதப்படுதல்
வேண்டும்.
11. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.- இந்தச் சட்டத்தை அல்லது
இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதி அல்லது ஆணை அல்லது
பணிப்புரையின்படி நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட
அல்லது செய்யக் கருதப்பட்ட எதனையும் பொறுத்து, அரசு,
ஆணையம் அல்லது அதன் உறுப்பினர் எவருக்கும்
அல்லது அரசின் அல்லது ஆணையத்தின்
பணிப்புரையின்படி செயற்படும் பணியாளர் அல்லது நபர்
எவருக்கும் எதிராக உரிமைவழக்கு அல்லது பிற சட்ட
வழக்கு எதுவும் தொடரப்படுதல் கூடாது .
12. ஒழுங்கு விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.-
ஆணையம், அரசின் முன் ஒப்புதலுடன் இச்சட்டத்தின்.
வகைமுறைகளை நிறைவேற்றுவதற்காக ஒழுங்கு
விதிகளைச் செய்யலாம்.
13. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை
நிறைவேற்றுகையில், இடர்ப்பாடு எதுவும் எழுமானால்,
அரசு, நிகழ்வுக்கேற்ப, இந்தச் சட்டத்தின்
8
வகைமுறைக்கு முரணாக இல்லாத இடர்ப்பாடுகளை
நீக்கும் நோக்கத்திற்காகத் தேவையானது அல்லது
உகந்தது எனத் தோன்றும் எதனையும் ஆணையின்
வாயிலாகச் செய்யலாம்:
வரம்புரை: அத்தகைய ஆணை எதுவும், இந்தச்
சட்டத்தின் தொடக்கத்தேதியிலிருந்து இரண்டாண்டுகள்
காலஅளவு முடிவுற்ற பின்பு பிறப்பிக்கப்படுதல் கூடாது.