Tamil Nadu · 2018 · Act 7

TAMIL NADU BUSINESS FACILITATION ACT, 2018

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

2018-ஆம்‌ ஆண்டு ஜனவரி திங்கள்‌ 12-ஆம்‌ நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும்‌ சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன்‌ சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை விதிகளின்‌ 130௦-ஆம்‌ விதியின்‌ கீழ்‌ பொதுத்‌ தகவலுக்காக வெளியிடப்படுகின்றது. தமிழ்நாடு சட்ட எண்‌. 7/2018 முதலீடுகளைப்‌ பெற்றுத்‌ தருவதில்‌ மிகவும்‌ விரும்பப்படும்‌ மாநிலமாக திகழ வேண்டும்‌ என்ற தமிழ்நாடு அரசின்‌ நோக்கத்திற்கேற்ப முதலீட்டாளர்களுக்குத்‌ தேவையான அனைத்து வசதிகளையும்‌ கிடைக்கச்‌ செய்யவும்‌, அவர்கள்‌ தொழில்‌ முதலீட்டு முடிவுகளை தெளிவாக எடுப்பதற்கும்‌ தொழில்‌ துவங்குவதற்கும்‌, ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவாக்குவதற்கும்‌ விண்ணப்பத்தினை ஒரே இடத்தில்‌ அளித்து தேவையான அனுமதிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள்‌ பெறுவதற்கும்‌, இது தொடர்பான தங்களது குறைகளை கேட்டு அதனை சரி செய்வதற்கும்‌ ஓர்‌ அமைப்பினை உருவாக்கி, குறிப்பிட்ட கால அளவிற்குள்‌ உரிய நடவடிக்கைகளை எடுக்காத அலுவலர்கள்‌ மீது நடவடிக்கை எடுப்பதற்கும்‌ அல்லது இது தொடர்பான இதர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒரு சட்டம்‌. மாநிலத்தின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தொழில்‌ ஒன்றை நிறுவுவதற்கும்‌ விரிவுபடுத்துவதற்கும்‌ மாநிலத்தின்‌ பல்வேறு தகுதிறமுள்ள அதிகார அமைப்புகளால்‌ விண்ணப்பங்களை கால இலக்குடன்‌ நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும்‌ அனுமதிகள்‌ வழங்குவதற்காகவும்‌ மேலும்‌ மாநிலத்தில்‌ முதலீட்டாளர்களின்‌ நட்பார்ந்த சூழ்நிலை ஒன்றுக்காகவும்‌ மற்றும்‌ அதனுடன்‌ தொடர்புடைய அல்லது அதற்குச்‌ சார்வுறுவான பொருட்பாடுகளுக்காகவும்‌ வகை செய்வது உகந்ததாக இருப்பதால்‌; இந்தியக்‌ குடியரசின்‌ அறுபத்து எட்டாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநில சட்டப்‌ பேரவையினால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- அத்தியாயம்‌ —1. முன்னுரை. 1. குறுந்தலைப்பு அள௱வுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 2018 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல்‌ சட்டம்‌ என்று அழைக்கப்படும்‌. (2) இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதையும்‌ அளாவி நிற்கும்‌. (3) 2017 ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ 28 ஆம்‌ நாளன்று நடைமுறைக்கு வந்ததாக கருதப்பட வேண்டும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாய்‌, வேறுபொருள்‌ குறித்தாலன்றி:- " (a) ஒப்புகைச்‌ சான்றிதழ்‌" என்பது 14 &-ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (8) கூறின்‌ கீழ்‌ ஒருங்கிணைப்பு முகமையினால்‌ வழங்கப்பட்ட ஒரு சான்றிதழ்‌ என்று பொருள்படும்‌; " (aa) "விண்ணப்பதாரர்‌" என்றால்‌, ஒரு நிறுவனத்தால்‌, அந்நிறுவனத்தின்‌ சார்பாக ஒற்றைசாளர நுழைவாயில்‌ வழியாக ஒரு மனுவினை பதிவு செய்திட அங்கீகரிக்கப்பட்ட நபர்‌ எனப்‌ பொருள்படும்‌; (b) "சரிபார்ப்பு பட்டியல்‌" என்றால்‌ வகுத்துரைக்கப்படும்‌ ஒன்றிணைந்த விண்ணப்பப்‌ படிவத்துடன்‌ விண்ணப்பத்தாரரால்‌ இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின்‌ பட்டியல்‌ என்று பொருள்படும்‌; (6) "அனுமதிகள்‌" என்றால்‌ இம்மாநிலத்தில்‌ ஒரு நிறுவனத்தை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்வது அல்லது ஏற்கனவே இருந்து வரும்‌ நிறுவனத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு எதனாலும்‌ மறுப்பிண்மை சான்றிதழ்‌, ஒதுக்கீடு, ஏற்பிசைவு, அனுமதி, பதிவு, பட்டியலில்‌ பதிவு, உரிமம்‌ மற்றும்‌ இவை போன்றவற்றை வழங்குதல்‌ அல்லது அளித்தல்‌, மற்றும்‌ அந்நிறுவனம்‌ வணிக உற்பத்தியை தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பிசைவுகள்‌ உள்ளடக்கிய மற்றும்‌ அவ்வாறான தடையில்லை என்பதற்கான அனுமதிக்கு தேவைப்படலாகும்‌ காலமுறை புதுப்பித்தல்கள்‌ உட்பட என்று பொருள்படும்‌; தமிழ்நாடு சட்ட எண்‌. 45/2022, தேதி:29.12.2022 இன்‌ மூலம்‌ உட்புகுத்தப்பட்டது. M தமிழ்நாடு சட்ட எண்‌. 45/2022, தேதி:29.12.2022 இன்‌ மூலம்‌ மறுஎழுத்திடப்பட்டது. (0) "அதிகார அமைப்பு" என்பது மாநில அரசால்‌ நிறுவப்பட்டு, தடையில்லை என்பதற்கான அனுமதிச்‌ சான்றிதழ்களை வழங்குவதற்கு அல்லது அளிப்பதற்கு அதிகாரங்களை அல்லது பொறுப்பு ஒப்படைப்பு செய்யப்பட்டிருக்கிற மாநகராட்சி மன்றம்‌, உள்ளாட்சி மன்றம்‌ அல்லது பிற அதிகார அமைப்பு, அரசின்‌ முகவாண்மை அல்லது ஏதவாது துறை எனப்‌ பொருள்படும்‌; (6) "கருதப்பட்ட ஒப்புதல்‌" என்பது குறிப்பிட்ட கால அளவிற்குள்‌ போதுமான மற்றும்‌ நியாயமான காரணம்‌ இல்லாத நேர்வில்‌ விண்ணப்பத்தினை தீர்வு செய்யும்போது அத்தகைய அனுமதி வழங்குவதற்கான கால அளவு முடிவுற்ற நிலையில்‌ தகுதிறன்மிக்க அதிகார அமைப்புகளால்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்டதாக பொருள்‌ கொள்ளப்படும்‌; வரம்புரையாக:- இந்தச்‌ சட்டத்தில்‌ கருதப்பட்ட ஒப்புதல்‌ சம்மந்தப்பட்ட குழுவின்‌ அனுமதிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்‌; (f) துறை" என்பது அரசின்‌ ஒரு துறை என்று பொருள்படும்‌; (9) "நியமிக்கப்பட்ட அதிகாரி" என்பது இந்த சட்டத்தால்‌ அமைக்கப்பட்ட விதிகளுக்கேற்ப தனிப்பட்ட அனுமதிகளை பரிசீலிக்க தகுதிவாய்ந்த அதிகார அமைப்பால்‌ நியமிக்கப்பட்ட தனித்துவம்‌ கொண்ட அதிகாரி ஒருவர்‌ என்று பொருள்படும்‌; (h) "நிறுவனம்‌" என்பது உற்பத்தி, செய்முறை அல்லது சேவை வழங்குதல்‌ போன்ற நடவடிக்கைகள்‌ அனைத்தையுமோ அல்லது ஏதேனும்‌ ஒன்றிலோ ஈடுபடுதல்‌ அல்லது ஈடுபட கருதும்‌ நிறுவனம்‌ என்று பொருள்படும்‌; (i) "அரசு" என்றால்‌ மாநில அரசு என்று பொருள்படும்‌; () "குறைதீர்க்கும்‌ அதிகார அமைப்பு" என்பது 27 ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு என்று பொருள்படும; k) "குறை சீராய்வு அதிகார அமைப்பு" என்பது 27ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு என்று பொருள்படும்‌; 8 ற ஈஎதாழில்‌ வழிகாட்டி" என்பது மாநிலத்தில்‌, தொழில்‌ நிறுவனங்களை அமைப்பதற்கு வசதியாக அரசால்‌ உருவாக்கப்பட்ட மற்றும்‌ 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சங்கங்களை பதிவு செய்தல்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 271975) கீழ்‌ பதிவு செய்யப்பட்ட சங்கம்‌ என்று பொருள்படும்‌; (M) "சலுகை" என்பது அரசின்‌ மூலம்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அல்லது நிதி சார்ந்த தொகுப்பு அல்லது குறிப்பிட்ட நிதிசார்ந்த அனுமதி ஒன்று என்று பொருள்படும்‌; n) "குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றை சாளர குழு" என்பது 21 ஆம்‌ பிரிவின்‌ படி குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்ட மாவட்ட ஒற்றை சாளர குழு என்று பொருள்படும்‌; (௦) "குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றை சாளர குழு" என்பது குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்ட மாநில ஒற்றை சாளர குழு என்று பொருள்படும்‌; (ஐ) "குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியம்‌" என்பது 23- ஆம்‌ பிரிவின்‌ படி குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீடு மேம்பாடு மற்றும்‌ காண்காணிப்பு வாரியம்‌ என்று பொருள்படும்‌; Q) "ஒருங்கிணைப்பு முகமை" என்பது 3 ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட நிறுவனம்‌ என்று பொருள்படும்‌; (r) "அறிவிக்கை" என்பது தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்பட்டது. என்றும்‌ "அறிவிக்கை வெளியிடப்பெற்றது என்ற வார்த்தையின்‌ பொருள்‌ அறிக்கையின்‌ வெளியீடு ஒன்று என்று பொருள்படும்‌; B ர) "அறிவிக்கை செய்யப்பட்ட நிறுவனம்‌" என்பது அரசால்‌ அவ்வப்போது அறிவிக்கப்படலாகிறவாறான நிறுவனம்‌ அல்லது நிறுவனத்தின்‌ வகை அல்லது இனம்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌” 8 தமிழ்நாடு சட்ட எண்‌. 45/2022, தேதி:29.12.2022 இன்‌ மூலம்‌ மாற்றாக அமைக்கப்பட்டது. ]தமிழ்நாடு சட்ட எண்‌. 4572022, தேதி:29.12.2022 இன்‌ மூலம்‌ உட்புகுத்தப்பட்டது. (5) "வகுத்துரைக்கப்பட்டது" என்பது இந்தச்‌ சட்டத்தின்‌ படி செய்யப்பட்ட விதிகளில்‌ வகுத்துறைக்கப்பட்டது என்று பொருள்படும்‌; (1) "முதன்மை கூர்ந்தாய்வு" என்பது வகுத்துறைக்கப்பட்ட அத்தகைய முறையில்‌ விண்ணப்பத்திணை பெற்றுக்கொண்டு அதில்‌ முதலாவதான ஆராய்வு செய்து சரிபார்ப்பதற்கான பட்டியலில்‌ உள்ள முழுமை தன்மையினை மதிப்பீடு செய்தல்‌ என்று பொருள்படும்‌; (ம "சம்பந்தப்பட்ட குழு" என்பது பின்வரும்‌ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டது அதாவது:- டு குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றை சாளர குழு: 00 குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றை சாளர குழு; 00 மாநில ஒற்றை சாளர குழு: (iv) மாநில ஒற்றை சாளர கண்காணிப்பு குழு; V) குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியம்‌; (vi) முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியம்‌; (v) "மாநிலம்‌" என்பது தமிழ்நாடு மாநிலம்‌ என்று பொருள்படும்‌; (W) "ஒற்றைச்‌ சாளர வலைதள முகவரி" என்பது ஒருங்கிணைப்பு முகமையால்‌ உருவாக்கப்பட்டு, வைத்துவரப்படும்‌ வலைதள முகவரி என்று பொருள்படும்‌; (x) "கால வரம்பு" என்பது அனைத்து வகையிலும்‌ நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை பெற்ற தேதியிலிருந்து தகுதிறமுள்ள அதிகார அமைப்பு ஒன்றினால்‌ நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்குவது குறித்து இறுதிமுடிவு ஒன்று எடுக்கப்பட வேண்டிய வேலை நாட்களின்‌ எண்ணிக்கை என்று பொருள்படும்‌. அத்தியாயம்‌ ॥. மாநில மற்றும்‌ மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு முகமை. 3. மாநில மற்றும்‌ மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு முகமை.- (1) 5-ஆம்‌ பிரிவின்‌ 1 ஆம்‌ உட்பிரிவின்படி அறிவிக்கை செய்யப்பட்ட முதலீட்டு அளவிற்கு மேல்‌ முதலீடு செய்து புதிய நிறுவனங்களை நிறுவுவதற்கு அல்லது ஏற்கனவே இருந்து வரும்‌ நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கு தேவைப்படும்‌ அனுமதிகளை வழங்குவதற்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பு முகமையாக ¢ [ஓதாழில்‌ வழிகாட்டி] இருத்தல்‌ வேண்டும்‌. (2) 5௨-ஆம்‌ பிரிவின்‌ 1 ஆம்‌ உட்பிரிவின்படி அறிவிக்கை செய்யப்பட்ட முதலீட்டு அளவிற்கு மேல்‌ முதலீடு செய்து புதிய நிறுவனங்களை நிறுவுவதற்கு அல்லது ஏற்கனவே இருந்துவரும்‌ நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கு தேவைப்படும்‌ தடையில்லை என்பதற்கான அனுமதிகளை வழங்குவதற்கு சென்னையைப்‌ பொருத்தவரையில்‌ தொழில்‌ மற்றும்‌ வணிக மண்டல இணை இயக்குநர்‌ அலுவலகம்‌ மற்றும்‌ பிற மாவட்டங்களைப்‌ பொறுத்தவரையில்‌ மாவட்ட தொழில்‌ மையமானது மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு முகமையாக இருத்தல்‌ வேண்டும்‌. (3) (1) மற்றும்‌ (2) ஆகிய உட்பிரிவுகளில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, அரசு, குறித்துரைக்கப்பட்ட பகுதி எதற்கும்‌ அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌. அத்தகைய அதிகாரங்களுடனும்‌ செயற்பணிகளுடனும்‌, ஓர்‌ ஒருங்கிணைப்பு முகமையாக பிற அதிகார அமைப்பு அல்லது வாரியம்‌ எதனையும்‌ அறிவிக்கலாம்‌. 4. ஒருங்கிணைப்பு முகமையின்‌ அதிகாரங்களும்‌ செயற்பணிகளும்‌.- (1) அரசின்‌ மற்றும்‌ சம்பந்தப்பட்ட குழுக்களின்‌ கண்காணிப்பு, கட்டளை மற்றும்‌ கட்டாள்கையின்‌ கீழ்‌, ஒருங்கிணைப்பு முகமை, பின்வரும்‌ செயற்பணிகளை ஆற்றுதல்‌ வேண்டும்‌, அவையாவன:- 0 6 ஆம்‌ பிரிவின்படி அரசால்‌ அறிவிக்கை செய்தவாறு அனுமதிகளும்‌ ஊக்கத்தொகைகளும்‌ தேவைப்படும்‌ அனைத்து நிறுவனங்களுக்கு ஒர்‌ ஒரு 4 தமிழ்நாடு சட்ட எண்‌. 45/2022, தேதி:29.12.2022 இன்‌ மூலம்‌ மாற்றாக அமைக்கப்பட்டது... முனைத்‌ தொடர்பாக செயலுறுதல்‌ 3 மற்றும்‌ 11A -ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (கூறின்‌ கீழ்‌ ஒப்புகைச்‌ சான்றிதழ்‌ வழங்குதல்‌] ; (i) விண்ணப்பப்‌ படிவங்களை நிறைவு செய்வதில்‌ விண்ணப்பதாரர்களுக்கு உதவுதல்‌; 00 தகுதியுள்ள அதிகார அமைப்புகளின்‌ சார்பாற்றுநர்களுடன்‌ கூட்டங்களை கூட்டி விண்ணப்பங்களை முன்‌-சீராய்வு நடத்துவதற்காக ஏற்பாடு செய்தல்‌ மற்றும்‌ முதலீட்டாளர்களின்‌ வினாக்களுக்கு பதிலளித்தல்‌; (iv) முன்‌-சீராய்வு முடிவடைவதன்‌ பேரில்‌,- (a) நிறைவு செய்யப்பட்ட விண்ணங்களை ஏற்றுக்கொள்ளுதல்‌; அல்லது (b) இந்தச்‌ சட்டத்தில்‌ செய்யப்பட்ட விதிகளின்படி, நிறைவு செய்யப்படாத விண்ணங்களின்‌ நேர்வில்‌ கூடுதல்‌ தகவலை கேட்டுப்‌ பெறுதல்‌; (V) ஒற்றை சாளர வலைத்தள முகவரி மூலமாக அனுமதிக்கான விண்ணங்களைப்‌ பெறுதல்‌; (vi) சம்பந்தப்பட்ட குழுக்களுக்கான தலைமைச்‌ செயலகமாகச்‌ செயல்பட்டு அவர்களின்‌ செயற்பணிகளை ஆற்றுவதில்‌ அவர்களுக்கு உதவுதல்‌; ஙி) தகுதிறமுள்ள அதிகார அமைப்பிடமிருந்து, விண்ணப்பத்தை ஏற்க மறுத்தோ அல்லது ஏற்றோ, ஆணைகளைப்‌ பெற்று, வகுத்துரைக்கப்படலாகிறவாறு உரிய நடவடிக்கை எடுத்தல்‌; ரி) இந்தச்‌ சட்டத்தின்படியும்‌ அதன்படி செய்யப்பட்ட விதிகளின்படியும்‌ அனுமதிகளும்‌ சலுகைகளும்‌ பெறுவதற்கான நடைமுறையுடன்‌ சேர்ந்தவையான நிறுவனங்களின்‌ குறைகள்‌ எவையேனுமிருப்பின்‌ அவற்றைத்‌ தீர்த்து வைத்தல்‌; (2) இந்தச்‌ சட்டத்தின்படியான, ஒருங்கிணைப்பு முகமையின்‌ அதிகாரங்களும்‌ செயற்பணிகளும்‌ அதனால்‌ ஆற்றப்படும்‌ அதிகாரங்களுக்கும்‌ செயற்பணிகளுக்கும்‌ கூடுதலாக இருத்தல்‌ வேண்டும்‌. 8 தமிழ்நாடு சட்ட எண்‌. 45/2022, தேதி:2942.2022 இன்‌ மூலம்‌ மாற்றாக அமைக்கப்பட்டது. 5. முதலீட்டு வரம்புகள்‌.- (1) அரசு, அறிவிக்கை வாயிலாக, அவ்வப்போது, அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள்‌ ! [அல்லது ஒப்புகைச்‌ சான்றிதழ்‌ வழங்குதல்‌], மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு முகமைக்கு எந்த முதலீட்டு வரம்புவரை செய்யப்படுதல்‌ வேண்டும்‌ என்பதைக்‌ குறித்துரைக்கலாம்‌. மேற்சொன்ன முதலீட்டு வரம்புக்கு மேற்படும்‌ விண்ணப்பங்கள்‌ அனைத்தும்‌ மாநில அளவிலான ஒருங்கிணைப்பு முகமைக்குச்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, அரசு, இந்தச்‌ சட்டத்தின்படி அறிவிக்கப்பட்ட குறித்துரைக்கப்பட்ட பகுதி ஒன்றில்‌ உள்ள நிறுவனங்களிலிருந்து வரும்‌ விண்ணப்பங்கள்‌ அனைத்தும்‌ அந்தக்‌ குறித்துரைக்கப்பட்ட பகுதிக்கான ஒருங்கிணைப்பு முகமைக்கு செய்யப்படுதல்‌ வேண்டும்‌ என்று வகுத்துரைக்கலாம்‌. 6. அனுமதிகளும்‌ சலுகைகளும்‌.- அரசு, இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்படும்‌ விதிகளில்‌, அனுமதிகளையும்‌ சலுகைகளையும்‌ வகுத்துரைக்கலாம்‌ அத்துடன்‌, அவ்வப்போது, அனுமதிகளையும்‌ சலுகைகளையும்‌ சேர்க்கலாம்‌ அல்லது மாற்றியமைக்கலாம்‌. 7. அனுமதிகள்‌ மற்றும்‌ சலுகைகளுக்கான விண்ணப்பம்‌.- 6-ஆம்‌ பிரிவின்‌ படி, அனுமதிகள்‌ மற்றும்‌ சலுகைகள்‌ பெறுவதற்கான வகுக்கப்பட்ட விண்ணப்பம்‌ அதற்கான கட்டணத்துடன்‌ ஒற்றைச்‌ சாளள வலைதள முகவரியின்‌ மூலம்‌ விண்ணப்பிக்க அதற்கான வகுத்துரைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முகமையின்‌ வகுத்துரைக்கப்பட்ட கட்டணத்தையும்‌ சேர்த்து விண்ணப்பிக்கப்பட வேண்டும்‌. 8. கூடுதல்‌ தகவலை கோருவதற்கான அதிகாரம்‌.- (1) விண்ணப்பம்‌ ஒன்று வரப்பெற்றதன்‌ பேரில்‌, தகுதியுடைய அதிகார அமைப்பு விண்ணப்பதாரரிடமிருந்து கோரியுள்ள விரும்புகிற கூடுதல்‌ தகவல்‌அல்லது தெளிவுபடுத்தலுக்கான அதிகாரம்‌ பெற்றிருக்க வேண்டும்‌; வரம்புரையாக, 11-ஆம்‌ பிரிவின்‌ படி வகுத்துரைக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்கு முன்பு ஒரு முறை மட்டும்‌ கூடுதல்‌ தகவல்‌ அல்லது தெளிவுபடுத்த கோர வேண்டும்‌ மற்றும்‌ வகுத்துறைக்கப்பட்ட அத்தகைய முறையில்‌ நேர்விற்கேற்ப ஒற்றை சாளர வலைதள முகவரி மூலமாக கூடுதலான தகவல்‌ அல்லது தெளிவுபடுத்தல்‌ தொடர்பான அனைத்து கடிதத்‌ தொடர்பு இருக்க வேண்டும்‌. (8 தமிழ்நாடு சட்ட எண்‌. 45/2022, தேதி:29.12.2022 இன்‌ மூலம்‌ உட்புகுத்தப்பட்டது. (2) தகுதியுடைய அதிகார அமைப்பு, விண்ணப்பத்தினை ஏற்றுக்‌ கொள்ளப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட இரண்டில்‌ ஒன்றின்‌ ஆணையினை ஒற்றைச்‌ சாளர வலைதள முகவரி மூலமாக வெளியிட வேண்டும்‌. 9. ஒருங்கிணைக்கப்பட்ட விண்ணப்ப படிவம்‌.-- (1) [மிண்ணணு வடிவம்‌] [7] ஒருங்கிணைந்த விண்ணப்பப்படிவத்தினை கீழ்க்‌ கண்ட இனங்களுடன்‌ வகுத்துரைக்க வேண்டும்‌. (i) மைய அரசு சட்டங்களினால்‌ ஆன படிவங்களில்‌ மாற்றம்‌ ஏதும்‌ இல்லாமல்‌ இருத்தல்‌; 0) மாநில சட்டங்களின்‌ கீழ்‌ ஏற்கனவே இருக்கும்‌ படிவங்கள்‌ மற்றும்‌ ஏற்கனவே இருக்கும்‌ படிவங்களுக்கு பதிலாக தற்போதுள்ள புதிய படிவங்கள்‌. (2) அனைத்து உரிய துறைகள்‌ மற்றும்‌ தகுதிற அமைப்புகள்‌ தேவைப்படும்‌ அனுமதிகளை வழங்கும்‌ பொருட்டு பரிசீலனை செய்வதற்காக ஒருங்கிணைந்த விண்ணப்படிவத்தை ஏற்றுக்‌ கொள்ளல்‌ வேண்டும்‌. 40. தற்சான்றிதழ்‌ அளித்தல்‌.- (1) தொடர்புடைய சட்டங்கள்‌ மற்றும்‌ விதிகளில்‌ உள்ள பொருட்பாடுகளுக்கு கட்டுப்படுவோம்‌ எனும்‌ உறுதிமொழியோடு வகுத்துரைக்கப்பட்ட படிவத்திலான விண்ணப்பத்தினை ஒற்றைச்‌ சாளர வலைதள முகவரி மூலம்‌ தற்சான்றிதழுடன்‌ ஒவ்வொரு நிறுவனமும்‌ சமர்பிக்க வேண்டும்‌. (2) நிறுவனங்களால்‌ வழங்கப்படும்‌ தற்சான்றிதழ்கள்‌ அனுமதி வழங்கும்‌ நோக்கத்திற்காக தகுதியுடைய அதிகாரிகளால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. (3) எந்தவொரு காலத்திலும்‌, நிறுவனத்தால்‌ அளிக்கப்பட்ட விவரங்கள்‌ தவறாக இருப்பதாக கண்டறியப்பட்டாலோ அல்லது அவை சரியற்றவையாக இருந்தாலோ அல்லது தற்சான்றிதழில்‌ அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை கடைபிடிக்க நிறுவனம்‌ தவறினாலோ அத்தகைய நிறுவனம்‌ 28 ஆம்‌ பிரிவின்‌ படி அபராதத்திற்கு உட்படும்‌. 11. விண்ணப்பங்களுக்கான நடைமுறை மற்றும்‌ செயல்முறைக்கான கால வரம்பு.- (1) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள மாநிலச்‌ சட்டம்‌ எதிலும்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌ அரசானது:- (a) விண்ணப்பங்களுக்கான செயல்முறை மற்றும்‌ தீர்வு செய்வதற்கான நடைமுறையை வகுத்துரைக்கலாம்‌; 1 தமிழ்நாடு சட்ட எண்‌. 45/2022, தேதி:29.12.2022 இன்‌ மூலம்‌ மாற்றாக அமைக்கப்பட்டது. 10 (b) தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு, விண்ணப்பங்களின்‌ பேரில்‌ எழுகின்ற வினாக்கள்‌, செயல்முறை மற்றும்‌ தீர்வுகளுக்கான காலவரம்பை வகுத்துரைக்கலாம்‌. (2) தகுதி வாய்ந்த அதிகார அமைப்பானது, அனைத்து வகைகளிலும்‌ முழுமை பெற்ற, விண்ணப்பம்‌ பெறப்பட்ட தேதியிலிருந்து அதற்கான நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பு முடிவுறுவதற்கு முன்னால்‌ விண்ணப்பத்தின்‌ பேரில்‌ ஆணைகளை பிறப்பிக்கும்‌. 8414. ஒப்புகைச்‌ சான்றிதழ்‌.- (1) ஒரு புதிய நடவடிக்கையை தொடங்குவதற்கோ அல்லது அதன்‌ நடவடிக்கைகளை விரிவாக்கம்‌ செய்யக்கருதுகிற, அறிவிக்கை செய்யப்பட்ட நிறுவனம்‌ எதுவும்‌, ஒற்றைச்‌ சாளர வலைவாயில்‌ வழியாக, தற்சான்றிதழுடன்‌ கூடிய ஒருங்கிணைந்த விண்ணப்பபடிவத்தையும்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய கட்டணத்தையும்‌ சமர்ப்பிக்கலாம்‌. (28) (1) ஆம்‌ உட்பிரிவின்‌ கீழ்‌ அறிவிக்கை செய்யப்பட்ட நிறுவனம்‌ ஒன்றிலிருந்து, ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவம்‌ ஒன்று பெறப்பட்டதன்‌ பேரில்‌, ஒருங்கிணைப்பு முகமையானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ படிவத்திலும்‌ அத்தகைய கால வரம்பிற்குள்ளும்‌ விண்ணப்பதாரருக்கு ஒப்புகைச்‌ சான்றிதழ்‌ ஒன்றினை வழங்குதல்‌ வேண்டும்‌; (௦) (ஐ கூறின்‌ கீழ்‌ வழங்கப்பட்ட ஓர்‌ ஒப்புகைச்‌ சான்றிதழானது அனைத்து நோக்கங்ளுக்காக, அரசால்‌ அவ்வப்போது அறிவிக்கை செய்யப்படலாகும்‌ அத்தகைய அனுமதிகளுக்காக, அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள்‌ காலத்திற்காக, 2 ஆம்‌ பிரிவின்‌ (௦) கூறில்‌ பொருள்வரையறை செய்யப்பட்டவாறான அனுமதியைப்‌ போன்ற செயல்விளைவைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌.மூன்று ஆண்டுகள்‌ காலம்‌ முடிவடைவதற்கு முன்னர்‌, அத்தகைய நிறுவனமானது தகுதிவாய்ந்த அதிகார அமைப்பிடமிருந்து அனுமதிகளைப்‌ பெறுதல்‌ வேண்டும்‌; (௦9) தற்சான்றிதழை மீறும்‌ ஏதேனும்‌ நிகழ்வில்‌, ஒப்புகைச்‌ சான்றிதழானது ஒருங்கிணைப்பு முகமையினால்‌ ரத்து செய்யப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக, விண்ணப்பதாரருக்கு கேட்பதற்கான நியாயமான வாய்ப்பொன்று வழங்கப்பட்டிருந்தாலன்றி அத்தகைய ரத்தானது செய்யப்படுதலாகாது. 11 8 தமிழ்நாடு சட்ட எண்‌. 45/2022, தேதி:29.12.2022 இன்‌ மூலம்‌ உட்புகுத்தப்பட்டது. 12. கருதப்பட்ட ஒப்புதல்‌. (1) அரசானது, வகுத்துரைக்கப்பட்ட கால வரம்பிற்குள்‌ விண்ணப்பத்தின்‌ பேறிலான இறுதி ஆணைகள்‌ பிறப்பிப்பதற்கு தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு தவறும்‌ பொருட்டு, ஒப்புதல்‌ அளிக்கப்பட்டதாக கருதப்படும்‌ இனங்களை வகுத்துரைக்கும்‌. (2) கருதப்பட்ட ஒப்புதலின்‌ பேரில்‌, தகுதி வாய்ந்த அதிகார அமைப்பால்‌ செய்யப்பட்ட சட்டங்கள்‌, விதிகள்‌, துணை விதிகள்‌, அறிவிக்கைகள்‌, நிலையாணைகள்‌, நிறைவேற்றும்‌ அறிவுரை வழிகாட்டல்கள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ ஆகியவற்றின்‌ பொருட்பாடுகள்‌ எதனின்‌ மீறுகை இன்றி மற்றும்‌ 10 ஆம்‌ பிரிவின்படி நிறுவனத்தால்‌ அளிக்கப்பட்ட தற்சான்றிதழின்படி தொழில்‌ தொடங்குவதற்கான நடவடிக்கைகளை நிறுவனம்‌ மேற்கொள்ளலாம்‌. 13. கருதப்பட்ட ஒப்புதலுக்கான தகவல்‌.- சம்பந்தப்பட்ட குழு, தகுதி வாய்ந்த அதிகார அமைப்பால்‌ எந்தத்‌ தேதியில்‌ விண்ணப்பம்‌ பெறப்பட்டுயிருந்ததோ அந்தத்‌ தேதி மற்றும்‌ எந்தத்‌ தேதியில்‌ அது கருதப்பட்ட ஒப்புதலாக அறிவிக்கப்பட்டதோ அந்த தேதி ஆகியவற்றை விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கும்‌. 14. ஆய்வு விதிவிலக்கு மற்றும்‌ அதிகார ஒப்படைப்பு.- (1) அரசானது, அறிவிக்கையினால்‌ பொருந்தக்கூடிய சட்டங்கள்‌, விதிகள்‌, ஆணைகள்‌ அல்லது அறிவுரைகள்‌ ஆகியவற்றின்‌ பொருட்பாடுகளின்படி குறித்துரைக்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு இணங்க தகுதிவாய்ந்த அதிகார அமைப்பால்‌ ஆய்வு மேற்கொள்ளப்படும்‌ இனங்களை ஓர்‌ அறிவிக்கை மூலம்‌ தெரிவிக்கும்‌. (2) அரசானது, அப்போதைக்கப்போது அறிவிக்கையின்‌ மூலம்‌, எந்த அனுமதிக்கு ஆய்விலிருந்து விதிவிலக்கு வழங்கப்பட்டதோ அந்த விதிவிலக்கை குறித்துரைக்கலாம்‌ மற்றும்‌ இந்த சட்டத்தின்படி குறித்துரைக்கப்பட்ட அனுமதி தொடர்பான ஆய்விற்கு எதனின்‌ பொருட்டும்‌ நபர்‌ அல்லது அதிகார அமைப்பு எதற்கும்‌ அதிகாரங்களை கூட ஒப்படைவு செய்யலாம்‌. அத்தியாயம்‌ - ॥ மாநில அளவிலான குழுக்கள்‌ மற்றும்‌ வாரியம்‌. 15. மாநில ஒற்றைச்‌ சாளாக்‌ குழுவின்‌ அமைப்பு அதிகாரங்கள்‌ மற்றும்‌ செயற்பணிகள்‌.- (1) மாநில அரசானது, அறிவிக்கையின்‌ மூலம்‌ ' [தொழில்‌ 12. வழிகாட்டியின்‌ மேலாண்‌ இயக்குநர்‌ மற்றும்‌ தலைமைச்‌ செயல்‌ அலுவரை தலைவராகவும்‌, தொழில்‌ வழிகாட்டியின்‌ செயல்‌ இயக்குநரை கூட்டுநர்‌ உறுப்பினராகவும்‌] தொடர்புடைய தகுதிவாய்ந்த அதிகார அமைப்புக்களைக்‌ கொண்டு மாநில ஒற்றைச்‌ சாளர குழுவினை அமைத்துருவாக்குதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ வணிக மற்றும்‌ தொழிற்கழகங்களிலிருந்தும்‌ மற்றும்‌ தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்தும்‌ வகுத்துரைக்கப்படும்‌ உறுப்பினராக இரண்டு நபர்களுக்கு மிகையில்லாமல்‌ அமைத்துருவாக்குதல்‌ வேண்டும்‌. (2) மாநில ஒற்றைச்‌ சாளரக்குழுவின்‌ உறுப்பினர்களாக இருக்கின்ற தகுதி வாய்ந்த அதிகார அமைப்புகள்‌ தாமே அனைத்து கூட்டங்களிலும்‌ கலந்து கொள்ளுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவர்களால்‌ அந்தக்‌ கூட்டங்களில்‌ கலந்து கொள்ள இயலாது இருக்கின்ற நேர்வில்‌, அவர்கள்‌ கூட்டத்தில்‌ உரிய முடிவை எடுப்பதற்கு எழுத்து மூலமாக அதிகார அளிப்பை முதுநிலை அலுவலர்‌ ஒருவரை அவருக்கு பதிலாக அனுப்பலாம்‌. (3) மாநில ஒற்றைச்‌ சாளரக்குழு பின்வரும்‌ அதிகாரங்களை நிறைவேற்றவும்‌ பின்வரும்‌ செயற்பணிகளை ஆற்றுதலும்‌ வேண்டும்‌. அதாவது:- (i) குழு கூட்டப்பட வேண்டிய நேரம்‌ மற்றும்‌ இடம்‌ குறித்தும்‌ குழுத்தலைவர்‌ முடிவெடுத்தப்படி கூட்டப்பட்டு வகுத்துறைக்கப்பட்ட நடைமுறைகளின்படி கூட்டம்‌ நடத்தப்பட வேண்டும்‌. (i) அதிகார அமைப்பால்‌ விண்ணப்பங்களின்‌ செயல்முறைகளை மறு ஆய்வு மற்றும்‌ அறிவுறுத்தவும்‌; 0) அதிகார அமைப்பால்‌ பெறப்பட்டிருந்த விண்ணப்பங்களின்‌ தேதியை விண்ணப்பதாரருக்கு தெரிவித்தும்‌ மற்றும்‌ அத்தகைய விண்ணப்பத்தின்‌ 12-ஆம்‌ பிரிவின்படி ஒப்பேற்பளிக்கப்பட்டதாகக்‌ கொள்ளப்படும்‌ தேதியையும்‌ தெரிவித்தும்‌; (iv) 18-ஆம்‌ பிரிவின்படியாக முடிவிற்காக மாநில ஒற்றைச்‌ சாளர அறிவுறுத்தக்‌ குழுவிற்கு குறிப்புரைகளுடன்‌ மற்றும்‌ தொடர்புடைய ஆவணங்களையும்‌ மேலனுப்பியும்‌; 13 8 தமிழ்நாடு சட்ட எண்‌. 45/2022, தேதி:2942.2022 இன்‌ மூலம்‌ மாற்றாக அமைக்கப்பட்டது. 0) குழுவின்‌ தலைவரின்‌ விருப்பத்தின்படி குழுவின்‌ உறுப்பினர்களாக இல்லாமல்‌ இருக்கின்ற அதிகார அமைப்புகளை அல்லது நிபுணர்களை மாநில ஒற்றைச்‌ சாளரக்குழுவின்‌ கூட்டம்‌ எதற்காகவும்‌ சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கலாம்‌. (vi) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற அதிகாரங்களை நிறைவேற்றலாம்‌ மற்றும்‌ அத்தகைய பிற பணிகளையும்‌ புரியலாம்‌. 16. மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்‌ குழுவின்‌ அமைப்பு, அதிகாரங்கள்‌ மற்றும்‌ செயற்பணிகள்‌.- (1) அரசானது, அறிவிக்கையின்‌ மூலம்‌, அரசின்‌ தலைமைச்‌ செயலாளர்‌ தலைவராக, தொழில்‌ துறையின்‌ செயலாளர்‌ உறுப்பினர்‌ கூட்டுநராக மற்றும்‌ தொடர்புடைய துறையின்‌ செயலாளர்கள்‌ உறுப்பினர்களாக ஆகியோருடன்‌ மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்குழு ஒன்றை அமைத்துருவாக்குதல்‌ வேண்டும்‌. (2) மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்குழுவின்‌ உறுப்பினர்கள்‌ தாமே அனைத்துக்‌ கூட்டங்களிலும்‌ கலந்து கொள்ளுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அந்தக்‌ கூட்டங்களில்‌ கலந்து கொள்ள இயலாது இருக்கும்‌ நேர்வில்‌, கூட்டத்தில்‌ உரிய முடிவை எடுப்பதற்கு அவர்கள்‌ எழுத்து மூலமாக அதிகார அளிப்பை முதுநிலை அலுவலர்‌ ஒருவரை அவருக்கு பதிலாக அனுப்பலாம்‌. (3) மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்குழுவின்‌ உறுப்பினர்கள்‌ பின்வரும்‌ அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ மற்றும்‌ பின்வரும்‌ செயற்பணிகளை ஆற்றுதலும்‌ வேண்டும்‌. அதாவது:- (i) குழு கூட்டப்பட வேண்டிய நேரம்‌ மற்றும்‌ இடம்‌ குறித்தும்‌ குழுத்தலைவர்‌ முடிவெடுத்தப்படி கூட்டப்பட்டு வகுத்துறைக்கப்பட்ட நடைமுறைகளின்படி கூட்டம்‌ நடத்தப்பட வேண்டும்‌. 0) மாநில ஒற்றைச்‌ சாளரக்குழு, மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்குழு மற்றும்‌ தகுதிவாய்ந்த அதிகார அமைப்புகள்‌ ஆகியவற்றால்‌ விண்ணப்பங்களை மறு ஆய்வு மற்றும்‌ அறிவுறுத்தத்தினால்‌ தீர்வு செய்யும்‌; 14 0) ஒற்றைச்சாளர வலைதள முகவரி மூலமாக பதிவுசெய்யப்பட்ட தகுதிறமிக்க அதிகார அமைப்பிடமிருந்து அனுமதிகள்‌ மற்றும்‌ சலுகைகள்‌ தொடர்பான நிறுவனங்களின்‌ குறைகள்‌ மீதான தீர்மானத்தின்‌ நிலையினை மறுஆய்வு மற்றும்‌ கண்காணிக்கவும்‌; (iv) நிறுவனங்களின்‌ குறைகளை நிவர்த்தி செய்யும்‌ நோக்கில்‌ தகுதி வாய்ந்த அதிகார அமைப்பிற்கு உரிய வழிகாட்டுதல்கள்‌ வழங்கவும்‌; 0318 மற்றும்‌ 19-ஆம்‌ பிரிவின்படி வழக்குகளை நேர்வு மற்றும்‌ முடிவு செய்தும்‌; (vi) 20-ஆம்‌ பிரிவின்படி வழக்குகளை உரிய கோப்புகளுடன்‌ குறிப்புகளுடனும்‌ முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியத்திற்கு அனுப்புதல்‌; (vii) அறிவிக்கையின்‌ மூலம்‌, அரசினால்‌ குறித்துரைக்கலாகும்‌ அத்தகைய பொருட்பாடுகளுக்கான அனைத்து திட்டங்களுக்கு ஊக்கச்‌ சலுகைக்கான ஒப்பேற்பு நிலையை மறு ஆய்வு செய்யவும்‌ மற்றும்‌ அறிவுறுத்தவும்‌ மற்றும்‌; 0) குழுத்தலைவர்‌ விரும்புகிறபடி, எந்தவொரு கூட்டத்திற்கும்‌, தகுதிறமிக்க அதிகார அமைப்புகளை அல்லது குழுவில்‌ உறுப்பினராக இல்லாத நிபுணர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கலாம்‌; (ix) வகுத்துரைக்கபடலாகும்‌ அத்தகைய பிற அதிகாரங்களைச்‌ செலுத்தவும்‌ மற்றும்‌ அத்தகைய பிற செயற்பணிகளை புரியவும்‌.” 17. முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியத்தின்‌ அமைப்பு, அதிகாரங்கள்‌ மற்றும்‌ செயற்பணிகள்‌.- (1) அரசானது, அறிவிக்கையின்‌ மூலம்‌, முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியத்தினை முதலமைச்சரை தலைவராகவும்‌, தொழில்‌ துறையின்‌ செயலாளரை உறுப்பினர்‌ கூட்டுநராகவும்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படும்‌ பிற உறுப்பினர்களைக்‌ கொண்டும்‌ அமைக்கலாம்‌. (2) முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியம்‌ பின்வரும்‌. செயற்பணிகளைப்‌ புரிதல்‌ வேண்டும்‌. அதாவது:- 15 0) குழுவின்‌ தலைவர்‌ முடிவு செய்கிறவாறு அத்தகைய நேரத்திலும்‌ இடத்திலும்‌ கூடி வகுத்துரைக்கப்பட்ட நெறிமுறைகளின்படி அலுவல்‌ நடத்துதல்‌; 0) மாநில ஒற்றைச்‌ சாளரக்குழு, மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்குழு மற்றும்‌ தகுதிவாய்ந்த அதிகார அமைப்புகள்‌ ஆகியவற்றால்‌ விண்ணப்பங்கள்‌ தீர்க்கப்படுதலை மறு ஆய்வு மற்றும்‌ கண்காணித்தல்‌ மூலம்‌ தீர்வு செய்யும்‌; (iii) மாநில ஒற்றைச்‌ சாளரக்குழு, மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்குழு ஆகிய இரண்டின்‌ முடிவு செய்யும்‌ பணிப்புரையும்‌ மற்றும்‌ செயற்பணிகளை கண்காணிக்கவும்‌ மற்றும்‌ உரிய அறிவுரைகளை வழங்கவும்‌; (iv) மாநிலத்தில்‌ ஒற்றைச்‌ சாளர செயல்பாட்டுத்‌ திண்மையை காலமுறைதோறும்‌ மறு ஆய்வு செய்யவும்‌; (V) 20-ஆம்‌ பிரிவின்படி வழக்குகளை நேர்வு மற்றும்‌ முடிவு செய்தும்‌; (vi) மாநில ஒற்றைச்‌ சாளரக்குழு அல்லது மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்குழுவினால்‌ முன்வைக்கப்படும்‌ முதலீட்டை எளிதாக்குவது தொடர்பாக பிற பிரச்சனை எதனின்‌ மறு ஆய்வு செய்தும்‌; பி) முதலீட்டு வளர்ச்சி, வணிக எளிதாக்குதல்‌ மற்றும்‌ அது தொடர்பான அடிப்படை பிரச்சனை தொடர்புடைய மறு ஆய்வு கொள்கைகள்‌ வழங்கவும்‌; ப) அறிவிக்கையின்‌ மூலம்‌, அரசினால்‌ குறித்துரைக்கலாகும்‌ அத்தகைய பொருட்பாடுகளுக்கான அனைத்து திட்டங்களுக்கு ஊக்கச்‌ சலுகைக்கான ஒப்பேற்பு நிலையை மறு ஆய்வு மற்றும்‌ அறிவுறுத்தவும்‌ மற்றும்‌; (ix) வகுத்துரைக்கபடலாகும்‌ அத்தகைய பிற அதிகாரங்களைச்‌ செலுத்தவும்‌ மற்றும்‌ அத்தகைய பிற செயற்பணிகளை புரியவும்‌. (3) 5-ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி குறித்துரைக்கப்படலாகும்‌ முதலீட்டு வரம்புகளுக்கு முதலீட்டளவை கொண்டு நிறுவனங்களுக்கு அனுமதிகள்‌ வழங்கவதற்கான முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியத்தினால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணைகள்‌ இறுதியானதாகும்‌. ஒற்றைச்‌ சாளரக்‌ குழு, மாநில 16 ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்குழு மற்றும்‌ தகுதி வாய்ந்த அதிகார அமைப்புகள்‌ ஆகியவை இதற்கு கட்டுப்பட்டதாகும்‌. 18. மாநில ஒற்றைச்‌ சாளரக்‌ குழுவினால்‌ வழக்குகளை மறு ஆய்வு செய்தல்‌.- (1) தற்போதைக்கு நடைமுறையிலுள்ள மாநில சட்டம்‌ எதிலும்‌ அடங்கியுள்ள எது எவ்வாறுயிருப்பினும்‌, மாநில ஒற்றைச்‌ சாளாக்‌ குழு, தானாகவோ அல்லது விண்ணப்பத்தின்‌ பேறிலோ தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனையும்‌ பரிசீலிக்கப்பட்டு தடை எதனையும்‌ நீக்குவதற்கு மறுக்கலாம்‌ அல்லது மாற்றமைவுகளுடன்‌ அதனை ஒப்பேற்பளிக்கலாம்‌ மற்றும்‌ மாநில ஒற்றைச்‌ சாளரக்குழு அத்தகைய முடிவினை மாற்றுவதற்கு தகுமான காரணங்கள்‌ இருப்பதாக கருதுமேயானால்‌ அதனை மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்குழுவிற்கு முடிவு ஒன்றை எடுப்பதற்காக அத்தகை வழக்குடன்‌ குறிப்புரைகள்‌ மற்றும்‌ தொடர்புடைய ஆவணங்களை மேலனுப்புதல்‌ வேண்டும்‌. (2) மாநில ஒற்றைச்சாளர கண்காணிப்புக்குழுவானது மாநில ஒற்றைச்‌ சாளரக்குழுவினரால்‌ சுட்டப்பட்ட வழக்குகள்‌ அனைத்தையும்‌ பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள்‌ வழங்குதல்‌ வேண்டும்‌. (3) மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்‌ குழுவினரால்‌ எடுக்கப்பட்ட முடிவானது, மாநில ஒற்றைச்‌ சாளரக்‌ குழு மற்றும்‌ தகுதி வாய்ந்த அதிகார அமைப்புகள்‌ கட்டுப்பட்டதாக இருக்கும்‌. 19. மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்‌ குழுவினால்‌ வழக்குகளை மறு ஆய்வு செய்தல்‌. அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள மாநில சட்டம்‌ எதிலும்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்குழு, தானகவோ சுட்டப்பட்டதன்‌ பேறிலோ ஏதொன்றிலுமோ மாநில ஒற்றைச்‌ சாளரக்குழுவினரால்‌ பிறப்பிக்கப்பட ஆணை எதனையும்‌ பரிசீலிக்கலாம்‌ மற்றும்‌ தான்‌ பொருத்தமென கருதலாகும்‌ உரிய ஆணைகளை வழங்கலாம்‌. அத்தகைய ஆணைகள்‌ இறுதியானதாக இருக்கும்‌. 20.முதலீட்டு வளர்ச்சி மற்றும்‌ கண்காணிப்புக்‌ குழுவினால்‌ வழக்குகளை மறு ஆய்வு செய்தல்‌.- அப்போதைக்கு நடைமுறையிலுள்ள மாநில சட்டம்‌ எதிலும்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியமானது தானாகவோ சுட்டப்பட்டதன்‌ பேறிலோ ஏதொன்றிலோ மாநில ஒற்றைச்‌ 17 சாளர குழு அல்லது மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்‌ குழுவினால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனையும்‌ பரிச்லனை செய்யலாம்‌ மற்றும்‌ தான்‌ பொருத்தமென கருதலாகும்‌ உரிய ஆணைகளை வழங்கலாம்‌. அத்தகைய ஆணைகள்‌ இறுதியானதாக இருக்கும்‌. அத்தியாயம்‌-11/. குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றை சாளர குழு மற்றும்‌ மாநில ஒற்றை சாளர குழுவினை அமைத்தல்‌. 21. குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்‌ குழுவினை அமைத்தல்‌ மற்றும்‌ அதன்‌ அதிகாரங்களும்‌ செயற்‌ பணிகளும்‌. (1) அரசு, மாவட்ட ஆட்சியரை தலைவராகவும்‌, சென்னை மாவட்டத்தைப்‌ பொறுத்தவரை தொழில்‌ மற்றும்‌ வணிக மண்டல இணை இயக்குநரை உறுப்பினர்‌ மற்றும்‌ ஏற்பாட்டாளராகவும்‌, மற்ற மாவட்டங்களைப்‌ பொறுத்தவரையில்‌ மாவட்ட தொழில்‌ மைய பொது மேலாளரை உறுப்பினர்‌ கூட்ட அமைப்பாளராகவும்‌ மற்றும்‌ தகுதிவாய்ந்த அதிகார அமைப்புகளிலிருந்து உறுப்பினர்களை கொண்டும்‌ மற்றும்‌ வணிக குழுமம்‌ மற்றும்‌ தொழில்‌ வல்லுநர்களின்‌ கூட்டமைப்புகளிலிருந்து, இரண்டு நபர்களுக்கு மிகையாகாமல்‌, உறுப்பினர்கள்‌ கொண்ட ஒரு குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளர குழுவினை அறிவிக்கை மூலமாக அமைக்கப்பட வேண்டும்‌. (2) குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்‌ குழுவின்‌ உறுப்பினர்களாக இருக்கும்‌, தகுதிறமுள்ள அதிகார அமைப்புகள்‌ அனைத்து கூட்டங்களுக்கும்‌ நேரடியாக வருகை தருதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவர்கள்‌ கூட்டத்திற்கு வருகை தர இயலாமல்‌ இருக்கும்‌ நேர்வில்‌, அவர்கள்‌, கூட்டத்தில்‌ உரிய முடிவு எடுப்பதற்கு எழுத்து வழி அதிகாரமளித்து பணிமூப்பு நிலையிலுள்ள அலுவலர்‌ ஒருவரை அனுப்பி வைக்கலாம்‌ (3) குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றை சாளர குழு அதிகாரங்கள்‌ செயற்படுத்துதல்‌ மற்றும்‌ செயல்பாடுகளை பின்வருமாறு நிறைவேற்ற வேண்டும்‌ அதாவது:- 18 (i) குழு கூட்டப்பட வேண்டிய நேரம்‌ மற்றும்‌ இடம்‌ குறித்தும்‌ குழுத்தலைவர்‌ முடிவெடுத்தப்படி கூட்டப்பட்டு வகுத்துறைக்கப்பட்ட நடைமுறைகளின்படி கூட்டம்‌ நடத்தப்பட வேண்டும்‌. (i) தகுதி வாய்ந்த அதிகார அமைப்பின்‌ மூலம்‌ விண்ணப்பங்களினை மறு ஆய்வு மற்றும்‌ கண்காணிப்பு செய்தல்‌; 0 24-ஆம்‌ பிரிவின்படி குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ ஒற்றை சாளர குழுவில்‌ முடிவு செய்யப்பட வழக்குகளை குறிப்புரையுடன்‌ மாநில ஒற்றை தொடர்புடைய ஆவனங்களுடன்‌ அனுப்புதல்‌; (iv) அதிகார அமைப்பின்‌ மூலம்‌ விண்ணப்பம்‌ பெறப்பட்ட நாள்‌ மற்றும்‌ 12-ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ ஏறப்ளிக்கப்பட்டதாக கருதப்படும்‌ நாளினை விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும்‌; V) குழுவின்‌ தலைவர்‌ விரும்புகிறவாறு, குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்‌ குழுவின்‌ கூட்டம்‌ எதற்கும்‌ குழுவின்‌ உறுப்பினர்களாக இல்லாத தகுதிறமுள்ள அதிகார அமைப்புகளையோ வல்லுநர்களையோ, சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்தல்‌; மற்றும்‌ (Vi) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற அதிகாரங்களைச்‌ செலுத்துதல்‌ மற்றும்‌ அத்தகைய பிற செயற்‌ பணிகளைப்‌ புரிதல்‌. 22. குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளரக்‌ குழுவினை அமைத்தல்‌ மற்றும்‌ அதன்‌ அதிகாரங்களும்‌ செயற்‌ பணிகளும்‌. (1) அரசு, அறிவிக்கை வாயிலாக, தொழில்‌ ஆணையர்‌ மற்றும்‌ தொழில்‌ மற்றும்‌ வாணிக இயக்குநரைத்‌ தலைவராகவும்‌, தொழில்‌ மற்றும்‌ வணிக கூடுதல்‌ இயக்குநரை உறுப்பினர்‌ கூட்ட அமைப்பாளராகவும்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு, தகுதிறமுள்ள அதிகார அமைப்புகளிலிருந்து அத்தகைய பிற உறுப்பினர்களையும்‌ கொண்டு குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளரக்‌ குழு ஒன்றை அமைத்தல்‌ வேண்டும்‌. (2) குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளரக்‌ குழுவின்‌ உறுப்பினர்களாக இருக்கும்‌, தகுதிறமுள்ள அதிகார அமைப்புகள்‌ அனைத்து 19 கூட்டங்களுக்கும்‌ நேரடியாக வருகை தருதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவர்கள்‌ கூட்டத்திற்கு வருகை தர இயலாமல்‌ இருக்கும்‌ நேர்வில்‌, அவர்கள்‌, கூட்டத்தில்‌ உரிய முடிவு எடுப்பதற்கு எழுத்து வழி அதிகாரமளித்து பணிமூப்பு நிலையிலுள்ள அலுவலர்‌ ஒருவரை அனுப்பி வைக்கலாம்‌. (3) குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளரக்‌ குழுவானது பின்வரும்‌ அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ பின்வரும்‌ செயற்பணிகளைப்‌ புரிதலும்‌ வேண்டும்‌ அவையாவன:- 0) குழுவின்‌ தலைவர்‌ முடிவு செய்கிறவாறு அத்தகைய நேரத்திலும்‌ இடத்திலும்‌ கூடி வகுத்துரைக்கப்பட்ட நெறிமுறைகளின்படி அலுவல்‌ நடத்துதல்‌; (i) தகுதிறமுள்ள அதிகார அமைப்புகளால்‌ விண்ணப்பங்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை மறு ஆய்வு செய்து கண்காணித்தல்‌; (i) குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்‌ குழுவினால்‌ விண்ணப்பங்கள்‌ தீர்வு செய்யப்படுவதை மறு ஆய்வு செய்து கண்காணித்தல்‌; (iv) 24 மற்றும்‌ 25 ஆகிய பிரிவுகளின்படி வழக்குகளை நேர்வு செய்து முடிவு செய்தல்‌; () 26-ஆம்‌ பிரிவின்படி முடிவு செய்வதற்காக வழக்குகளை, குறிப்புரைகளுடனும்‌ தொடர்புடைய ஆவணங்களுடனும்‌ சேர்த்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியத்திற்கு அனுப்பி வைத்தல்‌; i) குழுவின்‌ தலைவர்‌ விரும்புகிறவாறு, குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளரக்‌ குழுவின்‌ கூட்டம்‌ எதற்கும்‌ குழுவின்‌ உறுப்பினர்களாக இல்லாத தகுதிறமுள்ள அதிகார அமைப்புகளையோ வல்லுநர்களையோ, சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்தல்‌; மற்றும்‌ ரி) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற அதிகாரங்களைச்‌ செலுத்துதல்‌ மற்றும்‌ அத்தகைய பிற செயற்பணிகளையப்‌ புரிதல்‌. 20 23. குறு, சிறு மற்றும்‌ நிறுவனங்கள்‌ முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியத்தை அமைத்தல்‌ மற்றும்‌ அதன்‌ அதிகாரங்களும்‌ செயற்‌ பணிகளும்‌.- (1) அரசு, அறிவிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசு, ஊரகத்‌ தொழில்‌ துறை அமைச்சரை தலைவராகவும்‌, தொழில்‌ ஆணையர்‌ மற்றும்‌ தொழில்‌ மற்றும்‌ வணிக இயக்குநரை உறுப்பினர்‌ கூட்ட அமைப்பாளராகவும்‌, மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற உறுப்பினர்களையும்‌ கொண்டு குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியம்‌ ஒண்றை அமைக்கலாம்‌. (2) குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியம்‌, பின்வரும்‌ அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ பின்வரும்‌ செயற்பணிகளைப்‌ புரிதலும்‌ வேண்டும்‌ அவையாவன:- (i) வாரியத்தின்‌ தலைவர்‌ முடிவு செய்கிறவாறு அத்தகைய நேரத்திலும்‌ இடத்திலும்‌ கூடி வகுத்துரைக்கப்பட்ட நெறிமுறையின்படி அலுவல்‌ நடத்துதல்‌; (i) குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்‌ குழு, குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளரக்‌ குழு மற்றும்‌ தகுதிறமுள்ள அதிகார அமைப்புகள்‌ ஆகியவற்றால்‌ விண்ணப்பங்கள்‌ தீர்வு செய்யப்படுவதை மறு ஆய்வு செய்து கண்காணித்தல்‌; 00 செயல்‌ அணுகுமுறைக்‌ கட்டளை வழங்குதல்‌ மற்றும்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்‌ குழு மற்றும்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளரக்‌ குழு ஆகியவற்றின்‌ செயற்‌ பணிகளைக்‌ கண்காணித்தல்‌; (iv) 26-ஆம்‌ பிரிவின்படி வழக்குகளை நேர்வு செய்து முடிவு செய்தல்‌; V) குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்‌ குழுவினாலோ அல்லது குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளரக்‌ குழுவினாலோ வைக்கப்படும்‌ முதலீட்டாளர்‌ இயல்விப்பு தொடர்புடைய பிற எழுவினா எதனையும்‌ மறு ஆய்வு செய்தல்‌; 21 (Vi) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற அதிகாரங்களைச்‌ செலுத்துதல்‌ மற்றும்‌ அத்தகைய பிற செயற்பணிகளையப்‌ புரிதல்‌. (3) 5-ஆம்‌ பிரிவின்‌ (1)ஆம்‌ உட்பிரிவின்படி அறிவிக்கப்படலாகும்‌ முதலீட்டு வரம்புகள்‌ வரை தொழில்களுக்கு அனுமதிகள்‌ வழங்குவதற்காக குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியத்தால்‌ பிறப்பிக்கப்படும்‌ ஆணைகள்‌, அறுதியானவையாகும்‌ மற்றும்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்‌ குழு, குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளரக்‌ குழு மற்றும்‌ தகுதிறமுள்ள அதிகார அமைப்புகள்‌ ஆகியவற்றைக்‌ கட்டுப்படுத்துவனவாகும்‌. 24. குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்‌ குழுவினால்‌ வழக்குகளை மறு ஆய்வு செய்தல்‌.-- (1) தற்போதைக்கு நடைமுறையிலுள்ள மாநில சட்டம்‌ எதிலும்‌ அடங்கியுள்ள எது எவ்வாறுயிருப்பினும்‌, குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றை ஒற்றைச்‌ சாளரக்‌ குழு, தானாகவோ அல்லது விண்ணப்பத்தின்‌ பேறிலோ தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனையும்‌ பரிசீலிக்கப்பட்டு தடை எதனையும்‌ நீக்குவதற்கு மறுக்கலாம்‌ அல்லது மாற்றமைவுகளுடன்‌ அதனை ஒப்பேற்பளிக்கலாம்‌ மற்றும்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்குழு அத்தகைய முடிவினை மாற்றுவதற்கு தகுமான காரணங்கள்‌ இருப்பதாக கருதுமேயானால்‌ அதனை குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்குழுவிற்கு முடிவு ஒன்றை எடுப்பதற்காக அத்தகை வழக்குடன்‌ குறிப்புரைகள்‌ மற்றும்‌ தொடர்புடைய மனுப்புதல்‌ வேண்டும்‌. ஆவணங்களை மேலனுப்புதல்‌ வே (2) குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்சாளர கண்காணிப்புக்குழுவானது குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்குழுவினரால்‌ சுட்டப்பட்ட வழக்குகள்‌ அனைத்தையும்‌ பரிசீலக்கப்பட்டு உரிய ஆணைகள்‌ வழங்குதல்‌ வேண்டும்‌. (3) குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்‌ குழுவினரால்‌ எடுக்கப்பட்ட முடிவானது, குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்‌ குழு மற்றும்‌ தகுதி வாய்ந்த அதிகார அமைப்புகள்‌ கட்டுப்பட்டதாக இருக்கும்‌. 22 25. குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்‌ குழுவினால்‌ வழக்குகளை மறு ஆய்வு செய்தல்‌.- அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள மாநில சட்டம்‌ எதிலும்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்குழு, தானகவோ சுட்டப்பட்டதன்‌ பேறிலோ ஏதொன்றிலுமோ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளரக்குழுவினரால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனையும்‌ பரிசீலிக்கலாம்‌ மற்றும்‌ தான்‌ பொருத்தமென கருதலாகும்‌ உரிய ஆணைகளை வழங்கலாம்‌. அத்தகைய ஆணைகள்‌ இறுதியானதாக இருக்கும்‌. 26. அப்போதைக்கு நடைமுறையிலுள்ள மாநில சட்டம்‌ எதிலும்‌ அடங்கியுள்ள கு எது எவ்வாறிருப்பினும்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ முதலீடு மேம்பாடு மற்றும்‌ கண்காணிப்பு வாரியம்‌ தானாகவோ சுட்டப்பட்டதன்‌ பேறிலோ ஏதொன்றிலோ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாநில ஒற்றைச்‌ சாளர குழு அல்லது குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ மாவட்ட ஒற்றைச்‌ சாளர கண்காணிப்புக்‌ குழுவினால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனையும்‌ பரிச்லனை செய்யலாம்‌ மற்றும்‌ தான்‌ பொருத்தமென கருதலாகும்‌ உரிய ஆணைகளை வழங்கலாம்‌. அத்தகைய ஆணைகள்‌ இறுதியானதாக இருக்கும்‌. அத்தியாயம்‌ -V பல்வகை 27. மேல்முறையீடு மற்றும்‌ சீராய்வு-- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பங்களைச்‌ செயற்படுத்துதல்முறை தொடர்பான அனைத்து குறைகளுக்கும்‌ முதல்‌ நேர்வில்‌ வகுத்துரைக்கப்பட்ட குறை தீர்ப்பு அதிகார அமைப்பினை வகுத்துரைக்கப்பட்ட கால அளவிற்குள்‌ நாடலாம்‌. (2) குறை தீர்க்கும்‌ அதிகர்ர அமைப்பு வகுத்துரைக்கப்பட்ட வழிமுறைகளை கையாண்ட பின்‌, மேல்‌ முறையீட்டினை ரத்து செய்யவோ அல்லது வகுத்துரைக்கப்பட்டவாறு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவோ, பிரிவு 29ன்‌ கீழ்‌ அபராதம்‌ விதிப்பதையும்‌ உள்ளடக்கி மேல்முறையீட்டினை வகுத்துரைக்கப்பட்ட கால அளவிற்குள்‌ இறுதி செய்யலாம்‌. 23 (3) குறை தீர்ப்பு அதிகார அமைப்பின்‌ எந்தவொரு ஆணையினால்‌ இடருற்ற நிறுவனமோ அல்லது தகுதிறமுள்ள அதிகார அமைப்பின்‌ அலுவலரோ அறிவிக்கை செய்யப்பட்ட குறைதீர்ப்பு சீராய்வு அதிகார அமைப்பிடம்‌ வகுத்துரைக்கப்பட்ட வகையிலும்‌ கால அளவிலும்‌ சீராய்வு மனு செய்யலாம்‌. (4) குறை சீராய்வு அதிகார அமைப்பு வகுத்துரைக்கப்பட்ட வழிமுறைகளை கையாண்ட பின்‌, சீராய்வு மனுவினை ரத்து செய்யவோ அல்லது வகுத்துரைக்கப்பட்டவாறு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவோ, பிரிவு 29-ன்‌ கீழ்‌ அபராதம்‌ விதிப்பதையும்‌ உள்ளடக்கி சீராய்வு மனுவினை வகுத்துரைக்கப்பட்ட கால அளவிற்குள்‌ இறுதி செய்யலாம்‌. 28. தவறுகளும்‌ மற்று அபராதங்களும்‌.- (1) ஒருங்கிணைப்பு முகமை அல்லது வேறு துறை அல்லது அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தற்சான்றிதழில்‌ நிபந்தனைகள்‌ மற்றும்‌ உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில்‌ தோல்வியுற்ற எந்தவொரு நிறுவனத்திற்கும்‌ அபராதம்‌ விதிக்கப்படலாம்‌. இது முதல்‌ தவறிற்காக பதினைந்து ஆயிரம்‌ ரூபாய்‌ வரையும்‌, இரண்டாவது அல்லது அடுத்தடுத்த தவறுகளுக்கு இருபத்தைந்தாயிரம்‌ ரூபாய்‌ வரையிலும்‌ விதிக்கப்படலாம்‌. இந்த அபராதம்‌ பொருந்தக்கூடிய பிற சட்டத்தின்‌ கீழ்‌ விதிக்கப்படும்‌ பிற அபராதங்களுக்கும்‌ கூடுதலாக இருக்கும்‌. (2) இச்சட்டத்தின்‌ கீழ்‌ ஒரு தவறு ஒரு நிறுவனத்தால்‌ இழைக்கப்படும்‌ போது, நிறுவனம்‌ மற்றும்‌ தவறு இழைக்கப்பட்ட நேரத்தில்‌ நிறுவனத்தில்‌ பொறுப்பில்‌ இருந்த நபரும்‌ தவறு இழைக்கப்பட்டதற்கு பொறுப்பாக இப்பிரிவின்‌ கீழ்‌ அபராதத்திற்கு உட்படலாம்‌. (3) உட்பிரிவு (2)-ல்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, இந்த சட்டத்தின்‌ கழ்‌ ஒரு தவறினை சம்மந்தப்பட்ட நிறுவனத்தின்‌ உரிமையாளரோ, நிர்வாக பங்குதாரரோ, எந்த இயக்குநரோ, மேலாளரோ, செயலாளரோ அல்லது வேறு எந்த அதிகாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர்‌ ஒப்புதலுடன்‌ அல்லது கண்டுங்காணாதிருந்து அத்தவறினை இழைக்கும்‌ போது, அத்தகைய உரிமையாளர்‌, நிர்வாக பங்குதாரர்‌, இயக்குனர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது வேறு எந்த அதிகாரியும்‌ அல்லது அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரரும்‌ அந்த தவறிற்காக தவறிழைத்தவராக கருதப்படுவார்‌ மற்றும்‌ இந்த பிரிவின்‌ கீழ்‌ தண்டிக்கப்பட வேண்டியவராவார்‌. 24 விளக்கம்‌:- இந்த பிரிவின்‌ நோக்கத்திற்காக. (வ "நிறுவனம்‌" என்பது எந்தவொரு பெருநிறுவன அமைப்பு மற்றும்‌ ஒரு நிறுவனம்‌ அல்லது தனிநபர்களின்‌ பிற சங்கத்தையோ உள்ளடக்குகிறது; மற்றும்‌ (b) "இயக்குநர்‌". ஒரு நிறுவனம்‌ தொடர்பாக, நிறுவனத்தின்‌ ஒரு பங்குதாரர்‌ என்று பொருள்‌. 29. வகை செய்யப்படாத அல்லது காலதாமதமான சேவைகளுக்கு அபராதம்‌ விதித்தல்‌.- (1) இந்த சட்டத்தின்‌ கீழ்‌ விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப பெற்றுள்ள ஒவ்வொரு விண்ணப்பத்தினை பரிசீலனை செய்ய ஒவ்வொரு தகுதிறமுள்ள அதிகார அமைப்பும்‌ ஒரு அதற்கென அமைக்கப்பட்ட அதிகாரியை அடையாளம்‌ காண வேண்டும்‌. (2) அனைத்து குறைகளும்‌ முதலில்‌ அறிவிக்கை செய்யப்பட்ட குறைத்ர்ப்பு அதிகார அமைப்பினால்‌ ஆய்வு செய்யப்பட்டு மற்றும்‌ தகுதிறமுள்ள அதிகார அமைப்பு அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரி போதுமான மற்றும்‌ நியாயமான காரணமின்றி கடமை சேவை மட்டங்களை சந்திக்க தவறிவிட்டார்‌ என்று கருதும்‌ நேர்வில்‌ இருபத்தைந்தாயிரம்‌ ரூபாய்க்கு மிகாமல்‌ அத்தகைய நியமிக்கப்பட்ட அதிகாரியின்‌ மீது விதிக்கலாம்‌. வரம்புரையாக: - தகுதிறமுள்ள அதிகார அமைப்பின்‌ பதவிபெயர்‌ குறிப்பிடப்பட்ட நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு அபாராதம்‌ எதுவும்‌ விதிப்பதற்கும்‌ முன்பு கேட்கப்படுவதற்கான தகுமான வாய்ப்பொன்று கொடுத்தல்‌ வேண்டும்‌. (3) உட்பிரிவு (2)-ன்‌ கீழ்‌ சுமத்தப்பட்ட எந்த அபராதமும்‌ விதிக்கப்படும்‌ விதத்தில்‌ சேகரிக்கப்பட்டு, அரசு அல்லது தகுதி வாய்ந்த அதிகாரியிடம்‌ பொருந்தக்கூடிய வேறு விதிகளுக்கு கூடுதலாக, சேவை வழங்குவதில்‌ ஏற்பாடு அல்லது தாமதமின்றி அதே வழக்கில்‌ ஒரு முறைக்கு மேல்‌ தகுதிறமுள்ள அதிகார அமைப்பின்‌ நியமிக்கப்பட்ட அதிகாரி மீது அபராதம்‌ விதிக்கப்பட மாட்டாது. வரம்புரையாக: வகை செய்யப்படாத அல்லது காலதாமதமான சேவைகளின்‌ ஒரே நேர்வுக்கு ஒரு முறைக்கு மேல்‌ தகுதிறமுள்ள அதிகார அலுவலக அமைப்பின்‌ பதவி பெயரிட்ட அலுவலருக்கு அபாரதம்‌ விதித்தலாகாது. 25 30. நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு.-- இந்தச்‌ சட்டத்தின்படியோ அல்லது இதன்படி செய்யப்பட்ட விதிகளின்படியோ, அந்தந்த குழுக்களின்‌ வழிகாட்டுதலின்படியோ, நல்லெண்ணத்தில்‌ பின்‌ தொடராதல்‌ வெளிக்கொண்டு செல்லவும்‌ அல்லது வெளிக்கொண்டு செல்ல கருத்தில்‌ கொண்டுள்ள, நல்லெண்ணத்தில்‌ செய்யப்பட்ட, செய்யப்பட்டதாக கருதப்பட்ட எதற்கும்‌ அத்தகைய குழுக்கள்‌ அல்லது அலுவலருக்கு எதிராக நிறுவனம்‌ மதிப்பிழப்பு கோரவோ அல்லது உரிமை வழக்கோ, குற்றவழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எவையும்‌ தொடுக்கப்படுதல்‌ கூடாது. 31. பிற சட்டங்களை மீதூர்ந்து இயங்கும்‌ செயல்‌.- வேறுவிதமாக வகை செய்யப்பட்டவாறல்லாமல்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ பொருட்பாடுகள்‌ அவற்றிற்கு முரணாக அப்போதைக்குச்‌ செல்லாற்றிலிலுள்ள பிற சட்டம்‌ எதன்‌ காரணமாகவும்‌ செல்திறம்‌ கொண்டிருக்கிற முறையாவணம்‌ எதிலும்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, மேலோங்கும்‌ செல்திறம்‌ உடையதாகும்‌. 32. இடர்பாடுகளை அகற்றுவதற்கான அதிகாரங்கள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ பொருட்பாடுகளைச்‌ செல்திறப்படுத்துவதில்‌ இடர்பாடு எதுவும்‌ எழுமாயின்‌, அரசாங்கம்‌ அந்த இடர்பாட்டை அகற்றுவதற்கு தேரை வயானது அல்லது உகந்தது என்று அதற்குத்‌ தோன்றுகிற இந்தச்‌ சட்டத்தின்‌ பொருட்பாடுகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய பொருட்பாடுகளை இயற்றலாம்‌ அல்லது பணிப்புரையை இடலாம்‌: வரம்புரையாக: அத்தகைய ஆணையை, இந்தச்‌ சட்டம்‌ நடைமுறைக்கு வந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள்‌ கழிவுற்ற பின்பு பிறப்பித்தல்‌ ஆகாது; 33. பணிப்பாணைகளை வழங்குவதற்கான அதிகாரம்‌.- அரசானது, இந்தச்‌ சட்டத்தில்‌ சொல்லப்பட்ட பொருண்மைகளின்‌ தேவையான அளவிற்கு அல்லது விரைந்து செயல்படுத்தும்‌ நோக்கத்திற்காக நேர்விற்கேற்ப உகந்த பொது அல்லது சிறப்பிப்பாணைகளை அல்லது பணிப்பாணைகளை வழங்கலாம்‌. அத்தகைய ஆணைகளை சம்பந்தப்பட்ட குழுக்கள்‌ பின்பற்றவும்‌ நடவடிக்கை மேற்கொள்ளவும்‌ வேண்டும்‌. 26 34. விதிகள்‌ செய்வதற்கான அதிகாரம்‌-- (1) அரசு, இந்தச்சட்டத்தின்‌ நோக்கங்கள்‌ அனைத்தையுமோ அல்லது அவற்றில்‌ எதையுமோ நிறைவேற்றுவதற்கு விதிகளை வகுக்கலாம்‌. (2) குறிப்பாகவும்‌, மேலே. கண்ட அதிகாரத்தின்‌ பொதுப்பாங்கிற்கு குந்தகமின்றியும்‌, விதிகளில்‌ வகுத்துரைக்கப்ப வேண்டிய பொருட்பாடு எதுவும்‌ அரசால்‌ விதிகளாக வகுக்கப்படலாம்‌. (3) (a) இந்தச்‌ சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அனைத்து விதிகளும்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படவேண்டும்‌ மற்றும்‌ அனைத்து விதிகளும்‌ குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ என வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, எந்நாளில்‌ அவை வெளியிடப்படுகின்றனவோ அந்த நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (௦) இந்தச்‌ சட்டத்தின்படி வெளியிடப்படும்‌ அறிவிக்கைகள்‌ அனைத்தும்‌ குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ என வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, எந்த நாளில்‌ அவை வெளியிடப்படுகின்றனவோ அந்த நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (4) இந்தச்‌ சட்டத்தின்படி உருவாக்கப்படும்‌ விதி அல்லது வெளியிடப்படும்‌ அறிவிக்கை அல்லது பிறப்பிக்கப்படும்‌ ஆணை ஒவ்வொன்றும்‌ அது உருவாக்கப்பட்டதற்கு அல்லது வெளியிடப்பட்டதற்குப்‌ பிண்னர்‌ கூடிய விரைவில்‌ சட்டமன்றப்‌ பேரவையின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்படும்‌ கூட்டத்தொடரோ அதற்கடுத்த கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர்‌, சட்டமன்றப்‌ பேரவை அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும்‌ மாறுதல்‌ எதையும்‌ செய்யுமாயின்‌ அல்லது அவ்விதி செய்யப்பவோ அல்லது அந்த அறிக்கை வெளியிடப்படவோ கூடாது என்று சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமாயின்‌ அவ்விதியோ அந்த அறிவிக்கையோ அதன்‌ பின்னர்‌ அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கே வராதுபோகும்‌, எனினும்‌, அத்தகைய மாற்றம்‌ அல்லது அழித்தறிவு எதுவும்‌, அவ்விதியின்‌ படியோ அந்த அறிவிக்கையின்படியோ அந்த ஆணையின்‌ படியோ முன்னரே செய்யப்பட்டுள்ள செயல்‌ ஏதோன்றின்‌ செல்லுத்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 27 35. நீக்கறவும்‌ காப்புரையும்‌.- (1) தமிழ்நாடு வணிக எளிதாக்குதல்‌ அவசரச்‌ சட்டம்‌, 2017 (தமிழ்நாடு அவசரச்‌ சட்டம்‌ 772017) ஈங்கிதனால்‌ நீக்கறவு செய்யப்படுகிறது. (2) அத்தகைய நீக்கறவு செய்யப்பட்டிருந்த போதிலும்‌, சொல்லப்பட்ட அவசரச்‌ சட்டத்தின்‌ படி செய்யப்பட்ட எதுவும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ படி எடுக்கப்பட்டதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌.

Rules, notifications and orders under this Act

Listed from India Code. Each opens there.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts