Tamil Nadu · 2009 · Act 4
Tamil Nadu Arunthathiyars (Special Reservation of seats in Educational Institutions including Private Educational Institutions and of appointments or posts in the services under the State within the Reservation for the Scheduled Castes) Act, 2009
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 2009-ஆம் ஆண்டு
மார்ச் திங்கள்: 9-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது; மற்றும் அது
பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:--
சட்ட எண் 4/2009
இம்மாநிலத்திறுள்ள தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி
நிலையங்களில் இடங்களை மற்றும் அரசின்கீழ் வருகின்ற பணிகளில்
நியமனங்களை அல்லது பதவிகளை பட்டியல் சாதியினருக்கான ஒதுக்கீடான.
பதினெட்டு சதனீகத்திற்குள்ளாக தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அருந்ததியர்களுக்கு
ஒதுக்கீடு செய்வதற்கு வகை செய்வதற்கானதொரு சட்டம்.
குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்களின் சமூக மற்றும் கல்வி
மேம்பாட்டிற்காக, இம்மாநிலத்திலுள்ள கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்த்துக்
கொள்வதிலும் அரசின்கீழ் வருகின்ற பணிகளுக்கான நியமனங்களிலும் ஒதுக்கீடு
செய்வதற்கான கொள்கை ஒன்று தமிழ்நாடு மாநிலத்தில் நெடுங்காலமாகவே
நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதாலும் ;
தமிழ்நாடு மாநிலமானது, சமுதாயத்தின் அடிநிலையில் உள்ள மக்களுக்கு இட
ஒதுக்கீடு வழங்குவதில் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கி வந்திருப்பதாலும், பின்:
தங்கிய சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கின்ற முதலாவது
அரசாணையானது 1921-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலத்தில்,
1927-ஆம் ஆண்டில் சமூகங்களுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது
என்பதாலும்;
பல ஆண்டுகளாக சமூக மற்றும் கல்வித் துறைகளில் பிற்பட்ட நிலையில் உழன்று
வந்துள்ள தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் பெருமளவு சதவீதத்தினர் மேற்சொன்ன இட
ஒதுக்கீடுக் கொள்கையின் பயன்களைத் துய்க்கத் தொடங்கியுள்ளதோடு அவர்கள் தங்கள்
நிலையினை மேம்படுத்திக் கொள்ளவும், உயர்ந்த வாழ்க்கைத் தரங்களை எய்தவும்
இயன்றுள்ளது என்பதாலும்;
1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கும் பட்டியல்
சாதிகளையும், பட்டியல் பழங்குடிகளையும் சேர்ந்தவர்களுக்கும் (கல்வி நிலையங்களில்
இடங்களையும் அரசின்கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை
ஒதுக்கீடு செய்தல்) சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 45/1994) தமிழ்நாடு சட்டப் பேரவையில்
நிறைவேற்றப்பட்டது என்பதாலும்;
[1]
2
1994-ஆம் ஆண்டு அரசமைப்பு இழுபத்து ஆறாம் திருத்தச்) சட்டத்தின் மூலம்
தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்களுக்கும், பட்டியல் சாதிகளையும், பட்டியல் பழங்குடிகளையும் சேர்ந்தவர்களுக்கும்
(கல்வி நிலையங்களில் இடங்களையும் அரசின்கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களை
அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 45/1994) என்பதான
மாநிலச் சட்டத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அதனை அரசமைப்பின்
31-8-எனும் உறுப்பின்கீழ் 15-ஆம் பட்டியலில் சேர்த்திருப்பதாலும்;
அரசமைப்பின் 14-ஆம் கூறின்படி சமமானவர்கள் சமமற்றவர்களுடன் சமமாகக் கருதி
நடத்தப்படுதல் இயலாது; மற்றும் வேறுபட்ட முறையில் நடத்துவதானது அது எய்த
விழையும் நோக்கத்துடன் பகுத்தறிவுக்கு உகந்த முறையிலான இணைப்பினைப்
பெற்றிருக்குமானால் வேற்றுமைப்படுத்தி பாகுபாடு செய்வதாகக் கூற இயலாது என்பதாலும்;
1951-ஆம் ஆண்டு அரசமைப்பு (முதலாம் திருத்தச்) சட்டமானது அரசமைப்பின்:
15-ஆம் உறுப்புக்கான ௫-ஆம் கூறினை அமைத்துக் குடிமக்களில் சமூக அளவில்
அல்லது கல்வி அளவில் பின் தங்கிய வகுப்பினரின் மேம்பாட்டிற்காக அல்லது பட்டியல்
சாதியினருக்காகவும் பட்டியல் பழங்குடியினருக்காகவும் தனி வகை முறைகளைச் செய்ய
இயல்விக்கிறது என்பதாலும்;
அரசமைப்பின் 30-ஆம் உறுப்பின் ()-ஆம் கூறில் சுட்டப்பட்ட சிறுபான்மை கல்வி
நிறுவனங்கள் அல்லாத அரசின் உதவி பெறுவதாயினும், பெறாதவையுமான தனியார் கல்வி
நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களுக்கு, குடி மக்களில் சமூக அல்லது
கல்வி நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் அல்லது பட்டியல் சாதியினரின் அல்லது
பட்டியல் பழங்குடிகளின் மாணவர் சேர்க்கை தொடர்பாக தனிவகைமுறைகள் எந்த அளவுக்குத்
தொடர்புடையதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவர்தம் மேம்பாட்டுக்காகச் சட்டத்தின்
வாயிலாக அத்தகைய தனி வகைமுறைகள் எவற்றையும் செய்வதற்கு, அரசமைப்பின்
15-ஆம் உறுப்புக்கான (-ஆம் கூறை அமைத்து, 2005-ஆம் ஆண்டு அரசமைப்பு
(தொண்ணூற்று மூன்றாம் திருத்தசி சட்டமானது இயல்விப்பதாலும்;
அரசமைப்பின் 15-ம் உறுப்பின் இ-ஆம் கூறின் காரணமாகவும் தமிழ்நாடு மாநிலத்தில்
பெரும்பான்மை மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக வேண்டி, குடிமக்களில்
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கும், பட்டியல் சாதிகளையும்,
பட்டியல் பழங்குடிகளையும் சேர்ந்த நபர்களுக்கும், அரசமைப்பின் 30-ஆம் உறுப்பின்,
()-ஆம் கூறில் சுட்டப்பட்ட இம்மாநிலத்திலுள்ள, சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள்.
அல்லாத பிற கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் தற்போதுள்ள அறுபத்து
ஒன்பது சதவீத இட ஒதுக்கீட்டினைத் தொடர்தல் வேண்டுமென கொள்கை முடிவொன்றை
எடுத்ததற்குப் பின்னர், 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,
பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கு (தனியார் கல்வி நிறுவனங்களில் இட
ஒதுக்கீடு செய்தல்) சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 12/2006) தமிழ்நாடு சட்டப்பேரவையில்
நிறைவேற்றப்பட்டுள்ளதூலும்;
அரசமைப்பின் 16-ஆம் உறுப்பின் (௫-ஆம் கூறானது, அரசின் கீழ்வரும் பணிகளில்
போதுமான அளவிற்குச் சார்பாற்றம் செய்யப்படாத குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட
வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய இயல்விக்கிறது என்பதாலும்;
அரசின் கீழ்வரும் பணிகளில் போதுமான அளவில் சார்பாற்றம் செய்யப்படவில்லையென:
அரசின் கருத்திலுள்ள பட்டியல் சாதிகளுக்கு அரசின் கீழ்வரும் பணிகளில் உள்ள பதவி
இடங்களின் வகை எதிலுமோ அல்லது வகைகள் எவற்றிலுமோ பதவி உயர்வும் அதனுடன்
இணைந்த பணிமூப்பு என்பதான பொருட்பாட்டில் ஒதுக்கீடு செய்வதற்காக வகைமுறை
ஏதேனும் செய்வதற்கு அரசமைப்பின் 16-ஆம் உறுப்பில் @A) எனும் கூறானது இயல்விக்கிறது
என்பதாலும்;
அரசமைப்பின் 38-ஆம் உறுப்பின் (௫-ஆம் கூறின்படி அரசானது, தேசிய வாழ்வின்:
நிறுவனங்கள் அனைத்திலும் சமுதாய, பொருளியியல், அரசியல் நீதி நிறைந்து நிலவுவதான
ஒரு சமுதாய முறையமைவினைப் பயனுற எய்திப் பாதுகாத்து, மக்களின் நலப்பாட்டை
வளர்த்திட அரிதின் முயலுதல் வேண்டும் என்பதாலும்;
3
அரசமைப்பின் 38-ஆம் உறுப்பின் () எனும் கூறின்படி அரசானது தனிமனிதர்களுக்கு
இடையே மட்டுமின்றி வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்ற அல்லது வெவ்வேறு வாழ்க்கைத்
தொழில்களில் ஈடுபட்டிருக்கின்ற மக்கள் பிரிவினருக்கிடையே குறிப்பாக, வருமானத்திலுள்ள
ஏற்றத் தாழ்வுகளை இயன்ற அளவு குறைப்பதற்கு அரிதின் முயல்வதோடு, அவர்களின்
சமுதாயப்படிநிலை, வள வசதிகள், வாய்ப்பு நலன்கள் ஆகியவற்றிலுள்ள ஏற்றத் தாழ்வுகளை:
அகற்றுவதற்கும் முனைந்து முயலுதல் வேண்டும் என்பதாலும்;
அரசமைப்பின் 39-ஆம் உறுப்பின் (5) எனும் கூறின்படி அரசானது குறிப்பாக
பொதுமக்கள் நலன்களுக்கு நனி சிறக்க உதவும் வகையில் சமுதாயத்தின் பொருள்
வளங்கள் மீதான உரிமையையும், கட்டுப்பாட்டினையும் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யும்
வகையில் தன் கொள்கையை நெறிப்படுத்துதல் வேண்டும் என்பதாலும்;
அரசமைப்பின் 39-ஆம் உறுப்பின் (6) எனும் கூறின்படி அரசானது குறிப்பாக
பொருளியியல் முறைமையின் செயல்பாட்டினால் செல்வ வளமும், உற்பத்திச் சாதனங்களும்
பொது நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ஒரு சிலரிடம் குவிந்து விடாமல்
இருப்பதனை உறுதி செய்வதற்காக அதன் கொள்கையை நெறிப்படுத்துதல் வேண்டும்.
என்பதாலும்;
உச்சநீதிமன்றத்தின் கருத்தில் “ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் அலுவல்கள்
தொடர்பாக பணியிடங்களுக்கும் பதவிகளுக்கும் நியமனம் செய்வதில் நிருவாகத் திறமையைப்
பேணுவதற்கும் ஒவ்வும் வகையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோரின்
கோருரிமைகளைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்” என விதிக்கிற 335-ஆம்
உறுப்பானது, “மக்களில் நலிந்த பிரிவினர் குறிப்பாக பட்டியல் சாதியினர், பட்டியல்
பழங்குடியினர் ஆகியோரின் கல்வி, பொருளியியல் நலன்களை அரசானது தனிப் பொறுப்புடன்:
வளர்த்தல் வேண்டும். மேலும் சமுதாய அநீதியிலிருந்தும் அனைத்து வகைப்பட்ட
சுரண்டல்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தல் வேண்டும்” என நெறிப்படுத்தும்
கோட்பாடாக) வகை செய்கிற 46-ஆம் உறுப்புடன் இணைந்து படிக்கப்படுதல் வேண்டும்
என்பதாலும்;
அரசமைப்பின் 341-ஆம் உறுப்பானது, மாநிலம் அல்லது ஒன்றியத்து ஆட்சிப்பரப்பு
தொடர்பாக பட்டியல் சாதிகளைக் கணக்கிட்டுப் பட்டியலிடுவதற்கும் அத்தகைய சாதிகளைப்
பொறுத்த அளவில் அறிவிக்கை ஒன்றை பிறப்பிக்கவும் குடியரசுத் தலைவருக்கு
அதிகாரமளிக்கிறது என்பதாலும்;
அரசமைப்பின் 15-ஆம் உறுப்பின் (@) மற்றும் இ ஆம் கூறுகளின்படியும் 16-ஆம்
உறுப்பின் @), @A) ஆகிய கூறுகளின்படியும் அமைந்த இட ஒதுக்கீடுகள் தொடர்பாக,
அருந்ததியர்கள், சமுதாயத்தின் சமூக மற்றும் கல்வி நிலைகளில் மிகவும் கீழ்ப்பட்ட
நிலையில் இருப்பதால் பட்டியல் சாதிகளுக்கு என வகை செய்யப்பட்ட இட
ஒதுக்கீட்டுக்குள்ளாக அருந்ததியர்களின் குழுவிற்கு, இட ஒதுக்கீடு செய்வதற்குத் தனி
வகைமுறை ஒன்றைச் செய்வதற்கு பரிசீலனை செய்யுமாறும், அவர்களின் நலன்களைப்
போதுமான அளவிற்குப் பாதுகாக்குமாறும் பல்வேறு அரசியல் கட்சிகளின் மற்றும் பட்டியல்
சாதிகளை சார்பாற்றம் செய்கின்ற சமூக அமைப்புகளின் சார்பாற்றுநர்கள் மாநில அரசைக்
கேட்டுக் கொண்டுள்ளதாலும்;
அருந்ததியர்களின்கீழ் வரும் சாதிகளின் பட்டியலையும், பட்டியல் சாதிகளுக்கு வகை
செய்யப்பட்டுள்ள ஒதுக்கீட்டிற்குள்ளாக அருந்ததியர்களின் மக்கள் தொகையின் அடிப்படையில்
அவர்களுக்கு வகை செய்யப்பட வேண்டிய இட ஒதுக்கீட்டின் சதவீதத்தினையும் விரிவாக
ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழுவானது,
இம்மாநிலத்தின் பட்டியல் சாதியினரின் மொத்த மக்கள் தொகையில் பதினாறு
சதவீதத்தினரைக் கொண்டு பட்டியல் சாதியினரின் கடைசி நிலையில் அருந்ததியர்கள்
இருக்கிறார்கள் என்றும் அவர்கள் சமூக அளவிலும் கல்வி அளவிலும் பிற்படுத்தப்பட்ட
நிலையில் இருக்கிறார்கள் எனவும் தமிழ்நாடு மாநிலத்தில் அவர்தம் மக்கள் தொகையின்
விகிதத்திற்கேற்ப அரசின் கீழ்வரும் பணிகளில் அவர்கள் போதுமான அளவில் சார்பாற்றம்
செய்யப்படவில்லை எனவும் மாநில அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது என்பதாலும்;
பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டுக்குள்ளாக கல்வி நிலையங்களில்
மாணவர்களை அனுமதிப்பதற்கான இடங்களையோ அல்லது அரசின் கீழ்வரும் பணிகளில்
நியமனங்களையோ அல்லது பதவி இடங்களையோ ஒதுக்கீடு செய்வதில் அருந்ததியர்களுக்கு
குறுந்தலைப்பு
அளாவுகை
மற்றும்
தொடக்கம்.
பொருள்
வரையறைகள்.
தனியார் கல்வி
நிலையங்கள்.
உள்ளடங்கலான
கல்வி
நிலையங்களில்
இட ஒதுக்கீடு
செய்தல்.
4
முன்னுரிமை தரப்படுதல் வேண்டுமென மேற்சொன்ன ஒரு நபர் குழுவானது பரிந்துரை
செய்துள்ளது; மற்றும் அருந்ததியர் என்னும் சொல்லானது அருந்ததியர்களை மட்டுமல்லாமல்
சக்கிலியன், மாதாரி, மடிகா, பகடை, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரா ஆகியோரையும்
உள்ளடக்கும் எனவும் கூட பரிந்துரை செய்துள்ளது என்பதாலும்;
மாநில அரசானது கவனமான பரிசீலனைக்குப் பின்னர், பட்டியல் சாதியினருக்கான:
இட ஒதுக்கீட்டுக்குள்ளாக கல்வி நிலையங்களில் மாணவர்களை அனுமதிப்பதற்கான
இடங்களையோ அல்லது அரசின் கீழ்வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவி
இடங்களையோ ஒதுக்கீடு செய்வதில் அருந்ததியர்களின் குழுவிற்கு முன்னுரிமை தருவதற்கு
வகை செய்வதற்கு மேற்சொன்ன ஒரு நபர் குழு செய்துள்ள பரிந்துரைகளை
ஏற்றுக்கொள்வதெனவும் அருந்ததியர்களின் குழுவில், அருந்ததியர், சக்கிலியன், மாதாரி,
மடிகா, பகடை, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரா ஆகியோரைக் கொண்டிருக்கிற சாதிகளை
வகைப்படுத்துவது எனவும் கொள்கை முடிவொன்றினை எடுத்துள்ளது என்பதாலும்;
இந்தியக் குடியரசின் அறுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1- () இந்தச் சட்டம், 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அருந்ததியர்கள் (தனியார்
கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் இடங்களை மற்றும் அரசின்:
கீழ்வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை பட்டியல் சாதியினருக்கான இட
ஒதுக்கீட்டிற்குள்ளாக தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிக்கக் கூடிய அத்தகைய
தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. இந்தச் சட்டத்தில் தறுவாய் பிறவாறு வேறு பொருள் குறித்தாலன்றி:-
(@ “அருந்ததியர்கள்” என்றால் அவ்வப்போது திருத்தப்பட்டவாறான, 1950-ஆம்
ஆண்டு அரசமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணையின் மூலமாக இந்திய அரசமைப்பின்:
341-ஆம் உறுப்பின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கை செய்யப்பட்டவாறான
76 பட்டியல் சாதிகளின் பட்டியலுக்குள்ளாக வருகின்ற அருந்ததியர், சக்கிலியன், மாதாரி,
மடிகா, பகடை, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரா ஆகிய சாதிகள் எனப் பொருள்படும்;
(8) “தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு” என்றால் 9-ஆம் பிரிவின்கீழ்
நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு எனப் பொருள்படும்;
(6) “கல்வி நிலையங்கள்” என்பது (இதன்பின்பு 1994 ஆம் ஆண்டு சட்டம் எனக்
குறிப்பிடப்படுவதான) 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல்
சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கல்வி நிலையங்களில் இடங்களை மற்றும்
அரசின் கீழ்வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல்)
சட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான அதே பொருளையே கொண்டிருத்தல்
வேண்டும்;
(0) “அரசு” என்றால் மாநில அரசு எனப் பொருள்படும்;
(8) “தனியார் கல்வி நிலையம்” என்பது (இதன் பின்பு 2006-ஆம் ஆண்டு
சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு (தனியார் கல்வி
நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான
அதே பொருளையே கொண்டிருத்தல் வேண்டும்;
(9 “பட்டியல் சாதிகள்” என்பது இந்திய அரசமைப்பின் 341-ஆம் உறுப்புடன்
இணைந்து படிக்கப்பட்ட 366(24) எனும் உறுப்பில் உள்ளவாறான அதே பொருளையே
கொண்டிருத்தல் வேண்டும்.
3. 1994-ஆம் ஆண்டு சட்டத்திலோ, 2006-ஆம் ஆண்டு சட்டத்திலோ அல்லது
அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதிலுமோ அல்லது நீதிமன்றம் அல்லது
பிற அதிகார அமைப்பு எதனின் தீர்ப்பு, தீர்பாணை அல்லது ஆணை எதிலுமோ என்ன
அடங்கியிருந்த போதிலும், பட்டியல் சாதிகளில் உள்ளடங்கிய அருந்ததியினரின் சமூக
தமிழ்நாடு
சட்டம்
45/1994.
தமிழ்நாடு
சட்டம்
12/2006.
5
மற்றும் கல்வி அளவிலான பின் தங்கிய நிலையினைக் கருத்தில் கொண்டு,
வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய முறையில் பட்டியல் சாதியினருக்கிடையே முன்னுரிமை
அடிப்படையில், தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில்
மாணவர் சேர்க்கைக்கான பாடப்பிரிவு அல்லது புலம் ஒவ்வொன்றிலும் ஆண்டொன்றுக்கு
அனுமதிக்கப்படும் மொத்த எண்ணிக்கையைப் பொறுத்த அளவில் இட ஒதுக்கீடானது
இடமிருப்பின், பட்டியல் சாதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் பதினாறு
சதவீதமானது அருந்ததியர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
4. 1994-ஆம் ஆண்டு சட்டத்திலோ, 2006-ஆம் ஆண்டு சட்டத்திலோ அல்லது
அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதிலுமோ அல்லது நீதிமன்றம் அல்லது
பிற அதிகார அமைப்பு எதனின், தீர்ப்பு, தீர்பாணை அல்லது ஆணை எதிலுமோ என்ன
அடங்கியிருந்த போதிலும், பட்டியல் சாதிகளில் உள்ளடங்கிய அருந்ததியினரின் சமூக
மற்றும் கல்வி அளவிலான பின் தங்கிய நிலையினைக் கருத்தில் கொண்டு,
வகுத்துரைக்கப்படக் கூடிய அத்தகைய முறையில் பட்டியல் சாதியினருக்கிடையே முன்னுரிமை
அடிப்படையில், அரசின்கீழ்வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை அதற்கு
இடமிருப்பின், பட்டியல் சாதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நியமனங்களில் அல்லது
இடங்களில் பதினாறு சதவீதமானது அருந்ததியர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
விளக்கம்: இந்த சட்டத்தின் நோக்கத்திற்காக, அரசின்கீழ் வருகின்ற பணி என்றால்:-
(i) அரசின்கீழ்;
(1) இம்மாநிலத்திலுள்ள சட்டமன்றத்தின்கீழ்;
0) உள்ளாட்சி அதிகார அமைப்பு எதனின் கீழும்;
(V) அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டிலுள்ள கழகம் அல்லது
நிறுமம் எதிலும்; அல்லது
(V) இம்மாநிலச் சட்டமன்றமானது, சட்டங்களை இயற்றுவதற்கு அதிகாரம்
பெற்றிருக்கிற பிற அதிகார அமைப்பு எதனின் கீழும், வருகின்ற பணிகளை உள்ளடக்கும்.
5. 1994-ஆம் ஆண்டு சட்டத்திலோ 2006-ஆம் ஆண்டு சட்டத்திலோ அல்லது
அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதிலுமோ அல்லது நீதிமன்றம் அல்லது
பிற அதிகார அமைப்பு எதனின், தீர்ப்பு, தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலுமோ என்ன
அடங்கியிருந்த போதிலும், அருந்ததியினரின் சமூக மற்றும் கல்வி அளவிலான பின்
தங்கிய நிலையினைக் கருத்தில் கொண்டு, அரசின் கீழ்வரும் பணிகளில் நியமனங்களில்
அல்லது பதவிகளில் அல்லது தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி
நிலையங்களில் செய்யப்படும் மாணவர் சேர்க்கையின் நேர்வில், முன்னுரிமை அடிப்படையில்
அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்குத் தேவைப்படும் சதவீதத்தினரை நிரப்பியதற்கு
பின்னரும், தகுதிவாய்ந்த அருந்ததியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்குமிடத்து,
அத்தகைய அதிகப்படியான எண்ணிக்கையில் அமைந்த அருந்ததியர்கள், அருந்ததியர்கள்:
அல்லாத பட்டியல் சாதியினருடன், அவர்களுக்கிடையில் அமைந்த தகுதியின் பேரிலான
இடைநிலையில் போட்டியிடுவதற்கு உரிமைத் தகுதியுடையவர்களாக வேண்டும்.
6. இந்தச் சட்டத்திலோ அல்லது 1994-ஆம் ஆண்டு சட்டத்திலோ 2006-ஆம்
ஆண்டு சட்டத்திலோ அல்லது அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதிலுமோ
அல்லது நீதிமன்றம் அல்லது பிற அதிகார அமைப்பு எதனின், தீர்ப்பு, தீர்ப்பாணை அல்லது
ஆணை எதிலுமோ என்ன அடங்கியிருந்த போதிலும், அருந்ததியினரின் சமூக மற்றும்
கல்வி அளவிலான பின் தங்கிய நிலையினைக் கருத்தில் கொண்டு, அருந்ததியர்களுக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள், நியமனங்கள் அல்லது பதவிகள், தகுதி வாய்ந்தவர்கள்
போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் நிரப்பப்படாமல் இருக்குமிடத்து, அருந்ததியருக்கான
காலி இடங்களை வைத்திருந்து வழங்குவது என்பது அல்லாமல் அருந்ததியர்கள் அல்லாத
பிற பட்டியல் சாதியினரால், நிரப்பப்பட வேண்டும்: மற்றும் பட்டியல் சாதியினருக்கான
மொத்த இட ஒதுக்கீடான பதினெட்டு சதவீதமானது பட்டியல் சாதியினரைக் கொண்டு
நிரப்புவதற்குட்பட்டு உள்ளபடியேயான காலியிடங்கள் ஏற்பட்ட அந்த ஆண்டிலேயே நிரப்பப்பட
வேண்டும், மற்றும் அருந்ததியருக்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமையானது பொதுவாகப்
பட்டியல் சாதியினருக்கான காலியிடங்களை வைத்திருந்து வழங்குதல் என்னும் தற்போதுள்ள
கொள்கையை எந்தவிதத்திலும் பாதித்தல் ஆகாது.
அரசின்கீழ்
வரும்
பணிகளில்
நியமனங்களை
அல்லது
பதவிகளை
ஒதுக்கீடு
செய்தல்.
முன்னுரிமை
என்பதாக
இல்லாத
இடங்களுக்கு.
அல்லது
பதவிகளுக்குப்
போட்டியிடும்
உரிமையானது
பாதிக்கப்
படுதல்
ஆகாது
எனல்.
பட்டியல்
சாதியினருக்-
கான
காலிபிபங்கள
வைத்திருந்து
வழங்கும்
உரிமையானது
பாதிக்கப்
படுதல்
ஆகாது
எனல்.
அடையாளச்
சான்றிதழ்.
ஒதுக்கீடானது
பாதிக்கப்படுதல்
ஆகாது
எனல்.
தகுதிவாய்ந்த
அதிகார
அமைப்பு.
பணிப்பாணை னன்ன.
அரசின்
அதிகாரம்.
தகுதிவாய்ந்த
அதிகார
அமைப்பானது
பொது
ஊழியராதல்..
நல்லெண்-
ணத்தில்
எடுக்கப்பட்ட
பாதுகாப்பு.
விதிகளைச்
செய்வதற்கான
அதிகாரம்.
6
7- இந்தச் சட்டத்தின்படி பொருள் வரையரை செய்யயப்பட்டவாறான அருந்ததியர்களைச்
சேர்ந்த உறுப்பினர் எனக் கோருகிற நபர் ஒருவர், தமது கோரிக்கைக்கு ஆதாரமாக,
அவ்வப்போது தமிழ்நாடு மாநிலத்திற்காக இந்தியக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கை
செய்யப்படும் 1950-ஆம் ஆண்டு அரசமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணையின்படி வழங்கப்பட்ட
சாதி அடையாள சான்றிதழை வைத்திருத்தல் வேண்டும்.
8. இந்தச் சட்டத்தின் 3, 4, 5 6 ஆகிய பிரிவுகளில் என்ன அடங்கியிருந்த
போதிலும், அருந்ததியர்களைச் சேர்ந்த மாணவர்கள் அல்லது உறுப்பினர்களின்
கோரிக்கைகளானவை, தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டிய ஒதுக்கீடு செய்யப்படாத
இடங்களுக்கு, நியமனங்களுக்கு அல்லது பதவிகளுக்குப் பரிசீலனை செய்யப்படுதல்
வேண்டும்; மற்றும் அருந்ததியர்களைச் சேர்ந்த மாணவர் அல்லது உறுப்பினர் ஒருவர்
தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுமிடத்து, அருந்ததியர்களுக்கென ஒதுக்கீடு
செய்யப்பட்ட இடங்கள், நியமனங்கள் அல்லது பதவிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுதல்
கூடாது.
9. () அரசு, அறிவிக்கையின் வாயிலாக, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலரின்:
படி நிலைக்குக் குறையாத அலுவலர் எவரையும் இந்தச் சட்டத்தின் மற்றும் தனியார் கல்வி
நிறுவனங்கள் தொடர்பான அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகளைச்
செயற்படுத்தும் நோக்கத்திற்காகத் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பாக நியமிக்கலாம்.
2 தகுதி வாய்ந்த அதிகார அமைப்பானது, வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய
அதிகாரங்களைச் செலுத்துதலும் அத்தகைய பணிகளை ஆற்றுதலும் வேண்டும்.
10. () அரசானது, ஆணையின் வாயிலாக, பொது நலனை முன்னிட்டு, அந்த
ஆணையில் குறித்துரைக்கப்பட்ட நேர்வு எதிலும் இந்தச் சட்டத்தின்படி தகுதிவாய்ந்த
அதிகார அமைப்பு விசாரணை ஒன்றைச் செய்வதற்கோ அல்லது உரிய நடவடிக்கைகளை
'மேற்கொள்வதற்கோ, பணிக்கலாம்; மற்றும் தகுதிவாய்ந்த அதிகார அமைப்பானது அதனால்
மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவைக் குறித்தோ அல்லது அதனால் மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைகளின் முடிவைக் குறித்தோ வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய கால
அளவிற்குள், அரசுக்கு அறிக்கை அனுப்புதல் வேண்டும்.
2 ௫-ஆம் உட்பிரிவின்படி தகுதிவாய்ந்த அதிகார அமைப்பிடமிருந்து அறிக்கை
பெறப்பட்டதன்பேரில், அரசானது, அது பொருத்தமெனக் கருதுகிற அத்தகைய
பணிப்பாணைகளைப் பிறப்பித்தல் வேண்டும், மற்றும் அத்தகைய பணிப்பாணையானது
இறுதியானதாகவும், கட்டுப்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும்.
11. 9-ஆம் பிரிவின்படி நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பானது, இந்தியத் தண்டனைச்
சட்டத்தின் 21-ஆம் பிரிவின் பொருளின்படி பொது ஊழியராகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
12. இந்தச் சட்டத்தின்படியோ அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதி அல்லது ஆணை:
எதன்படியோ, நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட செயல்
எதற்காகவும் தகுதிவாய்ந்த அதிகார அமைப்புக்கோ, அரசுக்கோ அல்லது அதன் அலுவலர்கள்
எவருக்குமோ, எதிராக உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை
எவையும் தொடுக்கப்படுதல் கூடாது.
13. () இந்த அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளைச்
செய்யலாம்.
@ @ இந் சட்த்தின்படி செய்பப்பட்ட விதிகள் தும் தமிற்நாடு அரசிதமில்
வெளியிடப்படுதல் வேண்டும்; மற்றும் ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வருதல்
வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டால் அன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட
நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(8) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் ஒரு
குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும் என வெளிப்படையாகத்
தெரிவிக்கப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
மையச் சட்டம்
XLV/1860
7
(8) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை
அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு கூடிய
விரைவில் சட்டமன்றப்பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு
வைக்கப்படும் கூட்டத்தொடரோ அல்லது அதற்கு அடுத்துவரும் கூட்டத்தொடரோ
(முடிவடைவதற்கு முன்பு அப்பேரவை அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை:
எதிலும் மாறுதல் எதனையும் செய்யுமாயின் அல்லது அப்பேரவை அந்த விதி, அறிவிக்கை:
அல்லது ஆணை செய்யப்படுதல் கூடாது அல்லது பிறப்பிக்கப்படுதல் கூடாது என்று முடிவு
செய்யுமாயின் அவ்விதி அல்லது அந்த அறிவிக்கை அல்லது அவ்வாணை அதற்குப்
பின்னர் அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல்
வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும்,
அத்தகைய மாறுதலோ, நீக்கமோ அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையின்படி
முன்னர் செய்யப்பட்ட எதனின் செல்லும் தன்மைக்கும் குந்தகம் இன்றி இருத்தல் வேண்டும்.
14. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும்
எழுமானால் அரசு, தமிழ்நாடு ஆசிதுழில் ஆணை ஒன்றை வெளியிடுவதன்மூலம் அந்த
இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையானதாகவோ அல்லது உகந்ததாகவோ தனக்குத்
தோன்றக்கூடிய இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய
வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரை: ஆனால், அத்தகைய ஆணை எதுவும் இந்தச் சட்டமானது
துமிற்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளைக் கொண்ட
கால அளவு ஒன்று முடிவடைந்ததற்குப் பின்னர் செய்யப்படுதல் கூடாது.
(ஆளுநரின் ஆணைப்படி
௪. தீனதயாளன்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(குமிழாக்கம்)
ச. சந்திரசேகரன்,
இயக்குநர்
தமிழ்ப் பிரிவு, சட்டத் துறை.
இடர்ப்பாடுகளை:
நீக்குவதற்கான
அதிகாரம்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.