Tamil Nadu · 2004 · Act 12

Tamil Nadu Agricultural Income-tax (Repeal) Act, 2004

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

2004 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ வருமான வரி (நக்கறவு) சட்டம்‌. தமிழ்நாடு சட்டம்‌ 122004. பிரிவுகளின்‌ அமைப்பு 1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌. 2. நீக்கறவும்‌ காப்புரையும்‌. 2004 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ வருமான வரி (நக்கறவு) சட்டம்‌. தமிழ்நாடு சட்டம்‌ 12/2004. [ஆகஸ்ட்‌ 5, 2004] 1955 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ வருமான வரிச்‌ சட்டத்தை ந்க்கறவு செய்வதற்கானதொரு சட்டம்‌. இந்திய குடியரசின்‌ ஐம்பத்தைந்தாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 2004 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ வருமான வரி (நீக்கறவு) சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது, 2004 ஏப்ரல்‌ 1 ஆம்‌ நாளன்று நடைமுறைக்கு வந்ததாகக்‌ கருதப்படும்‌. 2. நீக்கறவும்‌ காப்புரையும்‌. - (1) 1955 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ வருமான வரிச்‌ சட்டம்‌, (தமிழ்நாடு சட்டம்‌ V/1955) (இதன்பின்பு இதில்‌ நீக்கறவுச்‌ சட்டம்‌ எனக்‌ குறிப்பிடப்படுவதான) ஈங்கிதனால்‌ நீக்கறவு செய்யப்படுகிறது: வரம்புரையாக, அத்தகைய நீக்கறவானது- (ஐ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு முன்பு, செய்யப்பட்ட எதனையும்‌ அல்லது இழைக்கப்பட்ட ஏதேனும்‌ குற்றத்தையும்‌, அல்லது ஏதேனும்‌ அபராதம்‌ அல்லது தண்டத்தொகை அல்லது தொடங்கப்பட்ட ஏதேனும்‌ நடவடிக்கையையும்‌ பாதித்தல்‌ ஆகாது; அல்லது (b) நீக்கறவு நடைமுறைக்கு வரும்‌ நேரத்தில்‌, நடைமுறையில்‌ இல்லாத அல்லது இருக்கும்‌ எதையும்‌ புதுப்பித்தல்‌ ஆகாது; அல்லது (௦ நீக்கறவு செய்யப்பட்ட சட்டத்தின்‌ முந்தைய செயல்பாட்டை அல்லது அதன்கீழ்‌ முறையாக செய்யப்பட்ட அல்லது நேரிட்ட எதனையும்‌ பாதித்தல்‌ ஆகாது; அல்லது (0) நீக்கறவு செய்யப்பட்ட சட்டத்தின்கீழ்‌ பெறப்பட்ட, திரட்டப்பட்ட அல்லது ஏற்பட்ட எந்தவொரு உரிமை, சிறப்புரிமை, கடமை அல்லது பொறுப்பை பாதித்தல்‌ ஆகாது; அல்லது (e) நீக்கறவு செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட எந்தவொரு குற்றத்திற்கு ஏதேனும்‌ அபராதம்‌, தண்டத்தொகை, பற்றுகை அல்லது தண்டனை ஆகியவற்றைப்‌ பாதித்தல்‌ ஆகாது: அல்லது (0). மேற்கூறப்பட்டவாறான அத்தகைய உரிமை, சிறப்புரிமை, கடமை, பொறுப்பு, அபராதம்‌, தண்டத்தொகை, பற்றுகை அல்லது தண்டனை தொடர்பான விசாரணை, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வு எதனையும்‌ பாதித்தல்‌ ஆகாது; மற்றும்‌ அத்தகைய எந்தவொரு விசாரணையும்‌, சட்ட நடவடிக்கையும்‌ அல்லது தீர்வும்‌ தொடங்கப்படலாம்‌, தொடரப்படலாம்‌ அல்லது செயல்படுத்தப்படலாம்‌ மற்றும்‌ இந்த சட்டம்‌ நிறைவேற்றப்படாதது போல்‌ அத்தகைய அபராதம்‌, தண்டத்தொகை, பற்றுகை அல்லது தண்டனை விதிக்கப்படுதல்‌ ஆகாது. (2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும்‌- (ஐ நீக்கறவு செய்யப்பட்ட சட்டம்‌ மற்றும்‌ அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்‌. கீழ்‌ பெறத்தக்க அல்லது விதிக்கத்தக்க வேளாண்‌ வருமான வரி எதுவும்‌, இந்தச்‌ சட்டம்‌ தொடங்குவதற்கு முந்தைய காலஅளவிற்கு, நீக்கறவு செய்யப்பட்ட சட்டம்‌ மற்றும்‌ அதன்கீழ்‌ உருவாக்கப்பட்ட விதிகளின்கீழ்‌ வகைசெய்யப்பட்ட முறையில்‌ பெறப்படும்‌ அல்லது விதிக்கப்படும்‌ மற்றும்‌ வசூலிக்கப்படும்‌; (b) இச்சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியன்று, நீக்கறவு செய்யப்பட்ட சட்டத்தின்கீழ்‌, அதிகாரஅமைப்பு அல்லது அலுவலர்‌ எவரிடமும்‌ நிலுவையில்‌ உள்ள விண்ணப்பம்‌, மேன்முறையீடு, மறு ஆய்வு அல்லது பிற நடவடிக்கை எதுவும்‌, நீக்கறவு செய்யப்பட்ட சட்டத்தின்படியான அதிகாரங்களையும்‌ கடமைகளையும்‌ செலுத்துவதற்காக, அறிவிக்கை வாயிலாக அரசு அமர்த்தும்‌ 3 அதிகாரஅமைப்புக்கு அல்லது அலுவலருக்கு மாற்றப்பட்டுவிடும்‌. அத்தகைய அமர்த்தத்தின்‌ பேரில்‌, அவர்கள்‌ நீக்கறவு செய்யப்பட்ட சட்டத்தின்கீழ்‌, அதிகாரஅமைப்பு அல்லது அலுவலரின்‌ அனைத்து அதிகாரங்களையும்‌ கடமைகளையும்‌ செயல்படுத்த வேண்டும்‌; (௦) இச்சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியன்று, நீக்கறவு செய்யப்பட்ட சட்டத்தின்கீழ்‌, நியமிக்கப்பட்ட மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ முன்‌, முன்வைக்கப்பட்டு நிலுவையில்‌ உள்ள எந்தவொரு மேல்முறையிடும்‌, இந்தச்‌ சட்டம்‌ இயற்றப்படாதது போல்‌ அத்தகைய மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தால்‌ விசாரிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுதல்‌ வேண்டும்‌; (0) இச்சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதிக்கும்‌, இச்சட்டம்‌ வெளியிடப்பட்ட தேதிக்கும்‌ இடைப்பட்ட காலஅளவின்போது நீக்கறவு செய்யப்பட்ட சட்டத்தின்கீழ்‌, ஏதேனும்‌ அதிகார அமைப்பினால்‌ அல்லது அலுவலரினால்‌ பிறப்பிக்கப்பட்ட ஏதேனும்‌ ஆணையானது, இச்சட்டம்‌ நிறைவேற்றப்படாதிருந்தாற்போல்‌ நீக்கப்பட்ட சட்டத்தின்‌. வகைமுறைகளுக்கிணங்க செல்லுபடியாகும்‌ வகையில்‌ நிறைவேற்றப்பட்டதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts