Tamil Nadu · 1995 · Act 1
Rosewood Act 1994
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு கருங்காலிவகை
மரங்கள் (பாதுகாப்புச்) சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 171995)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Rosewood Trees (Conservation)
Act, 1994
(Tamil Nadu Act No.1 of 1995)
(as on 31" October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்,
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
1994ஆம் ஆண்டுதமிழ்நாடு கருங்காலி வகை மரங்கள்
(பாதுகாப்புச்) சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 11995)
பிரிவு பொருளடக்கம்
L குறுந்தலைப்பு, பரப்பெல்லை, தொடக்கம் மற்றும்
காலஅளவு.
2. பொருள்வரையறைகள்.
3. கருங்காலிவகை மரத்தைத் துண்டாக்குதல்
முதலானவற்றைத் தடைசெய்தல்.
4. கருங்காலிவகை மரத்தினை ஏற்றிச்செல்லுதல்,
விற்பனை செய்தல் அல்லது உடமையில்
வைத்திருத்தல் ஆகியவற்றைத் தடைசெய்தல்.
5. நுழைதல், ஆய்வுசெய்தல் முதலானவற்றிற்கான
அதிகாரம்.
குற்றச்செயல்களும் தண்டனைகளும்.
நிறுமங்களால் செய்யப்படும் குற்றச்செயல்கள்.
8. இந்தச் சட்டத்தின்படியான குற்றச்செயல்கள்,
பிடியாணையின்றி கைது செய்யப்படு வதற்குரிய
குற்றச்செயலாகக் கருதப்படுதல்.
9. குற்றவியல் நீதிமண்றத்தின் அதிகாரவரம்பு.
10. கருங்காலிவகை மரம் தொடர்பான குற்றச்செயல்
செய்யப்பட்டதற்கான அனுமானம்.
11. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
12. பிற சட்டங்கள், ஒப்பந்தங்கள் முதலானவற்றை
இந்தச் சட்டம் மேலோங்கி நிற்கும்.
13. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
14. ஆர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
1
1994ஆம் ஆண்டுதமிழ்நாடு கருங்காலிவகை மரங்கள்
(பாதுகாப்புச்) சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 1/1995
[தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது
1995ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 5ஆம் நாளன்று
குடியரசுத்தலைவரின் ஏற்பிசைவைப் பெற்று பொதுத்தகவலுக்காகத்
தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது!
இம்மாநிலத்தில் கருங்காலிவகை மரங்களைப்
பாதுகாப்பதற்காகவும், அது தொடர்பான அல்லது
அதற்கு உறுதுணையான அல்லது
இடைநிகழ்வான விவரங்களுக்கு
வகைசெய்வதற்கான ஒரு சட்டம்.
கருங்காலிவகை மரங்களின் நிலவர மதிப்பு
உயர்ந்துள்ளதன் காரணமாக தமிழ்நாட்டு வனக்காடுகளில்
உள்ள அம்மரங்கள் மிகப்பெரிய அளவில் வெட்டி
வீழ்த்தப்பட்டு, அகற்றப்பட்டு, ஏற்றிச்செல்லப்பட்டு,
விற்கப்படுவதனை முன்னிட்டு, அதன் இனவகைகளின்
மரபு அழிந்து வருவதன் விளைவாக அக்கருங்காலிவகை
மரங்களின் தொகை தமிழ்நாட்டு வனக்காடுகளில் குறைந்து
வருகின்றது என்பதாலும்;
கருங்காலிவகை மரமானது தென்னிந்தியாவில்,
அதுவும் குறிப்பாக, தமிழ்நாட்டுக் காட்டுப் பகுதிகளில்
பரவியுள்ள முக்கிய மர வகைகளில் ஒன்றாகும் என்பதாலும்;
கருங்காலிவகை மரமானது, இயற்கையாகவே வளருமே
அல்லாமல் உறுதியாக மறு இனப்பெருக்கத்திற்கு
இயலாததொரு அரிய இனவகையாகும் என்பதாலும்;
இம்மாநிலத்தில், கருங்காலிவகை. மரங்கள்
நிலைத்திருக்கின்ற போக்கு குறைந்து வருவதனை,
தற்போது இருந்து வருகின்ற சட்ட வகைமுறைகளின்படி
தடைசெய்தல் இயலாதிருக்கின்றது என்பதாலும்;
2
வனக்காடுகளில் தற்போது இருந்து வருகின்ற
கருங்காலிவகை மரங்களைப் பாதுகாப்பதற்காக மற்றும்
வனக்காடுகளின் மரபுரிமையினைப் பேணி வருகின்ற நலன்.
கருதி, இம்மாநிலத்தில், கருங்காலிவகை மரங்களைத்
துண்டித்தலையும், வெட்டி வீழ்த்துதலையும், ஏற்றிச்
செல்லுதலையும், விற்பனைச் செய்தலையும் மற்றும்
உடைமையில் வைத்திருத்தலையும் தடைடஸுசய்ய
வேண்டியது தேவையாகியுள்ளது என்பதாலும்;
இந்தியக் குடியரசின் நாற்பத்து ஐந்தாம் ஆண்டில்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால்
இயற்றப்பட்ட சட்டம் பின்வருமாறு:-
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை, தொடக்கம் மற்றும்.
காலஅளவு- (1) இந்தச் சட்டம், 1994ஆம் ஆண்டு
தமிழ்நாடு கருங்காலிவகை மரங்கள் (பாதுகாப்புச்) சட்டம்
என வழங்கப்படும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் பரவி
நிற்கும்.
(3) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல்
வேண்டும்; மற்றும் அது '[முப்பது ஆண்டுக்] காலஅளவிற்கு
நடைமுறையில் இருத்தல் வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தின் காலம் முடிவடைவதன்
பேரில், 1891ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுக் கூறுகள்.
சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 174891) பிரிவு இன் வகை:
முறைகள், இந்தச் சட்டம் தமிழ்நாடு சட்டமொன்றினால்
நீக்கறவு செய்யப்பட்டிருந்தாற்போன்று பொருந்துதல்
வேண்டும்.
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்,
தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
1. 12.02.2010ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழ் அறிவிக்கை:
எண். 38இன் மூலம் திருத்தம் செய்யப்பட்டது.
3
(1) "வனக்காடு" என்பது, மரங்கள், புதர்ச்செடிகள்
மற்றும் சாலைகள், பசும்புல் நிலத்தைக் கொண்டிருக்கின்ற
தரிசு அல்லது பொதுநோக்கு நிலம் மற்றும் பிறவகை நிலம்,
மற்றும் அறிவிக்கையொன்றின் வாயிலாக அரசால்
வனக்காடு என விளம்புகை செய்யப்பட்ட எதையும்
உள்ளடக்கும்.
விளக்கம்.- இந்தக் கூறின் நோக்கத்திற்காக, "பொது
நோக்கு நிலம்" என்பது-
() குளங்களின் மற்றும் நீர்வழங்கு வடிகால்,
உபரி அல்லது பாசன வாய்க்கால்களின்
படுகைகள் மற்றும் அணைக்கரைகள்;
(i) கிராம மக்களின் பொது பயன்பாட்டிற்காக
ஒதுக்கி வைக்கப்பட்ட களத்துமேடுகள்,
கால்நடைக் கொட்டில்கள், கிராம இட
எல்லைகள் மற்றும் பிற நிலங்கள்,
எனப் பொருள்படும்.
(2) "அரசு" என்பது, மாநில அரசு எனப் பொருள்படும்;
(3) "வகுத்துரைக்கப்பட்ட அதிகாரஅமைப்பு" என்பது,
இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக வகுத்துரைக்கப்பட்ட
அதிகாரஅமைப்பு என அறிவிக்கையின் வாயிலாக அரசால்
அதிகாரமளிக்கப் பெற்ற ஓர் அதிகாரஅமைப்பு, அலுவலர்
அல்லது நபர் எனப் பொருள்படும்;
(4) "கருங்காலிவகை மரம்" என்பது, கருமை சேர்ந்த
கருங்காலி மரம், இந்தியக் கருங்காலி மரம் மற்றும் மலபார்
கருமரம், அவற்றின் அடிக்கட்டைகள் மற்றும் புதர்ச்செடிகள்
சிறுகாட்டையும் உள்ளடக்குகின்றது; மற்றும்
கருங்காலிவகை மரங்கள் அவை வீழ்ந்தபோது அல்லது
அவை வெட்டி வீழ்த்தப்பட்டபோது உள்ள கருங்காலிவகை
மரங்களையும் மற்றும் எந்த நோக்கத்திற்காகவும் அல்லது
எந்த நோக்கமும் இன்றியும் துண்டு துண்டாக்கப்பட்டாலும்
இல்லையாயினும் அல்லது செதுக்கப்பட்டாலும்
4
இல்லையாயினும் அல்லது குடையப்பட்டாலும்
இல்லையாயினும் அந்தக் கருங்காலி மரம் அனைத்தையும்
உள்ளடக்கும்.
3. கருங்காலிவகை மரத்தைத் துண்டாக்குதல்
முதலானவற்றைத் தடைசெய்தல்.- அப்போதைக்கு
நடைமுறையில் உள்ள சட்டம் எதிலும் அல்லது வழக்கு
அல்லது வழக்காறு எதிலும், நீதிமன்றம் அல்லது பிற
அதிகாரஅமைப்பு எதனின் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது
ஆணை எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், நபர்
எவரும் வனக்காடு எதிலும் உள்ள கருங்காலிவகை மரம்
எதனையும் துண்டாக்கவோ, வெட்டி வீழ்த்தவோ,
பட்டைஅகற்றி வளையமிடவோ, தறிக்கவோ,
குத்திச்சாறுவடியவிடவோ, வேரோடு சாய்க்கவோ அல்லது
எரித்தழிக்கவோ அல்லது மற்றபடி சேதம் விளைவிக்கவோ
அல்லது அதன் நிலைத்தன்மைக்குப் பெரும்பாலும்.
இடருண்டாக்கக்கூடிய அல்லது அதன் வகையினங்கள்:
மரபழிந்து போகக்கூடிய செயல் எதனையும் செய்தல் கூடாது:
வரம்புரை: நிலைகுலைந்த அல்லது வீழ்ந்த
கருங்காலிவகை மரத்தினை வகுத்துரைக்கப்பட்ட
அதிகாரஅமைப்பின். முன்அனுமதியுடன்,
வகுத்துரைக்கப்படும் விதிகளுக்கிணங்கிய வகையில்
அகற்றலாம்.
4. கருங்காலிவகை மரத்தினை ஏற்றிச்செல்லுதல்,
விற்பனை செய்தல் அல்லது உடமையில் வைத்திருத்தல்
ஆகியவற்றைத் தடைசெய்தல்.- நபர் எவரும், பிரிவு 3 இன்:
வகைமுறைகளுக்கு முரணாக கொள்முதல் செய்யப்பட்ட
கருங்காலிவகை மரத்தினை எந்த அளவிலும் ஏற்றிச்
செல்லுதலோ விற்பனை செய்தலோ அல்லது தனது
உடைமையில் வைத்திருத்தலோ கூடாது.
5. நுழைதல், ஆய்வுசெய்தல் முதலானவற்றிற்காண
அதிகாரம்.- (1) மாவட்ட ஆட்சியர் அல்லது
இதன்பொருட்டு அரசு, ஆணையின் வாயிலாகக்
குறித்துரைக்கலாகும் அத்தகைய படிநிலைக்குக் குறையாத
வனத்துறை அலுவலர் எவரும்,
(@) பகலிலோ அல்லது இரவிலோ எந்தக்
காலத்திலும், இந்தச் சட்டத்தின்படி குற்றச் செயல் ஒன்று
புரியப்பட்டுள்ளதாகவோ அல்லது புரியப்படுவதாகவோ
நியாயப்படி ஐயம் கொள்ளப்பட்டிருக்கின்ற இடம் எதிலும்.
நுழைந்து ஆய்வு செய்யலாம்.
0) எந்தக் கருங்காலிவகை மரத்தினைப்
பொறுத்தமட்டில், இந்தச் சட்டத்தின் வகைமுறை
எதுவும் மீறப்பட்டுள்ளதாகவோ அல்லது மீறப்படுவதாகவோ
அல்லது மீறப்படவுள்ளதாகவோ நம்புவதற்குக்
காரணங்கொண்டிருந்தால், அந்தக் கருங்காலிவகை மரம்
அடைக்கப்பட்டு காணப்பட்டிருக்கின்ற சிப்பங்கள், மூடிகள்:
அல்லது கொள்கலங்களுடன் சேர்த்து அந்தக்
கருங்காலிவகை மரம் எதனையும் அல்லது அந்தக்
குற்றச்செயலினைப் புரிவதற்காகப் பயன்படுத்தப்பட்ட
கருவிகளையும் அல்லது ஆயுதங்களையும் அல்லது அந்தக்
கருங்காலிவகை மரங்களை ஏற்றிச் செல்வதற்குப்
பயன்படுத்தப்பட்ட மிருகங்கள், ஊர்திகள், கலங்கள்,
படகுகள் அல்லது வாகனங்களையும் கைப்பற்றி
அதன்பின்னர், அவ்வாறு கைப்பற்றப்பட்ட சிப்பங்கள்,
மூடிகள், கொள்கலங்கள், கருவிகள், ஆயுதங்கள்,
மிருகங்கள், ஊர்திகள், கலங்கள், படகுகள் அல்லது
செல்கலங்களை நீதிமன்றமொன்றில்
முன்னிலைப்படுத்துவதற்காக அவற்றைப் பெறுவதற்கான
மற்றும் அவ்வாறு முன்னிலைப்படுத்துவது இன்னும்
நிலுவையிலிருக்க அவற்றின். சேமக்காப்பிற்குத்
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம்.
(2). உட்பிரிவு (1)இன்படி அனைத்து
சோதனைகளும், 1973ஆம் ஆண்டு குற்றவியல்
விசாரணைமுறைத் தொகுப்புச்சட்டத்தின் (மையச்சட்டம்
6
2/1974) வகைமுறைகளுக்கிணங்கிய வகையில்
செய்யப்படுதல் வேண்டும்.
6. குற்றச்செயல்களும் தண்டனைகளும்.- (1) இந்தச்
சட்டத்தின் வகைமுறை எதையும் அல்லது அதன்படி
செய்யப்பட்ட விதி அல்லது ஆணை எதையும் மீறுகின்ற
நபர் எவரும் குற்றத்தீர்ப்பிண்பேரில், ஐந்து ஆண்டுகள் வரை
நீட்டிக்கப்படக்கூடிய காலஅளவிற்குச்
சிறைத்தண்டனையும் இருபதாயிரம் ரூபாய்க்கு
நீட்டிக்கப்படக்கூடிய பணத்தண்டனையும் விதித்து
தண்டிக்கப்படுதல் வேண்டும்:
வரம்புரை:
(@) முதலாம் குற்றச்செயலுக்கு விதிக்கப்படும்
சிறைத்தண்டனையின். காலஅளவு இரண்டு
ஆண்டுகளுக்குக் குறைவாக இருத்தல் கூடாது; மற்றும்
அவ்வாறு விதிக்கப்படும். பணத்தண்டனையானது
ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்குக் குறைவாக இருத்தல்
கூடாது;
(b) இரண்டாம் அல்லது அதற்குப் பிற்பட்ட
குற்றச்செயலுக்கு அவ்வாறு விதிக்கப்படும் சிறைத்
தண்டனைக் காலஅளவு மூன்று ஆண்டுகளுக்குக்
குறைவாக. இருத்தல் கூடாது; மற்றும் அவ்வாறு
விதிக்கப்படும் பணத்தண்டனையானது, பதினைந்து ஆயிரம்
ரூபாய்க்குக் குறைவாக இருத்தல் கூடாது .
(2) இந்தச் சட்டத்திற்கு எதிராக நபர் எவரும்
குற்றச்செயல் ஒன்றிற்காகக் குற்றத்தீர்ப்பு வழங்கப்
பட்டிருக்கும்போது, அக்குற்றச்செயலினை விசாரணை
செய்கின்ற நீதிமன்றமானது, எந்தக் கருங்காலி
வகை மரத்தினைப் பொறுத்தமட்டில் அக்குற்றச்செயல்
செய்யப்பட்டுள்ளதோ, அந்தக் கருங்காலிவகை
மரத்தினையும் மற்றும் மேற்சொல்லப்பட்ட
குற்றச்செயலினைப் புரிவதில் பயன்படுத்தப்பட்ட சிப்பம்,
மூடி, கொள்கலம், கருவி, ஆயுதம், விலங்கு, ஊர்தி, கலம்,
7
படகு அல்லது செல்கலம் எதையும் பறிமுதல்
செய்துகொள்ளலாம் என அரசுக்கு ஆணை பிறப்பிக்கலாம்.
மற்றும் அவ்வாறு செய்யப்படும் பறிமுதலானது, அத்தகைய
குற்றச்செயலுக்கு வழங்கப்படும் பிற தண்டனை எதற்கும்
கூடுதலாகச் சேர்த்து இருத்தல் வேண்டும்.
7. நிறுமங்களால் செய்யப்படும் குற்றச்செயல்கள்.- (1)
இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றச் செயல்
ஒன்று ஒரு நிறுமத்தால் செய்யப்பட்டுள்ளபோது, அந்தக்
குற்றச்செயல் செய்யப்பட்ட காலத்தின்போது அந்நிறுமத்தின்
பொறுப்பினை கவனித்து வந்திருக்கக்கூடிய மற்றும்
அந்நிறுமம் தொழில் நடத்துவதற்குப் பொறுப்பேற்றிருந்த
ஒவ்வொரு நபரும் அந்நிறுமத்தோடு சேர்ந்து
அக்குற்றச்செயலினைச் செய்துள்ள குற்றவாளிகளாகக்
கருதப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து
அதற்கிணங்கிய வகையில் தண்டிக்கப்படுவதற்குக்
பொறுப்புடையவர் ஆவர்:
வரம்புரை: இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும்,
அத்தகைய நபர் எவரும், தனக்குத் தெரியாமல்
அக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளது என்றோ அத்தகைய
குற்றச்செயல் செய்யப்படுவதைத் தடுப்பதற்காக உரிய
அனைத்து முயற்சியினையும் செலுத்தினார் என்றோ அவர்
மெய்பிப்பாரானால் அவரை தண்டனை எதற்கும்
பொறுப்புடையவராக ஆக்காது.
(2) உட்பிரிவு (1)இல் என்ன
அடங்கியிருந்தபோதிலும், இந்தச் சட்டத்தின்படி
குற்றச்செயல் எதுவும் ஒரு நிறுமத்தால் செய்யப்பட்டிருந்து,
அக்குற்றச்செயலானது. அந்த நிறுமத்தின் இயக்குநர்,
மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின்.
இசைவுடனோ அல்லது அவரது மறைமுக ஆதரவுடனோ
செய்யப்பட்டுள்ளது என்று மெய்ப்பிக்கப்படுகிண்றபோது,
அந்த இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற
அலுவலர் அக்குற்றச்செயலினைச் செய்துள்ள
8
குற்றவாளியாகக் கருதப்பட்டு அவருக்கு எதிராக
நடவடிக்கை எடுத்து அதற்கிணங்கிய வகையில்
தண்டிக்கப்படுவதற்குக் பொறுப்புடையவர் ஆவர்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,-
(a) "நிறுமம்" என்பது, கூட்டாண்மை அமைப்பு
எதுவும் எனப் பொருள்படும் மற்றும் அது, நிறுவகம் அல்லது
தனிநபர்களின் பிற கூட்டமைப்பினையும் உள்ளடக்கும்;
மற்றும்
(b) நிறுவகமொன்றின் தொடர்பாக "இயக்குநர்"
என்பது, அந்நிறுவகத்தின் ஒரு கூட்டாளி எனப்
பொருள்படும்.
8. இந்தச் சட்டத்தின்படியான குற்றச்செயல்கள்.
பிடியாணையின்றி கைது செய்யப்படுவதற்குரிய
குற்றச்செயலாகக் கருதப்படுதல்.- (1) இந்தச் சட்டத்தின்படி
தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல் எதுவும், 1973ஆம்
ஆண்டு குற்றவழக்கு விசாரணைமுறைத் தொகுப்புச்
சட்டத்தின் (மையச் சட்டம் 271974)
பொருள்வரையறைக்குட்பட்டு பிடியாணையின்றி கைது
செய்யப்படுவதற்குரிய குற்றச்செயலாகும்.
(2) நீதிமன்றம் எதுவும் வகுத்துரைக்கப்பட்ட
அதிகாரஅமைப்பால் அல்லது இதன் பொருட்டு
பொதுவாகவோ அல்லது தனியாகவோ அரசால்
அதிகாரமளிக்கப்பெற்ற ஓர் அலுவலரால் எழுத்துவடிவில்
முறையீடு ஒன்று செய்துகொள்ளப்பட்டால் தவிர, இந்தச்
சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல் எதையும்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
9. குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரவரம்பு.- (1)
பெருநகர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஒருவரின் அல்லது
முதல் வகுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் ஒருவரின்
படிநிலைக்குக் குறைவான நீதிமன்றம் எதுவும், இந்தச்
9
சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல்
எதனையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
(2) 1973ஆம் ஆண்டு குற்றவழக்கு விசாரணை
முறைத் தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் 271974)
பிரிவு 29இல் என்ன அடங்கியிருந்தபோதிலும், பெருநகர்
குற்றவியல் நடுவரானவர் அல்லது முதல் வகுப்பு குற்றவியல்
நீதித்துறை நடுவரானவர் இந்தச் சட்டத்தின்படி
தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல் எதனையும் சட்டப்படி
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
10. கருங்காலிவகை மரம் தொடர்பான குற்றச்செயல்
செய்யப்பட்டதற்கான அனுமானம். கருங்காலிவகை மரம்
எதனின் தொடர்பாக இந்தச் சட்டத்தின்படி குற்றச்செயல்
எதனையும் செய்துள்ளதாக நபர் எவரும் குற்றம்
சாட்டப்படுகின்றபோது, குற்றம் அற்றவர் என்று
நிரூபிக்கப்படுகின்ற வரையில், அந்த நபர்
அக்குற்றச்செயலைச் செய்துள்ளதாகவே அனுமானிக்கப்
படுதல் வேண்டும்.
11. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.- இந்தச் சட்டத்தினையொட்டி
நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்ய
கருதப்பட்ட எதற்காகவும் நபர் எவருக்கு எதிராக உரிமை
வழக்கு, குற்றவழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை
எதுவும் தொடுக்கப்படுதல் கூடாது .
12. பிற சட்டங்கள், ஒப்பந்தங்கள் முதலானவற்றை
இந்தச் சட்டம் மேலோங்கி நிற்கும்.- அப்போதைக்கு
நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதிலும் அல்லது வழக்கு,
வழக்காறு அல்லது ஒப்பந்தம் எதிலும் அல்லது நீதிமன்றம்
அல்லது பிற அதிகாரஅமைப்பு எதனின் தீர்ப்புரை,
தீர்ப்பாணை அல்லது ஆணையில் முரணாக எதுவும்
அடங்கியிருந்தபோதிலும். இந்தச் சட்டத்தின்.
வகைமுறைகள் மேலோங்கிய செயல்விளைவு பெறுதல்
வேண்டும்.
10
13. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.-- (1)
அரசானது, இந்தச் சட்டத்தின். நோக்கங்களை
நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.
(2) (ஐ இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட
அனைத்து விதிகளும் தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை,
குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல்
வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப் பட்டாலன்றி,
அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட
அனைத்து அறிவிக்கைகளும், குறிப்பிட்டதொரு நாளில்
அவை நடைமுறைக்கு வருதல் வேண்டுமென
வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டாலன்றி, அவை
அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு
வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி
அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்
மற்றும் பிரிவு 14இன்படி செய்யப்பட்ட ஆணை
ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்டபின் கூடுமான விரைவில் சட்டமன்றப்
பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அவ்வாறு
வைக்கப்பட்ட கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னரோ
அல்லது அடுத்த கூட்டத்தொடரிலோ அந்த விதி,
அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் திருத்தம் எதையும்
சட்டமன்றப் பேரவை செய்யுமானால் அல்லது அந்த விதி,
அறிவிக்கை அல்லது ஆணை செய்யப்படுதல் ஆகாது
பிறப்பிக்கப்படுதல் ஆகாது என்று சட்டமன்றப் பேரவை
முடிவு செய்யுமானால், அதன் பின்பு, அந்த விதி,
அறிவிக்கை அல்லது ஆணையானது அவ்வாறு
திருத்திஅமைக்கப்பட்ட வடிவிலேயே நடைமுறைக்கு
வருதல் வேண்டும் அல்லது நிகழ்விற்கேற்ப, நடைமுறைக்கு
11
வராமலே போதல் வேண்டும்; எனினும், அவ்வாறான
திருத்தம் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதி, அறிவிக்கை
அல்லது ஆணையின்படி முன்னர் செய்யப்பட்ட எதனின்.
செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும் .
14. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குச் செயல்வடிவம்
கொடுப்பதில் இடர்ப்பாடு எதுவும் ஏற்படுமானால்,
அரசானது தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணை
ஒன்றின் வாயிலாக, அந்த இடர்ப்பாட்டினை
அகற்றுவதற்குத் தேவையானதென்றோ அல்லது
உகந்ததென்றோ தமக்கு தோன்றக்கூடிய இந்தச் சட்டத்தின்.
வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அந்த
வகைமுறைகளைச் செய்துகொள்ளலாம்:
வரம்புரை: இந்தச் சட்டத்தின் தொடக்க
தேதியிலிருந்து இரண்டாண்டுகள் முடிவடைந்த பின்பு
அத்தகைய ஆணை எதுவும் செய்யப்படுதல் கூடாது .