Tamil Nadu · 1978 · Act 28

Chennai Metropolitan Water Supply And Sewerage Act-1978

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டம்‌. (தமிழ்நாடு சட்ட எண்‌. 281978) பொருளடக்கம்‌. அத்தியாயம்‌ | முன்னுரை 1. குறுந்தலைப்பும்‌ தொடக்கமும்‌. 2. பொருள்வரையறைகள்‌. அத்தியாயம்‌ ॥ வாரியத்தை நிறுவுதலும்‌, அதன்‌ அதிகாரங்களும்‌ அலுவற்பணிகளும்‌ 3. வாரியத்தை நிறுவுதல்‌. 4. வாரியத்தை அமைத்தல்‌. 4-A. சிறப்புச்‌ சூழ்நிலைகளில்‌ வாரியத்திற்குத்‌ தலைவரை அமர்த்துதல்‌. 5. வாரியத்தின்‌ அலுவற்பணிகள்‌. 6. வாரியத்தின்‌ அதிகாரங்கள்‌. 7. தகவல்‌ கேட்டுப்பெறுவதற்கு வாரியத்தின்‌ அதிகாரம்‌. 8. வாரியத்திற்கு விற்பனை வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல்‌ மற்றும்‌ குறித்தசில வரிகளுக்காக அது அரசு போன்று பாவிக்கப்படுதல்‌. 9. நிலம்‌ முதலானவற்றைக்‌ கட்டாயமாகக்‌ கையகப்படுத்துதல்‌. அத்தியாயம்‌ ॥ வாரியத்தின்‌ இயக்குநர்கள்‌, குழுக்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌. 10. மேலாண்மை இயக்குநர்‌. 11. நிதி மற்றும்‌ பொறியியல்‌ இயக்குநர்கள்‌. 11-&. தலைவரின்‌ பதவிக்காலமும்‌ பணிநிபந்தனைகளும்‌. 12. முழுநேர இயக்குநர்களின்‌ பணி வரையீடுகளும்‌ நிபந்தனைகளும்‌. 12-A. தொழில்‌ நுட்ப இயக்குநர்‌. 13. அலுவல்‌ சார்பற்ற இயக்குநர்கள்‌. 14. வாரியத்தின்‌ அலுவல்‌ சார்பற்ற தலைவராக அல்லது இயக்குநராக அமர்த்தப்படுவதற்கான தகுதிகளை இழத்தல்‌. 15. அலுவல்‌ சார்பற்ற தலைவரையும்‌ இயக்குநர்களையும்‌ அகற்றுதல்‌. 16. இயக்குநர்கள்‌ பதவி விலகலும்‌ தாற்காலிகமாக வராதிருத்தலும்‌. 17. குழுக்கள்‌. 18. வாரியத்தின்‌ மற்றும்‌ குழுவின்‌ கூட்டங்கள்‌. 19. அலுவலர்களையும்‌, பிற பணியாளர்களையும்‌ அமர்த்துதல்‌. 20. உள்ளாட்சி அதிகார அமைப்புகளின்‌ பணியாளர்களை அமர்த்துதல்‌. 21. பொதுப்‌ பணி நிலைப்பிரிவு. 22. அதிகாரங்களின்‌ ஒப்படைவு. 23. குறித்தசில இயக்குநர்களுக்கான எஈட்டுறுதியும்‌, நடவடிக்கைகளுக்கான தடையும்‌. 24. குறைகள்‌, செயல்களைச்‌ செல்லாதனவாக்குதல்‌ ஆகாது. அத்தியாயம்‌ IV குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுப்‌ பணியமைப்புகளை நிறுவுதல்‌, மாற்றல்‌ செய்தல்‌ மற்றும்‌ உற்றமையச்‌ செய்தல்‌. 25. அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு முன்னர்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பு வாரியத்திற்கு தகவல்‌ அளித்தல்‌ வேண்டும்‌. 26. குடிநீர்‌ வழங்குதல்‌, மற்றும்‌ கழிவுநீரகற்றுப்‌ பணிகள்‌ வாரியத்திடம்‌ உற்றமைதல்‌. 27. நடைபெறுகின்ற பணிகளைத்‌ தொடர்வதற்கான வகைமுறை. 28. கடமைகள்‌ முதலானவற்றை வாரியத்திற்கு உரிமைமாற்றம்‌ செய்யும்‌ கடமை. 29. பூசல்களைத்‌ தீர்த்தல்‌. 30. நடைமுறையிலுள்ள வகைமுறைகள்‌, ஒப்பந்தங்கள்‌, கடமைப்பொறுப்புகள்‌, சட்ட நடவடிக்கைகள்‌ முதலானவை தொடர்தல்‌. அத்தியாயம்‌ V நிதி, கணக்குகள்‌ மற்றும்‌ தணிக்கை. 31. வாரியத்தின்‌ நிதியம்‌. 32. கடன்‌ வாங்கவும்‌, வழங்கவும்‌ வாரியத்திற்குள்ள அதிகாரம்‌. 33. கடனீட்டு ஆவணங்களின்‌ படிவம்‌, கையொப்பம்‌, பரிமாற்றம்‌, உரிமைமாற்றம்‌. மற்றும்‌ செல்லுந்தன்மை. 34. வாரியத்தால்‌ விதிக்கப்படத்தக்க வரிகள்‌. 35. [விட்டுவிடப்பட்டது.] 36. வரி விதிப்பின்‌ மதான வரையறை. 37. வரவு செலவுத்‌ திட்டங்கள்‌. 38. ஐந்தொகைக்‌ குறிப்பும்‌, வருமான மற்றும்‌ செலவினக்‌ கணக்கும்‌. 39. தணிக்கை 40. குறித்தசில திட்டமுறைகள்‌, திட்டங்கள்‌, பணியமைப்புகள்‌ ஆகியவற்றுக்கு அரசின்‌ முன்‌ ஒப்பளிப்பு. 40-&. குறித்தசில ஒப்பந்தங்களை அரசு அறுதி செய்தல்‌. 41. வசூலிக்க இயலாத தொகைகளைத்‌ தள்ளுபடி செய்வதற்கு அதிகாரம்‌. அத்தியாயம்‌ VI குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌. குடிநீர்‌ வழங்கீடு. 42. குடிநீர்‌ வழங்கும்‌ அமைப்புமுறை. 43. பொது அதிகார அமைப்புகளுக்கு நீர்‌ வழங்குதலும்‌, அதற்கான கட்டணமும்‌. 44. இந்தச்‌ சட்டத்தின்படி வழங்கப்படும்‌ குடிநீர்‌ கட்டணங்களும்‌, வாரியத்தின்‌ கடப்பாடின்‌ மையும்‌. 45. வீட்டு உபயோகத்திற்கான குடிநீர்‌ இணைப்புகள்‌. 46. வீட்டு இணைப்பு மற்றும்‌ பிற இணைப்புகளின்‌ மீதான கட்டுப்பாடு. 47. குடிநீர்‌ வழங்குவதற்கான கட்டணத்தைக்‌ கணக்கிடுதல்‌. 48. குடிநீர்‌ விணாவதைத்‌ தடுத்தல்‌. 49. குடிநீர்‌ இணைப்பைத்‌ துண்டிப்பதற்கு அதிகாரம்‌. 50. கிணறுகள்‌ முதலானவற்றின்‌ மீதான கட்டுப்பாடு. 51. குறித்த சில நேர்வுகளில்‌, நிலத்தடி நீரைப்‌ பயன்படுத்துதல்‌ முதலானவற்றின்‌ மீதான கட்டுப்பாடு. 52. குடிநீருக்காகப்‌ பயன்படுத்தப்படுகிற துப்புரவற்ற தனியார்‌ நீரோடை, நீரூற்று, குளம்‌, கிணறு முதலானவற்றைத்‌ தூய்மைப்படுத்துமாறு ஆணையிடுவதற்கு அதிகாரம்‌. 53. குடிநீர்ப்‌ பெருங்குழாய்களின்ம்து கட்டிடம்‌ கட்டுவதற்குத்‌ தடை. 54. தூய்மைக்கேடு முதலானவற்றைத்‌ தடுத்தல்‌. கழிவுநீரகற்றுதல்‌ 55. கழிவுநீரகற்று அமைப்புமுறை. 56. கழிவுநீர்க்கால்‌ இணைப்புகள்‌. 57. ஒருங்கிணைவாக கழிவுநீர்க்கால்கள்‌ அமைக்க அதிகாரம்‌. 58. தற்போதுள்ள தனியார்‌ கழிவுநீர்க்கால்களை மூடுவதற்கு அல்லது அதன்‌ பயன்பாட்டுக்கு வரம்பிடுவதற்கு அதிகாரம்‌. 59. வீட்டுக்‌ கழிவுநீர்க்கால்கள்‌, மலக்கழிப்பிடங்கள்‌, வடிகுட்டைகள்‌ ஆகியவற்றின்ம்து கட்டுப்பாடு. 60. குறித்தசில நேர்வுகளில்‌ பணியமைப்புகளை மூடிவிடுதல்‌, அகற்றுதல்‌ முதலியன. 61. கழிவுநீர்க்கால்கள்‌ முதலானவை ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கியிருத்தல்‌. 62. உரிமையாளர்‌, குடியிருப்பவர்‌ ஆகியோரின்‌ கடமைகள்‌. 63. குழாய்கள்‌, கழிவு நீர்க்கால்கள்‌ முதலானவற்றைக்‌ கொண்டு செல்வதற்கும்‌. பணியமைப்புகளைப்‌ பேணி வருவதற்கும்‌ வாரியத்தின்‌ அதிகாரம்‌. 64. சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்திற்கு அப்பாலுள்ள பணியமைப்பு. 65. குழாய்கள்‌, கழிவு நீர்க்கால்கள்‌ முதலியவற்றின்‌ பொருட்கள்‌ உற்றமைதலும்‌, அதற்கு வகை செய்ய வாரியத்தின்‌ அதிகாரமும்‌. 66. பணியமைப்புகளை நிறைவேற்றுதல்‌, அத்தும்றல்களை அகற்றுதல்‌, உரிமை கொண்டாடப்படாத மூலப்பொருட்களை விற்பனை செய்தல்‌ முதலியவற்றுக்கு அதிகாரம்‌. 67. நிலம்‌ முதலானவற்றில்‌ நுழைவதற்கும்‌, பெருங்குழாய்கள்‌ முதலானவற்றைப்‌ பொருத்திப்‌ பேணிவருவதற்குமான அதிகாரம்‌. 68. உரிமம்‌ பெற்ற குழாய்ப்‌ பணியாளராலேயே பணிகள்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 69. குறித்தசில செயல்களுக்குத்‌ தடை. அத்தியாயம்‌ VII தீர்ப்பாயம்‌, மேல்முறையீடுகள்‌ மற்றும்‌ மேலாய்வு. 70. தீர்ப்பாயத்தை அமைத்தல்‌. 71. மேல்முறையீடுகள்‌. 72. மேல்முறையீடுகள்‌ எப்போது கேட்கப்படலாம்‌ என்பதும்‌, கட்டண வீதங்கள்‌ முதலானவற்றின்‌ இறுதியான தன்மையும்‌. 73. சீராய்வு. அத்தியாயம்‌ VI பல்வகைப்பட்டவை. 74. வாரியத்திற்குக்‌ கொடுக்கப்படவேண்டிய தொகைகள்‌, நிலவருவாய்‌ நிலுவையைப்‌ போன்று தண்டல்‌ செய்யப்படுதல்‌. 75. வாரியத்திற்கு உதவுவதற்கு அதிகாரஅமைப்புகள்‌ முதலானவற்றின்‌ கடமைகள்‌. 76. இயக்குநர்‌ முதலானவர்கள்‌ பொது ஊழியர்களாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 77. குற்றங்களும்‌ தண்டனைகளும்‌. 78. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌. 78-&. தகுதியிழப்புகளை அகற்றுதல்‌. 78-B. வாரியத்திற்கு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்புகளுக்கு ஆணைகள்‌ அல்லது பணிப்புரைகள்‌ பிறப்பிப்பதற்கு அரசுக்குள்ள அதிகாரம்‌. 79. இடர்ப்பாடுகளை அகற்றுவதற்கு அதிகாரம்‌. 80. விதிகள்‌ செய்ய அதிகாரம்‌. 81. ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்ய அதிகாரம்‌. 82. 471971 தமிழ்நாடு சட்டத்தின்‌ குறித்தசில வகைமுறைகள்‌ பொருந்துதல்‌. 83. 114939 தமிழ்நாடு சட்டத்தின்‌ குறித்தசில வகைமுறைகள்‌ பொருந்துதல்‌. 84. பிற வேற்றுச்‌ சட்டங்களின்‌ விளைவு. 85. வேற்றுச்‌ சட்டதிருத்தங்களும்‌ காப்புரைகளும்‌. 86. எவ்வாறு சார்வு செய்வது. 87. சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடம்‌ விரிவாக்கப்படும்போது இச்சட்டம்‌ பொருந்துதல்‌. 88. விதிகளும்‌, அறிவிக்கைகளும்‌ சட்டமன்றத்தில்‌ வைக்கப்பட வேண்டும்‌. இணைப்புப்‌ பட்டியல்‌ 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டம்‌ தமிழ்நாடு சட்ட எண்‌. 28/1978 குறிப்பாக பொதுமக்கள்‌ நலத்தைப்‌ பாதுகாப்பதற்காக சென்னைப்‌ பெருநகரப்‌ பரப்பிடத்தில்‌, குடிநீர்வழங்குதல்‌, கழிவுநீரகற்றுதல்‌ ஆகிய பணிகளின்‌. வளர்ந்துவரும்‌ தேவைகளைத்‌ தனித்து கவனிப்பதற்காகவும்‌, அவற்றைத்‌ திட்டமிட்டு மேம்படுத்தி, உரியவாறு முறைப்படுத்துவதற்காகவும்‌, அதனுடன்‌ தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகள்‌ அனைத்திற்காகவும்‌ சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரியத்தை அமைப்பதற்கு வகைசெய்வதற்கானடதொரு சட்டம்‌. தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றத்தால்‌, இந்தியக்‌ குடியரசின்‌ இருபத்தொன்பதாம்‌ ஆண்டில்‌ பின்வருமாறு சட்டம்‌ இயற்றப்படுவதாகுக:- அத்தியாயம்‌ | முன்னுரை. 1. குறுந்தலைப்பும்‌ தொடக்கமும்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டம்‌ என்று வழங்கப்பெறும்‌. (2) இது அரசினால்‌ அறிவிக்கை வாயிலாகக்‌ குறிக்கப்படும்‌ தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வெவ்வேறு பரப்பிடங்களுக்கும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌. வெவ்வேறு வகைமுறைகளுக்கும்‌ வெவ்வேறு தேதிகள்‌ குறிக்கப்படலாம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌ இடத்திற்கேற்ப பொருள்‌ மாறுபட்டாலன்றி,- (8) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறை எதன்படியும்‌ செலுத்தப்படவேண்டிய அதிகாரம்‌ எதுவும்‌ அல்லது செய்யப்பட வேண்டிய அலுவற்பணி எதுவும்‌ தொடர்பாக, "அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு" என்பது, 22 ஆம்‌ பிரிவின்படி அத்தகைய அதிகாரம்‌ அல்லது அலுவற்பணி ஒப்படைவு செய்யப்பட்ட வாரியத்தின்‌ குழு, இயக்குநர்‌, அலுவலர்‌ அல்லது பிற பணியாளர்‌ எவரும்‌ என்று பொருள்படும்‌; (௦) "வாரியம்‌" என்பது, 2 ஆம்‌ பிரிவின்படி நிறுவப்பட்ட சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரியம்‌ என்று பொருள்படும்‌; (6) "இயக்குநர்‌! என்பது, வாரியத்தின்‌ இயக்குநர்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌, அதன்‌ தலைவரையும்‌, மேலாண்மை இயக்குநரையும்‌ உள்ளடக்கும்‌; (0) "வடிகால்‌" என்பது, சாக்கடை நீரை, குப்பை கூளத்தை, அருவருக்கத்தக்க பொருளை, தூய்மை கெட்ட நீரை, கழிவுநீரை அல்லது நிலத்தடி நீரைக்‌ கொண்டு செல்வதற்கான அல்லது தூய்மைப்படுத்துவதற்கான அல்லது அப்புறப்படுத்துவதற்கான ஒரு குடைவு வழியை, குழாயை, குழியை, கால்வாயை அல்லது வாய்க்காலை அல்லது ஏதேனும்‌ தொட்டியை, நீரடித்தொட்டியை, நச்சுத்தடை மலக்குழியை, வடிகுட்டையை அல்லது பிற சாதனத்தை உள்ளடக்கும்‌; மற்றும்‌, அத்தகைய வடிகாலுடன்‌ இணைக்கப்பட்டுள்ள மதகுப்பாலம்‌, பலகணி, சுரங்கவாயிற்குழி அல்லது குழாய்‌ அல்லது பிற கருவிகள்‌, அல்லது பொருத்திகள்‌ எதனையும்‌, சாக்கடைநீரை, குப்பை கூளத்தை, அல்லது அருவருக்கத்தக்க பொருளை ஏதேனும்‌ இடத்திலிருந்து எடுப்பதற்கான, சேகரிப்பதற்காண, வெளியேற்றுவதற்கான அல்லது அகற்றுவதற்கான வெளியேற்றும்‌ கருவி, காற்றழுத்தப்பெருங்குழாய்கள்‌, மூடப்பட்ட சாக்கடைந்ர்ப்‌ பெருங்குழாய்கள்‌, சிறப்பு எந்திரம்‌ அல்லது கருவியையுங்கூட உள்ளடக்கும்‌; ஆனால்‌, மழை நீரை வடியச்‌ செய்வதற்கென்றே சாலையோரமாகத்‌ தனியாக அமைக்கப்பட்டுள்ள பக்க வடிகாலுக்குச்‌ செல்வதற்காக அத்தகைய நீர்க்காலின்‌ அல்லது சாய்வு நீரோடையின்‌ பக்கமாகக்‌ கட்டப்பட்டுள்ள மழை அல்லது வெள்ளநீர்‌ வடிகாலை அல்லது ஒரு நீர்க்காலை உள்ளடக்காது; (e) "தற்போதுள்ள அதிகாரஅமைப்பு!, என்பது,- (i) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தின்‌ அல்லது அதன்‌ பகுதியின்மீது அதிகாரவரம்பு கொண்டிருக்கிற ஓர்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பையும்‌, (i) அரசையும்‌, உள்ளடக்கும்‌; (f) உள்ளாட்சி அதிகாரஅமைப்பு", என்பது,- (i) சென்னை மாநகராட்சி மன்றம்‌, அல்லது (i) 1920 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 71920) படி அமைக்கப்பட்டுள்ள ஒரு நகராட்சி மன்றம்‌, அல்லது 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ XXXV/1958) படி அமைக்கப்பட்டுள்ள ஓர்‌ ஊராட்சி ஒன்றிய மன்றம்‌ அல்லது ஓர்‌ ஊராட்சி, அல்லது (i) 1920 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ V/1920) படி அல்லது 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்‌ சட்டத்தின்‌ (குமிழ்நாடு சட்டம்‌ XXXV/1958) படி அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள ஏதேனும்‌ பிற சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள ஒரு நகரியக்குழு, அல்லது (iv) 1961 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 17/1961) 3 ஆம்‌ பிரிவின்படி அமைக்கப்பட்டுள்ள (இதன்‌ பின்னர்‌ தமிழ்நாடு மாநில விட்டுவசதி வாரியம்‌ என்று குறிப்பிடப்படும்‌) தமிழ்நாடு மாநில வீட்டுவசதி வாரியம்‌, அல்லது (V) 1970 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குடிநீர்வழங்குதல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 41971) 4 ஆம்‌ பிரிவின்படி அமைக்கப்பட்டுள்ள (இதன்‌ பின்னர்‌ பின்பு தமிழ்நாடு குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியம்‌ என்று குறிப்பிடப்படும்‌) தமிழ்நாடு குடிநீர்வழங்குதல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியம்‌, அல்லது (Vi) 1971ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குடிசைப்‌ பரப்பிடங்கள்‌ (மேம்பாடு மற்றும்‌ மாற்றம்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 114971) 34 ஆம்‌ பிரிவின்படி அமைக்கப்பட்டுள்ள (இதன்‌ பின்னர்‌ தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம்‌ என்று குறிப்பிடப்படும்‌) தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம்‌, அல்லது (Vi) 1971 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகர்‌ மற்றும்‌ ஊர்‌ அமைப்புச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 354972) 9-& பிரிவின்படி அமைக்கப்பட்டுள்ள (இதன்‌ பின்னர்‌ பின்பு சென்னைப்‌ பெருநகர்‌ மேம்பாட்டு அதிகாரஅமைப்பு என்று குறிப்பிடப்படும்‌) சென்னைப்‌ பெருநகர்‌ மேம்பாட்டு அதிகார அமைப்பு என்று பொருள்படும்‌; (ற "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்‌; (h) "சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடம்‌" என்பது, 1971 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகர்‌ மற்றும்‌ ஊர்‌ அமைப்புச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 354972) 2 ஆம்‌ பிரிவின்‌ (23a) கூறில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டுள்ளவாறான சென்னைப்‌ பெருநகர்‌ அமைப்புப்‌ பரப்பிடம்‌ என்று பொருள்படும்‌; () உள்ளாட்சி அதிகாரஅமைப்பு எதன்‌ தொடர்பாகவும்‌ "அறிவிக்கை செய்யப்பட்ட தேதி" என்பது, அந்த உள்ளாட்சி அதிகார அமைப்பைப்‌ பொறுத்து 26 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி அறிவிக்கை செய்யப்பட்ட தேதி என்று பொருள்படும்‌; (J) அனுபோகதாரர்‌" என்பது, () எந்த நிலத்தை அல்லது கட்டிடத்தை அல்லது அதன்‌ பகுதியைப்‌ பொறுத்து அந்தச்‌ சொல்‌ பயன்படுத்தப்படுகிறதோ அந்த நிலத்தின்‌ அல்லது கட்டிடத்தின்‌ அல்லது அதன்‌ பகுதியின்‌ வாடகையை அல்லது வாடகையின்‌ ஒரு பகுதியைச்‌ செலுத்திவருகிற, அல்லது அத்தகைய நிலத்தை அல்லது கட்டிடத்தை அல்லது அதன்‌ பகுதியை அனுபோகத்தில்‌ கொண்டிருப்பதன்‌ காரணமாக, சொந்தக்காரருக்கு இழப்பீட்டை அப்போதைக்குச்‌ செலுத்தி வருகிற அல்லது செலுத்துவதற்குப்‌ பொறுப்புடைய நபர்‌ எவரையும்‌, (1) வாடகையின்றி அனுபோகத்தில்‌ கொண்டிருக்கிறவரையும்‌, உள்ளடக்கும்‌; (k) "உரிமையாளர்‌" என்பது,- (ஐ தம்‌ சொந்த முறையிலோ, முகவர்‌, அறங்காவலர்‌, காப்பாளர்‌, மேலாளர்‌ அல்லது பாதுகாவலர்‌ என்ற முறையிலோ, ஏதேனும்‌ சமய அல்லது அறநோக்கத்திற்காகவோ, எந்தச்‌ சொத்து தொடர்பாக அந்தச்‌ சொல்‌ பயன்படுத்தப்படுகிறதோ அந்தச்‌ சொத்தின்‌ வாடகைகள்‌, ஆதாயங்கள்‌ எவற்றையும்‌ அப்போதைக்குப்‌ பெற்றுக்கொள்பவரையும்‌ அல்லது பெற்றுக்கொள்ள உரிமைகொண்டவரையும்‌, (௦) எந்த விலங்கு தொடர்பாக அந்தச்‌ சொல்‌ பயன்படுத்தப்படுகிறதோ அந்த விலங்கை அப்போதைக்குப்‌ பொறுப்பில்‌ கொண்டிருக்கிறவரையும்‌, உள்ளடக்கும்‌; ) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது, வாரியத்தினால்‌ செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்‌; () "சொத்துவரி" என்பது, சென்னைப்‌ பெருநகர்‌ பரப்பிடத்தின்‌ அல்லது அதன்‌ பகுதியின்‌ மீது அதிகாரவரம்பைக்‌ கொண்டிருக்கிற உள்ளாட்சி அதிகாரஅமைப்பு எதனாலும்‌ விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும்‌ சொத்து வரி அல்லது, நேர்வுக்கேற்ப, வீட்டு வரி என்று பொருள்படும்‌. (M) "ஒழுங்குமுறை விதிகள்‌" என்பது, இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதிகள்‌ என்று பொருள்படும்‌; n) கழிவுநீர்‌ என்பது, சிறுநீர்க்கழிப்பிடங்களில்‌, கழிப்பிடங்களில்‌, மலக்கழிப்பிடங்களில்‌, வடிகுட்டைகளில்‌ அல்லது வடிகால்களில்‌ உள்ள மலம்‌ மற்றும்‌ பிற கழிவுப்பொருள்கள்‌ என்றும்‌ சுரங்கவாயிற்குழிகள்‌, சமையலறைகள்‌, குளியல்‌ அறைகள்‌, கொட்டில்கள்‌, கால்நடைத்தொழுவங்கள்‌' ஆகியவற்றிலிருந்தும்‌ அவை போன்ற பிற இடங்களிலிருந்தும்‌ வரும்‌ மாசுபட்ட நீர்‌ என்றும்‌ பொருள்படும்‌; மற்றும்‌, தொழிற்சாலைக்‌ கழிவுப்‌ பொருள்களையும்‌ உள்ளடக்கும்‌; (௦) "கழிவுநீர்க்கால்‌" என்பது, கழிவுநீரை, குப்பைக்‌ கூளத்தை, அருவருக்கத்தக்க பொருளை, தூய்மைகெட்ட நீரை, வீணான நீரை அல்லது நிலத்தடி நீரைக்‌ கொண்டுசெல்வதற்கான ஏதேனும்‌ சாதனம்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌ வடிகாலையும்‌ உள்ளடக்கும்‌; () "கழிவு நீரகற்றுதல்‌" என்பது, கழிவுநீரைச்‌. சேமிப்பதற்கான தூய்மைப்படுத்துவதற்கான அல்லது அப்புறப்படுத்துவதற்கான ஓர்‌ அமைப்பு என்று பொருள்படும்‌; மற்றும்‌ கழிவு நீரகற்றுப்‌ பணியமைப்புகளையும்‌ உள்ளடக்கும்‌; (0) "கழிவு நீரகற்றுப்‌ பணியமைப்புகள்‌" என்பது, ஏதேனும்‌ கழிவு நீர்க்கால்வாய்‌, கொண்டு செல்லும்‌ குழாய்‌, சேமிக்கும்‌ அல்லது தூய்மைப்படுத்தும்‌ அல்லது அப்புறப்படுத்தும்‌ பிரிவுகள்‌, நீரேற்று நிலையம்‌, எந்திரம்‌, இயங்கும்‌ சேகரிப்பு ஊர்தி, வேறு பொறியமைப்பு, தனியார்‌ சொத்தாக இல்லாத அதை ஒட்டியுள்ள நிலம்‌ எதனையும்‌, கழிவுநீரைச்‌ சேமிப்பதற்கான, அல்லது தூய்மைப்படுத்துவற்கான ஏதேனும்‌ நிலம்‌, கட்டிடம்‌ அல்லது பிற பொருட்கள்‌ ஆகியவற்றையும்‌ உள்ளடக்கும்‌; (r) "தொழிற்சாலைக்‌ கழிவுப்பொருள்‌" என்பது, வேளாண்மை, தோட்டக்கலை உள்ளடங்கலாக வாணிகம்‌ அல்லது தொழிற்சாலை எதனையும்‌ செய்வதற்காகப்‌ பயன்படுத்தப்படும்‌ வளாகம்‌ எதிலும்‌ முழுவதுமாக அல்லது பகுதியாக உண்டாக்கப்படுகிற அல்லது எதிலிருந்தும்‌ வெளியேற்றப்படுகிற திரவ, வாயு அல்லது திடப்பொருள்‌ எதனையும்‌ உள்ளடக்கும்‌; ஆனால்‌ வீட்டுக்‌ கழிவுந்ரை உள்ளடக்காது; 10 (5) "தீர்ப்பாயம்‌" என்பது, 70 ஆம்‌ பிரிவின்படி அமைக்கப்பட்டு, அதிகாரவரம்பு கொண்டுள்ள தீர்ப்பாயம்‌ என்று பொருள்படும்‌; (1) "குடிநீர்‌ வழங்குதல்‌" என்பது நீர்ப்பாசனம்‌, புனல்‌ மின்னாக்கம்‌ இவை நீங்கலாக, சமூகத்தின்‌ தேவைகளை நிறைவு செய்வதற்காக, குடிப்பது மற்றும்‌ வீட்டுப்‌ பயன்பாடுகளுக்காக ஒரு தொழில்‌ தொடர்பான, பொழுதுபோக்கு தொடர்பான பொதுப்‌ பயன்பாடுகளுக்காக நீர்வழங்க வகைசெய்யும்‌ ஓர்‌ அமைப்புமுறை என்று பொருள்படும்‌; (ம) "குடிநீர்‌ பணியமைப்புகள்‌" என்பது, ஓடை, ஏரி, நீரூற்று, ஆறு அல்லது கால்வாய்‌, கிணறு, நீர்த்தேக்கம்‌, தொட்டி, குளம்‌, வெட்டிய கிணறு, துளைக்கிணறு, இவை இரண்டும்‌ சேர்ந்துள்ள கிணறு, குழாய்‌ கிணறு, வடிமுறைக்‌ கிணறுகள்‌, வடிகால்படிகள்‌ போன்ற எதனையும்‌, மூடிய அல்லது திறந்த வாய்க்கால்‌, உப்பை அகற்றும்‌ சாதனங்கள்‌, தூய்மைப்படுத்தும்‌ பிரிவுகள்‌, நீர்‌ வழங்குப்‌ பெருங்குழாய்‌, தரைப்பாலம்‌, மேம்பாலம்‌, இயந்திரம்‌, நீர்த்தொட்டி, நெடுநீர்க்குழாய்கள்‌, நிலைக்குழாய்‌ அல்லது கம்பம்‌, செலுத்துக்குழாய்‌ மற்றும்‌ பொறியமைப்பு ஆகியவற்றையும்‌, அவற்றை ஒட்டியுள்ள தனியார்‌ சொத்தாக இல்லாத நிலம்‌ எதனையும்‌, குடிநீர்‌ வழங்குவதற்கான அல்லது குடிநீர்‌ வழங்கும்‌ வாயில்களை பாதுகாப்பதற்கான அல்லது குடிநீரைத்‌ தூய்மைப்படுத்துவதற்கான நிலம்‌, கட்டிடம்‌ அல்லது பிற பொருட்கள்‌ எதனையும்‌ உள்ளடக்கும்‌; (V) "ஆண்டு" என்பது, நிதியாண்டு என்று பொருள்படும்‌. அத்தியாயம்‌ ॥ வாரியத்தை நிறுவுதலும்‌, அதன்‌ அதிகாரங்களும்‌ அலுவற்பணிகளும்‌. 3. வாரியத்தை நிறுவுதல்‌.- (1) அரசு, அறிவிக்கை வாயிலாக இதற்கெனக்‌ குறித்திடலாகும்‌ தேதியிலிருந்து, செண்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீர்‌ அகற்றுதல்‌ வாரியம்‌ என்ற பெயரில்‌ ஒரு வாரியம்‌ நிறுவப்படுதல்‌ வேண்டும்‌. (2) வாரியம்‌, தொடர்ந்த நிலைப்பாட்டையும்‌, பொதுவானதோர்‌ இலச்சினையையும்‌ கொண்ட ஒரு கூட்டமைப்பாக இருக்கும்‌; அது மேற்சொன்ன பெயரில்‌ வழக்கிடுதலும்‌ வழக்கிடப்படுதலும்‌ வேண்டும்‌. 4. வாரியத்தை அமைத்தல்‌. வாரியம்‌ பின்வரும்‌ இயக்குநர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌; (வ "குடிநீர்‌ வழங்குதல்‌ என்ற துறையினைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அமைச்சர்‌, இவர்‌ வாரியத்தின்‌ பதவி வழித்‌ தலைவராக இருப்பார்‌; (aa) "குடிநீர்‌ வழங்குதல்‌ என்ற துறையினைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலர்‌, பதவி வழி; (b) நிதித்துறையினைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலர்‌, பதவி வழி; 11 (6) 1971 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகர்‌ மற்றும்‌ ஊர்‌ அமைப்புச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 357972) 9-& பிரிவின்படி நிறுவப்பட்ட சென்னைப்‌ பெருநகர்‌ வளர்ச்சிக்‌ குழுமத்தின்‌ உறுப்பினர்‌-செயலர்‌, பதவிவழி; (d) சென்னை மாநகராட்சி மன்ற ஆணையர்‌, பதவி வழி; (00) தமிழ்நாடு குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரிய மேலாண்மை இயக்குநர்‌, பதவி வழி; (ஐ) அரசினால்‌ நியமிக்கப்படும்‌ அலுவல்‌ சார்பற்ற ஆறு இயக்குநர்கள்‌; அவர்களில்‌, (i) ஒருவர்‌, பெண்ணாக இருத்தல்‌ வேண்டும்‌; (i) ஒருவர்‌, பொதுமக்களின்‌ உரிமைகளை எடுத்துரைக்கும்‌ வகையினராக இருத்தல்‌ வேண்டும்‌; 0 ஒருவர்‌, அரசு அல்லது வணிகக்‌ கணக்குகளில்‌ அனுபவமுடையவராகவும்‌, 1949 ஆம்‌ ஆண்டு பட்டயக்‌ கணக்கர்கள்‌ சட்டத்தின்‌ (மைய சட்டம்‌ 3௦00171949) பொருளின்படி ஒரு பட்டயக்‌ கணக்கராக, அல்லது 1959 ஆம்‌ ஆண்டு விலை மற்றும்‌ உற்பத்திப்பொருட்கள்‌ மதிப்பீட்டுக்‌ கணக்கர்கள்‌. சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 231959) பொருளின்படி ஒரு விலை மதிப்பீட்டுக்‌ கணக்கராகத்‌ தகுதியுடையவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌; 0) ஒருவர்‌, மக்கள்‌ நல்வாழ்வு அல்லது குடிநீர்ப்‌ பணியமைப்பில்‌ அனுபவமுடைய ஒரு பொறியாளராக இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (V) இருவர்‌, சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ உள்ள பெரும்‌ தொழில்‌ அல்லது வாணிக நிறுவங்களின்‌ உரிமைகளை எடுத்துரைக்கும்‌ வகையினராக இருத்தல்‌ வேண்டும்‌. (f) அரசினால்‌ அமர்த்தப்படும்‌ பின்வரும்‌ மூன்று முழுநேர இயக்குநர்கள்‌;- (i) ஒரு மேலாண்மை இயக்குநர்‌; (i) ஒரு நிதி இயக்குநர்‌; மற்றும்‌ (71) ஒரு பொறியியல்‌ இயக்குநர்‌. (9 4-& பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி அமர்த்தப்படும்‌ வாரியத்தலைவர்‌; (h) வாரியத்தைக்‌ கலந்தாய்வு செய்து அரசால்‌ நியமிக்கப்படும்‌ தொழில்‌ நுட்ப இயக்குநர்‌; 4-A. சிறப்புச்‌ சூழ்நிலைகளில்‌ வாரியத்திற்குத்‌ தலைவரை அமர்த்துதல்‌.- (1) 4 ஆம்‌ பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, பொது நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு, அலுவல்‌ சார்பற்ற ஒருவரை அல்லது அரசுச்‌ செயலரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத மாநில அரசு அலுவலர்‌ ஒருவரை வாரியத்தின்‌ தலைவராக அமர்த்துவது பொருத்தமென அரசு கருதினால்‌, அரசு அறிவிக்கை வாயிலாக அவ்வாறு அமர்த்தலாம்‌. 12 5. வாரியத்தின்‌ அலுவற்பணிகள்‌.- (1) வாரியம்‌, பின்வரும்‌ அலுவற்பணிகள்‌ அனைத்தையும்‌ அல்லது அவற்றுள்‌ எதனையும்‌ புரிதல்‌ வேண்டும்‌; (a) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதலுக்கான அமைப்புமுறையின்‌ திட்டமிட்ட வளர்ச்சி, திறமையான செயற்பாடு, பேணிவருதல்‌, முறைப்படுத்துதல்‌ ஆகியவற்றை மேம்படுத்துதல்‌ அல்லது உறுதிப்படுத்துதல்‌; (b) தேவை பற்றிய மதிப்பீடுகள்‌, குடிநீர்‌ ஆதாரங்கள்‌ மற்றும்‌ பயண்பாடு பற்றிய ஆய்வுகள்‌, பிற தொடர்புற்ற பொருட்பாடுகள்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தின்‌ எதிர்கால குடிநீர்த்‌ தேவைகளையும்‌, கழிவுநீரகற்று வசதிகளையும்‌ நிறைவு செய்வதற்கான நீண்டகாலத்‌ திட்டங்களைத்‌ தயாரித்தலும்‌, அத்தகைய திட்டங்களைக்‌ கால இடைவெளிகளில்‌ சீராய்வு செய்து, திருத்தியமைத்து நாளது தேதி வரைக்கும்‌ உள்ளதாக்குதல்‌; (6) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ எதிர்கால குடிநீர்த்தேவைகளையும்‌, கழிவுநீரகற்று வசதிகளையும்‌ நிறைவு செய்யும்‌ நோக்கத்துடன்‌ மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்‌; (0) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தின்‌ குடிநீர்‌ மற்றும்‌ கழிவுநீரகற்று வசதிகளை அந்தப்‌ பரப்பிடத்தில்‌ குடியிருப்பவர்களுக்கு மிகச்‌ சிறப்பாகப்‌ பயனளிக்கும்‌ வகையில்‌ செயற்படச்‌ செய்தலும்‌, பேணிவருதலும்‌; (6) அரசு, அறிவிக்கை வாயிலாக வாரியத்திடம்‌ ஒப்படைக்கலாகும்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுதல்‌ தொடர்பான அலுவற்பணிகள்‌; ஆனால்‌, அத்தகைய அலுவற்பணிகள்‌, சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடம்‌ பொறுத்துச்‌ செய்யப்பட வேண்டிய எதனுடனும்‌ தொடர்புடையதாக இல்லாதிருக்குமாயின்‌, வாரியத்தின்‌ ஒருங்கிசைவுடன்‌ மட்டுமே ஒப்படைக்கப்படுதல்‌ வேண்டும்‌; (1) மேற்சொல்லப்பட்ட அலுவற்பணிகளில்‌ எதிலும்‌ குறையை நிறைவு செய்வதான, இடைவிளைவான அல்லது பின்விளைவான பிற பொருட்பாடு எதுவும்‌; மற்றும்‌ (9) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற ஏதேனும்‌ சட்டத்தாலோ அதன்‌ வழியாலோ வாரியத்திடம்‌ ஒப்படைக்கப்படலாகும்‌ பிற அலுவற்பணிகள்‌. (2) வாரியம்‌ தனது அலுவற்பணிகளை ஆற்றுகையில்‌, (ஐ மக்கள்‌ நல்வாழ்வு, பொதுமக்களின்‌ பாதுகாப்பு, வசதி ஆகியவற்றிற்கு உரிய கவனஞ்செலுத்துதல்‌ வேண்டும்‌; (௦) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்திற்கான குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்று அமைப்பு முறைகளுக்குத்‌ தொடர்புடைய திட்டமிடுதல்‌ மற்றும்‌ மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்‌ பற்றி சென்னைப்‌ பெருநகர்‌ வளர்ச்சிக்‌ குழுமத்துடன்‌ கலந்தாய்வு செய்தலும்‌, ஒத்துழைத்தலும்‌, குடிநீர்‌ வழங்கீட்டு அமைப்பு முறைகள்‌ அல்லது குடிநீர்‌ பணியமைப்புகள்‌ அல்லது கழிவுநீரகற்றுப்‌ பணியமைப்புகள்‌ அல்லது சாலைப்‌ பணியமைப்புகள்‌ அல்லது இவை 13 போன்ற பணியமைப்புகளுக்குத்‌ தொடர்புடைய பொருட்பாடுகள்‌ தொடர்பாக உள்ளாட்சி அதிகார அமைப்புக்கு முழு உதவியும்‌ ஒத்துழைப்பும்‌ நல்குதலும்‌ வேண்டும்‌; (2) பொது நலனை உள்ளடக்கிய கொள்கை பற்றிய வினாப்‌ பொருட்களின்மீது அரசினால்‌, அதற்கு அளிக்கப்படலாகும்‌ அறிவுறுத்தங்களைப்‌ பின்பற்றி அது நடத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ ஒரு வினாப்பொருள்‌ பொது நலனை உள்ளடக்கிய கொள்கை பற்றிய வினாப்பொருளா என்பது குறித்துக்‌ கருத்து வேறுபாடு எதுவும்‌ எழுகிற நேர்வில்‌, அதன்மீது அரசின்‌ முடிபே அறுதியானதாகும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, வாரியம்‌, அரசுத்துறை எதனையும்‌ அல்லது தற்போதுள்ள ஏதேனும்‌ பிற அதிகார அமைப்பையும்‌ பிறிது விலக்கி, சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்திலுள்ள குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்று அமைப்பு முறைகள்‌ பொறுத்து அனைத்து அதிகாரங்களையும்‌ செலுத்துதலும்‌, அனைத்து அலுவற்பணிகளையும்‌ புரிதலும்‌, கடமைகளை ஆற்றுதலும்‌ வேண்டும்‌. (4) வாரியம்‌, நிதிவகையில்‌ தற்சார்புடையதாக இருக்க முயற்சி எடுத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்த நோக்கத்திற்காக, தனது செலவினங்கள்‌, எதிர்காலக்‌ கடமைப்‌ பொறுப்புகள்‌, செலவுகள்‌ ஆகியவற்றுக்கான ஒதுக்குத்‌ தொகைகளை அல்லது அந்த வகைக்கான ஒதுக்கீடுகளை ஏற்பதற்கு அதன்‌ வருமானம்‌ போதுமானதாக இருக்கும்‌ வகையில்‌, அது தன்‌ அலுவல்களை நடத்திவருதல்‌ வேண்டும்‌. (5) வாரியம்‌, அரசு கோரலாகும்‌ விவர அறிக்கைகளையும்‌, தகவல்களையும்‌ அவ்வப்போது அரசுக்கு அளித்தல்‌ வேண்டும்‌. 6. வாறியத்தின்‌ அதிகாரங்கள்‌.- (1) வாரியம்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, இந்தச்‌ சட்டத்தின்படி தனது அலுவற்பணிகளையும்‌ கடமைகளையும்‌ நிறைவேற்றும்‌ நோக்கத்திற்குத்‌ தேவையான அல்லது உகந்ததான எதனையும்‌ செய்வதற்கு அதிகாரம்‌ உடையது ஆகும்‌. (2) முன்சென்ற வகைமுறையின்‌ பொதுப்பாங்கிற்குக்‌ குந்தகமின்றி, வாரியம்‌, பிண்வருவனவற்றிற்கு அதிகாரம்‌ உடையது ஆகும்‌:- () சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ அல்லது அதற்கான குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ தொடர்பாகத்‌ தற்போதுள்ள பொறுப்புகள்‌, அதிகாரங்கள்‌, கட்டுப்பாடுகள்‌, வசதிகள்‌, பணிகள்‌, நிருவாகம்‌ அனைத்தையும்‌ எடுத்துக்கொள்ளுதல்‌; (i) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ அல்லது அதற்காக குடிநீர்‌ வழங்குவதற்கும்‌, கழிவுநீரகற்றுவதற்கும்‌ தற்போதுள்ள வசதிகளை விரிவுபடுத்துதல்‌, பெருக்குதல்‌, அல்லது மேம்படுத்துதல்‌ மற்றும்‌ புதிய வசதிகளை ஏற்படுத்தி செயற்படுத்துதல்‌; 14 0) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ அல்லது அதற்காக (இயற்கை வாயில்‌ எதிலிருந்தும்‌ நீரை எடுப்பதும்‌, வீணாகும்‌ மாசுபட்ட நீரை அப்புறப்படுத்துதலும்‌ உள்ளடங்கலாக) குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதலுக்கான திட்டங்களைத்‌ தயார்‌ செய்தல்‌; 0) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ கிணறுகள்‌, குளங்கள்‌, குட்டைகள்‌ ஆகியவற்றை அமைத்தல்‌, பேணிவருதல்‌, பழுதுபார்த்தல்‌ ஆகியவற்றையும்‌, பொது அல்லது தனியார்‌ குழாய்க்‌ கிணறுகளைத்‌ தோண்டுவதையும்‌, முறைப்படுத்துதல்‌; (v) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ நிலத்தடி நீரை எடுப்பதையும்‌, பேணுவதையும்‌, பயன்படுத்துவதையும்‌ கட்டுப்படுத்துதல்‌; i) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தின்‌ நோக்கத்திற்காகப்‌ பயன்படுத்தப்படும்‌ குடிநீர்‌ வாயில்‌, நீர்வழி அல்லது வாய்க்கால்‌ உள்ளடங்கலான குடிநீர்‌ எதுவும்‌ தூய்மைக்கேடு அடைவதைத்‌ தடுத்தல்‌; (ரி) தொழிற்சாலைக்‌ கழிவுப்பொருள்களை வெளியேற்றுவதற்கு முன்பு அவற்றைத்‌ தூய்மைப்படுத்தும்‌ முறையை வகுத்துரைத்தல்‌, சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தின்‌ நோக்கத்திற்காகப்‌ பயன்படுத்தப்படும்‌ கழிவுநீர்க்கால்வாய்‌, ஆறு அல்லது பிற நீர்வாய்க்கால்‌ எதிலும்‌ அவற்றை வெளியேற்றுவதை முறைப்படுத்துதல்‌; (ரி ஆராய்ச்சி, பரிசோதனை, ஆய்வுகள்‌ ஆகியவற்றை நடத்துதல்‌, அந்த நோக்கத்திற்குத்‌ தேவையான அனைத்தையும்‌ செய்தல்‌; 9) எவருடனும்‌, நிறுவகம்‌ அல்லது நிறுவனம்‌ எதனுடனும்‌ ஒப்பந்தங்களை, உடன்பாடுகளை அல்லது ஏற்பாடுகளைச்‌ செய்துகொள்ளுதல்‌; (X) அசையும்‌ அல்லது அசையாச்‌ சொத்தினை ஈட்டுதல்‌, வைத்திருத்தல்‌, அவற்றிற்கு வகை செய்தல்‌; (0) தனது ஆண்டு கணக்குகளையும்‌, வரவு செலவுத்‌ திட்டங்களையும்‌ தயார்‌ செய்து, ஏற்றுக்கொள்ளுதல்‌; (0) இந்தச்‌ சட்டத்தின்படி அதிகாரமளிக்கப்பட்டுள்ள வரிகள்‌, வீதங்கள்‌, கட்டணங்கள்‌, செலவீடுகள்‌, மேற்கட்டணங்கள்‌, வாடகைகள்‌, செலவுகள்‌, செலவினங்கள்‌ ஆகியவற்றைத்‌ தீர்மானித்தல்‌, விதித்தல்‌ மற்றும்‌ தண்டல்‌ செய்தல்‌; 009 தனது உடைமைகளில்‌ எதனையும்‌ அடைமானம்‌, ஈடு அல்லது அடகு வைப்பதற்கான அதிகாரம்‌ உள்ளடங்கலாக, பணம்‌ கடன்‌ வாங்குதல்‌, கடனீட்டு ஆவணங்களை வழங்குதல்‌, தனது நிதியங்களை மேலாண்மை செய்தல்‌; (xiv) தான்‌ தேவையெனக்‌ கருதலாகும்‌ செலவினங்களைச்‌ செய்தல்‌, பெறு கடன்களையும்‌ முன்பணங்களையும்‌ வழங்குதல்‌, தான்‌ குறித்துரைக்கலாகும்‌. வரையுரைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரில்‌ முதலையும்‌ வட்டியையும்‌ மீளப்பெறுதல்‌; 15 (xv) இந்தச்‌ சட்டத்தில்‌ வகைமுறைகளை நிறைவேற்றும்‌ நோக்கத்திற்குத்‌ தேவையான அனைத்தையும்‌ செய்தல்‌. 7. தகவல்‌ கேட்டுப்‌ பெறுவதற்கு வாரியத்தின்‌ அதிகாரம்‌.- வாரியம்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை நிறைவேற்றும்‌ நோக்கத்திற்காக, குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்று அமைப்புமுறைகள்‌ தொடர்பாக நபர்‌ எவரிடமுள்ள தகவலை அளிக்குமாறு, அறிவிப்பு வாயிலாக அவரைக்‌ கோரலாம்‌, மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களை, மேம்படுத்தும்‌ ஆய்வுகளை, திட்டமுறைகளை அல்லது திட்டங்களைத்‌ தயார்‌ செய்வதற்கும்‌, கொள்கைகளை மேம்படுத்துவதற்கும்‌ உதவுவதற்காக, அத்தகைய பொருள்‌ குறித்த தகவல்களைச்‌ சேகரித்து, பரிமாற்றிக்‌ கொள்ளும்‌ ஒரு மையமாக அது செயற்படுதல்‌ வேண்டும்‌. 8. வாரியத்திற்கு விற்பனை வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல்‌ மற்றும்‌ குறித்தசில வரிகளுக்காக அது அரசு போன்று பாவிக்கப்படுதல்‌.- (1) வாரியத்தினால்‌ அளிக்கப்படும்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுப்‌ பணிகளைப்‌ பொறுத்து, அப்போதைக்கு நடைமுறையிலுள்ள விற்பனை வரி தொடர்பான ஏதேனும்‌ சட்டத்தின்படியான வரியிலிருந்து வாரியத்திற்கு விலக்களிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) மாநகராட்சி, நகராட்சி, நகரியம்‌, ஊராட்சி, அல்லது நகரமைப்பு அல்லது மேம்பாட்டு அதிகார அமைப்புக்குத்‌ தொடர்புடைய ஏதேனும்‌ சட்டத்தின்படி, வாரியமும்‌ அதன்‌ சொத்துகளும்‌, உடைமைகளும்‌, வரி, வீதம்‌, செலவிடு, மேல்வரி, கட்டணம்‌, மேம்பாட்டுவரி, அல்லது மேம்பாட்டுச்‌ செலவீடு எதற்கும்‌ உட்பட்டிருக்குமிடத்து, அத்தகைய வரிவிதிப்பு வீதம்‌ அல்லது தொகை, அரசுக்கு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பு எதற்கும்‌ சொந்தமான சொத்துகளுக்குப்‌ பொருந்தத்தக்கது போன்றே இருந்து வரும்‌. 9. நிலம்‌ முதலானவற்றைக்‌ கட்டாயமாகக்‌ கையகப்படுத்துதல்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, வாரியத்தினால்‌ கோரப்படும்‌ நிலம்‌ எதுவும்‌ அல்லது அதிலுள்ள பாத்தியதை எதுவும்‌, 1894 ஆம்‌ ஆண்டு நிலம்‌ கையகப்படுத்துதல்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 1/1894) பொருளின்படி ஒரு பொது நோக்கத்திற்காகத்‌ தேவைப்படுவதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ il வாரியத்தின்‌ இயக்குநர்கள்‌, குழுக்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌. 10. மேலாண்மை இயக்குநர்‌.- (1) மேலாண்மை இயக்குநர்‌, குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவு நீரகற்றுதல்‌ தொடர்பானவற்றில்‌ சிறப்பு அறிவையோ நடைமுறை அனுபவத்தையோ உடையவராக அல்லது நிருவாக விஷயங்களிலும்‌ ஏற்பாடுகளிலும்‌ போதிய அனுபவத்தையோ உடைய ஒருவராக இருத்தல்‌ வேண்டும்‌. (2) மேலாண்மை இயக்குநர்‌, மூன்று ஆண்டிற்கு குறையாமல்‌ அரசினால்‌ தீர்மானிக்கப்படலாகும்‌ ஒரு கால அளவுக்கு அமர்த்தப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அவ்வாறு அமர்த்தப்பட்டவர்‌, மீண்டும்‌ அமர்த்தப்படுவதற்குத்‌ தகுதி உடையவர்‌ ஆவார்‌. 16 (3) மேலாண்மை இயக்குநர்‌, வாரியத்தின்‌ தலைமை நிருவாக அதிகாரியாக இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ வாரியத்தின்‌ அன்றாட நிருவாகத்திற்குப்‌ பொறுப்புடையவராக இருத்தல்‌ வேண்டும்‌. அதோடு, வாரியத்தின்‌ பணியாளர்களை மேற்பார்வை செய்தலும்‌, கட்டுப்படுத்தலும்‌ வேண்டும்‌. (4) மேலாண்மை இயக்குநர்‌, 22 ஆம்‌ பிரிவின்படி தம்மிடம்‌ ஒப்படைவு செய்யப்பட்டுள்ள அலுவற்பணிகளையும்‌, அதிகாரங்களையும்‌ தவிர, தமது பிற அலுவற்பணிகள்‌ மற்றும்‌ அதிகாரங்களில்‌ எதனையும்‌, வாரியத்தின்‌ ஒப்புதலளிப்புடன்‌, வாரியத்தின்‌ அலுவலர்‌ எவரிடமும்‌ ஒப்படைவு செய்யலாம்‌. 11. நிதி மற்றும்‌ பொறியியல்‌ இயக்குநர்கள்‌.- (1) நிதி இயக்குநர்‌, நிதி நிருவாகத்திலும்‌, நிதி மற்றும்‌ கணக்குகள்‌ தொடர்பான விஷயங்களிலும்‌ நடைமுறை அனுபவம்‌ உடையவராக இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌, பொறியியல்‌ இயக்குநர்‌, பொறியியலில்‌ தகுதியுடையவராக இருப்பதோடு, குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்று அமைப்பு முறைகளிலும்‌ அனுபவம்‌ உடையவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (2) நிதித்துறை இயக்குநரும்‌, பொறியியல்‌ இயக்குநரும்‌, 12ஆம்‌ பிரிவின்படி தீர்மானிக்கப்பட்டுள்ள வரையீடுகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்படி, பொருந்தத்தக்க முதிர்வு ஓய்வு வயது வரையில்‌ அல்லது அவர்களின்‌ பணி முடிவுறுத்தப்படும்‌ வரையில்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌. 11-A. தலைவரின்‌ பதவிக்காலமும்‌ பணி நிபந்தனைகளும்‌.- 4-& பிரிவின்படி அமர்த்தப்படும்‌ அலுவல்‌ சார்பற்ற தலைவரின்‌ பதவிக்காலமும்‌, பணி வரையீடுகளும்‌ நிபந்தனைகளும்‌, அலுவல்‌ சார்பற்ற தலைவரின்‌ பதவியில்‌ ஏற்படும்‌ தற்செயல்‌ காலியிடங்களை நிரப்பும்‌ முறையும்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. 12. முழுநேர இயக்குநர்களின்‌ பணி வரையீடுகளும்‌ நிபந்தனைகளும்‌.- மேலாண்மை இயக்குநர்‌, நிதி இயக்குநர்‌, பொறியியல்‌ இயக்குநர்‌ ஆகியோரின்‌ பணியூதியமும்‌, பிற பணிவரையீடுகளும்‌ நிபந்தனைகளும்‌, முதன்‌ முதலில்‌ அமர்த்தப்படுகிறபோது, அரசினால்‌ தீர்மானிக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ பிண்ணதாக அமர்த்தப்படுகிறபோது அரசின்‌ ஒப்புதலளிப்புடன்‌. வாரியத்தினால்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. 12-&. தொழில்‌ நுட்ப இயக்குநர்‌.- தொழில்‌ நுட்ப இயக்குநர்‌, குடிநீர்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுப்‌ பணியில்‌ தெளிந்த அனுபவமும்‌, அறிவும்‌ உடையவராயிருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவர்‌ மைய அல்லது மாநில அரசை அல்லது ஓர்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பை அல்லது ஒரு கூட்டு நிறுவனத்தை அல்லது மைய அல்லது மாநில அரசால்‌ சொந்தமாகக்‌ கொண்டிருக்கப்படும்‌ அல்லது கட்டுப்படுத்தப்படும்‌ ஒரு நிறுமத்தைச்‌ சார்பாற்றம்‌ செய்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அரசால்‌ வகுத்துரைக்கப்படும்‌ வரையீடுகளுக்கும்‌ நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டு, வகுத்துரைக்கப்படும்‌ கால அளவிற்குப்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌. 17 13. அலுவல்‌ சார்பற்ற இயக்குநர்கள்‌.- (1) அலுவல்‌ சார்பற்ற இயக்குநர்களின்‌. பதவிக்காலம்‌, இரண்டு ஆண்டுகளாக இருத்தல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: அத்தகைய இயக்குநர்கள்‌, தங்களுக்குப்‌ பின்வருபவர்கள்‌ நியமிக்கப்பட்டு, பதவியை ஏற்றுக்கொள்ளும்‌ வரையில்‌ தொடர்ந்து பதவி வகித்தல்‌ வேண்டும்‌. (2) அலுவல்‌ சார்பற்ற இயக்குநர்களுக்கு, வாரியத்தின்‌ அல்லது அதன்‌ குழுக்களில்‌ எதனின்‌ கூட்டங்களில்‌ கலந்து கொள்வதற்காகவும்‌, வாரியத்தின்‌ ஏதேனும்‌ பிற பணியைச்‌ செய்வதற்காகவும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ கட்டணங்களும்‌ படித்தொகைகளும்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 14. வாரியத்தின்‌ அலுவல்‌ சார்பற்ற தலைவராக அல்லது இயக்குநராக அமர்த்தப்படுவதற்கான தகுதிகளையிழத்தல்‌.- (1) எவர்‌ ஒருவரும்‌, (a) மைய அல்லது மாநில அரசின்‌ அல்லது ஓர்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பின்‌ அல்லது மைய அல்லது மாநில அரசுக்குச்‌ சொந்தமான அல்லது அதன்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள ஒரு கூட்டுநிறுவனத்தின்‌ அல்லது நிறுமத்தின்‌ பணியிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்‌ அல்லது பணிநீக்கம்‌ செய்யப்பட்டிருக்கிறார்‌, அல்லது (b) ஒரு நொடித்துப்போனவராக இருக்கிறார்‌ அல்லது எந்தச்‌ சமயத்திலும்‌ ஒரு நொடித்துப்‌ போனவர்‌ என நீதிமுறையில்‌ தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்‌ அல்லது தமது அடைகடன்களைச்‌ செலுத்துவதை இடை நிறுத்திவைத்திருக்கிறார்‌ அல்லது தமது கடன்‌ தருநர்களுடன்‌ இணக்கத்‌ தீர்வு செய்துகொண்டிருக்கிறார்‌, அல்லது (௦) மனச்சீர்கேடுடையவராக இருந்து, ஒரு தகுதிறம்‌ வாய்ந்த நீதிமன்றத்தால்‌ அத்தகையவர்‌ என்று விளம்பப்பட்டிருக்கிறார்‌ அல்லது, (0) அரசின்‌ கருத்துப்படி ஒழுக்கக்கேட்டினை உள்ளடக்கிய குற்றச்செயல்‌ எதற்காகவும்‌ தீர்ப்புத தண்டனை வழங்கப்பட்டிருக்கிறார்‌, அல்லது (8) ஓர்‌ அலுவல்‌ சார்பற்ற தலைவராக அமர்த்தப்படுகிற போது அல்லது ஜர்‌ அலுவல்‌ சார்பற்ற இயக்குநராக நியமிக்கப்படுகிறபோது வாரியத்தின்‌ அல்லது மைய அல்லது மாநில அரசின்‌, அல்லது ஓர்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பின்‌ அல்லது மைய அல்லது மாநில அரசுக்குச்‌ சொந்தமான அல்லது அதன்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள ஒரு கூட்டு நிறுவனத்தின்‌ அல்லது நிறுமத்தின்‌ ஒரு பணியாளராக இருக்கிறார்‌, அல்லது (1) வாரியத்துடன்‌ செய்துகொள்ளப்பட்டுச்‌ செயற்பாட்டில்‌ உள்ள ஒப்பந்தம்‌ எதிலும்‌, அல்லது வாரியத்திற்காகச்‌ செய்யப்பட்டுவரும்‌ பணி எதிலும்‌ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தாமாகவோ அல்லது எவரேனும்‌ கூட்டாளி வாயிலாகவோ பங்கு அல்லது பாத்தியதை எதனையும்‌ கொண்டிருக்கிறார்‌, அல்லது 18 (9) வாரியத்துடன்‌ செய்துகொள்ளப்பட்டுச்‌ செயற்பாட்டில்‌ உள்ள ஒப்பந்தம்‌ எதிலும்‌, அல்லது வாரியத்திற்காகச்‌ செய்யப்பட்டுவரும்‌ பணி எதிலும்‌, பங்கு. அல்லது பாத்தியத்தை எதனையும்‌ கொண்டிருக்கிற கூட்டு நிறுமம்‌ எதிலும்‌ ஓர்‌ இயக்குநராக அல்லது ஒரு செயலாளராக, மேலாளராக அல்லது பிற அலுவலராக இருக்கிறார்‌, என்றால்‌, அலுவல்சார்பற்ற தலைவராக அல்லது ஒரு முழுநேர இயக்குநராக அமர்த்தப்படுவதற்கு, அல்லது ஓர்‌ அலுவல்‌ சார்பற்ற இயக்குநராக நியமிக்கப்படுவதற்குத்‌ தகுதியுடையவர்‌ ஆவார்‌. (2) அலுவல்‌ சார்பற்ற தலைவர்‌ அல்லது ஒரு முழுநேர இயக்குநர்‌ அல்லது அலுவல்‌ சார்பற்ற இயக்குநர்‌ @ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ (8) முதல்‌ (ற வரையிலான கூறுகளில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தகுதியிழப்புகள்‌ எதற்கும்‌ உட்பட்டவராகிறார்‌, அல்லது (௦) வாரியத்தின்‌ அனுமதி இன்றி, தொடர்ந்து வருகிற அதன்‌ மூன்றுக்கு மேற்பட்ட கூட்டங்களுக்கு வாராதிருக்கிறார்‌, என்றால்‌, அவர்‌, அத்தகைய தலைவராக, அல்லது இயக்குநராக அல்லது அலுவல்‌ சார்பற்ற இயக்குநராக இருப்பதினின்று நீக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) எவர்‌ ஒருவரும்‌, தாமோ அல்லது எந்தக்‌ கூட்டு நிறுமத்தில்‌ தாம்‌ ஓர்‌ இயக்குநராக, செயலாளராக, மேலாளராக, அல்லது பிற அலுவலராக இருக்கிறாரோ அந்தக்‌ கூட்டு நிறுமத்திலுள்ள தமது கூட்டாளியோ.- () அசையாச்‌ சொத்தின்‌ விற்பனை, வாங்குகை, குத்தகை அல்லது பரிமாற்றம்‌ எதிலும்‌ அல்லது அதற்கான உடன்பாடு எதிலும்‌, (00 பணம்‌ கடனாகப்‌ பெறுவதற்கான உடன்பாடு எதிலும்‌, அல்லது பணம்‌ மட்டுமே செலுத்துவதற்கான பிணையம்‌ எதிலும்‌, (i) வாரியத்தின்‌ அலுவல்கள்‌ தொடர்பான விளம்பரம்‌ எதுவும்‌ வெளியிடப்படுகிற செய்தித்தாள்‌ எதிலும்‌, (iv) தாமோ அல்லது கூட்டு நிறுமத்திலுள்ள தம்முடைய கூட்டாளியோ வழக்கமாக வாணிகம்‌ செய்கிற பொருள்‌ எதனையும்‌ எப்போதாவது வாரியத்திற்கு விற்பனை செய்திருந்து, அதற்காக எந்த ஓர்‌ ஆண்டிலும்‌ மறுபயனாகச்‌ செலுத்தப்பட்ட தொகை இரண்டாயிரம்‌ ரூபாய்க்கு மேற்படாமலிருக்கிறது என்றால்‌, அந்த விற்பனையில்‌, ஒரு பங்கினை அல்லது பாத்தியத்தைக்‌ கொண்டிருக்கிற காரணத்தால்‌ மட்டுமே (1) ஆம்‌ உட்கூறின்‌ (1) கூறின்‌ அல்லது (ஏ) கூறின்படி தகுதியிழந்தவர்‌ ஆகார்‌ அல்லது அந்தக்‌ கூறுகளின்‌ பொருளின்படியான ஒப்பந்தம்‌ எதிலும்‌ அவர்‌ பங்கு அல்லது பாத்தியதை எதுவும்‌ கொண்டிருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ ஆகாது. (4) ஒருவர்‌, அத்தகைய நிறுமத்தில்‌ தாம்‌ ஒரு பங்குதாரராக இருப்பதன்‌ காரணத்தால்‌ மட்டுமே, (1) ஆம்‌ உட்பிரிவின்‌ (1) கூறின்‌ அல்லது (ர) கூறின்படி 19 தகுதியிழந்தவர்‌ ஆகார்‌; அல்லது அந்த வாரியத்துடனான, வாரியத்தால்‌ அல்லது அதன்‌ சார்பாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம்‌ எதிலும்‌, அவர்‌ பங்கு அல்லது பாத்தியதை எதுவும்‌ கொண்டிருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ ஆகாது: வரம்புரையாக: அத்தகையவர்‌ தம்மால்‌ வைத்துவரப்படும்‌ பங்குகளின்‌ தன்மையினையும்‌, அளவினையும்‌ அரசுக்கு தெரியப்படுத்துதல்‌ வேண்டும்‌. 15. அலுவல்‌ சார்பற்ற தலைவரையும்‌ இயக்குநர்களையும்‌ அகற்றுதல்‌- (1) எந்தச்‌ சமயத்திலும்‌, ஒரு முழுநேர இயக்குநர்‌ அத்தகைய பதவிக்குப்‌ பொருத்தமற்றவர்‌ என்று, அல்லது அவரை அப்புறப்படுத்தக்கூடிய அளவிற்கு நடத்தைக்கேடு உடையவராக இருக்கிறார்‌ அல்லது அசட்டையாக இருந்திருக்கிறார்‌ என்று அரசுக்குத்‌ தோன்றுகிறது என்றால்‌, அது, அறிவிக்கை வாயிலாக, அவருக்குக்‌ காரணம்‌ காட்டுவதற்காக நியாயமானதொரு வாய்ப்பை அளித்த பின்பு, அவரைப்‌ பதவியிலிருந்து அகற்றலாம்‌. (2) அலுவல்‌ சார்பற்ற தலைவர்‌ அல்லது அலுவல்‌ சார்பற்ற இயக்குநர்‌ எவரையும்‌, (a) அவர்‌ ஒரு சட்டத்‌ தொழிலாற்றுநராக இருந்து, வாரியம்‌ ஒரு தரப்பினராகவோ பிறவாறாகவோ அக்கறை கொண்டுள்ள உரிமையியல்‌, குற்றவியல்‌, அல்லது பிற சட்ட நடவடிக்கை எதிலும்‌, வாரியம்‌ அல்லாத பிற நபர்‌ எவரின்‌ சார்பாகவும்‌ செயற்படுகிறார்‌ அல்லது முன்ணிலையாகிறார்‌ என்றால்‌, அல்லது (b) அவர்‌ தலைவராக அல்லது இயக்குநராகச்‌ செயற்படுவதற்குப்‌ பொருத்தமற்றவராக இருக்கிறார்‌, அல்லது இயலாதவராக ஆகியிருக்கிறார்‌ அல்லது நடத்தைக்கேடு உடையவராக இருக்கிறார்‌ அல்லது அசட்டையாக இருந்திருக்கிறார்‌, அல்லது அத்தகைய தலைவராக அல்லது இயக்குநராக அவர்‌ தொடர்வது வாரியத்தின்‌ நலன்களை ஊறுபடுத்தக்கூடிய வகையில்‌ அத்தகைய தமது பதவியைத்‌ தவறாகப்‌ பயன்படுத்தி இருக்கிறார்‌ என்று அரசு கருதினால்‌, அரசு, அறிவிக்கை வாயிலாக, அவருக்குக்‌ காரணம்‌ காட்டுவதற்காக நியாயமானதொரு வாய்ப்பை அளித்த பின்பு, அவரைப்‌ பதவியிலிருந்து அகற்றலாம்‌. (3) (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (8) கூறின்‌ வகைமுறையின்படி பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஓர்‌ அலுவல்‌ சார்பற்ற தலைவர்‌ அல்லது ஓர்‌ அலுவல்‌ சார்பாற்ற இயக்குநர்‌, அரசினால்‌ பிறவாறாக பணிக்கப்பட்டாலன்றி, அவ்வாறு அகற்றப்பட்ட தேதியிலிருந்து ஒரு மூன்று ஆண்டு கால அளவிற்கு தலைவராகவோ ஓர்‌ இயக்குநராகவோ அமர்த்தப்படுவதற்குத்‌ தகுதியுடையவர்‌ ஆவார்‌. (4) (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (b) கூறின்படி அகற்றப்பட்ட ஓர்‌ அலுவல்‌ சார்பற்ற தலைவர்‌ அல்லது ஓர்‌ அலுவல்‌ சார்பற்ற இயக்குநர்‌, அரசின்‌ ஓர்‌ ஆணை வாயிலாக, அவர்‌ இனிமேற்கொண்டும்‌ தகுதியற்றவர்‌ அல்லர்‌ என விளம்பப்படுகிற வரையில்‌, மீண்டும்‌ அமர்த்தப்படுவதற்குத்‌ தகுதியுடையவர்‌ ஆகார்‌. 146. இயக்குநர்கள்‌ பதவி விலகலும்‌ தற்காலிகமாக வராதிருத்தலும்‌.- (1) இயக்குநர்‌ எவரும்‌, அரசுக்கு எழுத்துமூலம்‌ அறிவிப்புக்‌ கொடுப்பதன்‌ வாயிலாகத்‌ 20 தம்‌ பதவியிலிருந்து விலகலாம்‌; மற்றும்‌ பதவி விலகல்‌ குறித்த அத்தகைய அறிவிப்பினைக்‌ கொடுக்கும்‌ இயக்குநர்‌, அரசினால்‌ அறிவிக்கை செய்யப்படுவதன்‌. பேரில்‌, அந்தப்‌ பதவி விலகல்‌ அவ்வாறு அறிவிக்கை செய்யப்படுகிற தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌, தமது பதவியிடத்தைக்‌ காலி செய்துவிட்டதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. (2) முழுநேர இயக்குநர்‌ எவரும்‌, உடல்நலக்குறைவு காரணமாக அல்லது பிறவாறாக தமது கடமைகளை ஆற்றுவதற்குத்‌ தற்காலிகமாக இயலாதவர்‌ ஆக்கப்படுகிறார்‌ அல்லது அவரது பதவியிடத்தைக்‌ காலிசெய்வது நீங்கலாக, பிற சூழ்நிலைகளில்‌, விடுப்பின்‌ பேரில்‌, அல்லது பிறவாறாக வராதிருக்கிறார்‌ என்றால்‌, எவரேனும்‌, பிற முழுநேர இயக்குநருக்கு அவரது கடமைகளுடன்‌ சேர்த்து, அத்தகைய இயக்குநரின்‌ கடமைகளையும்‌ ஆற்றுவதற்கு அரசு அதிகாரம்‌ அளிக்கலாம்‌. 17. குழுக்கள்‌ (1) பின்வரும்‌ குழுக்கள்‌ நிறுவப்படுதல்‌ வேண்டும்‌. (a) வாரியத்தின்‌ தலைவர்‌, மேலாண்மை இயக்குநர்‌, 4 ஆம்‌ பிரிவின்‌ (௦), (0, (e) 0. (௫௫ ஆகிய கூறுகளில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இயக்குநர்கள்‌, அந்தப்‌ பிரிவின்‌ (6) (v) கூறில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இர இயக்குநர்களில்‌ ஒருவர்‌ ஆகியோரைக்‌ கொண்டிருக்கிற "மக்கள்‌ தொடர்புக்‌ குழு": (௦) வாரியத்தின்‌ தலைவர்‌, மேலாண்மை இயக்குநர்‌, நிதி இயக்குநர்‌, 4 ஆம்‌ பிரிவின்‌ 0), (௫, (௮) ஆகிய கூறுகளில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இயக்குநர்கள்‌, அந்தப்‌ பிரிவின்‌ (e)(v) கூறில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இர இயக்குநர்களில்‌ ஒருவர்‌, வாரியத்தின்‌ திட்டப்‌ பிரிவின்‌ தலைவர்‌ ஆகியோரைக்‌ கொண்டிருக்கிற ஒரு "தீர்வைக்குழு”: (6) மேலாண்மை இயக்குநர்‌, நிதி இயக்குநர்‌, பொறியியல்‌ இயக்குநர்‌, தொழில்நுட்ப இயக்குநர்‌, நிருவாக இயக்குநர்‌ மற்றும்‌ 4ஆம்‌ பிரிவின்‌ (b), (டு, (e)iv) ஆகிய கூறுகளில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இயக்குநர்கள்‌ ஆகியோரைக்‌ கொண்டிருக்கிற ஓர்‌ "ஒப்பந்தப்‌ புள்ளிக்குழு": (0) மேலாண்மை இயக்குநர்‌, நிதி இயக்குநர்‌, பொறியியல்‌ இயக்குநர்‌, அந்த வாரியத்தின்‌ பணியாளர்‌ பிரிவின்‌ தலைவர்‌ ஆகியோரைக்‌ கொண்டிருக்கிற ஒரு "வேலை வாய்ப்புக்குழு" (6) மேலாண்மை இயக்குநர்‌, நிதி இயக்குநர்‌, பொறியியல்‌ இயக்குநர்‌, அந்த வாரியத்தின்‌ திட்டப்பிரிவு, பணியாளர்‌ பிரிவு, பொருட்பிரிவு ஆகியவற்றின்‌. தலைவர்களைக்‌ கொண்டிருக்கிற ஒரு "மேலாண்மைக்குழு"; (2) வாரியம்‌, தான்‌ தக்கதெனக்‌ கருதும்‌ நோக்கங்களுக்காக, முழுவதுமாக இயக்குநர்களை அல்லது முழுவதுமாக பிற நபர்களை, அல்லது பகுதி இயக்குநர்களையும்‌ பகுதி பிற நபர்களையும்‌ கொண்டிருக்கிற வேறு பல பிற குழுக்களையும்‌ அமைக்கலாம்‌. 18. வாரியத்தின்‌ மற்றும்‌ குழுவின்‌ கூட்டங்கள்‌. (1) (8) வாரியம்‌, ஒவ்வொரு மூன்று மாதத்திலும்‌ குறைந்தது ஒரு முறையாவது கூடுதல்‌ வேண்டும்‌. 21 (௦) குழு, வகுத்துரைக்கப்படும்‌ நேரங்களில்‌ கூடுதல்‌ வேண்டும்‌. (2) வாரியத்தின்‌ தலைவரும்‌, அவர்‌ வராதிருக்கையில்‌, வந்திருக்கும்‌ இயக்குநர்களால்‌ தங்களிடையேயிருந்து தெரிவு செய்யப்படும்‌ நபரும்‌, வாரியத்தின்‌ கூட்டத்திற்குத்‌ தலைமை தாங்குதல்‌ வேண்டும்‌. (3) மக்கள்‌ தொடர்புக்குழு, தீர்வைக்குழு ஆகியவற்றின்‌ கூட்டங்களுக்கு வாரியத்தின்‌ தலைவர்‌ தலைமை தாங்குதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, ஒப்பந்தப்புள்ளிக்குழு, வேலைவாய்ப்புக்குழு, மேலாண்மைக்குழு ஆகியவற்றின்‌ கூட்டங்களுக்கு மேலாண்மை இயக்குநர்‌ தலைமை தாங்குதல்‌ வேண்டும்‌. 4) பிற குழுக்களின்‌ கூட்டங்களுக்கு, வாரியம்‌ குறித்துரைக்கும்‌ இயக்குநர்கள்‌ தலைமை தாங்குதல்‌ வேண்டும்‌. (5௮ஆம்‌ உட்பிரிவின்‌ அல்லது (4) ஆம்‌ உட்பிரிவின்படி தலைமை தாங்க வேண்டிய இயக்குநர்‌ வராதிருக்குங்கால்‌, தொடர்புடைய குழுவின்‌ எஞ்சிய உறுப்பினர்கள்‌, தொடர்புடைய கூட்டத்திற்குத்‌ தலைமை தாங்குவதற்காகத்‌ தங்களிடையேயிருந்து ஒருவரைத்‌ தெரிவு செய்தல்‌ வேண்டும்‌. (6) வாரியமும்‌ குழுக்களும்‌ கூட்டங்களில்‌ அலுவல்‌ நடத்துவது தொடர்பாக, வகுத்துரைக்கப்படும்‌ நடைமுறை விதிகளைக்‌ கடைப்பிடித்தல்‌ வேண்டும்‌. (7) வாரியத்தின்‌ அல்லது ஏதேனும்‌ குழுவின்‌ கூட்டம்‌ எதிலும்‌ எழும்‌ வினாக்கள்‌ அனைத்தும்‌, வந்திருந்து வாக்களிக்கும்‌ இயக்குநர்களில்‌ அல்லது குழு உறுப்பினர்களில்‌ பெரும்பான்மையினரின்‌ வாக்குகளின்‌ வாயிலாக முடிபு செய்யப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, வாக்குகள்‌ சமமாக இருக்கும்‌ நேர்வில்‌, தலைமை தாங்குபவர்‌ ஓர்‌ இரண்டாம்‌ வாக்கினை அல்லது அறுதிசெய்வாக்கினை உடையவராக இருந்து, அதனைப்‌ பயன்படுத்துதல்‌ வேண்டும்‌. (8) 4 ஆம்‌ பிரிவின்‌ (88) கூறில்‌, (0) கூறில்‌, (௦) கூறில்‌ அல்லது (0) கூறில்‌, குறிப்பிட்டுள்ள ஓர்‌ இயக்குநருக்கு ஏதேனும்‌ காரணத்திற்காக வாரியத்தின்‌. அல்லது குழுவின்‌ கூட்டம்‌ எதிலும்‌ கலந்துகொள்ள இயலவில்லை என்றால்‌, அரசு, எழுத்துமூலமான ஆணை வாயிலாக, நேர்வுக்கேற்ப, ஓர்‌ அரசு அலுவலரை அல்லது சென்னைப்‌ பெருநகர வளர்ச்சிக்‌ குழுமத்தின்‌ ஓர்‌ அலுவலரை, அல்லது சென்னை மாநகராட்சியின்‌ ஓர்‌ அலுவலரை, அத்தகைய கூட்டங்களில்‌ கலந்துகொள்வதற்காக நியமிக்கலாம்‌; மற்றும்‌ அவ்வாறு நியமிக்கப்படும்‌ அலுவலர்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ நோ க்கங்களுக்காக, ஓர்‌ இயக்குநராகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 19. அலுவலர்களையும்‌, பிற பணியாளர்களையும்‌ அமர்த்துதல்‌.- (1) வாரியம்‌, தனது அலுவற்பணிகளைத்‌ திறம்பட ஆற்றுவதற்குத்‌ தேவையெனத்‌ தான்‌ கருதுகிற அலுவலர்களையும்‌ பிற பணியாளர்களையும்‌ அமர்த்தலாம்‌: வரம்புரையாக: அந்த வாரியம்‌, அரசின்‌ முன்‌ ஒப்புதலளிப்பின்றி, உயர்ந்தபட்ச அளவு இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு மேற்படுகிற மாத வரையூதியத்தைக்‌ கொண்ட பணியிடம்‌ எதனையும்‌ ஏற்படுத்துதலோ, உயர்ந்தபட்ச அளவு 22 இரண்டாயிரம்‌ ரூபாய்க்கு மேற்படுகிற மாத வரையூதியத்தைக்‌ கொண்ட பணியிடம்‌ எதற்கும்‌ எவர்‌ ஒருவரையும்‌ அமர்த்துதலோ ஆகாது. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு ஊறுபாடின்றி, அரசின்‌ அல்லது ஏதேனும்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பின்‌ அல்லது பிற நிறுவனத்தின்‌ பணியாளர்களில்‌ தேவைப்படுபவர்களை, நேர்வுக்கேற்ப, வாரியத்திற்கும்‌, அரசுக்கும்‌ அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பு அல்லது நிறுவனத்திற்குமிடையே உடன்படலாகும்‌ வரையீடுகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரில்‌, வாரியம்‌ பயன்படுத்திக்‌ கொள்வது சட்டப்படியானதாகும்‌. 20. உள்ளாட்சி அதிகார அமைப்புகளின்‌ பணியாளர்களை அமர்த்துதல்‌. (1) (2) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, அறிவிக்கை செய்யப்பட்ட தேதியை அடுத்து முன்பு, உள்ளாட்சி அதிகார அமைப்புகளின்‌ ஒரு பணியாளராக இருந்து, சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தைப்‌ பொறுத்துப்‌ பேணி வரப்படும்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்று அமைப்பு முறை தொடர்பாக பணிபுரிந்து வந்திருக்கிற ஒவ்வொருவரும்‌ இந்தப்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியவாறு அந்தத்‌ தேதியிலிருந்து வாரியத்தின்கீழ்‌ உள்ள பணிக்கு மாற்றல்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: அறிவிக்கை செய்யப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்‌, வாரியத்தின்‌ ஒரு பணியாளராக ஆவதற்குத்‌ தமக்கு விருப்பம்‌ இல்லை என்பதை எழுத்துமூலமான அறிவிப்பு வாயிலாகத்‌ தெரிவித்திருக்கிற தமிழ்நாடு மாநில வீட்டுவசதி வாரியத்தின்‌ அல்லது தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின்‌ பணியாளர்‌ எவருக்கும்‌ அல்லது தற்போதுள்ள ஏதேனும்‌ பிற அதிகார அமைப்பின்‌ பணியாளர்‌ ஒருவருக்கு, இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌ பொருந்தாது. (2) (@ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ நோக்கத்திற்காக, வாரியத்தின்‌ பணிக்கு மாற்றப்படவிருக்கும்‌ பணியாளர்களின்‌ எண்ணிக்கை, சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்திற்காக தற்போதுள்ள அத்தகைய அதிகார அமைப்பினால்‌ பேணி வரப்படும்‌ குடிநீர்வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்று அமைப்புமுறை தொடர்பாக, 1977 ஆம்‌ ஆண்டு ஜனவரி முதல்‌ நாளன்று இருந்தவாறு, தற்போதுள்ள அந்த அதிகார அமைப்பின்‌ பணியாளர்களின்‌ மொத்த எண்ணிக்கைக்கு மேற்படுதல்‌ ஆகாது. (௦) தற்போதுள்ள ஓர்‌ அதிகார அமைப்பின்‌ பணியாளர்களில்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி மாற்றல்‌ செய்யப்படுவதற்குத்‌ தகுதியுடைவர்களின்‌ எண்ணிக்கை, (a) கூறில்‌ குறிப்பிடப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கைக்கு மேற்படுகிறது என்றால்‌, தற்போதுள்ள தொடர்புடைய அதிகார அமைப்பு, அத்தகைய மொத்த எண்ணிக்கைக்கு இணங்கியதாயிருக்கும்‌ வகையில்‌ மாற்றல்‌ செய்யப்படவிருக்கிற பணியாளர்‌ எண்ணிக்கையைத்‌ தீர்மானித்தல்‌ வேண்டும்‌; (c) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ளவாறு நீர்வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுப்பணி தொடர்பாக பணியாளர்‌ எவரும்‌ பணிபுரிந்திருக்கிறாரா, அல்லது வாரியத்தின்‌ கீழுள்ள பணிக்கு மாற்றம்‌ செய்யப்படுவதற்குத்‌ தகுதியுடையவராக இருக்கிறாரா அல்லது மாற்றல்‌ செய்யப்படவிருக்கும்‌ பணியாளர்களிலிருந்து 23 முறையாக விலக்கப்படவில்லையா என்பது குறித்து ஐயம்‌ அல்லது பூசல்‌ எதுவும்‌ எழுகிறது என்றால்‌, அந்தப்‌ பொருட்பாடு, அரசுக்குக்‌ குறித்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; அதனைப்‌ பொறுத்தவரை அரசின்‌ முடிபே இறுதியானதாகும்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவு பொருந்துகிற, தற்போதுள்ள ஓர்‌ அதிகார அமைப்பின்‌ பணியாளர்‌ ஒருவர்‌, செண்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்திற்காகப்‌ பேணிவரப்படும்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்று அமைப்பு முறை தொடர்பாக ஒரு பகுதி பணிபுரிந்து வந்திருக்கிறார்‌ என்றால்‌, அத்தகைய பணியாளரை வாரியத்தின்‌ பணிக்கு அமர்த்துவதற்காக வாரியம்‌ தெரிவு செய்யலாம்‌: வரம்புரையாக: தொடர்புடைய பணியாளரின்‌ இசைவின்றி, அவ்வாறு அமர்த்தப்படுதல்‌ ஆகாது. (4) (2 ஆம்‌ உட்பிரிவின்‌ அல்லது (3) ஆம்‌ உட்பிரிவின்படி வாரியத்தின்‌. பணிக்கு அமர்த்தப்படும்‌ ஒரு பணியாளர்‌ (ஐ) வாரியத்தின்‌ பணிக்கு அமர்த்தப்பட்ட தேதியிலிருந்து தற்போதுள்ள தொடர்புடைய அதிகாரஅமைப்பின்‌ ஒரு பணியாளராக இருப்பதினின்று நீங்கிவிடுதல்‌ வேண்டும்‌; (b) வாரியம்‌, தீர்மானிக்கலாகும்‌ பணியூதியம்‌, பிற பணிவரையீடுகள்‌, நிபந்தனைகள்‌ ஆகியவற்றின்‌ பேரில்‌ வாரியத்தின்‌ ஒரு பணியாளராக ஆவார்‌; மற்றும்‌ அத்தகைய தீர்மானிப்பு இறுதியானதாகும்‌: வரம்புரையாக: அத்தகைய பணியாளரின்‌ பணியூதியம்‌, பிற பணிவரையீடுகள்‌, நிபந்தனைகள்‌ ஆகியவை அரசின்‌ முன்‌ ஒப்புதலளிப்புடன்‌ தவிர அவருக்குப்‌ பாதகமான வகையில்‌ மாறுதல்‌ செய்யப்படுதல்‌ ஆகாது. (5) (2) ஆம்‌ உட்பிரிவின்‌ அல்லது (3) ஆம்‌ உட்பிரிவின்படி வாரியத்தின்‌ பணியில்‌ அமர்த்தப்பட்டுள்ள பணியாளர்‌ ஒவ்வொருவரையும்‌ பொறுத்து, தற்போதுள்ள தொடர்புடைய அதிகார அமைப்பு, அத்தகைய அமர்த்துகை செயற்பாட்டுக்கு வருகிற தேதியன்று, அந்த அதிகார அமைப்பில்‌ வருங்கால வைப்பு நிதியம்‌ அல்லது பிற ஓய்வூதிய நிதியக்‌ கணக்கு ஏதேனுமிருப்பின்‌, அதில்‌ அவரது வரவுக்‌ கணக்கிலுள்ள தொகை முழுவதையும்‌ வாரியத்திற்கு மாற்றுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய பணியாளர்கள்‌ ஒவ்வொருவரும்‌, தற்போதுள்ள அதிகார அமைப்பில்‌ பணிபுரிந்த கால அளவானது வாரியத்தின்‌ கீழ்‌ அவருடைய பணி முடிவுறுகையில்‌ ஒரு பணியாளர்‌ உரிமை கொண்டிருக்கலாகும்‌ ஓய்வூதியத்‌ தொகை அல்லது பணிக்கொடை, ஏதேனுமிருப்பின்‌, அதனைத்‌ தீர்மானிக்கையில்‌ கணக்கில்‌ எடுத்துக்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (6) (2. (8) ஆகிய உட்பிரிவுகளின்படி அமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களைப்‌ பொறுத்து, தற்போதுள்ள ஓர்‌ அதிகார அமைப்பு, அத்தகைய பணியாளரின்‌ பணிக்கொடைக்காக அல்லது ஓய்வூதியத்திற்காக, வாரியத்தினால்‌ கணக்கில்‌ வரவு வைக்கப்பட்ட விடுப்பு எதற்கும்‌ அல்லது கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்பட்ட அல்லது கணக்கில்‌ எடுத்துக்கொள்ளப்பபவேண்டுமென கோரப்பட்ட பணிக்கால அளவு எதற்கும்‌ சமமான மதிப்புள்ள பணத்தொகைகளை வாரியத்திற்கு வரவு 24 வைத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அந்தத்‌ தொகைகள்‌ குறித்து பூசல்‌ எதுவும்‌ இருக்கிறது என்றால்‌, அந்தப்‌ பொருட்பாடு அரசுக்குக்‌ குறித்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; அதனைப்‌ பொறுத்தவரை அரசின்‌ முடிவே இறுதியானதாகும்‌: வரம்புரையாக: அத்தகைய சமமான பணத்தொகை, வாரியம்‌ உடன்படலாகிற முறையில்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது தவணைகளிலோ அல்லது பணிக்கொடை அல்லது ஓய்வூதியம்‌ கொடுபடவேண்டியுள்ள நேரத்திலோ அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (7) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள தொழில்துறைப்‌ பூசல்கள்‌ தொடர்பான சட்டம்‌ எதுவும்‌ அல்லது பிற சட்டம்‌ எதுவும்‌ எவ்வாறிருப்பினும்‌, (2) ஆம்‌ உட்பிரிவின்‌ அல்லது (3) ஆம்‌ உட்பிரிவின்படி வாரியத்தின்‌ பணிக்கு மாற்றல்‌ செய்யப்பட்ட அல்லது அமர்த்தப்பட்ட பணியாளர்‌ எவரும்‌, தற்போதுள்ள அதிகார அமைப்பின்கீழுள்ள தமது பணி முடிவுறுத்தப்பட்டதன்‌ காரணமாக மட்டுமே அத்தகைய சட்டம்‌ எதன்படியும்‌ சரியீடு எதற்கும்‌ உரிமையுடையவர்‌ ஆகார்‌; மற்றும்‌ அத்தகைய சரியீட்டிற்கான உரிமைக்‌ கோரிக்கை எதுவும்‌, நீதிமன்றம்‌, தீர்ப்பாயம்‌ அல்லது பிற அதிகார அமைப்பு எதனாலும்‌ ஏற்றுக்கொள்ளப்படுதல்‌ ஆகாது. (8) இந்தப்‌ பிரிவின்படி வாரியத்தின்‌ ஒரு பணியாளராக ஆகிற எவரும்‌, இந்தப்‌ பிரிவில்‌ பிறவாறாக வகை செய்யப்பட்டிருக்கிறவாறு தவிர, தாம்‌ அத்தகைய பணியாளராக ஆவதற்கு முந்திய தமது பணி பொறுத்தவரை, வாரியத்திற்கு எதிரான உரிமை அல்லது உரிமைக்கோரிக்கை எதனையும்‌ கொண்டிருக்கமாட்டார்‌. 21. பொதுப்‌ பணி நிலைப்‌ பிரிவு.- இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறை எதிலும்‌ அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதிலும்‌ அல்லது ஒப்பந்தம்‌ அல்லது பிற முறையாவணம்‌ எதுவும்‌ எவ்வாறிருப்பினும்‌, வாரியம்‌, தமிழ்நாடு நீர்வழங்குதல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ ஒருங்கிசைவுடன்‌, இரு வாரியங்களில்‌ ஏதொன்றினாலும்‌ வேலைக்கமர்த்தப்பட்டுள்ள பணியாளர்‌ குழாத்திற்காகப்‌ பொதுப்பணிநிலைப்‌ பிரிவுகளையும்‌ பணி நிபந்தனைகளையும்‌ ஏற்படுத்தலாம்‌; மற்றும்‌ அத்தகைய பணியாளர்‌ குழாத்தினர்‌, இரு வாரியங்களின்‌ ஏதொன்றின்‌ பணிக்கும்‌ அமர்த்தப்படுவதற்கு அல்லது மாற்றல்‌ செய்யப்படுவதற்கு உள்ளாகத்தக்கவர்‌ ஆவர்‌: வரம்புரையாக: 20 ஆம்‌ பிரிவின்படி வாரியத்தின்‌ பணிக்கு, தற்போதுள்ள ஓர்‌ அதிகாரஅமைப்பிலிருந்து அமர்த்தப்பட்டுள்ள பணியாளர்‌ எவரும்‌, அவருடைய இசைவுடன்‌ தவிர, தமிழ்நாடு குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியத்திற்கு, மாற்றல்‌ செய்யப்படுதலோ, பணிக்கமர்த்தப்படுதலோ ஆகாது. 22. அதிகாரங்களின்‌ ஒப்படைவு.-- வாரியம்‌, இந்தச்‌ சட்டத்தின்படி குறித்துரைக்கப்படலாகும்‌ நிபந்தனைகளுக்கும்‌ வரம்புகளுக்கும்‌ உட்பட்டு, இந்தச்‌ சட்டத்தின்படியான தனது அதிகாரங்கள்‌ மற்றும்‌ அலுவற்பணிகளில்‌ குறித்துரைக்கப்படலாகிறவற்றை, பொது அல்லது சிறப்பு ஆணை வாயிலாக, வாரியத்தின்‌ குழு எதனிடமும்‌ அல்லது இயக்குநர்‌ எவரிடமும்‌ அல்லது அலுவலர்‌ எவரிடமும்‌ அல்லது பிற பணியாளர்‌ எவரிடமும்‌ ஒப்படைவு செய்யலாம்‌: 25 வரம்புரையாக: வாரியம்‌, 12 ஆம்‌ பிரிவிலும்‌, 17 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவிலும்‌, 19 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவிலும்‌, 21 ஆம்‌ பிரிவிலும்‌ குறிப்பிடப்பட்டுள்ள தனது அதிகாரங்கள்‌ மற்றும்‌ அலுவற்பணிகளில்‌ எதனையும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரத்தையும்‌ ஒப்படைவு செய்தல்‌ ஆகாது. 23. குறித்த சில இயக்குநர்களுக்கான ஈட்டுறுதியும்‌, நடவடிக்கைகளுக்கான தடையும்‌.- (1) அலுவல்‌ சார்பற்ற இயக்குநர்‌ ஒவ்வொருவரும்‌, அவர்‌ வேண்டுமென்றே செய்த சொந்தச்‌ செயலினால்‌ அல்லது தவறுகையினால்‌ ஏற்பட்டவை நீங்கலான அவரது பிற கடமைகளை ஆற்றுவதில்‌ அல்லது அதன்‌ தொடர்பாக, அவருக்கு ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்காகவும்‌ செலவுகளுக்காகவும்‌ ஈட்டுறுதி செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தினை அல்லது இதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி அல்லது பிற முறையாவணம்‌ எதனையும்‌ அடியொற்றி, வாரியத்தின்‌ இயக்குநர்‌ அல்லது குழு எதனின்‌ உறுப்பினர்‌ அல்லது அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ எவராலும்‌, நல்லெண்ணத்தில்‌ செய்யப்பட்ட அல்லது செய்யக்‌ கருதப்பட்ட எதற்காகவும்‌, அவருக்கு எதிராக உரிமை வழக்கு அல்லது பிற நடவடிக்கை எதுவும்‌ தொடரப்படுதல்‌ ஆகாது. 24. குறைகள்‌, செயல்களைச்‌ செல்லாதனவாக்குதல்‌ ஆகாது.- (1) வாரியத்தில்‌ அல்லது, நேர்வுக்கேற்ப, குழுவில்‌ காலியிடம்‌ எதுவும்‌, அல்லது வாரியம்‌ அமைக்கப்பட்டதில்‌ அல்லது மீண்டும்‌ அமைக்கப்பட்டதில்‌ குறைபாடு எதுவும்‌ இருக்கிறது என்னும்‌ காரணத்தால்‌ மட்டுமே அந்த வாரியத்தின்‌ அல்லது ஏதேனும்‌. குழுவின்‌ செயல்‌ அல்லது நடவடிக்கை எதுவும்‌ மறுத்து வாதிடப்படுதல்‌ ஆகாது. (2) ஓர்‌ இயக்குநராக நல்லெண்ணத்தில்‌ செயற்படும்‌ நபர்‌ எவராலும்‌ செய்யப்படும்‌ செயல்கள்‌ அனைத்தும்‌, அவர்‌ ஓர்‌ இயக்குநராக இருப்பதற்கு தகுதியற்றவராக இருந்தாலும்‌ அல்லது அவர்‌ அமர்த்தப்படுவதில்‌ ஏதேனும்‌ பிற குறைபாடு இருந்தாலும்‌ செல்லுந்தன்மையுடையனவாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ IV குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுப்‌ பணியமைப்புகளை நிறுவுதல்‌, மாற்றல்‌ செய்தல்‌ மற்றும்‌ உற்றமையச்‌ செய்தல்‌. 25. அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு முன்னர்‌ உள்ளாட்சி அதிகாரஅமைப்பு வாரியத்திற்கு தகவல்‌ அளித்தல்‌ வேண்டும்‌.- 3 ஆம்‌ பிரிவின்படி வாரியத்தை நிறுவியதற்கு அடுத்தபின்பு, உள்ளாட்சி அதிகார அமைப்பு ஒவ்வொன்றும்‌, பின்வரும்‌ தகவல்களையும்‌ விவரங்களையும்‌ வாரியத்திற்கு அளித்தல்‌ வேண்டும்‌: (a) இந்தச்‌ சட்டத்தின்படி வாரியத்திற்கு உரிமை மாற்றம்‌ செய்யப்படவிருக்கிற சொத்துகள்‌ அனைத்தையும்‌ பற்றிய விவரிப்பும்‌, விவரங்களும்‌; 26 (௦) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி வாரியத்திற்கு உரிமைமாற்றம்‌. செய்யப்படவிருக்கிற கடப்பாடுகள்‌ பற்றிய விவரங்கள்‌; (6) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி வாரியத்திடம்‌ வந்தடைகிற நடைமுறையிலுள்ள ஒப்பந்தங்கள்‌, கடமைப்‌ பொறுப்புகள்‌ பற்றிய விவரங்கள்‌; (1) தற்போதுள்ள அதிகார அமைப்பு ஒரு தரப்பினராக இருக்கிறதும்‌, வாரியத்தை நிறுவும்‌ தேதியன்று நடப்பில்‌ உள்ளதும்‌, 30 ஆம்‌ பிரிவு உள்ளடக்குகிறதுமான அனைத்துச்‌ சட்ட நடவடிக்கைகளையும்‌ பற்றிய விவரங்கள்‌. 26. குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுப்‌ பணிகள்‌ வாரியத்திடம்‌ உற்றமைதல்‌.- (1) இந்தச்‌ சட்டத்தில்‌ அடங்கியுள்ள பிற வகைமுறைகளுக்கு உட்பட்டு, சென்னைப்‌ பெருநகரப்‌ பரப்பிடத்திற்கான தனிப்பட்ட குடிநீர்வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுப்‌ பணிகள்‌ (அந்தப்‌ பரப்பிடத்திலுள்ளே அல்லது வெளியே நடைபெற்று வரும்‌ பணிகள்‌ அனைத்தும்‌, அந்தப்‌ பரப்பிடத்திலுள்ளே அல்லது வெளியே மேற்சொன்ன பணிகளுக்கு இணைவாகவுள்ள குடிநீர்ப்‌ பணியமைப்புகள்‌, கழிவுநீரகற்றுப்‌ பணியமைப்புகள்‌ அனைத்தும்‌ உள்ளடங்கலாக) தொடர்பாக, தற்போதுள்ள ஓர்‌ அதிகார அமைப்பின்‌ சொத்துகள்‌, உடைமைகள்‌, கடப்பாடுகள்‌ அனைத்தும்‌, அரசு, அறிவிக்கை வாயிலாகக்‌ குறித்திடலாகும்‌ தேதியிலிருந்து வாரியத்திற்கு உரிமைமாற்றம்‌ செய்யப்பட்டு, அதனிடம்‌ உற்றமைதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: (i) தற்போதுள்ள வெவ்வேறு அதிகார அமைப்புகளுக்காக, (i) தற்போதுள்ள அதிகார அமைப்புகளின்‌ வெவ்வேறு சொத்துகள்‌, உடைமைகள்‌, கடப்பாடுகள்‌ ஆகியவற்றை உற்றமையச்‌ செய்வதற்காக, வெவ்வேறு தேதிகள்‌ அறிக்கை செய்யப்படலாம்‌. (2) சென்னைப்‌ பெருநகரப்‌ பரப்பிடத்திற்கு வெளியே அமைந்துள்ள குடிநீர்ப்‌ பணியமைப்பு எதுவும்‌, ஒரு பகுதி, அந்தப்‌ பரப்பிடத்திற்கு குடிநீர்‌ வழங்குவதற்காகவும்‌, பிறிதொரு பகுதி பிற பரப்பிடங்களுக்காகவும்‌ அல்லது தோக்கங்களுக்காகவும்‌ பயன்படுத்தப்படுகிறவிடத்து, வாரியமும்‌, அரசும்‌, இந்தச்‌ சட்டம்‌ நடைமுறைக்கு வந்த தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்‌ அத்தகைய பணியமைப்பின்‌ வாரியத்திற்கு உள்ள கட்டுப்பாட்டின்‌ தன்மையினையும்‌ அளாவுகையையும்‌, அந்தப்‌ பரப்பிடத்திற்கு வழங்கப்படவிருக்கும்‌ குடிநீரின்‌ தரத்தையும்‌ அளவினையும்‌, அதனுடன்‌ தொடர்புடைய பிற பொருட்பாடுகளையும்‌ குறித்துரைக்கின்ற ஓர்‌ உடன்பாட்டினைச்‌ செய்து கொள்ளுதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: அத்தகைய உடன்பாடு இல்லாதிருக்கையில்‌, அல்லது அத்தகைய உடன்பாடு செய்துகொள்ளப்படும்‌ காலம்‌ வரையிலும்‌, இந்தச்‌ சட்டம்‌ நடைமுறைக்கு வருகிற தேதியன்று நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளும்‌ பணியமைப்புகளும்‌ தொடர்ந்து நடைமுறையில்‌ இருந்துவருவதற்கும்‌ பேணிவரப்படுவதற்கும்‌ அரசு பொறுப்புடையதாக இருத்தல்‌ வேண்டும்‌. 27 (3) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுப்‌ பணி தொடர்பான உடைமைகள்‌, அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு ஒட்டிமுன்பு ஓர்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பின்‌ அனுபோகத்தில்‌ அல்லது கட்டுப்பாட்டில்‌ இருக்கலாகும்‌ உரிமைகள்‌, அதிகாரங்கள்‌, அதிகார உரிமைகள்‌, சிறப்புரிமைகள்‌ அனைத்தையும்‌, பண இருப்புகள்‌, வைப்பிடுகள்‌, நிதியங்கள்‌, முதலீடுகள்‌ உள்ளடங்கலாக அசையும்‌ மற்றும்‌ அசையாச்‌ சொத்து அனைத்தையும்‌, அத்தகைய சொத்தில்‌ உள்ள அல்லது அதிலிருந்து எழுகிற பிற உரித்தங்கள்‌, உரிமைகள்‌ அனைத்தையும்‌, அது தொடர்பான புத்தகங்கள்‌, கணக்குகள்‌, ஆவணங்கள்‌ அனைத்தையும்‌ உள்ளடக்குவதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது தொடர்பான கடப்பாடுகள்‌, அத்தகைய பணியமைப்பு தொடர்பான அடைகடன்கள்‌, கடப்பாடுகள்‌, கடமைப்பொறுப்புகள்‌ அனைத்தையும்‌ உள்ளடக்குவதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. (4) சென்னை மாநகராட்சி மன்றம்‌ தொடர்பாக அறிவிக்கை செய்யப்பட்ட தேதி, அரசு தொடர்பாக அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு முந்தியதாக இருக்கிறது என்றால்‌, பிந்திய தேதி வரையிலும்‌, சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்திற்கு வெளியே அமைந்து ஆனால்‌ தனிப்பட்டு அந்தப்‌ பரப்பிடத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறதுமான குடிநீர்ப்பணியமைப்புகள்‌ பொறுத்தும்‌, முந்திய தேதியன்று நடைமுறையில்‌ இருந்த ஏற்பாடுகளும்‌, பணியமைப்புகளும்‌, தொடர்ந்து இருந்து வருவதற்கும்‌, பேணிவரப்படுவதற்கும்‌ அரசு பொறுப்புடையதாக இருத்தல்‌ வேண்டும்‌. 27. நடைபெறுகின்ற பணிகளைத்‌ தொடர்வதற்கான வகைமுறை.- (1) 26 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி தற்போதுள்ள ஓர்‌ அதிகார அமைப்பின்‌ உடைமைகளும்‌ கடப்பாடுகளும்‌, வாரியத்திற்கு உரிமை மாற்றம்‌ செய்யப்பட்டபோதிலும்‌, இந்தப்‌ பிரிவின்‌ வகைமுறைகள்‌, நடைபெற்றுவருகின்ற பணியமைப்புக்குப்‌ பொருந்துவதாகும்‌. (2) சென்னை மாநகராட்சி மன்றத்திற்குப்‌ பொருந்தத்தக்கதாக அறிவிக்கை செய்யப்பட்ட தேதியிலிருந்து, அந்தத்‌ தேதிக்கு ஒட்டிமுன்பு, (சென்னை மாநகராட்சி மன்றத்திற்காகத்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியத்தினால்‌ நிறைவேற்றப்படுகிற அல்லது நடைபெற்றுவருகிற பணியமைப்புகள்‌ நீங்கலாக) அந்த மாநகராட்சி மன்றத்தினால்‌ நிறைவேற்றப்பட்டு வருகிற அல்லது நடைபெற்றுவருகிற பணியமைப்புகள்‌, வாரியத்தினால்‌ எடுத்துக்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; அந்தத்‌ தேதியிலிருந்து அதைத்‌ தொடர்ந்து முடிக்கவும்‌ அதுவே பொறுப்புடையதாக இருத்தல்‌ வேண்டும்‌. (3) தற்போதுள்ள தொடர்புடைய அதிகார அமைப்புக்குப்‌ பொருந்தத்தக்கதாக அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு ஒட்டி முன்பு, ஏதேனும்‌ பிற அதிகார அமைப்புக்காகத்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியத்தினால்‌ நிறைவேற்றப்படுகிற அல்லது நடைபெற்றுவருகின்ற பணியமைப்புகள்‌- 28 (ஐ) தற்போதுள்ள அதிகார அமைப்பின்‌ உடைமைகளும்‌, கடப்பாடுகளும்‌, 26 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி வாரியத்திற்கு உரிமைமாற்றம்‌. செய்யப்படாதிருக்கிறது என்றால்‌, அந்த அதிகாரஅமைப்பு சார்பாகவும்‌, (b) அத்தகைய சொத்துகளும்‌ கடப்பாடுகளும்‌, வாரியத்திற்கு உரிமைமாற்றம்‌ செய்யப்பட்டிருக்கிறது என்றால்‌, வாரியத்தின்‌ சார்பாகவும்‌, அந்த வாரியத்தினால்‌ தொடர்ந்து முடிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) தற்போதுள்ள ஓர்‌ அதிகார அமைப்புக்குப்‌ பொருந்தத்தக்கதாக அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு ஒட்டி முன்பு, அந்த அதிகார அமைப்பினால்‌ நிறைவேற்றப்பட்டு வருகிற அல்லது நடைபெற்றுவருகிற பணியமைப்புகளுக்கு (2) ஆம்‌ உட்பிரிவு அல்லது (3) ஆம்‌ உட்பிரிவு பொருந்தத்தக்கதாக இராத நேர்வுகளில்‌, அந்தத்‌ தேதியிலிருந்து அதைத்‌ தொடரவும்‌, முடிக்கவும்‌ தற்போதுள்ள அந்த அதிகார அமைப்பு பொறுப்புடையதாக இருக்கும்‌. (5௮ஆம்‌ உட்பிரிவிலும்‌, (4) ஆம்‌ உட்பிரிவிலும்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள பணியை மனநிறைவான வகையில்‌ முடிப்பதற்கு, தற்போதுள்ள தொடர்புடைய அதிகார அமைப்பு பொறுப்புடையதாக இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அதற்கு முழுமையாகப்‌ பதில்‌ கூறத்தக்கதும்‌ ஆகும்‌; மேலும்‌, அந்தப்‌ பணி முடிவடைந்த பின்பு உடனேயே அத்தகைய பணி தொடர்பான சொத்துகள்‌, உடைமைகள்‌, அனைத்தையும்‌ வாரியத்திடம்‌ ஒப்படைத்தல்‌ வேண்டும்‌. (6) தற்போதுள்ள ஓர்‌ அதிகார அமைப்பு, இந்தப்‌ பிரிவின்படி பணி எதனையும்‌ தொடர்ந்து நிறைவேற்றுகிறவிடத்து, வாரியம்‌, தனது நலன்களைப்‌ பாதுகாத்துக்கொள்வதற்குத்‌ தேவையானதெனத்‌ தான்‌ கருதலாகிற பணி மீதும்‌, அதனுடன்‌ தொடர்புடைய பொருட்பாடுகள்‌ அனைத்தின்மீதும்‌ கண்காணிப்பு அதிகாரங்களைச்‌ செலுத்துவதற்கு உரிமையுடையது ஆகும்‌; மற்றும்‌, தற்போதுள்ள அதிகார அமைப்பு, அந்த வாரியத்தின்‌ நலன்களுக்குப்‌ பாதகமான முறையில்‌ அல்லது முறையற்ற அதிகப்படியான செலவில்‌ அத்தகைய பணிகளை நிறைவேற்றுகிறது என்றால்‌, வாரியம்‌, அந்தச்‌ சூழ்நிலைகளில்‌ தேவையெனக்‌ கருதலாகும்‌ நடவடிக்கைக்காக அந்தப்‌ பொருட்பாட்டுினை அரசுக்குக்‌ குறித்தனுப்பலாம்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ மற்றும்‌ 26 ஆம்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காக, "நடைபெற்றுவருகிற பணிகள்‌" என்பது, 26 ஆம்‌ பிரிவின்கீழ்‌ பொருந்தத்தக்க தொடர்புற்ற தேதியன்று உள்ளபடியே தொடங்கப்பட்டு, நடப்பிலுள்ள சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்திலுள்ள அல்லது அதற்கான குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுப்‌ பணிகள்‌ தொடர்பான பணி எதனையும்‌ உள்ளடக்கும்‌; ஆனால்‌, ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ள அல்லது பயன்படுத்தப்பட்டு வருகிற பணி எதனையும்‌ பேணி வருதலை, மாறுதல்‌ செய்வதை அல்லது பழுதுபார்ப்பதை உள்ளடக்காது. 28. உடைமைகள்‌ முதலானவற்றை வாறியத்திற்கு உரிமைமாற்றம்‌ செய்யும்‌ கடமை.- (1) 26 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி சொத்து அல்லது உடைமை 29 எதுவும்‌ வாரியத்திற்கு உரிமைமாற்றம்‌ செய்யப்பட்டு, அதனிடம்‌ உற்றமைகிறவிடத்து, அப்போது (ஐ அத்தகைய சொத்து அல்லது உடைமை எதுவும்‌ எவருடைய அனுபோகத்தில்‌, பாதுகாப்பில்‌ அல்லது கட்டுப்பாட்டில்‌ இருக்கிறதோ அந்த ஒவ்வொருவரும்‌, 27 ஆம்‌ பிரிவில்‌ மற்றப்படி வகை செய்யப்பட்டுள்ளவாறு தவிர, அந்தச்‌ சொத்தினை அல்லது உடைமையை வாரியத்திடம்‌ உடனடியாக ஒப்படைத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌, (௦) அறிவிக்கை செய்யப்பட்ட தேதியன்று 26 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுப்‌ பணிகள்‌ தொடர்பான புத்தகங்கள்‌, ஆவணங்கள்‌ அல்லது பிற வரைதாள்கள்‌ எவற்றையும்‌ தம்‌ அனுபோகத்தில்‌, பாதுகாப்பில்‌ அல்லது கட்டுப்பாட்டில்‌ கொண்டிருக்கிற எவரும்‌, மேற்சொன்ன அந்தப்‌ புத்தகங்கள்‌, ஆவணங்கள்‌, வரைதாள்கள்‌ ஆகியவற்றுக்குக்‌ கணக்கு காட்ட கடப்பாடுடையவர்‌ ஆவார்‌; மற்றும்‌ அவர்‌ அவற்றை வாரியத்திடம்‌ அல்லது வாரியம்‌ பணிக்கிறவரறிடம்‌ ஒப்படைவு செய்தல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்படி வாரியத்திற்கு உரிமைமாற்றம்‌ செய்யப்பட்டு அதனிடம்‌ உற்றமைகிற சொத்துகள்‌, உடைமை அனைத்தையும்‌ தனது அனுபோகத்தில்‌ எடுத்துக்கொள்வதற்காகத்‌ தேவையான நடவடிக்கைகள்‌ அனைத்தையும்‌ வாரியம்‌ எடுப்பது சட்டப்படியானதாகும்‌. 29. பூசல்களைத்‌ தீர்த்தல்‌- (1) உடைமையையும்‌ கடப்பாடுகளையும்‌ அடையாளங்கண்டு மதிப்பிடுதல்‌ மற்றும்‌ ஏதேனும்‌ நிதி ஏற்பாடு உள்ளடங்கலாக, 26 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி உடைமை அல்லது சொத்து எதனையும்‌ உரிமைமாற்றம்‌ செய்து உற்றமையச்‌ செய்வது தொடர்பாக எழுகிற வினாக்கள்‌. அனைத்தும்‌- (ஐ) அரசினைப்‌ பொறுத்தவரை, அரசுக்கும்‌ வாரியத்திற்குமிடையிலான உடன்பாட்டின்‌ வாயிலாகவும்‌, (௦) தற்போதுள்ள ஏதேனும்‌ பிற அதிகார அமைப்பினைப்‌ பொறுத்தவரை, வாரியத்தினால்‌ நியமிக்கப்பட்ட ஒருவரையும்‌, தற்போதுள்ள தொடர்புடைய அதிகார அமைப்பினால்‌ நியமிக்கப்பட்ட ஒருவரையும்‌ கொண்டிருக்கிற ஒரு குழுவினாலும்‌, தீர்மானிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) வினா எதன்‌ பேரிலும்‌ செய்யப்படும்‌ இந்தக்‌ குழுவின்‌ முடிபு வாரியத்திற்கு அல்லது தற்போதுள்ள தொடர்புடைய அதிகார அமைப்பிற்கு ஏற்புடையதாக இல்லை என்றால்‌, அந்தப்‌ பொருட்பாடு அரசுக்கு குறித்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. அதன்பேரில்‌ அரசின்‌ முடிபே இறுதியானதாகும்‌. (3) இந்தப்‌ பிரிவின்படி தீர்மானிக்கப்பட்ட மதிப்பு, உரிமைமாற்றம்‌ செய்யப்பட்ட தேதியன்று இருந்தவாறான மதிப்பாக வாரியத்தின்‌ புத்தகங்களில்‌ பதிவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 30 30. நடைமுறையிலுள்ள வகைமுறைகள்‌, ஒப்பந்தங்கள்‌, கடமைப்‌ பொறுப்புகள்‌, சட்ட நடவடிக்கைகள்‌ முதலானவை தொடர்தல்‌.- அறிக்கை செய்யப்பட்ட தேதியிலிருந்து, (ஐ) தற்போதுள்ள அதிகாரஅமைப்பினால்‌ பிறப்பிக்கப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட அறிவிக்கை, ஆணை, திட்டமுறை, விதி, துணைவிதி, படிவம்‌ அல்லது அறிவிப்பு எதுவும்‌ மற்றும்‌ வழங்கப்பட்ட உரிமம்‌ அல்லது அனுமதி எதுவும்‌ சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ அல்லது அதன்‌ நோக்கத்திற்காக குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றும்‌ பணிக்கு அது தொடர்புடையதாக இருக்கிற அளவுக்குத்‌ தொடர்ந்து நடைமுறையில்‌ இருந்துவருதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட ஏதேனும்‌ அறிவிக்கை, திட்டமுறை, ஆணை, ஒழுங்குமுறைவிதி, படிவம்‌ அல்லது அறிவிப்பு வாயிலாக அல்லது வழங்கப்பட்ட ஏதேனும்‌ உரிமம்‌ அல்லது அனுமதி வாயிலாக அது செல்லாததாக்கப்படுகிறது என்றாலன்றியும்‌ செல்லாததாக்கப்படு கிற வரையிலும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி பிறப்பிக்கப்பட்டதாக, வெளியிடப்பட்டதாக, அல்லது வழங்கப்பட்டதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌; (b) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ அல்லது அதன்‌. நோக்கத்திற்காக, குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றும்‌ பணிக்குத்‌ தொடர்புடையதாக தற்போதுள்ள அதிகார அமைப்பினால்‌, அதனுடன்‌ அல்லது அதற்காக, அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கடமைப்‌ பொறுப்புகள்‌, கடப்பாடுகள்‌ அனைத்தும்‌, செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்‌ அனைத்தும்‌, செய்வதாக பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துப்‌ பொருட்பாடுகளும்‌, காரியங்களும்‌, வாரியத்தினால்‌, அதனுடன்‌ அல்லது அதற்காக, மேற்கொள்ளப்பட்டதாக, செய்து கொள்ளப்பட்டதாக அல்லது பொறுப்பேற்றுக்‌ கொள்ளப்பட்டதாக கருதப்படுதல்‌ வேண்டும்‌; (6) தற்போதுள்ள ஓர்‌ அதிகார அமைப்பினால்‌ அல்லது அதற்கு எதிராகத்‌ தொடுக்கப்பட்ட அல்லது தொடுக்கப்பட்டிருந்திருக்கக்‌ கூடிய உரிமை வழக்குகள்‌, குற்ற வழக்குகள்‌, மேல்முறையீடுகள்‌ அல்லது பிற சட்ட நடவடிக்கைகள்‌ அனைத்தும்‌, அவை எந்தத்‌ தன்மையதாயினும்‌, 26 ஆம்‌ பிரிவின்படி வாரியத்திற்கு உரிமைமாற்றம்‌ செய்யப்பட்டிருக்கிற உடைமைகளையும்‌, கடப்பாடுகளையும்‌ அவை பொறுத்ததாக இருக்கிற அளவுக்கு, வாரியத்தினால்‌ அல்லது அதற்கு எதிராகத்‌ தொடரப்படலாம்‌ அல்லது தொடுக்கப்படலாம்‌: வரம்புரையாக: இந்தக்‌ கூறில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு முந்திய கால அளவு எதற்கும்‌, தற்போதுள்ள அதிகார அமைப்புக்குப்‌ பொருந்தத்தக்கதாக விதிக்கப்பட்ட, தண்டல்‌ செய்யப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட வீதம்‌, செலவிடு, மேல்வரி அல்லது கட்டணம்‌ எதனையும்‌ விதித்தல்‌, தண்டல்‌ செய்தல்‌, செலுத்துதல்‌ பொறுத்த அத்தகைய உரிமைவழக்கு, குற்றவழக்கு, மேல்முறையீடு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதற்கும்‌ பொருந்துதல்‌ ஆகாது. 31 அத்தியாயம்‌ V நிதி, கணக்குகள்‌ மற்றும்‌ தணிக்கை. 31. வாரியத்தின்‌ நிதியம்‌.- (1) வாரியம்‌ தனது சொந்த நிதியத்தைக்‌ கொண்டிருக்கும்‌; மற்றும்‌ வாரியத்தின்‌ வரவுகள்‌ அனைத்தும்‌ அதில்‌ வரவு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மேலும்‌ செலுத்தப்படவேண்டியவை அனைத்தும்‌ அந்நிதியத்திலிருந்து வாரியத்தினால்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (2) அந்த நிதியத்திற்குச்‌ சொந்தமான பணங்கள்‌ அனைத்தும்‌,- () 1934 ஆம்‌ ஆண்டு இந்தியச்‌ சேமவங்கிச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 1/1934) பொருளின்படியான பட்டியல்‌ வங்கி எதிலும்‌, அல்லது (0 1970 ஆம்‌ ஆண்டு வங்கித்‌ தொழில்‌ நிறுமங்கள்‌ (கையகப்படுத்துதல்‌ மற்றும்‌ நிறுவனங்களை உரிமைமாற்றம்‌ செய்தல்‌) சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 51970) பொருள்வரையறை செய்யப்பட்டுள்ளவாறான நேரிணையான புதிய வங்கி எதிலும்‌, அல்லது 0) 1955 ஆம்‌ ஆண்டு இந்திய அரசு வங்கிச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 237955) பொருள்வரையறை செய்யப்பட்டுள்ளவாறான இந்திய அரசு வங்கியில்‌ அல்லது 1959 ஆம்‌ ஆண்டு இந்திய மாநில வங்கி (கிளை வங்கிகள்‌) சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ XXXVII/1959) பொருள்வரையறை செய்யப்பட்டுள்ளவாறான அதன்‌ கிளை வங்கிகளில்‌, அல்லது (iv) அரசினால்‌ ஒப்புதலளிக்கப்படலாகும்‌ காப்புறுதி ஆவணங்களில்‌, வைப்பீடு செய்யப்படலாம்‌ அல்லது முதலீடு செய்யப்படலாம்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, அரசு தீர்மானிக்கலாகும்‌ வரையீடுகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்பேரில்‌, வாரியத்திற்கு மாணியங்களை, உதவித்‌ தொகைகளை அல்லது முன்பணங்களை அல்லது பெறுகடன்‌௧ளை அரசு, அவ்வப்போது, வழங்கலாம்‌. (4) வாரியம்‌, அந்தச்‌ சட்டத்தின்‌ அனைத்து நோக்கங்களுக்காகவும்‌ அல்லது அவற்றுள்‌ எதற்காகவும்‌, மைய அல்லது மாநில அரசிடமிருந்து அல்லது ஓர்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பிடமிருந்து அல்லது எவரேனும்‌ தனிப்பட்டவரிடமிருந்து அல்லது கூட்டு நிறுவனமாகப்‌ பதிவு செய்யப்பட்டதாகவோ, பதிவு செய்யப்படாததாகவோ குழுமத்திடமிருந்து மானியங்கள்‌, உதவித்‌ தொகைகள்‌, நன்கொடைகள்‌, கொடைகள்‌ ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளலாம்‌. (5) வாரியம்‌, ஒரு கடன்தீர்‌ நிதியம்‌, தேய்மான காப்பு நிதியம்‌, பிற நிதியங்கள்‌: ஆகியவற்றை வகுத்துரைக்கப்படும்‌ முறையிலும்‌ வடிவத்திலும்‌ ஏற்படுத்தலாம்‌. அத்தகைய நிதியங்கள்‌, அரசின்‌ ஒப்புதலளிப்புடன்‌ வாரியத்தால்‌ தீர்மானிக்கப்படும்‌. முறையில்‌ முதலீடு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 32. கடன்‌ வாங்கவும்‌ வழங்கவும்‌ வாரியத்திற்குள்ள அதிகாரம்‌. (1) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கும்‌ அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை 32 விதிகளுக்கும்‌ உட்பட்டும்‌, இதற்கென அரசினால்‌ பிறப்பிக்கப்படும்‌ ஒரு பொது அல்லது ஒரு சிறப்பு ஆணை வாயிலாக, அதனால்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ நிபந்தனைகளுக்கு உட்பட்டும்‌, அதன்‌ முன்‌ ஒப்பதலளிப்புடனும்‌, வாரியம்‌, அவ்வப்போது, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காகக்‌ கோரப்படுகிற பணத்தை கழே குறித்துரைக்கப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளில்‌ கடனாக வாங்கலாம்‌; அவையாவன:- (ஐ) ஏதேனும்‌ வங்கியிடமிருந்து அல்லது பிற நிதி நிறுவனங்களிடமிருந்து அல்லது 1956 ஆம்‌ ஆண்டு ஆயுள்‌ காப்பீட்டுக்‌ கழகச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 31/1956) 3 ஆம்‌ பிரிவின்படி நிறுவப்பட்ட இந்திய ஆயுள்‌ காப்பீட்டுக்‌ கழகத்திடமிருந்து பெறுகடன்களைப்‌ பெறுதல்‌; அல்லது (b) மைய அல்லது மாநில அரசுக்குச்‌ சொந்தமான அல்லது அதன்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள கழகம்‌ எதனிடமிருந்தும்‌ பெறுகடன்‌களைப்‌ பெறுதல்‌; அல்லது (6) அரசினால்‌ ஒப்புதலளிக்கப்படும்‌ முறையிலும்‌ படிவத்திலும்‌, முறிகளை அல்லது கடனீட்டு ஆவணங்களை அல்லது பங்குகளை அல்லது மூலதனப்‌ பங்குகளை வெளியிடுவதன்‌ வாயிலாக அல்லது பிறவாறாக, பொதுமக்களிடமிருந்து பெறுகடன்களைப்‌ பெறுதல்‌: வரம்புரையாக: இந்த உட்பிரிவின்படி கடனாகப்‌ பெறப்பட்ட பெறுகடன்கள்‌ அல்லது தொகைகள்‌, அத்தகைய பெறுகடன்கள்‌ அல்லது கடன்‌ தொகைகள்‌ எந்தக்‌ குறித்துரைக்கப்பட்ட நோக்கம்‌ அல்லது நோக்கங்களுக்காகப்‌ பெறப்பட்டனவோ அல்லது வாங்கப்பட்டனவோ, அந்த நோக்கம்‌ அல்லது நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கும்‌, குறித்துரைக்கப்படும்‌ நிபந்தனைகளுக்கும்‌ வரம்புகளுக்கும்‌ உட்பட்டு, வாரியம்‌, மேம்பாட்டுத்‌ திட்டம்‌ எதற்காகவும்‌, தான்‌ தீர்மானிக்கலாகும்‌ வரையீடுகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரில்‌ பெறுகடன்களையும்‌, முன்தொகைகளையும்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பு எதற்கும்‌ தனது நிதியங்களிலிருந்து வழங்கலாம்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவின்படி வாரியத்தினால்‌ பெறக்‌ கருதப்படுகிற ஏதேனும்‌ பெறுகடனின்‌ முதலினையும்‌ வட்டியையும்‌ திரும்பச்‌ செலுத்துவதற்கு, அரசு, தான்‌ தக்கதெனக்‌ கருதுகிற முறையில்‌ பொறுப்புறுதி அளிக்கலாம்‌: வரம்புரையாக: அரசு, அத்தகைய பொறுப்புறுதிகள்‌ நடைமுறையில்‌ இருக்கிறவரையில்‌, சட்டமன்ற ஈரவைகளின்‌ முன்பும்‌, ஒவ்வோராண்டிலும்‌ வரவு செலவுத்‌ திட்ட அமர்வின்போது, நடப்பு ஆண்டின்போது அளிக்கப்பட்ட பொறுப்புறுதிகள்‌, எவையேனுமிருப்பின்‌ அவை பற்றிய விவர அறிக்கை ஒன்றையும்‌, அத்தகைய பொறுப்புறுதிகள்‌ எவற்றின்‌ காரணமாகவும்‌, மாநிலத்‌ திரள்‌ நிதியத்திலிருந்து செலுத்தப்பட்டுள்ள அல்லது அவ்வாறு செலுத்தப்பட்ட ஏதேனும்‌ பணத்தைத்‌ திருப்பிச்‌ செலுத்துவதற்காக, மேற்சொன்ன அந்த நிதியத்தில்‌ 33 செலுத்தப்பட்ட, மொத்தத்‌ தொகைகள்‌, எவையேனுமிருப்பின்‌, அவை குறித்த நாளது தேதிவரையிலான கணக்கு ஒன்றையும்‌, முன்னிடுதல்‌ வேண்டும்‌. 33. கடனீட்டு ஆவணங்களின்‌ படிவம்‌, கையொப்பம்‌, பரிமாற்றம்‌, உரிமைமாற்றம்‌ மற்றும்‌ செல்லும்‌ தன்மை.- (1) வாரியத்தால்‌, கடனீட்டு ஆவணங்களின்பேரில்‌ பணம்‌ கடனாகப்‌ பெறப்படும்போதெல்லாம்‌, அரசின்‌ முன்‌ ஒப்புதலளிப்புடன்‌ வாரியம்‌ குறித்துரைக்கலாகும்‌ படிவத்தில்‌ கடனீட்டு ஆவணங்கள்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (2) கடனீட்டு ஆவணங்கள்‌ அனைத்தும்‌, வாரியத்தின்‌ மேலாண்மை இயக்குநரால்‌ கையொப்பமிடப்படுதல்‌ வேண்டும்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவின்படி குறித்துரைக்கப்பட்டுள்ள படிவம்‌ எதிலும்‌ கடனீட்டு ஆவணம்‌ எதனையும்‌ வைத்திருப்பவர்‌ எவரும்‌, (1) ஆம்‌ உட்பிரிவில்‌ வகைசெய்யப்பட்டுள்ள முறையில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள ஏதேனும்‌ பிற படிவத்தில்‌ உள்ள ஒரு கடனீட்டு ஆவணத்தை அதற்கு மாற்றாகவும்‌ வாரியம்‌ தீர்மானிக்கும்‌ வரையீடுகளின்பேரிலும்‌ பெறலாம்‌. (4) வாரியத்தால்‌ வெளியிடப்பட்ட கடனீட்டு ஆவணம்‌ ஒவ்வொன்றும்‌, உரிமைமாற்றத்திற்கு அதில்‌ வேறுமுறை எதுவும்‌ குறித்துவைக்கப்பட்டிருந்தாலன்றி, மேற்குறிப்பு எழுதுவதன்‌ வாயிலாக உரிமைமாற்றம்‌ செய்யப்படத்தக்கதாகும்‌. (5 வாரியத்தால்‌ வெளியிடப்பட்ட கடனீட்டு ஆவணங்களுடன்‌ இணைக்கப்பட்டுள்ள அடையாளச்‌ சீட்டுகள்‌ அனைத்தும்‌ மேலாண்மை இயக்குநரின்‌ கையொப்பத்தைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அத்தகைய கையொப்பம்‌ செதுக்கப்பட்டோ, கல்லச்சுமுறையில்‌ அச்சடிக்கப்பட்டோ, எந்திரமுறை எதனாலும்‌ பொறிக்கப்பட்டோ இருத்தல்‌ வேண்டும்‌. 34, வாரியத்தால்‌ விதிக்கப்படத்தக்க வரிகள்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌. நோக்கங்களுக்காக, வாரியம்‌, தனது பரப்பிடத்திற்குள்‌. அமைந்துள்ள வளாகங்களின்ம்து.- (8) ஒரு நீர்வரியையும்‌, (௦) ஒரு கழிவு நீரகற்று வரியையும்‌. விதித்தல்‌ வேண்டும்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள வரிகள்‌, வகுத்துரைக்கப்படும்‌. விதங்களில்‌ விதிக்கப்படுதல்‌ வேண்டும்‌; அவை, நீர்‌ வரியாக இருக்கும்நேர்வில்‌, சொத்து வரியில்‌ முப்பத்துஐந்து விழுக்காட்டிற்கு மேற்படாமலும்‌, கழிவுநீரகற்று வரியாக இருக்கும்‌ நேர்வில்‌, அதே பெறுமானத்தில்‌ பதினைந்து விழுக்காட்டிற்கு மேற்படாமலும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (3) வாரியம்‌, உள்ளாட்சிப்‌ பகுதி எதற்கும்‌, அத்தகைய பகுதி குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்று அமைப்பு முறையினால்‌ நலன்‌ எதனையும்‌ அல்லது முழுவதையும்‌ பெறவில்லை என்றும்‌ காரணங்காட்டி, நீர்வரி மற்றும்‌ 34 கழிவுநீரகற்று வரி முழுவதிலிருந்தும்‌ அல்லது அதன்‌ பகுதியிலிருந்து விலக்களிக்கலாம்‌ அல்லது அந்த வாரியம்‌, தொடர்புடைய வளாகம்‌ காலியாக இருந்திருக்கிறது என்றும்‌ காரணங்காட்டி, அத்தகைய வரிகளில்‌ பாதிக்கு மேற்படாத பகுதியைக்‌ குறைக்கலாம்‌. விளக்கம்‌.- இந்த அத்தியாயத்தின்‌ நோக்கங்களுக்காக, "வளாகம்‌" என்னும்‌ சொல்‌ நிலம்‌ அல்லது கட்டடம்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌. (4) தற்போதுள்ள அதிகார அமைப்பினால்‌, விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும்‌. சொத்து வரியில்‌ நீர்வரி அல்லது வடிகால்‌ வரி அடங்கியிருக்கிறவிடத்து, அத்தகைய தற்போதுள்ள அதிகாரஅமைப்பு, நீர்வரிக்கும்‌, வடிகால்‌ வரிக்கும்‌ செலுத்த வேண்டிய தொகைக்குச்‌ சமமானதொரு தொகையை சொத்து வரியிலிருந்து குறைத்தல்‌ வேண்டும்‌. 35. விட்டுவிடப்பட்டது. 36. வரிவிதிப்பதன்‌ மீதான வரையறை. வேளாண்மை நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்‌ நிலம்‌ எதற்கும்‌, அந்த நிலத்திற்கு அத்தகைய நோக்கங்களுக்காக வாரியத்தினால்‌ நீர்‌ வழங்கப்படுகிறது என்றாலன்றி, 34 ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள வரிகள்‌ விதிக்கப்படுதல்‌ ஆகாது. 37. வரவு செலவு திட்டங்கள்‌.- (1) நிதி இயக்குநர்‌, ஒவ்வோர்‌ ஆண்டிலும்‌, அடுத்துவரும்‌ ஆண்டிற்கும்‌, அதனைத்‌ தொடர்ந்துவரும்‌ இரண்டாண்டிற்கும்‌, மதிப்பிடப்பட்ட வருவாயையும்‌ செலவினங்களையும்‌ காட்டுகிற ஒரு வருவாய்‌ வரவு செலவுத்‌ திட்டத்தைத்‌ தயாரித்து, ஏற்புக்காக வாரியத்தின்‌ முன்‌ வைத்தல்‌ வேண்டும்‌. (2) அத்தகைய வரவு செலவுத்‌ திட்டம்‌ ஒவ்வொன்றும்‌, வாரியத்தின்‌ கடப்பாடுகள்‌ அனைத்தையும்‌ உரிய முறையில்‌ நிறைவேற்றுவதற்கும்‌, இந்தச்‌ சட்டத்தை உரியவாறு செயற்படுத்துவதற்கும்‌ நடைமுறையில்‌ இயன்ற அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்‌ வேண்டும்‌. (3) அத்தகைய வரவு செலவுத்‌ திட்டம்‌ ஒவ்வொன்றும்‌, மூலதனத்தையும்‌ வருவாயையும்‌ வேறுபடுத்திக்‌ காட்டுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ மூலதன நிதியங்கள்‌ வருவாய்‌ நோக்கங்களுக்காகப்‌ பயன்படுத்தப்படுதல்‌ ஆகாது. (4) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி வாரியம்‌ ஒரு மேம்பாட்டுத்‌ திட்டத்தை ஏற்றுக்கொள்கிறபோதெல்லாம்‌, நிதி இயக்குநர்‌, அந்தத்‌ திட்டத்தின்‌ தொடக்கத்திலிருந்து ஐந்து ஆண்டு கால அளவை உள்ளடக்குகிற ஒரு மூலதன வரவு செலவுத்‌ திட்டத்தைத்‌ தயாரித்து வாரியத்தின்‌ முன்‌ வைத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அத்தகைய வரவு செலவுத்‌ திட்டம்‌ அவ்வப்போது வாரியத்தால்‌ மறு ஆய்வு செய்யப்பட்டு, திருத்தியமைக்கப்படலாம்‌. (5) நிதி இயக்குநர்‌, அடுத்துவரும்‌ மூன்று நிதி ஆண்டிற்கான ஒரு பண வரவு செலவுத்‌ திட்டத்தை, ஆண்டுதோறும்‌ தயாரித்து, வாரியத்தின்‌ முன்‌ வைத்தல்‌ வேண்டும்‌. 35 (6)_ இந்தப்‌ பிரிவில்‌ பிறவாறாக வகைசெய்யப்பட்டுள்ளவாறல்லாமல்‌, அனைத்து வரவு செலவுத்‌ திட்டங்களும்‌, வகுத்துரைக்கப்படும்‌ படிவத்தில்‌ இருத்தலும்‌, வகுத்துரைக்கப்படும்‌ தகவல்களை கொண்டிருத்தலும்‌ வகுத்துரைக்கப்படும்‌ தேதிகளில்‌ தயாரிக்கப்படுதலும்‌ வேண்டும்‌. (7) வாரியம்‌, அவ்வாறு தன்‌ முன்‌ வைக்கப்படும்‌ வரவு செலவுத்‌ திட்டம்‌ ஒவ்வொன்றையும்‌ பரிசீலனை செய்து, மாற்றமைவு இன்றியோ, தான்‌ தக்கதெனக்‌ கருதும்‌ மாற்றமைவுகளுடனோ, அதனை ஒப்பளித்தல்‌ வேண்டும்‌. (8) அவ்வாறு வாரியத்தினால்‌ ஒப்பளிக்கப்பட்டவாறான வரவு செலவுத்‌ திட்டம்‌ ஒவ்வொன்றும்‌, அரசுக்குப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. அது அதனைப்‌ பெற்றதிலிருந்து ஒரு மாதத்திற்குள்‌ எந்தச்‌ சமயத்திலும்‌- (ஐ) அந்த வரவு செலவுத்‌ திட்டத்திற்கு ஒப்புதலளிக்கலாம்‌; அல்லது (௦) அந்த வரவு செலவுத்‌ திட்டத்தை அல்லது அதன்‌ பகுதி எதனையும்‌ ஏற்க மறுக்கலாம்‌; மற்றும்‌, அந்த வரவு செலவுத்‌ திட்டத்தை திருத்துவதற்காக வாரியத்திற்குத்‌ திருப்பி அனுப்பலாம்‌; மேலும்‌ வரவு செலவுத்திட்டம்‌ எதுவும்‌ அவ்வாறு வாரியத்திற்குத்‌ திருப்பியனுப்பப்படு கிறது என்றால்‌, அது, உடனடியாக அதனைத்‌ திருத்துவதற்கு முற்படுதலும்‌, திருத்தப்பட்டவாறான வரவு செலவுத்‌ திட்டத்தை அரசுக்குப்‌ பணிந்தனுப்புதலும்‌ வேண்டும்‌; அதன்பின்‌ அரசு அதற்கு ஒப்புதல்‌ அளித்தல்‌ வேண்டும்‌. (9) எந்த ஆண்டிற்காக வரவு செலவுத்‌ திட்டம்‌ எதற்கும்‌ ஒப்பளிப்பு அளிக்கப்பட்டிருக்கிறதோ அந்த ஆண்டில்‌ எந்தச்‌ சமயத்திலும்‌, வாரியம்‌ ஒரு திருத்தப்பட்ட வரவு செலவுத்‌ திட்டம்‌ தயாரிக்கப்பட்டு, தன்‌ முன்‌ வைக்கப்படுமாறு செய்விக்கலாம்‌. 38. ஐந்தொகைக்‌ குறிப்பும்‌, வருமான மற்றும்‌ செலவினக்‌ கணக்கும்‌.- (1) ஐந்தொகைக்‌ குறிப்பு, வருமான மற்றும்‌ செலவினக்‌ கணக்கு, வாரியத்தின்‌ நிதி ஆதாரங்கள்‌ மற்றும்‌ நிதியங்களைப்‌ பயன்படுத்துவது குறித்த விவர உரை ஆகியவை, வகுத்தரைக்கப்படும்‌ படிவத்திலும்‌ முறையிலும்‌, தயாரிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) வாரியம்‌, ஒவ்வோராண்டிலும்‌, வாரியத்தின்‌ புத்தகங்களும்‌ கணக்குகளும்‌ மார்ச்சு 31 அன்று இருந்தவாறு இருப்புக்கணக்கு சரிபார்க்கப்பட்டு முடிக்கப்படுமாறு செய்வித்தல்‌ வேண்டும்‌. 39. தணிக்கை.- (1) வாரியத்தின்‌ கணக்குகள்‌, 1956 ஆம்‌ ஆண்டு நிறுமங்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 171956) 226 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி ஒரு தணிக்கையாளராகச்‌ செயற்படுவதற்கு உரியவாறு தகுதியுடைய ஒரு தணிக்கையாளரால்‌ தணிக்கை செய்யப்படுதல்‌ வேண்டும்‌; அவர்‌, வாரியத்தினால்‌ அரசின்‌ ஒப்புதலளிப்புடன்‌, அமர்த்தப்படுதல்‌ வேண்டும்‌; மேலும்‌, அவர்‌ வாரியத்தினால்‌ குறிக்கப்படும்‌ பணியூதியத்தைப்‌ பெறுதல்‌ வேண்டும்‌. (2) தணிக்கையாளருக்கு வாரியத்தின்‌ ஆண்டு கணக்கின்‌ ஒரு படி வழங்கப்படுதல்‌ வேண்டும்‌: மற்றும்‌, அதனுடன்‌ தொடர்புடைய புத்தகங்களுடன்‌, 36 செலவுச்‌ சீட்டுகளுடனும்‌ சேர்த்து அதனை ஆய்வு செய்தல்‌ அவரது கடமையாகும்‌; மேலும்‌, வாரியத்தினால்‌ வைத்துவரப்படும்‌ அனைத்துப்‌ புத்தங்களின்‌ பட்டியல்‌ ஒன்று அவருக்கு அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவர்‌, நியாயமான எல்லா நேரங்களிலும்‌, வாரியத்தின்‌ புத்தகங்கள்‌, கணக்குகள்‌, செலவுச்‌ சீட்டுகள்‌, பிற ஆவணங்கள்‌ ஆகியவற்றைப்‌ பார்வையிடுவதற்கு வாய்ப்பு பெற்றிருப்பார்‌. (3) தணிக்கையாளர்‌, அத்தகைய கணக்குகள்‌ தொடர்பாக, வாரியத்தின்‌. முன்னாள்‌ இயக்குநர்‌ அல்லது தற்போதைய இயக்குநர்‌, அலுவலர்‌ அல்லது பிற வேலை பெறுநர்‌ எவரையும்‌ விசாரணை செய்யலாம்‌; மற்றும்‌, தமது கஉகமைகளை ஆற்றுவதற்காக, தாம்‌ தேவையெனக்‌ கருதலாகும்‌ தகவலையும்‌, விளக்கத்தையும்‌, வாரியத்திடமிருந்து அல்லது அத்தகைய இயக்குநர்‌, அலுவலர்‌ அல்லது பிற பணியாளரிடமிருந்து கோருவதற்கு உரிமையுடையவர்‌ ஆவார்‌. (4) தணிக்கையாளர்‌, தம்மால்‌ ஆய்வு செய்யப்பட்ட ஆண்டு கணக்குகளின்‌ மீது ஓர்‌ அறிக்கையை வாரியத்திற்கு அளித்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அத்தகைய அறிக்கை ஒவ்வொன்றிலும்‌, அந்த வாரியத்தின்‌. அலுவல்களின்‌. உண்மையானதும்‌, சரியானதுமான நிலையை அந்தக்‌ கணக்குகள்‌. காட்டுகின்றனவா என்பதையும்‌, அவர்‌ வாரியத்திடமிருந்து அல்லது முன்னாள்‌ இயக்குநர்‌ அல்லது தற்போதைய இயக்குநர்‌, அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ எவரிடமிருந்தும்‌ தகவல்‌ அல்லது விளக்கம்‌ எதனையும்‌ கேட்டனுப்பிய நேர்வில்‌, அது அளிக்கப்பட்டதா என்பதையும்‌, அது மனநிறைவளிக்கும்‌ வகையில்‌ உள்ளதா என்பதையும்‌ குறித்த தமது கருத்தை உரைத்தல்‌ வேண்டும்‌. (5) முன்சென்ற உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதற்கும்‌ ஊறுபாடின்றி, அரசு, எந்தச்‌ சமயத்திலும்‌, வாரியத்தின்‌ கணக்குகளை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஒரு தணிக்கையாளரை அமர்த்தலாம்‌; மற்றும்‌, அத்தகைய ஆய்வு செய்தலுக்கும்‌ அறிக்கை அளித்தலுக்கும்‌ தொடர்புடையதாக அத்தகைய தணிக்கையாளரால்‌ செய்யும்படி நேரிட்ட செலவினம்‌ எதுவும்‌, வாரியத்தால்‌ செலுத்தப்படத்தக்கதாகும்‌. 40. குறித்த சில திட்டமுறைகள்‌, திட்டங்கள்‌, பணியமைப்புகள்‌ ஆகியவற்றுக்கு அரசின்‌ முன்‌ ஒப்பளிப்பு.-- (1) குடிநீர்‌ பணியமைப்புகள்‌ அல்லது கழிவுநீரகற்றுப்‌ பணியமைப்புகள்‌ பொறுத்த திட்டமுறைகளுக்கான அல்லது திட்டங்களுக்கான அல்லது அவற்றுடன்‌ தொடர்புடைய பிற பணியமைப்புக்கான செலவுத்‌ தொகை, (ஐ தற்போதுள்ள பணியமைப்புகள்‌ அல்லது முன்னரே பயன்பாட்டிலுள்ள பணியமைப்புகளுக்கான விரிவாக்கங்களை, பெரிதாக்கங்களை, சேர்க்கைகளை உள்ளடக்கியிராத மாற்றமைப்புகள்‌, மறு கட்டுமானங்கள்‌, கட்டமைப்பு மாற்றங்கள்‌, இணக்கமைப்புகள்‌, நிலைமாற்றங்கள்‌, மேம்பட்ட இணைப்புச்‌ சாதனங்கள்‌, பொருத்துக்‌ கருவிகள்‌, எந்திரங்கள்‌, பிற மேம்பாட்டுப்‌ பணியமைப்புகள்‌. ஆகியவற்றைப்‌ பொறுத்தவரை, ஒரு கோடி ரூபாய்க்கும்‌, (b) தற்போதுள்ள பணியமைப்புகள்‌ அல்லது முன்னரே பயன்பாட்டிலுள்ள பணியமைப்புகளுக்கான விரிவாக்கங்கள்‌, பெரிதாக்கங்கள்‌, சேர்க்கைகள்‌ 37 உள்ளடங்கலான புதிய பணியமைப்புகளைப்‌ பொறுத்தவரை, எழுபத்தைந்து இலட்ச ரூபாய்க்கும்‌ மேம்படுகிறது அல்லது மேற்படக்கூடும்‌ என்றால்‌, அத்தகைய திட்டமுறை அல்லது திட்டம்‌ எதனையும்‌, அரசின்‌ முன்‌ ஒப்பளிப்புடன்‌ தவிர, வாரியம்‌ மேற்கொள்ளுதலோ, நிறைவேற்றுதலோ, அதனுடன்‌ தொடர்புடைய பிற பணியமைப்பு எதனையும்‌ நிறைவேற்றுதலோ ஆகாது. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, குடிநீர்ப்‌ பணியமைப்புகள்‌ அல்லது கழிவுநீரகற்றுப்‌ பணியமைப்புகள்‌ பொறுத்த திட்டமுறைகளுக்கான அல்லது திட்டங்களுக்கான அல்லது அவற்றுடன்‌ தொடர்புடைய பிற பணியமைப்புக்கான செலவுத்தொகை, அரசினால்‌ வழங்கப்படும்‌ நிதியங்களிலிருந்து ஏற்கப்படுகிறது அல்லது ஏற்கப்படவிருக்கிறது என்றால்‌, அத்தகைய திட்டமுறை அல்லது திட்டம்‌ எதனையும்‌, அரசின்‌ முன்‌ ஒப்பளிப்புடன்‌ தவிர, வாரியம்‌ மேற்கொள்ளுதலோ, நிறைவேற்றுதலோ, பிற பணியமைப்பு எதனையும்‌ நிறைவேற்றுதலோ ஆகாது. 40-&. குறித்தசில ஒப்பந்தங்களை அரசு அறுதி செய்தல்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, திட்டமுறை, திட்டம்‌ அல்லது பிற பணியமைப்பு எதனையும்‌ நிறைவேற்றுவதற்கான அல்லது பொருட்கள்‌ அல்லது சரக்குகள்‌ எவற்றையும்‌ வழங்குவதற்கான ஒப்பந்தம்‌ எதுவும்‌, ஒரு கோடி ரூபாய்‌ மதிப்புக்கு மேற்படுகிறவிடத்து, வாரியம்‌, அத்தகைய ஒப்பந்தத்தைப்‌ பொறுத்த ஒப்பந்தப்‌ புள்ளிகளைப்‌ பெற்றதன்‌ பேரில்‌, அனைத்து ஒப்பந்தப்‌ புள்ளிகளையும்‌ அரசுக்கு முன்னிடுதல்‌ வேண்டும்‌. அரசானது, சூழ்நிலைகள்‌ அனைத்தையும்‌ கருத்திற்கொண்டு, தனக்குச்‌ சாதகமானது. என அதற்குத்‌ தோன்றுகிற ஒப்பந்தப்புள்ளி எதற்கும்‌ ஒப்புதலளிக்கலாம்‌ மற்றும்‌ வாறியம்‌ அதன்‌ பேரில்‌ அவ்வாறு ஒப்புதலளிக்கப்பட்ட ஒப்பந்தப்‌ புள்ளிகளை ஏற்றுக்கொள்ளுதல்‌ வேண்டும்‌. 41. வசூலிக்க இயலாத தொகைகளைத்‌ தள்ளுபடி செய்வதற்கு அதிகாரம்‌.- வாரியம்‌, தனக்குக்‌ கொடுபடவேண்டியதாக அல்லது செலுத்தப்படத்தக்கதாக உள்ள தொகை அல்லது பணத்தொகை எதுவும்‌ வசூல்‌ செய்ய இயலாததாக இருக்கிறது எனக்‌ கருதினால்‌, அத்தகைய பணம்‌ அல்லது பணத்தொகை எதுவாயினும்‌ அதனைத்‌ தள்ளுபடி செய்யலாம்‌: வரம்புரையாக: வாரியம்‌, இருபத்து ஐந்து ஆயிரம்‌ ரூபாய்க்கு மேற்படுகிறதொரு தொகையைத்‌ தள்ளுபடி செய்வதற்கு முன்பு, அரசின்‌ ஒப்பளிப்பைப்‌ பெறுதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ VI குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌. குடிநீர்‌ வழங்கீடு. 38 42. குடிநீர்‌ வழங்கும்‌ அமைப்புமுறை.- (1) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ குடியிருப்பவர்களின்‌ நுகர்வுக்காக, வாரியம்‌, போதிய அளவு குடிநீரை வழங்குதலோ, வழங்குவதற்கான ஏற்பாடு செய்தலோ வேண்டும்‌. (2) வாரியம்‌, நடைமுறையில்‌ இயன்ற அளவுக்கு, குடிக்கும்‌ நோக்கங்களுக்காக வழங்கப்படும்‌ நீர்‌, எல்லா நேரங்களிலும்‌, மனித நுகர்வுக்குத்‌ தக்கதாகவும்‌ உகந்ததாகவும்‌ இருக்கும்படி செய்வதற்குப்‌ போதுமான ஏற்பாட்டினைச்‌ செய்தல்‌ வேண்டும்‌. (3) வாரியம்‌, நீர்ப்பாசனம்‌ தவிர, வீட்டுப்‌ பயன்பாட்டிற்கான அல்லது வீட்டுப்‌ பயன்பாட்டிற்கு அல்லாத பிற நோக்கங்களுக்காகப்‌ போதிய அளவு குடிநீர்‌ வழங்கவும்‌ அல்லது வழங்குவதற்கான ஏற்பாடு செய்யவும்‌ செய்யலாம்‌: வரம்புரையாக: இந்த உட்பிரிவின்படி வழங்கப்படும்‌ நீர்‌, குடிக்கும்‌ நோக்கங்களுக்காக வழங்கப்படும்‌ நீரைவிடத்‌ தரத்தில்‌ வேறுபட்டதாக இருக்கலாம்‌. (4) வாரியம்‌, குடிநீர்‌ வழங்குகிற நேரத்தையும்‌, அளவினையும்‌, அழுத்தத்தினையும்‌ முறைப்படுத்தலாம்‌. (5) நபர்‌ எவரும்‌, வாரியத்தினால்‌ வழங்கப்படும்‌ நீரை, இந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி, அல்லது பிற முறையாவணம்‌ எதனாலும்‌ அதிகாரமளிக்கப்பட்டவாறு தவிர, பயன்படுத்துதல்‌ ஆகாது. (6) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ வாரியத்தினால்‌ வழங்கப்படும்‌. அல்லது அங்கு கிடைக்கும்‌ நீரின்‌ தரம்‌ பற்றிய அறிக்கைகளை வாரியம்‌, அரசினால்‌ தீர்மானிக்கப்படு கிற காலங்களில்‌ அரசுக்கு அளித்தல்‌ வேண்டும்‌. 43. பொது அதிகார அமைப்புகளுக்கு நீர்வழங்குதலும்‌, அதற்கான கட்டணமும்‌.- (1) அரசுக்கு, சென்னைத்‌ துறைமுகப்‌ பொறுப்புக்‌ கழகத்திற்கு, சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு அல்லது பிற பொது அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பு எதற்கும்‌ நீர்‌ வழங்குவதற்காகச்‌ செலுத்தப்படும்‌ பணத்தொகை, கால அளவு, நிபந்தனைகள்‌ குறித்து உடன்படலாகும்‌ வரையீடுகளின்‌ பேரில்‌, வாரியம்‌ நீர்‌ வழங்கலாம்‌. (2) தற்போதுள்ள ஓர்‌ அதிகார அமைப்பினால்‌ அல்லது பிற பொது அதிகார அமைப்பினால்‌ வாரியம்‌ தீர்மானிக்கிற கட்டணங்கள்‌ செலுத்தப்படுவதற்கு உட்பட்டு, வாரியம்‌, சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தினுள்‌ உள்ள பொது மக்களுக்கு நுகர்வுக்கு உகந்த குடிநரை இலவசமாக வழங்கலாம்‌; மற்றும்‌ பெருங்குழாய்‌ இணைப்புக்‌ குழாய்களை, தீயணைப்புக்கான பெருங்குழாய்‌ இணைப்புக்‌ குழாய்களை அல்லது பிற வசதிகளை ஏற்படுத்தலாம்‌. 44, இந்தச்‌ சட்டத்தின்படி வழங்கப்படும்‌ குடிநீர்‌ கட்டணங்களும்‌ வாரியத்தின்‌ கடப்பாடின்மையும்‌.- (1) 43 ஆம்‌ பிரிவில்‌ பிறவாறாக வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர, இந்தச்‌ சட்டத்தின்படி வழங்கப்படும்‌ குடிநீர்‌ கட்டணம்‌ வகுத்துரைக்கப்படும்‌ வீதங்களில்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌; அத்தகைய வீதங்கள்‌. 39 (1) வெவ்வேறு பரப்பிடங்களுக்காக, (2) நுகர்வோரின்‌ வெவ்வேறு வகையினருக்காக, (3) வெவ்வேறு நோக்கங்களுக்காக, வெவ்வேறானதாக இருக்கலாம்‌. (2) வழக்கத்திற்கு மாறான வறட்சி, அல்லது பிற தவிர்க்க இயலாத காரணம்‌ அல்லது விபத்து, மாற்றமைப்புகள்‌, விரிவாக்கங்கள்‌ அல்லது குழாய்களை மீண்டும்‌ அமைப்பது அல்லது பழுதுபார்ப்பது தேவைப்படுகிற சூழ்நிலையில்‌ குடிநீர்‌ வழங்கும்‌ அளவைக்‌ குறைப்பதற்காக அல்லது குடிநீர்‌ வழங்காதிருப்பதற்காக, தண்டம்‌ அல்லது இழப்பீடு எதனையும்‌ செலுத்துவதற்கு வாரியம்‌ பொறுப்புடையது ஆகாது. 45. வீட்டு உபயோகத்திற்கான குடிநீர்‌ இணைப்புகள்‌.- (1) அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு, கட்டிடம்‌ அல்லது வளாகம்‌ எதனின்‌ உரிமையாளரால்‌ அல்லது அதில்‌ குடியிருப்பவரால்‌ செய்யப்படும்‌ விண்ணப்பத்தின்‌ பேரில்‌,- (ஐ அத்தகைய கட்டிடம்‌ அல்லது வளாகம்‌ 35 ஆம்‌ பிரிவின்படி மதிப்பீடு செய்யப்பட்டவாறு, முந்நூறு ரூபாய்க்கு மேற்பட்ட ஆண்டு பெறுமானத்தைக்‌ கொண்டிருக்கிறது. (b) அந்தக்‌ கட்டிடம்‌ அல்லது வளாகம்‌, வாரியத்தின்‌ எந்தப்‌ பெருங்குழாயிலிருந்து குடிநீர்‌ வழங்கப்பட முடியுமோ அந்தப்‌ பெருங்குழாயிலிருந்து முப்பது மீட்டருக்குள்‌ இருக்கிறது, மற்றும்‌ (©) அந்த நோக்கத்திற்குத்‌ தேவையான பணியமைப்புகள்‌ அனைத்திற்குமான செலவுத்தொகை விண்ணப்பதாரரால்‌ ஏற்றுக்கொள்ளப்படுகிறது, என்றால்‌, வீட்டு உபயோகத்திற்கான நீரை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: அந்தக்‌ கட்டிடம்‌ அல்லது வளாகம்‌ மேற்சொன்ன முப்பது மீட்டருக்கு அப்பால்‌ இருக்கிறதென்றாலும்‌, விண்ணப்பதாரர்‌, அனைத்துச்‌ செலவுத்‌ தொகைகளையும்‌, செலவுகளையும்‌ ஏற்க உடன்படுகிறார்‌ என்றாலும்‌, குடிநீர்‌ வழங்குவது பிறவாறாக நடைமுறையில்‌ இயலக்கூடியதாக இருக்கிறது என்றாலும்‌, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு நீர்‌ வழங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம்‌. (2) சொத்துவரி மதிப்பிடப்பட்ட கட்டிடம்‌ எதற்கும்‌, வீட்டு உபயோகத்திற்கு உகந்த குடிநீர்‌ வழங்கப்படாமல்‌ இருக்கிறது என்றும்‌, அந்தக்‌ கட்டிடத்தின்‌ எந்தப்‌ பகுதியிலிருந்தும்‌ முப்பது மீட்டருக்கு மேற்படாத தூரத்திலுள்ள ஒரு பெருங்குழாயிலிருந்து குடிநீர்‌ வழங்கப்படமுடியும்‌ என்றும்‌ அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்புக்குத்‌ தோன்றுகிறபோதெல்லாம்‌, அத்தகைய வழங்கீட்டைப்‌ பெறும்படியும்‌, அந்த நோக்கத்திற்குத்‌ தேவையான பணியமைப்புகள்‌. அனைத்தையும்‌ உரிமையாளரின்‌ செலவில்‌ நிறைவேற்றும்படியும்‌ 40 அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு அறிவிப்பு வாயிலாகச்‌ சொந்தக்காரரை வேண்டுறுத்தலாம்‌. (3) சொத்துவரி மதிப்பிடப்பட்ட குடியிருப்பு வீடு எதனின்‌ உரிமையாளர்‌ அந்த விட்டு உபயோகத்திற்கும்‌, அதில்‌ குடியிருப்பவர்கள்‌ பயன்படுத்துவதற்கும்‌ உகந்த குடிநீருக்காக அந்த விட்டிற்குள்‌ அல்லது அந்த வீட்டிலிருந்து நியாயமான தூரத்திற்குள்‌ வசதி இருக்கிறது என்று அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பிடமிருந்து ஓர்‌ உறுதிச்‌ சான்றினைத்‌ தாம்‌ பெறுகின்ற வரையில்‌, அதில்‌ குடியமர்த்தல்‌ அல்லது குடியமரச்‌ செய்தல்‌, குடியமர அனுமதித்தல்‌ சட்டப்படி அமைந்தது ஆகாது. (4) நிலம்‌ எதிலும்‌ சொத்துவரி மதிப்பிடப்பட்ட இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மேற்கட்டுமானங்கள்‌ இருந்து, அந்த நிலத்தின்‌ உரிமையாளர்‌ அந்த மேற்கட்டுமானங்கள்‌ அனைத்திற்கும்‌ உரிமையாளராக இல்லாதிருக்கிறவிடத்து, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு, அந்த மேற்கட்டுமானங்கள்‌ வீட்டு உபயோகத்திற்கு உகந்த குடிநீர்‌ வழங்கப்படாமல்‌ இருக்கின்றன என்றும்‌, அந்தக்‌ கட்டுமானம்‌ எதனின்‌ எந்தப்‌ பகுதியிலிருந்தும்‌ முப்பது மீட்டருக்கு மேற்படாத தூரத்திலுள்ள ஒரு பெருங்குழாயிலிருந்து குடிநீர்‌ வழங்கப்பட முடியும்‌ என்றும்‌ தனக்குத்‌ தோன்றுகிறது என்றால்‌, அத்தகைய வழங்கீட்டை பெறும்படி, அந்த நிலத்தின்‌ உரிமையாளரை அறிவிப்பு வாயிலாக வேண்டுறுத்தலாம்‌. (5) வளாகம்‌ எதுவும்‌, வீட்டு உபயோகத்திற்கான குடிநீர்‌ வழங்கப்படாமல்‌ இருக்கிற ஏதேனும்‌ பிற சூழ்நிலைகளில்‌, அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு, உரிமையாளரின்‌ விண்ணப்பத்தின்‌ பேரிலும்‌, உரிமையாளரின்‌ செலவிலும்‌, அவ்வாறு வழங்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யலாம்‌ அல்லது எழுத்து வடிவிலான அறிவிப்பு வாயிலாக, வாரியத்தின்‌ பெருங்குழாயிலிருந்து அத்தகைய குடிநீர்‌ வழங்கீட்டைப்‌ பெறுமாறு உரிமையாளரை வேண்டுறுத்தலாம்‌; மேலும்‌, அந்த நோக்கத்திற்காக உரிமையாளரின்‌ செலவில்‌, குழாய்கள்‌, பெருங்குழாய்‌ இணைப்புக்‌ குழாய்கள்‌, நிலைக்‌ குழாய்கள்‌ அல்லது குழாய்க்‌ கம்பங்கள்‌, பிற பொருத்துக்‌ கருவிகள்‌ ஆகியவற்றை அளிக்கலாம்‌. (6) வாரியம்‌, தான்‌ சுமத்தும்‌ நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நீர்‌ வழங்கப்படுவது எந்த நோக்கத்திற்காகத்‌ தேவைப்படுகிறது என்பதையும்‌, பயன்படுத்தக்கூடிய அளவையும்‌ குறித்துரைத்து எழுதப்பட்ட ஒரு விண்ணப்பத்தைப்‌ பெற்றதன்‌ பேரில்‌, பாசனம்‌ அல்லது வீட்டு உபயோகம்‌ அல்லாத பிற நோக்கம்‌ எதற்காகவும்‌, குடிநீர்‌ வழங்கலாம்‌. விளக்கம்‌:- இந்த அத்தியாயத்தின்‌ நோக்கங்களுக்காக, (ஐ வீட்டு உபயோகத்திற்குக்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ என்பது,- () கழிப்பிடங்களை அல்லது வீட்டுச்‌ சாக்கடைகளைத்‌ துப்புரவு செய்வதற்கும்‌, (i) நீச்சலிடங்கள்‌ அல்லது பொதுக்‌ குளியலறைகள்‌ அல்லது பிற குளியலறைகள்‌ அனைத்திற்கும்‌, 41 (0) உணவு விடுதிகள்‌, தங்கும்‌ இல்லங்கள்‌, உள்‌ உறையும்‌ கழகங்கள்‌. ஆகியவற்றில்‌ உள்ளுறைவோர்‌ உபயோகிப்பதற்கும்‌ மற்றும்‌ அத்தகைய உள்ளுறைவோரால்‌ பயன்படுத்தப்படுகிற குளியலறைகளுக்கும்‌, (iv) கலை அரங்குகள்‌, திரைப்பட அரங்குகள்‌ ஆகியவற்றுக்கு வருகிற நபர்களின்‌ உபயோகத்திற்கும்‌, நீர்வழங்குவதை உள்ளடக்குவதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (b) வீட்டு உபயோகம்‌ அல்லாத பிறவற்றுக்காக குடிநீர்‌ வழங்குதல்‌ என்பது,- (i) வாணிகம்‌, செய்தொழில்‌ அல்லது வாழ்க்கைத்‌ தொழில்‌ எதற்கும்‌, (i) தோட்டத்திற்காக, 0) கட்டுமான நோக்கங்களுக்காக, 0) நீர்‌ ஊற்றுகள்‌, நீச்சலிடங்கள்‌, பொதுக்‌ குளியலறைகள்‌ அல்லது குளங்கள்‌ ஆகியவற்றுக்கான அல்லது ஏதேனும்‌ அலங்கார அல்லது எந்திர நோக்கத்திற்காக, (9) விற்பனைக்காகவோ, வாடகைக்காகவோ வைத்துவரப்படும்‌ விலங்குகளுக்காக, vi) விற்பனைக்காகவோ, வாடகைக்காகவோ வைத்துவரப்படும்‌ வாகனங்களைக்‌ கழுவுவதற்காக, நீர்வழங்குவதை உள்ளடக்குவதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 46. வீட்டு இணைப்பு மற்றும்‌ பிற இணைப்புகளின்‌ மீதான கட்டுப்பாடு.- (1) வாரியத்தின்‌ குடிநீர்‌ வழங்கும்‌ பெருங்குழாய்களுடன்‌ இணைக்கப்பட்டுள்ளதும்‌, வளாகத்திற்குள்ளேயோ வெளியேயோ உள்ளதுமான விட்டு இணைப்புகள்‌ அனைத்தும்‌, வாரியத்தின்‌ கட்டுப்பாட்டின்கீழ்‌ இருந்து வரும்‌; ஆனால்‌ அவை எந்த வளாகத்திற்குச்‌ சொந்தமானவையோ, அல்லது எதன்‌ பயன்பாட்டிற்காகக்‌ கட்டப்பட்டவையோ அந்த வளாகத்தின்‌ உரிமையாளரின்‌ செலவில்‌ மாற்றம்‌ செய்யப்படுதலும்‌, பழுதுபார்க்கப்படுதலும்‌, சரிவர வைத்து வரப்படுதலும்‌ வேண்டும்‌: வரம்புரையாக: அந்த வளாகத்திற்கு வெளியே அத்தகைய மாற்றம்‌, பழுதுபார்த்தல்‌ அல்லது பேணி வருதலுக்கான செலவுகள்‌ வாரியத்தினால்‌ ஏற்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) வளாகங்களுக்கும்‌ தீயணைப்புக்கான பெருங்குழாய்‌ இணைப்புக்‌ குழாய்கள்‌ உள்ளடங்கலான, வீதிப்‌ பெருங்குழாய்களுக்கும்‌ பொதுமக்கள்‌ வந்துபோகும்‌. இடங்களுக்கும்‌ குடிநீர்‌ வழங்குவதற்கான வாரியத்தின்‌. பெருங்குழாய்களுடனான இணைப்புகள்‌ அனைத்தும்‌, அவ்வாறு வழங்குவதற்காகப்‌ பயன்படுத்தப்படும்‌ குழாய்கள்‌, திருகு குழாய்கள்‌, பிற பொருத்துக்‌ கருவிகள்‌ அனைத்தும்‌ இணைப்புக்காக அல்லது மறு இணைப்புக்காக வகுத்துரைக்கப்படலாகும்‌ முறையில்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ செலவுகள்‌ செய்து 42 அல்லது கட்டணங்கள்‌ விதித்து அமைக்கப்பட்டும்‌ பேணிவரப்படுதலும்‌, முறைப்படுத்தப்படுதலும்‌ வேண்டும்‌. 47. குடிநீர்‌ வழங்குவதற்கான கட்டணத்தைக்‌ கணக்கிடுதல்‌.-- (1) வாரியத்தினால்‌ வழங்கப்படும்‌ குடிநரை உபயோகிப்பதற்காக உரிமையாளரால்‌ செலுத்தப்பபவேண்டிய தொகையைக்‌ கணக்கிடும்‌ பொருட்டு வாரியம்‌, அந்த வளாகத்தில்‌ நிறுவப்படும்‌ ஓர்‌ அளவுமானியால்‌ பதிவு செய்யப்படும்‌ அளவிட்டின்‌ அடிப்படையில்‌ உபயோகிக்கும்‌ அளவினைத்‌ தீர்மானிக்கலாம்‌. (2) தொடர்புடைய வளாகத்தின்‌ உரிமையாளரால்‌ அவரது செலவில்‌ அளவுமானி நிறுவப்படுதல்‌ வேண்டும்‌ என வாரியம்‌ வேண்டுறுத்துகிறவிடத்து, அவர்‌ அவ்வாறே செய்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ இந்த நோக்கத்திற்காக, வாரியம்‌, அளவுமானிகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு முன்னரே அளவுமானி ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கிறவிடத்து, வாரியம்‌, அதற்கான வாடகையை அல்லது செலவுத்தொகையைத்‌ தண்டல்‌ செய்வதை நிறுத்திவிட்டு, அந்த அளவுமானிக்கான பெறுமானத்தைச்‌ சொந்தக்காரரிடமிருந்து தண்டல்‌ செய்யலாம்‌. (3) குடிநீர்‌ உபயோக அளவினைக்‌ குறிக்கின்ற அளவுமானியின்‌. அளவீடுகள்‌, மாறானது மெய்ப்பிக்கப்படுகிறது என்றாலன்றி, சரியானவை என அனுமானிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) வளாகம்‌ எதற்கும்‌ அளவுமானிகள்‌ வழங்கப்படவில்லை அல்லது அளவுமானி பழுதடைந்துவிடுகிறது அல்லது இயங்கும்‌ நிலையில்‌ இல்லை என்கிறவிடத்து, அளவுமானிகள்‌ வழங்கப்படும்‌ வரையில்‌ அல்லது அளவுமானிகள்‌ பழுதுபார்க்கப்படுகிறவரையில்‌ அல்லது சீர்செய்யப்படுகிறவரையில்‌, குடிநீர்‌ நுகர்வதற்கான அல்லது பயன்படுத்துவதற்கான கட்டணங்கள்‌ வகுத்துரைக்கப்படு கிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. (5) குடிநீர்‌ வழங்குவதற்காகத்‌ தனிப்பட்ட மற்றும்‌ சொந்தமான நீர்‌ ஆதாரத்தைக்‌ கொண்டிருக்கிற ஏதேனும்‌ வளாகத்தின்‌ உரிமையாளர்‌ கழிவுநீரகற்றுப்‌ பணியைப்‌ பயன்படுத்திக்கொள்ள வாரியத்தினால்‌ அனுமதிக்கப்படு கிறார்‌ என்றால்‌, அவர்‌, அத்தகைய பணிக்காக, வகுத்துரைக்கப்படும்‌ தொகையை, வகுத்துரைக்கப்படும்‌ அடிப்படையில்‌ செலுத்தும்‌ பொறுப்புடையவர்‌ ஆவார்‌. 48. குடிநீர்‌ விணாவதைத்‌ தடுத்தல்‌.- (1) வாரியத்தினால்‌ குடிநீர்வழங்கப்படு கிற ஏதேனும்‌ வளாகத்தின்‌. உரிமையாளர்‌ அல்லது குடியிருப்பவர்‌ எவரும்‌, கவனக்குறைவாக அல்லது பிறவாறாக, அத்தகைய குடிநீர்‌ வீணாக்கப்படுவதற்கு இடமளித்தாலோ குடிநீர்‌ வழங்குவதற்கான குழாய்கள்‌, திருகு குழாய்கள்‌, பணியமைப்புகள்‌, பொருத்துக்‌ கருவிகள்‌ ஆகியவற்றைக்‌ குடிநீர்‌ வீணாகும்‌ வகையில்‌ பழுதுபட்ட நிலையில்‌ வைத்திருத்தலோ ஆகாது. (2) பொதுக்குழாய்க்‌ கம்பங்களை, குடிநீர்‌ ஊற்றுகளை அல்லது பெருங்குழாய்‌ இணைப்புளைத்‌ தவறாகப்‌ பயன்படுத்துவதன்‌ வாயிலாக, 43 வாரியத்தினால்‌ வழங்கப்படும்‌ குடிந்ரை எவர்‌ ஒருவரும்‌ வீணாகும்படி செய்தல்‌ ஆகாது. (3) ஏதேனும்‌ வளாகத்திற்குக்‌ குடிநீர்‌ வழங்குவது தொடர்புடைய குழாய்கள்‌, திருகு குழாய்கள்‌ அல்லது பொருத்து கருவிகளிலுள்ள குறைபாடுகள்‌ காரணமாக, குடிநீர்‌ வீணாக்கப்படுகிறது என நம்புவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு காரணம்‌ கொண்டிருக்கும்போதெல்லாம்‌, அது எழுத்து வடிவிலான அறிவிப்பு வாயிலாக, அந்த அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ காலஅளவிற்குள்‌ அந்தக்‌ குறைபாடுகளைப்‌ பழுதுபார்த்துச்‌ சரிசெய்யுமாறு அந்த வளாகத்தின்‌ உரிமையாளரை வேண்டுறுத்தலாம்‌. (4) மேற்சொன்ன அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள்‌: அவ்வாறு பழுதுபார்க்கப்படவில்லை என்றால்‌, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு, வீணாவதை நிறுத்தும்‌ பொருட்டு, அவ்வாறு பழுதுபார்க்கப்படுமாறு செய்யலாம்‌. அவ்வாறு பழுதுபார்ப்பதற்கான செலவுத்தொகை, அந்த வளாகத்தின்‌ உரிமையாளடரிமிருந்து, இந்தச்‌ சட்டத்தின்படி வகைசெய்யப்பட்டுள்ள வரி, கட்டண வீதம்‌ அல்லது கட்டணத்தின்‌ நிலுவையாக இருந்தாற்போன்று, தண்டல்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 49. குடிநீர்‌ இணைப்பைத்‌ துண்டிப்பதற்கு அதிகாரம்‌- (1) இந்தச்‌ சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு, வாரியத்தின்‌ ஏதேனும்‌ குடிநீர்‌ பணியமைப்புக்கும்‌, அத்தகைய பணியமைப்பிலிருந்து குடிநீர்‌ வழங்கப்படுகிற வளாகத்திற்கும்‌ இடையேயுள்ள இணைப்பைத்‌ துண்டித்துவிடலாம்‌ அல்லது பின்வரும்‌ நேர்வுகள்‌ எதிலும்‌ அவ்வாறு வழங்குவதை நிறுத்திவிடலாம்‌; அவையாவன:- (ஐ) வளாகத்தில்‌ எவரும்‌ குடியிருக்கவில்லை என்றால்‌; (2) இந்தச்‌ சட்டத்திற்கு அல்லது ஏதேனும்‌ பிற சட்டத்திற்கு அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி அல்லது பிற முறையாவணம்‌ எதற்கும்‌ மீறுகையாகக்‌ குடிநீரைப்‌ பயன்படுத்துவதை அல்லது அதற்கு அனுமதிப்பதை நிறுத்தும்படி வளாகத்தின்‌ உரிமையாளரை அல்லது அதில்‌ குடியிருப்பவரை வேண்டுறுத்துகிற எழுத்துமூலமான அறிவிப்பை அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பிடமிருந்து பெற்ற பின்பும்‌ அவர்‌ அதனைத்‌ தொடர்ந்து செய்கிறபோது; (௦ குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுப்‌ பணித்‌ தொடர்பாக ஆய்வு எதனையும்‌ செய்யும்‌ நோக்கத்திற்காக, வளாகத்திற்குள்‌ அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி எவரையும்‌ அனுமதிக்க உரிமையாளர்‌ அல்லது அதில்‌ குடியிருப்பவர்‌ மறுக்கிறபோது அல்லது அத்தகைய அதிகாரி அத்தகைய ஆய்வினைச்‌ செய்வதைத்‌ தடுக்கிறபோது; (0) வளாகத்தின்‌ உரிமையாளர்‌ அல்லது அதில்‌ குடியிருப்பவர்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்‌ வாயிலாகவோ கீழாகவோ வேண்டுறுத்தப்பட்டவாறு ஓர்‌ அளவுமானியைப்‌ பொருத்தத்‌ தவறுகிறபோது அல்லது பொருத்துவதைத்‌ தடுக்கிறபோது அல்லது அந்த அளவுமானிக்கு வேண்டுமென்றோ 44 கவனக்குறைவாலோ ஊறுசெய்கிறபோது அல்லது சேதம்‌ விளைவிக்கிறபோது அல்லது பிறவாறாக வாரியத்தின்‌ பணியமைப்பு எதிலுமிருந்து குடிந்ரைக்‌ கொண்டு செல்கிற குழாய்‌, திருகு குழாய்‌ அல்லது பெருங்குழாய்‌ அல்லது பிற பணியமைப்பு எதற்கும்‌ குந்தகம்‌ செய்கிறபோது; (6) வளாகத்திற்கு குடிநீர்‌ வழங்குவதனுடன்‌ தொடர்புடைய எவையேனும்‌ குழாய்கள்‌, திருகு குழாய்கள்‌, பணியமைப்புகள்‌ அல்லது பொருத்து கருவிகள்‌: சோதனையின்போது, குடிந்ரை வீணாகும்படி செய்கிற அளவுக்குப்‌ பழுதுபட்டிருப்பதாகக்‌ கொண்டு, அதனை உடனடியாகத்‌ தடுப்பது தேவையாக இருக்கிறபோது; N குடிநீர்‌ வரும்‌ குழாய்களிலிருந்து அல்லது பொருத்து கருவிகளிலிருந்து நீர்‌ கசிவதன்‌ காரணமாக ஒரு பொதுத்‌ தெருவிற்கு பழுது ஏற்பட்டு, அதனை உடனடியாகத்‌ தடுப்பது தேவையாக இருக்கிறபோது; (ஐ வளாகத்திற்குள்‌ அமைந்துள்ள குடிநீர்க்குழாய்‌ எதிலும்‌ திருகு குழாய்‌ அல்லது நீரை நிறுத்துவதற்கான பிற பயனுள்ள சாதனம்‌ எதுவும்‌ இணைக்கப்படாதபோது; (h) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியதாக இல்லாமல்‌ விட்டுக்‌ கழிவுநீர்க்கால்கள்‌ பேணிவரப்படவில்லை, அல்லது இந்தச்‌ சட்டத்தின்படி வேண்டுறுத்தப்பட்டபோது அத்தகைய கழிவுநீர்க்கால்கள்‌ கட்டப்படவில்லை அல்லது பேணிவரப்படவில்லை என்ற போது; () இந்தச்‌ சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட ஏதேனும்‌ ஒழுங்குமுறை விதியின்‌ அல்லது பிற முறையாவணத்தின்படி வாரியத்திற்குச்‌ செலுத்தவேண்டிய பணம்‌ எதனையும்‌ சொந்தக்காரர்‌ அல்லது குடியிருப்பவர்‌ உரிய காலத்திற்குள்‌ செலுத்தத்‌ தவறுகிறபோது (j) இந்தச்‌ சட்டத்தின்படியான கோரிக்கை எதற்கும்‌ இணங்கி நடப்பதில்‌ தவறுகை எதுவும்‌ ஏற்பட்டிருக்கிறபோது அல்லது இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறை எதுவும்‌ அல்லது அதன்படி செய்யப்பட்டுள்ள முறையாவணம்‌ எதுவும்‌ மீறப்படுகிறபோது: வரம்புரையாக: (0) முதல்‌ (ஐ வரையிலான கூறுகளில்‌ குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளில்‌ எதன்‌ காரணமாகவும்‌ குடிநீர்‌ தூய்மைக்கேட்டையும்‌ அபாயம்‌. இருக்கின்ற நேர்வில்‌ தவிர, அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி, வளாகத்தின்‌ உரிமையாளருக்கு, அல்லது, நேர்வுக்கேற்ப, குடியிருப்பவருக்கு, இருபத்து நான்கு மணி நேரத்துக்குக்‌ குறையாத அறிவிப்புக்‌ கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, அத்தகைய இணைப்பைத்‌ துண்டித்தலோ நீர்‌ வழங்குவதை நிறுத்தலோ ஆகாது. (2) இந்தப்‌ பிரிவின்படி அல்லது அதனை அடியொற்றி எடுக்கப்படும்‌ நடவடிக்கை எதுவும்‌, ஒரு நபர்‌ பிறவாறாக உள்ளாகியிருக்கக்கூடிய தண்டங்கள்‌: அல்லது பொறுப்புகள்‌ எவற்றிலிருந்தும்‌ அவரை விடுவிக்காது. 45 (3) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும்‌ நேர்வில்‌, குடிநீர்‌ வழங்குவதற்கான இணைப்பைத்‌ துண்டிப்பதற்கு அல்லது குடிநீர்‌ வழங்குவதை நிறுத்தி விடுவதற்கு மற்றும்‌ அதனை மீண்டும்‌ அளிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பினால்‌ தீர்மானிக்கப்படும்‌ செலவுத்‌ தொகை, வளாகத்தின்‌ உரிமையாளரால்‌ அல்லது அதில்‌ குடியிருப்பவரால்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: மேற்சொன்ன உட்பிரிவின்‌ (௨) கூறில்‌ குறிப்பிடப்பட்டுள்ள நேர்வில்‌, அத்தகைய செலவுத்தொகைக்கான கட்டணம்‌ எதுவும்‌ விதிக்கப்படுதல்‌ ஆகாது. (4) 1 ஆம்‌ உட்பிரிவின்‌ () கூறின்படி குடிநீர்‌ இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிற நேர்வுகளில்‌, செலுத்த வேண்டிய பணத்துடன்கூட (3) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள செலவுத்தொகைகள்‌ உரிமையாளரால்‌ அல்லது குடியிருப்பவரால்‌ செலுத்தப்பட்டவுடன்‌, அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு, முன்போலவே குடிநீரை மீண்டும்‌ வழங்குதல்‌ வேண்டும்‌. (5) இந்தப்‌ பிரிவின்படி அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு குடிநீர்‌ இணைப்பைத்‌ துண்டித்திருக்கிறது அல்லது துண்டிப்பதற்கு அறிவிப்பு எதனையும்‌ கொடுத்திருக்கிறது என்கிறவிடத்து வாரியத்திற்குக்‌ கேட்கப்படுவதற்கு நியாயமானதொரு வாய்ப்பு அளித்த பின்பு தவிர, நீதிமன்றம்‌ அல்லது பிற அதிகாரஅமைப்பு எதுவும்‌, உறுத்துக்கட்டளை, நிறுத்திவைப்பு அல்லது பிறவாறான தன்மையுள்ள ஆணை அல்லது பணிப்புரை எதனையும்‌, பிறப்பித்தல்‌ ஆகாது. 50. கிணறுகள்‌ முதலானவற்றின்‌ மீதான கட்டுப்பாடு-- (1) நபர்‌ எவரும்‌, அதிகார அமைப்பின்‌ அனுமதியின்றி, குடிக்கும்‌ நோக்கங்களுக்காக உள்ள கிணறு, குட்டை, குளம்‌, நீர்த்தேக்கதொட்டி எதனையும்‌ அமைத்தல்‌, மறுஅமைப்பு செய்தல்‌, தோண்டுதல்‌, பழுதுபார்த்தல்‌ அல்லது மாற்றியமைத்தல்‌ ஆகாது; மற்றும்‌. கிணறு, குட்டை அல்லது குளம்‌ அல்லது நீர்த்தேக்கத்‌ தொட்டியின்‌ கனஅளவுகள்‌, அதனை சுற்றி அடைக்கும்‌ முறை, அந்தக்‌ குடிநீர்‌ தூய்மைக்கேடு அடையாமல்‌ தடுப்பதற்குப்‌ பயன்படுத்தப்படும்‌ முறை உள்ளடங்கலாக, வாரியம்‌ தீர்மானிக்கும்‌ முறையில்‌ அதனைப்‌ பேணி வருவது முறைப்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு ஊறுபாடின்றி, 1919 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி மன்றச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ ௩71919) 234, 235, 236, 242, 243, 244, மற்றும்‌ 245 ஆகிய பிரிவுகளின்‌ வகைமுறைகள்‌, இயன்ற அளவுக்கு, சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்திலுள்ள கிணறுகளுக்குப்‌ பொருந்துதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: அந்தப்‌ பிரிவுகளிலுள்ள ஆணையர்‌ என்னும்‌ சுட்டுக்‌ குறிப்புகள்‌, அதிகார அமைப்புகள்‌ என்னும்‌ சுட்டுக்‌ குறிப்புகளாகப்‌ பொருள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 51. குறித்தசில நேர்வுகளில்‌ நிலத்தடி நீரைப்‌ பயன்படுத்துதல்‌ முதலானவற்றின்‌ மீதான கட்டுப்பாடு. (1) 5௦ ஆம்‌ பிரிவில்‌ பிறவாறாக வகைசெய்யப்பட்டுள்ளவாறல்லாமல்‌, வாரியம்‌, பொது நலன்‌ கருதியும்‌ அரசின்‌ முன்‌ 46 ஒப்பளிப்புடனும்‌, சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தினுள்‌, தற்போது அல்லது எதிர்காலத்தில்‌ நிலத்தடிநீரை நீர்ப்பாசனம்‌ அல்லாத பிற நோக்கங்களுக்காக, எந்த வடிவிலும்‌ எடுப்பதையும்‌, சேமித்து வைப்பதையும்‌, பயன்படுத்துவதையும்‌ முறைப்படுத்தலாம்‌, கட்டுப்படுத்தலாம்‌ மற்றும்‌ அதற்காக கட்டணம்‌ விதிக்கலாம்‌. (2) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்தில்‌ நீர்ப்பாசனம்‌ அல்லாத பிற நோக்கம்‌ எதற்கும்‌ ஒரு கிணற்றை அல்லது குழாய்க்‌ கிணற்றைத்‌ தோண்டுவதற்கு அல்லது தற்போதைய நிலத்தடிநரைத்‌ தொடர்ந்து பயன்படுத்தக்‌ கருதுகிற நபர்‌ எவரும்‌, அந்த நோக்கத்திற்காக ஓர்‌ உரிமம்‌ வழங்குவதற்காக வாரியத்திற்கு விண்ணப்பித்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வாரியத்தினால்‌ ஓர்‌ உரிமம்‌ வழங்கப்பட்டிருந்தாலன்றி, அவ்வாறு தோண்டுவது அல்லது தற்போது பயன்படுத்தப்படுவதைத்‌ தொடர்வது தொடர்பான நடவடிக்கை எதனையும்‌ மேற்கொள்ளுதல்‌ ஆகாது. (3) (2) ஆம்‌ உட்பிரிவின்படியான விண்ணப்பம்‌ ஒவ்வொன்றும்‌, வகுத்துரைக்கப்படும்‌ படிவத்திலும்‌ முறையிலும்‌ அளிக்கப்படுதலும்‌, அது வகுத்துரைக்கப்படும்‌ விவரங்களைக்‌ கொண்டுள்ளதாக இருத்தலும்‌ வேண்டும்‌. (4) (1) ஆம்‌ உட்பிரிவின்படியான ஒரு விண்ணப்பத்தைப்‌ பெற்றதன்‌ பேரில்‌, வகுத்துரைக்கப்படும்‌ கட்டணங்களைச்‌ செலுத்துவதற்கு உட்பட்டும்‌, குறித்துரைக்கப்படும்‌ நிபந்தனைகளுக்கும்‌ வரையறைகளுக்கும்‌ உட்பட்டும்‌, நிலத்தடிந்ரை எடுப்பதற்கும்‌, பயன்படுத்துவதற்கும்‌ அதிகாரமளிக்கிற ஜர்‌ உரிமத்தை வழங்குவது பொதுநலனுக்கு உகந்ததாக இருக்கும்‌ என வாரியம்‌ தெளிவுறக்காணுமாயின்‌, அது அவ்வாறே செய்யலாம்‌: வரம்புரையாக: நபர்‌ எவருக்கும்‌ கேட்கப்படுவதற்கான ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலன்றி, அவருக்கு உரிமம்‌ மறுக்கப்படுதல்‌ ஆகாது. (5௮௪ ஆம்‌ உட்பிரிவின்படி ஓர்‌ உரிமத்தை வழங்கும்போது அல்லது வழங்க மறுக்கும்போது, வாரியம்‌,- (ஐ எந்த நோக்கம்‌ அல்லது நோக்கங்களுக்காக நிலத்தடி நீர்‌ பயன்படுத்தப்படவிருக்கிறது என்பதையும்‌, (b) பிற போட்டிப்‌ பயண்பாட்டாளர்கள்‌ இருக்கின்றனர்‌ என்பதையும்‌, (9 நிலத்தடி நீர்‌ கிடைக்கக்கூடியதாக இருக்கிறதா என்பதையும்‌, (0) குடிநீர்‌ வழங்கப்படும்‌ பிற நீர்‌ ஆதாரங்களின்‌ மீதான விளைவினையும்‌, (6) தற்போதுள்ள குடிநீர்‌ வழங்கீட்டு அமைப்பு முறையுடன்‌ ஒத்தியலக்கூடிய தண்மையினையும்‌, () தூய்மைக்‌ கேட்டினைக்‌ கட்டுப்படுத்துகிற அல்லது தடுக்கிற காரணக்கூறுகள்‌ இருப்பதையும்‌ கவனத்தில்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌. 47 (6) உரிமம்‌, வகுத்துரைக்கப்படும்‌ படிவத்தில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 52. குடிநீருக்காகப்‌ பயன்படுத்தப்படுகிற துப்புரவற்ற தணியார்‌ நீரோடை, நீரூற்று, குளம்‌, கிணறு முதலானவற்றைத்‌ தூய்மைப்படுத்துமாறு ஆணையிடுவதற்கு அதிகாரம்‌.- (1) குடிநீர்‌ நோக்கங்களுக்காக எந்தத்‌ தனியார்‌ நீரோடையின்‌ நீரூற்றின்‌, குளத்தின்‌, கிணற்றின்‌ அல்லது பிற இடத்தின்‌ நீர்‌ பயன்படுத்தப்படுகிறதோ அந்த நீரோடை, நீரூற்று, குளம்‌, கிணறு அல்லது பிற இடம்‌ எதனையும்‌ அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு, அறிவிப்பு வாயிலாக, தான்‌ பணிக்கும்‌ முறையில்‌ சீரான நிலையில்‌ பேணி வரும்படியும்‌, துப்புரவு செய்யும்படியும்‌, அறிவிப்பில்‌ வகைசெய்யப்பட்டுள்ள முறையில்‌, மேற்பரப்பு வடிகால்‌ அல்லது பிற பொருள்‌ கலப்பதால்‌ ஏற்படும்‌ தூய்மைக்கேட்டிலிருந்து பாதுகாக்கும்படியும்‌ உரிமையாளரை அல்லது அதன்மீது கட்டுப்பாடு கொண்டுள்ள நபரை வேண்டுறுத்தலாம்‌. (2) குடிநீருக்காகப்‌ பயன்படுத்தப்படுகிற தனியார்‌ குளம்‌, கிணறு அல்லது பிற இடம்‌ எதிலும்‌ உள்ள நீர்‌ குடிப்பதற்குத்‌ தகுதியற்றது என அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்புத்‌ தெளிவுறக்‌ காணும்‌ வகையில்‌ மெய்ப்பிக்கப்படுகிறது என்றால்‌, அந்த அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு- (ஐ அந்த நீரைக்‌ குடிப்பதற்குப்‌ பயன்படுத்தாதிருக்குமாறு அல்லது அதை பயன்படுத்த அனுமதிக்காதிருக்குமாறு, அல்லது (b) அத்தகைய இடத்தை மூடிவிடுமாறு அல்லது தூர்த்து விடுமாறு அல்லது அதனைச்‌ சுற்றிப்‌ போதிய அளவு தடுப்புச்சுவர்‌ அல்லது வேலி அமைக்குமாறு அதன்மீது கட்டுப்பாடு கொண்டிருக்கிற உரிமையாளரை அல்லது நபரை அறிவிப்பு வாயிலாகக்‌ கோரலாம்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவின்‌ அல்லது (2) ஆம்‌ உட்பிரிவின்படியான ஓர்‌ அறிவிப்புக்கு இணங்கி நடக்கத்‌ தவறுகையில்‌, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு, இதன்படி செய்யப்படவேண்டிய பணியை அல்லது பிற செயல்‌ எதனையும்‌ நிறைவேற்றுவதோடு, இதற்கான செலவுத்தொகையை அதனைக்‌ கட்டுப்பாட்டில்‌ கொண்டிருக்கின்ற உரிமையாளரிடமிருந்து அல்லது நபரிடமிருந்து தண்டல்‌ செய்தலும்‌ வேண்டும்‌; மற்றும்‌ அதற்கான தொகை, இந்தச்‌ சட்டத்தின்படி ஒரு வரி நிலுவையாக இருந்தாற்போன்று, தண்டல்‌ செய்யப்படத்தக்கது ஆகும்‌. 53. குடிநீர்ப்‌ பெருங்குழாய்களின்‌ மீது கட்டிடம்‌ கட்டுவதற்குத்‌ தடை- (1) அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பின்‌ அனுமதியின்றி, வாரியத்தின்‌ குடிநீர்‌ பெருங்குழாய்‌ எதன்மீதும்‌, கட்டிடம்‌, சுவர்‌ அல்லது பிற கட்டுமானம்‌ எதுவும்‌ புதிதாகக்‌ கட்டப்படுதலும்‌, தெரு எதுவும்‌ அமைக்கப்படுதலும்‌ ஆகாது. (2) கட்டிடம்‌, சுவர்‌ அல்லது கட்டுமானம்‌ எதுவும்‌ அவ்வாறு கட்டப்படுகிறது அல்லது தெரு எதுவும்‌ அவ்வாறு அமைக்கப்படுகிறது என்றால்‌, அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு, வாரியத்தின்‌ ஒப்புதலளிப்புடன்‌, அதனை அகற்றும்படி செய்யலாம்‌ அல்லது தனக்குத்‌ தக்கதெனத்‌ தோன்றுகிறவாறு 48 பிறவாறாக நடவடிக்கை எடுக்கலாம்‌; அதன்‌ காரணமாக செய்யநேர்ந்த செலவு, (1) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளை ம்றுகிற நபரால்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (3) இந்தப்‌ பிரிவிலுள்ள எதுவும்‌ மைய அரசுக்குப்‌ பொருந்துதல்‌ ஆகாது. 54. தூய்மைக்கேடு முதலானவற்றைத்‌ தடுத்தல்‌.- நபர்‌ எவரும்‌,- (ஐ) வாரியத்தினால்‌ அல்லது உரிமையாளரால்‌ குடிநீர்‌ நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள குளம்‌, நீர்த்தேக்கம்‌, குழாய்க்‌ கால்வாய்‌, நீரூற்று, கிணறு அல்லது பிற இடம்‌ எதிலும்‌ குளித்தல்‌, (௦) அத்தகைய இடம்‌ எதிலும்‌ விலங்கு அல்லது பொருள்‌ எதனையும்‌ கழுவுதல்‌ அல்லது கழுவும்படி செய்தல்‌, (௦9) அத்தகைய இடம்‌ எதிலும்‌, அதிலுள்ள நீரைக்‌ களங்கப்படுத்தும்‌ அல்லது தூய்மையற்றதாக்கும்‌ வகையில்‌ விலங்கு அல்லது பொருள்‌ எதனையும்‌ எறிதல்‌ அல்லது போடுதல்‌ அல்லது அதில்‌ நுழையும்படி செய்தல்‌, (0) அத்தகைய இடம்‌ எதிலும்‌ அல்லது அதன்மீது, வடிகாலை வடித்தல்‌ அல்லது வடிய அனுமதித்தல்‌ அல்லது அதற்குள்‌ பொருள்‌ எதனையும்‌ கொண்டு வரச்செய்தல்‌ அல்லது கொண்டுவருதல்‌ அல்லது அதிலுள்ள நீரைக்‌ களங்கப்படுத்தும்‌ அல்லது தூய்மையற்றதாக்கும்‌ வகையில்‌ எதனையும்‌ செய்தல்‌, அல்லது (6) குடிக்கிற, குளிக்கிற அல்லது துணி துவைக்கிற நோக்கங்களுக்காக, நீர்‌ வழங்கும்‌ ஆதாரம்‌ எதற்கும்‌ அருகில்‌ தூய்மைக்கேடு எதுவும்‌ ஏற்படுவதைத்‌ தடுக்கும்‌ நோக்கத்திற்காக, வகுத்துரைக்கப்படும்‌ தேவைப்பாடுகளுக்கு இணங்கி நடக்கத்‌ தவறுகிற எதனையும்‌ செய்தல்‌ அல்லது செய்யுமாறு செய்தல்‌ சட்டப்படியானது ஆகாது. கழிவுநீரகற்றுதல்‌ 55. கழிவுநீரகற்று அமைப்புமுறை.-- (1) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்திற்குள்‌ கழிவு நீரைத்‌ திறம்பட வெளியேற்றும்‌ நோக்கத்திற்காக, மேற்சொன்ன பரப்பிடத்தில்‌ அல்லது பரப்பிடத்திற்காக, வாரியம்‌, நடைமுறையில்‌ இயன்ற அளவுக்குக்‌ கழிவுநீர்க்கால்களை அமைத்துப்‌ பேணிவருதலும்‌, பாதுகாப்பானதும்‌ போதுமானதுமான கழிவு நீர்க்கால்‌ அமைப்புமுறை ஒன்றை ஏற்படுத்துதலும்‌ வேண்டும்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்படியான வாரியத்தின்‌ அதிகாரங்கள்‌, (8) அதன்‌ நீர்க்கால்களில்‌ எதனையும்‌ பெரிதாக்குவதற்கான, அதில்‌ மேல்வளைவு அமைப்பதற்கான, அல்லது பிறவாறாகச்‌ சீரமைப்பதற்கான, அல்லது (b) தன்‌ கருத்தில்‌ பயனற்றதாக அல்லது தேவையற்றதாக ஆகியிருக்கிற அதன்‌ கழிவு நீர்க்கால்களில்‌ எதனையும்‌ நிறுத்திவிடுவதற்கான, மூடிவிடுவதற்கான அல்லது இடித்து விடுவதற்கான, அல்லது 49 (௦ எந்த நிலத்தில்‌ அதன்‌ கழிவு நீர்க்கால்களில்‌ எதுவும்‌ ஏற்கெனவே சட்டப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ அந்த நிலம்‌ எதிலும்‌ இருந்து வருகிற ஒரு கழிவு நீர்க்காலுக்கு மாற்றாக புதிய கழிவுநீர்க்கால்‌ எதனையும்‌ அமைப்பதற்கான அல்லது அவ்வாறு அமைக்கப்பட்ட கழிவுநீர்க்கால்‌ எதனையும்‌ பழுதுபார்ப்பதற்கான அல்லது மாற்றியமைப்பதற்கான, அதிகாரத்தை உள்ளடக்கும்‌. 56. கழிவுநீர்க்கால்‌ இணைப்புகள்‌.- (1) அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு, ஏதேனும்‌ வளாகத்தின்‌ உரிமையாளரின்‌ அல்லது அதில்‌ குடியிருப்பவரின்‌, அல்லது ஒரு தனியார்‌ தெருவின்‌ உரிமையாளரின்‌ விண்ணப்பத்தின்பேறில்‌, (ஐ அந்தத்‌ தனியார்‌ தெரு எந்த வாளகத்தில்‌ அல்லது சொத்தில்‌ அமைந்திருக்கிறதோ அந்த வளாகம்‌ அல்லது சொத்து, 35 ஆம்‌ பிரிவின்படி மதிப்பீடு செய்யப்பட்டவாறு முன்னூறு ரூபாய்க்கு குறைவான ஓர்‌ ஆண்டு பெறுமானத்திற்கு மதிப்பிடப்படுகிறது; (b) அத்தகைய வளாகத்திற்கு அல்லது சொத்திற்கு மிக அருகிலுள்ள இடத்திலிருந்து முப்பது மீட்டருக்குள்‌ வாரியத்தின்‌ கழிவுநீர்க்கால்‌ ஒன்று இருக்கிறது; ©) அந்த நோக்கத்திற்குத்‌ தேவையான பணிக்கும்‌, மூலப்‌ பொருள்களுக்குமான செலவுத்தொகைகள்‌, செலவுகள்‌ அனைத்தையும்‌ ஏற்பதற்கு அதன்‌ உரிமையாளர்‌ அல்லது அதில்‌ குடியிருப்பவர்‌ உடன்படுகிறார்‌, மற்றும்‌ (0) வகுத்துரைக்கப்படும்‌ நிபந்தனைகளுக்கும்‌ தேவைப்பாடுகளுக்கும்‌ அந்த உரிமையாளர்‌ அல்லது அதில்‌ குடியிருப்பவர்‌ இணங்கி நடக்கிறார்‌ என்றால்‌, விண்ணப்பதாரரின்‌ விட்டுக்‌ கழிவுநீர்க்காலிலிருந்து அல்லது அந்த தனியார்‌ தெருவிலுள்ள பிற கழிவுநீர்க்காலிலிருந்து வாரியத்தின்‌ கழிவுநீர்க்காலில்‌ கழிவுநீரை வடிப்பதற்கு ஏற்பாடு செய்தல்‌ வேண்டும்‌. (2) வளாகம்‌ எதிலும்‌, மிக அருகிலுள்ள இடத்திலிருந்து முப்பது மீட்டருக்கு மேற்படாத ஒரு தொலைவிற்குள்‌ கழிவுநீரை வெளியேற்றுவதற்காக வாரியத்தினால்‌ அமைக்கப்பட்ட கழிவுநீர்க்கால்‌ அல்லது பிற இடம்‌ ஒன்று இருக்கிறது என்றால்‌, அல்லது அத்தகைய தொலைவிற்குள்‌ கழிவுநீரை வெளியேற்றுவதற்கான வாரியத்தின்‌ கழிவுநீர்க்கால்‌ அல்லது பிற இடம்‌ ஒன்று அமைக்கப்படவிருக்கிறது அல்லது அமைக்கப்பட்டு வருகிறது என்றால்‌, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு, (௨) அறிவிப்பு வாயிலாக, மேற்சொன்ன வளாகத்தின்‌ உரிமையாளருக்கு, அந்த உரிமையாளரின்‌ செலவில்‌, அங்கிருந்து அத்தகைய கழிவுநீர்க்காலுக்கு அல்லது இடத்திற்கு, கழிவுந்ரைக்‌ கொண்டு செல்லும்‌ கழிவுநீர்க்கால்‌ ஒன்றை அமைக்கும்படியும்‌, தேவைப்படும்‌. பணியமைப்புகள்‌ அனைத்தையும்‌ நிறைவேற்றும்படியும்‌ பணிக்கலாம்‌; அல்லது 50 (௦) மேற்சொன்ன வளாகத்திலிருந்து வாரியத்தின்‌ கழிவுநீர்க்காலுக்கு அல்லது இடத்திற்கு, கழிவுநீரைக்‌ கொண்டு செல்லும்‌ ஒரு கழிவுநீர்க்காலை அமைக்கும்‌ படியும்‌, தேவைப்படும்‌ பணியமைப்புகள்‌ அனைத்தையும்‌ நிறைவேற்றும்படியும்‌ செய்யலாம்‌: வரம்புரையாக: (i) (b) கூறின்படி கழிவுநீர்க்கால்‌ எதனையும்‌ அமைப்பதற்கு அல்லது பணியமைப்பு எதனையும்‌ நிறைவேற்றுவதற்குக்‌ குறைந்தது பதினைந்து நாட்களுக்கு முன்பு, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு, செய்யக்‌ கருதப்பட்டுள்ள பணியின்‌ தன்மையினையும்‌, உரிமையாளரிடமிருந்து தண்டல்‌ செய்யப்படத்தக்க மதிப்பிடப்பட்ட செலவுகளையும்‌ பற்றி, உரிமையாளருக்கு அறிவிப்புக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (i) (b) கூறின்படி கழிவுநீர்க்கால்‌ எதனையும்‌ அமைப்பதில்‌, அல்லது பணியமைப்பு எதனையும்‌ நிறைவேற்றுவதில்‌ அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்புக்கு ஏற்பட்ட செலவுகள்‌, வாரியம்‌ தக்கதெனக்‌ கருதும்‌ தவணைகளில்‌ உரிமையாளரிடமிருந்து தண்டல்‌ செய்யப்படத்தக்கதும்‌, இந்தச்‌ சட்டத்தின்படியான வரியைப்‌ போன்ற அதேமுறையில்‌ தண்டல்‌ செய்யப்படத்தக்கதும்‌ ஆகும்‌. (3) வளாகம்‌ எதுவும்‌, கழிவுநீரைத்‌ திறம்பட அகற்றுவதற்குப்‌ போதுமான வழிவகையின்றி இருந்து, கழிவுநீரை வெளியேற்றுவதற்காக வாரியத்தினால்‌ ஒதுக்கப்பட்டுள்ள வாரியத்தின்‌ ஒரு கழிவுநீர்க்காலிலிருந்து அல்லது பிற இடத்திலிருந்து, முப்பது மீட்டருக்குள்‌, அதன்‌ பகுதி எதுவும்‌ அமைந்திருக்கவில்லை என்று அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு கருதினால்‌, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு, அறிவிப்பு வாயிலாக, அந்த அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு தேவையெனக்‌ கருதுகிற நிலையிலும்‌, இடத்திலும்‌, மட்டத்திலும்‌ அது தேவையெனக்‌ கருதுகிற மூலப்பொருள்‌, கனஅளவுகள்‌, விவரிப்பு ஆகியவற்றைக்‌ கொண்ட ஒரு மூடப்பட்ட வடிகுட்டையை (அல்லது பிற கழிவுநீரகற்று அமைப்பை) அமைக்கும்படியும்‌, அத்தகைய வடிகுட்டைக்குக்‌ கழிவு நீரைக்கொண்டு செல்வதற்கு ஒரு கழிவு நீர்க்காலை அல்லது கழிவு நீர்க்கால்களை அமைக்கும்படி தேவைப்படும்‌ பணியமைப்புகள்‌. அனைத்தையும்‌ நிறைவேற்றும்படியும்‌ மேற்சொன்ன வளாகத்தின்‌ உரிமையாளரைப்‌ பணிக்கலாம்‌. (4) அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்புக்குப்‌ போதுமானதெனத்‌ தோன்றுகிற கழிவுநீரகற்று வழிவகை, கட்டிடம்‌ எதற்கும்‌ வகைசெய்யப்பட்டிருக்கிறதென அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பிடமிருந்து ஓர்‌ உறுதிச்சான்றினைப்‌ பெற்றாலன்றி, மேற்சொன்ன கட்டிடத்தின்‌ உரிமையாளர்‌, அதில்‌ குடியிருப்பதோ, அதில்‌ குடியிருக்கும்படி செய்வதோ, குடியிருக்க அமைப்பதோ சட்டப்படியானது ஆகாது. 57. ஒருங்கிணைவாக கழிவுநீர்க்கால்கள்‌ அமைக்க அதிகாரம்‌.-- (1) எந்த வளாகங்களின்‌ தொகுப்பு அல்லது தொகுதியின்‌ பகுதி எதுவும்‌ ஏற்கெனவே இருந்து வருகிறது (அல்லது அமைக்கப்படவிருக்கிற அல்லது அமைக்கப்பட்டு 51 வருகிற) வாரியத்தின்‌ ஒரு கழிவுநீர்க்காலுக்கு முப்பது மீட்டருக்குள்ளாக அமைந்திருக்கிறதோ அந்தத்‌ தொகுப்பு அல்லது தொகுதி எதற்கும்‌ கழிவுநீர்க்காலைத்‌ தனித்தனியாக அமைப்பதைவிட ஒருங்கிணைவாக, அதிகச்‌ சிக்கனமாக அல்லது சாதகமான முறையில்‌ அமைக்கலாம்‌ என அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு கருதுகிறபோது, அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு, வாரியத்தின்‌ ஒப்புதலளிப்புடன்‌ அத்தகைய வளாகங்களின்‌ தொகுப்புக்கு. அல்லது தொகுதிக்கு, அதற்கு மிகச்‌ சிறப்பாகப்‌ பொருந்தக்கூடியதென அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்புக்குத்‌ தோன்றுகிற முறையில்‌ கழிவுநீர்க்கால்‌ அமைக்கப்படுமாறு செய்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அவ்வாறு செய்யும்போது அதிகாரஅமைப்பினால்‌ செய்யும்படி நேர்ந்த செலவுகள்‌, வாரியத்தினால்‌, தக்கதெனக்‌ கருதப்படுகிற வீத அளவுகளில்‌ உரிமையாளர்களால்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌; மேலும்‌ அது, இந்தச்‌ சட்டத்தின்படியான வரியைப்‌ போன்று அதே முறையில்‌ தண்டல்‌ செய்யப்படத்தக்கதாகும்‌. (2) இந்தப்‌ பிரிவின்படி பணி எதுவும்‌ தொடங்கப்படுவதற்கு முன்பாக பதினைந்துக்கு குறையாத நாட்களுக்கு, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு.- (ஐ செய்யக்‌ கருதப்பட்ட பணியின்‌ தண்மை, (௦) அதற்காக மதிப்பிடப்பட்ட செலவுகள்‌, (௦) ஒவ்வொரு சொந்தக்காரராலும்‌ செலுத்தப்படத்தக்க செலவுகளின்‌ வீத அளவு, ஆகியவை குறித்து, எழுதப்பட்ட அறிவிப்பை உரிமையாளர்களுக்கு அளித்தல்‌ வேண்டும்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவின்படி கழிவுநீர்க்கால்கள்‌ அமைக்கப்பட்டுள்ள ஒரு தொகுப்பாக அல்லது தொகுதியாக அமைந்துள்ள பல்வேறு வளாகங்களின்‌ அப்போதைய உரிமையாளர்கள்‌, அத்தகைய வளாகங்களின்‌. சிறப்புப்‌ பயன்பாட்டுக்கும்‌ நலனுக்கும்‌ மட்டுமே என அமைக்கப்பட்ட, நிறுவப்பட்ட அல்லது பொருத்தப்பட்ட அல்லது தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருகிற கழிவுநீர்க்காலுக்குக்‌ கூட்டு உரிமையாளர்கள்‌ ஆவர்‌; மற்றும்‌, (1) ஆம்‌ உட்பிரிவின்படி அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பினால்‌ செய்யும்படி நேர்ந்த செலவுகளுக்கு எந்த வீத அளவுப்படி அவர்கள்‌ பங்களிக்க வேண்டுமெனத்‌ தீர்மானிக்கப்படுகிறதோ அந்த வீத அளவுப்படி, அத்தகைய கழிவுநீர்க்காலைச்‌ செப்பமான, திறம்பட்ட நிலையில்‌ பேணிவருவதற்கான செலவுக்கும்‌ பொறுப்புடையவர்கள்‌ ஆவர்‌. 58. தற்போதுள்ள தனியார்‌ கழிவுநீர்க்கால்களை மூடுவதற்கு அல்லது அதன்‌ பயன்பாட்டுக்கு வரம்பிடுவதற்கு அதிகாரம்‌.- (1) வாரியத்தின்‌ ஒரு கழிவுநீர்க்காலுடன்‌ அல்லது கழிவுநீரை வெளியேற்றுவதற்கு வாரியத்தினால்‌ ஒதுக்கப்பட்டுள்ள பிற இடத்துடன்‌ வளாகம்‌ எதனையும்‌ இணைக்கிற ஒரு கழிவுநீர்க்கால்‌ போதுமானதாகவும்‌, பிறவாறாக மறுப்பதற்குரியதாக இல்லாமல்‌ இருந்து, ஆனால்‌ அத்தகைய கழிவுநீர்க்கால்‌ அமைந்துள்ள பரப்பிடத்தின்‌ அல்லது 52 பரப்பிடத்தின்‌ பகுதியின்‌ பொதுக்‌ கழிவுநீரகற்று அமைப்பு முறைக்கு ஏற்றதாக இல்லை என அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு கருதுகிறவிடத்து, வாரியத்தின்‌ ஒப்புதலளிப்புடன்‌ அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு- (@) (2) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, மேற்சொன்ன கழிவுநீர்க்காலை மூடிவிடலாம்‌, நிறுத்திவிடலாம்‌, அல்லது இடித்துவிடலாம்‌; மற்றும்‌ அந்த நோக்கத்திற்குத்‌ தேவையான பணி எதனையும்‌ செய்யலாம்‌; அல்லது (0௦) அத்தகைய கழிவுநீர்க்கால்‌, கழிவுநீருக்காக மட்டுமே அல்லது கழிவுநீரால்‌ தூய்மைக்கேடு அடையாத நீருக்காக மட்டுமே பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌ என பணிக்கலாம்‌; மற்றும்‌ கழிவுநீரால்‌ தூய்மை கேடு அடையாத நீருக்காகவோ, கழிவுநீருக்காகவோ முற்றிலும்‌ தணியான வடிகாலை வாரியத்தின்‌ செலவில்‌ அமைக்கலாம்‌. (2) அதே அளவுக்குச்‌ செம்மையாக அமைந்ததும்‌, வாரியத்தின்‌ கழிவுநீர்க்காலுடன்‌ அல்லது மேற்சொன்ன இடத்துடன்‌ இணைக்கக்கூடியதுமான மற்றொரு கழிவுநீர்க்கால்‌ அந்த வளாகத்திற்காக அமைத்துத்தரப்படும்‌ என்ற நிபந்தனையின்பேரில்‌ தவிர, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பினால்‌, கழிவுநீர்க்கால்‌ எதுவும்‌ மூடப்படுதலோ, பயன்படுத்தாது. விடப்படுதலோ, இடிக்கப்படுதலோ ஆகாது; மற்றும்‌ அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பினால்‌ அவ்வாறு அமைக்கப்பட்ட கழிவுநீர்க்கால்‌ எதனையும்‌ அமைப்பதற்கும்‌, கட்டப்பட்ட பணியமைப்பு எதற்கும்‌ ஆகிற செலவு வாரியத்தினால்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 59. விட்டுக்‌ கழிவுநீர்க்கால்கள்‌ மலக்கழிப்பிடங்கள்‌, வடிகுட்டைகள்‌ ஆயவற்றின்‌ மீது கட்டுப்பாடு.- (1) சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்திற்குள்ளேயாயினும்‌, வெளியேயாயினும்‌, வளாகங்களுக்குச்‌ சொந்தமான வீட்டுக்‌ கழிவுநீர்க்கால்கள்‌ அனைத்தும்‌, நச்சுத்தடை மலக்குழிகள்‌, வடிகுட்டைகள்‌ அனைத்தும்‌, வாரியத்தின்‌ கட்டுப்பாட்டின்கீழ்‌ இருத்தல்‌ வேண்டும்‌; ஆனால்‌, அது எந்த வளாகத்திற்குச்‌ சொந்தமானதோ, அல்லது எதனுடைய பயனுக்காக அமைக்கப்பட்டதோ அந்த வளாகத்தின்‌. உரிமையாளரின்‌ செலவில்‌ மாற்றியமைக்கப்படுதலும்‌, பழுது பார்க்கப்படுதலும்‌, நன்னிலையில்‌ வைத்துவரப்படுதலும்‌ வேண்டும்‌. (2) உரிமையாளர்‌ அல்லது குடியிருப்பவர்‌, கழிவுநீரகற்றுவதற்காக வரி, கட்டணம்‌ அல்லது செலவுத்‌ தொகை எதனையும்‌ செலுத்துவதற்கு, 47 ஆம்‌ பிரிவின்‌ (5) ஆம்‌ உட்பிரிவின்படி அல்லது 56 அல்லது 57 ஆம்‌ பிரிவின்படி செலுத்தப்படவேண்டிய தொகை எதனையும்‌ செலுத்துவதற்குத்‌ தவறியிருக்கிறவிடத்து, அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு, அத்தகைய சொந்தக்காரருக்கு அல்லது குடியிருப்பவருக்கு எழுத்துவடிவிலான பதினைந்து நாள்‌ அறிவிப்பை அளித்தபின்பு, வாரியத்தின்‌ கழிவுநீர்க்காலில்‌ பிற கழிவுநீர்க்கால்‌ எதுவும்‌ கழிவுநீரை வடிப்பதை அனுமதிக்காத வகையில்‌, அத்தகைய கழிவுநீர்க்காலைத்‌ துண்டித்துவிடலாம்‌. 60. குறித்த சில நேர்வுகளில்‌ பணியமைப்புகளை மூடிவிடுதல்‌, அகற்றுதல்‌ முதலியன.- (1) அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்பினால்‌ பரறிசோதனையும்‌, 53 ஆய்வும்‌ செய்யப்படுவதன்பேரில்‌, வளாகம்‌ எதிலுமுள்ள வீட்டுக்‌ கழிவுநீர்க்கால்‌, காற்றோட்ட வழி அல்லது குழாய்‌, வடிகுட்டை, வீட்டு வடிகால்‌, மலக்‌ கழிப்பிடம்‌, சிறுநீர்க்‌ கழிப்பிடம்‌ அல்லது குளிக்குமிடம்‌ அல்லது துவைக்குமிடம்‌ எதுவும்‌, சீரான அல்லது செம்மையான நிலையில்‌ இல்லை என்று அல்லது இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளில்‌ எதற்கும்‌ அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி அல்லது முறையாவணம்‌ எதற்கும்‌ மீறுகையாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதாகக்‌ கண்டறியப்படுகிறது என்றால்‌, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு, எழுத்துமூலமான அறிவிப்பு வாயிலாக- (ஐ) அதனை மூடிவிடுமாறு அல்லது அகற்றுமாறு அல்லது அதன்மீதுள்ள அத்தும்றுகை எதனையும்‌ அகற்றுமாறு, அல்லது (b) அதனைப்‌ புதுப்பிக்குமாறு, பழுதுபார்க்குமாறு, மூடிவிடுமாறு, மறுபடியும்‌ மூடிவிடுமாறு. ஆவி அடைப்பு செய்யுமாறு காற்றோட்ட வசதி செய்யுமாறு, தளம்பாவுமாறு, கல்பாவுமாறு, விசைநீரால்‌ துப்புரவு செய்யுமாறு அல்லது துப்புரவு செய்யுமாறு அல்லது இதற்குத்‌ தேவையென தான்‌ கருதும்‌ பிற நடவடிக்கையை எடுக்குமாறு, அந்த வளாகத்தின்‌ சொந்தக்காரரை வேண்டுறுத்தலாம்‌. (2) அத்தகைய நேர்வு எதிலும்‌, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு உடனடியாகவும்‌, அறிவிப்பு இன்றியும்‌. (ஐ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளில்‌ எதற்கும்‌ அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறைவிதி அல்லது முறையாவணம்‌ எதற்கும்‌ மீறுகையாக ஏதேனும்‌ வளாகத்தின்‌ வழியாக, அதிலிருந்து, அதனுள்‌ அல்லது அதன்மீது கழிவுநீரை, அருவருக்கத்தக்க பொருளை, அல்லது தூய்மைக்கேடுற்ற நீரைக்கொண்டு செல்கிற வீட்டுக்‌ கழிவுநீர்க்கால்‌ எதனையும்‌ மூடிவிடலாம்‌ அல்லது அழித்து விடலாம்‌; அல்லது 0) அடைபட்டுள்ள தடைப்பட்டுள்ள அல்லது எந்த வழியிலும்‌ தடுக்கப்பட்டுள்ள வீட்டுக்‌ கழிவுநீர்க்கால்‌ எதனையும்‌, சுத்தம்‌ செய்யலாம்‌, துப்புரவு செய்யலாம்‌ அல்லது திறந்துவிடலாம்‌; மற்றும்‌ அவ்வாறு செய்வதற்காகச்‌ செய்யும்படி நேர்ந்த செலவுகள்‌ அனைத்தும்‌ அந்த வளாகத்தின்‌ உரிமையாளரால்‌ அல்லது குடியிருப்பவரால்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 61. கழிவுநீர்க்கால்கள்‌ முதலானவை ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கியிருத்தல்‌.- (1) கழிவுநீர்க்கால்கள்‌, நச்சுத்தடை மலக்குழிகள்‌, வடிகுட்டைகள்‌, மலக்கழிப்பிடங்கள்‌, சிறுநீர்க்‌ கழிப்பிடங்கள்‌, அவற்றை ஒட்டியுள்ளவை அனைத்தும்‌, கழிவுநீரகற்றுதல்‌ பற்றி வகுத்துரைக்கப்படும்‌. தேவைப்பாடுகளுக்கு இணங்கியவாறு அமைக்கப்படுதலும்‌, பேணிவரப்படுதலும்‌, பழுதுபார்க்கப்படுதலும்‌, மாற்றியமைக்கப்படுதலும்‌, முறைப்படுத்தப்படுதலும்‌ வேண்டும்‌. 54 (2) சொந்தக்காரர்‌ அல்லது குடியிருப்பவர்‌ எவரும்‌, ஏதேனும்‌ தெருவிலுள்ள அல்லது அதன்‌ நெடுகிலுமுள்ள கழிவுநீர்க்காலின்‌ சுவர்களில்‌ அல்லது பக்கமாக உள்ளதரையில்‌ கழிவுப்பொருள்‌ எதுவும்‌ ஊறிப்பரவுவதால்‌, ஏற்படும்‌ தொல்லையைத்‌ தடுக்கின்ற முறையில்‌ தவிர பிறவாறு, தெரு எதிலும்‌, அல்லது ஒரு தெருவிலுள்ள அல்லது அதன்‌ நெடுகிலும்‌ உள்ள கழிவுநீர்க்காலில்‌, கழிவுநீர்த்தொட்டி வடிகால்‌ கழிப்பிடம்‌ எதிலிருந்துவரும்‌ நீரையோ அல்லது கொட்டில்‌ அல்லது பிற இடம்‌ எதிலிருந்தும்‌ வரும்‌ சாக்கடை நீரையோ அல்லது பிற கழிவுப்பொருள்‌ எதையுமோ ஓடவிடுவதோ, அதில்‌ பரவவிடூுவதோ அல்லது போடுவதோ ஆகாது. பொது 62. உரிமையாளர்‌, குடியிருப்பவர்‌ ஆகியோரின்‌ கடமைகள்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி, வளாகம்‌ எதனின்‌ சொந்தக்காரர்‌ பணி எதனையும்‌ நிறைவேற்றுமாறு கோரப்படும்போது, மேற்சொன்ன வளாகத்தில்‌ குடியிருப்பவர்‌ அவருக்கு மாற்றாக அந்தப்‌ பணியினை நிறைவேற்றுமாறு கோரப்படலாம்‌; மற்றும்‌ அந்தக்‌ குடியிருப்பவர்‌ அந்த கோரிக்கைக்கு இணங்கி நடக்கக்‌ கட்டுப்பட்டவர்‌ ஆவார்‌: வரம்புரையாக: இதற்குமாறான ஒரு சிறப்பு உடன்பாடு இருக்கும்‌ நேர்வில்‌ தவிர, குடியிருப்பவர்‌, அத்தகைய பணியை நிறைவேற்றுவதற்குத்‌ தமக்கு நியாயமாக ஏற்பட்ட அல்லது தம்மால்‌ செலுத்தப்பட்ட செலவுத்‌ தொகையைக்‌ சொந்தக்காரருக்கு தம்மால்‌ செலுத்தப்படத்தக்க வாடகையிலிருந்து அல்லது ஏதேனும்‌ பிற தொகையிலிருந்து கழித்துக்கொள்ளலாம்‌ அல்லது தகுதிறம்‌ வாய்ந்த அதிகார வரம்பு கொண்டுள்ள நீதிமன்றத்திடம்‌ விண்ணப்பிப்பதின்‌ வாயிலாக அதனைச்‌ சொந்தக்காரரிடமிருந்து மளப்பெறலாம்‌. (2) 44, 45, 46, 47, 48, 49, 56, 57 ஆகிய பிரிவுகளில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள்‌ அனைத்தையும்‌ செலுத்துவதற்கு அந்த வளாகத்தின்‌ சொந்தக்காரரும்‌, அதில்‌ குடியிருப்பவரும்‌ கூட்டாகவும்‌ தனித்தனியாவும்‌ கடப்பாடுடையவர்‌ ஆவர்‌. 63. குழாய்கள்‌, கழிவுநீர்க்கால்கள்‌ முதலானவற்றைக்‌ கொண்டு செல்வதற்கும்‌ பணியமைப்புகளைப்‌ பேணி வருவதற்கும்‌ வாரியத்தின்‌ அதிகாரம்‌.- நீர்வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுதல்‌ அமைப்புமுறை எதனையும்‌ நிறுவுவதற்கு அல்லது பேணிவருவதற்கு, வாரியம்‌ அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு, குழாய்‌, பெருங்குழாய்‌ கழிவுநீர்க்கால்‌ அல்லது வாய்க்கால்‌ எதனையும்‌, நிலம்‌ அல்லது கட்டிடம்‌ எதனின்‌ வழியாகவோ, குறுக்காகவோ, அதன்‌ அடியிலோ, அதற்கு மேலாகவோ அல்லது அதன்மீது பக்கவாட்டிலோ கொண்டு செல்லலாம்‌, மற்றும்‌ அந்தக்‌ குழாய்கள்‌, பெருங்குழாய்கள்‌, கழிவுநீர்க்கால்கள்‌, வாய்க்கால்கள்‌ ஆகியவற்றை தாங்குவதற்கான சாதனங்களை நிறுவி, பேணி வரலாம்‌; மற்றும்‌ அத்தகைய குழாய்‌, பெருங்குழாய்‌, கழிவுநீர்க்கால்‌ அல்லது வாய்க்கால்‌ அல்லது சாதனங்கள்‌ எந்த நோக்கத்திற்குப்‌ பயன்படுத்தப்படுகிறதோ, அந்த நோக்கத்திற்காகத்‌ திறம்பட்ட முறையில்‌ பமழுதுபார்ப்பதற்கு அல்லது 55 பேணிவருவதற்கு அல்லது அதனை அகற்றுவதற்குத்‌ தேவையான அல்லது உகந்த செயல்கள்‌ அனைத்தும்‌ செய்யலாம்‌: வரம்புரையாக: அத்தகைய பணி செய்யப்படும்போது எந்த நபருக்கும்‌ நடைமுறையில்‌ இயன்றவரை மிகக்‌ குறைந்த தொல்லை அல்லது வசதிக்‌ குறைவு மட்டுமே ஏற்படுவதாக இருத்தல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரையாக: அத்தகைய அதிகாரத்தைச்‌ செலுத்துவதனால்‌ இழப்பீட்டுக்கு உள்ளாகிற நபர்‌ எவருக்கும்‌, வாரியம்‌ சரியீடு செலுத்துதல்‌ வேண்டும்‌. 64. சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்திற்கு அப்பாலுள்ள பணியமைப்பு.- வாரியம்‌, சென்னைப்‌ பெருநகரப்‌ பரப்பிடத்தின்‌ எல்லைகளுக்கு அப்பாலுள்ள பணியமைப்பு எதனையும்‌ நிறைவேற்றுகையிலும்‌, அதன்‌ நோக்கங்களுக்காகவும்‌, அந்தப்‌ பரப்பிடத்திற்குள்ளாகத்‌ தான்‌ செலுத்தும்‌ அதிகாரங்கள்‌ அனைத்தையும்‌, குழாய்க்‌ கால்வாய்களும்‌, வாய்க்கால்களும்‌, குழாய்களும்‌ செல்கிற அல்லது பணியமைப்புகள்‌ அல்லது அவைபோன்றவை அமைந்துள்ள பகுதியின்மீதும்‌, அந்தப்‌ பரப்பிடத்தின்‌ பயன்பாட்டிற்காகக்‌ குடிநீர்‌ வழங்கப்படுகிற ஏரி, நீர்த்தேக்கம்‌, அல்லது பிற நீர்வாயில்‌ எதன்மீதும்‌, அத்தகைய ஏரியின்‌ அல்லது நீர்த்தேக்கத்தின்‌ மிக உயர்ந்த நீர்மட்டத்திற்கு அப்பால்‌ ஒரு கிலோமீட்டருக்கு மேற்படாத தொலைவில்‌ உள்ள நிலங்கள்‌ அனைத்தின்ம்தும்‌, கழிவுநீர்ப்‌ பண்ணைகளுக்காகவும்‌, கழிவுநீர்வெளியேற்றத்‌ தொட்டிகளுக்காகவும்‌, வடிகட்டு தளங்களுக்காகவும்‌, அந்தப்‌ பரப்பிடத்தின்‌ கழிவுநீரகற்றுதலுடன்‌ இணைவுடைய பிற பணியமைப்புகளுக்காகவும்‌ பயன்படுத்தப்படுகிற எவையேனும்‌ நிலங்களின்மீதும்‌ செலுத்தலாம்‌. 65. குழாய்கள்‌, கழிவுநீர்க்கால்கள்‌ முதலியவற்றின்‌ பொருட்கள்‌ உற்றமைதலும்‌, அவற்றிக்கு வகைசெய்ய வாரியத்தின்‌ அதிகாரமும்‌.- நேர்வுக்கேற்ப, வாரியத்தின்‌ பெருங்குழாய்கள்‌, குழாய்கள்‌ அல்லது கழிவுநீர்க்கால்களில்‌ உள்ள அல்லது அதில்‌ கொண்டுவந்துவிடப்படுகிற அல்லது அதன்வழியாக கொண்டு செல்லப்படுகிற பொருட்கள்‌ அல்லது மூலப்பொருட்கள்‌ அனைத்தும்‌, வாரியத்தின்‌ சொத்தாக இருக்கும்‌; மற்றும்‌ அத்தகைய பொருள்களை அல்லது மூலப்பொருள்களைப்‌ பக்குவப்படுத்துவது, அல்லது பண்படுத்துவது மற்றும்‌ அவ்வாறு பக்குவப்படுத்தப்பட்டவாறு அல்லது பண்படுத்தப்பட்டவாறு அல்லது பிறவாறாக வாரியம்‌, தான்‌ தக்கதெனக்‌ கருதுகிறமுறையில்‌ அவற்றைப்‌ பயன்படுத்துவது அல்லது அவற்றிற்கு வழி செய்வது சட்டப்படியானது ஆகும்‌. 66. பணியமைப்புகளை நிறைவேற்றுதல்‌, அத்தும்றல்களை அகற்றுதல்‌, உரிமை கொண்டாடப்படாத மூலப்பொருட்கள விற்பனை செய்தல்‌ முதலியவற்றுக்கு அதிகாரம்‌.- (1) () இந்தச்‌ சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட ஏதேனும்‌ ஒழுங்குமுறை விதியின்‌. அல்லது பிற முறையாவணத்தின்படி நிறைவேற்றுமாறு வேண்டுறுத்தப்பட்ட பணி எதனையும்‌, சொந்தக்காரர்‌ அல்லது குடியிருப்பவர்‌ அல்லது அதற்குப்‌ பொறுப்புடைய பிற நபர்‌ எவரும்‌ நிறைவேற்றத்‌ தவறியுள்ளபோது, அப்பணியை நிறைவேற்றுவதும்‌, 56 அதற்கான செலவுத்‌ தொகையினையும்‌, செலவினையும்‌ அந்த உரிமையாளர்‌ அல்லது குடியிருப்பவரிடமிருந்து தண்டல்‌ செய்வதும்‌, (i) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறை எதற்கும்‌, அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறைவிதி அல்லது முறையாவனம்‌ எதற்கும்‌ மீறுகையாகப்‌ போட்டு வைக்கப்பட்ட மூலப்பொருள்‌ அல்லது அமைக்கப்பட்ட கட்டுமானம்‌, ஏற்பட்ட தடை அல்லது அத்தும்றல்‌ எதனையும்‌ அகற்றுவதும்‌, (i) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறை எதனையும்‌ அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி அல்லது பிற முறையாவனம்‌ எதனையும்‌ அடியொற்றி பெயர்க்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட மூலப்‌ பொருள்கள்‌, மரங்கள்‌, புதர்கள்‌, செடிகள்‌, பிற பொருட்கள்‌ ஆகியவற்றை அகற்றுவதும்‌, (iv) வாரியத்தின்‌ நிலத்தின்மீதான அத்தும்றல்‌ எதனையும்‌ அரசு நிலத்தின்‌ மீதான அத்தும்றலாகக்‌ கருதுவதும்‌, அந்த அத்தும்றலைச்‌ செய்கிற நபர்‌ எவரையும்‌ 1905 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நில அத்தும்றல்‌ சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம்‌ 11/1905) வெளியேற்றுவதும்‌, வாரியத்திற்குச்‌ சட்டப்படியானதாகும்‌; மற்றும்‌, மேற்சொன்ன சட்டத்தின்‌ வகைமுறைகள்‌, அரசு நிலத்தின்மீதான அத்தும்றலுக்குப்‌ பொருந்துவது போன்றே வாரியத்தின்‌ நிலத்தின்மீதான அத்தும்றலுக்கும்‌ பொருந்தும்‌. (2) மேற்சொன்னவாறு அகற்றப்பட்ட, பெயர்க்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட மூலப்பொருள்‌ அல்லது பிற பொருள்‌ எதனையும்‌ அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு விற்கலாம்‌; மற்றும்‌, அந்த விற்றுமுதலை, செய்யநேர்ந்த செலவுகளுக்கு முதலில்‌ பயன்படுத்திய பின்பு, அந்த விற்பனையிலிருந்து சேர்ந்த மிகைத்தொகையை அந்த விற்பனையின்‌ தேதியிலிருந்து பன்னிரண்டு மாதத்திற்குள்‌ உரிமையாளர்‌ அல்லது அதற்கு உரிமைப்பாடுடைய பிறர்‌ கோருவதன்‌ பேரில்‌, அவருக்குச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. ஆனால்‌, அத்தகைய கோரிக்கை எதுவும்‌ செய்யப்படவில்லை என்றால்‌, அத்தகைய மிகைத்தொகை வாரியத்திற்கு தண்ட இழப்பாகச்‌ சேருதல்‌ வேண்டும்‌. 67. நிலம்‌ முதலானவற்றில்‌ நுழைவதற்கும்‌ பெருங்குழாய்கள்‌ முதலானவற்றைப்‌ பொருத்திப்‌ பேணிவருவதற்குமான அதிகாரம்‌-- (1) (2) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக, உதவியாளர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுடனோ இல்லாமலோ, (ஐ நிலம்‌ அல்லது கட்டிடம்‌ எதற்குள்ளும்‌ நுழைதல்‌, அல்லது அதன்மீது செல்லுதல்‌, அல்லது ஏதேனும்‌ நிலத்தைச்‌ சமப்படுத்துதல்‌ அல்லது பணியமைப்பு எதனையும்‌ அணுக வழி பெறுதல்‌ அல்லது அப்பணியமைப்பை நிறைவேற்றுதல்‌, (b) இந்தச்‌ சட்டத்தினாலோ அதன்படியோ அதிகாரமளிக்கப்பட்ட பணியமைப்பு எதனுடனும்‌ தொடர்புடைய மண்‌, சரளைக்கல்‌ அல்லது பிற மூலப்பொருள்‌ எதனையும்‌ போடுவதற்காக நிலம்‌ எதிலும்‌ நுழைதல்‌; (69) அசையாச்‌ சொத்து எதிலும்‌ நுழைதல்‌ மற்றும்‌ பெருங்குழாய்கள்‌, குழாய்கள்‌, கழிவுநீர்க்கால்கள்‌, பிற அமைப்புகள்‌ ஆகியவற்றை அத்தகைய 57 சொத்தின்மீது, அதன்‌ நெடுகிலும்‌, அதன்‌ குறுக்கே அல்லது அதன்கீழே பொருத்தி, அவற்றைப்‌ பேணிவருதல்‌; (0) இடம்‌ எதிலும்‌ நுழைந்து, அதன்‌ கதவு, வாயில்‌ அல்லது பிற தடுப்பு எதனையும்‌ திறப்பது தேவையாகிறது என்றால்‌, அல்லது அதனைத்‌ திறப்பதற்கு உரிமையாளரின்‌ அல்லது குடியிருப்பவரின்‌ இசைவு மறுக்கப்படுகிறது என்றால்‌, அல்லது உரிமையாளர்‌ அல்லது குடியிருப்பவர்‌ இல்லாதிருக்கிறார்‌ என்றால்‌, அந்தக்கதவு, வாயில்‌ அல்லது பிற தடுப்பு எதனையும்‌ திறத்தல்‌ அல்லது திறக்குமாறு செய்தல்‌; (6) நிலத்தடி மண்ணைத்‌ தோண்டுதல்‌ அல்லது அதில்‌ துளையிடுதல்‌; ) நிலத்தைச்‌ சமப்படுத்தி, அடையாளக்‌ குறிகளிட்டும்‌, பள்ளங்கள்‌ வெட்டியும்‌ எல்லைகள்‌ அமைத்தல்‌; (9) வளர்ந்த பயிர்‌, வேர்‌ அல்லது செடி எதனின்‌ பகுதியையும்‌ வெட்டி அப்புறப்படுத்துதல்‌; 0 குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுதலுடன்‌ தொடர்புடைய பழுதுபார்த்தல்‌ அல்லது பணியமைப்பு எதனையும்‌ நிறைவேற்றுவதற்காக தெரு எதிலும்‌ போக்குவரத்து எதனையும்‌ தற்காலிகமாக மூடிவிடுவதற்கான ஆணைகளைப்‌ பிறப்பித்தல்‌ ஆகியவை சட்டப்படியானது ஆகும்‌. (2 (1) ஆம்‌ உட்பிரிவின்படியான ஏதேனும்‌ நடவடிக்கைக்குக்‌ கீழ்க்கண்டவை தொடர்புற்ற நோக்கங்கள்‌ ஆகும்‌:- (8) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி நிலஅளவை அல்லது ஆய்வு எதனையும்‌ மேற்கொள்ளுதல்‌; (௦) பெருங்குழாய்கள்‌, கழிவுநீர்க்கால்கள்‌, பிற அமைப்புகள்‌, ஆகியவற்றை ஆய்வு செய்தல்‌, பழுது பார்த்தல்‌, மாற்றியமைத்தல்‌ அல்லது அகற்றுதல்‌; (69) இந்தச்‌ சட்டத்தினாலோ அதன்படியோ அதிகாரமளிக்கப்பட்ட பணியமைப்பு எதனையும்‌ அமைத்தல்‌ அல்லது நிறைவேற்றுதல்‌; (0) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எவையும்‌ அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழங்குமுறை விதிகள்‌ எவையும்‌ அல்லது முறையாவணம்‌ எதுவும்‌ ம்றப்பட்டுள்ளதா என்பதைக்‌ கண்டறிதல்‌; (ஐ) இந்தச்‌ சட்டத்தினாலோ அதன்படியோ அதிகாரமளிக்கப்பட்ட அல்லது வேண்டுறுத்தப்பட்ட அல்லது இந்தச்‌ சட்டத்தை உரியவாறு நிருவகிப்பதற்குத்‌ தேவையான விசாரணை, ஆய்வு, சோதனையிடுதல்‌, அளவீடு, மதிப்பிடு அல்லது அளவை எதனையும்‌ செய்தல்‌; (7) பொதுவாக, இந்தச்‌ சட்டத்தின்படி வாரியத்திடம்‌ ஒப்படைக்கப்பட்டுள்ள அலுவற்பணிகளைத்‌ திறம்பட ஆற்றுதல்‌. 58 (3) (வாரியத்திற்குச்‌ சொந்தமான சொத்து அல்லாத பிற) எந்த நிலத்தை, கட்டிடத்தை அல்லது அசையாச்‌ சொத்தினைப்‌ பொறுத்து இந்தச்‌ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த நிலத்திற்கான, கட்டிடத்திற்கான அல்லது அசையாச்‌ சொத்திற்கான உரிமை மூலம்‌ எதனையும்‌, அல்லது பயன்படுத்துபவரின்‌ உரிமையல்லாத பிற உரிமை எதனையும்‌ வாரியம்‌ கையகப்படுத்துதல்‌ ஆகாது; மற்றும்‌, இந்தப்‌ பிரிவின்படி நடவடிக்கை எதனையும்‌ தொடங்குவதற்கு முன்பு, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு, நெருக்கடியின்போது தவிர, சொந்தக்காரருக்கு அல்லது குடியிருப்பவருக்கு அவ்வாறு செய்வது பற்றிய தனது கருத்து குறித்து இருபத்து நான்கு மணிக்குக்‌ குறையாத அறிவிப்புக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: அந்த அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு நெருக்கடியின்போது தவிர, அந்த நிலம்‌, கட்டிடம்‌, அல்லது அசையாச்‌ சொத்து அத்தகைய அதிகார அமைப்பிற்குச்‌ சொந்தமாக இருந்து, அதன்‌ அனுபோகத்திலிருக்கிறவிடத்து, தொடர்புடைய அதிகாரஅமைப்பின்‌ முன்‌ அனுமதியைப்‌ பெறுதல்‌ வேண்டும்‌. (4) இந்தப்‌ பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரம்‌ எதனையும்‌ செலுத்துகையில்‌, சொத்து எதற்கும்‌ இயன்ற அளவுக்குக்‌ குறைந்த சேதத்தையே விளைவித்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அத்தகைய அதிகாரத்தைச்‌ செலுத்தியதன்‌. விளைவாகத்‌ தங்களுக்கு ஏற்பட்ட சேதம்‌ எதற்காகவும்‌, அத்தகைய சொத்து எதிலும்‌ பாத்தியதை உடைய நபர்‌ அனைவருக்கும்‌ வாரியம்‌ நஷ்டஈடு அளித்தல்‌ வேண்டும்‌. 68. உரிமம்‌ பெற்ற குழாய்ப்‌ பணியாளராலேயே பணிகள்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌.- (1) வாரியத்தினால்‌ பிறவாறாக அனுமதியளிக்கப்பட்டுள்ளவாறு தவிர, ஓர்‌ உரிமம்‌ பெற்ற குழாய்ப்‌ பணியாளராக இல்லாத பிற நபர்‌ எவரும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி பணி எதனையும்‌ நிறைவேற்றுதலோ ஓர்‌ உரிமம்‌ பெற்ற குழாய்ப்‌ பணியாளரைத்‌ தவிர பிற எவராலும்‌ அத்தகைய பணி எதுவும்‌ நிறைவேற்றப்படுவதற்கு அனுமதித்தலோ கூடாது. (2) குழாய்ப்‌ பணியாளர்களுக்கு உரிமம்‌ வழங்குவதற்கான முறை, நெறிகள்‌, நடைமுறை ஆகியவற்றையும்‌, அவர்களால்‌ செய்யப்படும்‌ பணி எதற்கும்‌ விதிக்கப்பட வேண்டிய கட்டணங்கள்‌, அவர்களால்‌ பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிகள்‌, உரிமங்களை இரத்து செய்தல்‌ ஆகியவற்றையும்‌, குழாய்ப்‌ பணி தொடர்பான பொருட்பாடுகள்‌ அனைத்தையும்‌ வாரியம்‌ வகுத்துரைத்தல்‌ வேண்டும்‌. 69. குறித்தசில செயல்களுக்குத்‌ தடை- நபர்‌ எவரும்‌.- (ஐ) இந்தச்‌ சட்டத்தினாலோ அதன்படியாகவோ விதிக்கப்பட்டுள்ள கடமைகளை ஆற்றுவதில்‌ ஒப்பந்தக்காரர்‌, ஒப்பந்தக்காரரின்‌ வேலையாள்‌, வாரியத்தின்‌ முகவர்‌ எவரும்‌ உள்ளடங்கலான நபர்‌ எவரையும்‌ தடுத்தல்‌ ஆகாது; 59 (௦) குடிநீர்ப்பணியமைப்பு அல்லது கழிவுநீரகற்றுப்‌ பணியமைப்பு எதனையும்‌ அல்லது குடிநீர்‌ அல்லது கழிவுநீர்‌ எதனின்‌ ஓட்டம்‌ உள்ளடங்கலாக அளவுமானி, சாதனம்‌ அல்லது கருவி எதனையும்‌ தடுத்தல்‌, தடை செய்தல்‌, பழுதாக்குதல்‌ அல்லது இடையிட்டுக்‌ கெடுத்தல்‌ அல்லது குந்தகம்‌ செய்தல்‌ அல்லது அதற்குச்‌ சேதம்‌ அல்லது கேடு எதனையும்‌ விளைவித்தல்‌ ஆகாது; (c) இந்தச்‌ சட்டத்தினாலோ அதன்படியாகவோ அதிகாரமளிக்கப்பட்டுள்ளவாறு தவிர, குடிநீர்‌ எதனையும்‌ எடுத்தல்‌ அல்லது பயன்படுத்துதல்‌ ஆகாது; (0) குடிப்பதற்கு உகந்தநீர்‌ போதிய அளவுக்கு வகை செய்யப்பட்டிராத அல்லது வழங்குவதற்கு வழிவகை இல்லாதிருக்கிற குடியிருப்பு வீடு அல்லது வளாகம்‌ எதிலும்‌ குடியிருத்தலோ, குடியிருக்கும்படி செய்தலோ குடியிருக்க அனுமதித்தலோ ஆகாது; (e) கழிவுநீரகற்றுவதற்குப்‌ போதிய வழிவகைகளைக்‌ கொண்டிராத கட்டிடம்‌ அல்லது வளாகம்‌ எதிலும்‌ குடியிருத்தலோ, குடியிருக்கும்படி செய்தலோ குடியிருக்க அனுமதித்தலோ ஆகாது; () இந்தச்‌ சட்டத்தினாலோ அதன்‌ படியாகவோ அதிகாரமளிக்கப்பட்டுள்ளவாறு தவிர, கழிவுநீர்‌ எதனையும்‌ வெளியேற்றுதல்‌ ஆகாது; (9) வாரியத்தின்‌ அதிகாரத்தின்படி வைக்கப்பட்டுள்ள தூண்‌, கம்பம்‌, நடுகழி அல்லது அடையாளக்குறி எதனையும்‌ வீழ்த்துதலோ அகற்றுதலோ ஆகாது; (h) அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பின்‌ அனுமதியுடன்‌ தவிர, குழாய்க்‌ கால்வாய்‌, பெருங்குழாய்‌, அல்லது குழாய்‌ செல்கிறதும்‌ வாரியத்திடம்‌ உள்ளதுமான நிலத்திலும்‌, குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதலுடன்‌ தொடர்புடைய வளாகம்‌ எதிலும்‌ அத்தும்றி நுழைதலோ ஆகாது; () வாரியத்திற்குச்‌ சொந்தமான குழாய்கள்‌ அல்லது பெருங்குழாய்கள்‌ எவற்றின்மீதும்‌ அல்லது வாரியத்திற்குச்‌ சொந்தமான கழிவுநீர்க்கால்‌ எதனின்‌ கீழேயோ, உள்ளேயோ அல்லது குறுக்கேயோ வேலி அல்லது கட்டடம்‌ அல்லது பிற கட்டுமானம்‌ எதனையும்‌ கட்டுதலோ, அமைத்தலோ ஆகாது. அத்தியாயம்‌ VII தீர்ப்பாயம்‌, மேல்முறையீடுகள்‌ மற்றும்‌ மேலாய்வு. 70. தீர்ப்பாயத்தை அமைத்தல்‌- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைக்கலாம்‌. (2) தீர்ப்பாயம்‌ ஒருவரைக்‌ கொண்டதாயிருக்கும்‌; அவர்‌, சார்நிலை நீதிபதியின்‌ படிநிலைக்குக்‌ கீழ்ப்பட்டிராத ஒரு நீதித்‌ துறை அலுவலராக இருத்தல்‌ வேண்டும்‌. 60 (3) தீர்ப்பாயம்‌, 1908 ஆம்‌ ஆண்டு உரிமைவழக்கு விசாரணைமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 71908) படி ஓர்‌ உரிமையியல்‌ நீதிமன்றத்திடம்‌ அமைந்துள்ள அதே அதிகாரங்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. (4) தீர்ப்பாயம்‌, அரசின்‌ முண்ஒப்புதலளிப்புடன்‌, தன்‌ அலுவல்களை நடத்துவதற்காகத்‌ தான்‌: தேவையெனக்‌ கருதும்‌ அலுவலர்களையும்‌ பணியாளர்களையும்‌ அமர்த்தலாம்‌; மற்றும்‌ அத்தகைய அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ பணியூதியமும்‌, பணிவரைகட்டுகளும்‌ அரசினால்‌ தீர்மானிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (5) தீர்ப்பாயம்‌, 71 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள மேல்முறையீடுகளைச்‌ செய்வது, கேட்பது மற்றும்‌ நடத்துவது பொறுத்த தன்‌ நடைமுறைகளை முறைப்படுத்துவதற்கு அதிகாரத்தைத்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. 71. மேல்முறையீடுகள்‌.-- (1) (i) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி நீர்‌ வரி விதத்தை அல்லது கழிவுநீரகற்று வரி வீதத்தை நிர்ணயிக்கின்ற அல்லது அத்தகைய வரியைக்‌ கோருகின்ற, அல்லது 00 ௦௦௦00 (1) 51 ஆம்‌ பிரிவின்படி ஓர்‌ உரிமத்தை மறுக்கின்ற முடிபு அல்லது தீர்மானம்‌ எதனாலும்‌ குறையுற்ற எவரும்‌, அத்தகைய முடிபு, தீர்மானம்‌, வரி விதிப்பு அல்லது அறிக்கை பற்றி தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌, தீர்ப்பாயத்திற்கு மேல்முறையீடு செய்யலாம்‌. (2) ஒரு மேல்முறையீட்டைத்‌ தீர்மானிக்குங்கால்‌, தீர்ப்பாயம்‌ மேல்முறையீட்டாளருக்கு முறையீடு செய்வதற்கு ஒரு வாய்ப்பு அளித்த பின்பு, வரிவீதத்தை உறுதி செய்யலாம்‌ அல்லது குறைக்கலாம்‌ அல்லது தள்ளிவிடலாம்‌ அல்லது ஓர்‌ உரிமம்‌ வழங்க மறுத்ததை உறுதிப்படுத்தலாம்‌ அல்லது உரிமம்‌ வழங்குமாறு பணிக்கலாம்‌ அல்லது அதன்‌ பின்விளைவான ஆணைகள்‌ உள்ளடங்கலாகத்‌ தான்‌ தக்கதெனக்‌ கருதும்‌ பிற ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌. 72. மேல்முறையீடுகள்‌ எப்போது கேட்கப்படலாம்‌ என்பதும்‌, கட்டண விதங்கள்‌ முதலானவற்றின்‌ இறுதியான தன்மையும்‌.- (1) நிருணயிக்கப்பட்டு அல்லது கோரப்பட்டு விண்ணப்பதாரரால்‌ கொடுபடவேண்டிய நீர்வரி அல்லது கழிவுநீரகற்று வரி, வாரியத்திற்குச்‌ செலுத்தப்பட்டிருந்தாலன்றி, நீர்வரி அல்லது கழிவுநீரகற்று வரி விதிப்பிற்கு அல்லது கோரிக்கைக்கு எதிரான மேல்முறையீடு எதுவும்‌ கேட்கப்படுதல்‌ ஆகாது. (2) மேல்முறையீட்டின்பேரில்‌ மாற்றம்‌ செய்யப்பட்டாலன்றியும்‌, மாற்றம்‌: செய்யப்படும்‌ வரையிலும்‌, நீர்வரியும்‌, கழிவுநீரகற்று வரியும்‌ வாரியத்தினால்‌ தீர்மானிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்படி எந்த வரிக்கு எதிராக மேல்முறையீடு எதுவும்‌ செய்யப்படவில்லையோ அந்த வரியின்‌ பொருட்டு நபர்‌ எவரிடமும்‌ கோரப்பட்ட 61 பணத்தொகை ஒவ்வொன்றின்‌ மொத்தத்‌ தொகை இந்தச்‌ சட்டத்தின்படியான மேல்முறையீடு எதன்‌ பேரிலுமான தீர்ப்பாயத்தின்‌ முடிபும்‌ அறுதியானவை ஆகும்‌; மற்றும்‌, அது, நீதிமன்றம்‌ எதிலும்‌ மறுத்து வாதிடப்படுதல்‌ ஆகாது. 73. சீராய்வு வாரியம்‌, அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பின்‌: எவையேனும்‌ சட்ட நடவடிக்கைகள்‌ அல்லது அதனால்‌ எடுக்கப்பட்ட பிற நடவடிக்கை பற்றிய பதிவுக்குறிப்புகளை, ஏதேனும்‌ ஆணையின்‌ அல்லது சட்ட நடவடிக்கையின்‌ அல்லது பிற நடவடிக்கையின்‌ சட்டசீலம்‌ அல்லது முறைமை பற்றி தான்‌ மனநிறைவடையும்‌ பொருட்டு கேட்டனுப்பலாம்‌; மற்றும்‌ அது தக்கதெனக்‌ கருதும்‌ ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌. அத்தியாயம்‌ VI பல்வகைப்பட்டவை. 74. வாரியத்திற்குக்‌ கொடுக்கப்பட வேண்டிய தொகைகள்‌, நிலவருவாய்‌ நிலுவையைப்‌ போன்று தண்டல்‌ செய்யப்படுதல்‌.- இந்தச்‌ சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை, விதி அல்லது பிற முறையாவணம்‌ எதனின்படியும்‌ வரிவிீதம்‌, கட்டணம்‌, செலவுத்தொகை, செலவு, செலுத்துக்‌ கட்டணம்‌, வாடகை என்ற வகையில்‌ அல்லது ஏதேனும்‌ பிற வகையில்‌ வாரியத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தொகை எதுவும்‌, தண்டல்‌ செய்வதற்குரிய ஏதேனும்‌ பிற முறை எதற்கும்‌ ஊறுபாடின்றி எந்த நபரால்‌ கொடுக்கப்பட வேண்டுமோ அந்த நபரிடமிருந்து, (ஐ அது ஒரு நிலவருவாய்‌ நிலுவையாக இருந்தாற்போன்று, அல்லது (௦) முதல்வகுப்பு நீதித்‌ துறைக்‌ குற்றவியல்‌ நடுவர்‌ அல்லது பெருநகரக்‌ குற்றவியல்‌ நடுவர்‌ எவருக்கும்‌ விண்ணப்பம்‌ செய்வதன்பேரில்‌, அத்தகைய குற்றவியல்‌ நடுவரால்‌ விதிக்கப்பட்ட ஒரு பணத்தண்டமாக இருந்தாற்போன்று அத்தகைய குற்றவியல்‌ நடுவரால்‌, தண்டல்‌ செய்யப்படலாம்‌. 75. வாரியத்திற்கு உதவுவதற்கு அதிகார அமைப்புகள்‌ முதலானவற்றின்‌ கடமைகள்‌.- (1) பொது மற்றும்‌ உள்ளாட்சி அதிகார அமைப்புகள்‌ அல்லது நிறுவனங்கள்‌ அனைத்தும்‌, வாரியம்‌ தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக்‌ கோருகிற ஆதரவையும்‌, உதவியையும்‌ அளித்தலும்‌, தகவலை அளித்தலும்‌ வேண்டும்‌; மற்றும்‌, வாரியம்‌ தனது அலுவற்பணிகளை ஆற்றுவதற்குத்‌ தேவைப்படும்‌ பதிவுக்‌ குறிப்புகள்‌, புவிப்படங்கள்‌, வரைபடங்கள்‌, வரிமதிப்பீட்டுப்‌ பட்டியல்கள்‌, பிற ஆவணங்கள்‌ ஆகியவை வாரியத்தின்‌ ஆய்வுக்காகவும்‌ பரிசோதனைக்காகவும்‌, அரசினால்‌ நிர்ணயிக்கப்படும்‌ கட்டணங்களைச்‌ செலுத்துவதன்‌ பேரில்‌ கிடைக்கும்படி செய்தல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தை அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி அல்லது பிற முறையாவணம்‌ எதுவும்‌ மீறப்படுவது குறித்து அல்லது மிறுவதற்கான முயற்சி எதுவும்‌ செய்யப்படுவது குறித்து அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்புக்கு உடனடியாகத்‌ தகவல்‌ கொடுப்பதும்‌, தனது சட்டப்படியான அதிகாரங்களைச்‌ செலுத்துவதில்‌ அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்புக்கு 62 உதவி செய்வதும்‌, காவல்துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ வாரியத்தின்‌ பணியாளர்கள்‌ அனைவரின்‌ கடமை ஆகும்‌. 76. இயக்குநர்‌ முதலானவர்கள்‌ பொது ஊழியர்களாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌.- (1) வாரியத்தின்‌ இயக்குநர்கள்‌, அலுவலர்கள்‌ மற்றும்‌ வாரியத்தின்‌ பணியாளர்கள்‌ அனைவரும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது எவையேனும்‌ ஒழுங்குமுறை விதிகளின்‌ அல்லது ஏதேனும்‌ முறையாவணத்தின்‌: வகைமுறைகளை அடியொற்றி செயற்படுகிறபோது அல்லது செயற்படுவதாகப்‌ புலப்படுகிறபோது, அவர்கள்‌ இந்திய தண்டனைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ XLV/1860) 21 ஆம்‌ பிரிவின்‌ பொருளின்படி பொது ஊழியர்களாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. (2) இந்திய தண்டனைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ XLV/1860) 161 ஆம்‌ பிரிவின்‌ பொருளின்படி "மாநில அரசு" மற்றும்‌ "அரசு" என்னும்‌ சொற்கள்‌, (1) ஆம்‌ உட்பிரிவின்‌ நோக்கங்களுக்காக, வாரியத்தையும்‌ உள்ளடக்குவதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 77. குற்றங்களும்‌ தண்டனைகளும்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி அல்லது பிற முறையாவணம்‌ எதனின்‌ வகைமுறைகளில்‌ எதனையும்‌ மீறுகிற எவராயினும்‌, ஆறு மாதம்‌ வரை நீடிக்கலாகும்‌ சிறைத்தண்டனையோ, ஓராயிரம்‌ ரூபாய்‌ வரை ந்ீடிக்கலாகும்‌ பணத்தண்டமோ இரண்டுமோ விதித்துத்‌ தண்டிக்கப்படத்தக்கவராவார்‌: மற்றும்‌, அதோடுங்கூட அந்த மறுகை தொடர்கிற நேர்வில்‌, முதல்‌ மீறுகைக்கான தண்டனைத்‌ தீர்ப்புக்குப்‌ பிண்பு அத்தகைய மீறுகை தொடர்கிறபோது, நாள்‌ ஒவ்வொன்றுக்கும்‌ ஐம்பது ரூபாய்‌ வரை நீடிக்கலாகும்‌ கூடுதல்‌ பணத்தண்டம்‌ விதித்து தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 78. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு அல்லது இதன்படி செய்யப்பட்ட விதி எதற்கும்‌ எதிராகக்‌ குற்றம்‌ எதுவும்‌ ஒரு நிறுமத்தினால்‌ செய்யப்பட்டிருக்கிறவிடத்து, அந்தக்‌ குற்றம்‌ செய்யப்பட்ட நேரத்தில்‌, அந்த நிறுமத்தின்‌ அலுவலை நடத்தி வருவதற்கு அந்த நிறுமத்தின்‌. பொறுப்பைக்‌ கொண்டிருந்தவரும்‌ அதற்குப்‌ பொறுப்பாயிருந்தவருமான ஒவ்வொருவரும்‌ அதோடு அந்த நிறுமமும்‌, அந்தக்‌ குற்றத்தினைச்‌ செய்ததாகக்‌ கருதப்படுதலும்‌, அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுத்‌ தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும்‌ வேண்டும்‌: வரம்புரையாக: இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, அந்தக்‌ குற்றம்‌ தமக்குத்‌ தெரியாமல்‌ செய்யப்பட்டதாக அல்லது அத்தகைய குற்றம்‌ செய்யப்படாமல்‌ தடுக்கத்‌ தாம்‌ உரிய முயற்சி அனைத்தையும்‌ மேற்கொண்டதாக எவரும்‌ மெய்ப்பிக்கிறார்‌ என்றால்‌, அவரைத்‌ தண்டனை எதற்கும்‌ உள்ளாக்காது. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, குற்றம்‌ எதுவும்‌ ஒரு நிறுமத்தினால்‌ செய்யப்பட்டிருந்து, அந்த நிறுமத்தின்‌ எவரேனும்‌. இயக்குநரின்‌, மேலாளரின்‌, செயலாளரின்‌ அல்லது பிற அலுவலரின்‌ இசைவுடனோ, மறைமுக ஆதரவுடனோ அந்தக்‌ குற்றம்‌ செய்யப்பட்டிருக்கிறது 63 அல்லது அவர்பாலுள்ள கவனக்குறைவு எதற்கும்‌ சாட்டத்தக்கதாக இருக்கிறது என்று மெய்ப்பிக்கப்படு கிறவிடத்து, அந்த இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது பிற அலுவலர்‌ அந்தக்‌ குற்றத்தைச்‌ செய்திருப்பதாகக்‌ கருதப்படுதலும்‌, அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுத்‌ தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, (a) "நிறுமம்‌" என்பது, கூட்டமைப்பு எதுவும்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌ ஒரு நிறுவகத்தை, சங்கத்தை அல்லது பிற தனியாட்களின்‌ கழகத்தை உள்ளடக்கும்‌; மற்றும்‌ (௦) "இயக்குநர்‌" என்பது, () ஒரு நிறுவகத்தைப்‌ பொறுத்தவரையில்‌ அந்த நிறுவகத்திலுள்ள ஒரு கூட்டாளி என்று பொருள்படும்‌; (i) ஒரு சங்கத்தை அல்லது பிற தனியாட்களின்‌ கழகத்தைப்‌ பொறுத்தவரையில்‌, சங்கத்தின்‌ அல்லது பிற கழகத்தின்‌ விதிகளின்கீழ்‌ சங்கத்தின்‌ அல்லது நேர்வுக்கேற்ப பிற கழகத்தின்‌ அலுவல்களின்‌ மேலாண்மை ஒப்படைக்கப்பட்டுள்ள ஒருவர்‌ என்று பொருள்படும்‌. 78-&. தகுதியிழப்புகளை அகற்றுதல்‌.- எவரும்‌, வாரியத்தின்‌ ஒரு தலைவராக அல்லது ஓர்‌ இயக்குநராக இருப்பதன்‌ காரணத்தினால்‌ மட்டுமே, சட்டப்பேரவைக்கு அல்லது சட்டமேலவைக்கு ஓர்‌ உறுப்பினராகத்‌ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது அதில்‌ ஓர்‌ உறுப்பினராக இருப்பதற்குத்‌ தகுதியிழந்தவர்‌ ஆகார்‌. 78-B. வாரியத்திற்கு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்புகளுக்கு ஆணைகள்‌ அல்லது பணிப்புரைகள்‌ பிறப்பிப்பதற்கு அரசுக்குள்ள அதிகாரம்‌.- அரசானது, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத்‌ தேவையென அல்லது உகந்ததெனத்‌ தாம்‌ கருதுகிற ஆணைகளையும்‌ பணிப்புரைகளையும்‌ வாரியத்திற்கு அல்லது தொடர்புடைய உள்ளாட்சி அதிகார அமைப்பிற்குப்‌ பிறப்பிக்கலாம்‌ மற்றும்‌ அந்த வாரியம்‌ அல்லது நேர்வுக்கேற்ப உள்ளாட்சி அதிகார அமைப்பு அத்தகைய அனைத்து ஆணைகளுக்கும்‌ பணிப்புரைகளுக்கும்‌ செயல்திறமளித்தல்‌ வேண்டும்‌. 79. இடர்ப்பாடுகளை அகற்றுவதற்கு அதிகாரம்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகளுக்குச்‌ செயல்‌ திறமளிப்பதில்‌ இடர்ப்பாடு எதுவும்‌ எழுகிறது என்றால்‌, அரசு, அறிவிக்கை வாயிலாக, அந்த இடர்ப்பாட்டை அகற்றுவதற்குத்‌ தேவையானது அல்லது உகந்தது எனத்‌ தனக்குத்‌ தோன்றுகிற வகைமுறையை இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில்‌ செய்யலாம்‌: வரம்புரையாக: 3 ஆம்‌ பிரிவின்படி வாரியம்‌ நிறுவப்பட்ட தேதியிலிருந்து ஓர்‌ ஆண்டு முடிவுற்ற பின்னர்‌, அத்தகைய அறிவிக்கை எதுவும்‌ பிறப்பிக்கப்படுதல்‌ ஆகாது. 64 80. விதிகள்‌ செய்ய அதிகாரம்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அரசு விதிகளைச்‌ செய்யலாம்‌. 81. ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்ய அதிகாரம்‌.-- (1) வாரியம்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை நிறைவேற்றுவதற்காக, இந்தச்‌ சட்டத்திற்கு முரணாக இல்லாத, ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) குறிப்பாகவும்‌, முன்சொன்ன அதிகாரத்தின்‌ பொதுப்பாங்கிற்கு ஊறுபாடின்றியும்‌, அத்தகைய ஒழுங்குமுறை விதிகள்‌, பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ அனைத்திற்கும்‌ அல்லது அவற்றுள்‌ எதற்கும்‌ வகை செய்யலாம்‌:- (ஐ) வாரியத்தின்‌ அல்லது ஏதேனும்‌ குழுவின்‌ கூட்டத்திற்கான இடமும்‌ நேரமும்‌, மற்றும்‌ அலுவல்‌ நடத்துவதற்குத்‌ தேவையான கோரெண்‌ உள்ளடங்கலாக அத்தகைய கூட்டங்களில்‌ பின்பற்றப்படவேண்டிய நடைமுறை; (௦) குழுக்களின்‌ மற்றும்‌ முழுநேர இயக்குநர்களின்‌ அலுவற்பணிகளும்‌ கடமைகளும்‌; மற்றும்‌ குழுக்களுக்கும்‌, இயக்குநர்களுக்கும்‌, அலுவலர்களுக்கும்‌, வாரியத்தின்‌ பிற பணியாளர்களுக்கும்‌ அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்‌; (c) அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களைத்‌ தெரிவு செய்யும்‌ முறை, தகுதிகள்‌, ஊதியம்‌, கடமைகள்‌, பிற வரையீடுகள்‌ மற்றும்‌ பணிவரைகட்டுகள்‌; மற்றும்‌ வருங்கால வைப்பு நிதியையும்‌, பிற ஓய்வூதிய நிதியையும்‌ ஏற்படுத்தலும்‌ மேலாண்மை செய்தலும்‌; (0) வாரியத்தின்‌ அலுவலக இலச்சினைக்கு வகைசெய்தலும்‌, அதைப்‌ பயன்படுத்தும்‌ முறையும்‌ விளைவும்‌; (6) வாரியத்தைக்‌ கட்டுப்படுத்தும்‌ ஒப்பந்தங்கள்‌ எந்த முறையிலும்‌ படிவத்திலும்‌ எழுதப்படலாம்‌ என்பது; () உள்ளாட்சி மற்றும்‌ பொது அதிகார அமைப்புகளுடன்‌ வாரியத்தின்‌ தொடர்பு; (9) வாரியத்தின்‌ வரவு செலவுத்‌ திட்டங்கள்‌, ஐந்தொகைக்‌ குறிப்புகள்‌, வருமானம்‌ மற்றும்‌ செலவினக்‌ கணக்கு, பிற கணக்குகள்‌ ஆகியவை எந்த தேதியில்‌, எந்தப்‌ படிவத்திலும்‌ முறையிலும்‌ தயாரிக்கப்படுதல்‌ வேண்டும்‌ என்பது, மற்றும்‌ அத்தகைய வரவு செலவுத்‌ திட்டங்களிலும்‌, கணக்குகளிலும்‌ அடங்கியிருக்க வேண்டிய தகவல்‌; (h) எந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாரியம்‌, பணம்‌ கடன்‌ வாங்கலாம்‌, கடன்களை அல்லது முன்பணத்தை வழங்கலாம்‌ அல்லது தனது அலுவலை நடத்துவதற்கு அப்போதைக்குத்‌ தேவைப்படாத தனது நிதியங்களை எந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு வைப்பீடு செய்யலாம்‌ என்பது; (i) கோரப்படும்‌ நிதியங்களுக்கும்‌ ஒதுக்கு நிதிக்கும்‌ வகைமுறை செய்தல்‌; (0) வரிகள்‌ எந்த முறையிலும்‌, அடிப்படையிலும்‌ விதிக்கப்படுதல்‌ வேண்டும்‌ என்பது: நீரை பயன்படுத்தும்‌ முறையும்‌ அதைத்‌ தீர்மானித்தலும்‌; அதற்கான 65 கட்டணங்கள்‌; அளவுமானிகளுக்கான வாடகை அல்லது பிற கட்டணத்தொகை; வரிகள்‌, வீதங்கள்‌, செலவுத்தொகைகள்‌, மேல்வரிகள்‌, கட்டணங்கள்‌, வாடகைகள்‌, பிற தொகைகள்‌ ஆகியவற்றைச்‌ செலுத்தும்‌ நேரமும்‌ இடமும்‌ முறையும்‌; (k) குடிநீர்‌ வழங்குவதற்கான இணைப்புகளை ஏற்படுத்துதல்‌, பேணி வருதல்‌, முறைப்படுத்துதல்‌ மற்றும்‌ இணைப்புக்கும்‌, மறு இணைப்புக்குமான கட்டணங்கள்‌; (0) வீட்டுக்கழிவு நீர்க்கால்களின்‌ இணைபப்புகளுக்காகவும்‌, கழிவுநீர்க்கால்களைக்‌ கட்டுவதற்கும்‌, பேணிவருவதற்கும்‌, பழுதுபார்ப்பதற்கும்‌ கழிவுநீர்க்கால்களை அல்லது கூட்டு அல்லது பொது கழிவுநீர்க்கால்‌ இணைப்புகளை மாற்றியமைப்பதற்குமான வரையீடுகள்‌ மற்றும்‌ செலுத்தப்படத்தக்க தொகை; (M) குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுதலுக்கான வகைமுறையை உள்ளடக்கியுள்ள கட்டிடத்‌ திட்டங்கள்‌, அல்லது பிற திட்டங்களின்‌ அல்லது திட்டமுறைகளின்‌ ஒப்புதலளிப்பு தொடர்பாக இணங்கி நடக்க வேண்டிய பொருட்பாடுகள்‌; (ற நிலத்தடிந்ரை எடுப்பதற்கும்‌ பயன்படுத்துவதற்குமான வரைகட்டுகளும்‌ கோரிக்கைகளும்‌; மற்றும்‌ குழாய்க்கிணறுகள்‌ உள்ளடங்கலான கிணறுகளை முறைப்படுத்துதல்‌ மற்றும்‌ கட்டுப்படுத்துதல்‌; மற்றும்‌ ஒரு கிணறு அல்லது குழாய்க்கிணறைத்‌ தோண்டுவதற்கான அனுமதியை வழங்குவதற்கான நெறிமுறைகள்‌ அல்லது அளவுகோல்‌ மற்றும்‌ நடைமுறை; (௦) தொழிற்கழிவுகளைப்‌ பக்குவப்படுத்துவதற்கும்‌, அவற்றை வெளியேற்றுவதை முறைப்படுத்துவதற்குமான முறை, (ஐ வாரியத்தின்‌ அலுவல்களைப்‌ பொதுவாகத்‌ திறம்பட நடத்துதல்‌: வரம்புரையாக: (1), (h) ஆகிய கூறுகளில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்பாடுகளில்‌ எதனைப்‌ பொறுத்தும்‌ ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்கையில்‌ அரசின்‌ முன்‌ ஒப்புதலளிப்பைப்‌ பெறுதல்‌ வேண்டும்‌. 82. 471971 தமிழ்நாடு சட்டத்தின்‌ குறித்தசில வகைமுறைகள்‌ பொருந்துதல்‌.- 1970 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 471971) 52, 53, 54 ஆகிய பிரிவுகளின்‌, 57 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌, 59, 60, 62, 63, 64, 66, 67 ஆகிய பிரிவுகளின்‌. வகைமுறைகள்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியத்தின்‌, அலுவற்பணிகள்‌, அலுவல்கள்‌ நடவடிக்கைகள்‌ ஆகியவற்றுக்கு அல்லது அவை தொடர்பாகப்‌ பொருந்துவன போன்றே, இயன்ற அளவுக்கு இந்த வாரியத்தின்‌ அலுவற்பணிகள்‌, அலுவல்கள்‌, நடவடிக்கைகள்‌ ஆகியவற்றுக்கு அல்லது அவை தொடர்பாகப்‌ பொருந்துவனவாகும்‌. 83. /1939 தமிழ்நாடு சட்டத்தின்‌ குறித்தசில வகைமுறைகள்‌ பொருந்துதல்‌.- (1) 1939 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மக்கள்‌ நல்வாழ்வுச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ ॥,1939) 17 முதல்‌ 21, 24, 27 முதல்‌ 30 ஆகிய பிரிவுகளின்‌ 66 நோக்கங்களுக்காக, இந்த வாரியம்‌ ஓர்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பாக அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அதிகார அமைப்பாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: மேற்சொன்ன பிரிவுகளின்படி வாரியத்தினால்‌ செய்யப்படவேண்டிய அல்லது அதனைப்‌ பாதிக்கின்ற எதன்‌ தொடர்பாகவும்‌ அரசினாலோ, மாவட்ட ஆட்சியராலோ, பிற அலுவலர்‌ எவராலுமோ செலுத்தப்படும்‌ அதிகாரம்‌ எதுவும்‌, அரசினால்‌ இதற்கென சிறப்பாகப்‌ பெயர்‌ குறிக்கப்படலாகும்‌ அலுவலரால்‌ மட்டுமே செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (2) சென்னை மாநகராட்சி மன்றம்‌ அல்லது சென்னைப்‌ பெருநகர்‌ பரப்பிடத்திலுள்ள ஒரு நகராட்சி மன்றமாக அல்லது ஒரு நகரியக்‌ குழுவாக அல்லது ஓர்‌ ஊராட்சி ஒன்றிய மன்றமாக அல்லது ஓர்‌ ஊராட்சியாக இருக்கிற தற்போதுள்ள ஏதேனும்‌ பிற அதிகார அமைப்பு எதுவும்‌, அறிவிக்கை செய்யப்பட்ட தொடர்புடைய தேதியிலிருந்து, 1939 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொதுமக்கள்‌ நல்வாழ்வுச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ ॥7ா1939) ஈட IV ஆகிய அத்தியாயங்களின்படி சுமத்தப்பட்ட அலுவற்பணி அல்லது கடமைப்பொறுப்பு எதனையும்‌ அல்லது வழங்கப்பட்ட அதிகாரம்‌ எதனையும்‌ நிறைவேற்றும்‌ நோக்கங்களுக்காக, ஜர்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பாக அல்லது ஒரு நகர்ப்புற உள்ளாட்சி அதிகார அமைப்பாகக்‌ கருதப்படுதல்‌ ஆகாது. (3) சென்னை மாநகராட்சி மன்றம்‌ தொடர்பாக அறிவிக்கை செய்யப்பட்ட தேதியிலிருந்து, "குடிநீர்‌ மற்றும்‌” என்னும்‌ சொற்கள்‌, 1939 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொதுமக்கள்‌ நல்வாழ்வுச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ ॥71939) 25 ஆம்‌ பிரிவின்‌ (5 ஆம்‌ உட்பிரிவில்‌ முதல்‌ முறையாக வருகிற இடத்தில்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. 84. பிற வேற்றுச்‌ சட்டங்களின்‌ விளைவு. (1) இந்தச்‌ சட்டத்தில்‌ அல்லது 85 ஆம்‌ பிரிவின்படி அரசினால்‌ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை எதிலும்‌, பிறவாறாக வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர, தற்போதுள்ள அதிகாரஅமைப்பு எதுவும்‌, அதன்‌ அமைப்பை அல்லது நிறுவுகையை ஆளுகிற சட்டம்‌ எதுவும்‌ இருந்தபோதிலும்‌, சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடத்திலுள்ள அல்லது அதற்கான குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுப்‌ பணி அல்லது இந்தச்‌ சட்டத்தின்படி வாரியத்திடம்‌ ஒப்படைக்கப்பட்ட அலுவற்பணி அல்லது அதிகாரம்‌ தொடர்பான பொருட்பாடு எதனையும்‌ பொறுத்து அலுவற்பணி அல்லது அதிகாரம்‌ எதனையும்‌ கொண்டிருத்தல்‌ ஆகாது. (2) முன்சொன்ன வகைமுறைகளின்‌ பொதுப்பாங்கிற்கு ஊறுபாடின்றி, 1919 ஆம்‌ ஆண்டு சென்னை நகர மாநகராட்சி மன்றச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ IV/1919) 1920 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ V/1920) அல்லது 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ XXXV/1958) படி அமைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட, சென்னை மாநகராட்சி மன்றமாக அல்லது ஒரு நகராட்சி மன்றமாக, நகரியக்குழுவாக, ஊராட்சி ஒன்றிய மன்றமாக அல்லது ஊராட்‌ சியாக இருக்கிற தற்போதுள்ள அதிகார அமைப்பு எதுவும்‌, சென்னைப்‌ பெருநகர்‌ பரப்பிடத்திலுள்ள 67 அல்லது அதற்கான குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுப்‌ பணிகள்‌ பொறுத்து அதிகாரவரம்பு கொண்டிருப்பது அறிவிக்கை செய்யப்பட்ட தேதியிலிருந்து அற்றுப்போதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அது- (a) சென்னைப்‌ பெருநகரப்‌ பரப்பிடத்தின்‌ நோக்கத்திற்காக மட்டுமேயானதென சிறப்பாகக்‌ கருதப்படும்‌ அல்லது பேணி வரப்படும்‌ குடிநீர்ப்‌ பணியமைப்பு அல்லது கழிவுநீரகற்றுப்‌ பணியமைப்பு எதற்கும்‌ உரிமை, உரிமைமூலம்‌ அல்லது உரிமைக்கோரிக்கை எதுவும்‌ உடையது ஆகாது; (௦) இந்தச்‌ சட்டத்தில்‌ பிறவாறாக வகைசெய்யப்பட்டுள்ளவாறல்லாமல்‌, அந்தப்‌ பரப்பிடத்திற்கான குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுப்‌ பணியினைச்‌ செய்வதற்கு அல்லது அதனுடன்‌ தொடர்புடைய கட்டுமானம்‌ அல்லது பிற பணி எதனையும்‌ மேற்கொள்வதற்கு அல்லது வேண்டுறுத்துவதற்கு அதிகாரம்‌, அலுவற்பணி அல்லது பொறுப்பு எதுவும்‌ உடையது ஆகாது; (6) மேற்சொன்ன பரப்பிடத்தில்‌, குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுதலுக்காக, கட்டிட ஒழுங்குமுறை விதிகள்‌: அல்லது தொழிற்சாலைகளை, பால்பண்ணைகளை, குடிசைப்பகுதிகளை, சேரிகளை, செல்தடவழிகளை அல்லது சந்தைகளை முறைப்படுத்துவதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான வகைமுறைகள்‌ உள்ளடங்கலான மேம்பாட்டு அல்லது வளர்ச்சித்‌ திட்டமுறை, வரைபடம்‌, பணியமைப்பு எதற்கும்‌ ஒப்பளிப்பு வழங்குதல்‌ ஆகாது; (0) பொதுமக்களுக்கு கேடு அல்லது இடர்‌ ஏற்படுவதைத்‌ தவிர்த்தல்‌, தொல்லை அல்லது துப்புரவற்ற நிலைமைகள்‌ அல்லது மக்கள்‌ நல்வாழ்விற்குக்‌ காப்பளித்தல்‌ ஆகியவற்றுக்கு ஒழுங்குமுறைவிதி அல்லது கட்டுப்பாடு தொடர்புடையதாக உள்ள அளவுக்குத்‌ தவிர, கிணறுகள்‌, குட்டைகள்‌, குளங்கள்‌ ஆகியவற்றைப்‌ பயன்படுத்துவதையும்‌, கட்டுவதையும்‌, மீண்டும்‌ கட்டுவதையும்‌, பழுதுபார்த்தலையும்‌, மூடிவிடுதலையும்‌ முறைப்படுத்துதலோ கட்டுப்படுத்துதலோ ஆகாது; () குடிநீர்வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதலுடன்‌ தொடர்புடைய பொருட்பாடு எதற்கும்‌ எந்த அளவுக்குத்‌ தொடர்புடையதாக உள்ளதோ அந்த அளவுக்கு குற்றங்கள்‌ மற்றும்‌ அவற்றுக்கான தண்டனைகள்‌ பொறுத்து அதிகாரம்‌ அல்லது கடமை எதனையும்‌ உடையது ஆகாது; () இந்தச்‌ சட்டத்தில்‌ பிறவாறாக வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர, நீர்வரி எதையும்‌ விதிப்பதற்கு அல்லது வசூலிப்பதற்கு அதிகாரம்‌ எதனையும்‌ உடையது ஆகாது; (ஐ இந்தப்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள பொருட்பாடுகளில்‌ எதுவும்‌ தொடர்பாக விதி, ஒழுங்குமுறைவிதி அல்லது துணைவிதி எதனையும்‌ செய்வது பொறுத்து அதிகாரம்‌ அல்லது அலுவற்பணி எதனையும்‌ உடையது ஆகாது. (3) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறைவிதி அல்லது முறையாவணம்‌ எதுவும்‌, அப்போதைக்கு 68 நடைமுறையிலுள்ள வேறு ஏதேனும்‌ சட்டத்தில்‌ அல்லது ஒப்பந்தம்‌, வழக்காறு அல்லது பழக்கம்‌ எதிலும்‌ இதற்கு மாறாக என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, செயல்திறம்‌ உடையது ஆகும்‌. 85. வேற்றுச்சட்ட திருத்தங்களும்‌ காப்புரைகளும்‌.-- (1) (ஐ) 26 ஆம்‌ பிரிவின்‌ 1) ஆம்‌ உட்பிரிவின்படி குறித்திட்ட தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌, அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்‌ எதன்படியும்‌ அமைக்கப்பட்ட, நேர்வுக்கேற்ப சென்னை மாநகராட்சி மன்றம்‌, ஒரு நகராட்சி மன்றம்‌, ஒரு பேரூராட்சி அல்லது கிராம ஊராட்சி அல்லது நகரியக்குழு எந்தப்‌ பரப்பிடத்தின்மீது அதிகாரவரம்பு கொண்டிருக்கிறதோ அந்தப்‌ பரப்பிடத்தின்‌ பகுதியாக அல்லது முழுமையாக அமைகிற ஒரு பரப்பிடத்தைப்‌ பொறுத்து, இணைப்புப்பட்டியலின்‌ | முதல்‌ ॥॥ வரையிலான பகுதிகளில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள சட்டங்களும்‌, நேர்வுக்கேற்ப, 1919 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி மன்றச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ ௫71919), 1920 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 71920) அல்லது 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ XXXV/1958) வகைமுறைகளும்‌, நேர்வுக்கேற்ப இணைப்புப்பட்டியலின்‌ |, ॥ அல்லது ।॥ ஆம்‌ பகுதியில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள மாற்றமைவுகளுக்கு உட்பட்டு, அத்தகைய பரப்பிடங்களுக்குத்‌ தொடர்ந்து பொருந்துதல்‌ வேண்டும்‌. (b) இணைப்புப்பட்டியலின்‌ IV முதல்‌ VI வரையிலான பகுதிகளில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள சட்டங்கள்‌, அரசினால்‌ இதற்கென அறிவிக்கை வாயிலாகக்‌ குறித்திடலாகும்‌ தேதியிலிருந்து செயல்‌ திறமுடையதாக பணிக்கப்பட்டுள்ள முறையில்‌, திருத்தப்படுதல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்‌ இணைபப்புப்பட்டியலிலும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ ஏதேனும்‌ பிற வகைமுறையிலும்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்கள்‌ இருந்த போதிலும்‌, நபர்‌ எவரிடமிருந்தும்‌, குடிநீர்‌ வரியின்‌, அல்லது நீர்வழங்குதல்‌ தொடர்பான பிற விதத்தின்‌, நிலுவை எதனையும்‌, அத்தகைய வரி அல்லது விதம்‌ சொத்துவரியின்‌. பகுதியாகவோ பிறவாறாகவோ செலுத்தப்படத்தக்கதாக இருப்பினும்‌, அல்லது அத்தகைய அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு முந்திய காலஅளவு தொடர்பாகச்‌ செய்யப்பட்ட எதனையும்‌ பொறுத்து, குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுதல்‌ தொடர்பாக, அத்தகைய நபரால்‌ செலுத்தப்படத்தக்க ஏதேனும்‌ பிற தொகைகளை வசூலிக்கும்‌ நோக்கத்திற்காக, தற்போதுள்ள ஓர்‌ அதிகார அமைப்பு, அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு முன்பு அதற்குப்‌ பொருந்தத்தக்கதாக அது கொண்டிருந்த அதிகாரங்கள்‌ அனைத்தையும்‌ தொடர்ந்து கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. (3) தொடர்புடைய தற்போதுள்ள அதிகாரஅமைப்பு, (2) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள நிலுவைகளையும்‌, செலுத்தப்பட வேண்டிய பிறதொகைகளையும்‌, நடைமுறையில்‌ கூடிய விரைவில்‌ வளூலிக்கும்‌ பொறுப்புடையதாயிருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வாரியத்திற்கும்‌, தற்போதுள்ள அதிகார அமைப்புக்கும்‌ இடையே உடன்பாடு செய்து கொள்ளப்பட்டவாறான 69 வசூலிக்கப்படும்‌ கட்டணங்களை அவ்வாறு தண்டல்‌ செய்த தொகைகளிலிருந்து கழித்துக்கொண்ட பின்பு, அதனை வாரியத்திற்குச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. 86. எவ்வாறு சார்வு செய்வது.- இந்தச்‌ சட்டத்தினாலோ அல்லது அதன்படியாகவோ அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதியின்படியோ எவருக்கும்‌ அறிவிக்கை சார்வு செய்யப்படவேண்டுமென அல்லது செலவுப்பட்டி அல்லது பிற ஆவணம்‌ எதுவும்‌ அளிக்கப்படவேண்டுமென கோரப்படும்போது.- (8) அத்தகைய நபருக்கு மேற்சொன்ன ஆவணத்தை அளிப்பதன்‌ அல்லது அளிக்க முற்படுவதன்‌ வாயிலாக, அல்லது (b) அத்தகைய நபரைக்‌ கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்‌, அவர்‌ கடைசியாகக்‌ குடியிருந்த இடமாக அறியப்பட்டுள்ள இடத்தில்‌ அத்தகைய ஆவணத்தை விட்டுச்‌ செல்வதன்‌ வாயிலாக அல்லது அதணை அவரது குடும்பத்தின்‌ வயதுவந்த எவரேனும்‌ உறுப்பினரிடம்‌ அல்லது ஊழியரிடம்‌ அளிப்பதன்‌ அல்லது அளிக்க முற்படுவதன்‌ வாயிலாக, அல்லது (29) வேறெங்கேனுமுள்ள அவரது முகவரி தெரிந்திருக்குமானால்‌, அத்தகைய ஆவணத்தைப்‌ பதிவு அஞ்சல்‌ மூலம்‌ ஓர்‌ உறையின்மீது மேற்சொன்ன முகவரியை எழுதி அனுப்புவதன்‌ வாயிலாக, அல்லது (0) மேற்கூறப்பட்ட முறைகள்‌ எவற்றையும்‌ பயன்படுத்தமுடியவில்லை என்றால்‌, அத்தகைய ஆவணம்‌ எந்த நிலம்‌ அல்லது கட்டிடம்‌ தொடர்பானதாக இருக்கிறதோ அந்த நிலம்‌ அல்லது கட்டிடம்‌ ஏதேனுமிருப்பின்‌ அதன்‌ எடுப்பானதொரு பகுதியில்‌ அந்த ஆவணத்தின்‌ ஒரு படி ஒட்டப்படுமாறு செய்வதன்‌ வாயிலாக சார்வு செய்யப்படுதலோ அல்லது அளிக்கப்படுதலோ வேண்டும்‌. 87. சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடம்‌ விரிவாக்கப்படும்போது இச்சட்டம்‌ பொருந்துதல்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்குப்‌ பின்பு, எந்தத்‌ தேதியிலும்‌, அத்தகைய தொடக்கத்தின்போது சென்னைப்‌ பெருநகர்ப்‌ பரப்பிடம்‌ புதிய நில பரப்புகளைச்‌ சேர்ப்பதன்‌ வாயிலாக விரிவாக்கப்படுகிறது என்றால்‌, 25 முதல்‌ 3௦ வரையிலான பிரிவுகளின்‌ வகைமுறைகள்‌, அத்தகைய தேதியிலிருந்து அவ்வாறு சேர்க்கப்பட்ட பரப்புகளுக்குத்‌ தேவைக்கேற்ப மாறுதல்களுடன்‌ பொருந்துதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அந்தப்‌ பிரிவுகளும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறைகளும்‌ அளாவுகிற பொருட்பாடுகள்‌ அனைத்தையும்‌ பொறுத்து, அவ்வாறே பொருந்துதல்‌ வேண்டும்‌. 88. விதிகளும்‌, அறிவிக்கைகளும்‌ சட்டமன்றத்தில்‌ வைக்கப்பட வேண்டும்‌.- (1) (௨) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ அனைத்தும்‌, தமிழ்நாடு அரசிகழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவை ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வரும்‌ என வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்படுகிற நாளன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌; 70 (௦) இந்தச்‌ சட்டத்தின்படி பிறப்பிக்கப்படும்‌ அறிவிக்கைகள்‌ அனைத்தும்‌, அவை ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வரும்‌ என வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்படுகிற நாளன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்‌, அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடிய விரைவில்‌, சட்டமன்றத்தின்‌ ஈரவைகளின்‌ முன்பும்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ அல்லது அதற்கு அடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்பு, அத்தகைய விதியில்‌ அல்லது அறிவிக்கையில்‌ மாற்றமைவு எதனையும்‌ செய்வதற்கு இரண்டு அவைகளும்‌ ஒத்துக்கொண்டால்‌, அல்லது அந்த விதி அல்லது அறிவிக்கை செய்யப்படுதல்‌ ஆகாது என்பதை இரண்டு அவைகளும்‌ ஒத்துக்கொண்டால்‌, அதன்பின்பு, அந்த விதி அல்லது அறிவிக்கை அவ்வாறு மாற்றமைவு செய்யப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே செல்திறம்‌ உடையது ஆகும்‌; அல்லது நேர்வுக்கேற்ப செல்திறம்‌ இல்லாது போகும்‌; எனினும்‌, அத்தகைய மாற்றமைவு அல்லது அழித்தறவு எதுவும்‌, அந்த விதியின்‌ அல்லது அறிவிக்கையின்படி முன்னதாகச்‌ செய்யப்பட்ட எதனுடைய செல்லுந்தன்மைக்கும்‌ ஊறுபாடின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 71 இணைபப்புப்பட்டியல்‌ (85 ஆம்‌ பிரிவைப்‌ பார்க்க) பகுதி | 1919 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி மன்றச்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ ௫71919), (1) 163 முதல்‌ 173 வரை, 177 முதல்‌ 181 வரை, 262, 268 மற்றும்‌ 350 ஆம்‌ பிரிவுகள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (2) 3 ஆம்‌ பிரிவில்‌ (10) ஆம்‌ கூறுக்குப்‌ பிறகு, பின்வரும்‌ கூறு புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது: (10-A) "வடிகால்‌" என்பது, மழை அல்லது புயல்நீர்‌ வடிகால்‌ மற்றும்‌ அடிநில நீர்மட்டம்‌, நீரோடை, தெரு, பாலம்‌, கடப்புவழி எதன்‌ பரப்பிலும்‌ விழுகிற மழை நீரை மட்டுமே வடியச்‌ செய்யும்‌ பக்கவாட்டில்‌ உள்ள வடிகால்‌ என்று பொருள்படும்‌; ஆனால்‌ 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்‌ பொருளின்படியான ஒரு வடிகாலை அல்லது சாக்கடையை உள்ளடக்காது. (3) 16 ஆம்‌ பிரிவில்‌ உள்ள "169(2), 178(2) மற்றும்‌ (3), 179, 180" ஆகிய சொற்களும்‌, இலக்கங்களும்‌ அடைப்புக்‌ குறிகளும்‌ விட்டுவிடப்பட்டன. (4) 99 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌,- (i) (b) கூறில்‌ குடிநீர்‌ மற்றும்‌ என்னும்‌ சொற்கள்‌ இர இடங்களில்‌ வருவது விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (i) அந்த வரம்புரையில்‌ "குடிநீர்‌ மற்றும்‌ என்ற சொற்களும்‌ மற்றும்‌ நீர்ப்பணிகள்‌ மற்றும்‌ எஞ்சியவை தொடர்பாக விதிக்கப்பட்டதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌" என்னும்‌ சொற்களும்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (5) 102 ஆம்‌ பிரிவில்‌,- () (a) கூறில்‌ அந்த வரம்புரையில்‌ உள்ள "குடிநீர்‌ மற்றும்‌£ "மற்றும்‌ குடிநீர்வழங்குதல்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (0) ௩) கூறின்‌ வரம்புரையின்‌ (1) ஆம்‌ 2 1 கூறில்‌ உள்ள "குடிநீர்‌ மற்றும்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (6) 190 ஆம்‌ பிரிவில்‌ "அல்லது என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (7) 191 ஆம்‌ பிரிவில்‌ உள்ள "அல்லது வேறு எவரேனும்‌ ஒருவரின்‌ வீட்டு இணைப்புடன்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (8) 193 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவில்‌ "மற்றும்‌ மாநகரத்தின்‌ பயன்பாட்டிற்காக ஏரி அல்லது நீர்த்தேக்கம்‌ எவற்றிலிருந்தும்‌ குடிநீர்‌ 72 வழங்கப்படுகிறதோ அவற்றின்மீதும்‌ அத்தகைய ஏரி அல்லது நீர்த்தேக்கத்தின்‌ நீர்மட்டத்திற்கு வெளியே ஒரு மைலுக்கு மிகாத ஒரு தூரத்தில்‌ உள்ள நிலங்கள்‌ அனைத்தின்‌ மீதும்‌ மற்றும்‌ "சாக்கடை நிலங்கள்‌, கழிவை அகற்றும்‌ குளங்கள்‌, வடிகுட்டைகள்‌ மற்றும்‌ பிறா என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (9) 203 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ "கழிவுநீர்கள்‌” என்னும்‌ சொல்லும்‌, (2) ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள "கழிநீர்‌ என்னும்‌ சொல்லும்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (10) 213 ஆம்‌ பிரிவில்‌ "குடிநீர்‌ வழங்குதல்‌" விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (14) 216 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ (௦) கூறில்‌ "சாக்கடை அமைப்பு" என்னும்‌ சொல்லும்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (12) 218 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ "சாக்கடை அமைத்தல்‌" என்னும்‌ சொல்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (13) 230 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவில்‌- @) () கூறில்‌ "மலக்குழிகள்‌" என்னும்‌ சொல்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (1) ம்‌ கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. @iy (k) மற்றும்‌ () கூறுகளுக்குப்‌ பதிலாக பின்வரும்‌ கூறு அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- "09 கட்டிடத்தில்‌ எளிதில்‌ தீப்பற்றும்‌ பொருட்களைப்‌ பயன்படுத்துவதன்‌ பேறிலான வரையறைகள்‌" (14) 247 ஆம்‌ பிரிவில்‌ உள்ள "அது கிணறுகளுக்கு எந்த அளவுக்குப்‌ பொருந்துகிறதோ" என்னும்‌ சொற்களுக்குப்‌ பதிலாக "1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்‌ பொருளின்படி குடிநீர்ப்‌ பணிகள்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றும்‌ பணிகளுக்கும்‌. பொருந்துதலாகாது என்னும்‌ சொற்களும்‌ இலக்கங்களும்‌ அமைக்கப்பட்டன. (15) 256 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ மற்றும்‌ 256-& பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவிலும்‌ "அல்லது கிணறு" என்னும்‌ சொற்கள்‌ அவை காணப்படுகிற இடத்திலெல்லாம்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (16) 265 ஆம்‌ பிரிவின்‌ (1) மற்றும்‌ (2) ஆம்‌ உட்பிரிவுகளில்‌ உள்ள "குடிப்பதற்கு" என்னும்‌ சொல்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (17) 304 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவில்‌ "குடிநீர்‌ வழங்குதல்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (18) 349 ஆம்‌ பிரிவில்‌,- (i) (3) ஆம்‌ கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. 73 (i) (5) ஆம்‌ கூறின்‌ (ஐ) முதல்‌ () வரையிலான உட்கூறுகள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (i) (7) ஆம்‌ கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (iv) 42) ஆம்‌ கூறில்‌ உள்ள "மற்றும்‌ அவற்றை நகராட்சி வடிகாலுடன்‌ இணைக்கிறா என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. 0) (15) ஆம்‌ கூறில்‌ உள்ள "மற்றும்‌ குடிநீர்‌ வழங்குதல்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (19) 366 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌,- (ஐ) (ஐ கூறில்‌ உள்ள- (i) 78 என்னும்‌ இலக்கங்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (0 "வீட்டு வடிகால்‌ அல்லது நகராட்சி வடிகாலுடன்‌ இணைக்கப்பட்ட வீட்டு வடிகால்‌ அல்லது நகராட்சி குடிநீர்‌ வழங்குவதுடன்‌ இணைக்கப்பட்ட வீட்டு இணைப்புகள்‌ அல்லது" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (b) (c) கூறில்‌ உள்ள "262" என்னும்‌ இலக்கங்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (20) 383 ஆம்‌ பிரிவின்‌ (ஐ) கூறில்‌ உள்ள 168 ஆம்‌ பிரிவு, 169 ஆம்‌ பிரிவு, 177 ஆம்‌ பிரிவு, 178 ஆம்‌ பிரிவு, 179 ஆம்‌ பிரிவு என்னும்‌ சொற்களும்‌ இலக்கங்களும்‌ விட்டு விடப்படுதல்‌ வேண்டும்‌. (21) IV ஆம்‌ இணைப்புப்பட்டியலின்‌ 30 ஆம்‌ விதியில்‌ உள்ள (ஐ) கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (22) V ஆம்‌ இணைப்புப்பட்டியலின்‌ 3 ஆம்‌ விதியில்‌ உள்ள (b) கூறில்‌ உள்ள "கழிவுநீர்‌ நிலங்கள்‌ மற்றும்‌ கழிவுகளை அகற்றுவதற்கு அல்லது அதற்கு வகை செய்வதற்கான பணிகள்‌ அனைத்தும்‌" மற்றும்‌ "குடிநீர்ப்பணிகள்‌, குடிநீர்‌ ஊற்றுகள்‌, குளங்கள்‌ மற்றும்‌ கிணறுகள்‌" என்னும்‌ சொற்களும்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (23) VIl மற்றும்‌ VIl ஆம்‌ இணைப்புப்பட்டியலில்‌ உள்ள 166, 168, 169, 177, 178, 180, 181, 262 மற்றும்‌ 268 பிரிவுகள்‌ தொடர்பாக (1) ஆம்‌ பத்தியில்‌ உள்ள பதிவுகள்‌ மற்றும்‌ (2), (3), (4) ஆகிய பத்திகளில்‌ உள்ள நேரிணையான பதிவுகள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. பகுதி ॥ 1920 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ V/1920) (1) 125 முதல்‌ 135, 138 முதல்‌ 142, 223, 231 மற்றும்‌ 307 ஆகிய பிரிவுகள்‌: விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. 74 (2) 3 ஆம்‌ பிரிவில்‌ உள்ள (8-4) கூறு (8-&&) கூறாக மறு எழுத்திடப்பட்டது. மற்றும்‌ அவ்வாறு மறு எழுத்திடப்பட்ட (8-AA) கூறுக்குப்‌ பிண்ணர்‌ பிண்வருவது புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌; அதாவது:- (8-&) "வடிகால்‌" என்பது, மழை அல்லது புயல்நீர்‌ வடிகால்‌ மற்றும்‌ அடிநிலநீர்‌ மட்டம்‌, நீரோடை, தெரு, பாலம்‌, கடப்புவழி எதன்பரப்பிலும்‌ விழுகிற மழைநீர்‌ மட்டுமே வடிய பக்கவாட்டில்‌ உள்ள வடிகால்‌ என்று பொருள்படும்‌; ஆனால்‌ 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவு நீரகற்றுதல்‌ சட்டத்தின்‌ பொருளின்படியான ஒரு வடிகாலை அல்லது சாக்கடையை உள்ளடக்காது. (3) 39 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள "குடிநீர்‌ வழங்குதல்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (4) 84 ஆம்‌ பிரிவு (1) ஆம்‌ உட்பிரிவில்‌,- (i) (b) கூறில்‌ உள்ள "குடிநீர்‌ மற்றும்‌" "குடிநீர்‌ அல்லது" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (i) முதல்‌ வரம்புரையில்‌ "குடிநீர்‌ மற்றும்‌” மற்றும்‌ "குடி நீர்ப்பணிகள்‌: மற்றும்‌ எஞ்சியுள்ளவை இவை தொடர்பாக விதிக்கப்பட்டதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (5) 83 ஆம்‌ பிரிவின்‌- (i) (2 ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள "குடிநீர்‌ மற்றும்‌" மற்றும்‌ குடிநீர்‌ அல்லது” என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (i) (3) ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள "குடிநீர்‌ மற்றும்‌" "குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (6) 150 ஆம்‌ பிரிவில்‌ உள்ள "குடிநீர்‌ வழங்குதல்‌" என்னும்‌ சொற்கள்‌: விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (7) 151 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள "ஏதேனும்‌ ஒருவருடைய வீட்டு இணைப்புடன்‌ அல்லது" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (8) 152 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (8)(ஐ மற்றும்‌ (b) கூறுகளில்‌ உள்ள "குடிப்பதற்காக" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (9) 172 ஆம்‌ பிரிவில்‌ உள்ள "குடிநீர்‌ வழங்குதல்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (10) 176 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ (௦) கூறில்‌ உள்ள "சாக்கடை அமைப்பு" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (14) 191 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவின்‌ (i) கூறில்‌ உள்ள,- (ஐ "வடிகுட்டைகள்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. 75 (௦) (1) கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (12) 207 ஆம்‌ பிரிவில்‌ உள்ள "ஒரு கிணறு தொடர்பாக எந்த அளவுக்குப்‌ பொருந்துமோ அந்த அளவுக்கு" என்னும்‌ சொற்களுக்குப்‌ பதிலாக, "1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்‌ பொருளின்படி குடிநீர்ப்‌ பணிகள்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுப்‌ பணிகளுக்குப்‌ பொருந்துதல்‌ ஆகாது! என்னும்‌ சொற்கள்‌ அமைக்கப்பட்டன. (13) 216 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள "அல்லது கிணறு” என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (14) 226 ஆம்‌ பிரிவின்‌- (8) ஓரத்தலைப்பில்‌ உள்ள "குடிப்பதற்குப்‌ பயன்படுத்தப்படுகிற" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (b) (1) மற்றும்‌ (2) ஆம்‌ உட்பிரிவுகளில்‌ உள்ள "குடிக்கும்‌" என்னும்‌ சொல்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (15) 262 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள "குடிநீர்‌ வழங்குதல்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (16) 306 ஆம்‌ பிரிவில்‌ உள்ள (i) ௫) உட்கூறு நீங்கலாக] (3) ஆம்‌ கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (i) (5) ஆம்‌ கூறின்‌ 0௦) முதல்‌ () வரையிலான உட்கூறுகள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (0 (7) ஆம்‌ கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (iv) (12) ஆம்‌ கூறில்‌ உள்ள "மற்றும்‌ அவற்றை நகராட்சி வடிகாலுடன்‌ இணைக்கிற என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (v) (15) ஆம்‌ கூறில்‌ "மற்றும்‌ குடிநீர்‌ வழங்குதல்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (17) 322 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ - () (a) கூறின்‌ 0) உட்கூறில்‌ உள்ள "131, 139" என்னும்‌ இலக்கங்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. 0 வ கூறின்‌ 0) உட்கூறில்‌ உள்ள "வீட்டு வடிகால்‌ மற்றும்‌ நகராட்சி வடிகாலுடன்‌ வீட்டு வடிகாலை இணைத்தல்‌ அல்லது நகராட்சி குடிநீர்‌ வழங்குவதுடன்‌ இணைக்கப்பட்ட வீட்டு இணைப்பு அல்லது" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (18) 340 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ "139 ஆம்‌ பிரிவின்‌. வகைமுறைகளுக்கு உட்பட்டு என்னும்‌ சொற்களும்‌, இலக்கங்களும்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. 76 (19) IV ஆம்‌ இணைப்புப்பட்டியலின்‌ 39 ஆம்‌ விதியின்‌ (௦) கூறில்‌ உள்ள "சாக்கடை நிலங்கள்‌ மற்றும்‌ சாக்கடைக்‌ கழிவுகளை அகற்றுவதற்கான அல்லது வகைசெய்வதற்கான அனைத்துப்‌ பணிகள்‌, குடிநீர்ப்பணிகள்‌, குடிநீர்‌ ஊற்றுகள்‌, குளங்கள்‌ மற்றும்‌ கிணறுகள்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (20) VIl ஆம்‌ இணைப்புப்பட்டியலில்‌ 127, 130, 131, 138, 139, 140, 142 மற்றும்‌ 223 ஆகிய பிரிவுகள்‌ தொடர்பான பதிவுகள்‌ மற்றும்‌ (2) முதல்‌ (4) வரையிலான பத்திகளில்‌ அவை தொடர்பாக உள்ள பதிவுகள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (21) VIl ஆம்‌ இணைப்புப்பட்டியலில்‌ 130, 131, 138, 139 மற்றும்‌ 140 ஆம்‌ பிரிவுகள்‌ தொடர்பான பதிவுகள்‌ மற்றும்‌ (2) முதல்‌ (4) வரையிலான பத்திகளில்‌ அவை தொடர்பாக உள்ள பதிவுகளும்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. பகுதி Il 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ XXXV/1958) (1) 2 ஆம்‌ பிரிவின்‌ (8) ஆம்‌ கூறுக்குப்‌ பிறகு பின்வருவன புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌. அதாவது:- (8-8) 'வடிகால்‌' என்பது மழை அல்லது புயல்‌ நீர்‌ வடிகால்‌ மற்றும்‌ அடிநில நீர்‌ மட்டம்‌, நீரோடை, தெரு, பாலம்‌, கடப்புவழி, எதன்‌ மேற்பரப்பிலும்‌ விழுகிற, மழைநீர்‌ மட்டுமே வடியப்‌ பக்கவாட்டில்‌ உள்ள வடிகால்‌ என்று பொருள்படும்‌; ஆனால்‌ 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்‌ பொருளின்படியான ஒரு வடிகாலை அல்லது சாக்கடையை உள்ளடக்காது." (2) 63 ஆம்‌ பிரிவின்‌, (i) (௦ கூறில்‌ உள்ள "சாக்கடை சகதி" என்னும்‌ சொல்லுக்குப்‌ பின்னர்‌ "சாக்கடையை உள்ளடக்காத" என்னும்‌ சொற்கள்‌ புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 00 (9) கூறில்‌ "குடிக்கும்‌ நோக்கத்திற்காகப்‌ பாதுகாக்கப்பட்ட நீர்‌ மற்றும்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (3) 64 ஆம்‌ பிரிவின்‌ () கூறுக்குப்‌ பின்பு பின்வரும்‌ வரம்புரை சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌; அதாவது:- "வரம்புரையாக: இந்தக்‌ கூறில்‌ உள்ள எதுவும்‌, பாசனத்திற்கல்லாத நோக்கங்களுக்கும்‌ சாக்கடை அமைப்பிற்காக நீர்‌ வழங்குவதற்கும்‌ பொருந்துதலாகாது". (4) 67 ஆம்‌ பிரிவிற்கு, பின்வரும்‌ வரம்புரை சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- 77 "வரம்புரையாக: இந்தப்‌ பிரிவில்‌ உள்ள எதுவும்‌, பாசனமல்லாத நோக்கங்களுக்கும்‌ சாக்கடை அமைப்பிற்காக நீர்‌ வழங்குவதற்கும்‌ பொருந்துதல்‌ ஆகாது (5) 68 ஆம்‌ பிரிவில்‌- (ஐ) ஜரத்தலைப்பில்‌ உள்ள "குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (௦) (i) கூறில்‌ "குடிக்கும்‌ நோக்கத்திற்காகப்‌ பாதுகாக்கப்பட்ட நீர்‌ மற்றும்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (6) 76 ஆம்‌ பிரிவின்‌- M) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள "கழிவு நீர்க்கால்கள்‌" என்னும்‌ சொல்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (i) (2) ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள "கழிவு நீர்க்கால்‌ என்னும்‌ சொல்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (7) 77 ஆம்‌ பிரிவின்‌- 0 (1) ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள "கழிவு நீர்க்கால்கள்‌ என்னும்‌ சொல்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (i) (2) ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள "கழிவு நீர்க்கால்‌ என்னும்‌ சொல்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (8) 78 ஆம்‌ பிரிவின்‌ (ஐ கூறில்‌ உள்ள "குடிநீர்‌ வழங்கும்‌ பெருங்குழாய்கள்‌" என்னும்‌ சொற்களும்‌ "மற்றும்‌ கழிவு நீர்க்கால்கள்‌" என்னும்‌ சொற்களும்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (9) 82 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ (0) கூறில்‌ உள்ள "கழிவுநீர்க்கால்கள்‌ அல்லது" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (10) 84 ஆம்‌ பிரிவு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (11) 88 ஆம்‌ பிரிவில்‌,- (8) "ஓரத்தலைப்பில்‌ உள்ள கழிவுநீர்‌ என்னும்‌ சொல்லுக்குப்‌ பதிலாக "குப்பைக்கூளம்‌" என்னும்‌ சொல்‌ அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌. (௦) கழிவுநீர்‌" என்னும்‌ சொல்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (12) 100 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (௨) கூறில்‌ உள்ள "மற்றும்‌ குடிநீர்‌ வழங்குதல்‌" என்னும்‌ சொற்கள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (13) 178 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (XXIX) ஆம்‌ கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. 78 பகுதி IV 1961 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாநில வீட்டுவசதி வாரியச்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 17,1961) (1) 69 ஆம்‌ பிரிவிற்குப்‌ பின்வரும்‌ பிரிவு புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- "(69-A) வீட்டுவசதி அல்லது மேம்பாட்டுத்‌ திட்டங்களின்‌ நோக்கம்‌.- 35 முதல்‌ 69 வரையிலான பிரிவுகளில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்‌ பொருளின்படி சென்னைப்‌ பெருநகர்ப்‌ பகுதியில்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுதல்‌ பணிகள்‌ பொறுத்து அல்லது அது தொடர்பாக எவற்றையும்‌ நிறைவேற்றுவதற்கு அல்லது அதன்படி பணி எதனையும்‌ செய்வதற்கு அல்லது வீட்டுவசதி அல்லது மேம்பாட்டுத்‌ திட்டம்‌ எதற்கும்‌. வகைசெய்வதற்கு இந்தச்‌ சட்டத்தில்‌ சுட்டப்பட்ட வாரியம்‌ அல்லது வேறு அதிகார அமைப்பு எதுவும்‌, அதிகாரம்‌, கடமை அல்லது பொறுப்பு எதனையும்‌ கொண்டிருக்காது; மற்றும்‌ இந்தப்‌ பிரிவு நடைமுறைக்கு வருகிற தேதியன்று, அந்தப்‌ பகுதி தொடர்பாக அத்தகைய திட்டம்‌ எதுவும்‌ நிறைவேற்றப்பட இருக்குமானால்‌, மேற்சொல்லப்பட்ட சட்டத்தின்‌ 27 ஆம்‌ பிரிவிற்கிணங்க, வாரியமானது, அதை நிறைவேற்றுவதைத்‌ தொடர்ந்து முடித்தல்‌ வேண்டும்‌." (2) 78 ஆம்‌ பிரிவிற்குப்‌ பின்னர்‌ பின்வரும்‌ பிரிவு புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- "(78-A) குறித்த சில நேர்வுகளில்‌ மேம்பாட்டுக்‌ கட்டணத்தைப்‌ பங்கீடு செய்தல்‌.-- 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்‌ பொருளின்படி சென்னைப்‌ பெருநகர்ப்‌ பகுதிக்குள்‌: உள்ள நிலம்‌ எவை தொடர்பாகவும்‌, இந்த அத்தியாயத்தின்‌ வகைமுறைகளின்படி மேம்பாட்டுக்‌ கட்டணம்‌ எதுவும்‌ விதிக்கப்படுகிறவிடத்து அல்லது வசூலிக்கப்படுகிறவிடத்து மற்றும்‌, அத்தகைய கட்டணம்‌ அல்லது அதன்‌ பகுதி எதுவும்‌, குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுதல்‌ அல்லது அவை தொடர்பான பொருட்பாடுகள்‌ தொடர்பானதாக இருக்குமானால்‌, வாரியமானது, மேற்சொன்ன சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரியத்திற்கு அத்தகைய கட்டணம்‌ அல்லது அதன்‌ பகுதியைச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: அவ்வாறு செலுத்தப்பட உள்ள தொகை குறித்து ஐயம்‌ அல்லது தகராறு எதுவும்‌ எழுமானால்‌, அந்தப்‌ பொருட்பாடானது, அரசுக்குக்‌ குறித்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது குறித்து அரசு எடுக்கும்‌ முடிவே இறுதியானதாகும்‌. 79 பகுதி v 1970 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரியச்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 471971) (1) நெடுந்தலைப்பில்‌ உள்ள "தமிழ்நாடு மாநிலம்‌" என்னும்‌ சொற்களுக்குப்‌ பின்னர்‌, "சென்னைப்‌ பெருநகரப்‌ பகுதி நீங்கலாக என்னும்‌ சொற்கள்‌ புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (2) 2 ஆம்‌ பிரிவின்‌ (7) ஆம்‌ கூறில்‌ டு ஆம்‌ உட்கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. (3) 4 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ (0) கூறுக்குப்‌ பதிலாகப்‌ பின்வருவன அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- "(0) 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரியத்தின்‌ முழுநேர இயக்குநர்‌, வாரியத்தினால்‌ பதவிவழியாக பெயர்‌ குறித்து அமர்த்தப்படுதல்‌ வேண்டும்‌." (4) 11 ஆம்‌ பிரிவிற்குப்‌ பின்னர்‌ பின்வரும்‌ பிரிவு புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- "(11-&) வாரியத்தின்‌ மற்றும்‌ சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரியத்தின்‌ வேலையில்‌ உள்ளவர்களுக்கான பொதுப்‌ பணி நிலைப்‌ பிரிவு-- இந்தச்‌ சட்டத்தில்‌ அல்லது அவ்வப்போது நடைமுறையில்‌ உள்ள வேறு சட்டம்‌ எதிலும்‌ அல்லது ஒப்பந்தம்‌ எதிலும்‌ அல்லது வேறு முறையாவணம்‌ எதிலும்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, வாரியமானது, 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ அமைப்பு வாரியத்தின்‌ ஒருங்கிசைவுடன்‌, ர வாரியங்களினாலும்‌ வேலைக்கமர்த்தப்பட்டுள்ள பணியாளர்‌ தொகுதிக்காக பொதுப்‌ பணி நிலைப்‌ பிரிவுகளையும்‌ பணிவரைகட்டுகளையும்‌ நிறுவலாம்‌; மற்றும்‌, அதன்‌ பேரில்‌ அத்தகைய பணியாளர்‌ தொகுதியானது, இரு வாரியங்களின்‌ பணிக்கும்‌ அமர்த்தப்படுவதற்கு அல்லது மாற்றல்‌ செய்யப்படுவதற்கு உள்ளாகும்‌: வரம்புரையாக: மேற்சொன்ன சட்டத்தின்படி வரையறை செய்யப்பட்டு, அந்தச்‌ சட்டத்தின்‌ 20 ஆம்‌ பிரிவின்படி அமர்த்தப்பட்ட, தற்போதுள்ள அதிகார அமைப்பின்‌ பணியாளர்‌ எவரும்‌, அவருடைய இசைவுடன்‌ தவிர, வாரியத்தின்‌ பணிக்கு மாற்றப்படுதலோ அந்தப்‌ பணியில்‌ அமர்த்தப்படுதலோ ஆகாது." (5) 27 ஆம்‌ பிரிவிற்குப்‌ பின்னர்‌ பின்வரும்‌ பிரிவு புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- 80 "(27-&) சென்னைப்‌ பெருநகரப்‌ பகுதிக்கான திட்டங்களைத்‌ தவிர்த்தல்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, வாரியம்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தில்‌ சுட்டப்பட்ட வேறு அதிகார அமைப்பு எதுவும்‌.- (ஐ 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்‌ பொருளின்படி சென்னைப்‌ பெருநகர்‌ பகுதி தொடர்பாக, அந்தச்‌ சட்டத்தின்‌ 26 ஆம்‌ பிரிவின்படி வாரியத்தின்‌ உடைமைகள்‌ மற்றும்‌ பொறுப்புகள்‌ உரிமை மாற்றம்‌ செய்யப்பட்ட தேதியன்றும்‌ அந்தத்‌ தேதி முதற்கொண்டும்‌, (b) மேற்சொன்ன பகுதியில்‌ உள்ள (மேற்சொன்ன சட்டத்தின்‌. பொருளின்படி உள்ள ஓர்‌ அதிகார அமைப்பாக உள்ள) ஒரு வட்டார அதிகார அமைப்பிற்காக அல்லது அதன்‌ நன்மைக்காக அந்தச்‌ சட்டத்தின்‌ 26 ஆம்‌ பிரிவின்படி அத்தகைய வட்டார அதிகார அமைப்பின்‌ உடைமைகள்‌ மற்றும்‌ கடப்பாடுகள்‌ உரிமைமாற்றம்‌ செய்யப்பட்ட தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌, திட்டம்‌ எதனையும்‌ புலனாய்வு செய்ய, தயாரிக்க அல்லது நிறைவேற்ற எந்த அதிகாரத்தையும்‌ கடமையையும்‌ அல்லது பொறுப்பையும்‌ கொண்டிருக்காது. வரம்புரையாக: மேற்சொன்ன, 27 ஆம்‌ பிரிவின்‌ விளக்கத்தின்‌. பொருளின்படி நடந்துகொண்டிருக்கிற பணி, வாரியத்தினால்‌ அந்தப்‌ பிரிவிற்கிணங்க தொடரப்பட்டு முடிக்கப்படுதல்‌ வேண்டும்‌." பகுதி VI 1971 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதிகளைச்‌ (மேம்படுத்துதல்‌ மற்றும்‌ நீக்குதல்‌) சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 11/1972) (1) 35 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌, பின்வரும்‌ வரம்புரை சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது: "வரம்புரையாக: 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரியத்தினால்‌ அமைக்கப்பட்ட முழுநேர இயக்குநர்களில்‌, இதற்கென வாரியத்தினால்‌ குறித்துரைக்கப்பட்ட ஒருவர்‌, இந்தப்‌ பிரிவின்கீழ்‌ ஓர்‌ உறுப்பினராக அமர்த்தப்படுதல்‌ வேண்டும்‌." (2) 69 ஆம்‌ பிரிவிற்கு மாற்றாகப்‌ பின்வரும்‌ பிரிவு அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:-- "69. இந்தச்‌ சட்டத்தின்‌ பொருந்துகையும்‌ அதன்‌ விளைவும்‌.- (1) இந்தச்‌ சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, வாரியம்‌ அல்லது வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பு அல்லது இந்தச்‌ சட்டத்தில்‌ சுட்டப்பட்ட அதிகார அமைப்பு எதுவும்‌, 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்‌ பொருளின்படி சென்னைப்‌ 81 பெருநகர்‌ பகுதியில்‌ திட்டமிடூுவதற்கு அல்லது குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீர்‌ வசதிகளுக்கு வகைசெய்வதற்கு அல்லது அது தொடர்பான பொருட்பாடு எதற்கும்‌ அல்லது அது தொடர்பான பணி எதனையும்‌ நிறைவேற்றுவதற்கான அதிகாரம்‌, கடமை அல்லது பொறுப்பு எதனையும்‌ கொண்டிருக்காது; மற்றும்‌ இந்தப்‌ பிரிவு நடைமுறைக்கு வருகிற தேதியன்று, அந்தப்‌ பகுதியில்‌ இது தொடர்பாக இத்தகைய திட்டம்‌ அல்லது பணி எதுவும்‌ நடத்தப்படுமானால்‌ அல்லது நிறைவேற்றப்படுமானால்‌, 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்‌ 27 ஆம்‌ பிரிவிற்கு இணங்க, அத்தகைய திட்டம்‌ அல்லது பணியினை வாரியம்‌ அல்லது நேர்விற்கேற்ப, வேறு அதிகாரஅமைப்பு எதுவும்‌ தொடர்ந்து முடித்துவிடுதல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தில்‌ வேறெந்த வகையிலேனும்‌ வகை: செய்யப்பட்டிருந்தாலன்றி, இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ இதன்படிச்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகள்‌, அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள சட்டம்‌ எதிலும்‌ அல்லது வழக்கம்‌, வழக்காறு அல்லது ஒப்பந்தம்‌ அல்லது ஒரு நீதிமன்றத்தின்‌ அல்லது வேறு அதிகார அமைப்பின்‌ தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும்‌ முரணானதாக என்ன அடங்கியிருந்த போதிலும்‌, செயற்பாட்டிற்கு வருதல்‌ வேண்டும்‌." பகுதி VIl 1971 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகர மற்றும்‌ கிராம திட்ட சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 351972) (1) 9-& பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (ஐ கூறுக்குப்‌ பிண்ணர்‌ பின்வரும்‌ கூறு புகுத்துப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- "(h) 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரியத்திற்கு, வாரியத்திணால்‌ பதவிவழி உறுப்பினராக பெயர்‌ குறிக்கப்பட்ட ஒரு முழுநேர இயக்குநர்‌". (2) 9-0 பிரிவிற்குப்‌ பின்னர்‌ பின்வரும்‌ பிரிவு புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- "9-E. சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரியத்திற்குள்ள தொடர்பு.- (1) இந்தச்‌ சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, சென்னைப்‌ பெருநகர்‌ வளர்ச்சிக்‌ குழுமம்‌ 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரியத்தை சென்னை பெருநகர்‌ மேம்பாட்டுத்‌ திட்டப்‌ பரப்பு அல்லது அதன்‌ பகுதி எதற்குமான மேம்பாட்டுத்‌ திட்டத்தைத்‌ தயாரிப்பதற்கு அல்லது தயாரிக்கப்படுவது பொறுத்த வகைமுறை எவை தொடர்பாகவும்‌ முழுவதுமாக கலந்தாய்வு செய்து அதனுடன்‌ ஒத்துழைக்கும்‌. 82 (2) அத்தகைய மேம்பாட்டுத்‌ திட்டம்‌ எதைப்‌ பொறுத்தும்‌, அத்தகைய திட்டத்தின்படி பணி எதனையும்‌ நிறைவேற்றுவதற்கு அல்லது செயற்படுத்துவதற்கு, அவை எந்த அளவுக்குக்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது கழிவுநீரகற்றுதல்‌ பணியுடன்‌ தொடர்புடையதாக உள்ளதோ அந்த அளவுக்கும்‌ அவை தொடர்பான பொருட்பாடுகளும்‌, சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரியத்தின்‌ முழுப்பொறுப்பில்‌ ஒப்படைக்கப்படும்‌ மற்றும்‌ இந்தப்‌ பிரிவு செயற்பாட்டிற்கு வருகிற தேதியன்று, அத்தகைய திட்டத்தின்படியான பணி எதுவும்‌ நிறைவேற்றப்படும்‌ நிலையில்‌ அல்லது செய்துவரப்படும்‌ நிலையில்‌ இருக்குமானால்‌, சென்னைப்‌ பெருநகர்‌ மேம்பாட்டு அதிகாரஅமைப்பு, 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்‌ 27 ஆம்‌ பிரிவிற்கிணங்க அத்தகைய பணியைத்‌ தொடர்தலும்‌ முடித்தலும்‌ வேண்டும்‌." (3) 63 ஆம்‌ பிரிவிற்குப்‌ பிறகு பின்வரும்‌ பிரிவு புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- "63-&. குறித்த சில நேர்வுகளில்‌ மேம்பாட்டுச்‌ செலவுகளைப்‌ பகிர்ந்தளித்தல்‌.-- சென்னைப்‌ பெருநகர்த்‌ திட்டப்‌ பகுதியில்‌ உள்ள நிலம்‌ அல்லது கட்டிடம்‌ எதனையும்‌ பயன்படுத்துவது அல்லது பயன்படுத்துவதில்‌ உள்ள மாறுதல்‌ தொடர்பாக இந்த அத்தியாயத்தின்‌ வகைமுறைகளின்படி, மேம்பாட்டுக்‌ கட்டணங்கள்‌. எவையும்‌ விதிக்கப்படுகிறவிடத்து அல்லது தண்டல்‌ செய்யப்படுகிறவிடத்து, மற்றும்‌ அத்தகைய கட்டணம்‌ எதுவும்‌, அல்லது அதன்‌ பகுதி எதுவும்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ அல்லது சாக்கடை அமைப்புப்‌ பணி மேம்பாட்டிற்கான அல்லது அதற்காக வகை செய்வது தொடர்பானதாக இருக்குமானால்‌, சென்னைப்‌ பெருநகர்‌ மேம்பாட்டு அதிகார அமைப்பு, 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ வாரியத்திற்கு அந்தக்‌ கட்டணங்களை அல்லது அதன்‌ பகுதியைச்‌ சென்னைப்‌ பெருநகர்‌ மேம்பாட்டு அதிகார அமைப்பு செலுத்துதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: செலுத்துவதற்கான தொகை பற்றி ஐயம்‌ அல்லது பூசல்‌ எதுவும்‌ எழுமானால்‌, அதுபற்றி அரசுக்குக்‌ குறித்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. அது பற்றிய அதன்‌ முடிவே இறுதியானதாகும்‌." (4) 11 ஆம்‌ பிரிவில்‌ உள்ள- (ஐ) (1) மற்றும்‌ (2) ஆம்‌ உட்பிரிவுகள்‌ முறையே (2) மற்றும்‌ (3) ஆம்‌ உட்பிரிவுகளாக மறு எண்ணிடப்படுதல்‌ வேண்டும்‌. (௦) அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட (2) ஆம்‌ உட்பிரிவிற்கு முன்னர்‌, பின்வருவது புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அவையாவன:- 83 "(1) இந்தப்‌ பிரிவின்‌ வகைமுறைகள்‌, 1978 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றுதல்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு படிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (6) அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட (2) ஆம்‌ உட்பிரிவில்‌, "வேறு எந்தச்‌ சட்டத்திலும்‌" என்னும்‌ சொற்களுக்குப்‌ பிண்னர்‌ "பழக்கம்‌, வழக்காறு அல்லது ஒப்பந்தம்‌" என்னும்‌ சொற்கள்‌ புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (0) அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட (3) ஆம்‌ உட்பிரிவில்‌ "என்ன அடங்கியிருந்த போதிலும்‌" என்னும்‌ சொற்களுக்கு மாற்றாக "(1) ஆம்‌ உட்பிரிவின்‌. வகைமுறைகளுக்கு உட்பட்டு ஆனால்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌" என்னும்‌ சொற்கள்‌ அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌.

Rules, notifications and orders under this Act

Listed from India Code. Each opens there.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts