Tamil Nadu · 1982 · Act 2
Bharathidasan University Act 1981
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டம், 1981
(சட்ட எண் 2/1982)
பொருளடக்கம்
அத்தியாயம்-।॥
முதலுரை
1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துறுகை மற்றும் தொடக்கம்
2. பொருள் வரையறைகள்.
அத்தியாயம்-॥
பல்கலைக்கழகம்
3. பல்கலைக்கழகம்
4. பல்கலைக்கழகத்தின் நோக்கங்களும் அதிகாரங்களும்
5. கல்லூரிகள் பிற பல்கலைக்கழகம் எதனுடனும் இணைக்கப் பெறுதல் ஆகாது;
மற்றும் நிறுவனங்களுக்குப் பல்கலைக்கழகம் ஏற்பளித்தல்
6. உறுப்பினர் பதவிக்கான தகுதிப்பாடு
7. [விட்டு விடப்பட்டது]
8. மேறநிலை ஆய்வு
9. பல்கலைக்கழகப் பதவியாளர்கள்
10. வேந்தர்
11. இணை வேந்தர்
12. துணை வேந்தர்
13. துணை வேந்தரின் அதிகாரங்களும் கடமைகளும்
14. பதிவாளர்
15. நிதி அலுவலர்
16. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
17. பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகள்
18. திட்டக் குழு
19. துணை வேந்தர், பிற அலுவலர்கள் முதலியோர் பொது ஊழியர்கள் ஆவர்
அத்தியாயம்-॥
ஆட்சிப் பேரவை மற்றும் கல்விசார் நிலைக் குழு அதிகாரங்களும் கடமைகளும்
20. ஆட்சிப் பேரவை
21. பல்கலைக்கழகத்தின் விரிவான கொள்கைகளையும் செயல் திட்டங்களையும்
ஆட்சிப் பேரவை மறுஆய்வு செய்தல்
22. ஆட்சிப் பேரவைக் கூட்டங்கள்.
23. கல்விசார் நிலைக் குழு
அத்தியாயம்-
ஆட்சிக் குழு
24, ஆட்சிக் குழு
25. ஆட்சிக் குழுவின் அதிகாரங்கள்
26. ஆட்சிக் குழுவின் கூட்டம்
27. ஆண்டறிக்கை
28. ஆண்டுக் கணக்குகள்
அத்தியாயம்-.
புலங்கள், பாடத்திட்டக் குழுக்கள், நிதிக் குழு மற்றும் பிற அதிகார அமைப்புகள்:
29. புலங்களின் அமைப்பும் செயற்பணிகளும்
30. பாடத்திட்டக் குழுக்கள்
31. பிற அதிகார அமைப்புகளின் அமைப்பு
32. நிதிக் குழு
அத்தியாயம்-1
நிலையமை விதிகள், நெறியமை விதிகள் மற்றும் ஒழுங்கமை விதிகள்
33. நிலையமை விதிகள்
34. நிலையமை விதிகள் எவ்வாறு வகுக்கப்படுகின்றன
35. நெறியமை விதிகள்:
36. நெறியமை விதிகள் எவ்வாறு வகுக்கப்படுகின்றன.
37. ஒழுங்கமை விதிகள் எவ்வாறு வகுக்கப்படுகின்றன
அத்தியாயம்- 0
மாணவர்களை அனுமதித்தலும் அவர்களுக்கான உறைவிடமும்
38. பல்கலைக்கழகப் பயிலாறுகளில் சேர்த்தல்
39. பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு அனுமதித்தல்
40. பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குத் தகுதிதரு வருகைப்பதிவு.
41. மாணவர் உறைவிடங்களும் மாணவர் விடுதிகளும்
அத்தியாயம்-1॥
பல்கலைக்கழக நிதியங்கள்
42. பொது நிதியங்கள்
அத்தியாயம்-06
பணிவரைகட்டுகள்
43. ஓய்வூதியம், பணிக்கொடை முதலியன
44. பணிவரைகட்டுகள்
44 A. தெரிவுக்குழுக்கள்
45. துறைத் தலைவர்களின் பணிகுறித்த வரையுரைகளும் வரைகட்டுகளும்
46. புலத் தலைவர்கள்:
அத்தியாயம்-6
பலவகை
47. எதிர்பாராக் காலியிடங்களை நிரப்புதல்
48. பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகள், குழுமங்கள் ஆகியவற்றின்
நடவடிக்கைகள், காலியிடங்கள் காரணமாகச்
செல்லுந்தன்மையற்றவையாவதில்லை
49. பல்கலைக்கழக உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குதல்
50௦. பல்கலைக்கழக அதிகார அமைப்புகளையும் குழுமங்களையும் அமைப்பதில்
எழும் பூசல்கள்
51. குழுக்களை அமைத்தல்.
52. தகவல் பெறுவதற்கான அதிகாரம்
53. பட்டதாரிகளைப் பதிவு செய்தல்
54. முதல் துணைவேந்தரை அமர்த்துதல்
55. முதல் பதிவாளரை அமர்த்துதல்
56. முதல துணைவேந்தரின் இடைக்கால அதிகாரங்கள்:
57. சென்னைப் பல்கலைக்கழகத்தின் குறித்த சில பணியாளர்களின் பணியைப்
பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல்.
58. வருங்கால வைப்பு நிதியத்திலும் அதுபோன்ற பிற நிதியங்களிலும் சேர்ந்துள்ள
தொகைகளை மாற்றுதல்
59. குறிப்பிட்டதொரு தொகையினைச் சென்னைப் பல்கலைக்கழகம்
செலுத்துதல்
60. தமிழ்நாடு சட்டம், 7/1923 பொருந்துறுவதில்லை
61. நூலகர்
62. தனியுறு அமர்த்துமுறை
63. இணைக்கப்பெற்ற கல்லூரிகள் பற்றிய அறிக்கை
64. [விட்டு விடப்பட்டது]
65. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்
இணைப்புப் பட்டியல்
பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டம், 1981
(சட்ட எண் 2/1982)
திருச்சிராப்பள்ளியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவி நிலையுருவனமாக்க
வகை செய்வதற்கான ஒரு சட்டம்.
இந்தியக் குடியரசின் முப்பத்திரண்டாம் ஆண்டில், தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றத்தினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:-
அத்தியாயம் |
முதலுரை
1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துறுகை மற்றும் தொடக்கம்.- (1)
இந்தச் சட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டம், 1981 என்று வழங்கப்பெறும்.
(2) இது, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள்
அடங்கிய, வரையிடத்தை அளாவி நிற்கும்.
(3) இது, பல்கலைக்கழக வரையிடத்திற்குள் அமைந்து, இந்தச் சட்டத்தின்
வகையங்களுக்கு அல்லது அதன்படி வகுக்கப்பட்ட நிலையமை விதிகள்,
நெறியமைவிதிகள், ஒழுங்கமைவிதிகள் ஆகியவற்றிற்கு இணங்க
பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெறும் அல்லது அதன் ஒப்பேற்புப் பெறும்
கல்லூரிகள், நிறுவனங்கள் அனைத்திற்கும், மேலும் இந்தச் சட்டத்தின்படி
பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்றனவாக அல்லது அதன் ஒப்பேற்புப்
பெற்றனவாகக் கொள்ளப்படும் கல்லூரிகள், நிறுவனங்கள் அனைத்திற்கும்.
பொருந்துறும்.
(4) இந்தப் பிரிவும், 2, 3, 4, 5, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 148, 19, 45, 54, 55, 56,
65 ஆகிய பிரிவுகளும், உடனடியாகச் செல்லாற்றல் பெறும்; இந்தச் சட்டத்தில்
எஞ்சியவை அரசாங்கம் அறிவிக்கை வாயிலாகக் குறித்திடும் தேதியன்று
செல்லாற்றல் பெறும்.
2. பொருள் வரையறைகள்.- இந்தச் சட்டத்தில், தறுவாயின் தேவை
வேறானாலன்றி.,-
@) "இணைக்கப்பெற்ற கல்லூரி" என்பது, பல்கலைக்கழக
வரையிடத்திற்குள் அமைந்து, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றுள்ளதும்,
பல்கலைக்கழகத்தின். பட்டங்களுக்கான தேர்வுகளுக்கு அனுமதிக்கப்
பெறுவதற்கான பாடவகை பயிலாறுகளைக் கற்பிக்கின்றதுமான ஒரு கல்லூரி
என்று பொருள்பெறும்; அத்துடன், இந்தச் சட்டத்தின்படி பல்கலைக்கழகத்துடன்
இணைக்கப்பெற்றதாகக் கொள்ளப்படும் ஒரு கல்லூரியையும் இது உள்ளடக்கும்;
(௦) ஒப்பேற்புப்பெற்ற கல்லூரி" என்பது, பல்கலைக்கழக வரையிடத்திற்குள்:
அமைந்து, பல்கலைக்கழகத்தின் ஒப்பேற்புப் பெற்றுள்ளதும், பல்கலைக்கழகத்தின்
புலமைப்பட்டங்கள், சீரிதழ்கள் ஆகியவற்றுக்கான தேர்வுகளுக்கு
அனுமதிக்கப்பெறுவதற்கான பாடவகைப் பயிலாறுகளைக் கற்பிக்கின்றதுமான
ஒரு கல்லூரி என்று பொருள்பெறும்; அத்துடன் இந்தச் சட்டத்தின்படி
பல்கலைக்கழகத்தின் ஒப்பேற்புப்பெற்றதாகக் கொள்ளப்படும் ஒரு கல்லூரியையும்
உள்ளடக்கும்;
(6) "தன்னாட்சிக் கல்லூரி என்பது, நிலையமை விதிகளினால் ஒரு
தன்னாட்சிக் கல்லூரி என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரி என்று
பொருள் பெறும்;
(0) "கல்லூரி" என்பது, பல்கலைக்கழத்தினால் நடத்தப்பெறுவதாகவோ,
அதன் ஒப்பேற்புப் பெற்றதாகவோ, அத்துடன் இணைக்கப் பெற்றதாகவோ
இருப்பதுடன், பல்கலைக்கழகத்தின் தேர்வுகளுக்கு அனுமதிக்கப் பெறுவதற்கான
பாடவகைப் பயிலாறுகளைக் கற்பிக்கின்றதுமான ஒரு கல்லூரி அல்லது நிறுவனம்
என்று பொருள்பெறும்;
(6) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்பெறும்;
(f) மாணவர் விடுதி" என்பது, இந்தச் சட்டத்தின் வகையங்களுக்கிணங்க
பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பெறுவதாகவோ, ஒப்பேற்புப் பெற்றதாகவோ
இருப்பதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் உறைவதற்குமான ஓரிடம் என்று
பொருள் பெறும்; அத்துடன், இந்தச் சட்டத்தின்படி பல்கலைக்கழத்தின் ஏற்புப்
பெற்றதாகக் கொள்ளப்படும் ஒரு மாணவர் விடுதியையும் இது உள்ளடக்கும்;
(ஐ "அறிவிக்கை செய்யப்பட்ட தேதி" என்பது, 1 ஆம் பிரிவின், (4) ஆம்
உட்பிரிவின்படி வெளியிடப்படும் அறிவிக்கையில் குறித்துரைக்கப்படும் தேதி
என்று பொருள்பெறும்;
(h) "பட்டமேற்படிப்புக் கல்லூரி" என்பது, பல்கலைக்கழகத்தின்
பட்டமேற்படிப்புப் பட்டங்கள் பெறுவதற்கு வழிசெய்கிற பட்டமேற்படிப்புப்
பாடவகைப் பயிலாறுகளைக் கற்பிக்கின்ற ஒரு பல்கலைக்கழகக் கல்லூரி அல்லது
பல்கலைக்கழக வரையிடத்திற்குள்: அமைந்துள்ள அத்தகைய ஓர்
இணைக்கப்பெற்ற கல்லூரி என்று பொருள்பெறும்;
() "வகுத்துரைக்கப்பட்டா என்பது, இந்தச் சட்டம் அல்லது நிலையமை
விதிகள், நெறியமைவிதிகள் அல்லது ஒழுங்கமைவிதிகள் வாயிலாக
வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்பெறும்;
() "முதல்வர்" என்பது, ஒரு கல்லூரியின் தலைவர் என்று பொருள்பெறும்;
(k) "விழைதொழிலியல் கல்லூரி என்பது, பல்கலைக்கழகத்தினால்
நிறுவப்பெற்றதாகவோ, நடத்தப்பெறுவதாகவோ, இணைக்கப்பெற்றதாகவோ
இருப்பதுடன் பல்கலைக்கழகத்தின் விழைதொழிலியல் பட்டங்கள் பெறுவதற்கு
வழிசெய்கிற பாடவகைப் பயிலாறுகளைக் கற்பிக்கின்றதுமான ஒரு கல்லூரி என்று
பொருள் பெறும்;
) "பதிவுபெற்ற பட்டதாரி என்பது, இந்தச் சட்டத்தின்படி பதிவு
செய்யப்பெற்றுள்ள ஒரு பட்டதாரி என்று பொருள்பெறும்;
(m) "நிலையமைவிதிகள்", "நெறியமைவிதிகள்", "ஒழுங்கமைவிதிகள்"
என்பன முறையே இந்தச் சட்டத்தின்படி வகுக்கப்பட்டுள்ள அல்லது தொடர்ந்து
செல்லாற்றல் பெற்றுள்ள பல்கலைக்கழகத்தின். நிலையமைவிதிகள்,
நெறியமைவிதிகள், ஒழுங்கமைவிதிகள் என்று பொருள்பெறும்;
(1) "ஆசிரியர்கள்" என்பது, விரிவுரையாளர்கள், இணைப்பேராசிரியர்கள்,
உதவிப்பேராசிரியர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகளில் அல்லது
ஆய்வுக்கூடங்களில் அல்லது இணைக்கப்பெற்ற அல்லது ஒப்பேற்புப்பெற்ற
கல்லூரிகளில் அல்லது மாணவர் விடுதிகளில் கல்வி கற்பிக்கும் பிற நபர்கள்,
நூலகர்கள் இவர்களில் நிலையமைவிதிகளினால் ஆசிரியர்கள் என விளம்பப்
பெறுவோர் என்று பொருள்பெறும்;
(0) "பல்கலைக்கழக ஆசிரியர்கள்" என்பது, பல்கலைக்கழகத்தின் சார்பில்
கல்வி கற்பிப்பதற்காகப் பல்கலைக்கழகத்தினால் அமர்த்தப்பெறும் ஆசிரியர்கள்.
என்று பொருள்பெறும்;
(2) "பல்கலைக்கழகம்" என்பது, பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்று
பொருள் பெறும்;
(1) "பல்கலைக்கழக வரையிடம்" என்பது, 1 ஆம் பிரிவின், (2) ஆம்
உட்பிரிவின்படி இந்தச் சட்டம் அளாவி நிற்கும் வரையிடம் என்று பொருள்பெறும்;
(r) "பல்கலைக்கழக மையம்" என்பது, பல்கலைக்கழகத்தின்
பரிந்துரையின்மீது அரசின் ஏற்புப்பெற்று, பல்கலைக்கழக வரையிடத்திற்குள்:
அமைந்து, உயர் நிலையில் கற்பித்தல், ஆராய்ச்சிப் பணி இவற்றில் ஈடுபடுவதற்கும்,
அங்கு புதியதொரு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு வழிவகுக்கும் வகையில்
பல்கலைக்கழகச் செயலூக்கத்தை வளர்ப்பதற்கும் தகுநிலைவாய்ந்த ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளைக் கொண்டுள்ள ஓர் இடம் என்று
பொருள் பெறும்;
(8) "பல்கலைக்கழகக் கல்லூரி என்பது, பல்கலைக்கழகத்தினால்
நிறுவப்பட்டதாக இருப்பினும், இல்லாதிருப்பினும், பல்கலைக்கழகத்தினால்
நடத்தப்பெறுவதும், பட்டமேற்படிப்பு மற்றும் விழைதொழிலியல் பட்டங்கள்:
பெறுவதற்கு வழிசெய்கிற பாடவகைப் பயிலாறுகளைக் கற்பிக்கின்றதுமான ஒரு
கல்லூறி அல்லது ஓர் ஆராய்ச்சி நிலையம் இணைந்த ஒரு கல்லூரி என்று
பொருள் பெறும்;
(1) "பல்கலைக்கழக மானிய ஆணையம்" என்பது, 1956 ஆம் ஆண்டு
பல்கலைக்கழக மானிய ஆணையச் சட்டம் (371956), 4 ஆம் பிரிவின்படி
நிறுவப்பெற்ற ஆணையம் என்று பொருள் பெறும்;
(ம "பல்கலைக்கழக ஆய்வுக்கூடம்" என்பது, பல்கலைக்கழகத்தினால்
நிறுவப்பட்டதாக இருப்பினும், இல்லாதிருப்பினும், ஆராய்ச்சிப் பணிகளை ஆற்றி,
அவற்றில் முன்னேற்றம் காண்பதற்கும் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பெறும்
ஓர் ஆய்வுக்கூடம் என்று பொருள்பெறும்;
(V) "பல்கலைக்கழக விரிவுரையாளர்", "பல்கலைக்கழக இணைப் பேராசிரியர்"
அல்லது "பல்கலைக்கழகப் பேராசிரியர்" என்பது, பல்கலைக்கழகத்தினால்
அந்தந்தப் பதவிகளுக்கு முறையே அமர்த்தப்பெற்ற அல்லது
அமர்த்தப்பெற்றவராகக் கொள்ளப்பெறும் ஒரு விரிவுரையாளர், இணைப்
பேராசிரியர் அல்லது பேராசிரியர் என்று பொருள்பெறும்;
(W) "பல்கலைக்கழக நூலகம் என்பது, பல்கலைக்கழகத்தினால்
நிறுவப்பட்டதாக இருப்பினும், இல்லாதிருப்பினும், பல்கலைக்கழகத்தினால்
நடத்தப்பெறும் ஒரு நூலகம் என்று பொருள்பெறும்.
அத்தியாயம் ॥
பல்கலைக்கழகம்
3. பல்கலைக்கழகம். (1) பாரதிதாசன் பல்கலைக்கழகம் எனும் பெயரில் ஒரு
பல்கலைக்கழகம் இருந்து வரும்.
(2) பல்கலைக்கழகம் ஒரு நிலையுருவனமாக இருந்துவரும்; அது
நிலையான தொடர்மானத்தையும், தனியோர் இலச்சினையையும் கொண்டிருக்கும்;
மேலும், அது வழக்கிடுதலும், அதன்மீது வழக்கிடப்படுதலும் மேற்சொன்ன
பெயராலேயே இருக்கும்.
(3) பல்கலைக்கழகத்தின் தலைமையகம், திருச்சிராப்பள்ளி நகராட்சி
எல்லைகளுக்குள்ளோ அந்த எல்லைகளைச் சுற்றியுள்ள இருபத்தைந்து கிலோ
மீட்டர் வட்டாரத்திற்குள் இருக்கும் ஓர் இடத்திலோ அமைந்திருக்கும்.
4. U6LE 6060 885108 5 S 65T நோக்கங்களும் அதிகாரங்களும்.-
பல்கலைக்கழகம் பின்வரும் நோக்கங்களையும் அதிகாரங்களையும்
கொண்டிருக்கும்:-
(1) _ தான் தீர்மானிக்கும் கல்வியறிவு துறைகளில் கற்பிக்கவும்
பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்தல்;
(2) ஆராய்ச்சி செய்திடவும், அறிவுச்செல்வத்தை வளர்க்கவும் பரவச்
செய்திடவும் ஏற்பாடு செய்தல்;
(3) பட்டங்கள், புலமைப்பட்டங்கள், சீரிதழ்கள், பிற கல்விசார் சிறப்புச்
சீர்மைகள் ஆகியவற்றை நிறுவித்தல்;
(4) கீழ்க்கண்டவர்களுக்குத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் பட்டங்கள்,
புலமைப்பட்டங்கள், சீரிதழ்கள், பிற கல்விசார் சிறப்புச் சீர்மைகள் வழங்குதல்:-
(@) நிலையமைவிதிகளினால் வகுத்துரைக்கப்பட்ட முறையில்
விலக்களிக்கப்பட்டுள்ளவர்கள் அன்றி, பல்கலைக்கழகக் கல்லூரி அல்லது
ஆய்வுக்கூடம் ஒன்றிலோ, இணைக்கப்பெற்ற அல்லது ஒப்பேற்புப்பெற்ற கல்லூரி
ஒன்றிலோ, ஒப்பேற்புப்பெற்ற ஒரு பாடவகைப் பயிலாறினைத் தொடர்ந்து பயின்று,
பல்கலைக்கழகத்தின் வகுத்துரைக்கப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள்;
அல்லது
(b) வகுத்துரைக்கப்பட்ட வரைகட்டுகளின்படி ஆராய்ச்சி செய்பவர்கள்;
(5) தன்னாட்சிக் கல்லூரி ஒன்றில் ஒப்பேற்புப்பெற்ற ஒரு பாடவகை
பயிலாறினைத் தொடர்ந்து பயின்றுள்ளவர்களுக்குப் பட்டங்கள், புலமைப்
பட்டங்கள், சீரிதழ்கள், பிற கல்விசார் சிறப்புச் சீர்மைகள் வழங்குதல்;
(6) பல்கலைக்கழக வரையிடத்திற்குள் குடியிருப்பவர்களாக இருப்பினும்,
இல்லாதிருப்பினும், ஒப்பேற்புப்பெற்ற ஒரு பாடவகைப் பயிலாறினை அஞ்சல்
வழியாகத் தொடர்ந்து பயின்றிருப்பவர்களுக்குத் தேர்வுகள் நடத்துதல் மற்றும்
பட்டங்கள், புலமைப் பட்டங்கள், சீரிதழ்கள், பிற கல்விசார் சிறப்புச் சீர்மைகள்
வழங்குதல்; மேலும் பல்கலைக்கழக வரையிடத்திற்குள் குடியிராதவர்களுக்கு,
வகுத்துரைக்கப்பட்ட வரைகட்டுகளின்படி, விரிவுரைகளுக்கும்,
பாடவகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்தல்;
(7) வகுத்துரைக்கப்பட்ட வரைகட்டுகளின்படி மதிப்புறு பட்டங்களை
அல்லது பிற கல்விசார் சிறப்புச் சீர்மைகளை வழங்குதல்;
(8) பல்கலைக்கழகத்தின். நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத்
தேவையான ஆராய்ச்சி நிலையங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள், ஆய்வுக்
10
கூடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பிற நிறுவனங்கள் ஆகியவற்றை
நிறுவித்தல், நடத்திவருதல், நிருவகித்தல்;
(9) வகுத்துரைக்கப்பட்ட வரைகட்டுகளின்படி, கல்லூரிகளை
இணைக்கப்பெற்ற கல்லூரிகளாக, விழைதொழிலியல் கல்லூரிகளாக அல்லது
பட்டமேற்படிப்புக் கல்லூரிகளாக பல்கலைக்கழகத்துடன் இணைத்தல் மற்றும்
கல்லூரிகளின் இணைப்பை விலக்கிக் கொள்ளுதல்;
(10) பல்கலைக்கழகத்தின். புலமைப் பட்டங்கள், சீரிதழ்கள்
ஆகியவற்றுக்கான தேர்வுகளுக்கு அனுமதிக்கப் பெறுவதற்குரிய பாடவகைப்
பயிலாறுகளைக் கற்பிக்கின்ற கல்லூரிகளுக்கு வகுத்துரைக்கப்பட்ட
வரைகட்டுகளின்படி ஒப்பேற்பளித்தல் மற்றும் அத்தகைய ஒப்பேற்பினை விலக்கிக்
கொள்ளுதல்;
(11) அரசாங்கத்தின் ஒருங்கிசைவுடன், வகுத்துரைக்கப்பட்ட முறையிலும்
வரைகட்டுகளின்படியும், ஒரு கல்லூரியினைத் தன்னாட்சிக் கல்லூரி என்ற
பெயரால் குறிப்பிடுதல்; மற்றும் அவ்வாறு குறிப்பிடப்பட்டதை நீக்கம் செய்தல்;
(12) பல்கலைக்கழகத்திற்குத் தேவையான விரிவுரையாளர் பதவிகள்,
இணைப்பேராசிரியர் பதவிகள், பேராசிரியர் பதவிகள், பிற ஆசிரியப் பதவிகள்
ஆகியவற்றை நிறுவித்தல்; அந்த விரிவுரையாளர் பதவிகள், இணைப் பேராசிரியர்
பதவிகள், பேராசிரியர் பதவிகள், பிற ஆசிரியப் பதவிகள் ஆகியவற்றுக்கு நபர்களை
அமர்த்துதல்;
(13) ஆய்வு உதவித் தொகைகள், ஆய்வுப் பயண உதவித் தொகைகள்,
படிப்புதவித் தொகைகள், மாணவர் உதவித் தொகைகள், கல்லூரிக் கல்வி உதவித்
தொகைகள், புலமை உதவித் தொகைகள், பதக்கங்கள், பரிசுகள் ஆகியவற்றை
நிலையமை விதிகளுக்கிணங்க நிறுவி வழங்குதல்;
(14) மாணவர் விடுதிகளை நிறுவுதல், நடத்துதல், நிருவகித்தல்;
பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பெறாத மாணவர் விடுதிகளுக்கு ஏற்பளித்தல்;
அத்தகைய ஏற்பளிப்பினை விலக்கிக் கொள்ளுதல்;
(15) உடல்நலம், நல்வாழ்வு, ஒழுக்கம் ஆகியவற்றைப் பல்கலைக்கழக
மாணவர்கள் எய்துறும் வகையில், கல்லூரிகளின் வாயிலாக அவர்களைக்
கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்;
(16) பல்கலைக்கழகத்தின் கட்டளைகளையும், பிற சொத்துகளையும்,
நிதியகங்களையும் வைத்து நிருவகித்தல்;
11
(17) அரசாங்கத்தின் ஒப்பேற்புடன், பல்கலைக்கழகத்தின்.
நோக்கங்களுக்காக, பல்கலைக்கழகச் சொத்தினைப் பிணையமாக வைத்துக்
கடனாகப் பணம் பெறுதல்;
(18) கட்டணங்களை நிருணயித்தல்; வகுத்துரைக்கப்படும்
அக்கட்டணங்களைக் கோருதலும் பெறுதலும்;
(19) தேசிய மாணவர் படை ஒன்றை வைத்து வருவதற்காகப்
பல்கலைக்கழகத்தின் நிதியங்களிலிருந்து மானியங்கள் அளித்தல்;
(20) பல்கலைக்கழக விரிவாக்கக்குழு ஒன்றை நிறுவி நடத்தி வருதல்;
(21) பின்வருவனவற்றை நிறுவி, அவற்றை நடத்துவதற்கான
நிதியகங்களுக்கு வகைசெய்தல்:-
(ஐ) ஒரு வெளியீட்டுத் துறையகம்;
(b) ஒரு வேலைவாய்ப்புத் துறையகம்;
(C) மாணவர் சங்கங்கள்:
(0) பல்கலைக்கழக உடற்பயிற்சி விளையாட்டுக் குழாம்கள்; மற்றும்
(6) இவைபோன்ற பிற கழகங்கள்.
(22) பல்கலைக்கழக வரையிடத்திற்குள் உள்ள கல்லூரிகள், ஆய்வுக்
கூடங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் இவற்றிடையே ஒத்துழைப்பினை
ஊக்குவித்தல்; பல்கலைக்கழகம் தீர்மானிக்கும் முறையிலும், தீர்மானிக்கும்
நோக்கங்களுக்காகவும் பிற பல்கலைக்கழகங்களுடனும் பிற அதிகார
அமைப்புகளுடனும் ஒத்துழைத்தல்;
(23) பல்கலைக்கழக வரையிடத்திற்குள் உள்ள ஓர் இடத்தை ஒரு
பல்கலைக்கழக மையமாக ஏற்பதற்கு அரசிற்குப் பரிந்துரை செய்தல்;
(24) பொதுவாக, பல்கலைக்கழகத்தின். நோக்கங்களை
நிறைவேற்றுவதற்குத் தேவைப்படுவதான அல்லது விரும்பத்தக்கதான பிற
செயலகள், நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளுதல்.
5. கல்லூரிகள், பிற பல்கலைக்கழகம் எதனுடனும் இணைக்கப்பெறுதல்
ஆகாது மற்றும் நிறுவனங்களுக்குப் பல்கலைக்கழகம் ஏற்பளித்தல்.- (1)
பல்கலைக்கழக வரையிடத்திற்குள் உள்ள கல்லூரி எதுவும் பாரதிதாசன்
பல்கலைக்கழகம் தவிர, பிற பல்கலைக்கழகம் எதனுடனும் இணைக்கப்பெறுதல்
ஆகாது.
12
(2) தமிழ்நாடு மாநிலத்தில் பிற பல்கலைக்கழகம் எதனுடனும்
இணைக்கப்பெற்றுள்ள அல்லது அதனுடன் சேர்ந்துள்ள அல்லது அதனால்
நடத்தப்பெற்றுவரும் நிறுவனம் எதற்கும், அரசு, தொடர்புடைய பல்கலைக்கழகம்
இவற்றின் முன் ஒப்பேற்பின்றி எந்த நோக்கத்திற்காகவும் பல்கலைக்கழகம்
ஏற்பளித்தல் ஆகாது.
6. உறுப்பினர் பதவிக்கான தகுதிப்பாடு.-- (1) எவரொருவரும்,
பல்கலைக்கழத்தின் அதிகார அமைப்புகள் எதிலும் உறுப்பினராக நியமனஞ்
செய்யப்பெறும் அல்லது தேர்ந்தெடுக்கப்பெறும் தேதியன்று,
(ஐ பித்துமன நிலையுற்றவராகவோ, செவிட்டு ஊமையராகவோ,
தொழுநோயால் துன்புறுகிறவராகவோ, அல்லது
(௦) ஷொடிப்பு நிலையராகத் தீர்ப்பளிக்கப்படுவதற்கு விண்ணப்பம்
செய்துள்ளவராகவோ, விடுவிப்புப்பெறாத நொடிப்பு நிலையராகவோ, அல்லது
(௦) ஒழுக்கக்கேடு சேர்ந்த குற்றச்செயல் எதற்காகவும் ஒரு
குற்றவியல் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவராகவோ
இருப்பாராயின், அவர், அவ்வாறு நியமனஞ் செய்யப்பெறுவதற்கு
அல்லது தேர்ந்தெடுக்கப்பெறுவதற்கு தகுதிப்பாடு உடையவர் ஆகார்.
(2) கருத்துவேறுபாடு அல்லது ஐயப்பாடு எழும் நேர்வில் ஒருவர், (1) ஆம்
உட்பிரிவின்படி தகுதிக்கேடுற்றவரா என்பது குறித்து ஆட்சிக்குழுத் தீர்மானிக்கும்;
அதன் முடிபே அறுதியானதாகும்.
7. [1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தச்)
சட்டம், 19 ஆம் பிரிவால் விட்டுவிடப்பட்டது.]
8. மேநிலை ஆய்வு.- (1) பல்கலைக்கழகம், அதன் கட்டடங்கள்,
ஆய்வுக்கூடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பட்டறைகள், சாதனக்
கருவிகள் ஆகியவற்றையும், பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பெற்று
வருவதாகவோ, அதன் ஏற்புப்பெற்றதாகவோ, ஒப்பேற்புப் பெற்றதாகவோ,
பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்றதாகவோ உள்ள நிறுவனம் எதனையும்
அத்துடன் பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகள், கல்வி கற்பித்தல், அது செய்யும்
பிற பணிகள் ஆகியவற்றையும் தாம் பணிக்கும் நபரால் அல்லது நபர்களால் ஆய்வு
செய்யும்படி அல்லது விசாரணை நடத்தும்படி செய்வதற்கும்
பல்கலைக்கழகத்துடன் இணைவுடைய பொருட்பாடு எதனைப் பொறுத்தும்
விசாரணை நடத்தும்படி செய்வதற்கும் பல்கலைக்கழக வேந்தர் உரிமை
உடையவர் ஆவார். மேற்சொன்ன நேர்வு ஒவ்வொன்றிலும் அத்தகைய
ஆய்வினை அல்லது விசாரணையை நடத்துவதற்கான தமது கருத்தினைக்
13
குறித்துப் பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் அறிவிப்பு அனுப்புவார்; அதில் சார்பாற்றம்
பெறுவதற்கும் பல்கலைக்கழகம் உரிமை கொண்டதாகும்.
(2) வேந்தர், அத்தகைய ஆய்வின் அல்லது விசாரணையின் முடிவுகள்
பற்றிய தமது கருத்துகளை ஆட்சிக் குழுவிற்குத் தெரிவிப்பார்; அவற்றைக் குறித்து
ஆட்சிக் குழுவின் கருத்தினைக் கேட்டறிந்த பின்பு மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கை பற்றிப் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வுரை வழங்கலாம்; அத்துடன்,
அத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஒரு காலவரம்பையும்
குறித்திடலாம்.
(3) அத்தகைய ஆய்வின் அல்லது விசாரணையின் முடிவுகள்மீது
மேற்கொள்ள கருதப்பட்டுள்ள அல்லது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை
ஏதேனுமிருப்பின், அது குறித்து வேந்தருக்கு ஆட்சிக்குழு அறிக்கை அளித்தல்
வேண்டும். அத்தகைய அறிக்கை வேந்தர் பணிக்கும் காலத்திற்குள்:
அனுப்பப்படுதல் வேண்டும்.
(4) வேந்தர் மனநிறைவு கொள்ளும் வகையில், ஆட்சிக்குழு தகுமான
காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்குமிடத்து, வேந்தர், ஆட்சிக்குழு
அளிக்கும் விளக்கத்தை அல்லது உரையீட்டை ஓர்வு செய்த பின்பு, தான்
ஏற்றதெனக் கருதும் பணிப்புரைகளை இடலாம்; ஆட்சிக்குழு அந்தப்
பணிப்புரைகளுக்கிணங்க நடத்தல் வேண்டும். வேந்தர் இதற்கெனக் குறித்திடும்
காலத்திற்குள் அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடக்க ஆட்சிக்குழு
தவறுங்கால், அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கிச் செயலாற்றுவதற்கென
நபர் எவரையும் அல்லது குழுமம் எதனையும் அமர்த்துவதற்கு வேந்தர் அதிகாரம்
உடையவர் ஆவார் அதற்கான செலவுகள் பொறுத்துத் தேவையான
ஆணைகளையும் அவர் பிறப்பிப்பார்.
9. பல்கலைக்கழகப் பதவியாளர்கள்.-- பல்கலைக்கழகம் பின்வரும்
பதவியாளர்களைக் கொண்டிருக்கும்:
(1) வேந்தர்;
(2) இணை வேந்தர்;
(3) துணை வேந்தர்;
(4) பதிவாளர்;
(5) நிதி அலுவலர்;
(6) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்; மற்றும்
14
(7) நிலையமைவிதிகளினால் பல்கலைக்கழகப் பதவியாளர்கள் என
விளம்பப்பெறும் பிற நபர்கள்.
10. வேந்தர்.- (1) தமிழ்நாடு ஆளுநர், பல்கலைக்கழகத்தின் வேந்தராக
இருந்து வருவார். அவர், தமது பதவியின் பயண்திறன்வழி பல்கலைக்கழகத்தின்
தலைவராக இருப்பார்; மேலும், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா எதற்கும் அவர்
வந்திருக்கும்போது, அதற்கு அவரே தலைமை வகித்துப் பட்டங்கள், சீரிதழ்கள்
அல்லது பிற கல்விசார் சிறப்புச்சீர்மைகளை அவற்றைப் பெறுவதற்கு உரிமை
கொண்டவர்களுக்கு வழங்குவார்.
(2) அதிகார அமைப்புகளுக்கு நபர்களை நியமனஞ் செய்வதற்கான
அதிகாரம் வேந்தருக்கு வழங்கப்பட்டிருக்குமிடத்து, வேந்தர், துணைவேந்தருடன்
கலந்தாய்வு செய்து, போதிய அளவு பிறவகையில் சார்பாற்றம் பெற்றிராதவர்களின்.
நலன்களுக்குச் சார்பாற்றம் இருக்கும் வகையில் தேவையான அளவிற்கு
நபர்களை நியமனஞ்செய்வார்.
(3) வேந்தர், தாமாக முனைந்தோ, விண்ணப்பத்தின்பேரிலோ, நடவடிக்கை
எதனின் ஒழுங்குமுறைமை குறித்து அல்லது அதன்படி எடுக்கப்பட்ட முடிபின்
அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணையின் முறைமை, சட்டச்சீர்மை அல்லது
தகைமை குறித்துத் தாம் மனநிறைவு கொள்வதற்கெனப் பல்கலைக்கழகத்தின்
அலுவலர் எவரின் அல்லது அதிகாரஅமைப்பு ஒன்றன் பதிவணத்தை வரவழைத்து
ஆய்வு செய்யலாம்; மேலும், எந்நேர்விலும், அத்தகைய முடிபு அல்லது ஆணை
எதுவும் மாற்றமைவு, அழித்தறவு, எதிர்மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றோ,
மறுஓர்வுக்காக அனுப்பப்பட வேண்டும் என்றோ வேந்தருக்குத் தோன்றுமாயின்,
அவர் அதற்கான ஆணைகளைப் பிறப்பிக்கலாம்:
வரம்புரையாக: இந்தப் பிரிவின்படி அதிகாரங்களைச் செலுத்துவதற்கென
வேந்தருக்கு அனுப்பப்படும் விண்ணப்பம் ஒவ்வொன்றும் அந்த
விண்ணப்பத்திற்குக் காரணமான நடவடிக்கை, முடிபு அல்லது ஆணை குறித்து
விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்.
செய்யப்படுதல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக: எவரொருவருக்கும் குந்தகம் விளைவிக்கும் ஆணை
எதுவும், அவர் உரையீடு செய்வதற்கு அவருக்கு வாய்ப்பு
அளிக்கப்பட்டிருந்தாலன்றி, பிறப்பிக்கப்படுதல் ஆகாது.
(4) வேந்தர், இந்தச் சட்டத்தாலோ அதன் வழியாலோ தமக்கு வழங்கப்பெறும்
பிற அதிகாரங்களைச் செலுத்தி வருவார்; பிற கடமைகளைப் புரிந்து வருவார்.
15
11. இணை வேந்தர்.- (1) தமிழ்நாடு மாநிலத்தின் கல்வித்துறைப்
பொறுப்பேற்றுள்ள அமைச்சர், பல்கலைக்கழகத்தின். இணைவேந்தராக
இருந்துவருவார்.
(2) வேந்தர் இல்லாதிருக்கையில் அல்லது வேந்தர் செயலுற
இயலாதிருக்கும்போது, இணைவேந்தர், வேந்தரின் அதிகாரங்கள் அனைத்தையும்
செலுத்திவருவார்; கஉமைகள் அனைத்தையும் புரிந்து வருவார்.
(3) இணைவேந்தர், இந்தச் சட்டத்தாலோ அதன் வழியாலோ தமக்கு
வழங்கப்பெறும் பிற அதிகாரங்களைச் செலுத்திவருவார்; பிற கடமைகளைப்
புரிந்துவருவார்.
12. துணை வேந்தர்.- (1) துணைவேந்தர் பதவிக்கான அமர்த்துகை
ஒவ்வொன்றும், (2) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள குழு பரிந்துரைக்கும் மூவர்
பெயர்கள் கொண்ட ஒரு பட்டியலிலிருந்து வேந்தரால் செய்யப்படும். அந்தப்
பட்டியல், மேற்சொன்ன குழுவின் உறுப்பினர் எவருடைய பெயரையும்
கொண்டிருத்தல் ஆகாது.
(2) (1) ஆம் உட்பிரிவைப் பொறுத்தவரை, இந்தக்குழு மூன்று நபர்களைக்
கொண்டிருக்கும். அவர்களில் ஒருவர் அரசினால் நியமனஞ் செய்யப்பெறுவார்;
ஒருவர் ஆட்சிப் பேரவையினால் நியமனஞ் செய்யப்பெறுவார்; ஒருவர் ஆட்சிக்
குழுவினால் நியமனஞ் செய்யப்பெறுவார்:
வரம்புரையாக: பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகள் எதிலும்
உறுப்பினராக உள்ள நபர் எவரும் அவ்வாறு நியமனஞ் செய்யப்பெறுதல் ஆகாது.
(3) துணைவேந்தர், மூன்றாண்டு காலஅளவுக்குப் பதவி வகிப்பார்; அவர்
மேற்கொண்டும் மூன்றாண்டு காலஅளவுக்கு மீண்டும் அமர்த்தப் பெறுவதற்குத்
தகுமையுடையவர் ஆவார்:
வரம்புரையாக: எவரொருவரும், மொத்தத்தில் ஆறாண்டுகளுக்கு
மேற்பட்டுத் துணைவேந்தர் பதவியை வகித்தல் ஆகாது:
மேலும் வரம்புரையாக: (௨) பதவிக்காலம் முடிவுற்றிருக்கிற துணைவேந்தர்
ஒருவரை, மொத்தத்தில் ஓராண்டு காலஅளவுக்கு மேற்படாதவாறு பணிப்புரையில்
குறித்துரைக்கப்படும் ஒரு காலஅளவிற்குப் பதவியில் தொடர்ந்து இருந்து வருமாறு
வேந்தர் பணிக்கலாம்;
(b) துணைவேந்தர், தம் கையொப்பமிட்டு வேந்தருக்கு எழுத்து மூலம்
தெரிவித்து, இரண்டுமாத அறிவிப்புக் கொடுத்தபின்பு தம் பதவியை விட்டு விலகிக்
கொள்ளலாம்:
16
பின்னும் வரம்புரையாக: துணைவேந்தராக அமர்த்தப்பெற்ற நபர் ஒருவர், தம்
பதவிக் காலத்தின்போதோ, அப்பதவியின் நீட்டிப்புக் காலத்தின் போதோ
அறுபத்தைந்து வயது நிறைவெய்துவாராயின், அவர் அப்பதவியிலிருந்து
ஓய்வுபெறுதல் வேண்டும்.
(4) துணைவேந்தர் பதவியில் தற்காலிகக் காலியிடம் எதுவும்
ஏற்படும்போதோ, இருத்தலின்மை அல்லது பிற காரணம் எதனாலும் தம்
பதவிக்குரிய அதிகாரங்களைச் செலுத்துவதற்கும், கடமைகளைப் புரிவதற்கும்
துணைவேந்தர் இயலாதிருக்கும்போதோ துணைவேந்தரின் அதிகாரங்களைச்
செலுத்துவதற்கும் கடமைகளைப் புரிவதற்கும் தேவைக்கேற்ற ஏற்பாடுகளை
ஆட்சிக்குழு செய்திடும்வரையில் பல்கலைக்கழகத்தில் மிக்க முதுநிலையராக
உள்ள பேராசிரியர், துணைவேந்தரின் அதிகாரங்களைச் செலுத்தி வருவார்;
கடமைகளைப் புரிந்து வருவார்.
(5) துணைவேந்தர், பல்கலைக்கழகத்தின் ஒரு முழுநேரப் பதவியாளர்
ஆவார்; அவருடைய பதவியூதியங்களும், பணி குறித்த வரையுரைகளும்
வரைகட்டுகளும் பின்வருமாறு இருந்து வரும்:-
() துணைவேந்தருக்கு நிலையான வரையூதியமாக மாதம் ஒன்றுக்கு
மூவாயிரம் ரூபாய் வழங்கப்படும்; அவர், தம் பதவிக் காலம் முழுவதும், வாடகை
ஏதுமின்றி அறைகலன்களுடன் அமைந்த உறைவிடத்தைப் பயன்படுத்திக்
கொள்வதற்கு உரிமை கொண்டவர் ஆவார்; அத்தகைய உறைவிடத்தைப்
பேணிவருவதற்கான செலவுப்பொறுப்பு எதுவும் துணைவேந்தரைத் தனிமுறையில்
சேராது;
(i) ஆட்சிக்குழு வேந்தரின் ஒப்பேற்புடன், அவ்வப்போது குறித்திடும்
பதவியிறுதிக்கால நலப்பாடுகளுக்கும், படித்தொகைகளுக்கும் துணை வேந்தர்
உரிமைகொண்டவர் ஆவார்:
வரம்புரையாக:
() இப்பல்கலைக்கழகத்தின், அல்லது
(௦) பிற பல்கலைக்கழகம் ஒன்றன், அல்லது அந்தப் பல்கலைக்கழகத்தினால்
நடத்தப்பெற்றுவரும் அல்லது அதனுடன் இணைக்கப்பெற்றுள்ள கல்லூரி அல்லது
நிறுவனம் ஒன்றன்
பணியாளர் ஒருவர், துணைவேந்தராக அமர்த்தப்பெறுமிடத்து, அவர்
பங்களிப்பாளராகவுள்ள வருங்கால வைப்பு நிதியத்திற்குத் தொடர்ந்து பங்களிப்புச்
செய்துவருவதற்கு அனுமதிக்கப்பெறுவார்; அதற்கு இப்பல்கலைக்கழகத்தின்
17
பங்களிப்புத் தொகை, அவர் துணைவேந்தராக அமர்த்தப்பெறுவதை ஒட்டி முன்பு
அவர் பங்களிப்புச் செய்துவந்த தொகையின் அளவில் மட்டுமே இருந்துவரும்;
(0) துணை வேந்தர், ஆட்சிக் குழு குறித்திடும் வீதங்களில் பயணப்
படிகள் பெற உரிமைகொண்டவர் ஆவார்;
(iv) துணைவேந்தர், தாம் பதவிப்பணி ஆற்றுவதில் கழித்த கால அளவில்
பதினொன்றில் ஒரு பங்கு வீதக்காலத்திற்கு முழுச் சம்பளத்துடணான ஈட்டிய
விடுப்புப் பெற உரிமை கொண்டவர் ஆவார்:
வரம்புரையாக: துணைவேந்தர் தம் பதவிக்காலம் முடிவுறும் தேதிக்குப்
போதிய காலத்திற்கு முன்னதாகவே விண்ணப்பித்திருந்த ஈட்டிய விடுப்பு,
பல்கலைக்கழகத்தின் நலன் கருதி, வேந்தரால் மறுக்கப்படும்போதும், அவர் தம்
பதவிக்காலம் முடிவுறும் தேதிக்கு முண்ணர் அந்த விடுப்பினை எடுக்காதிருக்கிறார்
என்றாலும், அவர் தாம் பதவியை விடுத்த பின்பு, உயர்ந்த அளவு இருநூற்று நாற்பது
நாட்களுக்கு உட்பட்டு, தம் கணக்கிலுள்ள ஈட்டிய விடுப்பு நாட்களுக்குரிய விடுப்பு
வரையூதியத்திற்குச் சம மதிப்புள்ள பணத்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு
உரிமைகொண்டவர் ஆவார்;
) துணைவேந்தர், தம் பதவிக் காலத்தின்போது மருத்துவக்
காரணங்களின் மீது அல்லது பிறவாறு, மூன்று மாதத்திற்கு மேற்படாத ஒரு கால
அளவிற்குச் சம்பளமில்லாத விடுப்புப்பெற உரிமைகொண்டவர் ஆவார்:
வரம்புரையாக: அத்தகைய விடுப்பினை, 0) ஆம் கூறின்படி தாம் உரிமை
கொண்டுள்ள ஈட்டிய விடுப்பின் அளவுக்கு முழுச் சம்பளத்துடனான விடுப்பாக
அவர் மாற்றிக்கொள்ளலாம்.
13. துணைவேந்தரின் அதிகாரங்களும் கடமைகளும்.- (1) துணைவேந்தர்,
பல்கலைக்கழகத்தில் கல்விநெறித் தலைவராகவும் முதன்மை ஆட்சியாளராகவும்
இருந்து வருவார்; பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா எதற்கும் வேந்தரும்,
இணைவேந்தரும் வாராதிருக்கும்போது, அவர் அவ்விழாவிற்குத் தலைமை
வகித்து, பட்டங்கள், புலமைப்பட்டங்கள், சீரிதழ்கள் அல்லது பிற கல்விசார்
சிறப்புச்சீர்மைகளை, அவற்றைப் பெறுவதற்கு உரிமை கொண்டுள்ளவர்களுக்கு
வழங்குவார். ஆட்சிப்பேரவை, ஆட்சிக்குழு, கல்விசார் நிலைக்குழு, நிதிக்குழு
ஆகியவற்றில் பதவிவழி உறுப்பினராகவும், தலைவராகவும் பல்கலைக்கழகத்தின்
எந்த ஓர் அதிகாரஅமைப்பின் கூட்டம் எதற்கும் வந்திருக்கவும், அதில்
உரையாற்றவும் அவர் உரிமை கொண்டவர் ஆவார்; ஆனால், அத்தகைய
அதிகாரஅமைப்பில் அவர் ஓர் உறுப்பினராக இருந்தாலன்றி, அந்தக் கூட்டத்தில்
வாக்களிப்பதற்கு உரிமை கொண்டவர் ஆகார்.
18
(2) இந்தச் சட்டத்தின் வகையங்கள், நிலையமைவிதிகள், நெறியமை
விதிகள், ஒழுங்கமைவிதிகள் ஆகியவை கடைப்பிடிக்கப்பட்டு,
நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வது, துணைவேந்தரின் கடமையாகும்; மேலும்
இதற்குத் தேவையான அதிகாரங்கள் அனைத்தையும் அவர் செலுத்தலாம்.
(3) ஆட்சிப்பேரவை, ஆட்சிக்குழு, கல்விசார் நிலைக்குழு, நிதிக்குழு
ஆகியவற்றின் கூட்டங்களைக் கூட்டுவதற்குத் துணைவேந்தர் அதிகாரம்
உடையவர் ஆவார்.
(4) (a) எந்தப் பொருட்பாடு குறித்தும் நடவடிக்கை எடுப்பதற்குத்
துணைவேந்தர் அதிகாரம் உடையவர் ஆவார்; மேலும், தாம் தேவையெனக் கருதும்
நடவடிக்கையினை ஆணையின் வாயிலாக அவர் எடுப்பார்; பின்னர்,
கூடியவிரைவில், அந்தப் பொருட்பாடு குறித்து வழக்கமாக நடவடிக்கை
எடுத்திருக்கக்கூடிய அலுவலருக்கு அல்லது அதிகாரஅமைப்புக்கு அல்லது
குழுமத்திற்கு, தாம் எடுத்த நடவடிக்கையை அவர் அறிவிப்பார்:
வரம்புரையாக: அத்தகைய ஆணை எதுவும், அதனால் பாதிக்கப்படும் நபர்
விசாரிக்கப்படுவதற்குத் தகுமானதொரு வாய்ப்பினை அவருக்கு வழங்காமல்
பிறப்பிக்கப்படுதல் ஆகாது;
(b) இந்த உட்பிரிவின்படி துணைவேந்தர் எடுத்த நடவடிக்கை
பல்கலைக்கழகப் பணியத்தில் இருக்கும் நபர் எவரையும் பாதிக்கும்போது அவர்,
அத்தகைய நடவடிக்கை குறித்துத் தமக்கு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து
முப்பது நாட்களுக்குள், ஆட்சிக்குழுவிடம் ஒரு மேல்முறையீட்டினைச்
செய்வதற்கு உரிமை கொண்டவர் ஆவார். அத்தகைய மேல்முறையீட்டின்மீது
ஆட்சிக்குழு பிறப்பிக்கும் ஆணையைத் துணைவேந்தர் செல்திறப்படுத்துவார்.
(5) பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் ஆகியோரின்
அமர்த்துகை, தற்காலிகப் பணிநீக்கம், பணியறவு ஆகியவை குறித்த ஆட்சிக்
குழுவின் ஆணைகளைத் துணைவேந்தர் செல்திறப்படுத்துவார்.
(6) பல்கலைக்கழகத்தின் அலுவற்பாடுகளைத் துணைவேந்தர் தமது
கட்டுப்பாட்டில் வைத்துவருவார்; மேலும் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு
நிலையினை உரியவாறு காப்பதற்கும் அவரே பொறுப்பாவார்.
(7) கல்வி கற்பித்தலையும் ஆராய்ச்சியையும் இசைவுற இணைத்தல்,
விரிவாக்கக்கல்வி, பாடத்திட்ட மேம்பாடு இவற்றிற்குத் துணைவேந்தர்
பொறுப்பாவார்.
(8) துணைவேந்தர், நிலையமைவிதிகளினால் வகுத்துரைக்கப்படும் பிற
அதிகாரங்களைச் செலுத்திவருவார்; பிற கடமைகளைப் புரிந்துவருவார்.
19
14. பதிவாளர். (1) பதிவாளர், பல்கலைக்கழகத்தின் வரையூதியம் பெறும் ஒரு
முழு நேர அலுவலர் ஆவார்; அவர் ஆட்சிக்குழுவினால் அமர்த்தப்பெறுவார்.
பதிவாளரின் பணிகுறித்த வரையுரைகளும் வரைகட்டுகளும் பின்வருமாறு
இருந்துவரும்:-
() பதிவாளர் பதவியினை வகிப்பவர், பல்கலைக்கழகம் எதனுடனும்
இணைக்கப்பெற்ற ஒரு கல்லூரியின் பேராசிரியர் பதவி நிலைக்குக் குறையாத
ஒரு கல்வியியலராக இருத்தல் வேண்டும்;
(1) பதிவாளர், மூன்றாண்டு காலஅளவுக்குப் பதவி வகிப்பார்:
வரம்புரையாக: பதிவாளர், ஐம்பத்தெட்டு வயது நிறைவெய்தியவுடன் அல்லது
இந்தக் கூறில் குறித்துரைக்கப்படும் காலஅளவு முடிவுற்றவுடன், இதில் எது
முந்தியதோ அதன்மேல் ஓய்வுபெறுதல் வேண்டும்;
0) பதிவாளரின் பதவியூதியங்களும் பிற பணி குறித்த வரையுரைகளும்
வரைகட்டுகளும் வகுத்துரைக்கப்படு கிறபடி இருந்துவரும்;
(iv) பதிவாளர் பதவி காலியாக இருக்கும்போதோ, நோய், இருத்தலின்மை
அல்லது பிற காரணம் எதனாலும் தமது பதவிக் கடமைகளைப் புரிவதற்குப்
பதிவாளர் இயலாதிருக்கும் போதோ, பதிவாளரின் பதவிக் கடமைகளை
இதற்கெனத் துணைவேந்தர் அமர்த்தும் ஒருவர் புரிந்து வருவார்.
(2) (a) பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், கல்விசார் பணியாளர் தொகுதி
நீங்கலாக ஆட்சிக்குழுவின் ஆணைகளில் குறித்துரைக்கப்படும்.
பணியாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும் விசாரணை
நடைபெறும்போது அவர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்வதற்கும்
அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கும் அல்லது அவர்களுக்குக் கண்டனத்
தண்டனை விதிப்பதற்கும் அல்லது ஊதியம் உயர்வதை நிறுத்தி வைப்பதற்கும்
பதிவாளர் அதிகாரம் உடையவர் ஆவார்:
வரம்புரையாக: தொடர்புடைய நபரைப் பொறுத்து எடுக்கக்கருதப்படும்
நடவடிக்கைக்கு எதிராகக் காரணம் காட்டுவதற்கு அவருக்குத் தகுமானதொரு
வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலன்றி, அத்தகைய தண்டனை எதுவும்
விதிக்கப்படுதல் ஆகாது;
(b) (a) கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகளில் எதனையும்
விதிக்கும் பதிவாளரின் ஆணை எதற்கும் எதிராகத் துணைவேந்தரிடம் ஒரு
மேல்முறையீடு செய்வது உற்றதாகும்;
20
(2) பதிவாளரின்: அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட தண்டனை
தேவைப்படுகிறதென விசாரணையில் வெளிப்படும் நேர்வில், பதிவாளர்,
அவ்விசாரணையின் முடிவில், தமது பரிந்துரைகளுடன் துணைவேந்தருக்கு ஓர்
அறிக்கை அளிப்பார்:
வரம்புரையாக: தண்டனை எதனையும் விதிக்கும் துணைவேந்தரின்
ஆணைக்கு எதிராக ஆட்சிக்குழுவிடம் ஒரு மேல்முறையீடு செய்வது
உற்றதாகும்;
(0) மேல்முறையீட்டுக்கு உற்ற ஆணையை மேல்முறையீட்டாளர்
பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து அறுபது நாள் முடிவுற்றப் பின்பு 0)
கூறின்படியான அல்லது (௦) கூறின்படியான மேல்முறையீடு எதுவும்
செய்யப்படுதல் ஆகாது.
(3) ஆட்சிப்பேரவை, ஆட்சிக்குழு, புலங்கள், பாடத்திட்டக் குழுக்கள்
ஆகியவற்றின் பதவிவழிச் செயலாளராகப் பதிவாளர் இருந்து வருவார்; ஆனால்,
அவர், இந்த அதிகாரஅமைப்புகள்: எதிலும் ஓர் உறுப்பினராகக்
கொள்ளப்பெறுவதில்லை.
(4) பின்வருவன பதிவாளரின் கடமைகளாகும்:-
(ஐ) பல்கலைக்கழகத்தின் பதிவணங்கள், தனியோர் இலச்சினை, அவரது
பொறுப்பில் ஆட்சிக்குழு ஒப்படைக்கும் பிற சொத்துகள் ஆகியவற்றின்.
பாதுகாப்பாளராக இருத்தல்;
(b) ஆட்சிப்பேரவை, ஆட்சிக்குழு, புலங்கள், பாடத்திட்டக் குழுக்கள்,
தேர்வாளர் குழுக்கள், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளினால்
அமைக்கப்படும் குழுக்கள் ஆகியவற்றின் கூட்டங்களைக் கூட்டுவதற்கான
அறிவிப்புகள் அனைத்தையும் அனுப்புதல்;
(௦) ஆட்சிப்பேரவை, ஆட்சிக்குழு, புலங்கள், பாடத்திட்டக் குழுக்கள்,
தேர்வாளர் குழுக்கள், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளினால்
அமைக்கப்படும் குழுக்கள் ஆகியவற்றின் கூட்டங்களின் நடவடிக்கைகள்
அனைத்தையும் பற்றிய நடவடிக்கை குறிப்பேடுகளை வைத்துவருதல்;
(0) ஆட்சிக்குழுவின் அலுவல்முறைக் கடிதத்தொடர்புகளை நடத்தி
வருதல்;
(ஐ) பல்கலைக்கழக அதிகார அமைப்புகளின் கூட்டங்களுக்கான
பொருளாய்வு நிரல் அனுப்பப்பட்டவுடன் அவற்றின் படிகளையும் அத்தகைய
கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகளையும் வேந்தருக்கு அனுப்புதல்; மற்றும்
21
0 நிலையமைவிதிகளிலோ, நெறியமைவிதிகளிலோ, ஒழுங்கமை
விதிகளிலோ குறித்துரைக்கப்படும் அல்லது ஆட்சிக் குழுவினால் அல்லது
துணைவேந்தரால் அவ்வப்போது வேண்டுறுத்தப்படும் பிற அதிகாரங்களைச்
செலுத்திவருதல்: பிற கடமைகளைப் புரிந்துவருதல்.
(5) பல்கலைக்கழகத்தினால் அல்லது அதற்கு எதிராகத் தொடரப்படும்
உரிமை வழக்குகள், பிற சட்ட நடவடிக்கைகள் அனைத்திலுமான வாதுரைகள்
பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு ஒப்புறுதி செய்யப்படுதல் வேண்டும்; அத்தகைய
உரிமை வழக்குகளிலும், நடவடிக்கைகளிலும் நீதிமுறைக் கட்டளைகள்
அனைத்தும் பதிவாளருக்கு விடுக்கப்பட்டு அவரிடம் சார்வு செய்யப்படுதல்
வேண்டும்.
15. நிதி அலுவலர். (1) நிதி அலுவலர், பல்கலைக்கழகத்தின் வரையூதியம்
பெறும் ஒரு முழுநேர அலுவலர் ஆவார்; அவர், ஆட்சிக் குழுவினால், இது
இதற்கெனக் குறித்துரைக்கும் காலஅளவிற்கு அமர்த்தப்பெறுவார்.
(2) நிதி அலுவலர் பதவிக்கான அமர்த்துகை ஒவ்வொன்றும், அரசு
பரிந்துரைக்கும் மூவர் பெயர்கள் கொண்ட ஒரு பட்டியலிலிருந்து ஆட்சிக்
குழுவினால் செய்யப்படும்.
(3) நிதி அலுவலரின் பதவியூதியங்களும், பணி குறித்த பிற வரையுரைகளும்
வரைகட்டுகளும், நெறியமைவிதிகள் வகுத்துரைக்கிறபடி இருந்துவரும்.
(4) நிதி அலுவலர், ஐம்பத்தெட்டு வயது நிறைவெய்தியவுடன், அல்லது (1)
ஆம் உட்பிரிவின்படி குறித்துரைக்கப்படும் காலஅளவு முடிவுற்றவுடன், இதில் எது
முந்தியதோ அதன்மேல் ஓய்வுபெறுதல் வேண்டும்:
வரம்புரையாக: நிதி அலுவலர், ஐம்பத்தெட்டு வயது நிறைவெய்திய
போதிலும், அவருக்குப்பின் அப்பதவிக்கு வருபவர் அமர்த்தப்பெற்றுப் பதவியேற்பது
அல்லது ஓராண்டு காலஅளவு முடிவுறுவது, இதில் எது முந்தியதோ அது வரையில்,
அவர் அப்பதவியில் தொடர்ந்து இருந்து வருவார்.
(5) நிதி அலுவலர் பதவி காலியாக இருக்கும்போதோ, நோய்,
இருத்தலின்மை அல்லது பிற காரணம் எதனாலும் தமது பதவிக் கடமைகளைப்
புரிவதற்கு நிதி அலுவலர் இயலாதிருக்கும்போதோ நிதி அலுவலரின், பதவிக்
கடமைகளை இதற்கெனத் துணைவேந்தர் அமர்த்தும் ஒருவர் புரிந்து வருவார்.
(6) நிதி அலுவலர், நிதிக் குழுவின் பதவிவழிச் செயலாளராக இருந்து
வருவார்; ஆனால், அவர் அந்தக் குழுவின் ஓர் உறுப்பினராகக்
கொள்ளப்பெறுவதில்லை.
22
(7) நிதி அலுவலர்,-
(ஐ பல்கலைக்கழகத்தின் நிதியங்களைப் பொதுவாக மேற்பார்வை
செய்து வருவார்; அதன் நிதிக்கொள்கை குறித்து பல்கலைக்கழகத்திற்குத்
தேர்வுரை வழங்குவார்;
(b) ஆட்சிக்குழுவினால் தமக்குக் குறித்துரைக்கப்படும் அல்லது
நிலையமைவிதிகளினால் அல்லது நெறியமைவிதிகளினால்
வகுத்துரைக்கப்படும் பிற அதிகாரங்களைச் செலுத்திவருவார்; பிற நிதியியல்
பதவிப் பணிகளையும் ஆற்றிவருவார்:
வரம்புரையாக: நிதி அலுவலர், ஆட்சிக்குழுவின், முன் ஒப்பேற்பின்றி,
வகுத்துரைக்கப்படும் தொகைக்கு மேற்பட்டுச் செலவு எதனையும் செய்தலோ,
முதலீடு எதனையும் செய்தலோ ஆகாது.
(8) ஆட்சிக் குழுவின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, நிதி அலுவலர்,
(ஐ பொறுப்புக்கட்டளை, கட்டளைச் சொத்து உள்ளடங்கலாக,
பல்கலைக்கழகத்தின் சொத்துகள், முதலீடுகள் ஆகியவற்றை வைத்து
நிருவகிப்பார்;
(b) ஓர் ஆண்டிற்கான தொடர்வுறு செலவினத்திற்காகவும் தொடர்வுறாச்
செலவினத்திற்காகவும் ஆட்சிக்குழு குறித்திட்ட வரம்புகளுக்கு மேற்படாதவாறும்,
பணத்தொகைகள் அனைத்தும் அவை வழங்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட
நோக்கங்களுக்காகவே செலவிடப்படுமாறும், உறுதியாகப் பார்த்துக்கொள்ளுதல்
வேண்டும்;
(௦ பல்கலைக்கழகத்தின் ஆண்டு கணக்குகள், நிதிமதிப்பீடுகள், வரவு-
செலவுத் திட்டம் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கும் அவற்றை ஆட்சிக்குழுவிடம்
முன்னிடுவதற்கும் பொறுப்புடையவர் ஆவார்;
(0) பணம் மற்றும் வங்கி இருப்புகள், முதலீடுகள் ஆகியவற்றை
இடையறாது கண்காணித்துப் வருதல் வேண்டும்;
(8) வருவாய் ஈட்டத்தின் ஏற்றத்தைக் கண்காணித்து வருதலும் ஈட்டும்
முறைகள் குறித்துத் தேர்வுரை வழங்குதலும் வேண்டும்;
(0. கட்டடங்கள், நிலம், அறைகலன்கள், சாதனக்கருவிகள் பற்றிய
பதிவேடுகள் நாளது தேதிவரையில் வைத்துவரப்படுமாறும், பல்கலைக்கழகம்
நடத்திவரும் அலுவலகங்கள், தனியுறு மையங்கள், தனிவகை ஆய்வுக்கூடங்கள்,
கல்லூரிகள் ஆகிய அனைத்திலுமுள்ள சாதனக் கருவிகள் பிற நுகர்தகு
23
பொருள்கள் ஆகியவற்றின் இருப்புகள் சரிபார்க்கப்படுமாறும் உறுதியாகப்
பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்;
(@ ஒப்பளிப்புப் பெறாத செலவினம் அல்லது பிற நிதியியல்
ஒழுங்குமுறைகேடு எதனையும் துணைவேந்தரின் கவனத்திற்குக்
கொண்டுவருதலும், தவறுசெய்த நபர்களுக்கு எதிராக எடுப்பதற்குரிய நடவடிக்கை
பற்றி குறிப்புரைத்தலும் வேண்டும்;
(h) தமது கடமைகளைப் புரிவதற்குத் தேவையெனத் தாம் கருதும் தகவல்
அல்லது விவர அறிக்கை எதனையும் பல்கலைக்கழகம் நடத்திவரும் அலுவலகம்,
மையம், ஆய்வுக்கூடம், கல்லூரி எதனிடமிருந்தும் கேட்டுப்பெறுதல் வேண்டும்.
(9) பல்கலைக்கழகத்திற்குச் செலுத்தப்பவேண்டிய பணத்தொகை
எதற்கும் நிதி அலுவலர் அல்லது ஆட்சிக் குழுவினால் இதற்கென முறையாக
அதிகாரமளிக்கப்பெற்ற நபர் அல்லது நபர்கள் அளிக்கும் பற்றுச்சீட்டு. அத்தகைய
பணத்தொகையை செலுத்தித் தீர்த்ததற்குப் போதுமான சான்றாகும்.
16. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்.- (1) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
பல்கலைக்கழகத்தின் முழுநேர அலுவலர் ஆவார்; அவர், ஆட்சிக் குழுவினால்
அது வகுத்துரைக்கும் காலஅளவிற்கு, வகுத்துரைக்கும் பணிவரையுரைகள் மற்றும்
வரைகட்டுகளின் பேரில், அமர்த்தப்பெறுவார்.
(2) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வகுத்துரைக்கப்படும் அதிகாரங்களைச்
செலுத்தி வருவார்; கடமைகளைப் புரிந்துவருவார்.
17. பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகள்.- ஆட்சிப் பேரவை,
ஆட்சிக்குழு, கல்விசார் நிலைக்குழு, புலங்கள், நிதிக்குழு, பாடத்திட்டக்குழுக்கள்,
பல்கலைக்கழகத்தின். அதிகாரஅமைப்புகள் என நிலையமைவிதிகளால்
விளம்பப்படும் பிற அதிகாரஅமைப்புகள் ஆகியவை பல்கலைக்கழகத்தின் அதிகார
அமைப்புகள் ஆகும்.
18. திட்டக் குழு.- (1) பல்கலைக்கழகத்திற்கென ஒரு திட்டக்குழு
அமைக்கப்படும்; அது, பல்கலைக்கழகத்திற்காகத் திட்டமிடுதல், அதனை
மேம்படுத்துதல் பற்றிப் பொதுவாகத் தேர்வுரை வழங்கும்; மேலும்
பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தையும், ஆராய்ச்சித் தரத்தையும் அது மறுஆய்வு
செய்துவரும்.
(2) திட்டக்குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்:-
(i) துணைவேந்தர்; இவர் இக்குழுவின் தலைவராக இருப்பார்; மற்றும்
0 கல்வித்தகுதியில் உயர்நிலை எய்திய எண்மருக்கு மேற்படாதவர்கள்.
24
(3) திட்டக்குழுவின் உறுப்பினர்களை வேந்தர் அமர்த்துவார்; அவர்
தீர்மானிக்கும் காலஅளவிற்கு அவர்கள் பதவி வகிப்பர்.
(4) திட்டக்குழு, இந்தச் சட்டத்தின்படி தனக்கு உற்றமைந்துள்ள பிற
அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டிருப்பதோடு, கல்விசார் பொருட்பாடு
எதனையும் பற்றி ஆட்சிக்குழுவிற்கும், கல்விசார் நிலைக்குழுவிற்கும் தேர்வுரை
வழங்குவதற்கும் உரிமையுடையதாகும்.
19. துணைவேந்தர், பிற அலுவலர்கள் முதலியோர் பொது ஊழியர்கள்.
ஆவர்.-- பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர், நிதிஅலுவலர்,
தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், பிற பணியாளர்கள் ஆகியோர் இந்தச் சட்டத்தின்
வகையங்கள் எதற்கும் இணங்கச் செயலுறும்போது அல்லது செயலுறுவதாகக்
கருதப்படும்போது இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின்.
பொருளின்படி பொது ஊழியர்களாகக் கொள்ளப்பெறுவார்கள்.
அத்தியாயம் ॥
ஆட்சிப்பேரவை மற்றும் கல்விசார் நிலைக் குழு அதிகாரங்களும் கடமைகளும்.
20. ஆட்சிப் பேரவை.- (ஐ) ஆட்சிப்பேரவை பின்வரும் நபர்களைக்
கொண்டிருக்கும்:
வகை | - பதவிவழி உறுப்பினர்கள்.
(1) வேந்தர்;
(2) இணைவேந்தர்;
(3) துணைவேந்தர்;
(4) கல்லூரிக் கல்வி இயக்குநர்;
(5) பள்ளிக் கல்வி இயக்குநர்
(மேல்நிலைக் கல்விப் பொறுப்பிலுள்ளவர்);
(6) தொழில்நுட்பக் கல்வி இயக்குநர்;
(7) சட்டக்கல்வி இயக்குநர்;
(8) மருத்துவக் கல்வி இயக்குநர்;
(9) பல்கலைக்கழகப் பாட மற்றும் ஆராய்ச்சித் துறைகளின்:
தலைவர்கள்;
(10) இணைக்கப்பெற்ற கல்லூரிகள் அனைத்தின் முதல்வர்கள்;
25
(14) பல்கலைக்கழக நூலகத்தின் நூலகர்;
(12) பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சிக் கல்வி இயக்குநர்; மற்றும்
(13) ஆட்சிப்பேரவையில் பிறவாறு உறுப்பினர்களாக இல்லாத
ஆட்சிக்குழு உறுப்பினர்கள்.
வகை ॥ - பிற உறுப்பினர்கள்
(1) இணைக்கப்பெற்ற கல்லூரி ஒவ்வொன்றின் ஆசிரியர்களாலும்
தேர்ந்தெடுக்கப்பெறும் ஓர் உறுப்பினர்;
(2) பல்கலைக்கழக வரையிடத்திற்கும் 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு
தனியார் கல்லூரிகள் (ஒழுங்குறுத்துதல்) சட்டத்தில் பொருள்வரையறை
செய்யப்பட்டவாறு உள்ள தனியார் கல்லூரிகளிலுள்ள கல்லூரி குழுக்களின்
செயலாளர்களால் தங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பெறும் ஓர் உறுப்பினர்;
(3) பல்கலைக்கழக வரையிடத்திற்குள் அமைந்த வருவாய் மாவட்டம்
ஒவ்வொன்றிலுமுள்ள மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களால்
தேர்ந்தெடுக்கப்பெறும் ஓர் உறுப்பினர்;
(4) பல்கலைக்கழக வரையிடத்திற்குள் அமைந்த வருவாய் மாவட்டம்
ஒவ்வொன்றிலுமுள்ள பதிவுபெற்ற பட்டதாரிகளால் தங்களுக்குள்
தேர்ந்தெடுக்கப்பெறும் இரண்டு உறுப்பினர்கள்;
(5) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்களால்
தங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பெறும் இரண்டு உறுப்பினர்கள் மேலும் தமிழ்நாடு
சட்டமன்ற மேலவையின் உறுப்பினர்களால் தங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பெறும்
ஓர் உறுப்பினர்;
(6) (i) ஏற்புப்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களின்;
(00 ஏற்புப்பெற்ற பண் பாட்டுக் கழகங்களின்;
(1) வணிகர் கழகங்களின்;
(iv) விசைத்தொழில் துறைகளின்;
(v) நூலாசிரியர்களின்;
(vi) இதழாசிரியர்களின்;
(ரி) வழக்கறிஞர்களின்;
(viil) விளையாட்டுத் துறைகளின்;
26
சார்பாளர்களாக வேந்தரால் நியமனஞ் செய்யப்பெறும் எண்மருக்கு
மேற்படாத உறுப்பினர்கள்; மற்றும்
(7) (a) இணைவேந்தரால் நியமனஞ்செய்யப்பெறும் ஆறு
உறுப்பினர்களில் மூவருக்குக் குறையாதவர்கள், பிறவாறு போதிய அளவு
சார்பாற்றம் பெற்றிராத பட்டியலில் கண்ட சாதியினரும், (ஆதிதிராவிட வகுப்பினர்)
பட்டியலில் கண்ட பழங்குடியினரும் (ஆதிதிராவிடப் பழங்குடியினர்) சார்பாற்றம்
பெறுவதற்காக நியமனஞ் செய்யப்பெறுவர்.
(௦) பிறவாறு வகைசெய்யப்பட்டிருந்தாலன்றி, ஆட்சிப்பேரவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பெற்றும் நியமனஞ்செய்யப்பெற்றும் உள்ள உறுப்பினர்கள்.
மூன்றாண்டு கால அளவிற்குப் பதவி வகித்து வருவர்:
வரம்புரையாக: ஆட்சிப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கபெற்ற அல்லது
நியமனஞ்செய்யப்பெற்ற உறுப்பினர் ஒருவர், ஆட்சிப்பேரவையின் பதவிவழி
உறுப்பினராக இருந்து வருவதற்கு அவரை உரிமை கொண்டவராக்குகிற
பதவிகளில் எதற்கும் தற்காலிகமாக அமர்த்தப்பெறுகிறவிடத்து, அவர், தாம்
அமர்த்தப்பெற்ற பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஏழு நாட்களுக்குள்
கையொப்பமிட்டு துணைவேந்தருக்கு எழுத்து வழி தெரிவிக்கும் அறிவிப்பு
வாயிலாக தாம் தேர்ந்தெடுக்கப்பெற்றதன் அல்லது நியமனஞ்செய்யப்பெற்றதன்.
காரணமாக ஆட்சிப்பேரவையின் ஓர் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிக்க
விரும்புகிறாரா அல்லது அத்தகைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொண்டு,
தாம் அமர்த்தப்பெற்றநன் காரணமாக பதவிவழி உறுப்பினராக இருக்க
விரும்புகிறாரா என்பதைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும்; அவ்வாறு
அவர் தெரிந்தெடுத்துக்கொள்வது அறுதியானதாகும். அவ்வாறு
தெரிந்தெடுத்துக்கொள்ள தவறுங்கால், அவர் தாம் தேர்ந்தெடுக்கப்பெற்ற அல்லது
நியமனஞ்செய்யப்பெற்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டதாகக்
கொள்ளப்பெறுவார்;
(c) ஒருவர் ஆட்சிப்பேரவையின் உறுப்பினராக. இருப்பது
அற்றுப்போகும்போது, ஆட்சிப்பேரவையில் அவர் உறுப்பினராக இருக்க நேர்ந்த
காரணத்தாலேயே அவர் ஓர் உறுப்பினராக உள்ள பல்கலைக்கழக
அதிகாரஅமைப்புகளில் எதனின் உறுப்பினராக அவர் இருப்பதும் அற்றுப்போகும்.
21. பல்கலைக்கழகத்தின் விரிவான கொள்கைகளையும் செயல்
திட்டங்களையும் ஆட்சிப்பேரவை மறு ஆய்வு செய்தல்.- இந்தச் சட்டத்தின் பிற
வகையங்களுக்கு உட்பட்டு, ஆட்சிப்பேவை பின்வரும் அதிகாரங்களையும்
செயற்பணிகளையும் கொண்டிருக்கும்:-
27
(a) பல்கலைக்கழகத்தின். விரிவான கொள்கைகளையும்
செயல்திட்டங்களையும் அவ்வப்போது மறுஆய்வு செய்து பல்கலைக்கழகத்தின்
மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்குமான செயல்முறைகள் பற்றி குறிப்புரைத்தல்;
(௦) தேர்வுரைக்காகக் குறித்தனுப்பப்படும் பொருட்பாடு எதனையும் பொறுத்து
வேந்தருக்குத் தேர்வுரை வழங்குதல்; மற்றும்
(6௦) நிலையமைவிதிகளினால் வகுத்துரைக்கப்படும் பிற அதிகாரங்களைச்
செலுத்துதல்; பிற செயற்பணிகளை ஆற்றுதல்.
22. ஆட்சிப்பேரவைக் கூட்டங்கள்.- (1) ஆட்சிப்பேரவை, துணைவேந்தரால்
குறித்திடப்படுகின்ற தேதிகளில் ஒவ்வோராண்டும் குறைந்தது இருமுறையாவது
கூடும், அத்தகைய, கூட்டங்களில் ஒன்று, ஆண்டு கூட்டம் என அழைக்கப்பெறும்.
ஆட்சிப்பேரவை, அது அவ்வப்போது தீர்மானிக்கும் பிற சமயங்களிலும் கூடலாம்.
(2) ஆட்சிப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதி,
ஆட்சிப்பேரவையின் ஒரு கூட்டத்திற்குத் தேவைப்படும் குறைவெண் ஆகும்:
வரம்புரையாக: பட்டங்கள், புலமைப்பட்டங்கள், சீரிதழ்கள் அல்லது பிற
கல்விசார் சிறப்புச்சீர்மைகள் வழங்குவதற்கென நடத்தப்பெறும் பல்கலைக்கழகப்
பட்டமளிப்பு விழாவிற்கு அல்லது ஆட்சிப்பேரவைக் கூட்டத்திற்கு அத்தகைய
குறைவெண் தேவையில்லை.
(3) துணைவேந்தர் தாம் பொருத்தமெனக் கருதும்போதெல்லாம்
ஆட்சிப்பேரவையின் சிறப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டலாம்; மேலும்
ஆட்சிப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் ஐம்பது விழுக்காட்டீற்குக்
குறையாதவர்கள் கையொப்பமிட்டு அளித்திடும் எழுத்துவழிக் கோரிக்கையின்
பேரில், அவர் ஆட்சிப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுதல் வேண்டும்.
23. கல்விசார் நிலைக்குழு.-- (1) பல்கலைக்கழகத்திற்கென கல்விசார்
நிலைக்குழு ஒன்று இருந்து வரும்; அது, இந்தச் சட்டத்தின் வகையங்கள்,
நிலையமைவிதிகள், நெறியமை விதிகள்: ஆகியவற்றிற்குட்பட்டு,
பல்கலைக்கழகத்தின் கல்விசார் அலுவற்பாடுகளை ஒருங்கிணைத்து, பொதுவாக
மேற்பார்வை செய்துவரும்.
(2) ( கல்விசார் நிலைக்குழு, துணைவேந்தருடன் கீழ்க்கண்ட நபர்களைக்
கொண்டிருக்கும்.
வகை | - பதவி வழி உறுப்பினர்கள்.
(1) கல்லூரிக்கல்வி இயக்குநர்;
(2) தொழில்நுட்பக் கல்வி இயக்குநர்;
28
(3) மருத்துவக்கல்வி இயக்குநர்;
(4) பட்டப்படிப்பிற்கும், பட்டமேற்படிப்பிற்குமான பாடவகைப்
பயிலாறுக் குழுக்கள் அனைத்தின் தலைவர்கள்; மற்றும்
(5) புலங்கள் அனைத்தின் தலைவர்கள்.
வகை ॥ - பிற உறுப்பினர்கள்
(a) இணைக்கப்பெற்ற கல்லூரிகளின். முதல்வர்களினால்,
தங்களுக்குள்: ஒற்றைமாற்று வாக்குவழியிலான வீதச்சார்பாற்ற
முறைக்கிணங்கத் தேர்ந்தெடுக்கப்பெறும் இரண்டு உறுப்பினர்கள்;
(௦) துணைவேந்தர், கல்விசார் நிலைக்குழுவின் பதவிவழித்
தலைவராக இருந்து வருவார்;
(6) கல்விசார் நிலைக்குழுவின் பதவிவழி உறுப்பினர்கள் அல்லாத
பிற உறுப்பினர்கள், மூன்றாண்டு கால அளவிற்குப் பதவி வகித்து வருவர்:
வரம்புரையாக: கல்விசார் நிலைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற
உறுப்பினர் ஒருவர், கல்விசார் நிலைக்குழுவின் பதவிவழி உறுப்பினராக இருந்து
வருவதற்கு அவரை உரிமைகொண்டவராக்குகிற பதவிகளில் எதற்கும்
தற்காலிகமாக அமர்த்தப்பெறுகிறவிடத்து, அவர், தாம் அமர்த்தப்பெற்ற பொறுப்பை
ஏற்றுக்கொண்ட ஏழு நாட்களுக்குள், கையொப்பமிட்டுத் துணைவேந்தருக்கு
எழுத்துவழித் தெரிவிக்கும் அறிவிப்பு வாயிலாக, தாம் தேர்ந்தெடுக்கப்பெற்றதன்
காரணமாக கல்விசார் நிலைக்குழுவின் ஓர் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிக்க
விரும்புகிறாரா அல்லது அத்தகைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொண்டு,
தாம் அமர்த்தப்பட்டதன் காரணமாக பதவிவழி உறுப்பினராக இருக்க விரும்புகிறாரா
என்பதைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும்; அவ்வாறு அவர்
தெரிந்தெடுத்துக் கொள்வது அறுதியானதாகும். அவ்வாறு
தெரிந்தெடுத்துக்கொள்ள அவர் தவறுங்கால், அவர் தாம் தேர்ந்தெடுக்கப்பெற்ற
உறுப்பினர் பதவியிலிருந்து விலகி விட்டதாகக் கொள்ளப்பெறுவார்.
(0) கல்விசார் நிலைக்குழுவின் உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படும்.
நாட்படியும் பயணப்படியும் நீங்கலாக, வேறு பணியூதியம் எதனையும்
பல்கலைக்கழகத்திடமிருந்து பெறுவதற்கு உரிமைகொண்டவர் ஆகார்:
வரம்புரையாக: இந்தக் கூறில் அடங்கிய எதுவும், உறுப்பினர் ஒருவர் தாம்
வகிக்கும் பதவி காரணமாகப் பெறுவதற்கு உரிமைகொண்டுள்ள வழக்கமான
பதவியூதியங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தடையூறு ஆவதில்லை.
29
(6) கல்விசார் நிலைக்குழுவின் பதவிவழி உறுப்பினரல்லாத பிற
ஒருவர், தம் பதவிக்காலம் கழிவுறுவதற்கு முன்பு, எச்சமயத்திலும் தமது
உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொள்ள முனையலாம். அத்தகைய
பதவி விலகலை, அந்த உறுப்பினர், எழுத்துவழிக் கடிதத்தில் வேந்தருக்குத்
தெரிவித்தல் வேண்டும்; அப்பதவி விலகல், அதனை வேந்தர்
ஏற்றுக்கொள்ளும் தேதியிலிருந்து செல்திறம் பெறும்.
(3) கல்விசார் நிலைக்குழுவின் அதிகாரங்களும் கடைமைகளும்,
நிலையமைவிதிகளினால் வகுத்துரைக்கப்படு கிறபடி இருந்துவரும்.
அத்தியாயம் IV
ஆட்சிக் குழு.
24. ஆட்சிக் குழு.- (ஐ வேந்தர், 54 ஆம் பிரிவின்படி முதலாம்
துணைவேந்தர் அமர்த்தப்பெற்றபின்பு, கூடியவிரைவில், ஆட்சிக்குழுவினை
அமைத்திடுவார்.
(௦) ஆட்சிக்குழு, துணை வேந்தருடன், பின்வரும் உறுப்பினர்களையும்
கொண்டிருக்கும்:-
வகை | - பதவி வழி உறுப்பினர்கள்.
(1) கல்வித்துறைப் பொறுப்பேற்றுள்ள அரசுச் செயலாளர்;
(1(a)) நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை பொறுப்பேற்றுள்ள அரசுச்
செயலாளர்;
(1(aa)) சட்டத்துறை பொறுப்பேற்றுள்ள அரசுச்செயலாளர்;
(2) கல்லூரிக் கல்வி இயக்குநர்;
(3) தொழில்நுட்பக் கல்வி இயக்குநர்;
(4) மருத்துவக் கல்வி இயக்குநர்; மற்றும்
(5) சட்டக் கல்வி இயக்குநர்.
வகை ॥ - பிற உறுப்பினர்கள்
(1) இணைக்கப்பெற்ற கல்லூரிகளின் முதல்வர்களினால், தங்களுக்குள்
ஒற்றைமாற்று வாக்குமுறை வழியிலான விதச்சார்பாற்ற முறைக்கிணங்கத்
தேர்ந்தெடுக்கப்பெறும் இரண்டு உறுப்பினர்கள்;
(2) இணைக்கப்பெற்ற கல்லூரிகளின்: முதல்வர்களல்லாத பிற
ஆசிரியர்களினால் ஆட்சிப்பேரவையின் உறுப்பினர்களாக உள்ளவர்கள்.
30
தங்களுக்குள் ஒற்றைமாற்று வாக்கு வழியிலான விதச்சார்பாற்ற முறைக்கிணங்கத்
தேர்ந்தெடுக்கப்பெறும் இரண்டு உறுப்பினர்கள்:
விளக்கம்.- இந்த இனத்தைப் பொறுத்தவரை, "ஆசிரியர்கள்" என்பது,
இணைக்கப்பெற்ற கல்லூரிகளின்: ஆசிரியர்களினால், அவர்களுக்குள்
ஆட் சிப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பெறும் ஆசிரியர்கள் என்று பொருள்பெறும்;
(3) ஆய்வு மற்றும் ஆராய்ச்சித் துறைகள், உயர்திறன் கல்விக் கூடங்கள்,
உயர்நிலை ஆய்வு மையங்கள் அல்லது அவற்றின் பகுதி இவற்றின் ஒவ்வொரு
பத்துத் துறைத்தலைவர்களுக்கும் ஒருவர் என்ற வீதத்தில், அத்தகைய துறைகள்,
கல்விக்கூடங்கள், மையங்கள் ஆகியவற்றுக்கிடையிலிருந்து, துணைவேந்தரின்
பரிந்துரையின் பேரில், வேந்தரால் சுழல் முறையில் நியமனஞ் செய்யப்பட வேண்டிய
ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர்;
(4) மேற்சொன்ன மூன்று வகைப்பாடுகளில் எதன்கீழும் வராதவரும்,
ஆட்சிப் பேரவையினால் அதன் உறுப்பினர்களுக்கிடையிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பெறுபவருமான ஜர் உறுப்பினர்;
(5) கல்வித்துறை வல்லுநர்களிடையிலிருந்து வேந்தரால் நியமனஞ்
செய்யப்பெறும் மூன்று உறுப்பினர்கள்;
(6) பணிமுதுநிலைக்கிணங்கத் துணைவேந்தரால் சுழல் முறையில்
௱)யமனஞ்செய்யப்பெறும் பல்கலைக்கழக இணைபேராசிரியர் ஒருவர்; மற்றும் ளு று ழு ஓ று
(7) பணிமுதுநிலைக்கிணங்கத் துணைவேந்தரால் சுழல் முறையில்
நியமனஞ்செய்யப்பெறும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர்.
(6) துணைவேந்தர், ஆட்சிக்குழுவின் பதவிவழித் தலைவராக இருந்து
வருவார்;
(0) கல்வித்துறைப் பொறுப்பேற்றுள்ள அரசுச் செயலாளர், அல்லது வாழ்வு
மற்றும் குடும்பநலத்துறை பொறுப்பேற்றுள்ள அரசுச் செயலாளர் அல்லது
சட்டத்துறை பொறுப்பேற்றுள்ள அரசுச் செயலாளர், ஆட்சிக்குழுக்
கூட்டங்களுக்கு எக்காரணத்தாலேனும் வர இயலாதிருக்கும் நேர்வில் அவர் தம்
துறையைச் சேர்ந்த அரசுத் துணைச்செயலாளர் பதவிப்படி நிலைக்குக் குறையாத
அலுவலர் எவரையும் அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அனுப்பி
வைக்கலாம்;
(6) பிறவாறு வகைசெய்யப்பட்டிருந்தாலன்றி, ஆட்சிக்குழுவின் பதவி வழி
உறுப்பினர்களல்லாத பிற உறுப்பினர்கள் மூன்றாண்டு காலஅளவிற்குப் பதவி
வகித்து வருவர்:
31
வரம்புரையாக: ஆட்சிக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற அல்லது
நியமனஞ்செய்யப்பெற்ற உறுப்பினர் ஒருவர், ஆட்சிக்குழுவின் பதவி வழி
உறுப்பினராக இருந்துவருவதற்கு அவரை உரிமைகொண்டவராக்குகிற
பதவிகளில் எதற்கும் தற்காலிகமாக அமர்த்தப்பெறுகிறவிடத்து, அவர், தாம்
அமர்த்தப்பெற்ற பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஏழு நாட்களுக்குள், தம்
கையொப்பமிட்டுத் துணைவேந்தருக்கு எழுத்துவழித் தெரிவிக்கும் அறிவிப்பு
வாயிலாக தாம் தேர்ந்தெடுக்கப் பெற்றதன் அல்லது நியமனஞ் செய்யப்பெற்றதன்.
காரணமாக ஆட்சிக்குழுவின் ஓர் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிக்க விரும்புகிறாரா
அல்லது அத்தகைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொண்டு, தாம்
அமர்த்தப்பட்டதன் காரணமாகப் பதவிவழி உறுப்பினராக இருக்க விரும்புகிறாரா
என்பதைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும்; அவ்வாறு அவர்
தெரிந்தெடுத்துக் கொள்வது அறுதியானதாகும். அவ்வாறு தெரிந்தெடுத்துக்
கொள்ள அவர் தவறுங்கால், அவர், தாம் தேர்ந்தெடுக்கப்பெற்ற அல்லது நியமனஞ்
செய்யப்பெற்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி விட்டதாகக் கொள்ளப்பெறுவார்;
() ஒருவர், ஆட்சிக்குழுவின் உறுப்பினராக அற்றுப்போகும்போது, ஆட்சிக்
குழுவில் அவர் உறுப்பினராக இருக்கநேர்ந்த காரணத்தாலேயே அவர் ஓர்
உறுப்பினராக உள்ள பல்கலைக்கழக அதிகார அமைப்புகள் எதனின் உறுப்பினராக
அவர் இருப்பதும் அற்றுப்போகும்;
Q) ஆட்சிக்குழு உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படும் நாட்படியும்
பயணப்படியும் நீங்கலாக, வேறு பணியூதியம் எதனையும்
பல்கலைக்கழகத்திடமிருந்து பெறுவதற்கு உரிமைகொண்டவர் ஆகார்:
வரம்புரையாக: இந்தக் கூறில் அடங்கிய எதுவும், உறுப்பினர் ஒருவர், தாம்
வகிக்கும் பதவி காரணமாகப் பெறுவதற்கு உரிமைகொண்டுள்ள வழக்கமான
பதவியூதியங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தடையூறு ஆவதில்லை;
(h) ஆட்சிக்குழுவின் பதவிவழி உறுப்பினரல்லாத பிற உறுப்பினர் ஒருவர்,
தம் பதவிக்காலம் கழிவுறுவதற்கு முன்பு, எச்சமயத்திலும், தமது உறுப்பினர்
பதவியிலிருந்து விலகிக்கொள்ள முனையலாம். அத்தகைய பதவி விலகலை
அந்த உறுப்பினர் எழுத்துவழிக் கடிதத்தில் வேந்தருக்குத் தெரிவித்தல் வேண்டும்.
அப்பதவி விலகல், அதனை வேந்தர் ஏற்றுக் கொள்ளும் தேதியிலிருந்து செல்திறம்
பெறும்.
25. ஆட்சிக்குழுவின் அதிகாரங்கள்.- (ஐ) ஆட்சிக்குழு பின்வரும்
அதிகாரங்களைக் கொண்டிருக்கும்:-
(1) நிலையமைவிதிகளை வகுத்தல்; அந்நிலையமை விதிகளைத்
திருத்துதல் அல்லது நீக்கறவு செய்தல்;
32
(2) நெறியமைவிதிகளை வகுத்தல்; அவற்றைத் திருத்துதல் அல்லது
நீக்கறவு செய்தல்;
(3) தான் தீர்மானிக்கும் முறையிலும் நோக்கங்களுக்காகவும், பிற
பல்கலைக்கழகங்கள், பிற கல்விசார் அதிகாரஅமைப்புகள், கல்லூரிகள்:
இவற்றுடன் ஒத்துழைத்தல்;
(4) தான் பொருத்தமெனக் கருதும் கல்வியறிவுத் துறைகளில் கற்பிக்கவும்,
பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்தல்;
(5) பல்கலைக்கழகத்தின் புலமைப்பட்டங்களுக்கு அல்லது சீரிதழ்களுக்கு
மாணவர்களைப் பயில்விப்பதற்கு ஏற்பாடு செய்துள்ள கல்லூரிகளுக்கு அல்லது
நிறுவனங்களுக்கு ஒப்பேற்பளிப்பதற்கான வரைகட்டுகளை வகுத்துரைத்தல்;
அந்த ஒப்பேற்பினை விலக்கிக்கொள்ளுதல்;
(6) ஆராய்ச்சி செய்திடவும், அறிவுச் செல்வத்தை வளர்க்கவும், பரவச்
செய்திடவும் ஏற்பாடு செய்தல்;
(7) பல்கலைக்கழகத்திற்குத் தேவையான விரிவுரையாளர் பதவிகள்,
இணைப்பேராசிரியர் பதவிகள், பேராசிரியர் பதவிகள், பிற ஆசிரியப்பதவிகள்
ஆகியவற்றை நிறுவித்தல்;
(8) பல்கலைக்கழகத்துடன் கல்லூரிகளை இணைப்பதற்கான
வரைகட்டுகளை வகுத்துரைத்தல்; கல்லூரிகளிலிருந்து இணைப்பை விலக்கிக்
கொள்ளுதல்;
(9) ஒரு கல்லூரியை எந்த முறையில், எந்த வரைகட்டுகளுக்கு உட்பட்டு
தன்னாட்சிக் கல்லூரி என்ற பெயரால் குறிப்பிடலாம் என்பதையும் அவ்வாறு
குறிப்பிடப்பட்டதை நீக்கம் செய்யலாம் என்பதையும் வகுத்துரைத்தல்;
(10) பல்கலைக்கழகக் கல்லூரிகள், இணைக்கப்பெற்ற கல்லூரிகள்,
ஒப்பேற்புப்பெற்ற கல்லூரிகள் ஆகியவற்றின் மாணவர்களுக்கு ஆட்சிப்பேரவை
தீர்மானிக்கின்றவாறு, விரிவுரைகள், கற்பித்தல் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்தல்:
கல்லூரிகளில் மாணவர்களாக இல்லாதவர்களுக்கும் விரிவுரைகள், கற்பித்தல்
ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்து அவர்களுக்குச் சீரிதழ்கள் வழங்குதல்;
(11) பட்டங்கள், புலமைப்பட்டங்கள், சீரிதழ்கள், பிற கல்விசார்
சிறப்புச்சீர்மைகள் ஆகியவற்றை நிறுவித்தல்;
(12) கீழ்க்கண்டவர்களுக்குப் பட்டங்கள், புலமைப்பட்டங்கள், சீரிதழ்கள், பிற
கல்விசார் சிறப்புச்சீர்மைகள் வழங்குதல்:-
33
(ஐ) பல்கலைக்கழகக் கல்லூரி அல்லது ஆய்வுக்கூடம் ஒன்றில் அல்லது
இணைக்கப்பெற்ற அல்லது ஒப்பேற்புப்பெற்ற கல்லூரி ஒன்றில், ஒப்பேற்புப்பெற்ற
ஒரு பாடவகைப் பயிலாறினைத் தொடர்ந்து பயின்றோ அவ்வாறு பயில்வதிலிருந்து
வகுத்துரைக்கப்பட்ட முறையில் விலக்களிக்கப்பட்டோ இருந்து,
பல்கலைக்கழகத்தின் வகுத்துரைக்கப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்;
(b) வகுத்துரைக்கப்பட்ட வரைகட்டுகளின்படி ஆராய்ச்சி செய்தவர்கள்;
(13) ஆட்சிக்குழு உறுப்பினர்களில் மூன்றில் இரு பகுதியினருக்குக்
குறையாதவர்களின் பறிந்துரையின்பேரில் மதிப்புறு பட்டங்களை அல்லது பிற
கல்விசார் சிறப்புச் சீர்மைகளை வழங்குதல்;
(14) மாணவர் விடுதிகளை நிறுவி, நடத்திவருதல்;
(15) ஆய்வு உதவித்தொகைகள், ஆய்வு பயண உதவித்தொகைகள்,
படிப்புதவித்தொகைகள், மாணவர் உதவித்தொகைகள், கல்லூரிக் கல்வி
உதவித்தொகைகள், புலமை உதவித்தொகைகள், பதக்கங்கள், பரிசுகள்
ஆகியவற்றை நிறுவித்தல்;
(16) கல்லூரிகளுக்கு ஒப்பேற்பளிக்கவும் இணைப்பளிக்கவும்,
பல்கலைக்கழகத்தின் தேர்வுகள், பட்டங்கள், சீரிதழ்கள் ஆகியவற்றிற்கு
அனுமதிக்கப்பெறுவதற்கும், பட்டதாரிகளைப் பதிவு செய்வதற்கும் அவ்வாறு
பதிவுசெய்ததைப் புதுப்பிப்பதற்கும், 4 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள
நோக்கங்கள் அனைத்திற்கும் அல்லது அவற்றுள் எதற்கும் விதிக்கப்படவேண்டிய
கட்டணங்களை வகுத்துரைத்தல்;
(17) ஆண்டறிக்கை, ஆண்டு கணக்குகள், நிதிமதிப்பிடுகள் ஆகியவற்றை
ஓர்வுசெய்து அவற்றின்மீது தான் பொருத்தமெனக் கருதும் நடவடிக்கையை
எடுத்தல்;
(18) பல்கலைக்கழக விரிவாக்கக் குழு ஒன்றை நிறுவி, நடத்தி வருதல்;
(19) வெளியீட்டுத் துறையகம், மாணவர் சங்கங்கள், வேலை வாய்ப்புத்
துறையகம், பல்கலைக்கழக உடற்பயிற்சி விளையாட்டுக் குழாங்கள் ஆகியவற்றை
நிறுவி நடத்திவருதல்;
(20) நிறுவனம் ஒன்றன் மேலாண்மையை ஏற்றுக்கொள்வதற்காகவும்,
அதன் சொத்துகளையும் கடப்பாடுகளையும் மேற்கொள்வதற்காகவும் அல்லது
இந்தச் சட்டத்தின் வகையங்களுக்கு முரணாக இல்லாத பிற நோக்கங்கள்
எவற்றுக்காகவும், மைய அரசுடனும் அல்லது மாநில அரசு எதனுடனும் அல்லது
ஒரு தனியார் நிறுவனத்துடன் உடன்படிக்கை எதனையும் செய்துகொள்ளுதல்;
34
(21) பல்கலைக்கழகத்தின். அதிகாரஅமைப்புகளுக்கான தேர்தல்
முறையினையும், பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேவை, ஆட்சிக்குழு, பிற
அதிகாரஅமைப்புகள் ஆகியவற்றின் கூட்டத்திற்கான நெறிமுறையினையும்,
பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை அல்லது பிற அதிகாரஅமைப்புகளினால்
அலுவல் நடத்தப் பெறுவதற்குத் தேவைப்படும். உறுப்பினர்களின்.
குறைவெண்ணையும் ஒழுங்குறுத்துகிற நிலையமை விதிகளையும் வகுத்தல்;
(22) பல்கலைக்கழக வரையிடத்திற்குள் உள்ள ஓர் இடத்தைப்
பல்கலைக்கழக மையமாக ஏற்பதற்கு அரசிற்குப் பரிந்துரைசெய்தல்;
(23) பல்கலைக்கழகத்தின். சொத்துகளையும் நிதியங்களையும்
வைத்திருத்தலும், கட்டாள்கை செய்தலும், நிருவகித்தலும்;
(24) பல்கலைக்கழகத்தின் தணியோர் இலச்சினையின் வடிவம் அதன்
பாதுகாவல், அதனைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து பணிப்புரை இடுதல்;
(25) இந்தச் சட்டம், நிலையமைவிதிகள், நெறியமைவிதிகள்,
ஒழுங்கமைவிதிகள் ஆகியவற்றிற்கிணங்க பல்கலைக்கழகம் தொடர்பான
பொருட்பாடுகள் அனைத்தையும் ஒழுங்குறுத்துதலும் தீர்மானித்தலும்;
(26) குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பில்
விடப்பட்டுள்ள சொத்துகள், நிகியங்கள் அனைத்தையும் நிருவகித்தல்;
(27) (a) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக
இணைப்பேராசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பல்கலைக்கழக
ஆசிரியர்கள் ஆகியோரை அமர்த்துதல்; அவர்களுடைய பதவியூதியங்கள்
எவையேனுமிருப்பின், அவற்றை நிருணயித்தல், அவர்களுடைய
கடமைகளையும், பணிவரைகட்டுகளையும் வரையறுத்தல்; தற்காலிகக்
காலியிடங்களை நிரப்புவதற்கு ஏற்பாடு செய்தல்;
(b) நிருவாகப் பணியிடங்களுக்கும் அவைபோன்ற பிற
பணியிடங்களுக்கும், அமர்த்துகை செய்வதற்கான முறையினைக்
குறித்துரைக்கும் நெறியமைவிதிகளை வகுத்தல்; அவர்களுடைய,
பதவியூதியங்கள் எவையேனுமிருப்பின், அவற்றை நிருணயித்தல் அவர்களுடைய
கடமைகளையும், பணி வரைகட்டுகளையும் வரையறுத்தல்; தற்காலிகக்
காலியிடங்களை நிரப்புவதற்கு ஏற்பாடு செய்தல்;
(28) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக
இணைப்பேராசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பல்கலைக்கழகத்தின்
ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் ஆகியோரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தலும்
பணியறவு செய்தலும்;
35
(29) பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்படும் கட்டளைகள், விருப்புறுதி
வழிக்கொடைகள், நன்கொடைகள், மானியங்கள், அசைவியல் மற்றும் நிலையியல்
சொத்துகளின் உரிமைமாற்றங்கள் ஆகியவற்றைப் பல்கலைக்கழகத்தின் சார்பில்
ஏற்றுக்கொள்ளுதல்:
வரம்புரையாக: அத்தகைய கட்டளைகள், விருப்புறுதிவழிக் கொடைகள்,
நன்கொடைகள், மானியங்கள், உரிமைமாற்றங்கள் ஆகியவை அனைத்தும்
ஆட்சிப்பேரவைக்கு அதன் அடுத்த கூட்டத்தில் அறிவிக்கப்படுதல் வேண்டும்;
(30) (i) பல்கலைக்கழகத்தின் சார்பாக, மைய அரசிடமிருந்து அல்லது மாநில
அரசு எதனிடமிருந்தும், அல்லது பொதுமக்களிடமிருந்து அல்லது மைய அரசிற்
அல்லது மாநில அரசு எதற்கும் சொந்தமான அல்லது அதன் கட்டாள் கையிலுள்ள
கூட்டுருமம் எதனிடமிருந்தும் கடன்களை எழுப்புதல்;
(ii) அரசாங்கத்தின் ஒப்பேற்புடன், பல்கலைக்கழகத்தின்.
நோக்கங்களுக்காக, பல்கலைக்கழகச் சொத்தினைப் பிணையமாக வைத்துக் கடன்
வாங்குதல்;
(31) பல்கலைக்கழக வரையிடத்திற்குள் உள்ள கல்லூரிகளைப்
பல்கலைக்கழகத்துடன் இணைத்தல்; கல்லூரிகளை ஒப்பேற்புப்பெற்ற
கல்லூரிகளாக ஏற்றல்;
(32) அரசின் ஒருங்கிசைவுடன், கல்லூரி எதனையும் தன்னாட்சிக் கல்லூரி
என்ற பெயரால் குறிப்பிடுதல்; அவ்வாறு குறிப்பிடப்பட்டதை நீக்கம் செய்தல்;
(33) பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பெறாத மாணவர் விடுதிகளுக்கு
ஏற்பளித்தல்; நெறியமைவிதிகளுக்கும், அவற்றின்படி விதிக்கப்பட்ட
வரைகட்டுகளுக்கும் இணங்க நடத்தப்பெறாத மாணவர்விடுதி எதற்குமான
ஏற்பளிப்பினை தற்காலிகமாக நீக்கிவைத்தல் அல்லது விலக்கிக்கொள்ளுதல்;
(34) பல்கலைக்கழகக் கல்லூரிகள், இணைக்கப்பெற்ற மற்றும்
ஒப்பேற்புப்பெற்ற கல்லூரிகள், மாணவர் விடுதிகள்: அனைத்தையும்
ஆய்வுசெய்வதற்கு ஏற்பாடு செய்தலும், அந்த ஆய்வுகளை நடத்தப் பணித்தலும்;
(35) பல்கலைக்கழகக் கல்லூரிகள், இணைக்கப்பெற்ற மற்றும்
ஒப்பேற்புப்பெற்ற கல்லூரிகள், மாணவர்விடுதிகள் ஆகியவற்றிலுள்ள
ஆசிரியர்களுக்கான தகுதிப்பாடுகளை வகுத்துரைத்தல்;
(36) ஆய்வு உதவித்தொகைகள், ஆய்வுப் பயண உதவித் தொகைகள்,
படிப்புதவித் தொகைகள், மாணவர் உதவித்தொகைகள், கல்லூரிக்கல்வி
36
உதவித்தொகைகள், புலமை உதவித்தொகைகள், பதக்கங்கள், பரிசுகள்
ஆகியவற்றை நிலையமை விதிகளுக்கிணங்க வழங்குதல்;
(37) வகுத்துரைக்கப்படும் கட்டணங்களை விதித்தலும் ஈட்டுதலும்;
(38) பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்துதல்; அத்தேர்வுகளின்
முடிவுகளுக்கு ஒப்பேற்பளித்து வெளியிடுதல்;
(39) பல்கலைக்கழகத்தில் மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பான, அல்லது
பல்கலைக்கழகத்தின். தேர்வுகளுக்குச் சமானமானவை என
ஏற்பளிக்கப்படவேண்டிய தேர்வுகளை வகுத்துரைக்கின்ற நெறியமைவிதிகளை
வகுத்தல்:
(40) பாடத்திட்டக் குழுக்களுக்கு உறுப்பினர்களை அமர்த்துதல்;
(41) () பாடத்திட்டக் குழுக்களின் பறிந்துரைகளை ஓர்வு செய்த பின்பு,
தேர்வாளர்களை அமர்த்துதல்; மற்றும்
(ii) அவர்களுடைய பதவியூதியங்களை நிருணயித்தல்;
(42) பல்கலைக்கழக மாணவர்களின் உறைவிடம், ஒழுக்கம் ஆகியவற்றை
மேற்பார்வையிட்டுக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்; உடல்நலம், நல்வாழ்வு
ஆகியவற்றை அவர்கள் எய்துறும் பொருட்டுக் கல்லூரிகளின் வாயிலாக
ஏற்பாடுகள் செய்தல்;
(43) பல்கலைக்கழக மையங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள்,
ஆய்வுக்கூடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள்,
பல்கலைக்கழகத்தினால் நிறுவப்பெற்ற அல்லது நடத்தப்பெற்றுவரும் பிற
நிறுவனங்கள் ஆகியவற்றை நிறுவித்தலும் நிருவகித்தலும்;
(44) பல்கலைக்கழகத்தினால் நிறுவப்பெற்ற மாணவர் விடுதிகளை
நிருவகித்தல்;
(45) பல்கலைக்கழக விரிவாக்கக்குழுவின் செயற்பாட்டினை
ஒழுங்குறுத்துதல்;
(46) பல்கலைக்கழகத்தினால் நிறுவப்பெற்ற வெளியீட்டுத் துறையகம்,
மாணவர் சங்கங்கள், வேலைவாய்ப்புத் துறையகம், பல்கலைக்கழக உடற்பயிற்சி
விளையாட்டுக் குழாங்கள் ஆகியவற்றை நிருவகித்தல்;
(47) பல்கலைக்கழகத்தில் பாடங்கற்பிக்கும், பயிற்றுவிக்கும் முறையை
மறுஆய்வு செய்தல்;
37
(48) பல்கலைக்கழகத்திற்குள் ஆராய்ச்சியை மேம்படுத்துதல்; அத்தகைய
ஆராய்ச்சி குறித்து அறிக்கைகளை அவ்வப்போது வேண்டுறுத்துதல்;
(49) இந்தச் சட்டத்தினால் அல்லது நிலையமைவிதிகளினால்,
நெறியமைவிதிகளினால் அல்லது ஒழுங்கமைவிதிகளினால் தனக்கு
வழங்கப்பெறும் அல்லது விதிக்கப்பெறும் பிற அதிகாரங்களைச் செலுத்துகலும் பிற
கடமைகளைப் புரிதலும்; மற்றும்
(50) (ஐ தனது அதிகாரங்களில் எதனையும், துணைவேந்தருக்கோ தன்
உறுப்பினர்களிலிருந்து அமைந்த ஒரு குழுவிற்கோ, நிலையமை
விதிகளுக்கிணங்க அமர்த்தப்பெற்ற ஒரு குழுவிற்கோ ஒப்படைவு செய்தல்;
(b) ஆட்சிக்குழு, கல்விசார் பொருட்பாடு எதனையும் பொறுத்து,
கல்விசார் நிலைக்குழுவுடன் கலந்தாய்வு செய்வது அவசியமெனக் கருதுமிடத்து,
அவ்வாறு கலந்தாய்வு செய்யலாம்.
26. ஆட்சிக்குழுவின் கூட்டம்.- (1) ஆட்சிக்குழு, வகுத்துரைக்கப்படும்
காலங்களிலும், இடங்களிலும் கூடும்: மேலும் (2), (3) ஆகிய உட்பிரிவுகளின்
வகையங்களுக்கு உட்பட்டு, அதன். கூட்டங்களுக்கான குறைவெண்
உள்ளடங்கலாக அதன் கூட்டங்களில் அலுவல்களை நடத்துவதைப் பொறுத்து
வகுத்துரைக்கப்படும் நெறிமுறைவிதிகளைப் பின்பற்றிவரும்:
வரம்புரையாக: ஆட்சிக்குழு குறைந்தது மூன்று மாதத்திற்கு
ஒருமுறையேனும் கூடுதல் வேண்டும்.
(2) ஆட்சிக்குழுவின் கூட்டத்திற்கு. துணைவேந்தரோ அவர்
வாராதிருக்கும்போது, வந்திருக்கும் உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படும்
உறுப்பினர் ஒருவரோ தலைமை வகிப்பார்.
(3) ஆட்சிக்குழுவின் கூட்டம் எதிலும் எழும் பிரச்சினைகள் அனைத்தும்,
வந்திருந்து, வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பாண்மையினரின் வாக்குகள்
மூலம் தீர்மானிக்கப்படும்; மேலும், வாக்குகள் சமமாக இருக்கும் நேர்வில்,
துணைவேந்தர் அல்லது, நேர்வுக்கேற்ப தலைமை வகிக்கும் உறுப்பினர்
இரண்டாவது வாக்கு அல்லது அறுதிசெய்வாக்கு ஒன்றினைப் பெற்றிருப்பார்;
அதனை அவர் அளித்தலும் வேண்டும்.
(34) (ஐ) ஆட்சிக்குழு, அதன் கூட்டம் ஒன்றில் ஓர்வு செய்யப்படும் பொருள்
எதிலும் சிறந்த தனியறிவு அல்லது செயலுறுபட்டறிவு கொண்டுள்ள
எவரொருவரையும் கலந்தாய்வு செய்திடும் நோக்கத்திற்கென அக்கூட்டம் எதிலும்.
கலந்து கொள்வதற்கு அழைக்கலாம். அவர், அத்தகைய கூட்ட நடவடிக்கையில்
38
உரையாற்றலாம் பிறவாறு பங்குபெறலாம்; ஆனால், வாக்களிப்பதற்கு அவர் உரிமை
கொண்டவர் ஆகார்.
(b) அவ்வாறு அழைக்கப்பெறும் நபர், ஆட்சிக்குழுவின் ஓர்
உறுப்பினருக்கு அனுமதிக்கப்பெறுவதாகும் நாட்படிக்கும், பயணப் படிக்கும்
உரிமைகொண்டவர் ஆவார்.
27. ஆண்டறிக்கை. பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையினை
ஆட்சிக்குழு தயார் செய்து நிலையமைவிதிகளினால் வகுத்துரைக்கப்படும்
தேதியன்று அல்லது அதற்கு முன்பு ஆட்சிப்பேரவைக்கு அனுப்புதல் வேண்டும்;
அதனை ஆட்சிப்பேரவை அதன் அடுத்த ஆண்டு கூட்டத்தில் ஓர்வு செய்தல்
வேண்டும் அதன் மீதான தீர்மானங்களை ஆட்சிப்பேரவை நிறைவேற்றி, அவற்றை
ஆட்சிக் குழுவிற்கு அனுப்பிவைக்கலாம்: அதற்கிணங்க ஆட்சிக்குழு
நடவடிக்கை எடுத்தல் வேண்டும். ஆட்சிக்குழு தான் எடுத்த நடவடிக்கை குறித்து
ஆட்சிப் பேரவைக்குத் தெரிவித்தல் வேண்டும். அந்த அறிக்கையின் ஒரு
படியினை, அதன்மீதான ஆட்சிப்பேரவையின் தீர்மானங்கள்
எவையேனுமிருப்பின், அவற்றின் ஒரு படியுடன் சேர்த்து, தகவலுக்காக அரசிற்கு
அனுப்புதல் வேண்டும்.
28. ஆண்டு கணக்குகள்.- (1) பல்கலைக்கழகத்தின் ஆண்டு கணக்குகளை
அரசு பணிக்கும் ஆய்வுக்கும் தணிக்கைக்கும் அனுப்புதல் வேண்டும்.
(2) அத்தகைய தணிக்கையில் எழுப்பப்படும் மறுப்புரைகளுக்கிணங்க
பல்கலைக்கழகம் நேர்செய்தலும், தணிக்கை அறிக்கையின்மீது அரசு விடுக்கும்
பணிப்புரைகளை நிறைவேற்றுதலும் வேண்டும்.
(3) கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதும், நெறியமைவிதிகளினால்
வகுத்துரைக்கப்படும் முறையில் ஆட்சிக்குழுவினால் வெளியிடப்படும்
கணக்குகளின் படிகளை ஆட்சிப்பேரவைக்கு அதன் அடுத்த கூட்டத்திலும்
அரசிற்கு அது வெளியிடப்பட்ட மூன்று மாதத்திற்குள்ளும் அனுப்புதல் வேண்டும்.
அத்தியாயம் V
புலங்கள், பாடத்திட்டக் குழுக்கள், நிதிக்குழு மற்றும் பிற அதிகார அமைப்புகள்.
29. புலங்களின் அமைப்பும் செயற்பணிகளும்.- (1) கலைகள், அறிவியல்,
சட்டம், மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல், கல்வியியல்,
வணிகவியல், இந்திய மொழிகள் மற்றும் பிற மொழிகள், இந்திய
மருத்துவமுறைகள், நுண்கலைகள் ஆகியவற்றின் புலங்களும்,
நிலையமைவிதிகளினால் வகுத்துரைக்கப்படும் பிற புலங்களும்
பல்கலைக்கழகத்தில் அடங்குவதாகும்.
39
(2) புலங்களின் அமைப்பும், செயற்பணிகளும், பிற அனைத்து வகைகளிலும்,
ஒழுங்கமைவிதிகளினால் வகுத்துரைக்கப்படு கிறபடி இருந்துவரும்.
(3) (2) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், கல்விசார்
நிலைக்குழுவானது, ஆட்சிக்குழுவின் பரிந்துரைகளின்பேரில்,
பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் எவரையும் ஒரு புலத்தின் உறுப்பினராக
அமர்த்தலாம்.
(4) புலம் ஒவ்வொன்றும் நிலையமவிதிகளினால் வகுத்துரைக்கப்படும்
பாடங்கற்பிக்கும் துறைகளைக் கொண்டிருக்கும்.
30. பாடத்திட்டக் குழுக்கள்.- பாடங்கற்பிக்கும் துறை ஒவ்வொன்றுடனும்.
இணைக்கப்பட்டதாகப் பாடத்திட்டக் குழுக்கள் இருந்துவரும். அந்தப் பாடத்திட்டக்
குழுக்களின் அமைப்பும் அதிகாரங்களும் நெறியமைவிதிகளினால்
வகுத்துரைக்கப்படு கிறபடி இருந்துவரும்.
31. பிற அதிகார அமைப்புகளின் அமைப்பு.- பல்கலைக்கழகத்தின் அதிகார
அமைப்புகள் என நிலையமை விதிகளினால் விளம்பப்படும் பிற குழுமங்களின்
அமைப்பு வகுத்துரைக்கப்படு கிறபடி இருந்துவரும்.
32. நிதிக்குழு- (1) நிதிக்குழு, பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்டிருக்கும்:-
(i) துணை வேந்தர்;
(i) நிதித்துறைப் பொறுப்பேற்றுள்ள அரசுச் செயலாளர்;
(7) கல்வித்துறைப் பொறுப்பேற்றுள்ள அரசுச் செயலாளர்;
0) ஆட்சிக்குழுவினால், தனது உறுப்பினர்களுக்குள் நியமனஞ்
செய்யப்பெறும் மூன்று உறுப்பினர்கள்; இவர்களில் ஒருவர் ஒரு
பேராசிரியராகவும், ஒருவர் வேந்தரால் ஆட்சிக்குழுவிற்கு நியமனஞ்
செய்யப்பெறும் நபராகவும் இருப்பார்.
(2) (1) ஆம் உட்பிரிவி (0) ஆம் கூறு அல்லது (i) ஆம் கூறில்
சுட்டப்பட்டுள்ள அலுவலர், நிதிக்குழுவின்: கூட்டம் எதற்கும்
எக்காரணத்தாலேனும் வர இயலாதிருப்பாராயின் அவர் தொடர்புடைய துறையைச்
சேர்ந்த அரசுத் துணைச் செயலாளர் பதவிப்படி நிலைக்குக் குறையாத அலுவலர்
எவரையும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனுப்பி வைக்கலாம்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பெறும் அலுவலர், அக்குழுவின் விவாதங்களில் பங்கு
கொள்வதற்கும் வாக்களிப்பதற்கும் உரறிமையுடையவர் ஆவார்.
40
(3) நிதிக்குழுவிற்கு, துணைவேந்தர் பதவிவழித் தலைவராகவும், நிதி
அலுவலர் பதவிவழிச் செயலாளராகவும் இருந்து வருவர்.
(4) நிதிக்குழுவின் பதவிவழி உறுப்பினர்களல்லாத பிற உறுப்பினர்கள்:
அனைவரும், மூன்றாண்டு கால அளவிற்குப் பதவி வகித்துவருவர்.
(5 கணக்குகளை ஆய்வு செய்வதற்கும், செலவினத்திற்கான
செயற்குறிப்புகளைக் கூர்ந்தாய்வு செய்வதற்கும் நிதிக்குழு ஒவ்வோராண்டும்
குறைந்தது இருமுறை கூடும்.
(6) நிதி அலுவலரால் தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஆண்டு
கணக்குகள். நிதிக்குழுவின், ஓர்வுக்காகவும் கருத்துரைகளுக்காகவும்
நிதிக்குழுவின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; அதன்பின்பு அவை,
ஒப்பேற்பிற்காக ஆட்சிக் குழுவிற்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
(7) பல்கலைக்கழகத்தின் வருமானத்தையும், வருவாய் ஆதாரங்களையும்,
அடிப்படையாகக் கொண்டு, ஓராண்டிற்கான மொத்தத் தொடர்வுறு
செலவினத்திற்கும், மொத்தத் தொடர்வுறாச் செலவினத்திற்குமான வரம்புகளை
நிதிக்குழு பரிந்துரை செய்யும்; பல்கலைக்கழகத்தின் வருமானம், வருவாய்
ஆதாரங்கள் என்பதில், ஆக்கப்பணிகளைப் பொறுத்தவரைக் கடன்கள் மூலம்
கிடைக்கும் தொகைகளும் உள்ளடங்கலாம்.
(8) நிதிக்குழு.-
(ஐ) பல்கலைக்கழகத்தின் நிதிநிலையினை அவ்வப்போது மறு ஆய்வு
செய்யும்;
(b) ஆண்டு நிதிமதிப்பீடுகளில் வகை செய்யப்பட்டிராத முதலீடு அல்லது
செலவினம் உள்ளடங்கிய அல்லது ஆண்டு நிதிமதிப்பிடுகளில்
வகைசெய்யப்பட்டுள்ள தொகைக்கு மேற்பட்ட செலவினம் உள்ளடங்கிய
செயற்குறிப்பு ஒவ்வொன்றின் மீதும் ஆட்சிக்குழுவிற்குப் பரிந்துரை செய்யும்;
(௦) பல்கலைக்கழகம், கல்லூரிகள் ஆகியவற்றின் கணக்குகளை வைத்து
வருவதற்கான முறைகளையும் நெறிமுறைகளையும் படிவங்களையும்
வகுத்துரைக்கும்;
(d) பல்கலைக்கழகத்தின் நிதிகள். தொடர்பான அனைத்துப்
பொருட்பாடுகள் குறித்தும் ஆட்சிக்குழுவிற்குப் பரிந்துரை செய்யும்; மற்றும்
(6) வகுத்துரைக்கப்படும் பிற செயற்பணிகளை ஆற்றிவரும்.
(9) நிதி அலுவலரால் தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நிதிமதிப்பீடுகள்
நிதிக்குழுவின் ஓர்வுக்காகவும், கருத்துரைகளுக்காகவும் அதன் முன்பு
41
வைக்கப்படுதல் வேண்டும். நிதிக்குழுவினால் மாற்றமைவு செய்யப்பட்ட
மேற்சொன்ன மதிப்பீடுகள் பிண்னர் ஆட்சிக்குழுவின் ஓர்வுக்காக அதன்முன்பு
வைக்கப்படுதல் வேண்டும். ஆட்சிக்குழு, நிதிக்குழு செய்துள்ள மாற்றமைவுகளை
ஏற்றுக் கொள்ளலாம்.
அத்தியாயம் VI
நிலையமைவிதிகள், நெறியமைவிதிகள் மற்றும் ஒழுங்கமைவிதிகள்.
33. நிலையமைவிதிகள்.- இந்தச் சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டு,
நிலையமைவிதிகள், பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்கும் அல்லது
அவற்றுள் எதற்கும் வகை செய்யலாம்:-
(i) பட்டங்கள் வழங்குவதற்கென பட்டமளிப்பு விழாவை நடத்துதல்;
(0 மதிப்புறு பட்டங்களையும், கல்விசார் சிறப்புச்சீர்மைகளையும் வழங்குதல்;
00 பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளின் அமைப்பு, அதிகாரங்கள்
மற்றும் செயற்பணிகள்;
(iv) அதிகார அமைப்புகளின் உறுப்பினர் பதவிகளில் காலியிடங்களை
நிரப்புவதற்கான முறை;
V) அதிகார அமைப்புகள், அவற்றின் குழுக்கள் ஆகியவற்றின்
உறுப்பினர்களுக்கு அளிக்கப்படவேண்டிய படித்தொகைகள்;
(vi) அதிகார அமைப்புகளின் கூட்டங்களில் அலுவல்களை நடத்துவதற்கான
குறைவெண் உள்ளடங்கலாக அக்கூட்டங்களுக்கான நெறிமுறை;
0) அதிகாரஅமைப்புகளின் முடிபுகளைக் கொண்ட ஆணைகளுக்கு
உறுதியொப்பம் அளித்தல்;
(viii) பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும்
பாடங்கற்பிக்கும் துறைகளை உருவாக்குதல்;
09) பல்கலைக்கழகத்தின் வேந்தர், இணைவேந்தர் அல்லாமல் பிற
அலுவலர்களின் பதவிக்காலம், அவர்களை அமர்த்தும் முறை மற்றும் அவர்களின்
பணிவரைகட்டுகள்;
(X) பல்கலைக்கழகத்தினால் பணியமர்த்தப்பெறும் ஆசிரியர்கள், பிற நபர்கள்
ஆகியோரின் தகுதிப்பாடுகள்;
42
(0) பல்கலைக்கழகத்தினால் பணியமர்த்தப்பெறும் ஆசிரியர்கள், பிற நபர்கள்:
ஆகியோரை வகைப்படுத்துதல், அவர்களை அமர்த்தும்முறை மற்றும் அவர்களின்
பணிகுறித்த வரையுரைகளையும் வரைகட்டுகளையும் தீர்மானித்தல்;
ஸ் பல்கலைக்கழகத்தினால் பணியமர்த்தப்பெறும் அலுவலர்கள்,
ஆசிரியர்கள், பிறநபர்கள் ஆகியோரின் நலனுக்காக, ஓய்வூதியம், பணிக் கொடை.
காப்பீடு அல்லது வருங்கால வைப்புநிதியம் ஏற்படுத்துதல்;
(00) ஆய்வு உதவித்தொகைகள், ஆய்வுப் பயண உதவித்தொகைகள்,
படிப்புதவித் தொகைகள், மாணவர் உதவித்தொகைகள், கல்லூரிக்கல்வி
உதவித்தொகைகள், புலமை உதவித் தொகைகள், பதக்கங்கள், பரிசுகள்
ஆகியவற்றை நிறுவுதல் மற்றும் அவற்றை வழங்குவதற்கான வரைகட்டுகள்;
009 பயில்வகைக்கூடங்கள், மாணவர் விடுதிகள், ஆய்வுக்கூடங்கள்:
ஆகியவற்றை நிறுவி நடத்திவருதல்;
பே) பயில்வகைக்கூடங்களிலும், மாணவர் விடுதிகளிலும் பல்கலைக்கழக
மாணவர்கள் உறைவதற்கான வரைகட்டுகள்; அவ்வாறு உறைவதற்குக்
கட்டணங்களும் பிற செலவுத்தொகைகளும் விதித்தல்;
(xvi) பட்டதாரிகளைப் பதிவுசெய்வதற்கான வரைகட்டுகள்; அதற்கான
பதிவேட்டினை வைத்துவருதல்;
(xvii) ஒப்பேற்புப்பெறும் கல்லூரிகளுக்கு ஏற்பளிப்பதற்கும்,
இணைக்கப்பெறும் கல்லூரிகளைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்குமான
வரைகட்டுகள்.
ரி) ஒரு கல்லூரியைத் தன்னாட்சிக் கல்லூரி என்ற பெயரால்
குறிப்பிடூவதற்குரிய அல்லது அத்தகைய கல்ஜூரி அவ்வாறு குறிப்பிடப்பட்டதை
நீக்கம் செய்வதற்குரிய முறையும் வரைகட்டுகளும்; கல்விசார் நிலைக்குழு,
பணியாளர் மன்றங்கள், பாடத்திட்டக் குழுக்கள், தேர்வாளர் குழுக்கள் ஆகியவற்றை
அமைத்தல் அல்லது மறுஅமைப்புச் செய்தல், அவற்றின் அதிகாரங்கள், கடமைகள்
ஆகியவை உள்ளடங்கலாக தன்னாட்சிக் கல்லூரிகளின் நிருவாகம் சார்ந்த
பொருட்பாடுகள்;
(XiX) பல்கலைக்கழக அதிகார அமைப்புகளிடம் அல்லது அலுவலர்களிடம்
உற்றமைந்துள்ள அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்;
0௦0) நிலையமைவிதிகள் வேண்டுறுத்துகின்றவாறு வகுத்துரைக்கப்படும்
அல்லது நிலையமைவிதிகள் வகுத்துரைக்கும் பிற பொருட்பாடுகள்.
43
34. நிலையமை விதிகள் எவ்வாறு வருக்கப்படுகின்றன.-
(1) -விட்டுவிடப்பட்டது-
(2) ஆட்சிக்குழு, இந்தப் பிரிவில் இதன்பின்பு வகைசெய்யப்பட்டுள்ள
முறையில், அவ்வப்போது நிலையமைவிதிகளை வகுக்கலாம். அந்நிலையமை
விதிகளைத் திருத்தலாம் அல்லது நீக்கறவு செய்யலாம்.
(3) கல்விசார் நிலைக்குழு, ஒரு நிலையமைவிதிகளின் வரைவினை
நிதிக்குழுவினால் நிறைவேற்றப்படுவதற்காக அதனிடம் முண்மொழியலாம்; அந்த
வரைவினை ஆட்சிக்குழு அதன் அடுத்த கூட்டத்தில் ஓர்வு செய்யும்:
வரம்புரையாக: கல்விசார் நிலைக்குழு, கல்விசார் அலுவற்பாடுகள் அல்லாத
பிற பொருட்பாடுகள் தொடர்பான நிலையமைவிதி எவற்றின் திருத்தம் எதனின்
வரைவினையும் முன்மொழிதல் ஆகாது.
(4) கல்விசார் நிலைக்குழுவினால் (3) ஆம் உட்பிரிவின்படி
முன்மொழியப்படும் வரைவினை ஆட்சிக்குழு ஓர்வு செய்யலாம், மேலும் அந்த
நிலையமைவிதியின் வரைவினை நிறைவேற்றவோ ஏற்க மறுக்கவோ
திருத்தங்களுடன் அல்லது திருத்தங்களின்றி, மறு ஓர்வுக்கான கல்விசார்
நிலைக்குழுவிற்குத் திருப்பியனுப்பவோ செய்யலாம்.
(5) வ ஆட்சிக்குழு உறுப்பினர் எவரும் ஒரு நிலையமைவிதியின்
வரைவினை ஆட்சிக்குழுவிடம் முன்மொழியலாம். அந்த வரைவினை
ஆட்சிக்குழு ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அது கல்விசார் நிலைக்குழுவின்
நோக்கெல்லைக்குள் வராத ஒரு பொருட்பாடு தொடர்பானதாக இருக்குமாயின்,
அதனை ஏற்க மறுக்கலாம்;
(b) அத்தகைய வரைவு, கல்விசார் நிலைக்குழுவின்
நோக்கெல்லைக்குள் வருகின்ற ஒரு பொருட்பாடு தொடர்பானதாக இருக்கும்
நேர்வில், ஆட்சிக்குழு அதனை, கல்விசார் நிலைக்குழுவின் ஓர்வுக்காக
அனுப்பிவைக்கும்; அந்தக்குழு (3) ஆம் உட்பிரிவின் வரம்புரையில் கூறப்பட்டுள்ள
நடைமுறையினைப் பின்பற்றிய பின்னர், தான் அந்த வரைவிற்கு
ஒப்பேற்பளிக்கவில்லை என்று ஆட்சிக்குழுவிற்குத் தெரிவிக்கலாம் அல்லது
கல்விசார் நிலைக்குழு ஒப்பேற்பளிக்கும் வடிவத்தில் அந்த வரைவினைத்
ஆட்சிக்குழுவிற்குப் பணிந்தனுப்பலாம். ஆட்சிக்குழு அந்த வரைவினைத்
திருத்தத்துடன் அல்லது திருத்தமின்றி நிறைவேற்றலாம் அல்லது ஏற்க
மறுக்கலாம்.
(6) _ஆட்சிக்குழுவினால் நிறைவேற்றப்பட்ட ஒரு நிலையமைவிதி,
வேந்தருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்: அவர் அதற்கு ஏற்பிசைவளிக்கலாம்
44
அல்லது ஏற்பிசைவளிக்க மறுக்கலாம். ஆட்சிக்குழுவினால் ஒரு
நிறைவேற்றப்பட்ட ஒரு நிலையமைவிதி அதற்கு வேந்தர் ஏற்பிசைவளிக்கும்
வரையில் செல்லுந்தண்மை பெறாது.
35. நெறியமைவிதிகள்.- இந்தச் சட்டத்தின் வகையங்களுக்கும்
நிலையமைவிதிகளுக்கும் உட் பட்டு, நெறியமைவிதிகள் பின்வரும் செய்யலாம்
பொருட்பாடுகள் அனைத்திற்கும் அல்லது அவற்றுள் எதற்கும் வகைசெய்யலாம்:-
() பல்கலைக்கழகத்திலும், அதன் ஒப்பேற்புப்பெற்ற அல்லது அதனுடன்
இணைக்கப்பெற்ற கல்லூரிகளிலும் மாணவர்களைச் சேர்த்தல் பல்கலைக்கழகக்
கல்லூரிகளிலும், ஆய்வுக் கூடங்களிலும் கட்டணங்கள் விதித்தல்;
(i) பல்கலைக்கழகத்தின் பட்டங்கள், புலமைப்பட்டங்கள், சீரிதழ்கள், பிற
கல்விசார் சிறப்புச்சீர்மைகள் ஆகிய அனைத்தையும் பெறுவதற்கு வழிசெய்கிற
பாடவகைப் பயிலாறுகள்;
(1) பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உறைவிடம் குறித்த வரைகட்டுகள்;
பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பெற்றுவரும் மாணவர் விடுதிகளில்
உறைவதற்கான கட்டணங்கள் விதித்தல்;
(iv) பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பெற்றுவராத மாணவர் விடுதிகளுக்கு
ஏற்பளிப்பதற்கான வரைகட்டுகள்;
(V) பல்கலைக்கழகத்தின் பட்டங்கள், புலமைப்பட்டங்கள், சீரிதழ்கள், பிற
கல்விசார் சிறப்புச்சீர்மைகள் ஆகியவற்றைப் பெறுவதற்கு வழிசெய்கிற பாடவகைப்
பயிலாறுகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான வரைகட்டுகள்;
(vi) பல்கலைக்கழகத்தின். தேர்வுகளை நடத்துதல்; அத்தகைய
தேர்வுகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வரைகட்டுகள்;
ரி) தேர்வுகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக விலக்களிக்கும்
முறை:
0) தேர்வுக்குழுக்களையும், தேர்வாளர்களையும் அமர்த்துவதற்கான
வரைகட்டுகள் மற்றும் அமர்த்தும் முறை; மற்றும் அவர்களின் கடமைகள்;
(iX) பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒழுக்கத்தை நிலைநாட்டுதல்;
(x) பாடவகைப் பயிலாறுகள், ஆராய்ச்சி, பரிசோதனைகள், செய்முறைப்
பயிற்சி ஆகியவற்றிற்கும் பல்கலைக்கழகத்தின் பட்டங்கள், புலமைப் பட்டங்கள்,
சீரிதழ்கள், பிற கல்விசார் சிறப்புச்சீர்மைகள் ஆகியவற்றிற்கான தேர்வுகளுக்கு
அனுமதிக்கப்பெறுவதற்கும் விதிக்கப்பட வேண்டிய கட்டணங்கள்;
45
ல் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான தகுதிப்பாடுகள் மற்றும்
பதவியூதியங்கள்;
00. இதன்பின்பு நிலையாகப் பணியமர்த்தம் செய்யப்படுபவர்கள்,
ஒப்பேற்புப்பெற்ற கல்லூரிகளிலும், இணைக்கப்பெற்ற கல்லூரிகளிலும், மாணவர்
விடுதிகளிலும் கல்வி கற்பிப்பதற்குத் தகுதிப்பாடுடையவர்களை
ஏற்பளிக்கப்பெறுவதற்கான வரைகட்டுகள்; மற்றும்
641] நெறியமைவிதிகளால் வகைசெய்யப்படும். எனவோ,
வகைசெய்யப்படலாம் எனவோ இந்தச் சட்டம் அல்லது நிலையமைவிதிகள்
வேண்டுறுத்தும் பிற பொருட்பாடு எதுவும்.
36. நெறியமைவிதிகள் எவ்வாறு வகுக்கப்படுகின்றன.- (1)
நெறியமைவிதிகளை வகுக்கும்போது ஆட்சிக்குழுப் பின்வரும் அதிகார
அமைப்புகளைக் கலந்தாய்வு செய்தல் வேண்டும்:-
(i) அத்தகைய நெறியமைவிதிகள் தேர்வாளர்களின் அமர்த்துகை,
கடமைகள் பற்றியனவாக இருக்குமாயின், பாடத்திட்டக் குழுக்கள்; மற்றும்
(i) தேர்வுகளை நடத்துதல் அல்லது தேர்வுகளின் தரநிலை, அல்லது
மாணவர்கள் உறைவிடம் குறித்த வரைகட்டுகள் பற்றியனவாக அவை
இருக்குமாயின், கல்விசார் நிலைக்குழு.
(2) ஆட்சிக்குழுவினால் வகுக்கப்பெறும் தநெறியமைவிதிகள் அனைத்தும்,
அது பணிக்கின்ற தேதியிலிருந்து செல்திறம் பெறும்; ஆனால், அவ்வாறு
வகுக்கப்பெறும் நெறியமைவிதி ஒவ்வொன்றும், கூடியவிரைவில், வேந்தருக்கும்
ஆட்சிப்பேரவைக்கும் அனுப்பப்பெறுதல் வேண்டும். ஆட்சிக்குழு அதனை
அடுத்துப் பின்வரும் தனது கூட்டத்தில் ஓர்வு செய்தல் வேண்டும்.
(3) நெறியமைவிதி எதனின் செயற்பாட்டினையும் அது பற்றி ஓர்வு
செய்யதற்கு ஆட்சிப்பேரவை ஒரு வாய்ப்பினைப் பெறும்வரையில் தற்காலிகமான
நிறுத்திவைக்குமாறு வேந்தர் பணிக்கலாம்.
37. ஒழுங்கமைவிதிகள் எவ்வாறு வகுக்கப்படுகின்றன.- (1) கல்விசார்
நிலைக்குழுவானது, இந்தச் சட்டம், நிலையமைவிதிகள், நெறியமைவிதிகள்:
ஆகியவற்றிற்கு இணங்கிய வகையில் அவற்றின்படி தனக்குக்
குறித்தளிக்கப்பெற்றுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்காக,
ஒழுங்கமைவிதிகளை வகுக்கலாம்.
(2) அத்தகைய ஒழுங்கமைவிதிகள் அனைத்தும், கல்விசார் நிலைக்குழு
பணிக்கின்ற தேதியிலிருந்து செல்திறம் பெறும்; ஆனால், அவ்வாறு
46
வகுக்கப்பெறும் ஒழுங்கமைவிதி ஒவ்வொன்றும் கூடியவிரைவில்
ஆட்சிப்பேரவையின் அடுத்துப் பின்வரும் கூட்டத்தில் ஓர்வு செய்யப்படுவதற்காக
அதற்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் VII
மாணவர்களை அனுமதித்தலும் அவர்களுக்கான உறைவிடமும்.
38. பல்கலைக்கழகப் பயிலாறுகளில் சேர்த்தல்.- (1) பல்கலைக்கழகத்தின்
பட்டங்கள், புலமைப்பட்டங்கள் அல்லது சீரிதழ்கள் இவற்றின் தேர்வுகளுக்கு
அனுமதி பெறுவதற்கான பாடவகைப் பயிலாறு எதிலும், ஒருவர்,-
(i) அதற்கென வகுத்துரைக்கப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராகவும்,
(0 பல்கலைக்கழகத்தினால் வகுத்துரைக்கப்படும் பிற வரைகட்டுகளை
நிறைவுசெய்கிறவராகவும்
இருந்தாலன்றி, அவர் சேர்க்கப்பெறுதல் ஆகாது.
(2) பல்கலைக்கழகத்தின் ஒரு தேர்வுக்கான மாணவர் ஒவ்வொருவரும்,
கல்விசார் நிலைக்குழுவின் பரிந்துரையின்பேரில், ஆட்சிக்குழுவினால்
பிறப்பிக்கப்படும் ஒரு தனியுறு ஆணையின்வழி இந்த உட்பிரிவின்
வகையங்களிலிருந்து விலக்களிக்கப்பெற்றிருந்தாலன்றி, பல்கலைக்கழகக்
கல்லூரியின் அல்லது ஆய்வுக்கூடத்தின் அல்லது இணைக்கப்பெற்ற அல்லது
ஒப்பேற்புப்பெற்ற ஒரு கல்லூரியின் உறுப்பினர் பட்டியலில்
சேர்த்துக்கொள்ளப்பெறுதல் வேண்டும். அத்தகைய விலக்களிப்பு எதுவும்,
ஆட்சிக்குழு பொருத்தமெனக் கருதும் வரைகட்டுகளுக்கு உட்பட்டு
வழங்கப்பெறலாம்.
(3) (2 ஆம் உட்பிரிவின் வகையங்களிலிருந்து விலக்களிக்கப்பெற்றுள்ள
மாணவர்களும், வகுத்துரைக்கப்படும் வரைகட்டுகளுக்கிணங்க பட்டம்
பெறுவதற்கான பாடவகைப் பயிலாறுகள் அல்லாத பாடவகைப் பயிலாறுகளில்
சேர்க்கப் பெறும் மாணவர்களும் பல்கலைக்கழகத்தின் கல்லூறி சாரா
மாணவர்களாக இருப்பர்.
39. பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு அனுமதித்தல்.- தேர்வுக்கான மாணவர்
எவரும், பல்கலைக்கழகக் கல்லூரியின், அல்லது ஆய்வுக்கூடத்தின், அல்லது
இணைக்கப்பெற்ற அல்லது ஒப்பேற்புப்பெற்ற கல்லூரி உறுப்பினர் பட்டியலில்
சேர்த்துக்கொள்ளப் பெற்றிருந்து, அதற்கான ஒழுங்கமைவிதிகளின்படி
வேண்டுறுத்தப்படும் வருகைப்பதிவு குறித்த வேண்டுறுத்தங்களை அவர் நிறைவு
செய்திருந்தாலன்றி, அல்லது பட்டியலில் சேர்த்துக்கொள்ளப் பெறுதல் அல்லது
47
வருகைப்பதிவு அல்லது இரண்டும் பற்றிய வேண்டுறுத்தங்களிலிருந்து கல்விசார்
நிலைக்குழுவின் பரிந்துரையின் பேரில், ஆட்சிக்குழுவினால் பிறப்பிக்கப்படும் ஓர்
ஆணையின்வழி அவர் விலக்களிப்புப் பெற்றிருந்தாலன்றி பல்கலைக்கழகத்
தேர்வு எதற்கும் அனுமதிக்கப்பெறுதல் ஆகாது. இந்தப் பிரிவின்படி வழங்கப்பெறும்
விலக்களிப்புகள், ஆட்சிக்குழு பொருத்தமெனக் கருதும் வரைகட்டுகளுக்கு
உட்பட்டவையாக இருக்கும்.
40. பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு தகுதிதரு வருகைப் பதிவு.-
பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பெற்ற அல்லது இணைக்கப்பெற்ற அல்லது
அல்லது ஒப்பேற்புப்பெற்ற கல்லூரி அல்லது நிறுவனம் அல்லாத பிறக் கல்லூரி
அல்லது நிறுவனம் எதிலும் அளிக்கப்பெற்ற பாடவகுப்பில் பதிவாகும் வருகை:
எதுவும், பல்கலைக்கழகத் தேர்வு எதற்கும் அனுமதிக்கப்பெறுவதற்குத்
தகுதியளிப்பதில்லை.
41. மாணவர் உறைவிடங்களும் மாணவர் விடுதிகளும்.-
பல்கலைக்கழகத்தின் கல்லூரிசாரா மாணவர் அல்லாத பிற மாணவர்
ஒவ்வொருவரும், ஒரு மாணவர் விடுதியிலோ வகுத்துரைக்கப்படும் பிற
வரைகட்டுகளின்படியோ உறைதல் வேண்டும் என வேண்டுறுத்தப்பெறுவர்.
அத்தியாயம் VI
பல்கலைக்கழக நிதியங்கள்.
42. பொது நிதியங்கள்.- பல்கலைக்கழகம் பொது நிதியம் ஒன்றைக்
கொண்டிருக்கும்; அதில் பின்வருவன வரவு வைக்கப்படும்:-
(a) கட்டணங்கள், மானியங்கள், நன்கொடைகள், கொடையளிப்புகள்:
இருப்பின் அவற்றிலிருந்து பெறப்படும் வருமானம்;
(b) மைய அரசாங்கம், மாநில அரசாங்கம், பல்கலைக்கழக மானிய ஆணையம்
அல்லது அதுபோன்ற அதிகார அமைப்பு, உள்ளாட்சி அதிகார அமைப்பு அல்லது
அரசிற்குச் சொந்தமான அல்லது அதன் கட்டாள்கையிலுள்ள பிற கூட்டுருமம்
வழங்கும் அளிப்புத் தொகைகள் அல்லது மானியங்கள்; மற்றும்
(௦) கட்டளைகளும், பிறவகை வரவுகளும்.
அத்தியாயம் 106
பணிவரைகட்டுகள்.
43. ஓய்வூதியம், பணிக்கொடை முதலியன.- (1) பல்கலைக்கழகம், தான்
பணியமர்த்தும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பிற நபர்கள் ஆகியோரின் நன்மைக்காக,
தான் பொருத்தமெனக் கொள்கிற ஓய்வூதியம், பணிக்கொடை, காப்பீடு, வருங்கால
48
வைப்புநிதியம் ஆகியவற்றை வகுத்துரைக்கப்படும் முறையிலும்.
வரைகட்டுகளுக்கு உட்பட்டும், நிறுவித்தல் வேண்டும்.
(2) பல்கலைக்கழகம் (1) ஆம் உட்பிரிவின்படி வருங்கால வைப்புநிதியம்
ஒன்றை அவ்வாறு நிறுவியிருக்குமிடத்து, பல்கலைக்கழகம் ஓர் உள்ளாட்சி
அதிகார அமைப்பாகவும், அந்நிதியம் ஓர் அரசு வருங்கால வைப்புநிதியமாகவும்
இருந்தாற்போன்று அத்தகைய நிதியங்களுக்கு 1925 ஆம் ஆண்டு வருங்கால
வைப்புநிதியச் சட்டத்தின் (மையச் சட்டம் 191925) வகையங்கள் பொருந்துறும்.
என அரசு விளம்பலாம்.
(3) பல்கலைக்கழகம், நிதிக் குழுவினைக் கலந்தாய்வு செய்து வருங்கால
வைப்புநிதியத் தொகையினைத் தான் தீர்மானிக்கும் முறையில் முதலீடு
செய்யலாம்.
44. பணிவரைகட்டுகள்.- இந்தச் சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டு
பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ள பதவியாளர்கள், ஆசிரியர்கள்,
பிற நபர்கள் ஆகியோரின் அமர்த்துகை தெரிவுசெய்வதற்கான நெறிமுறை,
சம்பளம் மற்றும் படித்தொகைகள், பிற பணிவரைகட்டுகள் ஆகியவை
வகுத்துரைக்கப்படு கிறபடி இருந்துவரும்.
விளக்கம்.- இந்தப் பிரிவினைப் பொறுத்தவரை, "பதவியாளர்கள்" என்னும்
சொல்லில் வேந்தரும், துணைவேந்தரும் அடங்குவதில்லை.
44-A. தெரிவுக் குழுக்கள்.- ) பல்கலைக்கழகத்தினால்
நடத்தப்பெற்றுவரும் நிறுவனங்களின் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், இணைப்
பேராசிரியர், விரிவுரையாளர், நூலகர் ஆகியோரின் பதவிகளுக்கு
அமர்த்தப்பெறுவதற்காக ஆட்சிக்குழுவிற்குப் பரிந்துரைகள் செய்வதற்கெனத்
தெரிவுக்குழுக்கள் இருந்துவரும்.
(2) பின்வரும் அட்டவணையின் (1) ஆம் பத்தியில்
குறித்துரைக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு அமர்த்தப்பெறுவதற்கான
தெரிவுக்குழுவானது துணைவேந்தர், வேந்தர் நியமனஞ்செய்யும் ஒருவர் அரசு
நியமனம் செய்யும் ஒருவர் ஆகியோரையும் அந்த அட்டவணையின் (2) ஆம்
பத்தியில் கண்ட நேரறிணையான பதிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள நபர்களைக்
கொண்டிருக்கும்; ஒரு துறையில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், இணைப்
பேராசிரியர் அல்லது விரிவுரையாளர் ஒருவரை அமர்த்தம் செய்யும் நேர்வில்,
துறைத் தலைவர் எவரும் இல்லாதிருக்குமிடத்து, கல்விசார் நிலைக்குழு தனது
உறுப்பினர்களிலிருந்து நியமனஞ்செய்யும் ஒருவரையும் அக்குழு
கொண்டிருக்கும்.
(1)
49
அட்டவணை
(2)
பேராசிரியர், உதவிப் பேராசிரியர் () தொடர்புடைய துறையின் தலைவர்;
அல்லது இணைப் பேராசிரியர்.
விரிவுரையாளர்.
நூலகர்.
அவர் பேராசிரியர் ஒருவராக
இருப்பாரானால்;
(i) துணை வேந்தரால் நியமனம்
செய்யப்பெறும் இயக்குநர் அல்லது
புலத்தலைவர் (Dean) அல்லது
பேராசிரியர் ஒருவர்;
(1) பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
அல்லது இணைப் பேராசிரியர்
ஏற்கவிருக்கும் பாட இயலில் சிறப்பு
அறிவு அல்லது ஆர்வம் உள்ளவரென,
கல்விசார் நிலைக் குழு பரிந்துரைக்கும்
பெயர்ப் பட்டியல் ஒன்றிலிருந்து
ஆட்சிக் குழுவினால் நியமனம்
செய்யப்பெறும் இப்பல்கலைக்கழகப்
பணியில் இல்லாத மூவர்.
(i) தொடர்புடைய துறையின் தலைவர்;
(i) துணை வேந்தரால் நியமனம்
செய்யப்பெறும் பேராசிரியர் ஒருவர்;
(1) விரிவுரையாளர் ஏற்கவிருக்கும் பாட
இயலில் சிறப்பு அறிவு அல்லது ஆர்வம்
உள்ளவரென, கல்விசார் நிலைக் குழு
பரிந்துரைக்கும் பெயர்ப் பட்டியல்
ஒன்றிலிருந்து ஆட்சிக் குழுவினால்
நியமனம் செய்யப்பெறும்
இப்பல்கலைக்கழகப் பணியில் இல்லாத
இருவர்.
() நூலக அறிவியல் அல்லது நூலக
நிருவாகத்தில் சிறப்பு அறிவு
பெற்றுள்ள ஆட்சிக் குழுவினால்
நியமனம் செய்யப்பெறும்
50
பல்கலைக்கழகப் பணியில் இல்லாத
இருவர்;
(i) ஆட்சிக் குழுவினால் நியமனம்
செய்யப்பெறும். பல்கலைக்கழகப்
பணியில் இல்லாத ஒருவர்.
விளக்கம் |- துறைகளிடையிலான ஒரு செயல் திட்டத்திற்கென
அமர்த்துகைகள் செய்யப்படுகிறவிடத்து அச்செயல் திட்டத்தின் தலைவர்,
தொடர்புடைய துறையின் தலைவராகக் கொள்ளப்பெறுவார்.
விளக்கம் ॥- நியமனஞ்செய்யப்பெறும் பேராசிரியர், எந்தத் தனிப்பாட
இயலுக்கெனத் தெரிவு நடைபெறுகின்றதோ அந்தத் தனிப்பாட இயலுடன்
தொடர்புடைய பேராசிரியராக இருத்தல் வேண்டும்; அந்தப் பேராசிரியரை
நியமனஞ்செய்வதற்கு முன்பு, துணைவேந்தர், துறைத் தலைவரையும், புலத்
தலைவரையும் கலந்தாய்வு செய்தல் வேண்டும்.
விளக்கம் ॥- (2) ஆம் பத்தியின்கீழ் சுட்டப்பட்டுள்ள தனிப்பாட இயலுடன்
தொடர்புடைய நால்வரில் குறைந்தது மூவர், அல்லது நேர்வுக்கேற்ப மூவரில்
குறைந்தது இருவர் தெரிவுக்குழுக் கூட்டத்திற்கு வந்திருத்தல் வேண்டும்.
(3) தெரிவுக்குழுவின் கூட்டங்களுக்குத் துணைவேந்தர் தலைமை
வகிப்பார்.
(4) தெரிவுக்குழுவின் கூட்டங்களைத் துணைவேந்தர் கூட்டுவார்.
(5) பரிந்துரைகள் செய்வதில் தெரிவுக்குழுவினால் பின்பற்றப்பட வேண் டிய
நெறிமுறையானது நெறியமைவிதிகளில் வகுத்தமைக்கப்படும்.
(6) தெரிவுக்குழு செய்யும் பரிந்துரைகளை ஆட்சிக்குழு ஏற்றுக்கொள்ள
இயலவில்லையாயின், அது, அதற்கான காரணங்களைப் பதிவுசெய்து, இறுதி
ஆணைகளுக்காக அதனை வேந்தருக்கு அனுப்புதல் வேண்டும்.
(7) தற்காலிகப் பதவிகளுக்கான அமர்த்துகைகள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள
முறையில் செய்யப்படுதல் வேண்டும்:-
() தற்காலிகக் காலியிடத்தின் காலஅளவானது ஒரு கல்விப்பருவ
காலத்திற்கு மேற்பட்டதாக இருக்குமாயின் அந்தக் காலியிடம், மேலே கண்ட
வகையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கிணங்கத் தெரிவுக்குழு
அளிக்கும் தேர்வுரையின்பேரில் நிரப்பப்படுதல் வேண்டும்:
51
வரம்புரையாக: பணிநலன்கருதி அந்தக் காலியிடத்தினை நிரப்புவது
அவசியமானது எனத் துணைவேந்தர் தெளிவுறக் காண்பாராயின், (1) ஆம்
உட்கூறில் சுட்டப்பட்டுள்ள உள்ளமை தெரிவுக்குழு ஒன்றினால் தற்காலிக
அடிப்படையில், ஆறு மாதத்திற்கு மேற்படாத ஒரு காலஅளவிற்கு அமர்த்துகை
செய்யப்படலாம்;
0) தற்காலிகக் காலியிடத்தின். காலஅளவு ஓராண்டிற்குக்
குறைவானதாக இருக்குமாயின், அந்தக் காலியிடத்திற்கு தொடர்புடைய
புலத்தலைவரையும், நியமனஞ் செய்யும் ஒருவரையும் கொண்டதோர் உள்ளமை
தெரிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில், அமர்த்துகை செய்யப்படலாம்:
வரம்புரையாக: புலத்தலைவர் பதவியையும், துறைத்தலைவர் பதவியையும்
ஒருவரே வகித்து வருவாராயின், தெரிவுக்குழு, துணைவேந்தர் நியமனஞ் செய்யும்
இருவரைக் கொண்டிருக்கலாம்:
மேலும் வரம்புரையாக: ஆசிரியர் பதவிகளில் இறப்பு அல்லது பிற காரணம்
எதனாலும் எதிர்பாராத தற்காலிகக் காலியிடங்கள் ஏற்படும் நேர்வில், புலத்தலைவர்,
தொடர்புடைய துறைத் தலைவருடன் கலந்தாய்வு செய்து ஒரு மாதத்திற்குத்
தற்காலிக அமர்த்துகை ஒன்றைச் செய்யலாம்; அந்த அமர்த்துகை குறித்துத்
துணைவேந்தருக்கும் பதிவாளருக்கும் அவர் அறிவித்தல் வேண்டும்;
(i) தற்காலிகமாக அமர்த்தப்பெற்ற ஆசிரியர் எவரும், இந்தச்
சட்டத்தின்படி அமர்த்தப்பெறுவதற்காக முறையான தெரிவுக்குழு ஒன்றினால்
பரிந்துரைக்க பெறவில்லையானால், அதற்குப் பிண்னர், ஓர் உள்ளமை தெரிவுக்
குழுவினால் தற்காலிக அமர்த்துகைக்கு அல்லது ஒரு முறையான
தெரிவுக்குழுவினால் நிலையான அமர்த்துகைக்கு அவர் தெரிந்தெடுக்க
பெற்றாலன்றி, அத்தகைய தற்காலிகப் பணியமர்த்தத்தில் அவர் தொடர்ந்து
இருத்தல் ஆகாது.
45. துறைத் தலைவர்களின் பணி குறித்த வரையுரைகளும்
வரைகட்டுகளும்.- (1) பல்கலைக்கழகத்தின் துறை ஒவ்வொன்றும் ஒரு
பேராசிரியரையோ இயக்குதரையோ தலைவராகக் கொண்டிருக்கும்; அவருடைய
கடமைகளும் பதவிப் பணிகளும் அமர்த்துகைக்கான வரையுறைகளும்
வரைக்கட்டுகளும் நெறியமை விதிகளினால் வகுத்துரைக்கப்படும்:
வரம்புரையாக: துறை எதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பேராசிரியர்கள்
இருப்பார்களாயின் அந்தத் துறையின் தலைவர், நெறியமை விதிகளினால்
வகுத்துரைக்கப்படும் முறையில் அமர்த்தப் பெறுவார்:
52
மேலும் வரம்புரையாக: ஒரு துறையில் பேராசிரியர் எவரும்
இல்லாதிருக்குமிடத்து, ஓர் உதவிப் பேராசிரியர் அல்லது ஓர் இணைப்பேராசிரியர்,
நெறியமை விதிகளினால் வகுத்துரைக்கப்படும் முறையில் துறைத் தலைவராக
அமர்த்தப்பெறலாம்.
(2) பேராசிரியர் அல்லது உதவிப்பேராசிரியர் அல்லது இணைப் பேராசிரியர்
எவரும், தாம் துறைத்தலைவராக அமர்த்தப்பெறுவதை ஏற்க மறுக்கலாம்.
(3) துறைத் தலைவராக அமர்த்தப்பெறுபவர், மூன்றாண்டு காலஅளவிற்கு
அப்பதவியை வகித்து வருவார்; மீண்டும் அப்பதவியில் அமர்த்தப்பெறுவதற்கும்
அவர் தகுமையுடையவராவார்.
(4) துறைத் தலைவர், தம் பதவிக்காலத்தின்போது, எச்சமயத்திலும் தம்
பதவியிலிருந்து விலகிக்கொள்ளலாம்.
(5 துறைத் தலைவர், நெறியமை விதிகளினால் வகுத்துரைக்கப்படும்
பதவிப்பணிகளை ஆற்றிவருவார்.
46. புலத் தலைவர்கள்.- (1) புலத்தலைவர் ஒவ்வொருவரும் அந்தப் புலத்தில்
பணியாற்றும் பேராசிரியர்களுக்கிடையிலிருந்து, மூன்றாண்டு கால அளவிற்குத்
துணை வேந்தரால் அமர்த்தப்பெறுவார்; மீண்டும் அப்பதவியில்
அமர்த்தப்பெறுவதற்கும் அவர் தகுமையுடையவராவார்:
வரம்புரையாக: ஒரு புலத்தலைவர் ஐம்பத்தெட்டு வயது நிறைவெய்தியவுடன்
அவர் அப்பதவியை வகிப்பது அற்றுப்போகும்:
மேலும் வரம்புரையாக: ஒரு புலத்தில் எச்சமயத்திலேனும் பேராசிரியர் எவரும்
இல்லாதிருப்பாராயின் புலத்தலைவரின் அதிகாரங்களைத் துணை வேந்தரே
செலுத்தி வருவார்.
(2) புலத்தலைவர் பதவி காலியாக இருக்கும்போதோ நோய், இருத்தலின்மை
அல்லது பிற காரணம் எதனாலும் புலத்தலைவர் தம் பதவிக்கடமைகளைப்
புரிவதற்கு இயலாதிருக்கும்போதோ, அவரது பதவிக்கடமைகளை இதற்கெனத்
துணைவேந்தர் அமர்த்தும் நபர் புரிந்துவருவார்.
(3) ஒரு புலத்தின் தலைவராக இருந்துவரும் புலத்தலைவர், அந்தப்
புலத்தின் பாடங்கற்பித்தல், ஆராய்ச்சி ஆகியவற்றை நடத்திவருவதற்கும்
அவற்றின் தரநிலைகளைப் பேணிவருவதற்கும் பொறுப்புடையவர் ஆவார்:
நெறியமை விதிகளினால் வகுத்துரைக்கப்படும் பிற பதவிப்பணிகளையும்
அப்புலத்தலைவர் ஆற்றி வருவார்.
53
(4) பாடத்திட்டக் குழுக்களின் அல்லது நேர்வுக்கேற்ப, புலக்குழுக்களின்
கூட்டம் எதற்கும் வந்திருக்கவும் அதில் உரையாற்றவும் புலத்தலைவர் உரிமை
உடையவர் ஆவார். ஆனால், அவர் அதில் ஓர் உறுப்பினராக இருந்தாலன்றி,
அந்தக் கூட்டத்தில் வாக்களிப்பதற்கு உரிமை உடையவர் ஆகார்.
அத்தியாயம் 36
பல்வகை
47. எதிர்பாராக் காலியிடங்களை நிரப்புதல்.-- பல்கலைக்கழகத்தின் அதிகார
அமைப்பு அல்லது பிற குழுமம் ஒன்றன் (பதவிவழி உறுப்பினர்களல்லாத பிற)
உறுப்பினர்களிடையே ஏற்படும் எதிர்பாராக் காலியிடங்கள் அனைத்தும், எந்த
உறுப்பினரின் பதவி காலியாகவுள்ளதோ அந்த உறுப்பினரை நியமனஞ்செய்த
அல்லது தேர்ந்தெடுத்த நபராலோ குழுமத்தினாலோ, இயலும் விரைவில்,
நிரப்பப்பெறுதல் வேண்டும்; ஓர் எதிர்பாராக் காலியிடத்திற்கு
நியமனஞ்செய்யப்பெற்ற அல்லது தேர்ந்தெடுக்கப்பெற்ற ஒருவர், எவருடைய
இடத்தை நிரப்புகிறாரோ அந்த நபர் அந்த அதிகார அமைப்பின் அல்லது
குழுமத்தின் ஓர் உறுப்பினராக இருந்திருக்கக்கூடிய காலஅளவில் எஞ்சியுள்ள
காலத்திற்கு உறுப்பினராக இருந்துவருவார்:
வரம்புரையாக: பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு அல்லது பிற குழுமம்
ஒன்றன் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களிடையே காலக்கழிவின் காரணமாக
எழும் காலியிடங்கள், அக்காலியிடங்கள் எழுந்த தேதியிலிருந்து இரண்டு மாதம்
கழிவதற்கு முந்தியதாக அல்லாமல் துணைவேந்தர் தாம் பொருத்தமெனக் கருதி
குறித்திடும் நாட்களில் நடத்தப்பெறும் தேர்தல்களின்வழி நிரப்பப்பெறுதல்
வேண்டும்:
மேலும் வரம்புரையாக: பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு அல்லது பிற
குழுமம் ஒன்றன் உறுப்பினரின் பதவிக்காலம் முடிவுறும் தேதிக்கு முந்திய ஆறு
மாதத்திற்குள் எதிர்பாராக் காலியிடம் எதுவும் ஏற்படுமாயின் அந்தக் காலியிடம்
நிரப்பப் பெறுதல் ஆகாது.
48. பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகள், குழுமங்கள் ஆகியவற்றின்
நடவடிக்கைகள், காலியிடங்கள் காரணமாகச் செல்லுந்
தன்மையற்றவையாவதில்லை.- பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு அல்லது
பிற குழுமம் ஒன்றன் செயல் அல்லது நடவடிக்கை எதுவும், அதில் காலியிடம்
எதுவும் உள்ளது என்ற, அல்லது பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு அல்லது
பிற குழுமம் ஒன்றன் உறுப்பினர் ஒருவரின் தேர்தலில் அல்லது அமர்த்துகையில்
குறைபாடு அல்லது முறைகேடு எதுவும் உள்ளது என்ற, அல்லது அத்தகைய
செயலில் அல்லது நடவடிக்கையில் அதன் முறைமையினைப் பாதிக்காத
54
நிலையில் குறைபாடு அல்லது முறைகேடு எதுவும் உள்ளது என்ற காரணத்தால்
மட்டுமோ, அந்த ஓராண்டிலும் ஆட்சிப்பேரவை இருமுறை கூடவில்லை என்னும்
காரணத்தால் மட்டுமோ, செல்லுந்தன்மையற்றதாகாது.
49. பல்கலைக்கழக உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குதல்.- (1)
ஆட்சிக்குழு,
(ஐ ஆட்சிக்குழு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்குக்
குறையாத உறுப்பினர்களின். பரிந்துரையின்பேரில், பட்டதாரிகள்
பதிவேட்டிலிருந்து எவரொருவர் பெயரையும் இதற்கெனப் பிறப்பிக்கப்படும்
எழுத்தாணையின் வழி நீக்கிவிடலாம்;
(௦) பல்கலைக்கழத்தின் அதிகாரஅமைப்பு ஒன்றன் உறுப்பினர் எவரும்,
ஒழுக்கக்கேடு உள்ளுறுவதென ஆட்சிக்குழு கருதுகிற ஒரு குற்றச்செயலுக்காக
ஒரு குற்றவியல் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பு அளிக்கப்பெற்றிருப்பாராயின்,
அல்லது அவர் நெறிதவறிய கடுங்குற்றம் புரிந்தவராக இருப்பாராயின்,
ஆட்சிக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையும், கூட்டத்திற்கு
வந்திருந்து வாக்களிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு
பகுதியினருக்குக் குறையாத பெரும்பான்மையும் கொண்ட உறுப்பினர்களால்
தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுவதன் மீது, இதற்கென பிறப்பிக்கப்படும்
எழுத்தாணையின் வழி அவரை அந்த உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிடலாம்;
மேலும், அதே காரணத்திற்காக, பல்கலைக்கழகத்தினால் அவருக்கு வழங்கப்பெற்ற
பட்டம் அல்லது சீரிதழ் எதனையும் ஆட்சிக்குழு மீளப் பெற்றுக் கொள்ளலாம்.
(2) பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு ஒன்றன் உறப்பினர் எவரும்,
பித்து மனநிலையுற்றவராகவோ செவிட்டு ஊமையராகவோ தொழுநோயால்
துன்புறுகிறவராகவே ஆகிவிட்டார் அல்லது ஒரு நொடுப்பு நிலையராகத்
தீர்ப்பளிக்கப்பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளவராகவோ, அவ்வாறு
தீர்ப்பளிக்கப்பெற்றவராகவோ இருக்கிறார் எனில், இதற்கெனப் பிற எழுத்தாணை
வழி, அவரை அந்த உறுப்பினர் பதவியிலிருந்து ஆட்சிக்குழு நீக்கிவிடலாம்.
(3) இந்தப் பிரிவின்படி நபர் எவர்மீதும் எடுக்கக் கருதப்படும் நடவடிக்கைக்கு
எதிராகக் காரணங்காட்டுவதற்கு அவருக்குத் தகுமானதொரு வாய்ப்பு
அளிக்கப்பட்டிருந்தாலன்றி, அத்தகைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுதல்
ஆகாது.
4) (1) ஆம் உட்பிரிவின்படி அல்லது, நேர்வுக்கேற்ப, (2) ஆம்
உட்பிரிவின்படி பிறப்பிக்கப்படும் ஆணை ஒவ்வொன்றின் ஒரு படியினையும், அது
அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடிய விரைவில், தொடர்புடைய அந்நபருக்கு,
ஒழுங்கமை விதிகளினால், வகுத்துரைக்கப்படும் முறையில் அனுப்புதல் வேண்டும்.
55
5௦. பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளையும் குழுமங்களையும்
அமைப்பதில் எழும் பூசல்கள்.- பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு அல்லது
பல்கலைக்கழகத்தின் பிற குழுமம் ஒன்றன் உறுப்பினராக ஒருவர் முறையாகத்
தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளாரா அல்லது நியமனஞ்செய்யப் பெற்றுள்ளாரா அல்லது
உறுப்பினராக இருக்க உரிமைகொண்டவரா என்னும் பிரச்சினை எதுவும்
எழுமாயின், அந்தப் பிரச்சினை வேந்தருக்கு அனுப்பிவைக்கப்படும்; அதன்மீது
அவர் எடுக்கும் முடிபே அறுதியானதாகும்.
51. குழுக்களை அமைத்தல்.- பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகள்
அனைத்தும் குழுக்களை அமைப்பதற்கும் மறுஅமைப்புச் செய்வதற்கும்,
தங்களுக்குள்ள அதிகாரங்களில் தாங்கள் பொருத்தமெனக் கொள்ளும்
அதிகாரங்களை அவற்றிற்கு ஒப்படைவு செய்வதற்கும் அதிகாரம்
கொண்டிருக்கும். அத்தகைய குழுக்கள், பிறவாறு
வகைசெய்யப்பட்டிருந்தாலன்றி, தொடர்புடைய அதிகாரஅமைப்பின்.
உறுப்பினர்களையும், அந்த அதிகாரஅமைப்பு நேர்வுக்கேற்ப
பொருத்தமானவர்களெனக் கருதும் பிற நபர்கள். எவரேனுமிருப்பின்,
அவர்களையும் கொண்டிருக்கும்.
52. தகவல் பெறுவதற்கான அதிகாரம்.- இந்தச் சட்டத்தில் அல்லது
அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது
எவ்வாறிருப்பினும், அரசு, எழுத்தாணையின்வழி, பல்கலைக்கழகத்தின்
அலுவற்பாடுகள் தொடர்பான பொருட்பாடு குறித்த தகவல் எதனையும்
பல்கலைக்கழகத்திடமிருந்து கேட்டுப்பெறலாம். பல்கலைக்கழகம், அத்தகைய
தகவல் தன்னிடம் இருக்குமாயின், தகுமானதொரு காலஅளவிற்குள்
அத்தகவலை அரசிற்கு அளித்தல் வேண்டும்.
வரம்புரையாக: பல்கலைக்கழகம் மந்தணமானதெனத் தான் கருதும்
தகவலை வேந்தர், இணைவேந்தர் ஆகியோர் முன்பு வைத்திடலாம்.
53. பட்டதாரிகளைப் பதிவுசெய்தல்.- (1) அறிவிக்கை செய்யப்பட்ட
தேதியன்றும் அதன் பின்பும்,-
() இந்தியாவின் ஆட்சிநிலவரைக்குள் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில்
குறைந்தது மூன்றாண்டுக்கு முன்பு பட்டம் பெற்றவராக, அல்லது
(i) இந்தியாவின் ஆட்சிநிலவரைக்குள் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றன்
பதிவுபெற்ற பட்டதாரியாக உள்ளவரும், இப்பல்கலைக்கழக வரையிடத்திற்குள்
வழக்கமாக உறைபவருமான நபர் ஒவ்வொருவரும் இந்தச் சட்டத்தின்படி வைத்து
வரப்பெறும் பட்டதாரிகள். பதிவேட்டில், நிலையமை விதிகளினால்
வகுத்துரைக்கப்படும் கட்டணத்தைச் செலுத்துவதன்பேரிலும் அவ்வாறே
56
வகுத்துரைக்கப்படும் வரைகட்டுகளுக்கு உட்பட்டும், ஐந்தாண்டு காலஅளவிற்குத்
தம்பெயரைப் பதிவு செய்து கொள்வதற்கு உரிமைகொண்டவர் ஆவார்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி பதிவு செய்யப்படுவதற்கான விண்ணப்பங்கள்
அனைத்தும், வருத்துரைக்கப்பட்டுள்ள கட்டணத்துடனும், நிலையமை
விதிகளினால் வகுத்துரைக்கப்படும் தகுதிப்பாடுகளைக் காட்டும்.
சான்றுறுதிகளுடனும் சேர்த்து, பதிவாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
(3) பதிவாளர் (2) ஆம் உட்பிரிவின்படி அளிக்கப்படும் ஒரு
விண்ணப்பத்தைப் பெறுவதன் பேரில், தாம் பொருத்தமெனக் கொள்கிற
விசாரணையைச் செய்த பின்பு, விண்ணப்பதாரரின் பெயரைப் பட்டதாரிகள்:
பதிவேட்டில் பதிவு செய்வார்.
(4) (3) ஆம் உட்பிரிவிண்படி பட்டதாரிகள் பதிவேட்டில் பெயர் பதிவு
செய்யப்பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நிலையமை
விதிகளினால் வகுத்துரைக்கப்படும் கட்டணத்தை செலுத்தி அவ்வாறே
வகுத்துரைக்கப்படும் காலத்திற்குள்ளும் முறையிலும் இதற்கென அளிக்கப்படும்
விண்ணப்பத்தின் பேரில், தமது பெயர்ப்பதிவினைப் புதுப்பித்துக்கொள்ள
உரிமைகொண்டவர் ஆவார்.
54. முதல் துணை வேந்தரை அமர்த்துதல்.- 12 ஆம் பிரிவின் (1) ஆம்
உட்பிரிவில்