Tamil Nadu · 2021 · Act 32

Annamalai University Act 2013 with Amendments and Substitutions as Per G.O. Ms. No. 189, dated 07.10.2021

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

2013-ஆம்‌ ஆண்டு அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌. பிரிவுகளின்‌ அமைப்பு அத்தியாயம்‌ | முன்னுரை பிரிவுகள்‌: 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. அத்தியாயம்‌ ॥ பல்கலைக்கழகம்‌ 3. பல்கலைக்கழகம்‌ நிறுவுதல்‌. 4. பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களும்‌, அதிகாரங்களும்‌. 5. பார்வையிடுதல்‌. அத்தியாயம்‌ ॥ பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌. 6. பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌. 7. வேந்தர்‌. 8. இணை வேந்தர்‌. 9. துணை வேந்தர்‌. 10. துணை வேந்தரின்‌ அதிகாரங்களும்‌, கடமைகளும்‌. 11. பதிவாளர்‌. 12. தலைவர்‌. 19. நிதி அலுவலர்‌, 14. தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌. 15. துணைவேந்தர்‌ மற்றும்‌ பிற அலுவலர்கள்‌ முதலானோர்‌ பொது ஊழியர்களாக இருத்தல்‌. அத்தியாயம்‌ IV பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌. 16. பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌. 17. உறுப்பினருக்கான தகுதியின்மை, 18. குறித்த சில நேர்வுகளில்‌ ஆட்சிக்குழு மற்றும்‌ கல்வி மன்றத்தின்‌ தேர்தலுக்காக அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்கான தகுதியின்மை. 19. ஆட்சிக்குழு. 20. ஆட்சிக்குழுவின்‌ அதிகாரங்கள்‌. 21. ஆட்சிக்குழுவின்‌ கூட்டங்கள்‌. 22. கல்விமன்றம்‌. 23. கல்விமன்றத்தின்‌ அதிகாரங்களும்‌ கடமைகளும்‌. 24. கல்விமன்றத்தின்‌ கூட்டங்கள்‌. 25. நிதிக்குழு. 26. புலங்கள்‌ மற்றும்‌ பாடக்குழுக்கள்‌. 27. பிற அதிகார அமைப்புகளை அமைத்துருவாக்குதல்‌. 28. குழுக்களை அமைத்துருவாக்குதல்‌ மற்றும்‌ அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்‌. அத்தியாயம்‌ V நிலையமை விதிகள்‌, அவசரச்‌ சட்டங்கள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌, 29. நிலையமை விதிகள்‌. 30. நிலையமை விதிகள்‌ எவ்வாறு செய்யப்படுகிறது. 31. அவசரச்‌ சட்டங்கள்‌. 32. அவசரச்‌ சட்டங்கள்‌ எவ்வாறு செய்யப்படுகின்றன. 33. ஒழுங்குமுறை விதிகள்‌ எவ்வாறு செய்யப்படுகின்றன. அத்தியாயம்‌ VI மாணவர்‌ சேர்க்கை 34. பல்கலைக்கழக படிப்புகளுக்கு சேர்த்துக்‌ கொள்ளுதல்‌. 35. மாணவர்களை தேர்ந்தெடுத்தல்‌ மற்றும்‌ சேர்த்தல்‌. 36. பல்கலைக்கழக தேர்வுகளுக்கு அனுமதித்தல்‌. அத்தியாயம்‌ VIl நிதியங்கள்‌ மற்றும்‌ கணக்குகள்‌: 37. நிரந்தர நிலைக்கொடை நிதியம்‌. 38. பொது நிதியம்‌. 39. பிற நிதியங்கள்‌. 40. நிதியங்களின்‌ மேலாண்மை. 41. ஆண்டறிக்கை. 42. ஆண்டுக்‌ கணக்குகள்‌. அத்தியாயம்‌ ॥1॥ பணிவரைக்கட்டுகள்‌ 43. ஒய்வூதியம்‌, பணிக்கொடை முதலியவை. 44. பணிவரைக்கட்டுகள்‌. 45. தெரிவுக்குழு. 46. துறைத்தலைவர்களின்‌ பணி வரையுரைகளும்‌, வரைக்கட்டுகளும்‌. அத்தியாயம்‌ 16 பல்வகைப்பட்டவை 47. தற்செயலான காலியிடங்களை நிரப்புதல்‌. 48. பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளின்‌ மற்றும்‌ பிற அமைப்புகளின்‌: நடவடிக்கைகள்‌ காலியிடங்கள்‌ காரணமாகச்‌ செல்லாதவையாக ஆக்கப்படுதல்‌ ஆகாது. 49. பல்கலைக்கழகத்தின்‌ உறுப்பினர்‌ பதவியிலிருந்து நீக்குதல்‌.. 50. பல்கலைக்கழக அதிகார அமைப்புகளையும்‌ பிற அமைப்புகளையும்‌ அமைத்துருவாக்குதல்‌ பற்றிய பூசல்கள்‌. 51. தகவல்‌ பெறுவதற்கான அதிகாரம்‌. 52. தனி பணியமர்த்தம்‌ செய்யும்‌ முறை. 53. இடர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. 54. பணிப்புரைகள்‌ வழங்குவதற்கு அதிகாரம்‌. அத்தியாயம்‌ X மாறுதற்கால வகையங்கள்‌' 55. அரசால்‌ பணியமர்த்தம்‌ செய்யப்படும்‌ நிர்வாகி. 56. அரசால்‌ பணியமர்த்தம்‌ செய்யப்படும்‌ பதிவாளர்‌. 57. ஐயங்களை அகற்றுதல்‌. 58. நீக்கறவும்‌ காப்புரையும்‌. அண்ணாமலைப்‌ பல்கலைக்‌ கழகச்‌ சட்டம்‌ தொடர்பாக அந்தச்‌ சட்டத்தை நீக்கறவு செய்வதற்கும்‌ மற்றும்‌ மறுபடியும்‌ இயற்றுவதற்குமானதொரு சட்டமுன்வடிவு. இந்தியக்‌ குடியரசின்‌ அறுபத்து நான்காம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- அத்தியாயம்‌ 1. முன்னுரை. குறுந்தலைப்பு 1. () இந்தச்‌ சட்டம்‌, 2013-ஆம்‌ ஆண்டு அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ அளாவுகை என வழங்கப்பெறும்‌. மற்றும்‌ தொடக்கம்‌. (2) இது பல்கலைக்கழகத்தின்‌ எல்லையோர அதிகார வரம்பை அளாவி நிற்கும்‌. இது கடலூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள அண்ணாமலை நகரில்‌ அமைந்துள்ள அதனுடைய பட்டமளிப்பு அரங்கிலிருந்து பதினாறு கிலோ மீட்டர்‌ சுற்றளவிற்கு மேல்‌ அளாவுகை செய்தலாகாது. (3) இது அரசு அறிவிக்கையின்‌ வாயிலாகக்‌ குறிக்கக்‌ கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. பொருள்‌ 2. இந்தச்‌ சட்டத்தில்‌ தறுவாய்‌ வேறு பொருள்‌ குறித்தாலன்றி,- வரையறை @ “தலைவர்‌” என்றால்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ புலம்‌ ஒவ்வொன்றின்‌ தலைவர்‌ எனப்‌ பொருள்படும்‌; O “புலம்‌” என்றால்‌ பல்கலைக்கழகத்தின்‌ புலம்‌ எனப்‌ பொருள்படும்‌; (9 “அரசு” என்றால்‌ மாநில அரசு எனப்‌ பொருள்படும்‌; O “நடைமுறையிலுள்ள சட்டம்‌” தமிழ்நாடு மாநிலத்தில்‌ நடைமுறையில்‌ உள்ள. செய்‌ சட்டம்‌, ஒழுங்குமுறைவிதி, ஆணை, விதி, பணிப்புரை அல்லது அறிவிக்கை எதனையும்‌ உள்ளடக்கும்‌; © “விடுதி” என்றால்‌, இப்பல்கலைக்‌ கழகத்தால்‌ பேணி வரப்பெறும்‌ அல்லது ஏற்பிசை அளிக்கப்பெற்றுள்ள, இப்பல்கலைக்கழகத்தின்‌ மாணவர்களுக்கான தங்குமிடத்தின்‌ ஒர்‌ அலகு எனப்பொருள்படும்‌; () “வகுத்துரைக்கப்பட்ட” என்றால்‌ நிலையமை விதிகளாலோ, அவசரச்சட்டங்கலோ. அல்லது இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதிகளாலோ வகுத்துரைக்கப்பட்டது. எனப்பொருள்படும்‌; (9) “நிலையமை விதிகள்‌” “அவசரச்‌ சட்டங்கள்‌” மற்றும்‌ “ஒழுங்குமுறை விதிகள்‌” என்பவை இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது தொடர்ந்து நடைமுறையில்‌ உள்ள, முறையே இப்பல்கலைக்கழகத்தின்‌ நிலையமை விதிகள்‌, அவசரச்‌ சட்டங்கள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ எனப்பொருள்படும்‌; (1) “ஆசிரியர்கள்‌” என்றால்‌ ஆசிரியர்களாக இருப்பதற்கு நிலையமை விதிகளால்‌ விளம்பப்படக்கூடிய உதவிப்‌ பேராசிரியர்கள்‌, இணைப்‌ பேராசிரியர்கள்‌, பேராசிரியர்கள்‌, தலைவர்கள்‌, இயக்குநர்கள்‌ மற்றும்‌ பிற அது போன்ற நபர்கள்‌ எனப்பொருள்படும்‌; (i) ல்கலைக்கழகம்‌” என்றால்‌ 3-ஆம்‌ பிரிவின்படி நிறுவப்பட்டிருப்பதாகக்‌ கொள்ளப்படுகின்ற அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகம்‌ எனப்பொருள்படும்‌. () “பல்கலைக்‌ கழக மானியங்கள்‌ ஆணையம்‌” என்றால்‌ 1956 ஆம்‌ ஆண்டு மைபச்சட்டம்‌ பல்கலைக்கழக மானியங்கள்‌ ஆணையச்‌ சட்டத்தின்‌ 4 ஆம்‌ பிரிவின்படி ஏற்படுத்தப்பட்ட 5/1956 ஆணையம்‌ எனப்பொருள்படும்‌; (9) “பல்கலைக்‌ கழக ஆய்வுக்கூடம்‌” என்றால்‌ ஆராய்ச்சிப்‌ பணியை செய்துவருவதற்காகவும்‌ அதனை மேம்படுத்துவதற்காகவுமென்று கருதப்படுகின்ற இப்பல்கலைக்கழகத்தால்‌ நிறுவப்பெற்றதாயினும்‌ அல்லது இல்லாவிடினும்‌ பல்கலைக்கழகத்தால்‌ பராமரிக்கப்பட்டு வரும்‌ ஒரு ஆய்வுக்‌ கூடம்‌ எனப்பொருள்படும்‌; () “பல்கலைக்கழக நூலகம்‌” என்றால்‌ இப்பல்கலைக்‌ கழகத்தால்‌ தொடங்கப்பட்டதாகவோ அல்லது இல்லாவிடுனும்‌ பல்கலைக்கழகத்தால்‌ பேணி வரப்படும்‌ ஒரு நூலகம்‌ எனப்‌ பொருள்படும்‌. அத்தியாயம்‌ 11. பல்கலைக்கழகம்‌. தமிழ்நாடு சட்டம்‌ 3. () இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியன்று மற்றும்‌ அது முதற்கொண்டும்‌ பல்கலைக்‌ 1929. 1928 ஆம்‌ ஆண்டு அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டத்தின்படி நிறுவப்பட்ட கழகம்‌ அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகம்‌ இந்தச்‌ சட்டத்தின்படி நிறுவப்பட்டதாக மற்றும்‌ 809௧ல்‌: சேர்க்கப்பட்டதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. @ இப்பல்கலைக்கழகம்‌ ஒரு கூட்டுருமக்குழுமமாக இருத்தல்‌ வேண்டும்‌; மேலும்‌ நிலைத்த தொடர்பாட்டினையும்‌ பொது இலச்சினையும்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ மேற்சொன்ன பெயரில்‌ வழக்கிடுதலும்‌ வழக்கிடப்படுதலும்‌ வேண்டும்‌. (6) இப்பல்கலைக்கழகத்தின்‌ தலைமையகம்‌ அண்ணாமலைநகர்‌ எல்லைகளுக்குள்‌ அல்லது அத்தகைய எல்லைகளைச்‌ சுற்றி பதினாறு கிலோ மீட்டர்‌ சுற்றளவிற்குள்‌ உள்ள இடம்‌ எதிலுமோ அமைந்திருத்தல்‌ வேண்டும்‌. 4. இப்பல்கலைக்கழகம்‌ பின்வரும்‌ நோக்கங்களையும்‌ அதிகாரங்களையும்‌ பெற்றிருக்கும்‌, பல்கலைக்‌ அதாவது:- கழகத்தின்‌ நோக்கங்களும்‌, () தொழில்‌ படிப்புகள்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்பம்‌ உள்ளடங்கலாக அது நிச்சயிக்கின்ற அத்தகைய கற்கும்‌ பிரிவுகளில்‌ கற்பிப்பதற்காக மற்றும்‌ பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்துவதற்கு; (2) ஆராய்சிக்கும்‌, மேம்பாட்டிற்கும்‌ மற்றும்‌ அறிவைப்‌ பரப்புவதற்கு; (3) பட்டங்கள்‌, விருதுகள்‌, பட்டயங்கள்‌ மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புச்‌ சீர்மைகளை: தொடங்குவதற்கு; @ தேர்வுகளை நடத்துவதற்கு மற்றும்‌ பட்டங்கள்‌, விருதுகள்‌, பட்டயங்கள்‌ மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றை- (8) நிலையமை விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ வகுத்துரைக்கப்பட்ட தேர்வுகளில்‌ தேர்ச்சியடைந்திருப்பவர்‌ அதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தாலன்றி பல்கலைக்கழக கல்லூரி அல்லது ஆய்வுக்‌ கூடம்‌ ஒன்றில்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பெற்ற குறித்தகால படிப்புப்‌ பிரிவில்‌ தொடர்ந்திருக்கும்‌ போது; (6) வகுத்துவைக்கப்பட்ட வரைக்கட்டிகளின்படி, ஆராய்ச்சியை செய்து கொண்டிருப்பவர்‌; (5) வகுத்துரைக்கப்பட்ட வரைக்கட்டுகளின்படி, மதிப்புறு பட்டங்களையோ அல்லது பிற கல்விச்‌ சிறப்புச்‌ சீர்மைகளை வழங்குவதற்கு; (6) இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான ஆராய்ச்சி நிலையங்களை, கல்லூரிகள்‌ மற்றும்‌ ஆய்வுக்கூடங்கள்‌, நூலகங்கள்‌, அருங்காட்சியகங்கள்‌ மற்றும்‌ பிற நிறுவனங்களை நிறுவுவதற்கு, பராமரிப்பதற்கு மற்றும்‌ மேலாண்மை செய்வதற்கு; (7) உதவிப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, இணைப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, பேராசிரியர்‌ பதவிகள்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்திற்கு தேவைப்படும்‌ பிற ஆசிரியர்‌ அல்லது ஆராய்ச்சி பதவிகள்‌ ஆகியவற்றை தொடங்குவதற்கு மற்றும்‌ அத்தகைய உதவிப்‌ பேராசிரியர்‌ பதவிகளுக்கு, இணைப்‌ பேராசிரியர்‌ பதவிகளுக்கு, பேராசிரியர்‌ பதவிகளுக்கு மற்றும்‌ பிற ஆசிரியர்‌ அல்லது ஆராய்ச்சி பதவிகளுக்கு நபர்களை பணியபர்த்தம்‌ செய்வதற்கு; (௫) நிலை விதிகளுக்கிணங்க பட்டதாரி உதவித்‌ தொகைகள்‌, பயண உதவித்‌ தொகைகள்‌, படிப்புதவித்‌ தொகைகள்‌, மாணவ உதவித்‌ தொகைகள்‌, ஆதரவுப்‌ படித்தொகைகள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌ ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு மற்றும்‌ வழங்குவதற்கு; (௫) பல்கலைக்கழகத்தின்‌ மாணவர்களுக்குக்கான தங்கும்‌ விடுதிகளை நிறவுவதற்கு, பராமரிப்பதற்கு மற்றும்‌ மேலாண்மை செய்வதற்கு, இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணி வரப்படாத மாணவர்‌ தங்கும்‌ விடுதிகளுக்கு ஏற்பிசைவு அளிப்பதற்கு மற்றும்‌ அவ்வாறு ஏற்பளிக்கப்பட்ட ஏற்பிசைவினை விலக்கிக்‌ கொள்வதற்கு; (10) தங்கும்‌ விடுதிகளை மேற்பார்வையிடுவதற்கு மற்றும்‌ கட்டுப்படுத்துவதற்கு மற்றும்‌ பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒழுக்கத்தை ஒழுங்குமுறைப்‌ படுத்துவதற்கு மற்றும்‌ செயற்படுத்துவதற்கு மற்றும்‌ அவர்களின்‌ உடல்நலம்‌ மற்றும்‌ பொது நலனை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு; (1) இப்பல்கலைக்கழகத்தின்‌ நிலைக்‌ கொடைகளையும்‌ பிற சொத்துக்களையும்‌ மற்றும்‌ நிதியங்களையும்‌ வைத்திருப்பதற்கு மற்றும்‌ மேலாண்மை செய்வதற்கு; (12) இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களுக்காக இப்பல்கலைக்கழகத்தின்‌ சொத்துப்‌ பிணையத்தின்‌ மீது அரசின்‌ ஒப்புதல்‌ அளிப்புடன்‌, கடன்‌ வாங்குவதற்கு; (18) கட்டணங்கலை நிருணயிருப்பதற்கு, மற்றும்‌ வகுத்துரைக்கப்‌ படக்கூடிய கட்டணங்களைக்‌ கோருவதற்கு மற்றும்‌ பெறுவதற்கு; (14) தேசிய மாணவர்‌ படையின்‌ (66) பேணுகைக்காக இப்பல்கலைக்கழகத்து நிதியங்களிலிருந்து மானியங்களை அளிப்பதற்கு; (18) (8) வெளியீட்டு அமைப்பொன்றை; (௦) வேலைவாய்ப்பு அமைப்பொன்றை; 6) மாணவர்‌ சங்கங்களை; e ) d) பல்கலைக்கழக உடற்பயிற்சி குழுகம்களை; மற்றும்‌ ) அவை போன்ற பிற சங்கங்களை; தொடங்குவதற்கு மற்றும்‌ நிதியங்களை நிறுவுவதற்கு. (16) பல்கலைக்கழகத்தின்‌ ஒரேமாதிரியான பொருள்‌ மற்றும்‌ நோக்கங்களையும்‌ அத்தகைய வரையறைகள்‌ மற்றும்‌ வரைக்கட்டுகள்‌ அடிப்படையில்‌ அமைக்கின்ற பிற பல்கலைக்கழகம்‌, அதிகார அமைப்பு அல்லது சங்கம்‌ அல்லது பிற பொது அல்லது தனியார்‌ அமைப்பு ஆகியவற்றிற்கிடையே ஒத்துக்கொண்டிருக்கின்ற நோக்கங்களை மேம்படுத்தும்‌ வகையில்‌ ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு காலத்திற்கேற்றவாறு வகுத்துரைக்கப்படும்‌. (17) இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களை கூடுதலாக்குவதற்கு தேவையான அல்லது விரும்பத்தக்க அத்தகைய பிற செயல்கள்‌ அல்லது பொருட்பாடுகள்‌ அனைத்தையும்‌ பொதுவாகச்‌ செய்வதற்கு: (16) நடைமுறையில்‌ உள்ள சட்டத்திற்கு இணங்க தொலைதூரத்‌ கல்வி முறையின்‌ வாயிலாக பாடவகை பயிலாறுகளை படிப்பதற்காக இசைவு தெரிவிப்பதற்கு; (9) நடைமுறையில்‌ உள்ள சட்டத்திற்கு இணங்க இந்தியா அல்லது இந்தியாவிற்கு வெளியே உள்ள பகுதி எதிலும்‌ கல்விமையம்‌ ஒன்றை அமைப்பதற்கும்‌ பராமரிப்பதற்கும்‌; 5. (0) அரசு “பல்கலைக்கழகத்துடன்‌ தொடர்புடைய பொருட்பாடு எதனைப்‌ பொறுத்தும்‌, தரம்‌ பணிக்கக்‌ கூடிய அத்தகைய நபரால்‌ அல்லது நபர்களால்‌ விசாரணையைச்‌ செய்வதற்கு உரிமை பெற்றிருக்கும்‌. (2) அரசு ஒவ்வொரு நேர்விலும்‌, விசாரணையை செய்விப்பதற்கான தனது எண்ணம்‌ குறித்து பல்கலைக்கழகத்திற்கு அறிவிப்பு கொடுத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகம்‌ அத்தகைய விசாரணையில்‌ சார்பாற்றம்‌ செய்வதற்கு உரிமையுடையதாக இருக்கும்‌. @ அரசு அத்தகைய விசாரணையின்‌ முடிவுகள்‌ குறித்து தமது கருத்துக்களை: பல்கலைக்கழகத்திற்கு தெரிவித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதன்‌ பின்பு அதன்‌ பேரிலான பல்கலைக்கழகத்தின்‌ கருத்தை கண்டறிந்த பின்பு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்னவென்பது குறித்து இப்பல்கலைக்கழகத்திற்கு ஆலோசனை கூறலாம்‌; மேலும்‌ அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக காலவரம்பினையும்‌ நிர்ணயிக்கலாம்‌; @ பல்கலைக்கழகம்‌ அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பிற்குள்‌, அரசினால்‌ வழங்கப்பட்ட ஆலோசனையின்பேரில்‌ எடுக்கப்பட்டுள்ள அல்லது எடுக்கக்‌ கருதியுள்ள நடவடிக்கையை அரசுக்கு அனுப்புதல்‌ வேண்டும்‌; (6) பல்கலைக்கழகமானது நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள்‌ நடவடிக்கை எதனையும்‌ எடுக்காதவிடத்து அல்லது பல்கலைக்‌ கழகத்தால்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கை அரசின்‌ கருத்தில்‌ மனநிறைவடையாதிருக்குமிடத்து அரசானது, பல்கலைக்கழகத்தால்‌ கொடுக்கப்பட்ட விளக்கம்‌ எதனையுமோ அல்லது செய்யப்பட்ட முறையீடு எதனையுமோ பரிசீலினை செய்ததற்குப்‌ பின்னர்‌ அரசு தக்கதென கருதக்‌ கூடிய பணிப்பாணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌ மற்றும்‌ பல்கலைக்கழக்மானது அத்தகைய பணிப்பாணைகளுக்கு இணங்கி நடத்தல்‌ வேண்டும்‌. (6) அரசால்‌ இதன்‌ பொருட்டு நிர்ணயிக்கப்படலாகும்‌ அத்தகைய காலத்திற்குள்‌ கல்வி மன்றம்‌ அல்லது ஆட்சிகுழு அத்தகைய பணிப்பாணைகளை நிறைவேற்றாத நேர்வில்‌, அரசானது, அவைகளை நிறைவேற்றுவதற்காக சிலநபரை அல்லது அமைப்பை பணியமர்த்தம்‌ செய்வதற்கு அதிகாரம்‌ கொண்டிருக்கும்‌. பார்வையிடுதல்‌.. அத்தியாயம்‌-।॥ பல்கலைக்‌ கழகத்தின்‌ அலுவலர்கள்‌. 6. இப்பல்கலைக்கழகம்‌ பின்வரும்‌ அலுவலர்களைக்‌ கொண்டிருக்கும்‌, அதாவது:-- (1) வேந்தர்‌. (2) இணைவேந்தர்‌; (3) துணைவேந்தர்‌; (4) பதிவாளர்‌; (6) புலங்களின்‌ தலைர்கள்‌; (6) நிதி அலுவலர்‌; (7) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, மற்றும்‌ (6) இப்பல்கலைக்ககழகத்தின்‌ அலுவலர்கணனனன நிலையமை விதிகளால்‌ விளம்பப்படக்கூடிய அத்தகைய பிற நபர்கள்‌. 7. () தமிழ்நாடு ஆளுநர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ வேந்தராக இருப்பார்‌. @ வேந்தர்‌. இப்பல்கலைக்கழகத்தின்‌ தலைவராக இருப்பார்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டமளிப்பு விழா எதற்கும்‌ வந்திருக்கும்போது அதற்கு தலைமை வகித்து, பட்டங்கள்‌, விருதுகள்‌, பட்டயங்கள்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புச்‌ சீர்மைகளைப்‌ பெற உரிமையுடையவர்களுக்கு வழங்குவார்‌. @) நபர்‌ எவருக்கும்‌, வேந்தரின்‌ முந்தைய ஒப்புதளிப்பின்றி இப்பல்கலைக்கழகத்தால்‌ மதிப்புறு பட்டம்‌ அல்லது பிற சிறப்புரிமை எதுவும்‌ வழங்கப்படுதலாகாது.. @) வேந்தர்‌, இந்தச்‌ சட்டத்தினாலோ, அல்லது அதன்‌ வழியாலோ அவருக்கு வழங்கப்படலாகிறவாறான அத்தகைய பிற அதிகாரங்களை பயன்படுத்துவார்‌ அல்லது விதிக்கப்படும்‌ அத்தகைய பிற கடமைகளை செய்வார்‌. 8. () தமிழ்நாடு மாநிலத்தில்‌ உயர்க்கல்வித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அமைச்சர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ இணை வேந்தராக இருப்பார்‌. @) வேந்தர்‌ வராதிருக்கும்போது அல்லது வேந்தர்‌ செயற்பட இயலாது இருக்கும்போது இணைவேந்தர்‌, வேந்தரின்‌ அனைத்து அதிகாரங்களையும்‌ செலுத்தி அனைத்து கடமைகளையும்‌ ஆற்றுதல்‌ வேண்டும்‌. (3) இணை வேந்தர்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ மூலமாக அல்லது அதன்படி தமக்கு வழங்கப்‌ படக்‌ கூடிய அதிகாரங்களைச்‌ செலுத்துவார்‌ மற்றும்‌ பிற கடமைகளைச்‌ செய்வார்‌. 9. () துணை வேந்தரின்‌ பணியமர்த்தம்‌ ஒவ்வொன்றும்‌, (2)ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள குழுவினால்‌ பரிந்துரைக்கப்பட்ட மூன்று பெயர்களைக்‌ கொண்ட தேர்வு பெயர்‌ பட்டியல்‌ ஒன்றிலிருந்து வேந்தரால்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய தேர்வு பெயர்‌ பட்டியலில்‌ மேற்சொன்ன குழுவின்‌ உறுப்பினர்‌ எவருடைய பெயரும்‌ அடங்கியிருத்தல்‌ ஆகாது; வரம்புரை.--ஆனால்‌ அக்குழுவினால்‌ அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட தேர்வு பெயர்ப்பட்டியலில்‌ உள்ள நபர்களில்‌ எவரொருவருக்கும்‌ வேந்தரானவர்‌ ஒப்புதல்‌ அளிக்கவில்லையாயின்‌, (2) ஆம்‌ உட்பிரிவிற்கிணங்கிய வகையில்‌ மூன்று வேறுபட்ட பெயர்களைக்‌ கொண்ட புதிய பெயர்ப்‌ பட்டியலை கொடுப்பதற்கு அவர்‌ மற்றொரு குழுவினை அமைத்துருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்‌ மற்றும்‌ அவர்‌ புதிய பெயர்ப்பட்டியலில்‌ பெயர்க்குறிப்பிட்டுள்ள நபர்களில்‌ எவரொருவரையும்‌ துணைவேந்தராக நியமிக்க வேண்டும்‌. @. (௫ஆம்‌ உட்பிரிவின்‌ நோக்கத்திற்காக, அக்குழு, மூவரைக்‌ கொண்டிருக்கும்‌; அவர்களில்‌ ஒருவர்‌ வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌, ஒருவர்‌ அரசால்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ ஒருவர்‌ ஆட்சிக்குழுவால்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை.--ஆனால்‌, அவ்வாறு பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பட்ட நபர்‌ எவரும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ ஏதொன்றின்‌ உறுப்பினர்‌ ஒருவராக இருத்தலாகாது. (3) துணைவேந்தர்‌ மூன்றாண்டு கால அளவுக்குப்‌ பதவி வகிப்பார்‌. மேற்கொண்டும்‌ மற்றொரு மூன்றாண்டுக்‌ கால அளவுக்கு மறுபடியும்‌ பணியமர்த்தம்‌ செய்வதற்காக தகுதியுடையவர்‌ ஆவார்‌: அலுவலர்கள்‌. வேந்தர்‌. இணைவேந்தர்‌. துணை வேந்தர்‌. வரம்புரை.--ஆனால்‌ துணை வேந்தர்‌, வேந்தருக்கு தம்‌ கைப்பட முகவரியிட்டு எழுத்து வாயிலாக மற்றும்‌ இரண்டு திங்கள்‌ கால அறிவிப்பு கொடுத்ததற்குப்‌ பின்பு பதவியை விட்டு விலகலாம்‌. மேலும்‌ வரம்புரை.-- ஆனால்‌ துணைவேந்தராக பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட ஒருவர்‌ தம்முடைய அலுவலக பதவிகாலத்தின்‌ போதோ அல்லது அதன்‌ நீட்டிப்பு எதனின்போதோ எழுபது வயதினை: அவர்‌ நிறைவெய்துவாரானால்‌, பதவியிலிருந்து ஒய்வு பெறுதல்‌ வேண்டும்‌. @) துணை வேந்தரின்‌ பதவியில்‌ தற்காலிக காலியிடம்‌ ஏதேனும்‌ ஏற்படும்போது அல்லது அத்துணைவேந்தர்‌ நோய்வாய்ப்படும்‌ காரணத்தினால்‌ பணிக்கு வராமை என்ற காரணத்தாலோ அல்லது ஏதேனும்‌ பிற காரணத்தாலோ, தம்முடைய பதவியின்‌ அதிகாரங்களை செலுத்துவதற்கு மற்றும்‌ கடமைகளைப்‌ புரிவதற்கு இயலாதிருப்பாரானால்‌, ஆட்சிக்குழுவானது, துணைவேந்தரின்‌ அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவதற்கும்‌, கடமைகளை புரிந்து வருவதற்கும்‌ தேவையான ஏற்பாடுகளை செய்கிறவரையில்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ முதுநிலைப்‌ பேராசிரியர்‌, துணைவேந்தரின்‌ அதிகாரங்களை செலுத்தி வரலாம்‌ மற்றும்‌ கடமைகளைப்‌ புரிந்து வரலாம்‌. (9) துணைவேந்தர்‌, இப்பல்கலைக்‌ கழக்கத்தின்‌ ஒரு முழு நேர அலுவலராக இருப்பார்‌; மற்றும்‌ அவருடைய ஊதியங்களும்‌ பணியின்‌ பிற வரையறைகள்‌ மற்றும்‌ வரைக்‌ கட்டுகள்‌ பின்வருமாறு இருத்தல்‌ வேண்டும்‌:- (8) துணைவேந்தருக்கு திங்களொன்றிற்கு ஐயாயிரம்‌ ரூபாய்‌ சிறப்புப்‌ படிகளுடன்‌: எழுபத்தைந்தாயிரம்‌ ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட சம்பளமும்‌ அல்லது அரசால்‌ காலத்திற்கேற்ப நிர்ணயிக்கப்படக்கூடிய உயர்ந்த சம்பளம்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவருடைய பதவிக்‌ காலம்‌ முழுவதும்‌ அறைகலன்களுடனான குடியிருப்பொன்றை (Furnished Residence) வாடகை செலுத்தமின்றிப்‌ பயன்படுத்துவதற்கு அவர்‌ தகுதியுடைவராவார்‌: மேலும்‌ அவர்‌ குடியிருப்பை பேணி வருவது பொறுத்த செலவுப்‌ பொறுப்பு எதுவும்‌ தனிப்பட்டு அத்துணைவேந்தரை சார்தல்‌ ஆகாது. அவர்‌, நிலையமை விதிகளில்‌ வகை செய்யக்கூடிய அத்தகைய பிற இடை ஆதாயம்‌ (perquisites) பெற உரிமையுடையவராக இருக்கலாம்‌. (௦) துணை வேந்தர்‌, காலத்திற்கேற்ப வேந்தரின்‌ ஒப்புதளிப்புடன்‌, ஆட்சிக்குழுவால்‌ தீர்மானிக்கப்படக்கூடிய பணிமுடிவுநிலை நன்மைகள்‌ (Terminal Benefits) மற்றும்‌ படிகளை: பெற தகுதியுடையவராவார்‌. வரம்புரை.--ஆனால்‌, (i) இப்பல்கலைக்கழகத்தின்‌, அல்லது (i) பிற பல்கலைக்கழகத்தின்‌ அல்லது கல்லூரியின்‌ அல்லது நிறுவனம்‌ எதனின்‌: பணியாளர்‌ ஒருவர்‌ துணைவேந்தராக நியமிக்கப்படுமிடத்து, அவர்‌ தொகையளிப்புச்‌ செய்பவராக உள்ள வருங்கால வைப்பு நிதியத்திற்கு தொடர்ந்து தொகையளிக்க அவர்‌ அனுமதிக்கப்‌ பெறுவார்‌. மேலும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ பங்களிப்பானது, துணை வேந்தராக அவர்‌ நியமிக்கப்படுவதற்கு அடுத்து முன்பு அவர்‌ பங்களித்திருந்த அந்த அளவுக்கு வரையறை செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (6) துணைவேந்தர்‌ ஆட்சிக்குழுவினால்‌ தீர்மானிக்கப்படக்கூடிய அத்தகைய வீதங்களில்‌ பயணப்‌ படிகளை பெற தகுதியுடைவராயிருப்பார்‌: (0) துணைவேந்தர்‌ செயலார்ந்த பணியிருக்கையில்‌ அவரால்‌ பணியில்‌ செலவழிக்கப்பட்ட கால அளவுகளில்‌ பதினொன்றில்‌ ஒரு பங்கு அளவுக்கு முழுச்‌ சம்பளம்‌ அடிப்படையிலான ஈட்டிய விடுப்பு பெறுவதற்கு அவர்‌ உரிமைத்‌ தகுதியுடையவராயிருப்பார்‌: வரம்புரை.--ஆனால்‌ துணைவேந்தர்‌ பதவிக்காலம்‌ முடிவடையும்‌ தேதிக்கு முன்பு போதிய காலத்திற்குள்‌ அத்துணை வேந்தரால்‌ ஈட்டிய விடுப்பு விண்ணப்பிக்கப்படும்பொழுது இப்பல்கலைக்கழகத்தின்‌ நலன்‌ கருதி வேந்தரால்‌ மறுக்கப்படுகிறபோது மற்றும்‌ தம்முடைய பதவிக்காலம்‌ முடிவடையும்‌ தேதிக்கு முன்பு அவ்விடுப்பினை அவர்‌ எடுக்காமல்‌ இருக்கும்போது, பெருமளவு இருநூற்று நாற்பது நாட்களுக்கு உட்பட்டு, தம்முடைய கணக்கில்‌ இருப்பில்‌ உள்ள ஈட்டிய விடுப்பை பொறுத்து, அவருடைய பதவியை துறந்த பின்பு விடுப்பு சம்பளத்திற்கு சம மதிப்புள்ள பணத்தைப்‌ பெறுவதற்கு அவர்‌ தகுதி உடையவராய்‌ இருப்பார்‌. (6) துணை வேந்தரானவர்‌ அவர்தம்‌ பதவிக்‌ காலத்தின்‌ போது மூன்று திங்களுக்கு மேற்படாத கால அளவு ஒன்றுக்கான சம்பளமின்றி மருத்துவக்‌ காரணங்களுக்காக அல்லது பிறவாறான அடிப்படையில்‌ விடுப்பில்‌ செல்வதற்கு தகுதி உடையவராவார்‌: வரம்புரை.--ஆனால்‌, அத்தைய விடுப்பானது, (0) கூறின்படி எந்த அளவுக்கு ஈட்டிய விடுப்பு பெற அவர்‌ உரிமைத்‌ தகுதியுடையவராயிருக்கின்றாரோ அந்த அளவுக்கு முழுச்‌ சம்பளத்துடன்‌ கூடிய விடுப்பாக மாற்றிக்‌ கொள்ளப்படலாம்‌. (6) இந்தச்‌ சட்டத்தின்‌ வகையங்களை நிறைவேற்றுவதற்கு வேண்டுமென்றே விடப்பட்ட தவறுகை அல்லது மறுக்கிற காரணத்தின்‌ அடிப்படையில்‌ அல்லது அவரிடம்‌ உற்றமைந்துள்ள அதிகாரங்களை தவறாகப்‌ பயன்படுத்துவதன்‌ பேரில்‌ மற்றும்‌ (7) ஆம்‌ உட்பிரிவின்படி அரசால்‌ ஆணையிடப்பட்ட விசாரணை அறிக்கையினை ஓர்வு செய்வதன்‌ அடிப்படையில்‌ அரசால்‌ வழங்கப்பட்ட அறிவுரையின்பேரில்‌ வேந்தரால்‌ வழங்கப்பட்ட ஆணை ஒன்றினால்‌ தவிர அவர்‌ பதவியிலிருந்து நீக்கப்படுதல்‌ ஆகாது. (7). (6ஆம்‌ உட்பிரிவின்படியான விசாரணை ஒன்றை நடத்தும்‌ நோக்கத்திற்காக, அரசு உயர்நீதிமன்றத்தில்‌ நீதிபதியாக இருக்கிற அல்லது இருந்திருக்கிற அல்லது அரசின்‌ தலைமைச்‌ செயலாளர்‌ படிநிலைக்கு குறையாத அரசின்‌ அலுவலராக இருக்கிற நபர்‌ ஒருவரை அமர்த்துதல்‌ வேண்டும்‌. அந்த விசாரணை அதிகார அமைப்பு துணைவேந்தரால்‌ சார்பாற்றம்‌ செய்வதற்கு வாய்ப்பு ஒன்றினை கொடுத்தப்‌ பின்னர்‌ விசாரணையை நடத்தலாம்‌ மற்றும்‌ விதிக்கப்பட்ட ஏதேனும்‌ தண்டம்‌ உள்ளடங்கலாக எடுக்கப்பெறும்‌ நடவடிக்கையின்‌ பேரில்‌ அரசுக்கு அறிவிக்கை ஒன்றை சமர்ப்பிக்கலாம்‌ மற்றும்‌ அரசு, வேந்தரின்‌ அறிவுரை அறிக்கையின்‌ ஒர்வின்‌ பேரில்‌ அறிவுறுத்தலாம்‌. வேந்தர்‌ மூன்று மாதங்களுக்குள்‌ எந்த நேர்விலும்‌ இயலுமளவு அத்தகைய அறிவுரைக்கு இணங்க செயல்படலாம்‌. 10. () துணை வேந்தர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ கல்வித்‌ தலைவராகவும்‌, முதன்மை நிர்வாக அலுவலராகவும்‌ இருந்து வருவார்‌. துணைவேந்தரின்‌ அதிகாரங்களும்‌ கடமைகளும்‌. (9) துணை வேந்தரானவர்‌, வேந்தரும்‌, இணைவேந்தரும்‌ வருகை தராதபோது, இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டமளிப்பு விழா எதிலும்‌ தலைமை வகித்து பட்டங்களை, விருதுகளை, பட்டயங்களை அல்லது பிற கல்விச்‌ சிறப்புச்‌ சீர்மைகளைப்‌ பெறுவதற்கு தகுதியுடையவர்களுக்கு வழங்குவார்‌. (3) துணை வேந்தர்‌, பல்கலைக்கழகத்தின்‌ அலுவல்கள்‌ மீது கட்டுப்பாட்டைச்‌ செலுத்துவதற்கும்‌ பல்கலைக்கழகத்தில்‌ உரிய முறையில்‌ ஒழுக்கத்தினைப்‌ பேணுவதற்கும்‌ பொறுப்பினையுடையவராக இருத்தல்‌ வேண்டும்‌. @) துணை வேந்தரானவர்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ அதன்படி செய்யப்பட்ட நிலையமை விதிகள்‌, அவசரச்‌ சட்டங்கள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகளின்‌ வகைமுறைகள்‌ உண்மையிலேயே பின்பற்றப்படுகின்னனவா என்பதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌; (8) நெருக்கடியான காலம்‌ எதிலும்‌ துணை வேந்தர்‌ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது தேவையானது எனக்‌ கருதுவாராயின்‌ அவர்‌, ஆணையின்‌ வாயிலாக அவசியமானது என அவர்‌ கருதுகிற நடவடிக்கையை எடுத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவர்‌ எடுத்த நடவடிக்கை பற்றிய அறிக்கையை, எந்த அலுவலர்‌ அல்லது அதிகார அமைப்பானது வழக்கமான முறையில்‌ அந்தப்‌ பொருட்பாட்டின்‌ மீது நடவடிக்கை எடுக்குமோ அத்தகைய அலுவலருக்கு, அதிகார அமைப்புக்கு அல்லது அமைப்புக்கு எவ்வளவு விரைவில்‌ அனுப்ப முடியுமோ அந்த அளவிற்கு விரைவாக அனுப்புதல்‌ வேண்டும்‌. வரம்புரை.--ஆனால்‌ அத்தகைய ஆணை எதுவும்‌, பாதிக்கப்படக்‌ கூடியவருக்கு கேட்கப்‌ படுவதற்கான நியாயமானதொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, நிறைவேற்றப்படுதலாகாது. (6) இ ஆம்‌ உட்பிரிவின்படி துணை வேந்தரின்‌ ஆணை எதனாலும்‌ குறையுற்ற ஒருவர்‌, அத்தகைய ஆணையானது தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்ளாக ஆட்சிக்‌ குழுவிற்கு மேல்‌ முறையீடு ஒன்றினை தாக்கல்‌ செய்யலாம்‌. மற்றும்‌ துணை வேந்தர்‌ அத்தகைய மேல்‌ முறையீட்டின்‌ மீது ஆட்சிக்‌ குழுவினால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணைக்குச்‌ செல்திறம்‌ அளிப்பார்‌. (7) துணை வேந்தர்‌, பல்கலைக்கழகத்தில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற நபர்களின்‌ பணியமர்த்தம்‌, தற்காலிக பணி நீக்கம்‌ மற்றும்‌ பணியறவு தொடர்பான. ஆட்சிக்குழுவின்‌ முடிவிற்கு செல்திறம்‌ அளிப்பார்‌. (ஐ) துணை வேந்தர்‌, ஆட்சிக்குழு, கல்விமன்றம்‌ மற்றும்‌ நிதிக்குழு ஆகியவற்றின்‌. பதவிவழி தலைவராக இருப்பார்‌. துணைவேந்தர்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பு எதனின்‌ கூட்டமெதிலும்‌ வந்திருந்து உரை நிகழ்த்துவதற்கு தகுதியுடையவராயிருப்பார்‌; ஆனால்‌, அத்தகைய அதிகார அமைப்பின்‌ அல்லது அமைப்பின்‌ உறுப்பினர்‌ ஒருவராக அவர்‌ இருந்தாலன்றி அதில்‌ வாக்களிக்க உரிமையுடைவராக இருக்க மாட்டார்‌. (6) துணை வேந்தர்‌, ஆட்சிக்குழு, கல்விமன்றம்‌, நிதிக்குழு ஆகியவற்றின்‌ கூட்டங்ளைக்‌ கூட்டலாம்‌. (10) துணை வேந்தர்‌, கற்பித்தல்‌ மற்றும்‌ ஆராய்ச்சி விரிவாக்கக்‌ கல்வி மற்றும்‌ பாடத்திட்ட மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒழுங்கிணைப்பிற்கும்‌ ஒருமைப்பாட்டிற்கும்‌ பொறுப்புடையவராயிருப்பார்‌. (1) துணை வேந்தர்‌, நிலையமை விதிகளின்‌ மூலம்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவார்‌ மற்றும்‌ பிற கடமைகளைப்‌ புரிந்து வருவார்‌. 11. () பதிவாளர்‌ ஆட்சிக்குழுவினால்‌ பணியமர்த்தம்‌ செய்யப்படும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌. சம்பளம்‌ பெறும்‌ முழுநேர அலுவலராக இருத்தல்‌ வேண்டும்‌. தகுதிகளும்‌ நியமன முறையும்‌ வகுத்துரைக்கப்படக்கூடியவாறு இருத்தல்‌ வேண்டும்‌. பதிவாளரின்‌ பணி குறித்த வரையரைகளும்‌ வரைக்கட்டுகளும்‌ பின்வருமாறு இருத்தல்‌ வேண்டும்‌:- ) பதிவாளர்‌ பதவியை வகிப்பவர்‌, பல்கலைக்கழகத்தில்‌ பேராசிரியர்‌ ஒருவரின்‌. படிநிலைக்கு குறையாத கல்வியாளர்‌ ஒருவராக இருத்தல்‌ வேண்டும்‌. (b) பதிவாளர்‌, மூன்றாண்டு கால அளவுக்கு பதவியிலிருப்பார்‌: வரம்புரை:--ஆனால்‌, பதிவாளர்‌ அறுபது வயது வரையிலும்‌ அல்லது இந்தக்‌ கூறில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவு முடிவடைந்ததும்‌ இவற்றில்‌ எது முந்தியோ அதன்‌. பேரில்‌, ஒய்வு பெறுதல்‌ வேண்டும்‌. பதிவாளரின்‌ ஊதியங்களும்‌ பணி குறித்த வரையரைகளும்‌ வரைக்கட்டுகளும்‌ வகுத்துரைக்கப்படக்‌ கூடியவாறு இருத்தல்‌ வேண்டும்‌. (6) பதிவாளரின்‌ பதவி காலியாக இருக்கும்போது அல்லது பதிவாளர்‌ நோய்வாய்ப்படுவதால்‌ பணிக்கு வராது இருக்கின்ற காரணத்தால்‌ அல்லது பிற காரணம்‌ எதற்காகவேனும்‌ தம்முடைய பதவிக்‌ கடமைகளை ஆற்றுவதற்கு இயலாதவராக இருக்கும்போது பதிவாளரின்‌ பதவிக்‌ கடமைகள்‌ அந்த நோக்கத்திற்காக துணைவேந்தரால்‌ பணியமர்த்தம்‌ செய்யப்படும்‌ ஒருவரால்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. @ (8) பதிவாளர்‌, பல்கலைக்கழக ஆசிரியர்கள்‌ மற்றும்‌ கல்வித்‌ துறை பணியாளர்கள்‌. ஆட்சிக்‌ ழுலின்‌ ஆணைகளில்‌ குறிப்பிடப்படக்கூடிய கல்விப்பணியாளர்கள்‌ நீங்கலாக அத்தகைய பணியாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு விசாரணை நிலுவையிலுள்ளபோது அவர்களை தற்காலிக வேலை நீக்கம்‌ செய்வதற்கும்‌ அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு அல்லது அவர்கள்‌ மீது கண்டனத்‌ தண்டனை விதிப்பதற்கு அல்லது சம்பள உயர்வை நிறுத்தி வைப்பதற்கு அதிகாரத்தைப்‌ பெற்றிருப்பார்‌. வரம்புரை:--ஆனால்‌ அத்தகைய தண்டனை எதுவும்‌ தொடர்புடையவருக்கு, அவரை பொறுத்து எடுக்கக்‌ கருதியுள்ள நடவடிக்கைகெதிராக காரணம்‌ காட்டுவதற்காக நியாயமானதொரு வாய்ப்பு ஒன்று அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, விதிக்கப்படுதலாகாது. (௦). (8) எனும்‌ கூறில்‌, குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகளில்‌ எதையும்‌ விதிக்கின்ற பதிவாளரின்‌ ஆணை எதற்கும்‌ எதிராக துணைவேந்தரிடம்‌ மேல்முறையீடு ஒன்றைச்‌ செய்யலாம்‌; ) பதிவாளரின்‌ அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு தண்டனை தேவைப்படுகிறது என்று அந்த விசாரணை வெளிப்படுத்துகிற நேர்வு எதிலும்‌, பதிவாளர்‌ அந்த விசாரணையின்‌ முடிவின்‌ பேரில்‌ அறிக்கை ஒன்றை, தம்முடைய பரிந்துரைகளோடு துணைவேந்தருக்கு கொடுத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ துணைவேந்தர்‌, தண்டனை எதனையும்‌ விதிக்கின்ற ஆணை ஒன்றினை பிறப்பிக்கலாம்‌. வரம்புரை:--ஆனால்‌, தண்டனை எதையும்‌ விதிக்கின்ற துணைவேந்தரின்‌ ஆணை ஒன்றுக்கு எதிராக ஆட்சிக்குழுவிடம்‌ மேல்முறையீடு ஒன்றினைச்‌ செய்யலாம்‌. (0). 6) எனும்‌ கூறின்படி அல்லது () எனும்‌ கூறின்படி மேல்முறையீடு எதுவும்‌, எந்த ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதோ அந்த ஆணையை விண்ணப்பதாரர்‌ பெற்ற தேதியிலிருந்து அறுபது நாட்கள்‌ முடிவடைந்த பின்பு தேர்வு செய்யப்படுதலாகாது.. (௫) இந்தச்‌ சட்டத்தில்‌ பிறவாறு வகை செய்யப்பட்டுள்ளவாறு தவிர, பதிவாளர்‌, ஆட்சிக்குழு, கல்விக்குழு, புலங்கள்‌ (Faculties), படிப்புகளின்‌ அமைப்பு ஆகியவற்றின்‌ பதவிவழிச்‌ பதிவாளர்‌. செயலாளராக இருந்து வருவார்‌. ஆனால்‌, இந்த அதிகார அமைப்புகளில்‌ ஏதொன்றின்‌. உறுப்பினராக இருக்கிறார்‌ எனக்‌ கொள்ளப்படுதல்‌ ஆகாது. (௫). (8) ஆட்சிக்குழுவால்‌ அவரது பொறுப்பில்‌ ஒப்படைக்கலாகும்‌ பதிவுக்கட்டுகளையும்‌, தனித்த இலச்சினையையும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பிற சொத்துக்களையும்‌ தன்‌ நிர்வாகத்தின்கீழ்‌ தன்னகத்தே கொண்டு அதன்‌ பாதுகாவலராக இருப்பது; (8) ஆட்சிக்குழுவின்‌, கல்விமன்றத்தின்‌, புலங்களின்‌ (8௦0106, பாடத்திட்டக்‌ குழுமங்களின்‌, தேர்வுக்‌ குழுக்களின்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளினால்‌ நியமிக்கப்படும்‌ குழு ஏதொன்றின்‌ கூட்டங்களையும்‌ கூட்டுகிற அறிவிப்பு அனைத்தையும்‌ வழங்குவது; (6) ஆட்சிக்குழுவின்‌, கல்விமன்றத்தின்‌, புலங்களின்‌, பாடத்திட்டக்குழுக்களின்‌ தேர்வுக்‌ குழுக்களின்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளினால்‌ பணியமர்த்தம்‌ செய்யப்படும்‌ குழு எதனின்‌ கூட்ட நடவடிக்கைகள்‌ அனைத்தையும்‌ பற்றிய நடவடிக்கைக்‌ குறிப்புகளை வைத்து வருவது. (6) ஆட்சிக்குழுவின்‌ கடிததொடர்பை நடத்துவது; (6) இப்பல்கலைக்‌ கழகத்தின்‌ அதிகார அமைப்புக்‌ கூட்டங்களின்‌ பொருள்‌ நிரலின்‌ படிகளை, அவை வழங்கப்பட்டவுடன்‌ விரைவில்‌ அத்தகைய கூட்ட நடவடிக்கைகளின்‌ விவரக்‌ குறிப்புகளையும்‌ வேந்தருக்கு வழங்குவது; மற்றும்‌ (f) நிலையமை விதிகளில்‌, அவசரக்‌ சட்டங்களில்‌ அல்லது ஒழுங்குமுறை விதிகளில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய அல்லது ஆட்சிக்குழுவாலோ, துணை வேந்தராலோ, காலத்திற்கேற்ப கோரப்படக்கூடிய பிற அதிகாரங்களை செலுத்திவருவதும்‌ பிற கடமைகளை புரிந்து வருவதும்‌ பதிவாளரின்‌ கடமையாக இருத்தல்‌ வேண்டும்‌. (9 இப்பல்கலைக்கழகத்தினால்‌ அல்லது அதற்கு எதிராகத்‌ தொடரப்படும்‌ உரிமை வழக்குகள்‌ மற்றும்‌ எடுக்கப்படும்‌ பிற சட்ட நடவடிக்கைகள்‌ அனைத்திலும்‌ வாதுரைகள்‌ (Pleadings) பதிவாளரால்‌ கையொப்பமிடப்பட்டு சரி பார்க்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய உரிமை வழங்குகளில்‌ மற்றும்‌ நடவடிக்கைகளில்‌ நீதிமுறைக்‌ கட்டளைகள்‌ (Processes) அனைத்தும்‌ பதிவாளருக்கு விடுக்கப்பட்டு, அவருக்குச்‌ சார்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌; 12. (1) புலத்தலைவர்‌ ஒவ்வொருவரும்‌, அந்தப்‌ புலத்தில்‌ பணியாற்றும்‌ பேராசிரியர்களுக்கிடையேயிருந்து மூன்றாண்டுக்கால அளவிற்குத்‌ துணைவேந்தரால்‌ பணியமர்த்தம்‌ செய்யப்பெறுவர்‌. மீண்டும்‌ அப்பதவியில்‌ மறுபடியும்‌ அமர்த்தப்‌ பெறுவதற்கு அவர்‌ தகுமையுடையவராவார்‌. வரம்புரை.-- ஆனால்‌, ஒரு புலத்தலைவர்‌ அறுபது வயது நிறைவெய்தியவுடன்‌ அவர்‌ அப்பதவியை வகிப்பது அத்தகையவாறு அற்றுப்போகும்‌. மேலும்‌ வரம்புரை.--ஆனால்‌ ஒரு புலத்தில்‌ எச்சமயத்திலேனும்‌ பேராசிரியர்‌ எவரும்‌ இல்லாதிருப்பாராயின்‌ புலத்தலைவரின்‌ அதிகாரங்களைத்‌ துணை வேந்தரே செலுத்தலாம்‌. @) புலத்தலைவர்‌ பதவி காலியாக இருக்கும்போது அல்லது நோய்வாய்ப்பட்டிருப்பதனால்‌. வராத காரணத்தால்‌ அல்லது பிறகாரணம்‌ எதனாலும்‌ புலத்தலைவர்‌, தம்‌ பதவிக்‌ கடமைகளைப்‌ புரிவதற்கு இயலாதிருக்கும்‌ போது, அவரது பதவிக்‌ கடமைகளை அந்த நோக்கத்திற்காக துணைவேந்தரால்‌ பணியமர்த்தம்‌ செய்யப்படும்‌ ஒருவரால்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (3) ஒரு புலத்தின்‌ தலைவராக இருந்துவரும்‌ புலத்தலைவர்‌, அந்தப்‌ புலத்தின்‌ பாடங்கற்பித்தல்‌/தரங்களை பராமரித்தல்‌ மற்றும்‌ ஆராய்ச்சியை நடத்துவதற்காக பொறுப்புடையவர்‌ ஆவார்‌. துறை முறை விதிகளினால்‌ வகுத்துரைக்கப்படும்‌ பிற பதவிப்பணிகளையும்‌ அப்புலத்தலைவர்‌ ஆற்றி வருவார்‌. (4) பாடத்திட்டக்குழுக்களின்‌ அல்லது நேர்வுக்கேற்ப, குழுக்களின்‌ புலத்தின்‌ கூட்டம்‌ எதற்கும்‌ வந்திருக்கவும்‌ அதில்‌ உரையாற்றவும்‌ புலத்தலைவர்‌ உரிமை உடையவர்‌ ஆவார்‌. ஆனால்‌, அவர்‌ அதில்‌ ஓர்‌ உறுப்பினராக இருந்தாலன்றி, அந்தக்‌ கூட்டத்தில்‌ வாக்களிப்பதற்கு உரிமை உடையவர்‌ ஆகார்‌. தலைவர்‌. 13. () ஆட்சிக்‌ குழுவால்‌ பணியமர்த்தம்‌ செய்யப்படும்‌ நிதி அலுவலர்‌ இதன்‌ பொருட்டு ஆட்சிக்குழுவால்‌ குறித்துரைக்கப்படக்கூடிய கால அளவுக்கு இப்பல்கலைக்கழகத்தின்‌ பணியமர்த்தம்‌ செய்யப்படும்‌ சம்பளம்‌ பெறும்‌ முழுநேர அலுவலராக இருப்பார்‌. (2) நிதி அலுவலரின்‌ பணியமர்த்தம்‌ ஒவ்வொன்றும்‌, அரசினால்‌ மேற்குறித்து அனுப்பப்படும்‌ மூன்று அலுவலர்களைக்‌ கொண்ட பெயர்ப்‌ பட்டியல்‌ ஒன்றிலிருந்து துணைவேந்தரின்‌ பரிந்துரையின்பேரில்‌ ஆட்சிக்‌ குழுவால்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. @) நிதி அலுவலரின்‌ ஊதியங்களும்‌ பணி குறித்த வரையரைகள்‌ மற்றும்‌ வரைக்கட்டுகள்‌ வகுத்துரைக்கப்படக்கூடியவாறு இருத்தல்‌ வேண்டும்‌. @ நிதி அலுவலர்‌, ஐம்பத்தெட்டு வயதினை எய்தியதின்பேரில்‌ அல்லது (9-ஆம்‌ உட்பிரிவின்படி ஆட்சிக்குழுவினால்‌ குறித்துரைக்கப்படும்‌ கால அளவு முடிவடைவதன்பேரில்‌ இவற்றில்‌ எது முந்தியதோ அதன்பேரில்‌ ஒய்வு பெறுதல்‌ வேண்டும்‌. (6) நிதி அலுவலரின்‌ பதவி காலியாக இருக்கும்போது அல்லது நிதி அலுவலர்‌: நோய்‌ வாய்ப்பட்டு பணிக்கு வராமல்‌ இருக்கின்ற காரணத்தால்‌ அல்லது பிற காரணம்‌ எதனாலேனும்‌ தம்முடைய அலுவலகக்‌ கடமைகளை ஆற்றவதற்கு இயலாதவராக இருக்கும்போது அந்த நோக்கத்திற்காக துணைவேந்தர்‌ நியமிக்கக்கூடிய அத்தகைய நபரால்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (6) நிதி அலுவலர்‌, நிதிக்‌ குழுவிற்கு பதவி வழிச்‌ செயலாளராக இருப்பார்‌. ஆனால்‌, அவர்‌ அத்தகைய குழுவின்‌ உறுப்பினர்‌ ஒருவராகக்‌ கொள்ளப்படுதல்‌ ஆகாது. (7) நிதி அலுவலர்‌- @ இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதியங்களின்‌ மீது, பொதுவான கண்காணிப்பினைச்‌ செலுத்தி வருவார்‌ மற்றும்‌, அதனுடைய நிதிக்கொள்கை குறித்த பல்கலைக்கழகத்திற்கு ஆலோசனை வழங்குவார்‌; மற்றும்‌ (8) ஆட்சிக்‌ குழுவினால்‌ அவருக்கு குறித்தளிக்கப்படக்கூடிய அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய பிற அதிகாரங்களை மற்றும்‌ அத்தகைய பிற நிதி செயற்பணிகளைச்‌ செய்வார்‌. வரம்புரை.--ஆனால்‌ நிதி அலுவலர்‌, ஆட்சிக்குழுவின்‌ முன்‌ ஒப்புதளிப்பின்றி செலவு எதையும்‌ செய்தலாகாது அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய தொகைக்கு மேற்படும்‌ முதலீடு எதையும்‌ செய்தல்‌ ஆகாது. (8) ஆட்சிக்குழுவின்‌ கட்டுப்பாட்டு அதிகாரத்திற்குட்பட்டு, நிதி அலுவலர்‌, (8) ஒராண்டிற்கான தொடர்‌ மற்றும்‌ தொடராச்‌ செலவினங்களுக்காக ஆட்சிக்குழுவால்‌ நிருணயிக்கப்பட்ட வரம்புக்கு மேற்படாதவாறான பணங்கள்‌ அனைத்தையும்‌ அவை வழங்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்பட்ட நோக்கங்களுக்காகச்‌ செலவிடப்படுவதையும்‌ உறுதி செய்து கொள்வார்‌. (6) இப்பல்கலைக்கழகத்தின்‌ வரவு-செலவுத்‌ திட்டத்தின்‌ ஆண்டுக்கணக்குகள்‌, நிதி மதிப்பீடுகள்‌ வரவு செலவுத்‌ திட்டம்‌ ஆகியவற்றைத்‌ தயாரிப்பதற்காக மற்றும்‌ ஆட்சிக்குழுவிடம்‌ அவற்றை அளிப்பதற்கும்‌ பொறுப்புடையவராக இருப்பார்‌; (6) பணம்‌ மற்றும்‌ வங்கி இருப்புகளையும்‌ முதலீடுகளையும்‌ இடைவிடாது கண்காணித்து வருவார்‌; (0) வருவாய்‌ வசூலின்‌ வளர்ச்சியைக்‌ கண்காணித்து வசூல்‌ (தண்டல்‌) செய்வதற்குப்‌ பயன்படுத்தப்படும்‌ முறைகள்‌ குறித்து அதற்காகப்‌ பணியிலமர்த்தப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை வழங்குவார்‌; (6) கட்டடங்கள்‌, நிலங்கள்‌, அறைகலன்‌, சாதனங்கள்‌ ஆகியவற்றின்‌ பதிவேடுகள்‌ நாளது தேதிவரை வைத்துப்‌ பேணி வரப்படுவதையும்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணி வரப்படும்‌ அலுவலகங்களிலும்‌ உள்ள கருவிகள்‌ மற்றும்‌ பிற நுகர்‌ பொருட்களின்‌ சிறப்பு மையங்கள்‌, தனி சிறப்பு ஆய்வுக்‌ கூடங்கள்‌ ஆகிய இருப்பு நிலையைச்‌ சரிபார்க்கும்‌ பணி நடத்தப்படுவதையும்‌ உறுதி செய்வார்‌. நிதி அலுவலர்‌. மையச்‌ சட்டம்‌ XLV/1860. (f) அதிகாரமளிக்கப்படாத செலவினம்‌ எதுவும்‌ பற்றி அல்லது பிற நிதிசார்‌ முறைகேடு பற்றித்‌ துணைவேந்தரின்‌ கவனத்திற்கு கொண்டு வருவார்‌; மற்றும்‌ தவறு செய்துள்ளவர்‌ மீது எடுக்கப்பட வேண்டிய உரிய நடவடிக்கை குறித்து ஆலோசிப்பார்‌; மற்றும்‌ (9) தம்முடைய கடமைகளைச்‌ செய்து முடிப்பதற்காக தாம்‌ தேவையெனக்‌ கருதக்கூடிய தகவல்‌ அல்லது விவர அறிக்கைகள்‌ எவற்றையும்‌ இப்பல்கலைக்கழகத்தினால்‌ பேணி வரப்படும்‌ அலுவலகம்‌, துறை, மையம்‌, ஆய்வுக்‌ கூடம்‌ கல்லூரி ஆகிய எதிலிருந்தும்‌ கேட்கலாம்‌. (6) இப்பல்கலைக்கழகத்திற்கு செலுத்தத்‌ தக்க பணம்‌ எதற்காகவும்‌ நிதி அலுவலரோ அல்லது ஆட்சிக்‌ குழுவால்‌ இதற்கென உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட நபரோ அல்லது நபர்களோ, அளிக்கும்‌ பற்று சீட்டானது. அத்தகைய பணத்தை செலுத்தத்திற்கான போதிய விடுவிப்பு ஒன்றாக இருக்கும்‌. 14. (1) தேர்வுகளின்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய கால அளவுக்கும்‌, வரையுரைகள்‌ மற்றும்‌ வரைக்கட்டுகளின்‌ பேரில்‌ துணைவேந்தரின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ ஆட்சிக்குழுவால்‌ பணியமர்த்தம்‌ செய்யப்பட்டு, இப்பல்கலைக்கழகத்தின்‌ ஒரு கல்வியாளராகவும்‌ மற்றும்‌ ஒரு முழுநேர அலுவலராகவும்‌ இருப்பார்‌. (2) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவார்‌ மற்றும்‌ கடமைகளைச்‌ செய்து முடிப்பார்‌. 15. துணைவேந்தர்‌, பதிவாளர்‌, நிதி அலுவலர்‌, தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ மற்றும்‌ இப்பல்கலைக்‌ கழகத்தின்‌ பிற பணியாளர்கள்‌ ஆகியோர்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகை முறைகளில்‌ எதனையுமொட்டிச்‌ செயற்படுகின்றபோது அல்லது செயற்படுவதாகப்‌ புலப்படுகின்றபோது, இந்தியத்‌ தண்டனைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ 21 ஆம்‌ பிரிவின்‌ பொருளின்படி பொது ஊழியர்களாகக்‌ கொள்ளப்பெறுவர்‌.கடமைகள்‌ அந்த நோக்கத்திற்காக துணைவேந்தரால்‌ பணியமர்த்தம்‌ செய்யப்படும்‌ ஒருவரால்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌-।/. பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ 16. ஆட்சிக்குழு, கல்விமன்றம்‌, நிதிக்குழு, புலங்கள்‌ மற்றும்‌ பாடத்திட்டக்‌ குழுக்கள்‌ மற்றும்‌ நிலையமை விதிகளால்‌ அப்போதைக்கப்போது இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளென விளம்புகை செய்யப்படலாகும்‌, அத்தகைய பிற அமைப்புகள்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளாகும்‌. 17. () நபரெவரும்‌, தேர்தல்‌ அல்லது பெயர்குறித்து நியமிக்கப்படும்‌ தேதியன்று அவர்‌.-- (8) மனச்சீர்கேடுற்றவராகவோ அல்லது (9) நொடிப்பு நிலையரொருவராக நீதிமுறையில்‌ தீர்மானிக்கப்பட வேண்டி விண்ணப்பித்துக்‌ கொண்டுள்ள ஒருவராக அல்லது விடுவிக்கப்படாத நொடிப்பு நிலையரொருவராக இருப்பாராயின்‌; அல்லது (0 ஒழுக்கக்கேட்டினை உள்ளடக்குகின்ற குற்றச்செயல்‌ எதற்காகவும்‌ குற்றவழக்கு நீதிமன்றமொன்றினால்‌ சிறைதண்டனை விதித்துத்‌ தீர்ப்பளிக்கப்பட்டவராக இருப்பாராயின்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ எதனின்‌ உறுப்பினரொருவராகத்‌ தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்கோ தகுதி உடையவராகமாட்டார்‌. 2. (0-ஆம்‌ உடபிரிவின்படி நபரொருவர்‌ தகதியற்றவரா என்பது குறித்து பூசல்‌ அல்லது ஐயம்‌ ஏற்படும்‌ நேர்வில்‌, ஆட்சிக்குழுவானது. அதனைத்‌ தீர்மானிக்கலாம்‌. அதனுடைய முடிவே இறுதியானதாகவும்‌ இருக்கும்‌. 6தர்வுக்‌ கட்டுபாட்டு அலுவலர்‌. துணைவேந்தர்‌ மற்றும்‌ பிற அலுவலர்கள்‌ முதலானோர்‌ பா து ஊழியர்களாக இருத்தல்‌. பல்கலைக்‌ கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌. உறுப்பினருக்கான. தகுதியின்மை. ஆட்சிக்குழு. 16. (). 19 ஆம்‌ பிரிவின்‌ (5) ஆம்‌ உட்பிரிவின்‌ (9) எனும்‌ கூறு மற்றும்‌ 22 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்கூறில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆட்சிக்குழுவிலோ அல்லது கல்வி மன்றத்திலோ அல்லது இரண்டிலுமோ ஆறு ஆண்டுகள்‌ மொத்த கால அளவு ஒன்றுக்கு உறுப்பினரொருவராகப்‌ பதவி வகித்த நபரெவரும்‌, மேற்சொன்ன இரண்டு அதிகார அமைப்புகளில்‌ ஏதொன்றுக்கும்‌ தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்கோ தகுதி உடையவர்‌ ஆகார்‌: வரம்புரை.-ஆனால்‌ இந்த உட்பிரிவில்‌ கட்டப்பட்டுள்ள ஆறு ஆண்டு என்கிற மொத்தக்‌ காலத்தினை கணக்கிடும்‌ நோக்கத்திற்காக, ஒரு அதிகார அமைப்பில்‌ தேர்ந்தெடுக்கப்படுவதன்‌ மூலமாகவோ அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதன்‌ மூலமாகவோ பதவி வகிக்கும்‌ நபரொருர்‌ மற்றும்‌ மற்றொரு அதிகார அமைப்பில்‌ தேர்ந்தெடுக்கப்படுவதன்‌ மூலமாகவோ. அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதன்‌ மூலமாகவோ பதவிவகித்த மூன்றாண்டுக்‌ காலம்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதற்கிணங்கிய வகையில்‌ ஆட்சிக்‌ குழுவிற்கோ அல்லது கல்வி மன்றத்திற்கோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்கு அத்தகைய நபர்‌ தகுதி உடையவர்‌ ஆகார்‌: மேலும்‌ வரம்புரை,-மேலும்‌ இந்த உட்பிரிவின்‌ நோக்கத்திற்காக, தற்காலிக காலியிடத்தில்‌ இந்த உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள அதிகார அமைப்பு ஏதொன்றிலும்‌ ஓராண்டிற்கு குறையாமல்‌ பதவி வகித்திருக்கிற நபரொருவர்‌, அந்த அதிகார அமைப்பில்‌ மூன்று ஆண்டு காலஅளவு ஒன்றிற்குப்‌ பதவி வகித்திருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரை.-அதோடுகூட, இந்த உட்பிரிவின்‌ நோக்கத்திற்காக, நபர்‌ ஒரு அதிகார அமைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பின்‌ அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்டிருப்பின்‌ மற்றும்‌ அத்தகைய நபர்‌ முதலில்‌ குறிப்பிடப்பட்ட அதிகார அமைப்பில்‌ உறுப்பினராக இருந்ததன்‌ விளைவாக மற்றொரு அதிகார அமைப்பிற்கு உறுப்பினராயிருப்பின்‌, முதலில்‌ குறிப்பிட்ட அதிகார அமைப்பில்‌ பதவிவகித்த அந்தக்‌ காலம்‌ மட்டும்‌ கணக்கில்‌ எடுத்து கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (2). (0-ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள எதுவும்‌- () 19 ஆம்‌ பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள பதவி வழி உறுப்பினர்கள்‌ தொடர்பாகவோ; (i) 22 ஆம்‌ பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள பதவிவழி உறுப்பினர்கள்‌ தொடர்பாகவோ: பொருந்தாது. ஆனால்‌ 22 ஆம்‌ பிரிவின்‌ () ஆம்‌ உட்பிரிவில்‌ () எனும்‌ இனத்தில்‌ சுட்டப்பட்டுள்ள கல்வி மன்றத்தின்‌ உறுப்பினர்களாக பிறவாறு இல்லாமலிருக்கின்ற ஆட்சிக்குழுவின்‌ உறுப்பினர்களை உள்ளடக்காது. 19. () வேந்தர்‌ 55 ஆம்‌ பிரிவின்‌ () ஆம்‌ உப்பிரிவின்‌ படி நிர்வாகி பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட பின்னர்‌. கூடிய விரைவில்‌ ஆட்சிக்‌ குழுவை அமைக்கலாம்‌. (2) ஆட்சிக்குழு, துணைவேந்தருடன்‌ சேர்ந்து கூடுதலாக பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருக்கும்‌, அதாவது:- வகை |-பதவி வழி உறுப்பினர்கள்‌. (8) உயர்கல்வித்துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (b) மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்ப நலத்துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (6) சட்டத்துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (6) கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌; குறித்த சில. நேர்வுகளில்‌: ஆட்சிக்குழு மற்றும்‌ கல்வி மன்றத்தின்‌. தேர்தலுக்காக அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்‌ படுவதற்கான. தகுதியின்மை. தலைவர்‌. (6) தொழில்‌ நுட்பக்‌ கல்வி இயக்குநர்‌; மற்றும்‌ (f) மருத்துவக்‌ கல்வி இயக்குநர்‌, வகை || பிற உறுப்பினர்கள்‌. (8) கல்வி மன்றம்‌, அதன்‌ உறுப்பினர்களிடையே இருந்து தேர்ந்தெடுக்கும்‌ இரண்டு உறுப்பினர்கள்‌; (6) துணைவேந்தரின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ வேந்தரால்‌ பெயர்‌ குறித்தமர்த்தப்பட்ட புலங்களின்‌ தலைவர்களிடையே இருந்து ஓர்‌ உறுப்பினர்‌; (6) அரசின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ வேந்தரால்‌ பெயர்‌ குறித்து அமர்த்தப்பட்ட சட்டம்‌, உயர்கல்வி அல்லது மருத்துவ அறிவியல்‌ ஆகிய களத்தில்‌ சிறப்பு அறிவை கொண்டுள்ள ஓர்‌ உறுப்பினர்‌; (8) அரசின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ பட்டியல்‌ சாதியினர்‌/பட்டியல்‌ பழங்குடியினர்‌, மிகவும்‌ பிற்பட்ட வகுப்பினர்‌, பிற்பட்ட வகுப்பினர்‌ அல்லது சிறுபான்மை இனங்கள்‌ ஆகியவற்றிலிருந்து வேந்தரால்‌ பெயர்‌ குறித்து அமர்த்தப்பட்ட ஓர்‌ உறுப்பினர்‌; (8) அரசின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ வேந்தரால்‌ பெயர்‌ குறித்து அமர்த்தப்பட்ட தொழில்‌ மற்றும்‌ வணிகம்‌ ஆகியவற்றில்‌ சிறப்பு அறிவையும்‌ மற்றும்‌ பட்டறிவையும்‌ கொண்டுள்ள பொது அல்லது தனியார்‌ துறைகள்‌, தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனங்கள்‌ ஆகியவற்றிற்கு சார்பற்றம்‌ செய்யும்‌ ஒர்‌ உறுப்பினர்‌. (0) தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையினால்‌ அதன்‌ உறுப்பினர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர்‌ உறுப்பினர்‌. (9) துணைவேந்தர்‌, ஆட்சிக்குழுவின்‌ பதவி வழி தலைவராக இருப்பார்‌. @ (8) உயர்கல்வித்துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌ அல்லது மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்பநலத்‌ துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌ அல்லது சட்டத்துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌ ஏதேனும்‌ காரணத்தினால்‌ ஆட்சிக்குழுவின்‌ கூட்டங்களில்‌ கலந்து கொள்வதற்கு வர இயலாதிருக்கும்‌ நேர்வில்‌ அந்தக்‌ கூட்டங்களில்‌ கலந்து கொள்வதற்கு அவர்‌, அவரது துறையைச்‌ சேர்ந்த அரசுச்‌ துணைச்‌ செயலாளரின்‌ படி நிலைக்குக்குறையாத எந்த ஒரு அலுவலரையும்‌ அவருக்கு பதிலாக அனுப்பலாம்‌. அவ்வாறு பதிலாக அனுப்பப்பட்ட அலுவலர்‌ அந்தக்‌ கூட்டங்களின்‌ கலந்துரையாடலில்‌ கலந்து கொள்வதற்கு உரிமை உடையவராவார்‌ மற்றும்‌ வாக்கு அளிப்பதற்கு உரிமை உடையவராவார்‌. (௦) கல்லூரிக்கல்வி இயக்குநர்‌, அல்லது தொழில்‌ நுட்ப இயக்குநர்‌ அல்லது மருத்துவக்கல்வி இயக்குநர்‌ ஏதேனும்‌ காரணத்தினால்‌ ஆட்சிக்‌ குழுவின்‌ கூட்டங்களில்‌ கலந்து கொள்வதற்கு வர இயலாதிருக்கும்‌ நேர்வில்‌ அந்தக்‌ கூட்டங்களில்‌ கலந்து கொள்வதற்கு துணை இயக்குநரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத தன்‌ துறையின்‌ அலுவலர்‌ எவரையும்‌ பதிலாக அனுப்பலாம்‌. அவ்வாறு பதிலாக அனுப்பப்பட்ட அலுவலர்‌, அந்தக்‌ கூட்டங்களின்‌ கலந்துரையாடலில்‌ கலந்து கொள்வதற்கு உரிமையுடையவராக இருப்பார்‌ மற்றும்‌ வாக்களிப்பதற்கும்‌ உரிமையுடையவராக இருப்பார்‌. (8) (8) பிறவாறு வகை செய்யப்பட்டிருப்பது நீங்கலாக ஆட்சிக்குழுவின்‌ பதவிவழி உறுப்பினரல்லாத பிற உறுப்பினர்கள்‌ மூன்றாண்டுக்கால அளவுக்கு பதவி வகித்து வருவர்‌ மற்றும்‌ அவ்வுறுப்பினர்‌ மேற்கொண்டும்‌ மூன்றாண்டுகளுக்கு மேற்பாத கால அளவுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்கோ தகுதியுடையவராவர்‌. (8) உறுப்பினர்‌ ஒருவர்‌ ஆட்சிக்குழுவின்‌ தற்செயல்‌ காலியிடத்திற்கு நியமிக்கப்பட்டிருக்குமிடத்து அத்தகைய உறுப்பினர்‌ எவரேனும்‌ வகித்து வரும்‌ பதவியின்‌ கால அளவு ஓராண்டுக்கும்‌ குறைவாக இருந்திருப்பின்‌ அது மூன்றாண்டுகளைக்‌ கொண்ட ஒரு முழுகால அளவாகப்‌ பொருள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; வரம்புரை.--ஆனால்‌, அட்சிக்குழுவின்‌ உறுப்பினராக உள்ள ஒருவர்‌, ஒரு குறிப்பிட்ட வாக்காளர்‌ தொகுதியில்‌ (Electorate) அல்லது அமைப்பின்‌ அல்லது ஒரு குறிப்பிட்ட நியமனப்‌ பதவியை வகிக்கிறார்‌ என்ற தகுதியினால்‌ அவர்‌ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்குங்கால்‌, அவர்‌ அந்த குறிப்பிட்ட வாக்காளர்‌ தொகுதியில்‌ அல்லது அமைப்பில்‌ அல்லது நேர்விற்கேற்ப அப்பல்கலைக்கழகத்தில்‌ உறுப்பினராக இருப்பது அற்றுப்‌ போகும்‌ அத்தேதியிலிருந்து ஆட்சிக்குழுவின்‌ உறுப்பினராக இருப்பதும்‌ அற்றுப்போகும்‌: ஆட்சிக்‌ குழுவின்‌ அதிகாரங்கள்‌. மேலும்‌ வரம்புரை.--ஆட்சிக்குழுவின்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்‌ ஒருவர்‌, எந்தப்‌ பதவியின்‌ காரணமாக ஆட்சிக்குழுவின்‌ பதவிவழி உறுப்பினராக இருப்பதற்கு அவர்‌ உரிமைத்‌ தகுதியுடையராக இருக்கிறாரோ அந்தப்‌ பதவிகள்‌ எதற்கேனும்‌ தற்காலிகமாக பணியமர்த்தம்‌ செய்யப்படுகிறவிடத்து அவர்‌, தாம்‌ நியமன: பொறுப்பை எடுத்துக்‌ கொள்கிற தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்ளாக தாம்‌. தேர்ந்தெடுக்கப்பட்டதன்‌ அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்டதன்‌ காரணமாக ஆட்சிக்குழுவின்‌ உறுப்பினராக, தாம்‌ தொடர்ந்து இருப்பதற்கு விரும்புகிறாரா அல்லது அத்தகைய உறுப்பினராக இருக்கும்‌ பதவியை விட்டு நீங்கி தம்முடைய நியமனத்தின்‌ காரணமாகப்‌ பதவி வழி உறுப்பினராக ஆவதற்கு விரும்புகிறாரா என்பதைத்‌ தன்னுடைய கையொப்பமிடப்பட்டு துணைவேந்தருக்கு தெரிவிக்கப்பட்ட எழுத்துருவிலான அறிவிப்பின்‌ மூலமாக, தெரிவு செய்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அந்த விருப்பத்தெரிவை செய்யத்‌ தவறுவதின்‌ பேரில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினராக உள்ள தம்முடைய பதவியை விட்டு அவர்‌ நீங்கியிருப்பதாகக்‌ கொள்ளப்‌ பெறுவார்‌. (6) ஒருவர்‌ ஆட்சிக்‌ குழுவின்‌ உறுப்பினராக இருப்பது அற்றுப்போகும்போது, அவர்‌ ஆட்சிக்குழுவில்‌ தமக்கிருந்த உறுப்பினர்‌ பதவியின்‌ காரணத்தால்‌ இப்பல்கலைக்கழக அமைப்புகளில்‌ எதிலேனும்‌ உறுப்பினராக அவர்‌ இருப்பதும்‌ அற்றுப்போகும்‌. M ஆட்சிக்‌ குழுவின்‌ உறுப்பினர்கள்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய தின மற்றும்‌ பயணப்படிகள்‌ தவிர இப்பல்கலைக்கழகத்திடமிருந்து ஊதியம்‌ எதையும்‌ பெறுவதற்கு தகுதியுடையவர்கள்‌ ஆக மாட்டார்கள்‌. வரம்புரை.--ஆனால்‌, இந்தக்‌ கூறில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, உறுப்பினர்‌ எவரையும்‌, தாம்‌ வகிக்கிற பதவியின்‌ காரணமாக தாம்‌ தகுதியுடையவராயிருக்கிற தம்முடைய இயல்பான ஊதியங்களைப்‌ பெறுவதைத்‌ தடை செய்யலாகாது. (9 ஆட்சிக்குழுவின்‌ பதவிவழி உறுப்பினர்‌ அல்லாத பிற உறுப்பினர்‌ ஒருவர்‌, தமது பதவி முடிவடைகிற கால அளவிற்கு முன்பு எந்தச்‌ சமயத்திலும்‌ தம்முடைய உறுப்பினர்‌ பதவியை விட்டு விலகலாம்‌. அத்தகைய பதவி விலகலாளது, வேந்தருக்கு அவ்வுறுப்பினரால்‌ எழுத்துருவிலான கடிதம்‌ ஒன்றின்‌ மூலமாகத்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அப்பதவி விலகலானது, வேந்தரால்‌ அது ஏற்கப்படும்‌ தேதியிலிருந்து செல்திறம்‌ பெறும்‌. 20. () ஆட்சிக்‌ குழு பின்வரும்‌ அதிகாரங்களைக்‌ கொண்டிருக்கும்‌, அதாவது:- @ நிலையமைவிதிகளைச்‌ செய்தல்‌ மற்றும்‌ அந்நிலையமை விதிகளைத்‌ திருத்துதல்‌ அல்லது அறவு செய்தல்‌; (6) அவசரச்‌ சட்டங்களைச்‌ செய்தல்‌ மற்றும்‌ அவற்றைத்‌ திருத்துதல்‌ அல்லது அறவு செய்தல்‌; (6) தான்‌ தீர்மானிக்கக்‌ கூடிய முறையிலும்‌, அத்தகைய நோக்கங்களுக்காகவும்‌, பிற பல்கலைக்கழகங்கள்‌, பிற கல்வி அதிகார அமைப்புகள்‌, கல்லூரிகள்‌ ஆகியவற்றுடன்‌ ஒத்துழைத்தல்‌; (0) தான்‌ பொருத்தமென நினைக்கக்கூடிய கல்விப்‌ பிரிவுகளில்‌ கற்பிப்பதற்கும்‌ பயிற்றுவிப்பதற்கும்‌ வகை செய்தல்‌; (6) அறிவார்ந்த ஆராய்ச்சி செய்வதற்கும்‌, மேம்பாடு செய்வதற்கும்‌, அறிவைப்‌ பரப்புவதற்கும்‌ வகை செய்தல்‌; (ர) இப்பல்கலைக்கழகத்திற்குத்‌ தேவைப்படும்‌ உதவிப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, இணைப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌ மற்றும்‌ பிற கற்பித்தல்‌ ஆராய்ச்சி பதவிகளை ஏற்படுத்துதல்‌; (9) மாணவர்களுக்கு கல்வி மன்றம்‌ தீர்மானிக்கக்கூடிய அத்தகைய விரிவுரைகளுக்கும்‌ கற்பிப்பதற்கும்‌ வகைசெய்தல்‌; (h) பட்டங்கள்‌, சிறப்புப்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புச்‌ சீர்மைகளை ஏற்படுத்துதல்‌; (1) பட்டங்கள்‌, விருதுகள்‌ பின்வரும்‌ நபர்களுக்கு அளித்தல்‌: பட்டயங்கள்‌ மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்பு சீர்மைகளை (i) பல்கலைக்கழகத்தில்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்ட குறித்த காலப்படிப்பினை தொடர்ந்திருந்து வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ அதில்‌ இருந்து விலக்களிக்கப்பட்டு இப்பல்கலைக்கழகத்தின்‌ வகுத்துரைக்கப்பட்ட தேர்வுகளில்‌ தேறியுள்ளவர்களுக்கு; (0) வகுத்துரைக்கப்பட்ட வரைக்கட்டுகளின்‌ படி, ஆராய்ச்சி நடத்தியுள்ளவர்களுக்கு; () ஆட்சிக்‌ குழுவின்‌ மூன்றில்‌ இரண்டு பங்குக்குக்‌ குறையாத உறுப்பினர்களின்‌. பரிந்துரையின்பேரில்‌, மதிப்புறு, (கெளரவுப்‌) பட்டங்களை அல்லது கல்விச்‌ சிறப்புச்‌ சீர்மைகளை: வழங்குதல்‌. (k) மாணவர்‌ விடுதிகளை நிறுவியமைத்துப்‌ பராமரித்தல்‌; () உதவித்‌ தொகைகள்‌, பயண உதவித்தொகைகள்‌, படிப்புதவித்‌ தொகைகள்‌, மாணவ உதவித்‌ தொகைகள்‌, உதவி சம்பளங்கள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌ ஆகியவற்றை நிறுவுதல்‌. (M) கல்லூரிகளுக்கு ஒப்புதலளிப்பதற்காகவும்‌, இணைப்பதற்காகவும்‌, பட்டயங்கள்‌. ஆகியவற்றிற்கு அனுமதிக்கப்படுவதற்காகவும்‌, பட்டதாரிகளைப்‌ பதிவு செய்வதற்காகவும்‌, அத்தகைய பதிவினைப்‌ புதுப்பிப்பதற்காகவும்‌ மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌ தேர்வுகள்‌, பட்டங்கள்‌, விருதுகள்‌ மற்றும்‌ பட்டயங்கள்‌ ஆகியவற்றுக்கான சேர்க்கை அல்லது 4-ஆம்‌ பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்கள்‌ அனைத்திற்காகவும்‌ அல்லது அவற்றுள்‌ ஏதற்காகவும்‌ விதிக்கப்பட வேண்டிய கட்டணங்களை வகுத்துரைத்தல்‌; (0) ஆண்டறிக்கை, ஆண்டுக்‌ கணக்குகள்‌, நிதிநிலை மதிப்பீடுகள்‌ ஆகியவற்றைப்‌ பரிசீலனை செய்தலும்‌, அவற்றின்‌ மீது தான்‌ பொருத்தமெனக்‌ கருதக்கூடிய அத்தகைய நடவடிக்கையை எடுத்தலும்‌; (6) நூல்‌ வெளியீட்டு அமைப்பு, மாணவர்‌ சங்கங்கள்‌, வேலைவாய்ப்பு அமைப்பு, பல்கலைக்கழக உடற்பயிற்சிக்‌ கழகங்கள்‌ ஆகியவற்றை நிறுவி அவற்றைப்‌ பேணி வருதல்‌; ) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாயிராத பிற நோக்கங்கள்‌. எவற்றிற்காகவும்‌ மைய அல்லது மாநில அரசு அல்லது தனியார்‌ நிறுவனம்‌ எதனுடனும்‌ உடன்படிக்கை எதிலும்‌ ஈடுபடுதல்‌; (@ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளுக்கான தேர்தல்‌ முறையையும்‌, மற்றும்‌ ஆட்சிக்குழு, கல்வி மன்றம்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பிற அதிகார அமைப்புகள்‌ ஆகியவற்றின்‌ கூட்ட நடைமுறையையும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ கல்வி மன்றம்‌ அல்லாத பிற அதிகார அமைப்புகளினால்‌ அலுவலை பகிர்ந்து கொள்வதற்கு உறுப்பினர்களின்‌ குறைவெண்‌ (Quorum) வரம்பினையும்‌ ஒழுங்குமுறைப்படுத்தும்‌ நிலையமை விதிகளைச்‌ செய்தல்‌; (N இப்பல்கலைக்‌ கழகத்தின்‌ சொத்துக்களையும்‌ நிதியங்களையும்‌ வைத்து வருதலும்‌, கட்டுப்பாடு செய்தலும்‌, நிருவகித்து வருதலும்‌; ) இப்பல்கலைக்கழகத்தின்‌ பொது இலச்சினையின்‌ வடிவம்‌, அதைப்‌ பாதுகாப்பில்‌ வைத்திருப்பது, பயன்படுத்துதல்‌ ஆகியவறை குறித்துப்‌ பணித்தல்‌; ) இந்தச்‌ சட்டத்திற்கும்‌, நிலையமை விதிகளுக்கும்‌ அவசரச்‌ சட்டங்களுக்கும்‌ ஒழுங்கு விதிகளுக்கும்‌ இணங்க, இப்பல்கலைக்கழகம்‌ தொடர்பான அனைத்துப்‌ பொருட்பாடுகளையும்‌ ஒழுங்கு முறைப்படுத்துதலும்‌ தீர்மானித்தலும்‌; குறிப்பிட்ட நோக்கங்களுக்காக, இப்பல்கலைக்கழகத்தின்‌ பொறுப்பில்‌ விடப்பட்டுள்ள சொத்துக்கள்‌, நிதியங்கள்‌ ஆகிய அனைத்தையும்‌ நிருவகித்தல்‌; (v) () பல்கலைக்கழக உதவிப்‌ பேராசிரியர்கள்‌, பல்கலைக்கழக இணைப்‌ பேராசிரியர்கள்‌, பேராசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ ஆகியோரை பணியமர்த்தம்‌ செய்தல்‌ அவர்களது. வரையூதியங்கள்‌ எதுவுமிருப்பின்‌ அவற்றை நிர்ணயித்தல்‌, அவர்களுடைய கடமைகள்‌ மற்றும்‌ அவர்களது பணிகள்‌ குறித்த வரைக்கட்டுகளையும்‌ விளக்குதல்‌ மற்றும்‌ தற்காலிக காலியிடங்களை நிரப்புவதற்கு வகை செய்தல்‌; (1) நிருவாக மற்றும்‌ அது போன்ற பிற பணியமர்த்தம்‌ செய்யும்‌ முறையைக்‌ குறித்துரைக்கின்ற மற்றும்‌ அவற்றின்‌ வரையூதியங்கள்‌ எவையேனும்‌ இருப்பின்‌ அவற்றை நிர்ணயித்தல்‌, அவற்றினுடைய கடமைகளையும்‌ அவற்றின்‌ பணிவரைக்‌ கட்டுகளையும்‌ விளக்குதல்‌ மற்றும்‌ தற்காலிகக்‌ காலி இடங்களை நிரப்புவதற்கு வகை செய்தல்‌; (W) இப்பல்கலைக்கழக உதவிப்‌ பேராசிரியர்கள்‌, இணைப்‌ பேராசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பிற பணியாளர்கள்‌ ஆகியோரைத்‌ தற்காலிகப்‌ பணி நீக்கம்‌ செய்தல்‌ மற்றும்‌ ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல்‌; 009 பல்கலைக்கழகத்திற்கு, நிலைக்‌ கொடைகள்‌, விருப்ப ஆவண வழிக்கொடைகள்‌ (Bequests) நன்கொடைகள்‌, மானியமளிப்புகள்‌, மற்றும்‌ அசையும்‌ மற்றும்‌ அசையாச்‌ சொத்துக்கள்‌ எவையேனும்‌ உரிமை மாற்றங்கள்‌ மூலமாக அளிக்கப்படும்போது, அவற்றை இப்பல்கலைக்கழகத்தின்‌ சார்பாக ஏற்றுக்‌ கொள்ளுதல்‌; (y) இமைய அல்லது மாநில அரசு எதனிடமிருந்து அல்லது பொது மக்களிடமிருந்து அல்லது மைய அல்லது மாநில அரசு எதற்கேனும்‌ சொந்தமான அல்லது அதன்‌ கட்டுப்பாட்டிலுள்ள கழகம்‌ எதனிடமிருந்தும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ சார்பாக கடன்கள்‌ பெறுதல்‌; மற்றும்‌ ) இப்பல்கலைக்‌ கழகத்தின்‌ நோக்கங்களுக்காக இப்பல்கலைக்கழகச்‌ சொத்தின்‌: பிணையத்தின்பேரில்‌, அரசின்‌ ஒப்புதலளிப்புடன்‌ பணத்தை கடன்‌ வாங்குதல்‌; (2) பல்கலைக்கழகத்தின்‌ ஆசிரியர்கள்‌ தகுதிகளை வகுத்துரைத்தல்‌; (88) உதவித்‌ தொகைகள்‌, பயண உதவித்‌ தொகைகள்‌, படிப்பு உதவித்‌ தொகைகள்‌, மாணவ உதவித்‌ தொகைகள்‌, உதவிச்‌ சம்பளங்கள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌ ஆகியவற்றை நிலையமை விதிகளுக்கிணங்க வழங்குதல்‌. (8) வகுத்துரைக்கப்படக்கூடிய கட்டணங்களை விதித்தலும்‌ வசூலித்தலும்‌; (86) இப்பல்கலைக்கழகத்‌ தேர்வுகளை நடத்துதலும்‌, அவற்றின்‌ முடிவுகளுக்கு ஒப்புதலளித்து வெளியிடுதலும்‌; (86) இப்பல்கலைக்கழகத்தில்‌ மாணவர்களை சேர்த்துக்‌ கொள்வது தொடர்பாக அல்லது பல்கலைக்‌ கழகத்‌ தேர்வுகளுக்குச்‌ சமமாய்‌ இருக்கிறவாறான ஏற்பளிக்கக்கூடிய தேர்வுகளை வகுத்துரைக்கும்‌ அவசரச்‌ சட்டங்களைச்‌ செய்தல்‌; (86) பாடக்‌ குழுக்களுக்கு உறுப்பினர்களை பணியமர்த்தம்‌ செய்தல்‌; (ஸி) () பாடக்‌ குழுக்களின்‌ பரிந்துரைகளை பரிசீலனை செய்ததற்குப்‌ பின்பு, ஆய்வாளர்களை பணியமர்த்தப்படுதல்‌; மற்றும்‌ (1) அவர்களுடைய ஊதியங்களை நிர்ணயித்தல்‌; ) இப்பல்கலைக்கழக துறைகளில்‌ மாணவர்கள்‌ தங்கியிருக்கும்‌ இடத்தையும்‌ ஒழுங்கு த்தையும்‌ கண்காணித்துக்‌ கட்டுப்பாடு செய்தலும்‌, அவர்கள்‌ உடல்‌ நலம்‌ மற்றும்‌ பொது நலம்‌ பெறுவதை உறுதிபடுத்திக்‌ கொள்வதற்கான ஏற்பாடுகளைச்‌ செய்தல்‌; (ah) பல்கலைக்கழக மையங்கள்‌, பல்கலைக்கழகக்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ ஆய்வுக்‌ கூடங்கள்‌, நூலகங்கள்‌, அருங்காட்சியகங்கள்‌, ஆராய்ச்சி நிலையங்கள்‌ ஆகியவற்றை நிறுவுதலும்‌ மேலாண்மை செய்தலும்‌; இப்பல்கலைக்கழகத்தால்‌ நிறுவியமைக்கப்பட்ட அல்லது பேணி வரப்படும்‌ பிற நிறுவனங்களை மேலாண்மை செய்தலும்‌; (21) இப்பல்கலைக்கழகத்தால்‌ ஏற்படுத்தப்பட்ட மாணவர்‌ விடுதிகளை மேலாண்மை செய்தல்‌; (@) இப்பல்கலைக்கழகத்தால்‌ ஏற்படுத்தப்பட்ட நூல்‌ வெளியீட்டு அமைப்பு, மாணவர்‌ சங்கங்கள்‌, வேலை வாய்ப்பு அமைப்பு மற்றும்‌ பல்கலைக்கழக உடற்பயிற்சிக்‌ கழகங்கள்‌ ஆகியவற்றை மேலாண்மை செய்தல்‌; ) இப்பல்கலைக்கழகத்தில்‌ கற்பித்தலையும்‌ பயிற்றுவித்தலையும்‌ மறு ஆய்வு செய்தல்‌; (@) இப்பல்கலைக்கழகத்திற்குள்‌ ஆராய்ச்சியை வளர்த்தலும்‌, அத்தகைய ஆராய்ச்சி பற்றி அவ்வப்போது அறிக்கைகளைக்‌ கோருதல்‌; (am) இந்தச்‌ சட்டத்தினாலோ அல்லது நிலையமை விதிகளினாலோ அவசர விதிகளினாலோ அல்லது ஒழுங்குமுறை விதிகளினாலோ தனக்கு வழங்கப்பட்க்கூடிய அல்லது விதிக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ பிற கடமைகளைப்‌ புரிந்து வருதலும்‌; மற்றும்‌ (an) தன்‌ அதிகாரங்களில்‌ எதையும்‌ துணை வேந்தருக்கோ தன்‌ உறுப்பினர்களுக்கிடையேயிருந்து அமைந்த குழுவொன்றிற்கோ அல்லது நிலையமை விதிகளுக்கிணங்க நியமிக்கப்பட்ட குழுவொன்றிற்கோ ஒப்படைவு (069816) செய்தல்‌; (2) ஆட்சிக்குழு, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவைக்‌ கலந்தாய்வது தேவையானதென்று தான்‌ கருதுகிறவிடத்து, அவ்வாறு கலந்தாய்வு செய்யலாம்‌. 21. () ஆட்சிக்குழு, வகுத்துரைக்கப்படக்‌ கூடிய காலங்களிலும்‌, இடங்களிலும்‌, குறைந்தது இரண்டு திங்களுக்கு ஒரு முறையேனும்‌ கூடுதல்‌ வேண்டு; மற்றும்‌ (2) () ஆகிய உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, அக்கூட்டங்களில்‌ அலுவல்‌ பரிமாற்றம்‌ தொடர்பாக, வகுத்துரைக்கப்படக்கூடிய நடைமுறை விதிகளைக்‌ கடைபிடித்தல்‌ வேண்டும்‌. @ ஆட்சிக்குழுக்‌ கூட்டங்களை நடத்துவதற்கு தேவையான மொத்த உறுப்பினர்களில்‌ மூன்றில்‌ ஒரு பங்கு உறுப்பினர்கள்‌ குறைவெண்‌ வரம்பாக இருக்க வேண்டும்‌. (8) துணைவேந்தர்‌ அல்லது அவர்‌ வராத போது, வந்திருக்கும்‌ உறுப்பினர்களால்‌ தெரிந்தெடுக்கப்படும்‌ உறுப்பினர்‌ எவரேனும்‌, ஆட்சிக்‌ குழுவின்‌ கூட்டமொன்றுக்குத்‌ தலைமை வகிப்பர்‌. @ ஆட்சிக்‌ குழுவில்‌ உள்ள கூட்டம்‌ எதிலும்‌ உள்ள கேள்விகள்‌ அனைத்தும்‌ முன்னிலையாகியுள்ள வாக்களிக்கும்‌ உறுப்பினர்களின்‌ பெரும்பான்மை வாக்குகள்‌ ஒன்றினால்‌ முடிவு எடுக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ வாக்குகள்‌ சரிசமாக இருக்கும்‌ நேர்வில்‌, துணைவேந்தரோ அல்லது நேர்விற்கேற்ப தலைமை எற்கின்ற உறுப்பினரோ இரண்டாவது அல்லது இறுதிசெய்‌ வாக்கினை கொண்டிருப்பார்‌ மற்றும்‌ பயன்படுத்துவார்‌. (6) (ஐ ஆட்சிக்குழு கலந்தாலோசிக்கும்‌ நோக்கத்திற்காக பாடம்‌ எதிலும்‌ சிறப்பறிவினை அல்லது செயலுறு பட்டறிவினை கொண்டுள்ள நபர்‌ எவரையும்‌ கூட்டம்‌ எதிலும்‌ கலந்துகொள்ளும்‌ நேர்வின்‌ அடிப்படையில்‌ அழைக்கலாம்‌. அத்தகைய நபர்‌ அத்தகைய கூட்டத்தில்‌ பேசலாம்‌ மற்றும்‌ அத்தகைய கூட்ட நடவடிக்கைகளில்‌ பங்கேற்கலாம்‌ ஆனால்‌ வாக்களிப்பதற்கு உரிமையுடையவர்‌ ஆகமாட்டார்‌. O அவ்வாறு அழைக்கப்பட்ட நபர்‌ ஆட்சிக்குழு உறுப்பினருக்கு அனுமதிக்கக்கூடியவவாறான அத்தகைய தின மற்றும்‌ பயணபடித்தொகைகளைப்‌ பெறுவதற்கு உரிமையுடையராக இருப்பார்‌. 22. (1) கல்விமன்றம்‌ பின்வரும்‌ நபர்களை உள்ளடக்கியிருக்கும்‌, அதாவது:- வகை | -பதவி வழி உறுப்பினர்கள்‌. (8) துணை வேந்தர்‌; b) கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌; 6) தொழில்நுட்பக்‌ கல்வி இயக்குநர்‌; ( (௦) (9) மருத்துவக்கல்வி இயக்குநர்‌; (6) பாடப்புலங்களின்‌ தலைவர்கள்‌; மற்றும்‌ ( 1) கல்வி மன்றத்தின்‌ பிறவாறான உறுப்பினர்ளாக இல்லாத ஆட்சிக்குழுவின்‌: உறுப்பினர்கள்‌. வகை ।|-பிற உறுப்பினர்கள்‌. (8) பல்கலைக்கழகத்தின்‌ ஆசிரியர்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள்‌. அவர்களில்‌ இருவர்‌ பேராசிரியர்களாக இருப்பர்‌. (6) துணைவேந்தரின்‌ பரிந்துரையின்பேரில்‌ வேந்தரால்‌ பெயர்‌ குறித்து அமர்த்தப்பட்ட பாடப்புலங்களின்‌ தலைவர்களிடையிருந்து மூன்று உறுப்பினர்கள்‌; (9) கல்வி மன்றத்திற்கு துணைவேந்தர்‌ பதவிவழி தலைவராக இருப்பர்‌ மற்றும்‌ பதிவாளர்‌. பதவி வழி செயலாளராக இருப்பார்‌. (9) பதவிவழி உறுப்பினர்கள்‌ தவிர உறுப்பினர்களின்‌ பதவிக்‌ காலமானது மூன்று ஆண்டுகளாக இருக்கும்‌. (4) வேந்தர்‌ காரணம்‌ கேட்பதற்கான வாய்ப்பு ஒன்றினை அளித்தபிறகு அலுவலகத்திலிருந்து பதவி வழி உறுப்பினர்‌ தவிர அக்‌ கல்விக்குழு உறுப்பினர்‌ எவரையும்‌ நீக்கலாம்‌. அத்தகைய உறுப்பினர்‌ வேந்தரின்‌ கருத்தில்‌ உறுப்பினராக செயலாற்ற முடியாதவராக இருக்கிறார்‌ அல்லது அத்தகைய உறுப்பினராக அவர்‌ நீடித்தால்‌ பல்கலைக்கழகத்தின்‌ நலனுக்கு கெடுதல்‌ விளையும்‌ வகையில்‌ அவருடைய பதவியை தவறாக பயன்படுத்தியிருக்கின்றார்‌ எனில்‌ அவரை நீக்கலாம்‌. ஆட்சிக்‌ குழுவின்‌ கூட்டங்கள்‌. கல்வி மன்றம்‌. 23. (1) கல்விமன்றம்‌ பல்கலைக்கழகத்தின்‌ முதன்மை கல்விமன்றமாக இருக்கும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகையங்களுக்கு மற்றும்‌ நிலையமை விதிகளுக்கு உட்பட்டு பல்கலைக்கழகத்தில்‌ பயிற்றுவித்தல்‌ மற்றும்‌ தேர்வினை கட்டாளுகை மற்றும்‌ பொதுவான ஒழுங்குழுறைப்படுத்துவதையும்‌ மற்றும்‌ அதன்‌ பின்பு தரங்களை பராமரிப்பதற்கான பொறுப்பையும்‌ உடையதாக இருக்கும்‌. (2) கல்விக்‌ குழுவின்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ கடமைகள்‌.- (8) கற்பித்தல்‌ மீது மற்றும்‌ பிற கல்வித்‌ திட்டங்கள்‌ தவிர பொதுவான கட்டாளுகையை பயன்படுத்துவதற்கு மற்றும்‌ அதனின்‌ தரங்களை பராமரித்தல்‌ மற்றும்‌ மேம்படுத்துதல்‌; (6) கீழ்கண்ட பொருட்பாட்டிற்காக ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்வதற்கு. (i) பல்கலைக்‌ கழகத்திற்கு மாணவர்களைச்‌ சேர்த்தல்‌ மற்றும்‌ சேர்த்துக்‌ கொள்ளக்கூடிய மாணவர்கள்‌ எண்ணிக்கை தொடர்பாக; (i) பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ மற்றும்‌ பிற கல்வி சிறப்பு சீர்மைகளை பெறுவதற்கு உதவும்‌ பாடப்‌ பயிலாறுகள்‌ தொடர்காக; (1) தேர்வுகளை நடத்துவது மற்றும்‌ கல்வித்தரங்களை பராமரித்தல்‌ மற்றும்‌ மேம்படுத்துதல்‌ தொடர்பாக; (iv) தேர்வுகளின்‌, பட்டங்களின்‌, சிறப்புபட்டங்களின்‌, பட்டயங்களின்‌ மற்றும்‌, பிற பல்கலைக்கழகங்களின்‌, கல்லூரிகளின்‌, கல்விநிறுவனங்களின்‌ மற்றும்‌ பாடக்குழுக்களின்‌ சான்றிதழ்களின்‌ சமன்பாடுகளை வகுத்துரைப்பது; (v) மாணவர்களுடைய கல்வித்திறனை மதிப்பிடுதல்‌, மதிப்பீடுசெய்தல்‌ மற்றும்‌ திறமை அடிப்படையில்‌ மாணவர்களுடைய திறனை தர நிலைப்படுத்துதல்‌. (9) நூலகங்களை கட்டாளுகை செய்தல்‌ மற்றும்‌ மேலாண்மை செய்தல்‌ உள்ளடங்கலாக அனைத்து கல்விப்‌ பொருட்பாடுகள்‌ மீது ஆட்சிக்குழுவிற்கு அறிவுரை வழங்குவதற்கு; (6) ஆராய்ச்சி பதவிகள்‌ மற்றும்‌ கடமைகள்‌ தொடர்பானவற்றில்‌ மற்றும்‌ அதனின்‌ ஊதியங்கள்‌ உள்ளடங்கலாக உதவிப்பேராசிரியர்‌, இணைப்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ பிற கற்பித்தல்‌ பதவிகள்‌ ஏற்படுத்துவதற்காக ஆட்சிகுழுவிற்கு பரிந்துரை செய்வதற்கு; (7) கற்பித்தல்‌ மற்றும்‌ ஆராய்ச்சி துறைகளை நிறுவுவதற்காக அல்லது மீண்டும்‌ அமைப்பதற்காக அல்லது மறு அமைப்பிற்காக திட்டங்கள்‌ வகுத்தல்‌, மாற்றமைவு செய்தல்‌ அல்லது மாற்றி அமைப்பதற்கு; ) இளங்கலை பட்டப்படிப்பு மற்றும்‌ முதுகலை பட்ட மேற்படிப்பு கற்பித்தல்‌ மற்றும்‌ ஆராய்ச்சி தொடர்பாக ஆட்சிக்குழுவிற்கு பரிந்துரைகளை செய்வதற்கு; (h) கெளரவ பட்டங்களை அல்லது பிற கல்வி சிறப்புச்‌ சீர்மைகளை வழங்குவதற்காக ஆட்சிக்‌ குழுவிற்கு பரிந்துரைகளை செய்வதற்கு; (i) விதிகளை, ஒழுங்குமுறை விதிகளை பாடத்திட்டத்தை வகுப்பதில்‌ மற்றும்‌ மதிப்பீடு செய்யும்‌ முறைகள்‌ புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு மற்றும்‌ தற்போதுள்ள படிப்புகளை: மாற்றமைவு செய்தல்‌ மற்றும்‌ கல்வி வாரியங்களின்‌ திட்டங்களின்படி மறு ஆய்வு செய்வதற்கு; (j) ஆராய்ச்சி உதவித்‌ தொகைகளை மற்றும்‌ கல்வி உதவித்‌ தொகைகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆட்சிக்குழுவிற்கு பரிந்துரைகளை செய்வதற்கு; k) தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ அரசுப்‌ பணியளிப்பவர்கள்‌ ஒரு தரப்பினராகவும்‌ பல்கலைக்கழகம்‌ பிற தரப்பினராகவும்‌ இருந்து இணைந்து செயல்படுவதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்‌ குழுவிற்கு பரிந்துரை செய்வதற்கு; () அதனுடைய அதிகாரங்கள்‌ எதையும்‌ துணை வேந்தருக்கு அல்லது கல்வி மன்றத்தின்‌ குழுக்கள்‌ எதற்கும்‌ ஒப்படைவு செய்வதற்கு; (ஈ) ஒவ்வொரு புலத்திற்கும்‌ தேவைப்படுகிற இடவசதி, ஆய்வுக்கருவி, நூலகம்‌, பராமரிப்பு மற்றும்‌ பிற இயங்குவதற்கான வசதிகளின்‌ தரங்களை மதிப்பீடு செய்வதற்கு மற்றும்‌ பரிந்துரை செய்வதற்கு, மற்றும்‌. (1) வகுத்துரைக்கலாகும்‌ அத்தகைய பிற அதிகாரங்களை செலுத்துவதற்கு மற்றும்‌ அத்தகைய பிற கடமைகளை ஆற்றுவதற்கு. 24. (1) கல்வி மன்றம்‌, துணைவேந்தரால்‌ முடிவு செய்யப்படக்கூடிய தேதிகளில்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ குறைந்தபட்சம்‌ இருமுறையாவது கூடுதல்‌ வேண்டும்‌. அத்தகைய கூட்டங்களில்‌ ஒன்று ஆண்டுக்‌ கூட்டமாக அழைக்கப்படும்‌. அவ்வப்பொழுது நிச்சயிக்கலாகும்‌ அத்தகைய பிற தேதிகளிலும்‌ கல்வி மன்றம்‌ கூடலாம்‌. கல்வி. கடமைகளும்‌. கல்வி மன்றத்தின்‌. கூட்டங்கள்‌. நிதிக்குழு. @) கல்வி மன்றத்தின்‌ உறுப்பினர்களின்‌ மொத்த எண்ணிக்கையின்‌ ஒருபகுதி கல்வி மன்றத்தின்‌ கூட்டமொன்றிற்காகத்‌ தேவைப்படும்‌ குறைவெண்ணாக இருத்தல்‌ வேண்டும்‌; வரம்புரை.- ஆனால்‌ பட்டங்களை, பட்டயங்களை அல்லது பிறகல்வி சிறப்புச்‌ சீர்மைகளை வழங்கும்‌ நோக்கத்திற்காக நடத்தப்படும்‌ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அல்லது கல்விமன்றக்‌ கூட்டமொன்றிற்கு குறைவெண்‌ தேவையில்லை. (8) துணை வேந்தர்‌, தான்‌ தக்கதெனக்‌ கருதும்போது மற்றும்‌ கல்வி மன்றத்தின்‌ மொத்த உறுப்பினர்களின்‌ ஐம்பது சதவீதத்திற்கு குறையாதவர்களின்‌ எழுத்து மூலமான வேண்டுகோளின்‌ பேரில்‌ கல்வி மன்றத்தின்‌ சிறப்புக்‌ கூட்டத்தைக்‌ கூட்டலாம்‌. 25. () நிதிக்குழுவானது பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருக்கும்‌, அதாவது:- துணைவேந்தர்‌; (ட) நிதித்துறையின்‌ பொறுப்பிலுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (c) உயர்கல்வி துறையின்‌ பொறுப்பிலுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (0 (8) அதனுடைய உறுப்பினர்களுக்கிடையேயிருந்து ஆட்சிக்குழுவால்‌ பெயர்‌ குறித்து அமர்த்தப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்‌; (@) (b) ) ) மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்பநலத்துறையின்‌ பொறுப்பிலுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (2) காரணங்கள்‌ எதற்காகவும்‌ நிதித்துறையின்‌ பொறுப்பிலுள்ள அரசுச்‌ செயலாளர்‌ அல்லது உயர்கல்வித்துறையின்‌ பொறுப்பிலுள்ள அரசுச்‌ செயலாளர்‌ அல்லது மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்ப நலத்துறையின்‌ பொறுப்பிலுள்ள அரசுச்‌ செயலாளர்‌, நிதிக்குழுவின்‌ கூட்டங்களில்‌ ந்து கொள்ள இயலாது இருக்குமேயானால்‌, அவர்‌ தன்னுடைய துறையின்‌ அரசுத்‌ துணைச்‌ செயலாளர்‌ படி நிலைக்கு குறையாத அலுவலர்‌ எவரையும்‌ அதில்‌ கலந்து கொள்வதற்காக அமர்த்தலாம்‌. அவ்வாறு அமர்த்தப்பட்ட அலுவலர்‌ கூட்டத்தின்‌ கலந்துரையாடல்களில்‌ கலந்து கொள்வதற்கான உரிமையைப்‌ பெற்றிருப்பார்‌ மற்றும்‌ வாக்களிப்பதற்கான உரிமையையும்‌ பெற்றிருப்பார்‌. 6) துணை வேந்தர்‌ பதவி வழி தலைமையராக இருப்பார்‌ மற்றும்‌ நிதி அலுவலர்‌ நிதிக்குழுவிற்கு பதவிவழி செயலாளராக இருப்பார்‌. @ பதவி வழி உறுப்பினர்களைத்‌ தவிர நிதிக்குழுவின்‌ உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ மூன்று ஆண்டு காலத்திற்கு பதவிவகிப்பர்‌. ௫ நிதிக்‌ குழு கணக்குகளை ஆய்வு செய்வதற்கு மற்றும்‌ செலவினத்திற்கான. திட்டங்களை கூர்ந்தாய்வு செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும்‌ குறைந்தபட்சம்‌ இரண்டு முறையாவது கூடுதல்‌ வேண்டும்‌. (6) நிதி அலுவலரால்‌ தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டு கணக்குகளையும்‌ நிதிசார்ந்த மதிப்பீடுகளையும்‌, கருத்திசைவிற்காக, கருத்துரைக்காகவும்‌, நிதிக்குழுவின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அதற்குப்‌ பின்பு ஆட்சிக்‌ குழுவின்‌ ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (7) நிதிக்குழு ஆண்டு ஒன்றிற்காக பல்கலைக்கழகத்தின்‌ வருவாய்‌ மற்றும்‌ வள: ஆதாரங்களின்‌ அடிப்படையில்‌ உற்பத்தி பணிகளை பொறுத்த நேர்வில்‌ பெறுகடன்களின்‌ தொகை உள்ளடங்களாக மொத்த தொடர்‌ செலவினத்திற்காக மற்றும்‌ மொத்த தொடரா செலவினத்திற்கான வரையறைகளை பரிந்துரை செய்யலாம்‌. (6) நிதிக்குழுவானது- (8) அவ்வப்பொழுது பல்கலைக்கழகத்தின்‌ நிதி நிலையை மறு ஆய்வு செய்தல்‌ வேண்டும்‌; (௦) முதலீட்டினை உள்ளடக்கிய ஒவ்வொரு திட்டமும்‌ அல்லது செலவினத்திற்காக ஆண்டு நிதி மதிப்பீடுகளுக்கு வகையம்‌ செய்யப்பட்டிருக்காதபோது அல்லது ஆண்டு நிதிமதிப்பீடுகளில்‌ வழங்கப்பட்ட தொகையைவிட அதிகமான செலவுகள்‌ உள்ளடங்கியவற்றிற்கான திட்டம்‌ ஒவ்வொன்றின்‌ அடிப்படையில்‌ ஆட்சிக்‌ குழுவிற்கு பரிந்துரை செய்ய வேண்டும்‌; (6) பல்கலைக்கழகத்தின்‌ கணக்குகளை பராமரிப்பதற்கான முறைகளை மற்றும்‌ நடைமுறையை மற்றும்‌ விண்ணப்பங்களை வகுத்துரைக்க வேண்டும்‌; (8) பல்கலைக்கழகத்தின்‌ நிதி தொடர்பான அனைத்து பொருட்பாடுகள்‌ தொடர்பாக ஆட்சிக்குழுவிற்கு பரிந்துரை செய்யவேண்டும்‌; (6) வகுத்துரைக்கலாகும்‌ அத்தகைய பிற செயற்பணிகளைச்‌ செய்யவேண்டும்‌. (9) நிதி அலுவலரால்‌ தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின்‌ நிதிமதிப்பீடுகளை நேர்வு செய்வதற்காக மற்றும்‌ ஆணைகளுக்காக நிதிக்குழுவின்‌ முன்பு வைத்தல்‌ வேண்டும்‌. பிறகு நிதிக்குழுவில்‌ அவ்வாறு மாற்றம்‌ செய்யப்பட்ட மேற்கூறப்பட்ட மதிப்பீடுகளை நேர்விற்காக ஆட்சிக்குழுவின்‌ முன்பு வைத்தல்‌ வேண்டும்‌ ஆட்சிக்குழுவானது, நிதிக்குழுவால்‌ செய்யப்பட்ட மாற்றமைவுகளை ஏற்றுக்‌ கொள்ளலாம்‌. 26. (1) பல்கலைக்கழகமானது நிலையமை விதிகளால்‌ வகுத்துரைக்கலாகும்‌ கலை, அறிவியல்‌ மற்றும்‌ பிற பாடப்பயிலாறுகளையும்‌ மற்றும்‌ அத்தகைய பிற புலங்களை உள்ளடக்கியிருத்தல்‌ வேண்டும்‌. @ புலம்‌ ஒவ்வொன்றிற்கும்‌ ஒரு தலைவர்‌ இருத்தல்‌ வேண்டும்‌ அவர்‌ வகுத்துரைக்கலாகும்‌. அத்தகைய முறையில்‌ பணியமர்த்தம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. @ புலம்‌ ஒவ்வொன்றும்‌ வகுத்துரைக்கலாகும்‌ ஒதுக்கி தரப்பட்ட பயிலும்‌ பாடங்களுடன்‌. அத்தகைய கற்பிக்கும்‌ துறைகளை உடையதாய்‌ இருத்தல்‌ வேண்டும்‌. @ ஒவ்வொரு புலத்திற்காக பாடக்‌ குழு ஒன்று இருத்தல்‌ வேண்டும்‌, அதனுடைய அமைப்பு மற்றும்‌ செயற்பணிகளானது வகுத்துரைக்கலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. (இ புலங்களின்‌ அமைப்பு மற்றும்‌ செயற்பாடுகளானது பிற அனைத்து தொடர்பானவைகள்‌. வகுத்துரைக்கலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. பிற அதிகார அமைப்புகளை அமைத்துருவாக்குதல்‌. 27. விளம்புகை செய்யப்படலாகிறவாறு அத்தகைய அமைப்பு பிற அமைப்புகளின்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளாக இருக்கக்‌ கூடியவை, நிலையமை விதிகளால்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளாக இருக்கும்‌. 28. பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ அனைத்தும்‌ குழுக்களை அமைத்துருவாக்குவதற்கான அல்லது மீண்டும்‌ அமைத்துருவாக்குவதற்கான அதிகாரத்தைப்‌ பெற்றிருக்கும்‌ தனக்குத்தக்கதெனக்‌ கருதலாகிறவாறு அத்தகைய அவர்களுடைய அதிகாரங்களை ஒப்படைவு செய்வதற்கு அத்தகை குழுக்களானது, பிறவாறாக வகை செய்யப்பட்டிருப்பது நீங்கலாக அடங்கியுள்ள அதிகார அமைப்பின்‌ உறுப்பினர்களைப்‌ பொறுத்து மற்றும்‌ அத்தகைய பிற நபர்களின்‌ அத்தகையவை வகுத்துரைக்கபடலாகிறவாறு இருக்கலாம்‌. ஒவ்வொரு நேர்விலும்‌ பொருத்தமெனத்‌ தோன்றலாகும்‌ அதிகார அமைப்பாக எதுவும்‌ இருப்பின்‌ அவையும்‌ அடங்கும்‌. அத்தியாயம்‌-॥/ நிலையமை விதிகள்‌, அவசரச்‌ சட்டங்கள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறைவிதிகள்‌. 29. இந்தச்சட்டத்தின்‌ வகையங்களுக்கு உட்பட்டு, நிலையமை விதிகள்‌ பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ அனைத்திற்காகவும்‌ அல்லது எதற்காகவும்‌ ஏற்படுத்தப்படலாம்‌, அதாவது:- (8) பட்டங்களை வழங்குவதற்கு பட்டமளிப்பு விழாவை நடத்துதல்‌; (௦) மதிப்புறு பட்டங்களை மற்றும்‌ கல்வி சிறப்புச்‌ சீர்மைகளை வழங்குதல்‌; (6) பல்கலைக்கழக அதிகார அமைப்புகளின்‌ அமைப்பு அதிகாரங்கள்‌ மற்றும்‌ செயற்பணிகள்‌; (6) அதிகார அமைப்புகளின்‌ உறுப்பினர்களுக்கிடையேயிருந்து காலியிடங்களை நிரப்பும்‌ முறை; (6) அதிகார அமைப்புகளின்‌ மற்றும்‌ அதனின்‌ குழுக்களின்‌ உறுப்பினர்களுக்கு செலுத்தப்படக்கூடிய படிகள்‌; (f) அத்தகைய கூட்டங்களில்‌ அலுவல்களை நடத்துவதற்கான குறைவெண்‌: உள்ளடங்கலாக அதிகார அமைப்புகளின்‌ கூட்டங்களில்‌ நடைமுறை; (9) அதிகார அமைப்புகளின்‌ ஆணைகளில்‌ அல்லது முடிவுகளில்‌ சாற்றுக்‌ கையொப்பமிடுதல்‌; (1) பல்கலைக்கழகத்தில்‌ கற்பித்தல்‌ துறைகளை அமைத்தல்‌; (i) வேந்தர்‌ மற்றும்‌ துணை வேந்தரைத்‌ தவிர பல்கலைக்கழகத்தின்‌ பிற அலுவலர்களின்‌ அலுவலகக்‌ காலம்‌ மற்றும்‌ பணியமர்த்தம்‌ செய்யும்‌ முறை மற்றும்‌ பணிவரைக்கட்டுகள்‌; () பல்கலைக்கழகத்தில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற நபர்களின்‌ தகுதிகள்‌; புலங்கள்‌ மற்றும்‌ பாடக்‌ குழுக்கள்‌. குழுக்களை: மற்றும்‌ அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்‌. நிலையமை விதிகள்‌. அரசச்‌ சட்டங்கள்‌. () பல்கலைக்கழகத்தால்‌ பணியமர்த்தம்‌ செய்யபபட்டுள்ள ஆசிரியர்‌ மற்றும்‌ பிற நபர்களின்‌ பணி வரையுரைகளை, வரைக்கட்டுகளையும்‌ தீர்மானித்தல்‌ மற்றும்‌ பணியமர்த்தம்‌ செய்யும்முறை வகைகள்‌; (1) பல்கலைக்கழகத்தால்‌ பணியமர்த்தம்‌ செய்யப்பட்டுள்ள அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌. மற்றம்‌ பிற நபர்களின்‌ நலனுக்காக ஒய்வூதியத்தை, பணிக்கொடையை, காப்பீட்டை அல்லது வருங்கால வைப்பு நிதியை ஏற்படுத்துதல்‌; (M) ஆராய்ச்சி உதவித்‌ தொகைகளை; படிப்புதவித்‌ தொகைகளை, மாணவர்‌ உதவித்‌ தொகைகளை, உதவிச்‌ சம்பளங்களை, ஆதரவு படித்‌ தொகைகளை பதக்கங்களை மற்றும்‌ பரிசுகளை ஏற்படுத்துதல்‌ மற்றும்‌ வழங்குவதற்கான அதனின்‌ வரைக்கட்டுகள்‌; (1) அரங்குகள்‌, விடுதிகள்‌ மற்றும்‌ ஆய்வுக்கூடங்களை நிறுவுதல்‌ மற்றும்‌ பராமரித்தல்‌; (6) அரங்குகளில்‌ மற்றும்‌ விடுதிகளில்‌ பல்கலைக்கழக மாணவர்கள்‌ தங்குமிடத்திற்கான. வரைக்கட்டுகள்‌ மற்றும்‌ அத்தகைய தங்குமிடத்திற்கான கட்டணங்கள்‌ மற்றும்‌ பிற கட்டணங்களை விதித்தல்‌; நிலையமை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அல்லது தேவைப்படும்‌ பிற பொருட்பாடு எதுவும்‌. 30. () ஆட்சிக்குழு அவ்வப்பொழுது இந்தப்பிரிவில்‌ இதன்‌ பின்பு வகை செய்யப்பட்டுள்ள முறையில்‌ நிலையமை விதிகளை செய்யலாம்‌ மற்றும்‌ திருத்தம்‌ செய்யலாம்‌ அல்லது நிலையமை விதிகளை நீக்கறவு செய்யலாம்‌; @ கல்விக்குழு நிறைவேற்றப்படவிருக்கும்‌ நிலையமைவிதி அல்லது அதற்குரிய திருத்தம்‌ எதனின்‌ அல்லது நீக்கறவின்‌ வரைவினை ஆட்சிக்குழுவிடம்‌ தெரிவிக்கலாம்‌ மற்றும்‌ ஆட்சிக்குழுவினால்‌ நிறைவேற்றப்படக்‌ கூடிய நிலையமை விதி ஒன்று அத்தகைய வரைவு, ஆட்சிக்குழுவின்‌ அடுத்த கூட்டத்தில்‌ ஆட்சிக்குழுவினால்‌ ஓர்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌ வரம்புரை.-ஆனால்‌ கல்விக்குழு கல்வி அலுவல்பாடுகள்‌ தவிர பிற பொருட்பாடுகள்‌ தொடர்பான நிலையமை விதி எதனின்‌ அல்லது நிலையமை விதி ஒன்றின்‌ திருத்தம்‌ எதனின்‌ வரைவினை முன்மொழிதலாகாது [4] ஆட்சிக்குழு (2ஆம்‌ உட்பிரிவின்படி கல்விக்குழுவால்‌ முன்‌ மொழியப்பட்ட வரைவை ஓர்வு செய்யலாம்‌ மற்றும்‌ மறு ஓர்விற்காக கல்விக்குழுவின்‌ திருத்ததுடன்‌ அல்லது திருத்தங்கள்‌ இன்றி நிலையமை விதி வரைவை நிறைவேற்றலாம்‌ அல்லது நீக்கலாம்‌ அல்லது திருப்பி அனுப்பலாம்‌. @ (வ) ஆட்சிக்குழுவின்‌ உறுப்பினர்‌ எவரும்‌ நிலையமை விதி ஒன்றின்‌ வரைவை அல்லது அதற்குரிய திருத்தங்கள்‌ எதனையும்‌ அல்லது நிலையமை விதி ஒன்றின்‌ நீக்கறவினை மற்றும்‌ நிலையமை விதி வரைவை நிறைவேற்றலாம்‌ அல்லது தள்ளுபடி செய்யலாம்‌ அல்லது திருத்தங்களுடன்‌ அல்லது திருத்தங்களின்றி ஒர்விற்காக அதனை கல்விக்குழுவிற்கு திருப்பி அனுப்பலாம்‌. (6) கல்விக்குழுவின்‌ வரம்பிற்குள்‌ இருக்கின்ற பொருட்பாடுகள்‌ தொடர்பான அத்தகைய வரைவு என்கின்ற நேர்வில்‌, ஆட்சிக்குழு, கல்விக்குழுவிற்கு பரிசீலனைக்காக சுட்டியனுப்பலாம்‌.. அது, வரைவிற்கு ஒப்புதலளிக்காவிட்டாலும்‌ ஆட்சிக்குழுவிற்கு அறிக்கை செய்யலாம்‌ அல்லது கல்விக்குழுவானது ஒப்புதலளிக்கிறவாறான அத்தகைய படிவத்தில்‌ ஆட்சிக்குழுவிடம்‌ வரைவினை சமர்ப்பிக்கலாம்‌ மற்றும்‌ ஆட்சிக்குழு திருத்தங்களுடனோ, அல்லது திருத்தங்கள்‌ இன்றியோ வரைவினை நிறைவேற்றலாம்‌ அல்லது தள்ளுபடி செய்யலாம்‌. (6) ஆட்சிக்குழுவால்‌ நிறைவேற்றப்பட்ட நிலையமை விதி ஒன்று அல்லது அதற்குரிய திருத்தம்‌ அல்லது அதனின்‌ நீக்கறவு வேந்தரிடம்‌ அவருடைய ஒப்புதலுக்காக வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. அவர்‌ அதற்கு ஒப்புதலை அளிக்கலாம்‌. அல்லது ஒப்புதல்‌ அளித்தலை நிறுத்தி விதி ஒன்று திருத்தம்‌, நிலையமை விதி ஒன்று, அதற்குரிய திருத்தம்‌ அல்லது அதனின்‌ நீக்கறவு வேந்தர்‌ இசைவளிக்கும்‌ வரையில்‌ செல்லுந்தன்மை பெறாமல்‌ இருக்கும்‌. 31. இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ நிலையமை விதிகள்‌, அவசரச்‌ சட்டங்கள்‌ வரைமுறைகளுக்குட்பட்டு துணை முறைவிதிகள்‌ பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ அனைத்திற்கும்‌ அல்லது அவற்றில்‌ எதற்கேனும்‌ ஏற்படுத்தப்படலாம்‌ அதாவது (8) பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை சேர்த்தல்‌; b) இப்பல்கலைக்கழகத்தின்‌ அனைத்தும்‌ பட்டங்களை, பட்டயங்களை மற்றும்‌ பிற கல்வி சிறப்புச்‌ சீர்மைகளை பெறுவதற்கான பாடப்படிப்புகள்‌; (6) மாணவர்களின்‌ தங்குமிடத்திற்கான வரைக்கட்டுகள்‌ மற்றும்‌ விடுதிகளில்‌ தங்குவதற்கான கட்டணங்களை விதித்தல்‌; நிலையமை விதிகள்‌ எவ்வாறு (6) எந்த வரைக்கட்டுகளின்படி, இப்பல்கலைக்கழகப்‌ பட்டயங்களை சிறப்பு பட்டங்களை, பட்டயங்களை பிற கல்வி சிறப்புச்‌ சீர்மைகளை பெறுவதற்கான படிப்புகளை அனுமதிக்கப்படுதல்‌ வேண்டும்‌; (6) பல்கலைக்கழகத்தின்‌ தேர்வுகளை நடத்துதல்‌ எந்த வரைகட்டுகளின்பேரில்‌ அத்தகைய தேர்வுகளுக்கு மாணவர்கள்‌ அனுமதிக்கப்படுதல்‌ வேண்டும்‌; (f) தேர்வுகளுக்கு மாணவர்களை அனுமதித்தல்‌ தொடர்பாக எந்த முறையில்‌ விலக்களிக்கப்படலாம்‌; (9) தேர்வு அமைப்புகளின்‌ மற்றும்‌ தேர்வாளர்களின்‌ வரைக்கட்டுகள்‌ மற்றும்‌ பணியமர்த்தம்‌ செய்யும்‌ முறை மற்றும்‌ தேர்வு அமைப்புகளின்‌ கடமைகள்‌; (1) பல்கலைக்கழகத்தின்‌ மாணவர்களுக்கிடையே ஒழுக்கத்தினை பராமரித்தல்‌; (i) கற்கும்‌ படிப்புகள்‌, ஆராய்ச்சி பரிசோதனை மற்றும்‌ நடைமுறை பயிற்சி ஆகியவற்றிற்கு மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்கள்‌, சிறப்பு பட்டங்கள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புச்‌ சீர்மைகள்‌ ஆகியவற்றிற்கான தேர்வுகளுக்கு அனுமதிப்பதற்காக விதிக்கப்படக்‌ கூடிய கட்டணங்கள்‌, மற்றும்‌ () ஆசிரியர்களின்‌ தகுதிகள்‌ மற்றும்‌ வரையூதியங்கள்‌, மற்றும்‌ (6) இந்த சட்டத்தினால்‌ தேவைப்படக்கூடிய நிலையமை விதிகளில்‌ அல்லது அவசரச்‌ சட்டங்களால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ பிற பொருட்பாடு எதுவும்‌. 32. () அவசரச்‌ சட்டங்களை செய்யும்போது ஆட்சிக்குழு (8) அத்தகைய அவசரச்‌ சட்டங்கள்‌ தேர்வு ஆய்வாளர்களின்‌ பணியமர்த்தத்தை மற்றும்‌ கடமைகளை பாதிக்கும்‌ பொழுது படிப்புகளின்‌ வாரியங்களையும்‌; (6) அவை தேர்வுகள்‌ நடத்துவதை அல்லது அவற்றின்‌ தரத்தை அல்லது மாணவர்கள்‌. தங்கும்‌ இடத்தின்‌ வரைக்கட்டுகளை பாதிக்கும்‌ பொழுது கல்விமன்றத்தையும்‌ கலந்தாய்வு செய்தல்‌ வேண்டும்‌. அவை தேர்வுகள்‌ நடத்துவதை அல்லது அவற்றின்‌ தரத்தை அல்லது மாணவர்கள்‌ தங்கும்‌ இடத்தின்‌ வரைக்கட்டுகளை பாதிக்கும்‌ பொழுது கல்விமன்றத்தையும்‌ கலந்தாய்வு செய்தல்‌ வேண்டும்‌. (2) ஆட்சிக்குழுவால்‌ செய்யப்பட்ட அவசரச்சட்டங்கள்‌ அனைத்தும்‌ அது பணிக்கலாகும்‌ அத்தகைய தேதியிலிருந்து செல்திறம்‌ பெறும்‌. ஆனால்‌ அவ்வாறு செய்யப்பட்ட அவசரச்‌ சட்டம்‌ ஒவ்வொன்றும்‌, அது செய்யப்பட்டதற்கு பின்னர்‌ கூடிய விரைவில்‌ வேந்தரிடம்‌ மற்றும்‌ கல்விக்‌ குழுவிடம்‌ சமர்ப்பிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ கல்விக்குழு அதனுடைய அடுத்து வரும்‌ கூட்டத்தில்‌ அதனை பரிசீலனை செய்ய வேண்டும்‌. (3) அவசரச்சட்டம்‌ எதனின்‌ செயல்பாடும்‌ கல்விமன்றம்‌ அதை பரிசீலனை செய்வதற்கான. வாய்ப்பினை பெறும்‌ காலம்‌ வரையில்‌ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ என வேந்தர்‌ பணிக்கலாம்‌.. 33. () கல்விமன்றச்‌ சட்டம்‌, நிலையமை விதிகள்‌ மற்றும்‌ அவசரச்‌ சட்டங்களுக்கு இணங்க, அவற்றின்கீழ்‌ அதற்கு குறித்தளிக்கப்பட்டுள்ள கடமைகளைச்‌ செய்வதற்கு ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) அத்தகைய ஒழுங்குமுறை விதிகள்‌ அனைத்தும்‌ கல்விக்‌ குழுவால்‌ பணிக்கலாகிறவாறான அத்தகையத்‌ தேதியிலிருந்து செல்திறம்‌ பெறும்‌. ஆனால்‌ அவ்வாறு செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி ஒவ்வொன்றும்‌ கூடியவிரைவில்‌ அதனுடைய அடுத்துவரும்‌ கூட்டத்தில்‌ அதனுடைய பரிசீலனைக்காக ஆட்சிக்குழுவிடம்‌ சமர்ப்பிக்கப்படுதல்‌ வேண்டும்‌ அத்தியாயம்‌ 1. மாணவர்‌ சேர்க்கை. 34. () நபர்‌ எவரும்‌ பல்கலைக்கழகத்திற்கு பட்டங்கள்‌, சிறப்புப்‌ பட்டங்கள்‌ அல்லது பட்டயங்களின்‌ தேர்வுகளுக்கு அனுமதிக்காக இப்பல்கலைக்கழகத்திலுள்ள படிப்பு ஒன்றிற்கு.- அதற்கென வகுத்துரைக்கப்பட்ட தேர்வில்‌ தேர்ச்சி பெற்றிருந்தாலன்றி மற்றும்‌ அவசரச்‌ சட்டங்கள்‌. ஒழுங்குமுறை விதிகள்‌. பல்கலைக்கழக படிப்புகளுக்கு சேர்த்துக்‌ கொள்ளுதல்‌. தமிழ்நாடு சட்டம்‌ 3/2007 (6) பல்கலைக்கழகத்தால்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய பிற கல்வி வரைக்கட்டுகளை நிறைவேற்றியிருந்தாலன்றி சேர்த்துக்‌ கொள்ளப்படமாட்டார்‌. @ பல்கலைக்கழக தேர்வு ஒன்றிற்காக நபர்‌ ஒவ்வொருவரும்‌ கல்விமன்றப்‌ பரிந்துரையின்பேரில்‌ செய்யப்பட்ட ஆட்சிக்குழுவின்‌ தனி ஆணை ஒன்றினால்‌ இந்த உட்பிரிவின்வகைமுறைகளிலிருந்து அவர்‌ விலக்களிக்கப்பட்டிருந்தாலன்றி பல்கலைக்கழகத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவராக பதிவு செய்யப்படலாம்‌. அத்தகைய விலக்களிப்பு எதுவும்‌ ஆட்சிக்குழு பொருத்தமென கருதலாகிறவாறான அத்தகைய வரைக்கட்டுகளுக்கு உட்பட்டுச்‌ செய்யப்படலாம்‌. 35. ௫ பல்கலைக்கழகத்தின்‌ படிப்பு அல்லது பயிற்சி ஒன்றிற்கு சேர்த்து கொள்வதற்காக நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான கொள்கையை, வழிகாட்டு நெறிகளை முறையை மற்றும்‌ நடைமுறையை பொது அல்லது சிறப்பு ஆணையின்‌ வாயிலாக குறித்துரைக்கலாம்‌. (2) பல்கலைக்கழகத்தில்‌ பொறியியல்‌, மருத்துவம்‌, பல்மருத்துவம்‌, வேளாண்மை மற்றும்‌ பிற துணைப்‌ படிப்புகளைப்‌ போன்ற தொழில்‌ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை, 2006ஆம்‌ ஆண்டு தொழில்‌ கல்வி நிறுவனங்கள்‌ சேர்க்கைச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ பின்பற்றியிருத்தல்‌ வேண்டும்‌. 36. பல்கலைக்கழக தேர்வு எதற்கும்‌ நபர்‌ எவரும்‌ பல்கலைக்கழகமொன்றின்‌. உறுப்பினரொருவராக அவர்‌ பதிவு செய்யப்பட்டிருந்தாலன்றி மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகளின்படி தேவைப்படும்‌ வருகைப்பதிவு குறித்த தேவைப்பாடுகளை நிறைவு செய்திருந்தாலன்றி அல்லது வகுத்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகளின்படி செய்யப்பட்ட கல்வி மன்றத்தின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ நிறைவேற்றப்பட்ட ஆட்சிக்குழுவின்‌ ஆணை ஒன்றினால்‌ பதிவு அல்லது வருகைப்பதிவு அல்லது இரண்டும்‌ சேர்ந்துள்ள அத்தகைய தேவைப்பாடுகளிலிருந்து அவருக்கு விலக்களிக்கப்பட்டிருந்தாலன்றி, பல்கலைக்கழகத்‌ தேர்வு எதற்கும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படுதல்‌ கூடாது. இந்தப்‌ பிரிவின்படி வழங்கப்படும்‌ விலக்களிப்புகள்‌ ஆட்சிக்குழு பொருத்தமெனகருதலாகிறவாறான அத்தகைய வரைக்கட்டுகளுக்கு உட்பட்டிருத்தல்‌ வேண்டும்‌, அத்தியாயம்‌ Vil நிதியங்கள்‌ மற்றும்‌ கணக்குகள்‌. 37. () பல்கலைக்கழகம்‌, நிரந்தர நிலைக்கொடை நிதியம்‌ என அழைக்கப்படுகிற நிதியம்‌ ஒன்றினை பெற்றிருக்கும்‌. அதனை வைப்பீடு செய்யலாம்‌ மற்றும்‌ மைய அரசால்‌ அல்லது மாநில அரசு எதனாலும்‌ வழங்கப்பட்ட அல்லது பொறுப்பு நிதி அளிக்கப்பட்ட காப்புறுதிகளில்‌ முதலீடு செய்யலாம்‌. (2) மேற்சொன்ன நிரந்தர நிலைக்கொடை நிதியம்‌- ) இருபது இலட்சம்‌ ரூபாய்‌ தொகை மதிப்பிற்குரிய திரு. இராஜா சர்‌ S.RM. அண்ணாமலை செட்டியார்‌ அவர்களால்‌ அளிக்கப்பட்டது; (௦) அதற்கு அரசால்‌ அளிக்கப்பட்ட தொகை இருபத்தேழு இலட்சம்‌ ரூபாய்‌; மற்றும்‌ இந்த நிதியத்திற்கு அரசால்‌, மைய அரசால்‌ உள்ளமை அல்லது பிற பொது அமைப்பால்‌ அல்லது மற்றவர்களால்‌ செய்யப்பட்ட பங்களிப்புகள்‌ கொண்டிருக்கும்‌. 38. பல்கலைக்கழகம்‌, பொதுநிதியம்‌ ஒன்றைப்‌ பெற்றிருக்கும்‌ அந்நிதியத்தில்‌.- (8) கட்டணங்கள்‌, மானியங்கள்‌, நன்கொடைகள்‌, கொடைகள்‌ ஆகியவை எவையேனும்‌ இருப்பின்‌ அவற்றிலிருந்து பெறப்படும்‌ வருமானம்‌. (b) அரசால்‌ சொந்தம்‌ கொண்டுள்ள அல்லது கட்டாளுகை செய்யப்படும்‌ மாநகராட்சி எதனாலும்‌, அதிகார அமைப்பாலும்‌, அதிகார அமைப்பு எதனாலும்‌, பல்கலைக்கழக மானிய நிதி, மாநில அரசு எதனாலும்‌, மைய அரசாலும்‌ செய்யப்பட்ட பங்களிப்பு அல்லது மானியம்‌ எதுவும்‌; மற்றும்‌ ) நிலைக்கொடைகளையும்‌ பிறவரவுகளையும்‌ வரவுவைத்தல்‌ வேண்டும்‌. 39. பல்கலைக்கழகம்‌ நிலையமை விதிகளினால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற நிதியங்களை பெறலாம்‌. மாணவர்களை தேர்ந்தெடுத்தல்‌ மற்றும்‌ சேர்த்தல்‌. பல்கலைக்கழக தேர்வுகளுக்கு அனுமதித்தல்‌. நிரந்தர நிலைக்‌ கொடை நிதியம்‌ பொது நிதியம்‌. பிற நிதியங்கள்‌. மையச்‌ சட்டம்‌ XIX[1925. 40. பல்கலைக்கழகத்தின்‌ நிதியங்கள்‌ மற்றும்‌ அனைத்து பணங்களும்‌ வகுத்துரைக்கப்படலாகிறவான அத்தகைய முறையில்‌ மேலாண்மை செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 41. பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டறிக்கை ஆட்சிக்குழுவால்‌ தயாரிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய தேதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ கல்விமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது கல்வி மன்றத்தின்‌ அடுத்த ஆண்டு கூட்டத்தில்‌ பரிசீலனை செய்யப்படுதல்‌ வேண்டும்‌. அதன்பிறகு கல்விமன்றம்‌ அதன்பேரில்‌ தீர்மானங்களை நிறைவேற்றி அதனை ஆட்சிக்குழுவிற்குத்‌ தெரியப்படுத்தலாம்‌; மற்றும்‌ அது அதற்கிணங்கியவகையில்‌ நடவடிக்கை எடுக்கலாம்‌ ஆட்சிக்குழு அதனால்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கையினை கல்விமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்‌. அதன்பின்பு, கல்விமன்றத்தின்‌ அதன்பேரிலான தீர்மானத்தின்‌ நகல்‌ ஒன்றுடன்‌ அறிக்கையொன்றின்‌ நகலொன்று, இவற்றில்‌ எது இருப்பினும்‌ அது, அரசுக்கு சமர்ப்பிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 42. (1) பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டுக்கணக்குகள்‌ அரசு பணிக்கக்கூடிய அத்தகைய ஆய்வுக்கும்‌ தணிக்கைக்கும்‌ சமர்ப்பிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ ஆண்டு கணக்குகளின்‌ மற்றும்‌ தணிக்கை அறிக்கையின்‌ படியொன்று அரசுக்கு சமர்ப்பிக்கப்படுதல்‌ வேண்டும்‌. @ பல்கலைக்கழகம்‌, அத்தகைய தணிக்கை செய்யப்பட்டதில்‌ எழுப்பப்பட்ட மறுப்புரைகளைத்‌ தீர்த்து வைத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அந்தத்‌ தணிக்கை அறிக்கையின்பேரில்‌ அரசினால்‌ பிறப்பிக்கலாகிறவாறான அத்தகைய அறிவுறுத்தற்களை நிறைவேற்றுதல்‌ வேண்டும்‌. @ அரசு, தணிக்கை செய்யப்பட்ட ஆண்டுக்‌. கணக்குகளையும்‌, தணிக்கை அறிக்கையையும்‌ அதன்‌ கருத்துரைகளோடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ முன்பு வைப்பதற்கு விழைதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ VI பணிவரைக்கட்டுகள்‌. 43. ட பல்கலைக்கழகம்‌ இப்பல்கலைக்கழகத்தில்‌ பணியமர்த்தம்‌ செய்யப்பட்டுள்ள அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற நபர்களின்‌ நலனுக்காக வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய முறையிலும்‌ அத்தகைய வரைக்கட்டுகளுக்குட்பட்டும்‌, பொருத்தமெனக்‌ கருதலாகிறவாறு அத்தகைய ஒய்வூதியம்‌, பணிக்கொடை காப்பீடு மற்றும்‌ வருங்கால வைப்பு நிதியங்கள்‌ ஆகியவற்றை ஏற்படுத்தப்படலாம்‌.. (2) பல்கலைக்கழகம்‌ (1) ஆம்‌ உட்பிரின்படி வருங்கால வைப்பு நிதியம்‌ ஒன்றை அவ்வாறு ஏற்படுத்தியிருக்கின்றவிடத்து பல்கலைக்கழகம்‌ ஒர்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பாகவும்‌, அந்நிதியம்‌ ஒர்‌ அரசு வருங்கால வைப்பு நிதியமாகவும்‌ இருந்தாற்போன்றே அத்தகைய நிதியத்திற்கு அரசு 1925 ஆம்‌ ஆண்டு வருங்கால வைப்பு நிதியங்கள்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ பொருந்தும்‌ என அரசு விளம்புகை செய்யலாம்‌. (8) பல்கலைக்கழகம்‌, நிதிக்குழுவை கலந்தாலோசித்து அது தீர்மானிக்கலாகிறவாறான அத்தகைய முறையில்‌ வருங்கால வைப்பு நிதியத்‌ தொகையை முதலீடு செய்யலாம்‌. 44, இதரச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, பல்கலைகழகத்தில்‌ பணியமர்த்தம்‌ செய்யப்பட்டுள்ள அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற நபர்களின்‌ பணியமர்த்தம்‌ தெரிவு செய்வதற்கான நடைமுறை, அலுவலர்களின்‌ ஊதியம்‌ மற்றும்‌ படித்தொகைகள்‌ மற்றும்‌ பிறபணிவரைக்கட்டுகள்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.-இந்தப்பிரிவின்‌ நோக்கத்திற்காக, “அலுவலர்‌” என்னும்‌ சொல்‌ வேந்தரையும்‌, இணைவேந்தரையும்‌ உள்ளடக்காது. 45. 0) பல்கலைக்கழகத்தின்‌ உதவிப்‌ பேராசிரியர்‌, இணைப்பேராசிரியர்‌, பேராசிரியர்‌, நூலகர்‌ மற்றும்‌ பல்கலைக்கழகத்திற்கு பிற ஆசிரியர்கள்‌ பதவிகளுக்கு பணியமர்த்தம்‌ செய்வதற்காக ஆட்சிக்குழுவிற்கு பரிந்துரைகளைச்‌ செய்வதற்காகத்‌ தெரிவுக்குழு ஒன்று அங்கே இருத்தல்‌ வேண்டும்‌. @ (0ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு பணியமர்த்தம்‌ செய்யப்படுவதற்கான தெரிவுக்‌ குழு துணைவேந்தரை அரசால்‌ பெயர்‌ குறித்து அமர்த்தப்படும்‌ நபர்‌ ஒருவரையும்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறான பிற நபர்களையும்‌ கொண்டிருக்கலாம்‌: வரம்புரை.-ஆனால்‌, தெரிவுக்‌ குழுவால்‌ செய்யப்படும்‌ அத்தகைய பணியமர்த்தத்திற்கான. தெரிவு, பல்கலைக்கழக மானிய ஆணையத்தினால்‌ அல்லது அத்தகைய பணியமர்த்தம்‌ தொடர்பானவை பொறுத்த பிற முகவாண்மைகளால்‌ பிறப்பிக்கப்படலாகும்‌ நெறி முறைளுக்கு இணங்கியவகையில்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. நிதியங்களின்‌. மேலாண்மை. ஆண்டறிக்கை. ஆண்டுக்‌ கணக்குகள்‌. ஒய்வூதியம்‌, பணிக்கொடை முதலியவை. பணி. தெரிவுக்குழு. துறைத்‌ தலைவர்களின்‌. பணி வரையுரைகளும்‌ @) துணைவேந்தர்‌, தெரிவுக்‌ குழுவொன்றின்‌ கூட்டங்களில்‌ தலைமை வகிப்பார்‌. @) தெரிவுக்‌ குழு ஒன்றின்‌ கூட்டங்கள்‌ துணை வேந்தரால்‌ கூட்டப்படுதல்‌ வேண்டும்‌. (6) பரிந்துரைகளைச்‌ செய்வதில்‌ தெரிவிக்குழு ஒன்றினால்‌ பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை, அவசரச்‌ சட்டங்களில்‌ தொகுக்கப்படுதல்‌ வேண்டும்‌. (6) தெரிவுக்குழு ஒன்றினால்‌ செய்யப்படும்‌ பரிந்துரைகளை ஆட்சிக்குழு ஏற்றுக்‌ கொள்வதற்கு இயலாதிருக்குமானால்‌, அது தன்னுடைய காரணங்களை பதிவு செய்யலாம்‌, மற்றும்‌ இறுதி ஆணைகளுக்காக வழக்கை வேந்தரிடம்‌ சமர்ப்பிக்கலாம்‌. (7) தற்காலிகப்‌ பதவிகளுக்கான அல்லது காலியிடங்களுக்கான பணியமர்த்தங்கள்‌, கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (8) தற்காலிகக்‌ காலியிடமானது, ஒரு கல்விக்‌ காலத்‌ தொடருக்கும்‌ அதிகமானதொரு கால அளவிற்கானதாக இருக்குமானால்‌ அது, முந்தைய வகைமுறைகளில்‌ குறித்துக்காட்டப்பட்டுள்ள நடைமுறைக்கிணங்கத்‌ தெரிவுக்குழுவின்‌ ஆலோசனையின்பேரில்‌ நிரப்பப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை.-ஆனால்‌, துணை வேந்தர்‌, பணி நலனை முன்னிட்டு அக்காலியிடத்தை நிரப்புவது தேவையாயிருக்கிறது என்று திருப்தியடைந்திருக்கிறார்‌ என்றால்‌ ஆறு மாதங்களுக்கு மிகா காலமொன்றிற்காக (௦) கூறில்‌ சுட்டப்பட்டுள்ள உள்ளமை தெரிவுக்குழு ஒன்றினால்‌, ஒரு தற்காலிக அடிப்படையில்பேரில்‌ பணியமர்த்தம்‌ செய்யலாம்‌. (௦) தற்காலிக காலியிடமானது, ஓராண்டுக்கு குறைவானதொரு கால அளவுக்கானதாக இருக்குமானால்‌ தொடர்புடைய புலத்தின்‌ தலைவரையும்‌, துறைத்தலைவரையும்‌, துணைவேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பெறும்‌ ஒருவரையும்‌ உள்ளடக்கிய உள்ளமை தெரிவுக்குழு ஒன்றின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, அத்தகைய காலி இடத்திற்கு பணியமர்த்தம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை.-ஆனால்‌, அதே நபர்‌ தலைவர்‌ மற்றும்‌ துறைத்தலைவரின்‌ அலுவலகப்‌ பதவிகளையும்‌ சேர்த்து வகிப்பாரானால்‌, தெரிவுக்குழு துணைவேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பெறும்‌ இருவரை உள்ளடக்கியதாக இருக்கலாம்‌: மேலும்‌ வரம்புரை.-ஆனால்‌, கற்பிக்கின்ற பதவிகளில்‌ இறப்பினாலோ, பிற காரணம்‌ எதனாலுமோ திடீரென்று ஏற்படும்‌ தற்செயலான காலியிடங்கள்‌ என்ற நேர்வில்‌ புலத்தலைவர்‌ தொடர்புடைய துறையின்‌ தலைவரைக்‌ கலந்தாலோசித்து ஒரு திங்களுக்காக தற்காலிக பணியமர்த்தம்‌ ஒன்றைச்‌ செய்யலாம்‌. அத்தகைய பணியமர்த்தம்‌ குறித்துத்‌ துணை வேந்தருக்கும்‌ பதிவாளருக்கும்‌ அறிவிக்கலாம்‌. (6) தற்காலிகமாக நியமிக்கப்படும்‌ ஆசிரியர்‌ எவரும்‌ இந்தச்‌ சட்டத்தின்படி பணியமர்த்தம்‌ செய்வதற்காக முறைப்படியான தெரிவுக்குழு ஒன்றினால்‌ பரிந்துரைக்கப்படவில்லையானால்‌ அவர்‌ அடுத்தபடியாக தற்காலிக அல்லது நேர்விற்கேற்ப, நிரந்தர பணியமர்த்தம்‌ ஒன்றிற்காக ஒரு உள்ளமை தெரிவுக்‌ குழுவினாலோ: அல்லது ஒரு முறைப்படியான தெரிவுக்குழுவினாலோ தெரிவு செய்யப்பட்டிருந்தாலன்றி அத்தகைய தற்காலிக வேலை வாய்ப்பின்‌ பேரில்‌ பணியில்‌ தொடர்ந்து இருத்தல்‌ கூடாது. 46. () இப்பல்கலைக்கழகத்தின்‌ ஒவ்வொரு துறையும்‌ ஒரு பேராசிரியராக அல்லது இயக்குநராக இருக்கக்கூடிய நபர்‌ ஒருவரை தலைவராகக்‌ கொண்டிக்கும்‌ மற்றும்‌ அவருடைய கடமைகளும்‌, செயற்பணிகளும்‌ மற்றும்‌ பணியமர்த்தத்திற்கான வரையுரைகளும்‌ வரைக்கட்டுகளும்‌ அவசரச்சட்டங்களால்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருக்கும்‌: வரம்புரை.-ஆனால்‌, துறை எதிலேனும்‌ ஒருவருக்கு மேற்பட்ட பேராசிரியர்கள்‌: இருப்பார்களானால்‌, அந்தத்‌ துறையின்‌ தலைவர்‌, அவசரச்‌ சட்டங்களால்‌ வகுத்துரைக்கப்படும்‌ முறையில்‌ பணியமர்த்தம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரை.-ஆனால்‌ பேராசிரியர்‌ அங்கே இல்லாதவிடத்து, இணைப்‌ பேராசிரியர்‌ ஒருவர்‌ அல்லது உதவிப்‌ பேராசிரியர்‌ ஒருவர்‌ அவசரச்சட்டங்களால்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ துறையின்‌ தலைவராக பணியமர்த்தம்‌ செய்யப்படலாம்‌. (2) துறைத்‌ தலைவராக பணியமர்த்தம்‌ செய்வதனை ஏற்க மறுத்துவிடுவதற்கு ஒரு பேராசிரியருக்கு அல்லது உதவிப்‌ பேராசியருக்கு அல்லது இணைப்‌ பேராசிரியருக்கு உரிமையுண்டு. (3) துறைத்‌ தலைவராக நியமனம்‌ செய்யப்படும்‌ ஒருவர்‌, மூன்றாண்டுக்‌ கால அளவிற்கு அந்தப்‌ பதவியில்‌ இருக்கலாம்‌ மற்றும்‌ மீண்டும்‌ பணியமர்த்தம்‌ செய்வதற்கு தகுதியுடையவராவார்‌. @) துறைத்‌ தலைவரொருவர்‌, தம்முடைய பதவிக்காலத்தின்‌ போது எந்த நேரத்திலும்‌ தம்முடைய பதவியை விட்டு விலகலாம்‌. (6) துறைத்‌ தலைவரொருவர்‌ ஒருவர்‌ அவசரச்‌ சட்டங்களால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய செயற்பணிகளைச்‌ செய்வார்‌. அத்தியாயம்‌-।36. பல்வகைப்பட்டவை. 47. இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு எதனின்‌. பதவி வழி உறுப்பினர்களல்லாத பிற உறுப்பினர்களுக்கிடையே எழும்‌ தற்செயலான காலியிடங்கள்‌ அனைத்தும்‌, பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்‌ எவருடைய இடம்‌ காலியாக இருக்கிறதோ அது நபர்‌ எவராலும்‌, அல்லது அமைப்பு எதனாலும்‌ வசதிக்கேற்ப விரைவில்‌ நிரப்பப்படுதல்‌ வேண்டும்‌. தற்செயலான காலியிடம்‌ ஒன்றிற்கு பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்‌ மீதமுள்ள காலத்திற்கு எவருடைய இடத்திற்கு அவர்‌ வருகிறாரோ அவர்‌ உறுப்பினர்‌. ஒருவராக இருந்து வந்திருப்பார்‌: வரம்புரை.--ஆனால்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு எதனின்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கிடையேயும்‌ காலக்கழிவினால்‌ ஏற்படும்‌ காலியிடங்கள்‌, அந்தக்‌ காலியிடங்கள்‌ ஏற்படும்‌ தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முந்தியதல்லாத, துணைவேந்தர்‌ பொருத்தமென நினைக்கிறவாறான அத்தகைய நாட்களில்‌ நடைபெற வேண்டுமென்று அவரால்‌ நிர்ணயிக்கப்படக்கூடிய தேர்தல்கள்‌ மூலம்‌ நிரப்பப்படலாம்‌: மேலும்‌ வரம்புரை.--ஆனால்‌, மேலும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பு எதனின்‌ உறுப்பினரின்‌ பதவிக்‌ காலம்‌ முடிவடைகிற தேதிக்கு முன்னர்‌, ஆறு மாதங்களுக்குள்‌ தற்செயலான காலியிடம்‌ எதுவும்‌ ஏற்படுமானால்‌ அத்தகைய காலியிடம்‌ நிரப்பப்படுதலாகாது.. 48. இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு எதனின்‌. செயல்‌ அல்லது நடவடிக்கை எதுவும்‌, காலியிடம்‌ ஏதேனும்‌ இருக்கின்ற காரணத்தால்‌ மட்டுமே, அல்லது இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ ஒருவரின்‌ தேர்தலில்‌ அல்லது நியமனத்தில்‌ குறைபாடு அல்லது முறைகேடு எதனின்‌ அல்லது காலியிடம்‌ விழுந்திருப்பதின்‌ குறைந்தபட்ச காரணத்தால்‌ மட்டுமே செல்லும்‌ தன்மை அற்றதாக ஆகிவிடாது அல்லது வழக்கின்‌ சிறப்புத்‌ தன்மை பாதிக்காதவாறு அத்தகைய செயல்‌ அல்லது நடவடிக்கை குறைபாடு அல்லது முறைகேடு ஏதேனும்‌ உள்ள காரணத்தால்‌ மட்டும்‌ அல்லது பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பானது இந்தச்‌ சட்டம்‌ கோருகிறவாறு அத்தகைய இடைவெளிகளில்‌ கூடவில்லை என்னும்‌ காரணத்தால்‌ மட்டும்‌ செல்லாததாக ஆக்கப்படுதலாகாது. 49. () ஆட்சிக்‌ குழு, இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌. பதவியிலிருந்து எவரேனும்‌, ஆட்சிக்‌ குழுவின்‌ கருத்தின்‌ படி, ஒழுக்கக்கேட்டை உள்ளடக்கியதாகவுள்ள ஒரு குற்றச்‌ செயலுக்காக குற்றவியல்‌ வழக்கு நீதிமன்றமொன்றினால்‌ தண்டனைத்‌ தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பரானால்‌, அல்லது கடுந்தவறான நடத்தை (Gross misconduct) இழைத்த குற்றவாளியாக இருப்பாரானால்‌, ஆட்சிக்‌ குழுவின்‌ மொத்த உறுப்பினர்களின்‌ பெரும்பான்மையராலும்‌ மற்றும்‌ கூட்டத்திற்கு வருகை தந்து வாக்களிக்கும்‌ ஆட்சிக்குழு உறுப்பினர்களின்‌ மூன்றின்‌ இரண்டு பங்குக்கு குறைந்ததல்லாத பெரும்பான்பையராலும்‌ நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின்‌ மூலமாகவும்‌, இதன்‌ பொருட்டுப்‌ பிறப்பிக்கப்பட்ட எழுத்துருவிலான ஆணை ஒன்றின்‌ மூலம்‌ அத்தகைய நபரை, இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ பதவியிலிருந்தும்‌ நீக்கலாம்‌. (2) நபர்‌ எவரும்‌, மனச்‌ சீர்கேடுற்றவராகவோ அல்லது நொடிப்புநிலையர்‌ ஒருவராக நீதித்‌ தீர்ப்பு பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தால்‌ அல்லது நொடிப்புநிலையர்‌ ஒருவராக நீதித்‌ தீர்ப்பு அளிக்கப்‌ பெற்றிருந்தால்‌, இதன்‌ பொருட்டுப்‌ பிறப்பிக்கப்பட்ட எழுத்துருவிலான ஆணையொன்றின்‌ மூலம்‌ ஆட்சிக்‌ குழுவானது, இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ பதவியிலிருந்தும்‌ அவரை நீக்கலாம்‌. @) நபரொருவரின்‌ மீது எடுக்கக்‌ கருதியுள்ள நடவடிக்கைக்கு எதிராகக்‌ காரணங்காட்டுவதற்கு, அவருக்கு நியாயமான வாய்பொன்று கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, இந்தப்‌ பிரிவின்படி நடவடிக்கை எதுவும்‌ எடுக்கப்படுதல்‌ கூடாது. தற்செயலான. காலியிடங்களை: நிரப்புதல்‌ பல்கலைக்‌ கழக்கத்தின்‌ அதிகார மற்றும்‌ பிற நடவடிக்கைகள்‌. காலியிடங்கள்‌ காரணமாகச்‌ [ — ஆக்கப்படுதல்‌. ஆகாது. பல்கலைக்‌ கழகத்தின்‌. உறுப்பினர்‌. பதவியிலிருந்து நீக்குதல்‌. பல்கலைக்கழக அதிகார அயப்புணயும்‌ பிற அமைப்பு களையும்‌ அமைத்துரு வாக்குதல்‌ பற்றிய பூசல்கள்‌. தகவல்‌. பெறுவதற்கான அதிகாரம்‌. பணியமர்த்தம்‌ செய்யும்‌ முறை. இடர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. பணிப்புரைகள்‌ வழங்குவதற்கு. அதிகாரம்‌, @ ௫-ஆம்‌ உட்பிரிவு அல்லது நேர்விற்கேற்ப (9-ஆம்‌ உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றின்‌ படியொன்றினை, அது அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட பின்னர்‌, கூடிய விரைவில்‌, ஒழுங்குமுறை விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ தொடர்புடைய நபருக்கு தகவல்‌ அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 50. இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின்‌ அல்லது அப்பல்கலைக்கழக பிற அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ ஒருவராக எவரேனும்‌ உரியவாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா அல்லது பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்ட்டுள்ளாரா அல்லது உறுப்பினராபிருப்பதற்குத்‌ தகுதியுடையவராயிருக்கின்றாரா என்பது குறித்து வினா ஏதேனும்‌ எழுமானால்‌, அவ்வினா, வேந்தருக்குக்‌ குறித்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. அதன்‌ பிறகு அவருடைய முடிவே அறுதியானதாகும்‌. 51. இந்தச்‌ சட்டத்திலோ அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள பிற சட்டம்‌ எதிலுமோ என்ன. அடங்கியிருந்த போதிலும்‌, அரசு எழுத்துருவிலான ஆணையின்‌ மூலமாக இப்பல்கலைக்கழக விவகாரங்கள்‌ தொடர்பான பொருட்பாடு எதையும்‌ பற்றி, இப்பல்கலைக்‌ கழகத்திடமிருந்து தகவல்‌ எதையும்‌ கேட்டுப்‌ பெறலாம்‌, மற்றும்‌ இப்பல்கலைக்‌ கழகம்‌ அத்தகைய தகவல்‌ தன்னிடம்‌ இருக்குமானால்‌, அத்தகைய தகவலை நியாயமான காலத்திற்குள்‌ அரசுக்கு அனுப்புதல்‌ வேண்டும்‌: வரம்புரை:- ஆனால்‌ இப்பல்கலைக்‌ கழகம்‌ கமுக்கமானதெனக்‌ கருதுகிற தகவலைப்‌ பொறுத்தவரையில்‌, இப்பல்கலைக்கழகமானது அதை வேந்தர்‌ மற்றும்‌ இணைவேந்தர்‌ ஆகியோர்‌ முன்பு வைக்கலாம்‌. 52. () ஆட்சிக்‌ குழு, தான்‌ பொருத்தமெனக்‌ கருதுகிற அத்தகைய வரையுரைகள்‌ மற்றும்‌ வரைக்கட்டுகளின்‌ பேரில்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ பேராசிரியர்‌ பதவி ஒன்றை ஏற்றுக்‌ கொள்ளுமாறு, உயர்கல்வி சிறப்புச்‌ சீர்மைகளையும்‌ தொழில்‌ முறைத்‌ தேர்ச்சிப்‌ பேறுகளையும்‌ பெற்றுள்ள நபரெவரையும்‌ அழைக்கலாம்‌; மற்றும்‌ அவர்‌ ஏற்றுக்‌ கொண்டதன்‌ பேரில்‌, அவரை அப்பதவிக்கு பணியமர்த்தம்‌ செய்யலாம்‌. (2) ஆட்சிக்குழு, அவசரச்சட்டங்களில்‌ கொடுக்கப்பட்டுள்ள முறைக்கிணங்க கூட்டுச்‌ செயல்‌: திட்டமொன்றை மேற்கொள்வதற்காக, பிற பல்கலைக்கழகம்‌ அல்லது அமைப்பு எதிலும்‌ பணிபுரிகின்ற ஆசிரியர்‌ ஒருவரையோ அல்லது கல்விப்‌ பணியாளர்‌ தொகுதியின்‌ பிற உறுப்பினர்‌ எவரையுமோ பணியமர்த்தம்‌ செய்யலாம்‌. 53. () இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு செல்திறம்‌ அளிக்கும்‌ வகையில்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு எதனையும்‌ முதலாவதாக அமைத்தல்‌ அல்லது மறுபடியும்‌ அமைத்தல்‌ குறித்து இடர்பாடுகள்‌ எதுவும்‌ எழுகிறதென்றால்‌ அரசு, அறிவிக்கையின்‌ மூலமாக அந்த இடர்பாட்டை நீக்குவதற்காக தேவையானதென்று அல்லது உகந்ததென்று தனக்குத்தோன்றக்‌ கூடிய, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாகயில்லாத அத்தகைய வகை முறைகளைச்‌ செய்யலாம்‌: வரம்புரை.-ஆனால்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கக்‌ தேதியில்‌ இருந்து இரண்டு ஆண்டுகள்‌ முடிவடைந்த பிறகு அத்தகைய அறிவிக்கை எதுவும்‌ பிறப்பிக்கப்படுதலாகாது. 2. (9-ஆம்‌ உட்பிரிவின்படியோ இந்தச்‌ சட்டத்தின்‌ பிறவகை முறைகள்‌ எவற்றின்படியோ. பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்‌, அது பிறப்பிக்கப்பட்ட பின்பு, நடைமுறைக்கு இயன்ற விரைவில்‌ சட்டமன்றப்‌ பேரவையின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது, அவ்வாறு வைக்கப்படும்‌ கூட்டத்தொடர்‌ அல்லது அடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்பு, அத்தகைய அறிவிக்கை எதிலும்‌ மாறுதல்‌ எதையேனும்‌ சட்டமன்றப்‌ பேரவையானது செய்யுமானால்‌, அல்லது அந்த அறிவிக்கை பிறப்பிக்கப்படாலாகாது என்று சட்டமன்றப்‌ பேரவை முடிவு செய்யுமானால்‌, அந்த அறிவிக்கையானது அதன்‌ பின்பு அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே செல்திறம்‌ பெறுதல்‌ வேண்டும்‌; அல்லது நேர்விற்கேற்ப செல்திறம்‌ பெறாதுபோதல்‌ வேண்டும்‌; எனினும்‌ அத்தகைய மாறுதல்‌ அல்லது நீக்கம்‌ எதுவும்‌ அந்த அறிவிக்கையின்‌ படி முன்னதாகச்‌ செய்யப்பட்ட ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 54. அரசு அவ்வப்போழுது இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்குச்‌ செல்திறம்‌ கொடுப்பதற்காக தான்‌ தக்கதெனக்‌ கருதுகிற அத்தகைய பணிப்புரைகளை பல்கலைக்கழகத்திற்கு பிறப்பிக்கலாம்‌; மற்றும்‌ அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடப்பது பல்கலைக்கழகத்தின்‌ கடமையாகும்‌. தமிழ்நாடு சட்டம்‌ 1/1929 அத்தியாயம்‌ 36. மாறுதற்கால வகையங்கள்‌. 55. () இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு பின்பு, உடனடியாக, 9 ஆம்‌ பிரிவின்‌. வகைமுறைகளுக்கு இணங்கியவாறு துணைவேந்தர்‌ அமர்த்தப்படும்‌ வரை இந்தச்‌ சட்டத்தின்‌ படி துணைவேந்தரின்‌ அதிகாரங்களை செலுத்துவதற்கு மற்றும்‌ செயற்பணிகளை ஆற்றுவதற்கு நிருவாகி ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்‌: வரம்புரை.-ஆனால்‌ அவ்வாறு பணியமர்த்தம்‌ செய்யப்படும்‌ நபர்‌ பல்கலைக்கழகத்தின்‌ அல்லது பிற பல்கலைக்கழகம்‌ எதனின்‌ அல்லது கல்லூரியின்‌ பேராசிரியராக அல்லது அரசின்‌ செயலாளர்‌ படிநிலைக்கு குறையாத அரசின்‌ அலுவலராக இருத்தல்‌ வேண்டும்‌. @ (0 ஆம்‌ உட்பிரிவின்படி நிருவாகியாக அமர்த்தம்‌ செய்யப்பட்ட நபர்‌ ஒராண்டு காலத்திற்கோ அல்லது தேவை அற்றுப்போகிற வரையிலோ இதில்‌ எது முந்தையதோ அதுவரையில்‌ பதவி வகிக்கலாம்‌. 56. (1) இந்தச்சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு பின்பு, உடனடியாக, 11 ஆம்‌ பிரிவின்‌. வகைமுறைகளுக்கு இணங்கியவாறு பதிவாளர்‌ ஒருவரை பணியமர்த்தம்‌ செய்யும்‌ வரை, இந்தச்சட்டத்தின்படி பதிவாளரின்‌ அதிகாரங்களைச்‌ செலுத்துவதற்கு மற்றும்‌ செயற்பணிகளை ஆற்றுவதற்கு நபர்‌ எவரையும்‌ அரசு பணிமர்த்தம்‌ செய்ய வேண்டும்‌: வரம்புரை.- ஆனால்‌, அவ்வாறு பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட நபர்‌ பல்கலைக்கழகத்தின்‌ அல்லது பிற பல்கலைக்கழகம்‌ எதனின்‌ கல்லூரியின்‌ பேராசிரியராகவோ அல்லது அரசின்‌ துணைச்‌ செயலாளர்‌ படி நிலைக்கு குறையாத அரசு அலுவலராகவோ இருத்தல்‌ வேண்டும்‌. @ ௫ ஆம்‌ உப்பிரிவின்படி பதிவாளராக பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட நபர்‌ ஒராண்டு காலத்திற்கோ அல்லது தேவை அற்றுப்போகும்‌ வரையிலோ இதில்‌ எது முந்தியதோ அதுவரை பதவி வகிக்கலாம்‌.. 57. () ஐயங்களை அகற்றுவதற்காக, அது ஈங்கிதனால்‌ விளம்புகை செய்யப்படுகிறது, அதாவது:- (8) 1928 ஆம்‌ ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச்‌ சட்டத்தின்படி (இந்தப்‌ பிரிவில்‌ இதன்‌ பின்பு 1928 ஆம்‌ ஆண்டு சட்டமாக சுட்டப்படுவதான) பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு ஒட்டி முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர்‌ அத்தகையவாறு பதவி வகித்துக்‌ கொண்டிருப்பது அற்றுப்போய்விடும்‌. (b) அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பதிவாளர்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு ஒட்டி முன்பு அத்தகையவாறு பல்கலைக்கழகத்தின்‌ பதிவாளராக பதவி வகித்துக்‌ கொண்டிருப்பது அற்றுப்போய்விடும்‌. (6) தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பட்ட அல்லது பிறவாறு 1928 ஆம்‌ ஆண்டு சட்டத்தின்படி அத்தகையவாறு அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளின்‌ உறுப்பினர்களாக இருப்பவர்கள்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு ஒட்டி முன்பு அத்தகைய உறுப்பினர்களாக இருப்பதிலிருந்து அற்றுப்போயிருப்பர்‌. @ இந்தர்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்‌ அல்லது அரசால்‌ அறிவிக்கைபின்‌ வாயிலாக குறித்துரைக்கலாகும்‌ ஆறு மாதங்களுக்கு மிகாத மேலுமான காலத்திற்கு 55 ஆம்‌ பிரிவின்‌ () ஆம்‌ உட்பிரிவின்படி பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட நிருவாகி இந்தச்‌ சட்டத்தின்‌ வகையங்களுக்கு இணங்கியவாறு பல்கலைக்கழகத்தின்‌ ஆட்சிக்குழுவை, கல்விக்குழுவை மற்றும்‌ பிற அதிகார அமைப்புகளை மீண்டும்‌ அமைத்துருவாக்குவதற்கான ஏற்பாடுகளைச்‌ செய்தல்‌ வேண்டும்‌. @ ஆம்‌ உட்பிரிவின்படி மீண்டும்‌ அமைத்துருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின்‌ ஆட்சிக்‌ குழு, கல்விமன்றம்‌ மற்றும்‌ பிற அதிகார அமைப்புகள்‌ இது தொடர்பாக அரசு அறிவிக்கையின்‌ வாயிலாக குறிப்பிடும்‌ அத்தகைய தேதியன்று அவர்களுடைய செயற்பணிகளை புரிவதற்கு தொடங்கும்‌. @ ௫ஆம்‌ உட்பிரிவின்படி பல்கலைக்கழகத்தின்‌ ஆட்சிக்குழு, கல்விக்குழு மற்றும்‌ பிற அதிகார அமைப்புகள்‌ உரியவாறு அமைத்துருவாக்கப்படும்‌ வரையில்‌ 55 ஆம்‌ பிரிவின்‌ () ஆம்‌. உட்பிரிவின்படி பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட நிருவாகி, அத்தகைய அதிகார அபைப்புகளின்‌ அதிகாரங்களை மற்றும்‌ கடமைகளை தற்காலிகமாக புரிவதற்காக மற்றும்‌ ஆற்றுவதற்காக அலுவலர்கள்‌ அடங்கியகுழு எதனையும்‌ அமைத்துருவாக்கலாம்‌. (௫ தேவைப்படலாகிறவாறான அத்தகைய நிலையமை விதிகளை அவசரச்‌ சட்டங்களை: மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகளை வரைவது நிருவாகியின்‌ கடமையாக இருத்தல்‌ வேண்டு மற்றும்‌ அரசால்‌ பணியமர்த்தம்‌ செய்யப்படும்‌ நிர்வாகி. அரசால்‌. பணியமர்த்தம்‌ செய்யப்படும்‌ பதிவாளர்‌. ஐயங்களை அகற்றுதல்‌. தமிழ்நாடு சட்டம்‌ 11929. தமிழ்நாடு சட்டம்‌ 11691, அவைகளை தீர்வு செய்வதற்காக முறையே தொடர்புடைய அதிகார அமைப்புகளிடம்‌ அவர்களுடைய தீர்விற்காக சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌. அத்தகைய நிலையமை விதிகள்‌, அவசரச்‌ சட்டங்கள்‌ மற்றும்‌ ஒழுங்கு முறை விதிகள்‌ இயற்றப்பட்டபோது அதனை தமிழ்‌ நாடு அரசிதழில்‌ வெளியிடுதல்‌ வேண்டும்‌. 58. () இதன்‌ பின்பு இந்தப்‌ பிரிவில்‌ 1928 ஆம்‌ ஆண்டு சட்டமென சுட்டப்படுவதற்கான 1928 ஆம்‌ ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ ஈங்கிதனால்‌ நிக்கறவு செய்யப்படுகிறது. @ அத்தகைய நீக்கறவின்‌ பேரில்‌, 1981 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொதுவகையங்கள்‌ சட்டத்தின்‌. 8 முதல்‌ 18 வரையிலான பிரிவுகளின்‌ வகைமுறைகள்‌ பொருந்தும்‌. Q) அத்தகைய நீக்கறவு இருந்தபோதிலும்‌- (8) 1928 ஆம்‌ ஆண்டு சட்டத்தின்படி அண்ணாமலை பல்கலைக்கழகச்‌ சட்டத்தால்‌ நிறுவப்பட்ட மற்றும்‌ பராமரிக்கப்பட்டுவரும்‌ கல்லூரிகள்‌ அனைத்தும்‌ இந்தச்‌ சட்டத்தின்படி பல்கலைக்கழகத்தால்‌ நிறுவப்பட்டிருப்பதாக மற்றும்‌ பராமரிக்கப்பட்டதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (6) அண்ணாமலை பல்கலைக்கழகத்தால்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்க தேதிக்கு ஒட்டி முன்பு நிலங்கள்‌, கட்டிடங்கள்‌, கருவிகள்‌, புத்தகங்கள்‌ மற்றும்‌ நூலகம்‌ உள்ளடங்களாக அசையும்‌ அல்லது அசையச்‌ சொத்து அனைத்தும்‌ மற்றும்‌ நம்பிக்கையில்‌ வைத்துவரப்பட்ட அல்லது உற்றமைந்துள்ள அல்லது வைத்துவரப்பட்டுள்ள எந்தவகையதுமான அனைத்து உரிமைகளும்‌ மற்றும்‌ அதுபோன்ற சட்டப்படியாக உள்ள கடப்பாடுகளானது பலகலைக்கழகத்திற்கு உரிமை மாற்றம்‌ செய்யப்பட்டு அதனிடம்‌ உற்றமைந்திருக்கும்‌ அது இந்தச்‌ சட்டத்தின்படி நிறுவப்பட்டிருப்பதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (69) அண்ணாமலை பல்கலைக்கழகத்தால்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு ஒட்டி முன்பு பெற்று ஏற்றுக்‌ கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நலப்பயன்களும்‌ பல்கலைக்கழகத்தால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்டதாக அல்லது பெற்றுக்‌ கொள்ளப்பட்டதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. அது இந்தச்‌ சட்டத்தின்படி நிறுவப்பட்டுள்ளதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய வரைகட்டுகள்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாக இருக்கின்ற அத்தகைய வரைக்கட்டுகள்‌ எவ்வாறிருப்பினும்‌ அதன்‌ அடிப்படையில்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக்கொள்ளப்பட்ட அத்தகைய நலப்பயன்களின்‌ அடிப்படையில்‌ வகைமுறைகள்‌ அனைத்தும்‌ இந்தச்‌ சட்டத்தின்படி செல்லும்தன்மை உடையதாக இருக்கும்‌ எனக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (9) சட்டம்‌ எதிலும்‌ அல்லது விதி, அறிவிக்கை, நடவடிக்கை ஆணை, ஒழுங்குமுறை விதி அதன்படி செய்யப்பட்ட துணைவிதி எதுவும்‌ அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகத்திற்கு உரிய சுட்டுகைகள்‌ அனைத்தும்‌ பல்கலைக்கழகத்திற்குரிய சுட்டுகையாக பொருள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. அது இந்தச்‌ சட்டத்தின்படி நிறுவப்பட்டுள்ளதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (8) மேற்சொன்ன பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌ (துணைவேந்தர்‌ மற்றும்‌ பதிவாளர்‌: தவிர) ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ பணியமர்த்தம்‌ அனைத்தும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌. தொடக்க தேதிக்கு ஒட்டி முன்பு உதவுவதற்கு மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக மற்றும்‌ அதன்படி செய்யப்பட்டிருப்பதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ அத்தகைய அலுவலர்கள்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ பல்கலைக்கழகத்தில்‌ தொடர்ந்து பதவி வகிக்கலாம்‌ அவர்களுடைய அலுவலக பணியமர்த்தம்‌ வரைக்கட்டுகள்‌ ஆளுகை செய்யும்‌ வரையுரைகளுக்கு உட்பட்டு அது இந்தச்‌ சட்டத்தின்படி நிறுவப்பட்டிருப்பதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. () இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு இயன்ற அளவு முரணாக இல்லாமல்‌ இருப்பவை 1928 ஆம்‌ ஆண்டு சட்டத்தின்படி செய்யப்பட்ட நிலையமை விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ அனைத்தும்‌ தொடர்ந்து செல்லாற்றலில்‌ இருக்கும்‌ மற்றும்‌ அவைகள்‌ இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட நிலையமை விதிகளால்‌, அவசரச்‌ சட்டங்கள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகளால்‌ மேலோங்கி நிற்கும்‌ வரை அல்லது திருத்தம்‌ செய்யப்படுகிறவரை இந்நச்‌ சட்டத்தின்‌ இணையான வகைமுறைகளின்படி செய்யப்பட்டிருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. நீக்கறவும்‌ காப்புரையும்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts